வணக்கம் மக்களே...
முதற்கண் பதிவர்களுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்து அங்கீகாரம் தந்த இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்களுக்கு நன்றிகள்.
முதல்முறையாக ஒரு ப்ரிவியூ திரையரங்கில் பதிவர்களோடு அமர்ந்து பார்த்த படம். பதிவர் சந்திப்பு குறித்து நிறைய எழுத வேண்டி இருப்பதால் அதை சில நாட்களுக்குப்பின் தனி இடுகையாக எழுதுகிறேன். இப்போது நேரடியாக விமர்சனம் மட்டும்...
கதைச்சுருக்கம்
புகை, மது, மாது என்று வாழ்க்கையை கொண்டாடும் ஒரு இளைஞன், யார் சொல் பேச்சையும் கேட்காத Straight Forward ஆசாமி, தனது தொழிலில் சின்சியராக இருக்கும் ஆர்கிடெக்ட். இப்படிப்பட்ட ஒருவன் தான் கதையின் நாயகன். பீர் பாட்டிலை பல்லால் கடித்து திறக்கும் நவநாகரீக யுவதி தான் படத்தின் நாயகி. ஹோண்டா கார் ஷோரூமில் பணிபுரியும் சேல்ஸ் கேர்ள் கதாபாத்திரம். பாரில் நாயகியை பார்க்கும் நாயகனும், காண்டம் வாங்குமிடத்தில் நாயகனைப் பார்க்கும் நாயகியும் ஒருவர் மீது ஒருவர் இம்ப்ரஸ் ஆகின்றனர். பின்னர் தங்களது தொழில் ரீதியில் இருவரும் பழக நேர்ந்து அது காதலாக மலர்கிறது. இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் கதையில் ஒரு திருப்பத்தோடு இடைவேளை.
எல்லோரும் தனக்கு தனது அம்மாவைப் போலவே ஒரு மனைவி கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நாயகன் தனது அம்மாவைப் போல மனைவி அமைந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார். அது ஏன் என்பதை பின்பாதியில் பிளாஷ்பேக் மூலம் காட்டியிருக்கிறார்கள். நாயகன் நாயகியை அடித்து நொறுக்கி ரத்தம் கசிய கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைகிறார். ஆனால் அடுத்த காட்சியில் நாயகி திடகாத்திரமாக நம் கண்முன் நிற்க நாயகனோ தான் நாயகியை ஏற்கனவே கொலை செய்துவிட்டதாக சத்தியம் செய்து சொல்கிறார். அதன்பின்னர் நாயகனின் மனப்பிறழ்வு பற்றி மனநல மருத்துவர் விளக்குகிறார். நாயகியும் நாயகனின் சூழ்நிலையை புரிந்துக்கொள்கிறாரா...? இருவரும் இணைகிறார்களா...? என்பதே மீதிக்கதை.
முதல் காட்சியிலேயே நாயகன் படுக்கையில் பரத்தையுடன். ஹீரோவின் கேரக்டரே தற்கால இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு கனவாக இருக்கக்கூடிய கேரக்டர். கை நிறைய சம்பளம், தட்டி கேட்க ஆள் இல்லாத சுதந்திரம், அபார்ட்மென்ட் வாழ்க்கை, விடிய விடிய குடி என்று நகர்கிறது. மேலும் யாரிடம் வேண்டுமானாலும் மனதில் நினைத்ததை நினைத்தபடி பேசிவிடும் பாத்திரம். ஹீரோயின் எதையும் போல்டாக செய்யக்கூடியவர். ஆனால் ரொம்ப நல்லவங்க. ஹீரோ எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக்குறாங்க. முதல் பாதியில் புரியாத புதிராக இருக்கும் பல முடிச்சுகள் இரண்டாம் பாதியில் அவிழ்க்கப்படுகின்றன.
கரு.பழனியப்பன் – நாயகனாக...
ஹீரோவாக நடிக்கும் டைரக்டர்களின் வரிசையில் மற்றுமொரு புதுவரவு. வேறு ஏதாவது கேரக்டர் என்றால் எப்படி நடித்திருப்பார் என்று தெரியவில்லை. ஆனால் அதிகம் பேசாத அசால்ட்டான நாயகன் பாத்திரத்தை அசால்ட்டாக செய்திருக்கிறார். ஆங்காங்கே தான் பேசும் தத்துபித்து வசனங்கள் மூலம் மனதை கவர்கிறார். அடுத்த படத்திலும் நாயகன் வேடம் ஏற்றால் இதே மாதிரியான ஒரு ரோலை தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டும்.
கரு.பழனியப்பன் – இயக்குனராக...
இயக்குனர் ஒரு ரசிகன். படத்தில் சொல்லப்படும் கருத்துக்கள், காட்டப்படும் காட்சிகள், கதைமாந்தர்கள் என்று ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குனரின் கிரியேட்டிவிட்டியை காட்டுகிறது. ஆனால் புஷ்கர் காயத்ரியின் கிரியேட்டிவிட்டியைப் போல வீணடிக்கப்படாமல் பயன்படுத்தியிருக்கிறார். இரண்டாம் பாதியில் கதை குடைக்குள் மழை படத்தை நினைவுபடுத்துவதையும், அவ்வப்போது மனநல மருத்துவரை காட்டுவதையும் தவிர்த்திருக்கலாம்.
மீனாட்சி (எ) பிங்கி சர்க்கார்
நாயகனின் கண்கள் நாயகியின் கழுத்துக்கு கீழ் பார்ப்பது இல்லை. ஆனால் நம் கண்களால் ஹீரோயின் கழுத்துக்கு கீழ் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஹீரோயின் டூ பீஸ் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடவில்லை. ஆனாலும் அப்படி ஒரு கவர்ச்சி. இதற்கு முந்தய படங்களில் இவ்வளவு அழகாக தெரிந்ததில்லை. ஹீரோயினின் லிப்ஸ்டிக் உதடுகளை க்ளோசப்பில் காட்டுவது, ஸ்ரீகாந்துடன் வரும் படுக்கையறை காட்சி என்று கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். என்ன ஆச்சர்யம், தமிழ் சினிமாவில் நாயகிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். படம் முழுவதும் நாயகி எதார்த்தமாகவும் பதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். டப்பிங்கிற்கு ஏற்றபடி சரியாக வாய் அசைக்காதது மட்டும் குறையாக தெரிகிறது.
சந்தானம்
முதல் பாதி முழுக்க சந்தானம் கலகலப்பூட்டுக்கிறார். வழக்கமான தனது நக்கல் பாணியிலேயே களை கட்டி கல்லா கட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் சம்பிரதாயத்திற்காக சில நகைச்சுவை காட்சிகள் மட்டுமே. அதன்பின் வழக்கமான தமிழ் சினிமா லாஜிக் படி குணச்சித்திர வேடத்திற்கு தாவி விடுகிறார்.
மற்றும் பலர்...
- தம்பி ராமையா: மைனா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இவரது கேரக்டரைசெஷன் சிறப்பாக இருக்கும்படி இயக்குனர் செய்திருக்கிறார்.
- “இசையருவி” மகேஸ்வரி: மேற்படி அம்மணி கேரக்டரில் படத்தின் ஆரம்பத்திலேயே கிளுகிளுப்பாக அறிமுகமாகிறார். வருங்காலத்தில் ஐட்டம் சாங்குகளில் ஆடுவார் என்பதில் ஐயமில்லை.
- “டீலா நோ டீலா” ரிஷி: கார்பரேட் மாப்பிள்ளை கேரக்டர். ஹீரோயின் வேறொருவரை காதலிக்கிறார் என்று தெரிந்தும் அவர் பின்னாடியே சுற்றி இறுதியில் டம்மி பீசாக்கப்படுகிறார்.
- இயக்குனரின் முந்தய படங்களில் நாயகனாக நடித்த ஸ்ரீகாந்த் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். சில நிமிடங்களே வரும் காட்சி என்றாலும் முத்திரை பதித்திருக்கிறார்.
இசை
வித்யாசாகர் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. “தண்ணி போட வாப்பா...” என்ற சோஷியலிச பாடல் ரசிக்க வைத்தது. டைட்டில் பாடலாக வரும் “சித்தன் முகம் ஒன்று...” என்ற பாடல் இயக்குனரின் படமாக்கும் விதத்தால் மனதில் நிற்கிறது. மற்றபடி பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.
வசனம்
எந்திரன் படத்திற்கு கிராபிக்ஸ் எப்படியோ அதுபோல இந்தப்படத்திற்கு வசனங்கள். படத்தையே தூக்கி நிறுத்தி இருக்கிறது. “அட்ராசக்க” ஸ்டைலில் நல்ல வசனங்களை தொகுத்து எழுதினால் நான்கைந்து பதிவுகள் போட்டுவிடலாம். நாயகனுக்கு மனப்பிறழ்வு என்பதால் கதைக்கு சம்பந்தம் இல்லாத எதை எதையோ வசனம் என்ற பெயரில் இணைத்திருக்கிறார்கள். ஆனால் அவைகளும் ரசிக்க வைக்கின்றன. உதாரணம்: இமயமலை உருகி வழிந்தால் முதலில் இந்தியா மூழ்குமா சீனா மூழ்குமா...?
இன்ன பிற
படத்தின் கலை இயக்குனர் யார் என்று தெரியவில்லை. ரசனையாக செய்திருக்கிறார். ஹீரோவின் பாத்திரம் ஆர்கிடெக்ட் என்பதும் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல இருந்திருக்கும். ஹீரோ வேலை பார்க்கும் அலுவலக கட்டிடம், அலுவலக எம்.டி வீட்டில் அமைந்திருக்கும் மீன் தொட்டி போன்ற காட்சிகளை உதாரணமாக குறிப்பிடலாம். ஒளிப்பதிவு வேலைகளையும் திறம்பட செய்திருக்கிறார் ராமநாத் ஷெட்டி. நாயகியின் காஸ்டியூம் டிசைனர் யாருங்க...? சேலையிலேயே சோலையாக காட்டியிருக்கிறார்.
எனக்குப் பிடித்த காட்சி
கிட்டத்தட்ட முதல் பாதியில் நாயகன் வரும் காட்சிகள் அனைத்துமே பிடித்திருந்தன. மளிகை கடையில் சத்தமாக காண்டம் கேட்டு அதற்கு விளக்கம் கொடுக்கும் காட்சி, பார்க்கில் தனது தந்தையுடன் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காட்சி போன்றவைகளை உதாரணமாக சொல்லலாம்.
சில குறைகள்:
- இரட்டை அர்த்த வசனங்கள் எக்கச்சக்கச்சக்கமா... சிரிக்க முடிந்தாலும் ரசிக்க முடியவில்லை.
- மது நாட்டிற்கு வீட்டிற்கு உயிருக்கு கேடு என்று டைட்டிலில் போட்டுவிட்டு விடிய விடிய ராவாக குடிக்கிறார்கள். நெஞ்சு எரியுது.
- மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒருவனின் கதையை ஏற்கனவே பல படங்களில் பார்த்த சலிப்பு. முக்கியமாக குடைக்குள் மழை.
- நாயகன் ஒரே காட்சியில் மனப்பிறழ்வில் இருந்து விடுபடுவது நம்ப முடியவில்லை.
ரசிகனின் தீர்ப்பு
“ஒவ்வொரு மனிதனுமே ஏதோ ஒரு வகையில் மனப்பிறழ்வு ஏற்பட்டவன் தான். அது எந்த அளவிற்கு என்பதே ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது.” என்று இயக்குனர் பாலா அவ்வப்போது தனது பேட்டிகளில் சொல்வார். அந்த கருத்தையே படத்தில் வலியுறுத்தி இருக்கிறார்கள். சைக்கோ கதை என்பதால் வறட்சியாக கதை சொல்லாமல் காமெடி, கவர்ச்சி, கருத்து என்று கலந்து கட்டி அடித்திருக்கும் இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். பாஸிடிவான க்ளைமாக்ஸ் என்பது மேலும் ஆறுதல் அளிக்கிறது.
வழக்கம்போல தான் – படம் நன்றாக இருக்கிறது. பார்க்க வேண்டிய படம். ஆனால் பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடிக்குமா என்று தெரியவில்லை.
டிஸ்கி: பதிவர்களுடன் படம் பார்த்ததால் ஊருக்கு முந்தி விமர்சனம் போடும் நோக்கில் விடிய விடிய எழுதியிருக்கிறேன். எனவே மறக்காமல் உங்கள் வாக்குகளை கண்டபடி குத்துங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
55 comments:
ஹ்ம்ம் சரி சரி
இவரு பார்த்திபன் கனவு எடுத்தவர் தானே? படம் பார்க்கணும்.. அதனால உங்க விமர்சனம் படிக்கல :)
அங்கேயே படம் பாக்கப் பாக்க ஒரு லேப் டாப் ல டைப் பண்ணியிருந்தா வீட்டுக்கு வந்ததும் போட்டிருக்கலாம்ல :))))
சென்னையில் இருந்தா நானும் வந்திருக்கலாம். மிஸ் பண்ணிடேன். படங்களும் செய்தியும் அருமை
பதிவருக்கு என்று தனி ஷோ - சூப்பர்!!!
படத்தை விட, இது நல்லா இருக்கே!
விலாவரியாக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்..
படத்தை பற்றி நான் என்ன நினைத்தானோ அதையே பிரதிபலித்து இருக்கிறீர்கள்..
சூப்பர்..
உங்களை சந்திக்க நினைத்தேன்,, ஆனால் நான் தாமதமாக வந்ததால் இயலாமல் போய் விட்டது..
எல்லாரும் வந்திருக்கீங்க.. நான் ரொம்ப லேட்டா வந்து உங்களையெல்லாம் சந்திக்க முடியலை..
என்ன படம் நல்லா இருக்கா...!
ஏம்பா மீனாட்சி கூட நீன்னு போட்டோ எடுக்கலையா...?
விமர்சனம் அருமை...
டீடயிலான விமர்சனம்..
//மற்றபடி பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. //
"சட்டச் சட மழை" பாட்டு கூடவா :(
மக்கா உன் டேம்லேட் கொஞ்சம் மாத்து கண்ணு எல்லாம் கோடு கோடா தெரியுது
ஆனால் பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடிக்குமா என்று தெரியவில்லை.""அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு.. இருந்தாலும் நீங்கள் கதையின் ட்விஸ்டை போட்டு உடைச்சிட்டீங்களே....
பாலாஜி: நான் உங்கள் கட்சி. சட்ட சட என் favourite..
ஹாய்.. ஒரு வரி விடாமல் படித்தேன்.. அங்கங்கே சீரியஸ் விமர்சனம்.. அங்கங்கே கலகல..
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. படம் ஒரு முறை உங்கள நம்பி பாக்கலாம்னு நினைக்கிறேன் .. :-))
நன்றி ..
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி பாஸ்... விமர்சனம் நன்று!!!
நன்றி
/////நாயகனின் கண்கள் நாயகியின் கழுத்துக்கு கீழ் பார்ப்பது இல்லை. ஆனால் நம் கண்களால் ஹீரோயின் கழுத்துக்கு கீழ் பார்க்காமல் இருக்க முடியவில்லை./////
HAhaha
விமர்சனம் நேர்த்தியாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
படத்தை அருமையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க..
பார்க்கற ஐடியாவே இல்ல.. ஏன் படப்பேரே இப்போதான் கேள்விப்படறேன்.. கண்டிப்பாகப் பார்க்கிறேன்..
கலக்குங்க..
//நாயகன் நாயகியை அடித்து நொறுக்கி ரத்தம் கசிய கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைகிறார். ஆனால் அடுத்த காட்சியில் நாயகி திடகாத்திரமாக நம் கண்முன் நிற்க நாயகனோ தான் நாயகியை ஏற்கனவே கொலை செய்துவிட்டதாக சத்தியம் செய்து சொல்கிறார்.
படத்தோட முக்கிய சஸ்பென்ஸ இப்படியாங்க போட்டு ஒடக்கறது.. இது சரி இல்லீங்க.. நாங்க பாத்தா.. எங்களுக்கு அந்த சீன்லாம். எப்படி இருக்கும்.. என்னங்க நீங்க... இப்படி பண்ணிட்டீங்க..
சூப்பர் தம்பி.. மிக்க நன்றி..!
பாத்துடலாம்
விமர்சனம் நல்லா இருக்கு பங்கு கண்டபடி குத்திட்டேன். வாக்கைதான்.
மிக நன்றாக விமர்சனம் செஞ்சிருக்கீங்க!
சொன்னா மாதிரி படம் ஓடுவது கடினம்தான்!
நல்லா இருக்குங்க விமர்சனம் . எனக்கு பிடிச்ச காம்ப்ரியர் மகேஸ்வரி இந்த படத்தில கிளுகிளுப்பா வேற நடிச்சிருக்காங்களா .ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ கண்டிப்பா பாக்கணுமே .இன்னிக்கு நைட் பாத்துக்கிறேன்
அப்பறம் டைரக்டர் கூடலாம் போட்டோ எடுத்திருக்கீங்க .மகேஸ்வரியை நேர்ல பாத்தீங்களா எப்படி இருந்தாங்க ?
படம் பார்க்கணும்.. parthutu vimarsanam padikuren..aanal arvathil pinnutam anaithaiyum padithu vitaen...
நேற்று என்னால் வரமுடியாமல் போய்விட்டது .. ஆனால் உங்கள் விமர்சனம் இன்று திரையரங்கிற்கு என்னை அழைத்துப்போகிறது...
பார்க்கவேண்டிய படமா?
பதிவர்களுக்கு ஷோ? சூப்பர்!! :))
விலாவரியாக எழுதி இருக்கிறீர்கள்.
பதிவர்களுக்கு படம்? சூப்பர்!
super vimarsanam
Ithu than vimarchanama ? --- jp
சூப்பர் விமர்சனம்.இதை விட டீட்டெயிலாக யாரும் எழுத முடியாது...பிரபாகரன் பகிரங்க சவால்.ஹி ஹி ஹி
விமர்சனம் நல்லா இருக்கு. மிக்க நன்றி.
பிரபாகரனா கொக்க... அப்படி அருமைங்கோ... என்ன குறையோ பாடல் பற்றி சொல்லலியே....
vimarsanam super, nalla irukku.
ரைட்டு
பதிவர்களுக்கான சிறப்பு காட்சி பலே பலே..
ஒரு தனிபட்ட வேண்டுகோள்..
இங்கிருக்கும் அனைவருக்கும்...
எனது ப்ளாக்கை பிரபலமாக்க ஒரு வழி சொல்லுங்களேன்..
ram-all.blogspot.com
kirukaninkirukals.blogspot.com
@ LK, ஹரிஸ், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., ankithavarma, Chitra, பார்வையாளன், Cable Sankar, சௌந்தர், மாணவன், Balaji saravana, மோடுமுட்டி, Ananthi, Sukumar Swaminathan, விக்கி உலகம், nis, காவேரி கணேஷ், பதிவுலகில் பாபு, பிரியமுடன் ரமேஷ், உண்மைத் தமிழன்(15270788164745573644), Arun Prasath, karthikkumar, எஸ்.கே, நா.மணிவண்ணன், Muthu, கே.ஆர்.பி.செந்தில், அருண் பிரசாத், ஜீ..., சே.குமார், அலைகள் பாலா, jp, சி.பி.செந்தில்குமார், பாஸ்கர், ம.தி.சுதா, இரவு வானம், மங்குனி அமைச்சர், தம்பி கூர்மதியன்
வருகை தந்ததற்கும் கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// அங்கேயே படம் பாக்கப் பாக்க ஒரு லேப் டாப் ல டைப் பண்ணியிருந்தா வீட்டுக்கு வந்ததும் போட்டிருக்கலாம்ல :)))) //
அந்த அளவுக்கு வசதி இல்லை நண்பா... அது தவிர டைப் பண்ணிக்கொண்டு இருந்தால் படத்தை எவ்வாறு பார்ப்பது...
@ பார்வையாளன்
// உங்களை சந்திக்க நினைத்தேன்,, ஆனால் நான் தாமதமாக வந்ததால் இயலாமல் போய் விட்டது.. //
என்னது...? நீங்களும் வந்தீர்களா...? தாமதமாக வந்திருந்தாள் கூட இடைவேளையில் சந்தித்திருக்கலாமே...
@ Cable Sankar
சில நொடிகள் உங்களோடு பேச முடிந்ததே அது வரைக்கும் சந்தோசம் தான் சார்...
@ சௌந்தர்
// ஏம்பா மீனாட்சி கூட நீன்னு போட்டோ எடுக்கலையா...? //
மீனாட்சி வரலையே பா... :(
// மக்கா உன் டேம்லேட் கொஞ்சம் மாத்து கண்ணு எல்லாம் கோடு கோடா தெரியுது //
டெம்ப்ளேட் மாற்றுவது குறித்து பல ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது... கூடிய விரைவில் மாற்றுகிறேன்...
@ Balaji saravana
// "சட்டச் சட மழை" பாட்டு கூடவா :( //
வேண்டுமானால் கண்களுக்கு இதமாக இருந்திருக்கலாம்... காதுகளுக்கு இனிமையாக இல்லை...
@ மோடுமுட்டி
// இருந்தாலும் நீங்கள் கதையின் ட்விஸ்டை போட்டு உடைச்சிட்டீங்களே.... //
அப்படியா... மன்னிக்கவும்... அடுத்த முறை இந்த தவறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்...
@ Ananthi
// ஒரு வரி விடாமல் படித்தேன்.. // - மிக்க நன்றி மேடம்...
// ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. படம் ஒரு முறை உங்கள நம்பி பாக்கலாம்னு நினைக்கிறேன் .. :-)) //
பெண்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருக்குமா என்பது சந்தேகம் தான்...
@ Sukumar Swaminathan
// தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி பாஸ்... //
எனக்கும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி தான்...
@ பதிவுலகில் பாபு
// பார்க்கற ஐடியாவே இல்ல.. ஏன் படப்பேரே இப்போதான் கேள்விப்படறேன்.. //
எப்பவுமே ஆங்கிலப்படங்கள் தான் பாக்கணும்னு இல்ல பாபு... அப்பப்ப தமிழ் படங்களும் பார்க்கலாம்...
@ பிரியமுடன் ரமேஷ்
// படத்தோட முக்கிய சஸ்பென்ஸ இப்படியாங்க போட்டு ஒடக்கறது.. இது சரி இல்லீங்க..//
தவறு நடந்துவிட்டது... அடுத்தமுறை இதுபோல நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்...
@ நா.மணிவண்ணன்
// எனக்கு பிடிச்ச காம்ப்ரியர் மகேஸ்வரி இந்த படத்தில கிளுகிளுப்பா வேற நடிச்சிருக்காங்களா //
எனக்கும் மகேஸ்வரியை ரொம்ப பிடிக்கும்...
// ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ //
என்ன இது தயிர் சாதத்துக்கு ஊறுகாய் தொட்டு சாப்பிடுறீங்களா என்ன...
// மகேஸ்வரியை நேர்ல பாத்தீங்களா எப்படி இருந்தாங்க ? //
இயக்குனர் மட்டும்தான் நேரில் வந்தார்... வேறு யாரும் வரவில்லை...
@ கே.ஆர்.பி.செந்தில்
// நேற்று என்னால் வரமுடியாமல் போய்விட்டது .. //
உங்களைத்தான் அதிகம் எதிர்பார்த்தோம்...
@ அலைகள் பாலா
// super vimarsanam //
உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்த்தேன்... இப்படி ஒரே வரியில் முடித்துவிட்டீர்களே....?
@ சி.பி.செந்தில்குமார்
// சூப்பர் விமர்சனம்.இதை விட டீட்டெயிலாக யாரும் எழுத முடியாது...பிரபாகரன் பகிரங்க சவால். //
சத்தமா சொல்லாதீங்க பிரபல பதிவர்கள் காதில் விழுந்தால் தர்ம அடி கிடைக்கும்...
@ ம.தி.சுதா
// பிரபாகரனா கொக்க... அப்படி அருமைங்கோ... //
ரொம்ப புகழாதீங்க...
// என்ன குறையோ பாடல் பற்றி சொல்லலியே.... //
பாடல்கள் பற்றி சில வரிகளுக்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை...
அருமையான விமர்சனம். இது தான் என்னுடைய முதல் வருகை தங்க வலைப்பூவுக்கு. ரீடர்-இல் இணைத்து விட்டேன்.
விரைவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்.. நானும் சென்னை நகரத்தின் முடிசூடா இளவரசன்தான்... (nanbendaa.blogspot.com and madrasbhavan.blogspot.com)
@ Dinesh
வாங்க தினேஷ்... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ சிவகுமார்
வாங்க சிவகுமார்... நிச்சயம் அடுத்த பதிவர் சந்திப்பில் பார்க்கலாம்... நாளைக்கு நீங்கள் ப்ரீயாக இருந்தால் சந்திக்கலாம்...
Post a Comment