3 November 2010

கட்டழகி கிளியோபாட்ரா

வணக்கம் மக்களே...!

வரலாற்று சிறப்பு கொண்ட மக்களுள் கிளியோபாட்ரா மீது எப்போதுமே என் மனதில் தனி மரியாதையும் பிரியமும் உண்டு. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் அதிமுக்கியமான காரணம் என்னவென்றால் கிளியோபாட்ராவின் கறுப்பு நிறம் தான். அது என்னவோ விவரம் தெரிந்த வயதிலிருந்தே (நாங்கள்லாம் மூணாம் கிளாஸ்லயே முத்தினவங்க...!) கார்வண்ண பெண்கள் மீது கொஞ்சம் கவனம் செலுத்துவேன். (சைட் அடிப்பேன்னுங்கறத தான் கொஞ்சம் டீஜண்டா சொன்னேன்). பொதுவாக பசங்க பொண்ணுங்கள கலர்னு சொல்லுவாங்க. என்னைப்பொறுத்தவரையில் கறுப்பு தான் கலர். (கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு). "ஏம்லே அந்த கருவாச்சி பின்னாடியே சுத்துத..." என்பவர்களிடம் கிளியோபாட்ராவை சான்றுகாட்டி மொக்கை போடுவேன். இப்படியெல்லாம் என்னைப் பாடாய்படுத்திய கனவுக்கன்னி கட்டழகி கிளியோபாட்ராவின் வரலாற்று பக்கங்களை ஆராய்ந்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பொதுவாக மன்னராட்சி காலத்தில் ஒரே பெயரையே எல்லா வாரிசுகளுக்கும் வைத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பெயருடன் ஒரு நம்பரை மட்டும் இணைத்துவிடுவார்கள். (நம்ம இம்சை அரசன் 23ம் புலிகேசி போல). அதுபோல நமது கிளியோபாட்ரா வம்சத்தில் ஏற்கனவே ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்ததினால் இவருக்கு ஏழாம் கிளியோபாட்ரா என்று பெயர். கிளியோபாட்ரா குடும்பத்தில் ஆண்களாக பிறந்தாலே ப்ளாடெமி என்றும் பெண்களாக பிறந்தாலே கிளியோபாட்ரா என்றும் பெயர் வைத்துவிடுவார்களாம். நம்பர் மட்டும்தான் வேற வேற. எகிப்து நாட்டில் கி.மு 69ம் ஆண்டில் பிறந்த இவரது முழு பெயர் Cleopatra VII Philapator (சத்தியமா தமிழ்ல டைப் பண்ண முடியல).

அறிவாற்றலும் பேரழகும் கொண்ட கிளிக்கு (இனிமே இப்படியே எழுதுறேன்... ஒவ்வொரு முறையும் கிளியோபாட்ரான்னு டைப் பண்ண கை வலிக்குது) ஒன்பது மொழிகள் தெரியுமாம். (தமிழ் தெரிந்தால் வந்து பின்னூட்டம் போடச் சொல்லலாம்). கிளி ஒரு கணித மேதை. கணக்கு பண்ணுவதிலும்தான் என்பதை பதிவின் பின்பாதியை படிக்கும்போது உணருவீர்கள். கிளியின் டாடி சீக்கிரமே இறந்துவிட்டதால், அப்போது பதினெட்டு வயதே ஆகியிருந்த கிளியும் அவரது பதினைந்து வயது தம்பியும் சேர்ந்து ஆட்சிப்பொறுப்பை கவனித்துக் கொண்டார்கள். ஆனால் சிலகாலத்தில் அவரது தம்பி துரோகி ஆகி கிளியை கவிழ்த்துவிட்டார்.

இங்க தான் நம்ம ஹீரோ என்ட்ரி. ரோமப் பேரரசு (பேரரசுன்னு சொன்னதும் யாரும் பயப்படாதீங்க மக்கள்ஸ்... இவரு டைரக்டரு இல்ல) ஜூலியஸ் சீசர் உதவியுடன் போரில் வெற்றிப்பெற்று மீண்டும் எகிப்து ராணியாகிவிட்டார். ஆனால் எகிப்து நாட்டின் சட்டப்படி தனியாக ஆள முடியாததால் தனது பதினோரு வயது தம்பியை மணந்துக்கொண்டார். (பாலச்சந்தர் பட க்ளைமாக்ஸ் மாதிரி இருக்கே...) ஆயினும் தலைவனை பிரிந்து தலைவிக்கு இருக்க முடியாததால் மீண்டும் ரோமுக்கு சென்று ஜூலியஸ் சீசருடன் வாழ ஆரம்பித்தார். அவர்களுக்கு சிசேரியன் என்று ஒரு மகன் பிறந்தார். (சிசேரியனா நார்மல் டெலிவரியா என்று ஆராய்ந்து பார்த்தேன்... வரலாற்றுக்குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை). சில ஆண்டுகளில் ஜூலியஸ் மரணத்தை தழுவினார்.

ஜூலியஸின் மரணத்திற்குப்பின் அவரது ஆதரவாளரான மார்க் ஆண்டனி கிளியின் மீது காதலில் விழுந்தார். கிளியும் மார்க்குக்கு பாஸ்மார்க் போட, இருவரும் திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவரும் இணைந்து மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்களின் உறவை மையப்படுத்தி ஷேக்ஸ்பியர் பதினேழாம் நூற்றாண்டில் நாடகம் ஒன்றினை நடத்தினார். போரில் ஆண்டனி மரணமடிய அதன்பிறகு கிளிக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே விஷப்பாம்புகளை தனது மார்பில் கடிக்கவிட்டு கிளியோபாட்ரா தனது 39வது வயதில் தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு சொல்கிறது.

கிளியோபாட்ராவின் வரலாற்றை அவ்வப்போது திரைப்படமாக எடுத்தபோதிலும் 1963ம் ஆண்டில் எலிசபெத் டெய்லர் நடிப்பில் வெளிவந்த படமே இன்றளவும் பேசப்படுகிறது. நான்கு ஆஸ்கர் அவார்டுகளை வாங்கி குவித்துள்ளது. கிளியோபாட்ரா பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தால் இந்தப் படத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள்.

டாரண்ட் லிங்க்: Cleopatra (1963) DVD RIP
 நேரடி லிங்க்ஸ்: 

இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப் டைட்டில் இணைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக வரலாறு பற்றிய பதிவினை எழுதியிருக்கிறேன். அதுபற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டால் எனது எழுத்துக்களை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

41 comments:

erodethangadurai said...

ME FIRST ....?

erodethangadurai said...

நல்ல தகவல்கள் .... ! உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

அருண் பிரசாத் said...

அட இப்போதான் தெரியுது உங்க டெம்ப்ளேட் ஏன் கருப்பு நிறத்துல இருக்குனு....

நல்ல பகிர்வு பிரபா

பாலாஜி சங்கர் said...

தகவல்கள் அனைத்தும் அருமை உங்களின் பங்களிப்பு நன்றாக தெரிகிறது

வாழ்த்துக்கள்

Chitra said...

கிளியோபட்ரா - ஸ்ஸ்ஸ்ஸ் .... அப்பா... எப்படி இந்த பெயரை சரியா டைப் பண்ணீங்க? - Cleopatra என்று டைப் செய்தால், ச்லேஒப்பற்ற என்று வருது. அவ்வ்வ்....
நிறைய தகவல்களுடன் நல்ல பதிவு.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

நிறைய தகவல்களுடன் நல்ல பதிவு.

Unknown said...

அருமையான பதிவுதான்

அப்பறம் ஒரு விஷயம் நானும் உங்கள மாதிரிதான் .நானும் மூணாவது படிக்கிறப்போ என்கூட படிச்ச விசாலாட்சி ங்கர பொண்ணோட ஸ்லேட்டுல i love you எழுதி மாட்டி செம மாத்து வாங்கிருக்கேன் (அந்த வீர தழும்பு கூட இன்னம் என் வலது காலில் இருக்கு )

சைவகொத்துப்பரோட்டா said...

கிளியின் வரலாறு, சிறிய தொகுப்பாக
இருந்தாலும் சுவையாக இருக்கு!
தீபாவளி வாழ்த்துக்கள் பிரபாகர்.

Philosophy Prabhakaran said...

@ ஈரோடு தங்கதுரை
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... பிரபல பதிவர்களது வலைப்பூவில் யாரவது மீ த பர்ஸ்ட் என்று கமென்ட் போட்டிருந்தால் பொறாமைப்படுவேன்... முதல் முறையாக எனது பதிவிற்கு மீ தி பர்ஸ்ட் என்று கமென்ட் போட்டு நீங்கள் என்னை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல் வரலாற்றிலும் இடம் பிடித்திருக்கிறீர்கள்...

Philosophy Prabhakaran said...

@ அருண்பிரசாத்
வாங்க அருண்... உண்மையில் டெம்ப்ளேட்டின் கருப்பு நிறத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... பெண்கள் விஷயத்தில் மட்டும்தான் அப்படி...

Philosophy Prabhakaran said...

@ பாலாஜி சங்கர்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாஜி... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

உண்மைதான் கிளியோபாட்ரா என்று தமிழில் வரவழைக்க ஆங்கிலத்தில் kiliyopaatraa என்று டைப் செய்ய வேண்டும்... இதுபோன்ற டைப்பிங்கில் எப்போதுமே நாம் அந்த வார்த்தையை எப்படி உச்சரிக்கிறோமோ அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்... நூறு பதிவுகள் கடந்த உங்களுக்கு நான் சொல்லித்தரவா வேண்டும்...

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்... பதிவை படித்துவிட்டு தான் பின்னூட்டம் போடுகிறீர்களா என்று தெரியவில்லை... ஏனெனில் ஏறத்தாழ எனது எல்லாப் பதிவுகளிலும் நீங்கள் இதே / இதுபோன்ற பின்னூட்டங்களை மட்டுமே இட்டிருக்கிறீர்கள்... என்னவோ போங்க...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே... பரவாயில்லையே பொண்ணு பேர்கூட ஞாபகம் வெச்சிருக்கீங்க... இதயத்துல தழும்பு இல்லாம இருந்தா சரி...

Philosophy Prabhakaran said...

@ சை.கொ.ப.
நன்றி நண்பா... நிறைய எழுதினால் படிப்பவர்களுக்கு போர் அடிக்கும் என்ற காரணத்தினால் தான் சிறியதாக எழுதினேன்...

Philosophy Prabhakaran said...

@ ALL
பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

MeenaArun said...

the first picture is not cleopatra,it is goddess hathoor or mother god of ancient egyptians

உமர் | Umar said...

நடை நல்லா இருக்கு நண்பரே!

ஆனந்தி.. said...

cleopatra பற்றி ரொம்ப சுமாரான தகவல்கள் மட்டுமே தெரிஞ்சிருந்த எனக்கு உங்க பதிவில் இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன்..உண்மையில் cleopatra தந்தையின் இறப்புக்கு அப்புறம் விரட்டி விட படுவாள்...அப்போ கிரேக்க கடற்கரையோரம் ஒரு தூணில் சாஞ்சு கவலையாய் எதிர்காலம் குறித்து சிந்தனையில் இருப்பாள்(அந்த தூணில் மேலே கிரேக்க காதல் கடவுள் ra or cupid சிலை இருக்கும்..) அந்த வேளையில் சீசர் இவங்க ஊருக்கு படை எடுத்து வருவார்..அப்போ சிலைக்கு கீழே சிலை போலே இருக்கும் கிளி யை பார்த்து மயங்கி காதல் வசபடுவார்..சீசர் ரொம்ப வயதானவர்..கால் ஊனமான மாற்று திறனாளி..இவள் நாடு இவளுக்கே திரும்ப கிடைப்பதில் சீசர் உதவி புரிவார்...இதெல்லாமே நான் பெர்னார்ட் ஷா வின் cleopatra வில் எப்பவோ படிச்சது ...பிரபா..நீங்க ஷேக்ஸ்பியர் இன் version ஐ விட ஷா பதிவுகளை படிச்சு பாருங்க..இன்னும் கிளி அழகாவும்,சுவாரஸ்யமாவும் இருப்பாள்...வித்யாசமான பதிவு,வித்யாசமான தகவல்..வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ MeenaArun
Thanks for coming and posting comments...

// This image of the Egyptian queen Cleopatra appears on a
temple of the goddess Hathor in Dandarah, Egypt. Hathor
was the goddess of the sky, of women, and of love. //

i found this note from where i took this picture...

Philosophy Prabhakaran said...

@ கும்மி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ ஆனந்தி
கிட்டத்தட்ட ஒரு மினிபதிவு ரேஞ்சுக்கு பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி... உங்கள் பின்னூட்டத்தின் மூலம் நானும் கிளியோபாட்ரா பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்துக்கொண்டேன்... புத்தகம் படிக்கும் அளவிற்கு எனக்கு பொறுமையும் ஆங்கில அறிவும் இல்லை ஆனந்தி... முடிந்தால் கிளியோபாட்ரா பற்றிய படங்களைப் பார்த்து தெரிந்துக்கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... அடுத்த முறை வரும்போது பெயரோடு வாருங்கள்...

எஸ்.கே said...

கிளியோபட்ரா பற்றி பல தகவல்கள்! அவர் ஒரு புதிர்!
வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

@ எஸ்.கே
எல்லோருடைய பதிவிலும் பின்னூட்டம் போடும் நண்பரே... ஏன் இவ்வளவு தாமதம்...

Unknown said...

nalla information prabhakaran... innum niraya ezhuthunga...

Unknown said...

காலங்கள் கடந்தாலும்.. கிளியோபாட்ராவுக்கு மாற்று கிடையாது ...

nis said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நண்பர் prabhakaran

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

கிளி ..தேங்க்ஸ் ....பாக்குறேன்

Philosophy Prabhakaran said...

@ ஜே.ஜே., கே.ஆர்.பி.செந்தில், nis, தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பர்களே... தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ ஜே.ஜே., தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை
முதல் முறையாக வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து வருகை தாருங்கள்...

வருண் said...

***கிளியோபாட்ராவின் வரலாற்றை அவ்வப்போது திரைப்படமாக எடுத்தபோதிலும் 1963ம் ஆண்டில் எலிசபெத் டெய்லர் நடிப்பில் வெளிவந்த படமே இன்றளவும் பேசப்படுகிறது.***

எலிசபெத் டெய்லெர் கருப்பு இனத்தை சேர்ந்தவரா?


"""Ask practically any African-American, however, and the answer is a resounding "of course she was Black.""""

ஒருவேளை கருப்பு இனப்பெண் நடித்து இருந்தால் ஆஸ்கரும் கெடச்சு இருக்காது மண்ணாங்கட்டியும் கெடச்சு இருக்காதுனு நான் சொல்லலாமா?

சுதன் said...

a interesting post. i liked it so much since i like history more. why cant uconsider developing this post to a detail post on the queen. similarly it would be nice if you can give links on the net for documents or materials to read and learn more.

Philosophy Prabhakaran said...

@ வருண்
கிளியோபாட்ராவின் படங்களை நான் இப்படியெல்லாம் ஆய்வு செய்து பார்க்கவில்லை... நீங்கள் சொன்னது சரியாகக்கூட இருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ சுதன்
உங்கள் தொடர்ச்சியான வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி... நீங்கள் சொன்ன ஆலோசனையைப் பற்றி சிந்திக்கிறேன்... எனினும் வரலாறு சம்மந்தமான பதிவுகளை உங்களைப் போல அதிகம் பேர் விரும்புவதில்லை... எனவே தான் இந்தப் பதிவை சிறியதாக எழுதினேன்...

ஜில்தண்ணி said...

intresting machi

history'a bore adikkaama short nd sweeta eluthitta

athoda antha link'a kodutha paaru anga thaan nikkiraar philosophy

Jayadev Das said...

இது You Tube லயும் இருக்கு

http://www.youtube.com/watch?v=pzruB19CFgI

parththuttu solren!

நண்பன் said...

படமே பார்க்க பிடிக்காத எனக்கு இந்த படத்தை பார்க்க ஆசை வந்தது ?தங்களின் பதிவை படித்து .

Anonymous said...

very nice

nivetha said...

unga mokka thanga mudiyala

jennifer said...

it was very nice.but please leave such sentences that u have given in the bracket.very superb