வணக்கம் மக்களே...!
ஒரு வழியாக நண்பர் ஜாவா சுந்தரேசனின் மொபைலை நொண்டி நொங்கெடுத்து பார்த்ததில் முதல் முறையாக ஒரு தொழில்நுட்ப பதிவு எழுத ஐடியா கிடைத்தது. ஜாவா சுந்தரேசன் இருக்கிறானே... ரெண்டு கால், ரெண்டு கை இல்லைன்னா கூட சமாளிச்சிடுவான் ஆனா மொபைல் மட்டும் இல்லன்னா விஜய் படம் பாத்துட்டு வெளிய வந்தவன் மாதிரி ஆயிடுவான். ஒரு நாள் "மொபைலுக்குள்ள தலைய விட்டு அப்படி என்னதான் டா பண்ற..." கேட்டேன். அப்ப தான் அவன் மொபைல்ல நெறய சமாச்சாரம் (அட... அது இல்லைங்க...) இருக்குதுன்னு தெரிஞ்சிகிட்டேன். அவன்கிட்ட இருந்த சில அப்ளிகேஷன்ஸ் பத்தி இப்ப உங்களுக்கு எடுத்து சொல்றேன்.
1. ஒபேரா மினி (Opera Mini)
பெயரை கேட்டுவிட்டு ஏதோ ஒப்பேறாத நிரலி என்று நினைத்து விடாதீர்கள். மொபைல் உலவிகளுள் ஒப்பற்ற நிரலி ஒன்று உண்டு என்றால் அது இதுதான். கணினிக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எப்படியோ அது போல மொபைலுக்கு ஒபேரா. கூகிளில் தேடுவதில் ஆரம்பித்து வலைப்பூக்களை படித்து பின்னூட்டம் போடுவது வரை அனைத்தையும் போகிற போக்கில் (On the go) செய்துவிடலாம். அதிலும் இப்போது லேட்டஸ்டாக வந்துள்ள வெர்ஷனில் Multiple Tabs, Password Manager போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மாற்று நிரலி: யூ.சீ பிரவுசர் (UC Browser)
ஒபெராவைப் போலவே சில சமயங்களில் ஒபெராவை விட வசதிகள் நிறைந்த ஓர் உலவி. இந்த உலவியில் மொபைல் பிரவுசிங் பற்றி அதிகம் தெரியாதவர்கள் கூட பயன்படுத்தும் வண்ணம் பல உதவிகரமான நூற்குறிகளை (Bookmarks) இணைத்திருக்கிறார்கள். முக்கியமான சங்கதி என்னவென்றால் ஒபேராவில் தமிழ் எழுத்துகளை படிப்பதற்கு ஏற்படும் சிரமம் யூ.சீயில் ஏற்படுவது இல்லை.
2. ஈ பட்டி (eBuddy)
பதினெட்டு பட்டி ஜனங்களும் அரட்டையடிக்க பயன்படுத்தும் நிரலி இதுதான். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரே நேரத்தில் யாகூ, ஜீடாக், பேஸ்புக் என்று அனைத்து விதமான கணக்குகளையும் பயன்படுத்தி சாட் செய்யலாம். இதை மிகவும் எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் கணினி மூலம் சாட் செய்வதைவிட இதன்மூலம் இன்னும் வேகமாக சாட்டடிக்கலாம்.
மாற்று நிரலி: ராக்கேடாக் (RockeTalk)
ரக்கேடாக்கிலும் ஒரே நேரத்தில் பல கணக்குகளை பயன்படுத்தி அரட்டையை போடலாம். ஆனால் இதில் பேஸ்புக் கணக்கை இணைக்கும் ஆப்ஷன் இல்லை. மேலும் ராக்கேடாக் சாட்டிங் செய்வதற்கு மட்டுமில்லாமல் ஒரு சோஷியல் நெட்வொர்கிங் நிரலியாகவும் விளங்குகிறது.
3. நியூஸ் ஹண்ட் (News Hunt)
செய்தி வேட்டை நிரலி உங்கள் மொபைலில் பல்வேறு செய்தித்தாள்களை படிக்க வழிவகை செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஆங்கில செய்திகள் மட்டுமில்லாமல் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் (பிராந்தி மொழி அல்ல) செய்திகளை படிக்கலாம். தற்போதைக்கு நான்கு தென்னிந்திய மொழிகள் உட்பட ஒன்பது மொழிகளில் நீங்கள் செய்தி படிக்கலாம். தமிழைப் பொறுத்தவரையில் தினகரன் மற்றும் தினமலர் நாளிதழ்களை நீங்கள் படிக்கலாம். கூடிய விரைவில் தனது சேவைகளை விரிவுபடுத்தப் போவதாக வலைத்தளம் குறிப்பிடுகிறது.
மாற்று நிரலி: பினு நியூஸ் (Binu News)
பினுவில் செய்திகள் தவிர்த்து கூகிள், விக்கிபீடியா, டிக்ஷனரி என்று மேலும் பல சேவைகள் இருக்கின்றன. செய்திகளிலும் இந்தியா மட்டுமில்லாமல் பன்னாட்டு செய்திகளும் படிக்க கிடைக்கின்றன. நியூஸ் ஹண்ட் நிரலியோடு ஒப்பிடும்போது தினமலர் செய்திகளை பினு வழங்குவதில்லை ஆனால் அதற்கு பதிலாக BBC தமிழ் செய்திகளை தருகிறது.
4. க்ரிக் செங்கா (Crick Zenga)
கிரிக்கெட் விரும்பிகளுக்கான நிரலி. எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிரலியில் கிரிக்கெட் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம். மேலும், நடந்து முடிந்த போட்டிகளின் முடிவுகள், இனி வரவிருக்கும் போட்டிகளின் அட்டவணைகள், கிரிக்கெட் சம்பந்தமான செய்திகள் போன்ற தகவல்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.
மாற்று நிரலி: க்ரிகின்போ மொபிகாஸ்ட் (Cricinfo Mobicast)
க்ரிகின்போ என்ற பிரபல கிரிக்கெட் வலைதளத்தின் சார்பாக வெளிவந்துள்ள நிரலி. இதில் கிரிக்கெட் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்வதொடு மட்டுமில்லாமல் கமெண்ட்ரி கூட பார்க்க முடியும். செங்காவோடு ஒப்பிட்டு பார்த்தால் மொபிகாஸ்ட் பல விதமான போன்களிலும் பயன்படுத்த முடியும். மொபிகாஸ்ட் மூலம் கிரிக்கெட் சம்பந்தமான போட்டோக்களை பார்க்கும் வசதியும் உள்ளது.
5. ப்ரூவ் அரோமா (Broov Aroma)
பெயரைக் கேட்டால் காப்பிக்கொட்டை விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது. பட் இது ஒரு அகராதி (Dictionary). அதாவது English to English dictionary. நாம் அர்த்தம் புரியாமல் திணறும் வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லிக்கொடுக்கிறது. தற்போது இந்த நிரலியில் விக்கிபீடியாவும் இணைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லமல் ஜோக்ஸ், பொன்மொழிகள், சிறுகதைகள், சமையல் குறிப்புகள் போன்ற ருசிகரமான தகவல்களையும் இந்த நிரலியின் மூலம் நாம் பெறலாம்.
மாற்று நிரலி: வோர்ட்னிக் டிக்ஷனரி (Wordnik Dictionary)
பினு மற்றும் வோர்ட்னிக் இணைந்து வழங்கும் இந்த நிரலியும் ஆங்கில வார்த்தைகளுக்கு எளிதான ஆங்கில வார்த்தைகளில் விளக்கம் கொடுக்கிறது. மேலும் அந்த வார்த்தையின் பயன்பாட்டினை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவது இதன் சிறப்பு. தற்போதைக்கு Google Translate வசதியின் மூலம் ஆங்கில வார்த்தைகளை ஹிந்தியில் மொழிபெயர்த்து தருகிறது.
நிரலிகளுக்கெல்லாம் நிரலி: ஸ்நாப் டியு (Snaptu)
பல்வேறு நிரலிகளை ஒரே கூரையின் கீழ் கொடுக்கும் ஓர் அற்புத நிரலி. மொபைல் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஓர் நிரலி. பேஸ்புக், டுவிட்டர், ஆர்குட், பிளிக்கர், பிகாஸா போன்ற இன்னும் ஏராளமான சோஷியல் நெட்வொர்கிங் நிரலிகளை இந்த ஒரே நிரலியின் மூலம் பயன்படுத்தலாம். செய்திகள், வானிலை அறிக்கை, கிரிக்கெட் ஸ்கோர் பல்வேறு நாட்டுநடப்புக்களையும் தெரிந்துக்கொள்ளலாம். கூகிள், யாஹூ, விக்கிபீடியா இன்னும் இன்னும் என ஏராளமான பயன்பாடுகளை அள்ளித்தருகிறது இந்த ஸ்நாப் டியு.
பி.கு: மேலே குறிபிட்டுள்ள நிரலிகள் அனைத்தும் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. மேலும் இந்த நிரலிகளை மொபைலில் பயன்படுத்தும் போது ஜிபிஆர்எஸ் (GPRS) வசதி அவசியம் இருக்க வேண்டும்.
முதல் முறையாக தொழில்நுட்பம் சார்ந்த பதிவினை எழுதியிருக்கிறேன். உங்கள் ஆதரவையும் ஊக்கங்களையும் கொடுத்தால் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகள் எழுத வாய்ப்பாக அமையும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
41 comments:
நல்ல பகிர்வு பிரபாகரன்...
thanks friend
புதிய தகவல்களையும் புதிய தமிழ் வார்த்தைகளும் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.
அருமையான பதிவு..!!
super and very informative
@ அருண் பிரசாத், Chitra, ஜெய்லானி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ நந்தா ஆண்டாள்மகன், கேரளாக்காரன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... தொடர்ந்து வருகை தந்தாள் சிறப்பு...
@ ALL
முதல் முறையாக பதிவு போட்டு ஒரு மணிநேரத்திலேயே 5 பின்னூட்டங்கள்... நன்றி நண்பர்களே...
அருமையான பதிவு தகவல்களுக்கு நன்றி பிரபாகரன்..உடனே டவுண்லோடு பண்ணிடறேன்...
@ பிரியமுடன் ரமேஷ்
நன்றி ரமேஷ்... தொடர்ந்து வருகை தாருங்கள்...
(அட... அது இல்லைங்க...)
ஆரம்பம் சற்று ஏமாற்றமாக ( ஹி ஹி ) இருந்தாலும், பினிஷிங் சூப்பர்.. நன்றாக இருந்தது
nice da, keep posting technical informations, it wil useful for new users..
உபயோகமான பதிவு, நைட்டு புல்லா கண்ணு முழிச்சி டைப் பண்ணுவிங்க போல
பிலாசபி பேசுவீங்கன்னு பாத்தா.. தொழில் நுட்பம் பேசுறீங்க...
@ பார்வையாளன்
அதுபோன்ற "கலைப்பதிவுகளும்" அவ்வப்போது எழுதுவதுண்டு... ஆனால் அவ்வாறு எழுதினால் சிலர் நம்மை படுலோக்கல் என்று நினைக்கின்றனர்...
@ my team
Thanks for coming again... u r a well known person to me but cant able to find ur name... may i know whos this...
@ THOPPITHOPPI
கரெக்டா சொல்லிட்டீங்க... நாடு ராத்திரில உங்க பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டதை வைத்து கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று கருதுகிறேன்...
@ கே.ஆர்.பி.செந்தில்
தற்போது பதிவுலகில் ஒரே சண்டையாக இருப்பதால் தத்துபித்துவங்கள் பேசுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...
சூப்பர் பதிவு! ஓபரா மினி மட்டும் எனக்கு தெரியும் மீதி புதுசு! நன்றி!
@ எஸ்.கே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... யு.சி பிரவுசரும் ஈ- பட்டியும் மொபைல் உபயோகப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது... பயன்படுத்திப் பாருங்கள்...
hello jr sujatha...it was very much useful for all the mobile users. thank u . continue this good work...
நல்ல தகவல்கள்...
ரொம்ப நன்றிங்க ..! உண்மைலேயே பயனுள்ளதாக இருக்கு ..
ஏன்னா நான் நேத்துதான் Nokia 6303i வாங்கினேன்..!! அதுக்கு தேவையான பலது உங்களால தெரிஞ்சிக்கிட்டேன் ..!!
@ pavi
என்னது ஜூனியர் சுஜாதாவா... ஏது இத பதிவர்கள் யாராவது கேட்டாங்கன்னா பெரிய கலவரமே உண்டாகுமே... பவித்ரா இனி இதுப்போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதே... பதிவுலகில் ஆயிரக்கணக்கான திறமைசாலிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு மத்தியில் நான் ஒரு சின்ன துளி தான்...
@ LK
வாங்க நண்பரே... உங்கள் வருகையைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தேன்... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ ப.செல்வகுமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... நீங்கள் குறிப்பிட்டுள்ள 6303i போனில் மேலே குறிப்பிட்டுள்ள நிரலிகள் அனைத்தையுமே பயன்படுத்தலாம்..,.
பயனுள்ள பதிவு. தெரியாத விவரங்கள் தெரிய வந்தது.
@ ரிஷபன்
வாங்க ரிஷபன்... தொடர்ந்து வருகை தாருங்கள்... நன்றி...
”அவ்வாறு எழுதினால் சிலர் நம்மை படுலோக்கல் என்று நினைக்கின்றன”
கலைப்பயணம்னா சில (சொல் ) அடிகள் விழத்தான் செய்யும்.. கண்டுக்கப்படாது...
@ பார்வையாளன்
Well Said பார்வையாளன்... பட் கொஞ்சநாள் அமைதி காப்போம்...
நல்ல தகவல்கள்!!
a nice post. a very usefull one to people who have ideas to try browsing through mobile and this trend seem to be on increase among the students. keep posting
@ தேவன் மாயம்
வாங்க தேவன்.... ரொம்ப நாளைக்கு அப்புறம் வருகை தந்திருக்கிறீர்கள்... நன்றி...
@ சுதன்
Thanks for ur continuous visits and comments sir... Im feeling very happy for ur arrival...
Nice Post..
அப்ப தான் அவன் மொபைல்ல நெறய சமாச்சாரம் (அட... அது இல்லைங்க...)
haloo ஹலோ,விளக்கமா சொல்லுங்க அது இல்லன்னா அந்த அது என்ன?
யோவ்,எனக்கு நிரலின்னா என்னன்னே தெரியாது(ரவளி வேணா தெரியும்)இப்படியெல்லாம் டெக்னிக் பதிவு போட்டா நான் அழுதுடுவேன் அவ் வ் அவ்
@ அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்...
@ சி.பி.செந்தில்குமார்
// அது இல்லன்னா அந்த அது என்ன //
அதெல்லாம் சென்சார் கட் நண்பா...
// நிரலின்னா என்னன்னே தெரியாது (ரவளி வேணா தெரியும்) //
எனக்கும் கூட தெரியாது நண்பா... ஏகப்பட்ட அகராதிகளை refer பண்ணி அந்த அகராதி பிடித்த வார்த்தைக்கு தமிழ் விளக்கம் கண்டுபிடித்தேன்...
நல்ல பகிர்வு.
அருமையான பதிவு..!!
Nice! :))
Post a Comment