வணக்கம் மக்களே...
அப்பாவோட பள்ளிக்கூட நண்பர் என்பதால் எங்க வீட்டுக்கு எப்போ வெள்ளை அடிச்சாலும் ஹரி அங்கிளைத் தான் கூப்பிடுவார். ஹரி அங்கிளின் மனசு கூட வெள்ளை தான். பாக்குறதுக்கு ரொம்ப சாதாரணமா தெரிவார், ஆனா ரொம்ப ரசனையான மனிதர். “என்னடா இவனுங்க எப்ப பார்த்தாலும் வெளிர் மஞ்சளையும் பளீர் பச்சையையுமே அடிக்க சொல்றானுங்க...”ன்னு ஊர்க்காரங்களோட ரசனையை நொந்துக்கொள்வார். அப்போ என்ன கலர் தான்னே அடிக்கணும்னு ஒரு நாள் போகிறப்போக்கில் கேட்டுவைத்தேன். அவ்வளவுதான் அப்படி கேளுடா என் வெல்லக்கட்டின்னு என்னை உக்காரவச்சு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டார்.
அவர் சொன்ன விஷயமெல்லாம் ரொம்ப கலர்புல்லா இருந்தது. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் மாதிரி, ஒவ்வொரு கலருக்கும் ஒரு பீலிங் உண்டாம். இப்படி ஒவ்வொரு கலரை பத்தியும் சில தகவல்களை எடுத்துவிட்டார். அவைகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.
வெள்ளை:
பரிசுத்தம், நடுநிலைமை இவைகளை குறிக்கும் நிறம். வெறுமனே வெள்ளை மாத்திரம் அடித்தால் சிறப்பாக இருக்காது எனவே வெள்ளையுடன் சிகப்பு அல்லது நீல காம்பினேஷன் அடிக்கலாம். வெள்ளை கலரில் உள்ள நன்மை என்னவென்றால் இவை வெளிச்சத்தை நன்கு பிரதிபலிக்கும். ஆனால் அதே சமயம் அழுக்கு ஏதாவது ஏற்பட்டால் அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும்.
கிரே (Gray): (இதை தமிழில் எப்படி சொல்லுவதேன்று ஹரி பெயிண்டருக்கே தெரியவில்லை. கலரை காட்டித்தான் என்னிடம் விளக்கினார். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்)
நிறைய பேர் இந்த கலரை தான் கேட்டு வாங்கி அடிக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கக்கூடிய நிறம். க்ரே கலரிலேயே பல்வேறு வகைகள் இருப்பதாக தெரிகிறது.
நீலம்:
அமைதி மற்றும் குளிர்ச்சியை குறிக்கும் நிறம். ரொம்பவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பெட்ரூமுக்கு நீலக்கலர் பெயின்ட் அடித்தால் “அந்த” மாதிரி விஷயங்களுக்கு நல்ல மூடை ஏற்படுத்தி கொடுக்குமாம். (எனக்கு எதுவும் தெரியாதுங்க... அவர் தான் சொன்னார்...) வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களோடு காம்பினேஷன் கலக்கலாக இருக்கும்.
மஞ்சள்:
மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை குறிக்கும் நிறம். இவ்வித நிறங்கள் மனதிற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சமையல் அறைக்கு அடிக்கும்போது நன்றாக பொருந்தும். வெளிர் மஞ்சளாக அடித்துவிட வேண்டாம் அது சோம்பலை ஏற்படுத்து நிறம். சூரியகாந்தி பூவின் மஞ்சலே சரியான தேர்வு.
சிகப்பு:
வறுமையின் நிறம் சிகப்பு. இது வீட்டுக்கு பெயின்ட் அடிக்கும்போது பொருந்தாது. ஹரி பெயிண்டரின் விதிகளின்படி கொண்டாட்டத்தின் நிறமே சிகப்பு. தர்பூசணி பழத்தின் நிறமே இதற்கு உதாரணம்.
பச்சை:
இயற்கையையும் ஆரோக்கியத்தையும் குறிக்கும் நிறம். பச்சை என்றதும் ராமராஜன் கலரை போல பளீர் பச்சையை தேர்ந்தெடுக்க வேண்டாம். மிதமான பச்சை இதமான பச்சை. ஹாலுக்கு அடிக்க உகந்த நிறம் இதுதான்.
கறுப்பு:
எதிர்மறையான எண்ணங்களை கொடுக்கக்கூடிய நிறம் என்று கருதப்படுவதால் யாரும் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் எக்கச்சக்கமாக மாத்தி யோசிப்பவர்கள் முயற்சி செய்யலாம்.
வடிவேலுவிடம் பெட்டிக்கடைக்கார பெண்மணி கேட்டது போல கலரில் ஆம்பிளைக்கலர் பொம்பளைக்கலர் இருக்கிறதாம்.
சாக்லேட் பிரவுன் (ஆம்பளை கலர்):
ஒரு ஆணுடைய அறையை (ஆணுறை இல்லை) அலங்கரிக்க சரியான நிறம் இதுவே. உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கக்கூடிய நிறம்.
பிங்க் (பொம்பளை கலர்):
எல்லோருக்கும் தெரிந்ததே. பெண்களுக்கு பிடித்த நிறம் பிங்க். இதே போல லாவண்டர் நிறமும் பெண்களுக்கு பிடித்தமான கலரே.
பெங் சூயி கலர்கள்:
என்னடா இவன் கெட்ட வார்த்தைல என்னமோ சொல்றான்னு டரியல் ஆகாதீங்க. எனக்கு வாஸ்துவில் நம்பிக்கை இல்லை. ஹரி பெயிண்டருக்கும்தான். ஆனாலும் பெங் சூயி எனப்படும் சீன வாஸ்து நிறங்கள் மனிதர்களின் மனநிலைக்கு தகுந்தபடி சில நிறங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி வெள்ளை, நீலம், பச்சை போன்ற நிறங்கள் மன அமைதியை கொடுக்குமாம். அதே போல மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்கள் உற்சாகத்தை கொடுக்குமாம்.
கிரியேட்டிவிட்டி:
வண்ணங்கள் மட்டும் வீட்டின் அழகை நிர்ணயித்து விடாது. மேலும் சில டிங்கரிங் வேலைகள் அவசியம்.
- அதாவது வீட்டிற்கு அடிக்கும் வன்னங்களுக்கு ஏற்றபடி சாமான் செட்டெல்லாம் இருந்தா டக்கராக இருக்கும். ஆனா இதெல்லாம் நடக்குற காரியமா.
- ஓவியங்கள் வரைவது: அதாவது குழந்தைகள் அறையில் கார்டூன் அல்லது விலங்குகள். சமையல் அறையில் பழங்கள் நிறைந்த கூடை. இதுபோல வரையலாம். கழிவறையில் என்ன வரைவது என்று கேட்டுவிடாதீர்கள்.
- ப்ளைன் சட்டை போடுவதைக் காட்டிலும் கொடு போட்ட சட்டை நன்றாக இருக்குமல்லவா. அதுபோல தான் வீட்டிற்கு இரு வண்ணங்களால் ஆன Stripes அடிக்கலாம்.
- திரைச்சீலைகள் ஒரு வீட்டை மென்மேலும் மெருகேற்றும். வீட்டின் பெயின்ட் காலருக்கு ஏற்றபடி திரைச்சீலைகளை அமையுங்கள்.
நம்ம ஹரிபெயிண்டர் சொன்னது கலர்புல்லா இருந்ததா. இன்னும் பெயிண்டின் வகைகள் அப்படின்னு ஏதேதோ சொல்லி மொக்கையை போட்டார். நான்தான் வர்ற கொஞ்ச பெரும் ஓடிடப்போறாங்கன்னு சொல்லி அவரை பத்தி விட்டேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
டிஸ்கி: ஹி... ஹி... ஹி... “ஹாரி பாட்டர் உயிர் ரகசியமும்” படத்திற்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
|
41 comments:
பிரபாகரா , பச்சை கலரும் படுக்கை அறைக்கு ஏற்றது
ஒவ்வொரு colour க்கும் ஒவ்வொரு அர்த்தமா ,
///ஒரு ஆணுடைய அறையை (ஆணுறை இல்லை) ///
hahaha
@ LK
வாங்க LK... எனக்கு திருமணம் ஆகவில்லை... கேள்வி ஞானம் மட்டுமே...
@ nis
வாங்க ராவணா...
"கலர்புல்லா" இருக்கு!
கிரே (Gray) கலரை சாம்பல் நிறமென்று சொல்லலாமோ.
@ சைவகொத்துப்பரோட்டா
நன்றி...
@ ரஹீம் கஸாலி
சரியாக சொன்னீர்கள்... அதே... அதே...
அருமையான பதிவு.
பாராட்டுகள்.
க்ரே கலரை சாம்பல் நிறமுன்னு சொல்லலாமே.
எனக்குப் பச்சை பிடிக்கும். அதுலே ஏகப்பட்ட வகை இருக்கு. அதில் சில காம்பிநேஷன்களைத்தான் நியூஸி வீட்டுக்குப் பயன்படுத்தி இருக்கோம்.
அங்கெல்லாம் பெயிண்ட் கடைகளில் ஒரு கலர் சார்ட் போல கொடுப்பாங்க. அதை வச்சு நாம் தெரிவு செஞ்சுக்கலாம். சின்னதா சாம்பிள் பேக்கும் கிடைக்கும். ஒரு மூலையில் சின்ன இடத்தில் பெயிண்ட் அடிச்சுப் பார்த்து முடிவு செஞ்சுக்கலாம்.
இங்கே இந்தியாவைப் பொறுத்தவரை கிரகப்பிரவேசத்துக்குப் பிறகு யாருமே வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்கமாட்டாங்க போல:(
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
www.ellameytamil.com
@ துளசி கோபால்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்...
இந்தியாவிலும் கலர் சார்ட் கொடுப்பாங்க மேடம்... சாம்பிள் பேக் பற்றி தெரியவில்லை... ஆன்லைனில் தற்போது நிறைய Virtual Painting தளங்கள் வந்துள்ளன... அவற்றிலிருந்தே நாம் கலர்களை தேர்வு செய்துக்கொள்ளலாம்...
// இங்கே இந்தியாவைப் பொறுத்தவரை கிரகப்பிரவேசத்துக்குப் பிறகு யாருமே வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்கமாட்டாங்க போல:( //
ஹி... ஹி... ஹி... இப்போல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இந்தியர்களின் வாழ்க்கைமுறை மாறி வருகிறது... நிச்சயமாக கூடிய விரைவில் முன்னேறி விடுவார்கள்...
@ மணிபாரதி
நன்றி... இணைக்கிறேன்...
மொதல்ல வீடு வாங்கறேன். அப்றோம் பெயின்ட் அடிக்கறேன் :)
All these informations are 100% true!
@ Prasanna
ம்ம்ம்... சீக்கிரமே வீடு கட்ட வாழ்த்துக்கள் நண்பரே...
@ micman
is it...? Happy to hear this from u...
nalla information prabhakaran..
நிறங்கள் நம் உணர்வை தூண்டும் என்பது உண்மைதான். ஒவ்வொரு நிறத்திற்கு சில குணங்கள் நன்றாக எடுத்துரைத்துள்ளீர்கள்!
@ ஜெ.ஜெ
நன்றி...
@ எஸ்.கே
மிக்க நன்றி எஸ்.கே... இதுபோன்ற பதிவுகளில் உங்களைப் போல உளவியல் நிபுணரிடம் இருந்து பாராட்டு கிடைப்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று...
நமக்கு புடிச்ச கலரு நீல கலரு தாங்க .
//ஓவியங்கள் வரைவது//
இப்போது ஓவியங்கள் எல்லாம் டைல்ஸ் ஆக கிடைக்கின்றன. மேலும் ஓவியங்களையும் வாங்கி மாட்டலாம். (பணம் இருந்தால். அது ஒரு முதலீடு கூட)
நாங்களும் பதிவு போட்டுட்டோம்ல .பார்க்க....ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த 10 படங்கள்
@ நா.மணிவண்ணன்
ஓ... நீங்க ரொமாண்டிக்கான ஆளா...
@ நாகராஜசோழன் MA
ஆம்... டைல்ஸ் கூட கிடைக்கின்றன...
@ ரஹீம் கஸாலி
என்னது... நீங்களும் எழுதிட்டீங்க மணிவண்ணனும் எழுதிட்டாரு... நான் தான் கடைசியா...?
வானவில் ....
உங்க பேச்சை கேட்டு 'வாடகை வீட்டுக்கு' பெயின்ட் அடிக்க போயி ஹவுஸ் ஓனர் பத்து நாளைக்குள்ள வீட்டை காலி பண்ண சொல்லீட்டாரு :-)
"கலர்புல்"
///கிரே (Gray) கலரை சாம்பல் நிறமென்று சொல்லலாமோ.//
repeatttttuuuuuuuuu
//உங்க பேச்சை கேட்டு 'வாடகை வீட்டுக்கு' பெயின்ட் அடிக்க போயி ஹவுஸ் ஓனர் பத்து நாளைக்குள்ள வீட்டை காலி பண்ண சொல்லீட்டாரு :-)///
rasanai ketta manusara iruppar pola.. neenga kavala padathinga namakku 1000 veedu kidaikkum
அப்ப உங்க வீட்டுக்கு என்ன கலர் பெயிண்ட் அடிசிருகீங்க?
@ கே.ஆர்.பி.செந்தில்
ஒரே வார்த்தையில் நச்சுன்னு கமென்ட் எழுதியிருக்கீங்க நன்றி...
@ எப்பூடி..
நீங்க அடிச்ச பெயின்ட் உங்க ஹவுஸ் ஓனருக்கு ரொம்பவும் பிடிச்சிருச்சு போல...
@ அன்பரசன்
நன்றி...
@ அலைகள் பாலா
ஹி... ஹி... ஹி... நன்றி...
@ சர்பத்
என்னது எங்க வீடா...? நான் ரொம்ப சின்ன பையன்... இது வரைக்கும் அப்பா அம்மாவோட தான் இருக்கேன்...
வெரி கலர்ஃபுல் & நைஸ்!
Nice
புதிய தகவல் நண்பரே வாழ்த்துக்கள்
டெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம்
http://dilleepworld.blogspot.com/2010/11/1_20.html
நல்லா கலர் பாக்க வெச்சுட்டீங்க!
இந்தியாவில், ஏசியன் பெயின்ட்சில் சாம்பிள் பேக் கிடைக்கிறது. அவர்கள், கலர்மிக்சிங் மெசின் வைத்து கம்ப்யூட்டர் மூலம், நம் கண்முன்னே வேண்டிய கலர் பெயின்ட் உருவாக்கித் தருகிறார்கள், சார்ட்டைப் பார்த்து கலர் செலக்ட் பண்ணிக் கொடுத்தால் போதும். ரிசல்ட்டும் வெகு அற்புதமாக இருக்கிறது!
“அந்த” மாதிரி விஷயங்களுக்கு நல்ல மூடை ஏற்படுத்தி கொடுக்குமாம். (எனக்கு எதுவும் தெரியாதுங்க... அவர் தான் சொன்னார்...)>>>
நம்பிட்டேன் பிரபா..
ரொம்ப நல்லா தொகுத்து இருக்கீங்க..பிராக்டிக்கலாவும் இருக்கு புதுசா விடு கட்றவங்களுக்கு உபயோகமாகவும் இருக்கு
யார பெயிண்டு அடிக்க இந்த தகவல்ன்னு டவுட்டா இருக்கு.
@ Priya, T.V.ராதாகிருஷ்ணன், கலாநேசன்
நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ டிலீப்
ஒ.கே. வருகிறேன்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
நீங்கள் கொடுத்த உபரித்தகவளுக்கு நன்றி.... இப்போதுதான் என் தளத்தை பின்தொடர ஆரம்பித்திருக்கிரீர்களா...?
@ ஆர்.கே.சதீஷ்குமார்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ விக்கி உலகம்
உள்குத்து எதுவுமே இல்லை நண்பரே...
ரசனையான பதிவு.. என்னைக்காஆஆஆவது சொந்த வூடு ஒன்னு வாச்சா அதுல அடிச்சுக்கறேன் :)
நண்பரே நீங்க சொல்லி மறுக்க முடியுமா...
கமல் '56'
இதோ ஆரம்பிக்கிறேன்.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
////philosophy prabhakaran
@ பன்னிக்குட்டி ராம்சாமி
நீங்கள் கொடுத்த உபரித்தகவளுக்கு நன்றி.... இப்போதுதான் என் தளத்தை பின்தொடர ஆரம்பித்திருக்கிரீர்களா...?/////////
சாரி மாப்பு, எனக்கே தெரியல எப்பிடி மிஸ் பண்ணேன்னு?
@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
சீக்கிரமே சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள்...
@ விக்கி உலகம்
ஏற்கனவே உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் பதில் அளித்துவிட்டேன்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
லூசுல விடுங்க... இப்பவாச்சும் வந்தீங்களே... இனி அடிக்கடி வரணும்...
Post a Comment