வணக்கம் மக்களே...
நேற்றிரவு தமிழ்மணத்தின் இந்த வார முன்னணி வலைப்பதிவுகளை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. என்னுடைய பெயரும் வலைப்பூவும் லிஸ்டில். இதைப் பார்த்ததும் முதல் வேலையாக அண்ணன் சசிகுமாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த வாரம் (அடுத்த வாரம் இந்த பதிவினாலோ) நான் முன்னணி லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கு முழுமுதற்காரணம் சசி மட்டுமே. நம்ம கடை பக்கம் கொஞ்சம் கூட்டம் வந்துச்சுன்னா அதுக்கு சசிகுமாரின் புகழ் மட்டுமே காரணம் என்றால் மறுப்பதற்கில்லை. இந்த வார சாரி, இந்த வார தேங்க்ஸ் இரண்டையும் சசிகுமாருக்கு சமர்ப்பிக்கிறேன். நடந்த சம்பவங்களுக்காக வருந்திக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி வந்து ஆறுதல் தந்திருக்கிறது. சத்தியமா எதுவுமே ப்ளான் பண்ணி செய்யலங்கோ... என்ன நம்புங்க.
வழக்கம் போல டாப் லிஸ்டில் இருக்கும் வினவு, கலகலப்ரியா, கே.ஆர்.பி.செந்தில், ஜாக்கி சேகர், சசிகுமார், உண்மைத்தமிழன், கேபிள் சங்கர், மங்குனி அமைச்சர், கருந்தேள் கண்ணாயிரம், டோண்டு, சந்தனமுல்லை, வானம்பாடிகள், “அட்ராசக்க” செந்தில்குமார், தீராத பக்கங்கள், வருண், நண்டு@நோரண்டு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
இவை தவிர சென்ற வாரம் சி.பி.செந்தில்குமார் ஆரூடம் சொன்னதுபோல சில புதியவர்கள் லிஸ்டில் சேர்ந்திருக்கிறார்கள் அவர்களைப் பற்றி பார்ப்போம்.
துமிழ்:
பதிவின் பெயர்: துமிழின் பக்கம்
வலைப்பூ ஆரம்பித்தது: November 2009 (ஓராண்டு நிறைவடைந்து விட்டது)
இதுவரை எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை: 187 (இருநூறு பதிவுகளை நோக்கி...!)
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை: 261
வகையறா: மருத்துவம், பாலியல்
எனக்குப் பிடித்த பதிவு: சினிமா விமர்சனமும் இணைய எழுத்தாளர்களும்...!
இவர் எழுதிய பதிவுகள் பலருக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கும். மருத்துவம் மற்றும் பாலியல் சம்பந்தமான பதிவெழுதுவதில் சிறந்து விளங்குபவர். சமீப காலமாக சமூகப் பதிவுகளையும் எழுதி வருகிறார். மேற்கூறிய இணைய எழுத்தாளர்கள் பற்றிய பதிவிலும் அதற்கு முந்தய பதிவிலும் அனானிகளிடம் அதிக திட்டு வாங்கிய பெருமை இவருக்கு உண்டு.
சுபா:
பதிவின் பெயர்: சுபாவின் குறிப்பு
வலைப்பூ ஆரம்பித்தது: August 2010
இதுவரை எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை: 209 (நான்கே மாதங்களில்...!)
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை: 7 (சத்தியமா நம்ப முடியல)
வகையறா: மருத்துவம், சமையல்
எனக்குப் பிடித்த பதிவு: சைனீஸ் சில்லி சிக்கன், பேரிச்சம்பழ கேக் மேலும் பல...
இப்போது கண்டிப்பாக தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும், அறியப்படாத ஒரு பதிவரை அறிமுகப்படுத்தியதற்காக. மேற்கூறிய ஏழு பேரில் நீங்கள் இல்லையெனில் இப்போதே பின்தொடர ஆரம்பித்துவிடுங்கள். துமிழைப் போல ஆழமான மருத்துவ சம்பந்தமான பதிவுகளாக அல்லாமல் உடல் நிலம் குறித்த சிறிய ஆனால் பல அரிய தகவல்களை நாம் அறிய கொடுத்திருக்கிறார். சுபாவுக்கு ஒரு பர்சனல் அட்வைஸ்: உங்கள் வலைப்பூவில் பாடலை நிறுத்துங்கள். அது அலுவலகத்தில் வலைப்பூ படிப்பவர்களுக்கு உறுத்தலாக இருக்கக்கூடும்.
ரஹீம் கசாலி:
பதிவின் பெயர்: ரஹீம் கசாலி
வலைப்பூ ஆரம்பித்தது: July 2010
இதுவரை எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை: 97 (இந்த வாரத்தில் நூறை தொட்டுவிடுவார்...)
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை: 74
வகையறா: சமூகம், சினிமா
எனக்குப் பிடித்த பதிவு: ஆட்டோ சங்கர் – ஒரு பிளாஷ்பேக்
வலைப்பூவுலகில் எனது நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். அவரது க்யூட் குழந்தையின் படம் அவரது வலைப்பூவின் முகப்பில் நம்மை வரவேற்கிறது. அதிவேகமாக வளர்ந்து வரும் இவர் கூடிய விரைவில் பிரபல பதிவர்களின் பட்டியலில் இணைவார் என்பதில் ஐயமில்லை.
தொப்பி... தொப்பி...
பதிவின் பெயர்: ☼ தொப்பி தொப்பி☼
வலைப்பூ ஆரம்பித்தது: August 2010
இதுவரை எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை: 52
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை: 82
வகையறா: அரசியல், சமூகம்
எனக்குப் பிடித்த பதிவு: பிச்சை எடுக்கும் ட்ராபிக் போலீஸ்கள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்தை ப்ரோபைல் படமாக வைத்திருக்கும் இவர் அரசியல் குறித்த ஆரூட பதிவுகளை எழுதுவதில் வல்லவர். இவர் வாரம் ஒருமுறை கொக்கா மக்கா என்ற பெயரில் எழுதும் பல்சுவை பதிவுகள் பிரசித்தம்.
NKS.ஹாஜா மைதீன்
பதிவின் பெயர்: NKS.ஹாஜா மைதீன்
வலைப்பூ ஆரம்பித்தது: June 2009 (October 2010ல் ரீ-என்ட்ரி)
இதுவரை எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை: 53
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை: 19
வகையறா: அரசியல், சினிமா
எனக்குப் பிடித்த பதிவு: காமெடி கட்சிகள்
மற்றுமொரு வலையுலக நண்பர். இதுவரை அறிமுகமாக இருந்த இவர் இனி தமிழ்மணத்தின் மூலம் அறிந்த முகமாகிவிடுவார். அரசியல் மற்றும் சினிமா பற்றி நகைச்சுவை கலந்து எழுதும் ஆற்றல படைத்தவர்.
மேற்கூறிய அனைவரும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
51 comments:
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்..
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் வெளிபடையான சாரி ,தேங்க்ஸ், க்கு மிக மிக நன்றி...
என்னைப்பற்றிய அறிமுகத்திற்கு நன்றி நண்பா....
உங்களுக்கும், அனைவருக்கும் என்
உளமார்ந்த வாழ்த்துக்கள்.
சீனியர்ஸ் trophy முடிஞ்சி யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாம முடிஞ்சது நெனச்சு சந்தோசம்.
அனைவரின் நட்பும் தொடர வாழ்த்துக்கள்.
weldon brother
wishes..
நன்றி நண்பரே நீங்கள் சொல்லித்தான் இந்த விடயமே எனக்குத் தெரியும்
நன்றி! வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள் நண்பா! ட்ரீட் எப்போ?
வாழ்த்துக்கள். தொடருங்கள்...!
அனைவருக்கும் வாழ்த்துகள்
எனக்கென்னமோ இரண்டு பயல்களும் பிளான் பண்ணி சண்டை போட்டது போலவே இருக்கு...சும்மா ஜோக்கு. எனக்கு தெரியும் சசி எவ்வளவு வருத்தபாட்டான் என்று..
வாழ்த்துக்கள் பிரபாகரன்..
கலக்கிடீங்க பிரபாகரன்... தொடர்ந்து கலக்குங்கள்
u continue பங்கு
வாழ்த்துக்கள் பிரபா
வாழ்த்துக்கள் நண்பா, வாராவாரம் தமிழ்மணத்தில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள்
விஜய்
வாழ்த்துக்கள்
Congratulations
அனைவருக்கும் என வாழ்த்தும்..பாராட்டும் ...
vaazhthukkal
///@philosophy prabhakaran said...
உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா... ///
என்னை ஏன் எழுத சொன்னிங்கன்னு தெரியல . பரவ இல்ல . உங்கள் அன்புக்கும், நம்பிக்கைகுமாவது எழுதுறேன் . ஆனா என்னோட அடுத்த பதிவு :
சாதி = எய்ட்ஸ் (part-3 ) முடிச்சுட்டு எழுதுறேனே ? ஏன்னென்றால் அது ரொம்ப சூட போய்கிட்டு இருக்கு . அதை பாதியில் நிறுத்த முடியாது , மன்னிக்கவும் . அதனால அதற்க்கு அடுத்த பதிவு உங்கள் விருப்பத்தின் பெயரில் " என்னக்கு பிடித்த பத்து கமல் படங்கள் " பதிவுதான் . நேர அவகாசம் வேண்டும் நண்பா ....
நன்றி .
தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்..
ஓ.. இப்டி ஒன்னு இருக்கா... =)).. வாழ்த்துகள்..
யாருங்க அந்த ஆற்றல் படைத்தவர் ?
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....
congrats Prabhakar
உங்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நன்றி
வாழ்க வளமுடன்
WHEN GOD CLOSE ONE DOOR HE OPENS ANOTHER னு ஒரு பழமொழி இருக்கு.நடப்பதெல்லாம் நன்மைக்கே.இப்போ பாருங்க சசியும் நீங்களும் ராசி ஆகீட்டீங்க,புதுப்புது நண்பர்கள்,பார்வ்பையாளர்கள் கிடைச்சிருக்காங்க.ஹிட்ஸ் கிடைச்சிருக்கு.நான் கூட யார் கூடவாவது சண்டை போடலாம்னு ஐடியா வெச்சிருக்கேன்..ஹி ஹி சும்மா தமாஷ்.அறிமுகப்படுத்திய விதத்திலிருந்து எந்த அளவு நீங்க உன்னிப்பா பதிவுகளை கவனிக்கிறீங்கன்னு தெரியுது,நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்,பிரபாவுக்கு நன்றி
அடுத்த பதிவு மேட்டரை ஓப்பன் பண்ணுனா சஸ்பென்ஸ் போயிஒடும்
>>>இதுவரை எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை: 209 (நான்கே மாதங்களில்...!)
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை: 7 (சத்தியமா நம்ப முடியல)>>>
120 நாட்களில் 209 பதிவா?அடேங்கப்பா,செம மேட்டர் உள்ள பார்ட்டி போல.நான் போய் பாக்கறேன்
மென்மேலும் முன்னேற வாழ்த்துகள். சகபதிவர்கள் குறித்தும், நண்பர்களின் பதிவுகள் குறித்த பகிர்வும் மிக அருமை..!
அனைவருக்கும் வாழ்த்துகள்
/./நேற்றிரவு தமிழ்மணத்தின் இந்த வார முன்னணி வலைப்பதிவுகளை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. என்னுடைய பெயரும் வலைப்பூவும் லிஸ்டில். //
பதிவுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்..
உங்களுக்கும், உங்கள் ஆருயிர் நண்பர்க்கும் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்
தங்களுக்கும்.. மற்றையவர்களுக்கம் என் உளப்பூர்வ வாழ்த்துக்கள்...
ஃஃஃஃஃஃபின்தொடர்பவர்களின் எண்ணிக்கை: 7 (சத்தியமா நம்ப முடியலஃஃஃஃ
இதில் ஒரு நெருடல் இருக்கிறது.. சொல்லலாம் ஆனால் என் உள் மனம் தடுக்கிறது.... தங்களுக்கே விளங்கும்...
@ LK, ஹரிஸ், எப்பூடி.., செளந்தர், ரஹீம் கஸாலி, விக்கி உலகம், 'ஒருவனின்' அடிமை, Riyas, துமிழ், தங்கம்பழனி, நாகராஜசோழன் MA, அமைதி அப்பா, ரேகா ராகவன், ஜாக்கி சேகர், பதிவுலகில் பாபு, Arun Prasath, karthikkumar, நா.மணிவண்ணன், இரவு வானம், விஜய், வனித்தா, Katz, கே.ஆர்.பி.செந்தில், அலைகள் பாலா, rockzrajesh, எஸ்.கே., வெங்கட், கலகலப்ரியா, அருண் பிரசாத், மாணவன், சி.பி.செந்தில்குமார், பிரவின்குமார், டிலீப், பாரத்... பாரதி..., THOPPITHOPPI, கலாநேசன், ம.தி.சுதா
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ விக்கி உலகம்
// சீனியர்ஸ் trophy முடிஞ்சி யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாம முடிஞ்சது நெனச்சு சந்தோசம் //
நான் சீனியர் எல்லாம் இல்லை நண்பரே... இன்னமும் வளர்ந்து வரும் பதிவர் லிஸ்டில் தான் இருக்கிறேன்...
@ நாகராஜசோழன் MA
// ட்ரீட் எப்போ? //
அரை மூடி தேங்காயை தந்தா போதும் தானே...
@ ஜாக்கி சேகர்
// எனக்கு தெரியும் சசி எவ்வளவு வருத்தபாட்டான் என்று.. //
ம்ம்ம்... பதிவில் கூட எழுதியிருந்தார் நீங்கள் பலமணிநேரம் அவரை சமாதானப்படுத்தியது பற்றி...
@ rockzsrajesh
// நேர அவகாசம் வேண்டும் நண்பா //
தாராளமா எடுத்துக்கோங்க நண்பரே... நீங்க எழுதினாலே போதும்...
@ சி.பி.செந்தில்குமார்
// WHEN GOD CLOSE ONE DOOR HE OPENS ANOTHER //
ப்ளோவுல எதுவும் கெட்டவார்த்தை சொன்னீங்களா...
// நான் கூட யார் கூடவாவது சண்டை போடலாம்னு ஐடியா வெச்சிருக்கேன் //
நாம போடுவோம்...
// அடுத்த பதிவு மேட்டரை ஓப்பன் பண்ணுனா சஸ்பென்ஸ் போயிஒடும் //
புரியலையே... இத எதுக்கு என்கிட்டே சொல்றீங்க...
@ ம.தி.சுதா
// இதில் ஒரு நெருடல் இருக்கிறது.. சொல்லலாம் ஆனால் என் உள் மனம் தடுக்கிறது.... தங்களுக்கே விளங்கும்... //
ஒன்றும் விளங்கவில்லையே... பரவாயில்லை நண்பா எதுவாக இருந்தாலும் கூச்சப்படாமல் சொல்லுங்கள்...
கலக்கிட்டீங்க.. இந்தாங்க ஒரு பூந்தோட்டம் ஹிஹி (பூங்கொத்து எல்லாம் பத்தாது)..
அனைவருக்கும் வாழ்த்துகள் தொடருங்கள்...!
@ Prasanna
பூந்தோட்டம் அமைத்து தந்ததற்கு நன்றி பிரசன்னா...
@ ۞உழவன்۞
நன்றி நண்பரே... உங்கள் பெயரும் குறியும் அருமை...
Post a Comment