8 November 2010

வ குவாட்டர் கட்டிங் – மப்பேறாத பிராந்தி

வணக்கம் மக்களே...

என்னுடைய தற்போதைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம் வாசகர்களாகிய நீங்கள் தான். இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய மைனா படத்திற்கு உங்களது பேராதரவை கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றிகள். 
மேலும் வாக்களிக்க விரும்பினால் இந்த இணைப்பை சொடுக்கவும்...

திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில் கேபிள் சங்கர் எவ்வளவு பெரிய கில்லாடி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இவ்வாறாக நான் எழுதிய மைனா விமர்சனம் அவர் எழுதியதை விட இன்ட்லியில் சில வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்துக்கொண்டிருக்கிறது. இது எப்படி நடந்தது..? எதுவும் தொழில்நுட்பக் கோளாறா என்று தெரியவில்லை. எனினும் இதனால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன். மேலும் எனது மைனா விமர்சனத்திற்கு கேபிள் அண்ணன் வந்து பின்னூட்டம் போட்டு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் பதிவிற்கும் இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு நான் மகான் அல்ல படம் பார்க்க சென்றிருந்தபோது இந்தப் படத்தின் ட்ரைலரையும் காட்டினார்கள். அப்போதே இந்தப் படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன். அப்படி ஒரு எதிர்பார்ப்பு. ஆனால் உடன் வரத் துணை கிடைக்காததால் நேற்றுதான் படத்தைப் பார்த்தேன். சுவாரஸ்யம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக யாருடைய விமர்சனத்தையும் படிக்காமல் தியேட்டருக்கு சென்றேன். ஆனால் அதுவே எனக்கு ஆப்பாக அமையும் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

வழக்கமாக நான் படம் பார்க்கும் சில தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை அல்லது டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே சென்னை மெலோடி திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருந்தேன். திரையரங்கைப் பற்றி சில வரிகள். வழக்கமாக இங்கே ஹிந்தி திரைப்படங்கள் தான் வெளியாகும். நீண்ட நாட்களுக்குப்பின்பு தமிழ் படமான எந்திரன் வெளியானது. இப்போது இந்தப் படம். இனி அவர்கள் நிச்சயம் தமிழ் படங்களை திரையிட மாட்டார்கள் என்பது இந்தப் பதிவை படித்து முடிக்கும்போது உங்களுக்கும் புரியும். பெரிய திரையரங்கு என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் திரையரங்கும் சீட் தரமும் சுமாராகவே இருந்தது. ஆனால் கேண்டீன் மட்டும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது. வழக்கமாக திரையரங்குகளில் கிடைக்கும் உணவுப்பொருட்களுடன் கோல்ட் காபி, மேங்கோ ஜூஸ், ப்ளாக் பாரஸ்ட் போன்ற வித்தியாசமான உணவுப்பொருட்கள் கிடைத்தன. விலையும் மற்ற திரையரங்குகளோடு ஒப்பிட்டு பார்த்தால் குறைவுதான். இனி மெயின் பிக்சருக்கு போகலாம்.

கதை...???
அலன் ஸோலிக்கு போய் ஆடிக்கழிவு கேட்டால் எப்படி பாஸ். கதை அப்படியெல்லாம் படத்தில் ஒரு டேஷும் கிடையாது. இருப்பினும் இயக்குனர் கதை என்று சொல்ல நினைத்திருப்பது என்னவென்றால்... கோயம்புத்தூரை சேர்ந்த இளைஞன் சிவா வேலைதேடி துபாய்க்கு செல்ல இருக்கிறார். சிவாவின் அக்காவுடைய வருங்கால கணவராக சரண். இவர்கள் இருவர்தான் முக்கிய பாத்திரங்கள். மறுநாள் அதிகாலை சிவா துபாய்க்கு செல்ல தயாராக இருக்க துபாயில் தண்ணி அடிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை (!!!) என்று அவருக்கு தெரிய வருகிறது. இதனால் மனம் நொந்துப்போன சிவா கடைசியாக ஒரு முறை குவாட்டர் அடிக்க விரும்புகிறார். ஆனால் அது தேர்தலுக்கு முந்தைய நாள் என்பதால் குவாட்டர் எங்கேயும் கிடைக்கவில்லை. விடிய விடிய சிவாவும் சரணும் குவாட்டர் தேடி அலைகிறார்கள். கடைசியில் அவர்களுக்கு குவாட்டர் கிடைத்ததா இல்லையா என்பதே மீதிக்கதை. இது தவிர நிறைய சைட் டிஷ்களும் உள்ளன.

படத்தில் ஆங்காங்கே தமிழ்ப்படம், சரோஜா படங்களின் சாயல் தெரிகிறது. தவிர குயிக் கன் முருகனை அதிகமாக நினைவுப்படுத்துகிறது. படத்தில் சரோஜா படத்தில் வருவது போல டைம்லைன் போட்டிருக்கலாம். காட்சிகள் எத்தனை மணிக்கு நடைபெறுகிறது என்பதே புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒரு காட்சியில் நள்ளிரவில் நடப்பது போல தெரிகிறது. அடுத்த காட்சியிலேயே ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடுவது போலவும் காட்டுகிறார்கள்.

கதாபாத்திரங்கள்
- சுறா (எ) சுந்தர்ராஜனாக மிர்ச்சி சிவா வழக்கம் போல மொக்கை போட்டிருக்கிறார். ஆனால் வழக்கமாக இவர் போடக்கூடிய மொக்கைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். இந்த முறை போட்டது மரண மொக்கை. ரசிக்க முடியவில்லை.
- மார்தாண்டன் என்ற பாத்திரத்தில் சரண். சரோஜாவில் பார்த்த அதே கேரக்டர் என்று சொல்லலாம். சிவாவின் அக்காவிற்காக சிவா பண்ணும் அலப்பறைகளை எல்லாம் பொறுத்துக்கொள்கிறார்.
- சரோ (எ) சரஸ்வதியாக லேகா. வழக்கமான தமிழ் சினிமா லூசுப்பென்களை விட ஒரு நூறு மடங்கு அதிகமான லூசு.
- கிங், பரட்டை பிரின்ஸ் என்று இரட்டை வேடங்களில் பிரின்ஸ் விஜய். கிங் கதாப்பாத்திரத்தில் எம்.ஆர்.ராதா போல மிமிக்ரி செய்து நடித்திருக்கிறார். பிரின்ஸ் கதாப்பாத்திரம் அவனா நீ...? வகையறா பாத்திரம். ஆனாலும் தியேட்டர் வாசலில் ஜான் விஜய்க்கு பேனர் வைத்திருந்ததெல்லாம் ரொம்ப ரொம்ப டூ மச்.
- இது தவிர கிரெய்க், கல்யான், அபிநயஸ்ரீ, மாணிக்க விநாயகம் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லோருக்குமே மொக்கை போடுவது ஒன்றுதான் வேலை. ஒரே ஒரு காட்சியில் ஆர்யா.

பாடல்கள்
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார். எல்லாப் பாடல்களும் ஏதோ சேட் வீட்டு கல்யாணத்தில் கேட்ட பாடலைப் போலவே இருக்கிறது. ஆனால் பாடல்களை கண்களுக்கு குளிர்ச்சியான விதத்தில் காட்சியாக்கி இருக்கிறார்கள். உன்னைக் கண் தேடுதே... பாடல் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. சவூதி பாஷா... பாடலும் சார்ப்பு சார்ப்பு ஜி... பாடலும் சுமார் ரகம்.

இயக்குனர்கள்
எப்படி இந்த மாதிரியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்று தெரியவில்லை. இயக்குனர் இணைக்கு எக்கச்சக்கச்சக்கமான கிரியேட்டிவிட்டி. பெயர் போடுவதில் ஆரம்பித்து படம் முடியும்வரையில் கிரியேட்டிவிட்டி கொட்டி கிடக்கிறது. உதாரணத்திற்கு படத்தில் லைட்டிங், கலர் செலேக்ஷன். கேரக்டர்களுக்கு பெயர் வைப்பதில் கூட வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அத்தனையையும் வீணடித்திருக்கிறார்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து எப்படி கெட்ட கெட்ட வார்த்தைகளை எல்லாம் வசனங்களாக எழுதுகிறார்களோ...? இதோடு இவர்கள் படம் எடுப்பதை நிறுத்திவிட்டு விளம்பர படங்களை எடுக்கலாம். ஏனெனில் ஒரு அரை நிமிடக்காட்சியில் மனதை கவர்பவர்கள், இரண்டரை மணிநேர படத்தில் சொதப்பிவிடுகிறார்கள்.

எனக்குப் பிடித்த காட்சி
எவ்வளவோ யோசித்து பார்த்தேன். ஆனால் அப்படி எந்தவொரு காட்சியும் படத்தில் இல்லை. ஆங்காங்கே வசனங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தன. ஜான் விஜய் எம்.ஆர்.ராதா போல இமிடேட் செய்தது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது ஆனால் எனக்குப் பிடித்திருந்தது. குவாட்டர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் வசனங்களும் குபீர் சிரிப்பை வரவழைத்து. ஆனால் குவாட்டரின் அருமை தெரியாதவர்களுக்கு அவை எரிச்சலையே ஏற்படுத்தும்.

தீர்ப்பு
படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகள் ரசிக்கும் விதமாக இருந்தது. ஆனால் போகப்போக மொக்கையின் அளவு ஓவராகி விட்டது. தெரிந்தும் தெரியாமலும் கூட தியேட்டர் பக்கம் போய்விட வேண்டாம். 70 ரூபாய் கொடுத்து இந்தப் படத்தை பார்த்ததற்கு ஒரு குவாட்டர் அடித்துவிட்டு மட்டையாகி இருந்திருக்கலாம்.

மப்பேறாத பிராந்தி
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

55 comments:

pichaikaaran said...

படத்தை விட உங்கள் விமர்சனம் அருமை...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
நேரமே வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி பார்வையாளரே... ஆனால் நீங்கள் ஓட்டு போடாமல் போனதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்...

Unknown said...

ஆனால் குவாட்டரின் அருமை தெரியாதவர்களுக்கு அவை எரிச்சலையே ஏற்படுத்தும்.

இத இத இததான் நான் எதிர் பார்த்தேன். ஆனாலும் உங்க விமர்சன பாணி சூப்பரு பா

எப்பூடி.. said...

உலக சமாதான தூதுவர் எங்கள் தங்கம் விஜயை சுறாவை வைத்து கிண்டலடித்ததர்க்கு முதற்க்கண் கண்டனங்கள்.

ட்ரெயிலரை பார்க்கும்போது சில படங்கள் எப்படி என்பதை ஓரளவு முடிவு செய்யலாம், அப்படித்தான் 'வா குவாட்டர் கட்டிங்கும்', இருந்தாலும் எங்களை திடமாக அலேட் பண்ணியதற்கு நன்றிகள்.

உங்க 70 ரூபாயை கொடுத்து நீங்க தலையிடியை வாங்கி எங்க 70 ரூபாயையும் தலையிடியையும் காப்பாத்தின உங்களுக்கு ஓட்டுப்போடாட்டி எங்க மன சாட்சியே எங்களை கொண்ணிடும் :-)

Riyas said...

அவ்வளவு மோசமாவா இருக்கு,,

விமர்சனம் நல்லாருக்கு.

Unknown said...

அடங்கப்பா இவ்வளவு மோசமா இருக்கா நல்லவேள சொன்னீங்க இன்னைக்கு நைட் பேசாம மைனா போக வேண்டியதான்
விமர்சனம் அருமைங்கோ

க.மு.சுரேஷ் said...

//படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகள் ரசிக்கும் விதமாக இருந்தது. ஆனால் போகப்போக மொக்கையின் அளவு ஓவராகி விட்டது. தெரிந்தும் தெரியாமலும் கூட தியேட்டர் பக்கம் போய்விட வேண்டாம். 70 ரூபாய் கொடுத்து இந்தப் படத்தை பார்த்ததற்கு ஒரு குவாட்டர் அடித்துவிட்டு மட்டையாகி இருந்திருக்கலாம்.//

repeat to..
முடியல..
செகன்ட் அப்ல ஊருகாய் இல்லைனா ரொம்ப சிரமாம்.(அந்த பொன்னு).ஊருகாய் கலர் மட்டுமே.
ஒரு பாட்டுல எடுக்க வேண்டியா விசயம் படமா எடுத்திருக்கிறார்காள். குவாட்டர் அடித்துவிட்டு போவது நல்லது.

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் நல்லாருக்கு.

Madhavan Srinivasagopalan said...

விமர்சனம் நன்றாக இருந்தது.. படம் எப்படியோ (நான்தான் படத்த இன்னும் பாக்கலியே!)

ரஹீம் கஸ்ஸாலி said...

[ma]good[/ma]

"ராஜா" said...

படம் உங்களை ரொம்ப படுத்திருச்சி போல .... உத்தம புத்திரன் சென்று இந்த தலைவலியை தீர்த்த்கொங்க பாஸ் .. நமக்கு இதெல்லாம் புதுசா? எத்தனை விஜய் படம் பாத்திருப்போம் (ஐயையோ விஜய பத்தி சொல்லிபுட்டேன் நீங்க விஜய் ரசிகர் இல்லையே?)

எஸ்.கே said...

படம் கவுந்துருச்சா!!!

Chitra said...

படம் "ஊத்தி"கிச்சா?

Anonymous said...

"...எப்படி இந்த மாதிரியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்று தெரியவில்லை..."

நல்ல காமடிதான் போங்க. இந்தக் கதையைக்கூட இவங்க சிந்திக்கவில்லை. இது "Harold & Kumar go to the white castle" என்ற படத்தின் கதை.

Ram said...

ப‌டத்தொகுப்பு, ஒளிப்ப‍திவு பற்றி சொல்லுங்கள்..
விமர்சனம் நடுநிலையில் உள்ள‍து..
விமர்சனம் மேலோட்ட‍மாக இருந்திருக்க‍லாம், இல்லை ஆழ்பதிவாக இருக்க‍லாம்..
ஆழ்பதிவாக என்றால் விடப்ப‍ட்ட‍ இன்ன‍ பிறதுறையை பற்றியும் சொல்லியிருக்க‍லாம்..
ஆனால், நடுநிலை விமர்சனத்தையே மக்க‍ள் பெருமளவு விரும்புவர்.. அத்த‍கைய கணக்கில் உங்களது சூப்ப‍ர்.. ஆனால் என்னை போன்றவர்க்கு எல்லா துறையை பற்றிய விமர்சனமும் தேவைபடுகிறது.. நண்பா.!!!

அருண் பிரசாத் said...

நல்ல இம்புரூமெண்ட்.... நல்லா எழுத ஆரம்பிச்சிட்டீங்க... வாழ்த்துக்கள்....


ஆலம் சோலில போய் ஆடி தள்ளுபடி - கலக்கல் லைன்

Unknown said...

சகா உங்கள் அனுமதியில்லாமல் உங்கள் தளத்திற்கு லிங்க் அளித்துவிட்டேன்.
மன்னிப்பீராக.

அன்பரசன் said...

//சரோ (எ) சரஸ்வதியாக லேகா. வழக்கமான தமிழ் சினிமா லூசுப்பென்களை விட ஒரு நூறு மடங்கு அதிகமான லூசு.//

ஏன் இப்படி?

அன்பரசன் said...

//70 ரூபாய் கொடுத்து இந்தப் படத்தை பார்த்ததற்கு ஒரு குவாட்டர் அடித்துவிட்டு மட்டையாகி இருந்திருக்கலாம்.//

இங்கயும் அதே நெலமைதானா?

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
ம்ம்ம்... உங்களுக்கும் குவாட்டரின் அருமை தெரியும் போல... இணைப்பு கொடுப்பதற்கெல்லாம் அனுமதி கேட்கத் தேவையில்லை நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி...
வாங்க நண்பா... தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நீங்க உண்மையிலேயே விஜய் விசிறியா அல்லது சிரிப்பு விசிறியா...?

Philosophy Prabhakaran said...

@ Riyas
ஆமாம் நண்பரே... நம் கற்பனைக்கெல்லாம் எட்டாத அளவிற்கு மோசமாக இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
நல்லவேளை படிச்சீங்க... நண்பர்களோட போறதா இருந்தா மைனா போக வேண்டாம்... அங்கே ஒரே அழுகாச்சி...

Philosophy Prabhakaran said...

@ க.மு.சுரேஷ்
முதல் வருகை என்று கருதுகிறேன்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
பட் நீங்க போட்ட பின்னூட்டம் நல்லா இல்லை...

Philosophy Prabhakaran said...

@ மாதவன்
பாத்துடாதீங்க நண்பா பாத்துடாதீங்க... நண்பர்கள் அடிச்சு கூட கூப்பிடுவாங்க... தயவு செய்து பாத்துடாதீங்க...

Philosophy Prabhakaran said...

@ ரஹீம் கஸாலி
ஹி... ஹி... ஹி... நம்ம வலைப்பூவுல இன்னும் அந்த டெக்னாலஜி எல்லாம் வரவில்லை... கூடிய விரைவில் ஏற்பாடு செய்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ "ராஜா"
உத்தமபுத்திரனும் மொக்கை தான் என்று உண்மைத் தமிழன் பதிவு எழுதியிருக்கிறார்... விஜய் படமெல்லாம் கூட எவ்வளவோ பரவாயில்லை... விஜயை கலாய்த்துக் கொண்டே ஜாலியாக பார்க்கலாம்... இது அந்த ரகத்தில் கூட சேராது...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.கே., Chitra
// படம் கவுந்துருச்சா!!! //
// படம் "ஊத்தி"கிச்சா? //

இரண்டுமே இல்லை... படம் மட்டை ஆயிடுச்சு...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
சூப்பரான தகவல் ஒன்றினை சொல்லியிருக்கிறீர்கள்... ஆனால் உங்கள் பெயரை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே... Anyway thank u so much...

Philosophy Prabhakaran said...

@ இராமநாதன்
ஆழமாக படித்து பின்னூட்டமிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்... படத்தொகுப்பு, ஒளிப்பதிவு பற்றி நான் எப்போதுமே எழுதுவது இல்லை... ஏனென்றால் எனக்கு அவை பற்றிய ஞானம் துளியளவும் இல்லை... நாம ஏதாவது சொல்லப்போய் அது தப்பாகி விடக் கூடாது... தெரிஞ்சா மட்டும்தான் சொல்லணும்... அதனால் தான் அவை பற்றி எழுதுவதில்லை... மன்னித்துக்கொள்ளவும்...

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
நன்றி நண்பரே... படம் முடிஞ்சதும் கொஞ்ச நேரம் Express Avenue ல சுத்திட்டு இருந்தோம்... அப்போ கெடச்சது தான் அந்த ஐடியா...

Philosophy Prabhakaran said...

@ அன்பரசன்
ம்ம்ம்... தமிழ் சினிமா ஹீரோயின்களை எல்லாம் பார்த்து பார்த்து வெறுத்து போயிட்டேன்...

சிவராம்குமார் said...

நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்! :-)

Unknown said...

y blood ?? same blood :):)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

படம் பாத்துட்டு வந்து படிச்சுக்கறேன் :)

எம் அப்துல் காதர் said...

நல்ல வேளை சொன்னீங்க தல!! டவுன் லோடு பண்ணிட்டேன் - பார்க்கல காப்பாத்திட்டீங்க - நேரம் மிச்சம்!!

Unknown said...

நானும் பார்த்தேன் படத்தை.. நீங்கள் சொன்னமாதிரி சுவாரஷ்யம் குறைஞ்சிடக்கூடாதுன்னு யார்கிட்டயும் கதை கேக்கல..

சரியான மொக்கை.. மண்டை காய்ஞ்சிடுச்சு..

Ramesh said...

மப்பேறாதா பிராந்தியா நீங்க வேற.. பிராந்தி பாட்டிலில் ஊற்றப்பட்ட குழாயடி நீர்.. (சாட்சி: வசனங்கள்)..

Philosophy Prabhakaran said...

@ சிவா
ம்ம்ம்... எனக்கும் சிலரையாவது காப்பாற்றிய திருப்தி :)

Philosophy Prabhakaran said...

@ prak
அவ்வ்வ்வ்... போட்ட காசை எடுத்தாச்சா...

Philosophy Prabhakaran said...

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
படம் பாத்துட்டு வந்து படிக்கிறதுக்கு நீங்க இருக்க மாட்டீங்க...

Philosophy Prabhakaran said...

@ எம் அப்துல் காதர்
ஆமாம் பாஸ்... டவுன்லோட் பண்ணிஎல்லாம் பாத்தா நல்லா இருக்காது... தியேட்டருக்கு போய் பாருங்க...

Philosophy Prabhakaran said...

@ பதிவுலகில் பாபு
ம்ம்ம்... ரெண்டு பெரும் ஒரு பாடம் படிச்சிகிட்டோம்... இனியாவது திருந்துவோம்...

Philosophy Prabhakaran said...

@ பிரியமுடன் ரமேஷ்
ஹி... ஹி... ஹி... நீங்களும் பாதிக்க பட்டிருக்கீங்க போல...

Sivakumar said...

puskhar and gayathri...already used many bad words in orampo. I knew how this film VA also would be. Hence I did not go. WATCH "SOCIAL NETWORK" english film releasing this friday. Story of facebook founder. We should spend our money and golden time on meaningful films. Pushkar gayathri should take spoiling the youths. Please dont tell that they have creativity. Only ad film gimmicks. WE WANT FILMS AND NOT GIMMICKS AND LOW CLASS WORDS. They are the real JODI NO.1. Kodumadaa saami.

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனம் சூப்பர்,கேபிள் சங்கரை விட அதிக வாக்குகளா?ம் ம் ம் நடத்துங்க..

சி.பி.செந்தில்குமார் said...

இந்தப்பதிவும் செம ஹிட் போல.எனது 130 இடுகைகளும் தன்மிழ் 10 இல் அதிக பட்சம் 10 ஓட்டுதான் வாங்கி இருக்கும்.நீங்க 16 அட்ட்ரா சக்க.

Philosophy Prabhakaran said...

@ சிவகுமார்
நீங்கள் சொல்வதுபோல புஷ்கர் - காயத்ரி போன்ற கழிசடைகளை நாம் புறம்தள்ளவே வேண்டும்... ஆனால் அவர்களுக்குள் இருக்கும் கிரியேட்டிவிட்டியை மறுக்க முடியாது நண்பரே...
Social Network படத்தின் விமர்சனத்தை நானும் நண்பர் ஒருவரின் வலைப்பூவில் படித்தேன்... நிச்சயம் படம் பார்க்க முயல்கிறேன்...

ஏன் இப்படி பத்தி முழுவதும் ஆங்கிலத்துல டைப் பண்ணி பயமுறுத்துறீங்க...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
இதுக்கு பேர் தான் தன்னடக்கம் போல... பாஸ்... நீங்க எழுதின மைனா விமர்சனத்துக்கு எங்க ரெண்டு பேர் பதிவை விட அதிக வாக்குகள் கிடைத்ததை நானும் பார்த்தேன்...

மேலும் இது தொழில்நுட்பக் கோளாறாகவும் இருக்கலாம்... ஏனெனில் நான் நேற்று பின்னிரவு சுமார் 2 மணிக்கு பார்த்தபோது தமிழிஷ் ஓட்டு எண்ணிக்கை பதினேழாக இருந்தது... காலையில் 7 மணிக்கு பார்த்தபோது திடீரென இருபத்தி ஒன்பதாகிவிட்டது... தமிழ் 10 கூட அதுபோல தான் இரண்டில் இருக்கும் வாக்கு எண்ணிக்கை திடீரென சில மணிநேரங்களில் பதினாறாக ஆகிவிடுகிறது... என்ன நடக்கிறது என்றே புரியவில்லை...

Unknown said...

பிராந்தி கூட இல்லைங்க, வெறும் பச்சத் தண்ணிதான், ரொம்ப விளக்கமா எழுதி இருக்கீங்க, என்னால இந்தளவு சத்தியமா யோசிக்க கூட முடியலைங்க

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி... கட்டிங் போட்டுட்டு யோசிங்க... உங்களுக்கும் இந்த மாதிரி சிந்தனைகள் நிறைய வரும்...

Anonymous said...

.ettana naal thaan, araicha maavayae araippingae !

.they, tried differently !

.even though, not welcomed, dont degrade them

.i like very much this film

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// ettana naal thaan, araicha maavayae araippingae //
நல்லவேளை... என் பதிவுகளை தான் இப்படி சொல்றீங்களோன்னு நெனச்சு பயந்துட்டேன்...

// they, tried differently // - ஒத்துக்குறேன்... அதனால் தான் அவர்களது கிரியேட்டிவிட்டி பத்தி உயர்வா சில வரிகள் எழுதினேன்...

// even though, not welcomed, dont degrade them // - முடியல... வலிக்குது...

// i like very much this film // - இதெல்லாம் டூ மச்...

அடுத்த முறை வரும்போது உங்கள் பெயரோடு வர முயற்சி செய்யுங்கள்... நன்றி...

Imagesnaveen said...

unga writing style superrrrrrrrrrrrrrrrrrr