வணக்கம் மக்களே...
கடந்த மாதம் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மெயிலில் உலக சினிமாக்களைப் பார்த்து காப்பி அடிக்கும் ஷங்கர், மணிரத்னம் மற்றும் கெளதம் மேனன் போன்றவர்களின் திறமை பற்றி குறிப்பிட்டிருந்தார். மேற்கூறிய மெயிலில் கடைசியாக எந்திரன் படம் ஹாலிவுட் படமான Bicentennial Man படத்தின் தழுவல் என்று குறிப்பிட்டிருந்ததால் எப்படியாவது எந்திரன் படத்தை பார்ப்பதற்கு முன்பாக அதன் ஒரிஜினல் பதிப்பான இந்தப் படத்தை பார்த்துவிட வேண்டுமென்று எண்ணினேன். அப்படி இப்படி என்று கூகிளாண்டவரின் உதவியோடு படத்தினைக் கண்டுபிடித்து பதிவிறக்கினேன். சப் டைட்டில் இல்லாமல் பார்த்தால் ஒரு மண்ணும் புரியாது என்பதால் சப் டைட்டிலையும் தேடி எடுத்தேன். நினைத்தபடி எந்திரன் படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஒரு பின்னிரவில் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆனால் பதிவெழுத தான் சமயம் வைக்கவில்லை.
Title: Bicentennial Man
Tagline: One robot's 200-year journey to become an ordinary man
Country: USA
Language: English
Year: 1999
Genre: Science Fiction, Drama
Cast: Robin Williams, Embeth Davidz, Sam Neill
Director: Chris Columbus
Story: Isaac Asimov
Cinematographer: Phil Meheux
Editor: Neil Travis
எந்திரன் படத்தின் பாடலொன்றில் "ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ...." என்று எழுதியிருப்பார்கள். அந்த ஐசக் அசிமோவ் யாரென்றால் ஒரு ரஷ்ய எழுத்தாளர். அதாவது Bicentennial Man எப்படி எந்திரன் படத்துக்கு முன்னோடியோ அதுபோல ஐசக் அசிமோவ் என்பவர் நம்ம ஊர் சுஜாதாவிற்கெல்லாம் முன்னோடி. 1976ம் ஆண்டில் (அப்பவே எந்திரன் கதை ரெடியாடிச்சு...) அசிமோ எழுதிய குறுநாவல் ஒன்றின் கதையையும் 1993ம் ஆண்டு அவர் எழுதிய Positronic Man என்ற நாவலின் கதையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதே இந்த திரைப்படம். 2004ல் வெளிவந்த i, robot திரைப்படம் கூட இவர் எழுதிய சிறுகதை தொகுப்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதே.
எந்திரன் படத்தின் அதிரடியான ட்ரைலரை பார்த்துவிட்டு இந்த படத்தை பார்த்தபோது கண்டிப்பாக இதற்கும் எந்திரனுக்கும் துளியளவும் ஒற்றுமை இருக்காது என்றே தோன்றியது. ஏனெனில், Bicentennial Man ஒரு ரோபோவின் உணர்வுகளைச் சொல்லும் மென்மையான திரைப்படம். ஒரு ரோபோ உணர்ச்சி பெற்று, உயிர் பெற்று மனிதனாகும் கதை.
கதை 2005ல் ஆரம்பிக்கிறது. ஜுராசிக் பார்க் படங்களில் டைனோசர் பற்றிய ஆராய்ச்சியாளராக நடித்திருப்பாரே, Sam Neill அவர் தனது வீட்டு உபயோகத்திற்காக ஒரு ரோபோ வாங்கி வருகிறார். ஆரம்பத்தில் ரோபோவை அவரது குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. பின்னர் சாம் நெயிலின் இரண்டாவது குழந்தைக்கு மட்டும் ரோபோவை பிடித்துவிடுகிறது. காலப்போக்கில் தனது ரோபோவுக்கு ஆறாவது அறிவு இருப்பதை உணர்ந்துக்கொள்ளும் சாம் நெய்ல், அதற்கு மனித உணர்ச்சிகள் பற்றி பாடம் கற்பிக்கிறார். பின்னர் ரோபோவுக்காக வங்கி கணக்கு தொடங்குவது, ரோபோவுக்கு கோர்ட் சூட் போடுவது என்று மென்மேலும் புரட்சிகள் பலவற்றை செய்கிறார். ஒரு கட்டத்தில் ரோபோ சிந்திக்க ஆரம்பித்து தான் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென விருப்பம் தெரிவிக்கிறது. அது விருப்பம் போல சுதந்திரம் கிடைத்ததும், அது தன்னைப்போல ரோபோ ஏதும் உலகில் உள்ளதா என்று தேடி பயணமொன்றை மேற்கொள்கிறது. ஆண்டுகள் பல கடந்தும் பயணம் வெற்றிபெறவில்லை. இறுதியாக ஒரு ஆராய்ச்சியாளரை கண்டுபிடிக்கும் ரோபோ அவர் மூலமாக உயிர் பெற்று, உடல் பெற்று, மனித உணர்வுகள் பெற்று மீண்டும் வீடு திரும்பி சாம் நெய்லின் கொள்ளுப் பேத்தியை (!!!) கைபிடிப்பதே கதை. நம்ம தமிழ் சினிமா போலவே கிளைமாக்ஸ் காட்சி கோர்ட்டில். கதாநாயகனான ரோபோவை மனிதனாக ஏற்றுக்கொண்டு தீர்ப்பளிப்பதொடு நாயகனின் உயிர் பிரிய படம் நிறைவடைகிறது.
இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு விஷயம் வசனம். க்ரேஸி மோகன் ஸ்டைலில் வார்த்தைகளை வைத்து ஆங்காங்கே விளையாடி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, bored - board, weight - wait இதுபோல ஒரே உச்சரிப்பு கொண்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தது சிறப்பு. ரோபோவாகவும் பின்னர் மனிதனாகவும் ராப் வில்லியம்ஸ் திறம்பட நடித்திருக்கிறார். தன்னைப்போல உணர்ச்சிகொண்ட ரோபோவைக் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று ஒரு டான்ஸ் ஆடும் பெண் ரோபோ பின்னால் போவதையும் பின்னால் கோபம் கொண்டு அதை உடைத்தெறிவதுமாக கலக்குகிறார். பாட்டி - பேத்தி என்று இரட்டை வேடங்களில் நடித்திருந்த நாயகியும் கூட சிறப்பாகவே நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் எனக்கு பிடித்த காட்சி ஒன்று உண்டு. தனது இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்த பிறகு அன்றிரவு சாம் நெய்ல் தனியாக அமர்ந்திருப்பார். அங்கே ரோபோ சென்று அவரிடம் பேச்சு கொடுக்கும். அப்போது சாம் நெய்ல் தனது இரண்டு மகள்களும் தன்னை விட்டுப் போய்விட்டதாக வருத்தப்படுகிறார். இதைக்கேட்ட ரோபோ "நான் இருக்கிறேன்" என்று சொல்வதும் அதற்கு ஆங்கிலத்தில் "One is still there..." என்ற வசனமும் நெகிழ்ச்சியாக இருந்தது.
1999ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம். உணர்ச்சிகரமான படங்களை மேலை நாட்டவர்கள் விரும்பாதது கூட காரணமாக இருக்கலாம். சிறந்த மேக் அப்பிற்கான ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டாலும் விருது கிடைக்கவில்லை. எனக்கென்னவோ இந்தப் படத்தில் வரும் நாயகன் பாத்திரம் சுஜாதாவின் ஜீனோவை நினைவுபடுத்துகிறது. ஆனால் ஏனோ சுஜாதா, ஐசக் அசிமோவை பார்த்து காப்பி அடித்தார் என்று சொல்ல மனம் வரவில்லை.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
34 comments:
Interesting review. I haven't seen this movie, yet.
This movie is worth watching instead of the crap enthiran.
nice
மிக சிறந்த ஒரு படம், வந்த புதியதில் டெல்லியில் பார்த்தேன், இன்றுவரை மனதில் நின்ற ஒரு நல்ல படம்.
உண்மையை சொல்லபோனால் எந்திரன் பார்க்கும் போது இந்த படத்தின் நினைவு என் மனதில் வந்தது நிஜம், ஒரே கருவை கொண்ட வெவ்வேறு கதையை கொண்ட படங்கள் என்பதால் வந்து இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
மீண்டும் இந்த படத்தை பார்க்க நினைத்து படத்தின் தலைப்பை மறந்து விட்டு நினைவில் கொண்டு வர ஓரிரு நாட்கள் யோசித்துக்கொண்டு இருந்தேன், நினைவில் கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி.
Wow.... Super....
I'll try to Download it.
@ Chitra, சே.குமார்
கண்டிப்பாக பார்த்துவிடுங்கள்... அல்லது சென்றால் பதிவிறக்க லிங்குகள் எளிதாக கிடைக்கும்...
@ Anonymous
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... அடுத்த முறை வரும்போதாவது உங்கள் அடையாளத்துடன் பின்னூட்டம் போடுங்கள்...
@ தியாவின் பேனா
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... இனி உங்கள் பேனாவையும் பின் தொடர்கிறேன்...
@ சிங்கக்குட்டி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... கடிக்காமல் இருப்பின் பின்தொடர்கிறேன்...
இந்த படம் பார்த்துள்ளேன். உண்மையில் அந்த கடைசியில் ரோபோ இறக்கும்போது மனம் என்னவோ போல் இருந்தது. ஜீனோ கதையிலும் இப்படி இருக்கத்தான் செய்தது.
நல்ல விமர்சனம்! நன்றி!
அருமையான விமர்சனங்க.. டவுன்லோட் போட்டுடறேன்..
hi da, this is arun, our callcentre post is very nice da, keep posting..
விமர்சனம் அருமை..கண்டிப்பா பார்த்துடறேன்...இந்தப் படத்தை..
@ எஸ்.கே
நீங்களும் இந்தப் படத்தை பார்த்துள்ளீர்கள் என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது... நான் இதுவரை "என் இனிய இயந்திரா..." மட்டுமே படித்துள்ளேன்... மீண்டும் ஜீனோ படித்ததில்லை...
@ பதிவுலகில் பாபு, பிரியமுடன் ரமேஷ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ arun
Thanks for visiting my blog and posting comments da... Visit continously and read other posts too...
வந்துட்டோமில்ல..இனி கலக்குவோம்
இடுகை படித்தது நேற்று!பின்னூட்டம் மட்டும் இன்று.
அசலைத் தேடி கண்டுப்டிக்கிறேன்.தகவலுக்கு நன்றி.
@ தமிழ் செல்வன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்.... தொடர்ந்து வருகை தந்து கலக்குங்க...
@ ராஜ நடராஜன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்... தொடர்ந்து வருகை தாருங்கள்... எப்படியோ படிச்சிட்டீங்க பின்னூட்டமும் போட்டுட்டீங்க... அதுவே போதும் சார்...
டவுன்லோட் பண்ணிடுவோம் , ஆகமொத்தம் எந்திரனும் ரீமேக் தானா
@ நா.மணிவண்ணன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... ரீமேக் என்று சொல்ல முடியாது... தழுவல் என்று வைத்துக்கொள்ளலாம்...
அசிமோவின் மூளை,சுஜாதாவின் வாய்,ரஜனியின் முகம்,அய்சுவரியாவின் கண்கள்,தமிழர்களின் ஏமாளித்தனம்,மாறன்களின் அடாவடித்தனம் இவைகளை மட்டும் வைத்து,கை கால்கள் காது மூக்கு வைக்கத்தெரியாமல் போன பித்துக்குளி சங்கரால் வந்த தலைவலிதான் இந்த எந்திரன் என்பதைப் பட ரிலீஸுக்கு முன் மறைத்த நீரும் ஒரு பகுத்தறிவு விரோதிதான்!
@ sekar
உங்கள் பின்னூட்டத்தை படிக்கும்போது மிகவும் கவலையாகவும் அவமானமாகவும் இருக்கிறது. உண்மையில் இந்திரன் வெளியாவதற்கு இரண்டு இரவுகளுக்கு முன்பு தான் நான் இந்த படத்தைப் பார்த்தேன். மேலும் அப்போது நான் நைட் ஷிப்டில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் என்னால் அப்போது பதிவிட முடியாமல் போய்விட்டது. மற்றபடி பகுத்தறிவுக்கு விரோதம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை. மன்னிக்கவும்.
Nice review. Your write up has made me look for the movie soon. :-)
Thanks.
Pattu
http://gardenerat60.wordpress.com
அருமையான படம் பல முறை பார்த்திருக்கிறேன். ஒரு ரோபோ மனிதனாய் மாறுவதை படம் முழுவதும் இயல்பாய் காட்டி இருப்பார்கள்.
@ Pattu
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோட்டக்காரரே... நிச்சயம் உங்கள் தோட்டத்திற்கு வருகை தருகிறேன்...
@ சர்பத்
வாங்க சர்பத்... பல முறை பார்க்கும் வாய்ப்பு கிட்டியதா... ஆச்சர்யம் தான்...
இரண்டு படங்களின் (Bicentennial Man and I, Robot) தாக்கம் அதிகமாகவே இருப்பதாகப்படுகிறது ஏனைய விமர்சனங்களையும் படிக்கும் பொழுது. ரோபோக்களை வரிசையில் நிறுத்தி அதனில் எது விஞ்ஞானி ரஜினி என்று கண்டுபிடிக்க பயன்படுத்தும் சீன் கூட I, Robotல் அப்படியே அச்சு பிறாழலாமல் இருக்கும் - ஏதோ அங்கிருந்து கொண்டு வந்து நம்ம மக்களூக்கு கொடுக்கிறாங்களேன்னு பெருந்தன்மையா புரிஞ்சிக்க வேண்டியதுதான் ;)
@ தெகா
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... உங்களது கோணமும் மாறுபட்டதாகவே இருக்கிறது... பிறநாட்டு நல்லறிஞ்ர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்பது போல...
One difference I can point out between Bicentennial Man and Endhiran is in Bicentennial Man the robot would want to DIE whereas in Endhiran that robot would want to LIVE...
உங்கள் கருத்து தவறானது. நமது தமிழ் சினிமாவில் ஒரே பழிவாங்கும் கதையும் , ஒரே டைப் காதல் கதையும் வருதே . உங்கள் கண்களுக்கு சுஜாதா ,மணிரத்தினம் மட்டுமே தெரிகிறார்கள் .
நீங்கள் ரசித்த இடங்களை நானும் ரசித்தேன்!! நல்ல படம் இது... இருப்பினும் ஓரிரு இடங்களில் போர்.
Can you give the link url for this film.. romba naala naanum indha padatha paakanum nu nenachitu irukken, link for subtitle also ...
By the way, unga pathivugal romba nallaa irukku ..
Post a Comment