வணக்கம் மக்களே...
ஒரு வழியாக தீபாவளி ஓய்ந்தபிறகு நேற்றிரவு மைனா படம் பார்க்க சென்றிருந்தேன். முன்பதிவு எதுவும் செய்யாததால் எங்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் M.S.M திரையரங்கிலேயே பார்க்கலாமென்று முடிவு செய்தோம். 10 மணி படத்திற்கு 9.40க்கே உள்ளே போய் உட்கார்ந்துக்கொண்டோம். முதலில் சுமார் முப்பது நாப்பது பேர் இருந்தது போல தெரிந்தது. ஆனால் படம் ஆரம்பிக்கும் வேளையில் கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்துவிட்டது.
கதைச்சுருக்கம்
விவரம் தெரிந்த வயதில் இருந்து ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்களின் கதை. கதை தேனீ மாவட்டம் குரங்குனி என்ற மலைக்கிராமத்தில் ஆரம்பிக்கிறது. மனைவியையும் சிறுவயது மகளையும் (நாயகி) ஒரு குடிகார கணவன் கைவிட்டுவிட அவர்களது தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான் ஒரு சின்னப்பையன் (நாயகன்). நாளடைவில் சிறுவர்கள் வளர அவர்களது காதலும் வளர்கிறது. பின்பு ஒருநாள் நாயகனும் நாயகியும் முத்தம் கொடுத்துக்கொள்வதை நாயகியின் அம்மா பார்த்துவிடுகிறார். காதலுக்கு தடையாய் இருக்கும் அவரை நாயகன் அடிக்க வர போலீஸ் அவரை கொலைமுயற்சி கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கிறது. விடுதலையாக 2 நாட்களே உள்ள நிலையில் நாயகிக்கு அவரது தாய் வேறு திருமண ஏற்பாடு செய்ய நாயகன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்து நாயகியை மீட்டேடுக்கிறார். அதே சமயம் நெருக்கடியான சூழலில் இருக்கும் போலீசார் மீண்டும் நாயகனை கைது செய்ய அதன் பிறகு நடக்கும் திருடன் – போலீஸ் விளையாட்டே கதை. இதற்கு மேல கதையை சொல்லி உங்கள் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை.
தீபாவளியும் தீபாவளிக்கு முந்தைய நாள் நடக்கும் சம்பவங்களே கதை. வழக்கமான தமிழ் சினிமா கிராமத்து காதல் கதைகளைப் போலவே படம் ஆரம்பிக்கிறது. ஹீரோ சிறையில் இருந்து தப்பித்து வந்தபிறகே படம் சூடுபிடிக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே சிறுவர்கள் விளையாட பந்துக்கு காசு கொடுக்கும் காட்சியில் போலீஸ் அதிகாரியின் குணத்தையும், தனது அண்ணிகளை எல்லாம் நாசூக்காக புடவை மாற்ற வைக்கும் காட்சியில் போலீஸ்காரரின் மனைவியின் குணத்தையும் காட்டிவிடுகிறார்கள். இடைவேளை வரை சாதாரண ஒரு தமிழ் படமாக கதை நகர, இரண்டாம் பத்தியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
நாயகன்
விதார்த் – தொட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர். நடிப்பில் பெரிய சிகரங்களை தொடாவிடிலும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சண்டித்தனம் செய்யும் கிராமத்து ஆளாக அறிமுகமாகிறார். ஆங்காங்கே சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார். உதாரணத்துக்கு “எந்த மகராசன் தூக்கிட்டு போகப்போறானோ...” என்று நாயகியைப் பார்த்து ஒரு பெண்மணி சொல்ல அந்தப் பெண்ணிற்கு குட்டு வைக்கும் காட்சி.
நாயகி
அமலா – ஏற்கனவே சிந்து சமவெளி படத்தில் அனாகாவாக அறிமுகமானவர். ஆனால் இந்தப் படத்திலும் அறிமுகம் என்றே போடுகிறார்கள். இந்தப் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. மற்றபடி அமலா ஓர் பேரழகி. சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இந்தக் கூற்றை மறுக்க மாட்டார்கள். பார்ப்பதற்கு கொஞ்சம் தமன்னா சாயலில் இருக்கும் இவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்.
தம்பி ராமையா
சில்லுனு ஒரு காதல் உட்பட பல படங்களில் வடிவேலுவுக்கு எடுபிடியாக நடித்தவர். இவர் தான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை எடுத்தவர் என இன்றுதான் தெரிந்துக்கொண்டேன். ஜெயில் வார்டன் கேரக்டரில் நடித்திருக்கிறார். நாயகன் நாயகிக்கு அடுத்தபடியாக அல்லது அவர்களுக்கு இணையான கேரக்டர் என்று சொல்லலாம். காமெடி, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்குகிறார். நடிப்பில் ஆங்காங்கே வடிவேலுவின் சாயல் தெரிக்கிறது. உதாரணத்துக்கு, காட்டில் புலி படத்தை பார்த்து பயப்படும் காட்சி.
மற்றும் பலர்
இவர்களைத் தவிர முக்கிய கேரக்டர் என்று பார்த்தால் போலீஸ் அதிகாரியாக வரும் சேது. ஜஸ்ட் லைக் தட் சிறப்பாக நடித்திருக்கிறார். உதாரணம் பேருந்து விபத்துக்காட்சி. இது தவிர பெயர் தெரியாத சில நடிக நடிகையர். நாயகனின் தந்தை, நாயகியின் தாய், போலீஸ்காரரின் மனைவி என்று அனைவருமே அவரவர் வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசை
இமான் இசை அமைத்திருக்கிறார். பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பல் என்றே சொல்லலாம். ஆனால் பாடல்கள் ஓரளவிற்கு சுமார் ரகம். “ஜிங்கி ஜிங்கி...” என்று ஆரம்பிக்கும் பாடல் குத்துப்பாடல் இல்லாத குறையை தீர்க்கிறது. மற்ற பாடல்களில் “நீயும் நானும்...” என்று ஆரம்பிக்கும் பாடலும் “கையப் புடி...” என்று ஆரம்பிக்கும் பாடலும் மனதில் நிற்கிறது.
இன்ன பிற
படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டியே ஆகவேண்டும். மலைவழிச்சாலையில் கதை பயணிப்பதால் புகுந்து விளையாடி இருக்கிறார். வசனங்களில் ஆங்காங்கே “பளிச்” தெரிகிறது. ஆனால் “அட்ராசக்க” ஸ்டைலில் வசனங்களை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்து பதிவு போட முடியவில்லை.
எனக்குப் பிடித்த காட்சி
பஸ் விபத்து காட்சி – நாயகன், நாயகி, இரண்டு போலீஸ் அதிகாரிகள், சக பயணிகள் உட்பட மலைச்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கையில் பஸ் மலையில் இருந்து தவறி விழப்போக எப்படியோ விழாமல் விளிம்பில் நிற்கிறது. பேருந்தில் இருந்த அனைவரும் தப்பித்துவிட இரண்டு போலீஸ் அதிகாரிகள் மட்டும் பஸ்சில் சிக்கித் தவிக்கிறார்கள். அதிலும் சேதுவின் நிலை ரொம்பவும் மோசம். ஒரு கண்ணாடி மீது படித்திருக்கும் அவர் கொஞ்சம் அசைந்தால் கூட கண்ணாடி கிழிந்து அதலபாதாளத்தில் விழுந்து விடும் அபாயம். அப்போது நாயகன் அவர்களைக் காப்பாற்றும் காட்சி அருமை. காட்சி அமைப்பு, வசனம் இரண்டிலும் என் மனதில் நின்ற காட்சி இதுதான்.
சில குறைகள்:
- நாயகி பூப்பெய்தும் காட்சி. இத்தகைய காட்சிகளை தமிழ் சினிமாவில் காமெடிக்காக பயன்படுத்துவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
- நாயகி தேர்வுக்கு படிக்க வெளிச்சமில்லாத பொழுது நாயகன் மின்மினிப்பூச்சிகளை பாட்டிலில் போட்டு கொடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.
- சோகமான க்ளைமாக்ஸ் தான் வைப்பேன் இன்று இயக்குனர்கள் ஏன்தான் அடம பிடிக்கிறார்களோ...?
தீர்ப்பு
ஏற்கனவே தமிழ் சினிமாவில் இதே போன்ற உருக்கமான திரைப்படங்கள் நிறைய வந்து இருப்பதால் இந்த படத்தை மக்கள் ரசிப்பது கஷ்டம். நெகட்டிவான க்ளைமாக்ஸை தவிர்த்து இருக்கலாம். சில காட்சிகளில் பாலு மகேந்திராவின் “அது ஒரு கனாக்கலாம்” திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது. காதலில் இருப்பவர்கள் என்றால் ரசிக்கலாம். மற்றவர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம். யாராவது படத்தை பார்க்க முடிவு செய்திருந்தால் தயவுசெய்து தனியாக சென்று பாருங்கள். நான்கைந்து நண்பர்களோடு சென்று கலாட்டா செய்தபடி பார்ப்பதெல்லாம் படத்தின் மீது தவறான புரிதலையே ஏற்படுத்தும்.
படம் நன்றாக இருக்கிறது – ஆனால் ஓடாது (ங்கொய்யால நம்ம ஜனங்க என்னைக்கு நல்ல படங்களை ஓட வச்சிருக்காங்க)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
45 comments:
விமர்சனம் கச்சிதம்.
@ புவனேஸ்வரி
நேரமே வந்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி மேடம்...
// தமிழ் சினிமாவிற்கே உரிய ஸ்டைலில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றும் ஹீரோ //:)
இதே தான் தமிழ் சினிமா :)
நல்ல விமர்சனம் :)
// தமிழ் சினிமாவிற்கே உரிய ஸ்டைலில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றும் ஹீரோ //
வேலை வெட்டி இல்லாம சுத்தும் அப்பாவை போல இல்லாம சின்ன வயசுல இருந்தே வேளைக்கு போகும் அந்த சுருளியை இப்படி தப்பா சொல்லிடிங்களே..
அதேபோல நாயகி பூப்பெய்தும் காட்சியில் ஒன்றும் காமெடியாக சொல்லப்படவில்லை..
checkout my review here :
http://suthershan.blogspot.com/2010/11/blog-post.html
@ S.Sudharshan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
@ suthershan
// வேலை வெட்டி இல்லாம சுத்தும் அப்பாவை போல இல்லாம சின்ன வயசுல இருந்தே வேளைக்கு போகும் அந்த சுருளியை இப்படி தப்பா சொல்லிடிங்களே..//
சரிதான்... தப்பு பண்ணிட்டேன்...
// அதேபோல நாயகி பூப்பெய்தும் காட்சியில் ஒன்றும் காமெடியாக சொல்லப்படவில்லை..//
இதை ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை... காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்...
// தமிழ் சினிமாவிற்கே உரிய ஸ்டைலில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றும் ஹீரோ //
வரிகளை நீக்கிவிட்டேன்... ஆழமாக படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி...
அடேங்கப்பா! அக்குவேறு, ஆணி வேறா அலசிட்டீங்களே! விமர்சன பாணி நல்லா இருக்கு பிரபாகர்.
காசு மிச்சம் எனக்கு ..
@ சைவகொத்துப்பரோட்டா
நன்றி நண்பரே...
@ கே.ஆர்.பி.செந்தில்
என்னங்க... படம் நல்லா இருக்குனு தானே சொன்னேன்...
சிறப்பான விமர்சனம். நீங்க சொன்ன மாதிரி இந்த மாதிரி படமெல்லாம் ஓடாதுதான்!
தோழரே பஸ் விபத்து காட்ட்சிக்கு பிறகு வரும் ஒரு காமெடியை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஏன்?
எப்பவுமே தனியா உட்கார்ந்துதான் படம் பார்க்க பிடிக்கும் ..!! நல்ல அலசல்..!! :-))
உங்கள் விமர்சனத்தின் நேர்த்தி நன்றாக உள்ளது. இங்கு ரிலீசாகவில்லை என்பதால் ஒரிஜினல் dvd வரும்வரைக்கும் காத்திருக்கவேண்டிய நிலை :((
விமர்சனம் எழுதிய உங்கள் பக்கம்... படிக்க நன்றாக உள்ளது...
நைட் டிக்கட் எடுத்திருக்கேன்... பாக்கலாம் எப்படி இருக்குன்னு!!!
நல்ல விமர்ச்னம் நண்பரே .... யதார்த்த படம் எடுக்கிறேன் என்று சில படங்கள் நாம் பொறுமையை சோதிக்க வருமே அது போன்ற படமா இது நண்பா ?
பாத்துபுடலாம் :) நன்றி
பருத்திவீரன் பாதிப்பில் வந்திருக்கும் மற்றொறு படம்.விபத்து சீன் அன்பேசிவம் பாதிப்பு..படம் முழுக்க கிளீசேக்கள்..தம்பிராயாவின் நடிப்பு மட்டும் புதிதாக இருந்தது
//அமலா – ஏற்கனவே சிந்து சமவெளி படத்தில் அனாகாவாக அறிமுகமானவர்.//
:)
//சோகமான க்ளைமாக்ஸ் தான் வைப்பேன் இன்று இயக்குனர்கள் ஏன்தான் அடம பிடிக்கிறார்களோ...?//
இப்பத்த டிரெண்ட் அதானே..
@ எஸ்.கே
வாங்க எஸ்.கே... படம் பாத்தாச்சா...
@ தமிழ் மதி
பஸ் விபத்து காட்சிக்குப்பிறகு வரும் நகைச்சுவை காட்சியா...? நீங்கள் ஏதோ ஒரு காட்சியை குறிப்பிட விரும்புகிறீர்கள்... அதை நீங்களே சொல்லிவிடுங்களேன்...
@ ஜெய்லானி
ம்ம்ம்... நானும் அப்படித்தான்... ஆனால் தனியாளாக தியேட்டருக்கு போக வெறுப்பாக இருக்கும்... அதனால் அதிகம் பேசாமால் அமைதியாக படம் பார்க்கும் நண்பன் ஒருவனை மட்டும் அழைத்துச் செல்வேன்...
@ எப்பூடி
நன்றி நண்பரே... இலங்கையில் ரிலீஸ் இல்லையா... சரி வருத்தப்பட வேண்டாம் விரையில் DVD வெளிவந்துவிடும்...
@ ஆகாயமனிதன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ சிவா
இந்நேரம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... உங்க விமர்சனம் எழுதியாச்சா...
@ "ராஜா"
நன்றி நண்பரே... சில காட்சிகள் அதுபோல இருக்கலாம்... ஆனால் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்...
@ பிரசன்னா
வாங்க பிரசன்னா... படம் பார்த்தாச்சா...
@ உலக சினிமா ரசிகன்
ம்ம்ம்... சரிதான் நண்பரே... பஸ் விபத்துகாட்சி பற்றி நீங்கள் சொன்னது முற்றிலும் சரி... நல்லவேளையாக பருத்திவீரன் படத்தில் வந்தது போல கற்பழிப்பு காட்சி எதுவும் இடம்பெறவில்லை...
@ அன்பரசன்
வாங்க நண்பரே... நீங்களும் அனாகா ரசிகரா...
@ all
பின்னூட்டமிட்டவர்களுக்கும் வாக்களித்து பிரபல்யமாக்கிய அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
விமர்சனம் அருமை.ஆனா படம் ஓடாதுன்னு சொல்ல முடியாது.அதெல்லாம் சரி..
...>>>
ஆனால் “அட்ராசக்க” ஸ்டைலில் வசனங்களை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்து பதிவு போட முடியவில்லை. >>>
எதுக்குய்யா என்னை வம்புக்கு இழுக்குறீங்க?
ஸ்டில்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு தல.நான் வழக்கமா கூகுல்,அல்லது இண்டியா கிளிட்ஜ் ல எடுப்பே.நீங்க எங்கே இருந்து எடுத்தீங்க,செம
@ சி.பி.செந்தில்குமார்
வம்பெல்லாம் இல்லைங்க... உண்மையில் நீங்கள் வசனதொகுப்போடு விமர்சனம் வெளியிடும் ஸ்டைல் எனக்குப் பிடித்திருந்தது... அதன் விளைவாகவே எனது Endhiran Revisited பதிவில் உங்களைப் போலவே வசனத்தொகுப்பு வெளியிட்டிருந்தேன்...
நானும் ஸ்டில்களை கூகிளில் இருந்து தான் எடுத்தேன்...
@ சே.குமார்
நன்றி...
ஓ,நன்றி பிரபா..
நல்ல விமர்சனம் நண்பா..!!!
நன்கு தெளிவான இந்த விமர்சனத்தில் சேதுவின் பங்கை இன்னும் நன்றாக சொல்லியிருந்தால் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.. அவரின் நடிப்பு இதில் பெரும் போற்றத்தக்கது.. சின்ன விமர்சனமாக இருந்திருந்தால் நான் இதை கேட்டிருக்கமாட்டேன்.. உங்களது தெளிவான விமர்சனமாக இருக்கையில், கதையின் முதுகெலும்பாய் இருக்கும் சேதுவை பற்றி இன்னும் அதிகமாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது..
நல்ல விமர்சனம் ...! கண்டிப்பாக இந்த படம் ஓடும். ஓடனும்..!!
தீபாவளிக்கு வந்த படஙக்ளில் ஒரே வெற்றிப் படம் மைனா மட்டும்தான் பிரபாகர்..
@ Ram
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம்... உண்மைதான்... சேதுவின் பங்களிப்பு போற்றத்தக்கது...
@ ஈரோடு தங்கதுரை
தீபாவளிக்கு வந்த மற்ற படங்களில் இது ஒன்று மட்டும்தான் நன்றாக இருப்பதால் கண்டிப்பாக ஓடும்.... ஆனால் நெகடிவ் க்ளைமாக்ஸ் தான் நெருடுகிறது...
@ கேபிள் சங்கர்
முதல்முறையாக எனது வலைப்பூவிற்கு வருகை தந்ததற்கும் கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி கேபிள்... எனது அடுத்த பதிவில் உங்களைப் பற்றி சில வரிகள் எழுத இருக்கிறேன்...
என்னுடைய பின்னுட்டத்தை........... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
@ விக்கி உலகம்
புரியவில்லை... எந்த நேர்மை...? என் பின்னூட்டத்தை........ என்றால்... டேஷுக்கு என்ன அர்த்தம்...
பாருங்க அப்படி ஒரு ட்விஸ்ட் வச்சதனாலத்தான் நீங்க உங்க நேரத்த மிச்சப்படுத்தி என் தளத்திற்கு வந்து போனீர்கள்.
சும்மாதான் நண்பா
எப்படியல்லாம் கஷ்டப்படவேண்டி இருக்கு.ஸ்ஸ்ஸ் முடியல
ஹி... ஹி... ஹி... அதற்கெல்லாம் அவசியமே இல்லை... நான் எனது Dashboardல் புதிதாக எழுதப்பட்டிருக்கும் அனைத்து பதிவுகளையும் படிப்பேன்... But வீட்டில் இருப்பது Limited Usage Plan என்பதால் பின்னிரவில் தான் பதிவுகளை படிப்பேன்... உங்களுடைய மெயில் ஐடி தர முடியுமா...
தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.
http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php
Post a Comment