வணக்கம் மக்களே...
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த பத்து படங்கள் பற்றிய இந்த தொடர்பதிவை எழுத என்னை நண்பர் அருண் பிரசாத் தலைமையில் அழைத்த இம்சை அரசன் பாபுக்குவும், நம்ம பரம்பரையில் வந்த நாகராஜசோழனுக்கும் (நாங்களும் சோழர் பரம்பரை தான்... தெரியுமில்ல...) நன்றிகள்...
“கமல் ரசிகனொருவன் பார்வையில்...” என்றுதான் தலைப்பில் போட நினைத்தேன். ஆனால் ஏற்கனவே ஒரு “கோமாளி” (அட... இதுவும் பதிவர் பெயர்தான்) எழுதிவிட்டதால் அதை தவிர்த்துவிட்டேன். ஒரு தனி மனிதராக நாளொரு வண்ணமும் பொழுதொரு பேச்சுமாக இருக்கும் ரஜினியை நான் என்றுமே விரும்பியதில்லை. ஆனால் ஒரு நடிகராக ரசித்திருக்கிறேன். அதற்காக “தலைவா...” என்று விளிப்பதெல்லாம் டூ மச் மச்சான்ஸ். ஒரு நாள் முழுவதும் விக்கிபீடியாவின் “Rajnikath Filmography” பக்கத்தை வைத்துக்கொண்டு மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்துக்கொண்டிருப்பதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் என்னை மேலும் கீழுமாக பார்த்தனர். ரஜினி நடிச்ச எனக்கு பிடிச்ச பத்து படங்களை தேர்வு செய்வதற்குள் இடுப்பு பிடிச்சிகிச்சு.
10. பாட்ஷா
அதீத கமர்ஷியல் படங்கள் என் கவனத்தை ஈர்ப்பதில்லை இருப்பினும் சில படங்கள் மட்டும் விதிவிலக்கு. அதுமட்டுமில்லாமல் முதல் முதலாக தியேட்டருக்கு போய் பார்த்த ரஜினி படம் என்பதனாலும் ஒரு ஈர்ப்பு.
எ.பி.கா: தன் தங்கையிடம் தவறாக பேசும் கல்லூரி நிறுவனரிடம் ரஜினி தனியறையில் பேசும் காட்சி.
9. ராஜா சின்ன ரோஜா / ராஜாதி ராஜா
இரண்டு படங்களிலும் வரும் ஒரே மாதிரியான பங்களா காட்சிகளை பார்த்து சில சமயங்களில் குழம்பியதுண்டு. அடிக்கடி டி.வியில் பார்த்து ரசிக்கும் படங்கள். ராஜா சின்ன ரோஜா படத்தில் அண்ணி ஷாலினி நடித்திருப்பது தனி சிறப்பு.
எ.பி.கா: ராஜா சின்ன ரோஜா.... என்ற பாடலும் அதில் வரும் காட்சியமைப்புகளும். சின்ன வயதில் எல்லோருமே ரசித்திருப்பார்கள். இப்பவும்தான்.
8. எந்திரன்
சில எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் ரஜினியின் வரலாற்றில் முக்கியமான ஒரு திரைப்படம். ஷங்கரின் பிரம்மாண்டம், ஐஸின் குளிர்ச்சி, ரகுமானின் இசை என்று படத்திற்கு ஏகப்பட்ட பலங்கள். தவிர சிட்டி v2.0 சர்ப்ரைஸ்.
எ.பி.கா: ஏற்கனவே விமர்சனத்தில் குறிப்பிட்டது போல கோவில் திருவிழாவில் ரஜினி இரும்பு ஆயதங்களை கவர்ந்திழுப்பதும் பெண்கள் அதைப் பார்த்து சாமியாடும் காட்சி.
7. மிஸ்டர் பாரத்
ரஜினி – சத்யராஜ் சவால் காட்சிகளுக்காக மிகவும் ரசித்த படம். சத்யராஜின் என்னம்மா கண்ணு வசனமும் பாடலும் செமையா இருக்கும்.
எ.பி.கா: க்ளைமாக்ஸ் காட்சி. கடைசி வரை சிலையை திறப்பாரா மாட்டாரா என்று டென்ஷனாக இருக்கும்.
6. சந்திரமுகி:
நாயகியை மையப்படுத்தி வந்த திரைப்படம் இருப்பினும் ரஜினியின் காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தது. இன்றளவும் ரஜினி – வடிவேலு சம்பந்தப்பட்ட காமெடி வசனங்கள் அனைத்தும் மனப்பாடம்.
எ.பி.கா: பேய் வருவதற்கான அறிகுறிகள் பற்றி வடிவேலுவிடம் ரஜினி விவரிக்கும் காட்சி. (இதுக்கு ஏன்ப்பா நீ இத்தனை முறை திரும்புற. இதுக்கு அந்த சாமியார் தேவலை போல இருக்கே.)
5. பில்லா
தல நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் டி.வி.டி வாங்கி பார்த்த படம். ஒரு கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமான டானாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் அபிநயம் பிடிக்கும் ராஜூவாகவும் கலக்கியிருப்பார்.
எ.பி.கா: தனது குருப்பில் இருந்து வெளியேறும் ராஜேஷை கொல்லும் காட்சி. (பழைய பில்லாவை விட புது பில்லாவில் இந்தக் காட்சி டக்கர்.)
4. தளபதி
ரஜினி போலதான் மணி ரத்னமும் அவரை பிடிக்காவிடிலும் அவரது படங்கள் பிடிக்கும். மகாபாரத கதை பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நட்பை பறைசாற்றும் படமாக என் மனதை கவர்ந்த திரைப்படம்.
எ.பி.கா: கொட்டும் மழையில் ரஜினியிடம் அம்ரேஷ் புரி பேசும் காட்சியும் அதை தொடர்ந்து மம்மூட்டி ரஜினியின் குப்பத்திற்கு வருகை தரும் காட்சியும்.
3. தில்லு முள்ளு:
ரஜினி நடித்த ஒரே முழுநீள நகைச்சுவை திரைப்படம். போன வாரம்கூட டிவியில் ரசித்தேன். தமிழ் சினிமாவில் நிறைய ஆள்மாறாட்ட திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்தப்படத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு.
எ.பி.கா: சந்தேகமே இல்லாமல் இண்டர்வியூ காட்சி.
2. முள்ளும் மலரும்
ரஜினி நடித்த உணர்ச்சிப்பூர்வமான திரைப்படங்களுள் ஒன்று. ரஜினி தனக்கும் நடிப்பு வரும் என்று நிரூபித்த படம். மற்றும் ஷோபா, ஜெயலட்சுமி என்று எனக்கு பிடித்தவர்கள் நடித்த படம்.
எ.பி.கா: ரஜினி தனது கையும் வேலையும் பறிபோன நேரத்தில் பேசும் வசனம். (ரெண்டு கால், ரெண்டு கை இல்லைனாலும் பொழச்சுக்குவான் சார் இந்த காளி.)
1. ஆறிலிருந்து அறுபது வரை
ரஜினி நடித்த படங்களில் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம். ஒரு குடும்பத்தின் சுமைதாங்கியாக நடித்து பல காட்சிகளில் கலங்க வைத்திருப்பார். எனினும் படத்தின் க்ளைமாக்ஸ் சுபமாக முடிவதால் அதிகம் ரசித்த படம்.
எ.பி.கா: மதிய உணவு இடைவேளையில் ரஜினி தனது அலுவலக காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.
டாப் டென்னை தவற விட்ட படங்கள்:
- முரட்டுக்காளை
- பொல்லாதவன்
- மூன்று முகம்
- மன்னன்
- அவர்கள்
எனக்குப் பிடித்த பத்து ரஜினி பாடல்கள் (வரிசை படுத்தவில்லை):
- சிவ சம்போ.... (நினைத்தாலே இனிக்கும்)
- கண்மணியே காதல் என்பது... (ஆறிலிருந்து அறுபது வரை)
- மை நேம் இஸ் பில்லா (பில்லா)
- ஆசையை காத்துல தூது விட்டு... (ஜானி)
- பொதுவாக என் மனசு தங்கம்... (முரட்டுக்காளை)
- ராகங்கள் பதினாறு... (தில்லு முள்ளு)
- காட்டுக்குயிலு மனசுக்குள்ள... (தளபதி)
- அடிக்குது குளுறு... (மன்னன) [ரஜினி சொந்தக்குரலில் பாடிய பாடல்]
- தங்கமகனென்று... (பாட்ஷா)
- இரும்பிலே ஓர் இருதயம்... (எந்திரன்)
ரஜினியுடன் நடித்த நாயகிகளில் எனக்கு பிடித்தவர்கள்:
- படாபட் ஜெயலட்சுமி (ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும்)
- ஸ்ரீ ப்ரியா (பில்லா)
- மாதவி (தில்லு முள்ளு)
- விஜயசாந்தி (மன்னன்)
ரஜினியுடன் நடித்த வில்லன் / வில்லிகளில் எனக்கு பிடித்தவர்கள்:
- சத்யராஜ் (மிஸ்டர் பாரத்)
- ரகுவரன் (பாட்ஷா)
- ரம்யா கிருஷ்ணன் (படையப்பா)
ரஜினியுடன் நடித்த காமெடியன்களில் எனக்கு பிடித்தவர்கள்:
- செந்தில் (வீரா, முத்து)
- கவுண்டமணி (பாபா, மன்னன்)
- வடிவேலு (சந்திரமுகி)
இதுக்கு மேல ஏதாவது எழுதினா கல்லடி தான் கிடைக்கும்னு நினைக்குறேன். சரி நிறுத்திக்கிறேன். இப்போ இந்தப் பதிவை தொடர யாரையாவது அழைக்க வேண்டுமல்லவா. ஆனால் ஏற்கனவே பதிவர்கள் பலர் இந்த தொடர்பதிவை எழுதிவிட்டார்கள் எனவே இதை அப்படியே “எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள்” என்று மாற்றி இன்னொரு ரவுண்ட் விடலாம் என்று தோன்றுகிறது. இதுபற்றி நண்பர் அருன்பிரசாத்திடம் கேட்டு அவரும் ஓ.கே சொல்லிவிட்டார்.
எல்லோரும் எழுதி முடிச்சதும் கடைசியா எனக்கு ஒரு சான்ஸ் கண்டிப்பா கொடுங்கப்பா. அதை எழுதுவதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
47 comments:
நல்ல தேர்வுகள்
டீடயிலான தொகுப்பு பாஸ்!
நன்று
எல்லாமே நல்ல படங்கள்.. நல்ல தொகுப்பு..
Super Star!!!!
பகிர்வுக்கு நன்றி
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
// ரஜினி தனக்கும் நடிப்பு வரும் என்று நிரூபித்த படம்.//
இதைப் படித்த போது கொஞ்சம் மனதிற்குக் கஷ்டமாக இருந்தது.
ரஜினி 10 படங்கள் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு நடிகர் என்று ஒத்துக் கொள்கிறீர்களே?(just kidding )
எனக்கு ரஜினி படங்கள் பிடிக்கும்.
நன்றி பிரபாகர்.
ஜானி எங்கே? தில்லுமுல்லு ஆல் டைம் பேவரைட்.. நெற்றிக்கண்.. நான் சிகப்பு மனிதன்.. காளி.. சொல்லிட்டே போகலாம்..
நான் அப்படியே எதிர்.. மிட் டைம் ரஜினி படங்கள் பிடிக்கும்.. ஆனா இன்னைக்கு ரஜினிய ஒரு மனிதராகப் பிடிக்கும்..
நீங்கள் தொகுத்த படங்களும் பாடல்களும் அருமை. அடுத்த தொடருக்கு அடி போட்டுட்டீங்க போல....
அருமையான தொகுப்பு... அடுத்து கமலா சூப்பர்.. அசத்திடுவோம்.. நல்லா மாத்திவிட்டீங்க போங்க..
நண்பர்களே என் பதிவு இன்டலி ல் வெளிவரவில்லை ஏதும் தொழில்நுட்ப பிரச்சனையா? ஆனால் வோட்டளிப்பு கருவி மட்டும் வேலை செய்கிறது. தெரிந்தவர்கள் சரிபார்த்து சொல்லுங்களேன்.இன்ட்லி மெயில் ஐடி தெரியுமா?
Rajini is cool! :-)
ஆஹா! ஒரு தலைவர் படத்தைப் பார்த்த மகிழ்ச்சி எனக்கு! :-)
“தலைவா...” என்று விளிப்பதெல்லாம் டூ மச் மச்சான்ஸ்///
நீங்க என்ன சொல்லல தான?
எனக்கும் மாதவி , விஜயசாந்தி ரொம்ப பிடிக்கும் ஹி ஹி ஹி .இப்ப இல்ல பத்துவருசத்துக்கு முன்னாடி
தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி பிரபா
நல்ல தொகுப்பு
நல்லா சொல்லிருக்கீங்க நண்பா!! தொடர் பதிவு எழுதியதற்கு நன்றி!!
raittu
பதினாறு வயதினிலே மிஸ் ஆகி விட்டதோ...
”இதுக்கு மேல ஏதாவது எழுதினா கல்லடி தான் கிடைக்கும்னு நினைக்குறேன்.”
இல்லை .. இன்னும் கொஞசம் எழுதி இருக்கலாம் என சொல்லத்த்க்க சுவையான எழுத்து....
ஃபார்மேட் சூப்பர்.. உங்கள் சிரத்தைக்கும் உழைப்புக்க்கும் பாராட்டுக்கள்
படங்களின் பட்டியல் மட்டுமன்றி
பாடல்கள்
கதாநாயகிகள்
வில்லன்கள்
காமெடியன்கள்
என்று பட்டியல்களை அள்ளி வழங்கி கலக்கிட்டீங்க..
இனி அடுத்து கமல் படங்களா????
வாழ்த்துக்கள்.
கலக்கல் ரஜினி படவரிசை..!!!
உங்கள் அழைப்பை ஏற்று பிடித்த 10 கமல் படங்கள் எனது பதிவில்..!!!
http://vetripages.blogspot.com/2010/11/blog-post_26.html
அதிக வேலை காரணமாக இந்த வார இறுதியில் தொடர்பதிவை தொடர்கிறேன்.
அழைப்புக்கு நன்றி தல
தூள் கிளப்புறிங்க..பிரபா.. உங்க ரசனை என ரசனையைப்போன்றே உள்ளது..
//ரஜினி போலதான் மணி ரத்னமும் அவரை பிடிக்காவிடிலும் அவரது படங்கள் பிடிக்கும்// எனக்கும்தான்.
முதல் படம் செம கலக்கலா இருக்கு
நல்ல ரசனை வசீகரமான எழுத்து நடை
சூப்பர் ஸ்டாரின் டாப்-10 லிஸ்ட் கலக்கல்....
நான், ரஜினி அவர்கள் நடித்த 150+ படங்களில் இருந்து 20 படங்களை தேர்ந்தெடுக்கவே கஷ்டப்பட்டேன்...
பாருங்களேன்... என் சாய்ஸ் ஆஃப் 20 மூவீஸ்...
சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)
http://jokkiri.blogspot.com/2010/02/2020.html
சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)
http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html
சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்
http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html
மிக நல்ல தொகுப்பு!
@ LK, Balaji saravana. பதிவுலகில் பாபு, KANA VARO, பாஸ்கர், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., ரஹீம் கஸாலி, பிரியமுடன் ரமேஷ், யோவ், Chitra, சேட்டைக்காரன், Arun Prasath, நா.மணிவண்ணன், அருண் பிரசாத், karthikkumar, நாகராஜசோழன் MA, மங்குனி அமைச்சர், சிவகுமார், பார்வையாளன், இந்திரா, ♥♪•வெற்றி - VETRI•♪♥, யோ வொய்ஸ் (யோகா), Riyas, ஆர்.கே.சதீஷ்குமார், R.Gopi, எஸ்.கே
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ பாஸ்கர்
>> // ரஜினி தனக்கும் நடிப்பு வரும் என்று நிரூபித்த படம்.//
இதைப் படித்த போது கொஞ்சம் மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. <<
அந்த வரிக்கு மன்னிக்கவும்... ஒரு ப்லோவுல வந்துடுச்சு...
>> ரஜினி 10 படங்கள் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு நடிகர் என்று ஒத்துக் கொள்கிறீர்களே? <<
கண்டிப்பாக ஒப்புக்கொள்கிறேன்...
@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// ஜானி எங்கே? //
படம் பார்த்ததில்லை நண்பரே... மன்னிக்கவும்...
// நெற்றிக்கண்.. நான் சிகப்பு மனிதன்.. //
நெற்றிக்கண் எனக்கும் பிடிக்கும்... ஆனால் பத்துக்குள் வரவில்லை... நான் சிகப்பு மனிதன் பார்த்ததில்லை...
@ யோவ்
// நண்பர்களே என் பதிவு இன்டலி ல் வெளிவரவில்லை ஏதும் தொழில்நுட்ப பிரச்சனையா? ஆனால் வோட்டளிப்பு கருவி மட்டும் வேலை செய்கிறது. தெரிந்தவர்கள் சரிபார்த்து சொல்லுங்களேன்.இன்ட்லி மெயில் ஐடி தெரியுமா? //
உங்கள் வலைப்பூவிற்கு வந்து பார்த்தேன்... ஒரு கோளாறும் இருப்பதாக தெரியவில்லை...
@ சேட்டைக்காரன்
// ஆஹா! ஒரு தலைவர் படத்தைப் பார்த்த மகிழ்ச்சி எனக்கு! :-) //
இப்போதானே சொன்னேன்... அதுக்குள்ளே தலைவான்னு சொல்றீங்களே இது முறையா...?
@ Arun Prasath
>> “தலைவா...” என்று விளிப்பதெல்லாம் டூ மச் மச்சான்ஸ்///
நீங்க என்ன சொல்லல தான? <<
ஆமாம்... உங்களை, உங்களுக்கு மேலே பின்னூட்டமிட்ட சேட்டைக்காரனை மற்றும் தலைவா என்று விளிக்கும் அனைத்து ரஜினி ரகர்களையும் தான்....
@ நா.மணிவண்ணன்
// எனக்கும் மாதவி , விஜயசாந்தி ரொம்ப பிடிக்கும் ஹி ஹி ஹி .இப்ப இல்ல பத்துவருசத்துக்கு முன்னாடி //
என் இனமய்யா நீ... மாதவியின் பழைய ஸ்டில் ஒன்றை வைத்திருந்தேன்... அதை வெளியிட்டால் பதிவு 18+ ஆகிவிடும் என்று அடக்கிவாசித்துக்கொண்டேன்...
@ பார்வையாளன்
// இன்னும் கொஞசம் எழுதி இருக்கலாம் என சொல்லத்த்க்க சுவையான எழுத்து.... //
எனக்கும் எழுத ஆசைதான்... ஆனால் அதிகம் எழுதினால் வாசகர்கள் படிக்காமல் போய்விடுகிறார்கள்...
@ ♥♪•வெற்றி - VETRI•♪♥
// உங்கள் அழைப்பை ஏற்று பிடித்த 10 கமல் படங்கள் எனது பதிவில்..!!! //
மின்னல் வேகத்தில் தொடர்பதிவு எழுதி அசத்தியதற்கு நன்றி நண்பரே....
@ யோ வொய்ஸ் (யோகா)
// அதிக வேலை காரணமாக இந்த வார இறுதியில் தொடர்பதிவை தொடர்கிறேன். //
தாராளமா நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே... ஆனால் எழுதாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்...
>> உங்க ரசனை என ரசனையைப்போன்றே உள்ளது..
//ரஜினி போலதான் மணி ரத்னமும் அவரை பிடிக்காவிடிலும் அவரது படங்கள் பிடிக்கும்// எனக்கும்தான். <<
அப்படியா...? ஆச்சர்யமா இருக்கு... இங்க நிறைய பேர் மணிரத்னத்தை தூக்கி வச்சி கொண்டாடுவாங்க...
@ R.Gopi
உங்கள் வலைப்பூவிற்கு வருகை தந்தேன்... ஆச்சர்யமாக இருந்தது... நீங்கள் ஒரு பிரபல பதிவராக இருந்தும் இதுநாள் வரை உங்கள் வலைப்பூவிற்கு வருகை தராமல் இருந்ததற்கு வருந்துகிறேன்...
அது என்னப்பா நேரம் இல்லன்னு சொல்லிகிட்டே அடிச்சு ஆடுற.
நல்லா இருக்கு ஆட்டம்.
சூப்பர்
தயவு செய்து மன்னிக்கவும்.
ரஜினி ஒரு நல்ல நடிகர் அவரை சினிமா அரசியல் எனும் சூறாவளி சுற்றலில் விட்டதால் அவர் super hero பாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடிக்கும் பாணியில் சென்று விட்டார்.
உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது என்னன்னா ஒலக படத்த சுட்டு தன் பேர போட்டுக்கரவங்க நடுவில சாதாரண மனிதனை சூப்பர் ஹீரோ வாக தன் படங்களில் காட்டும் ரஜினி எவ்வளவோ மேல், மற்றும் நான் என்றுமே அவருடைய அரசியல் விஷயத்தை நம்பியதில்லை.
அதற்க்காக சும்மா கிடைக்கவில்லை அவருக்கான வெற்றியும், இடமும் நண்பரே.
@ விக்கி உலகம்
// அது என்னப்பா நேரம் இல்லன்னு சொல்லிகிட்டே அடிச்சு ஆடுற //
இதெல்லாம் நேரம் கிடைக்கும்போது டைப் அடித்து draftல் வைத்திருக்கும் பதிவுகள்... இந்த வாரத்திற்காக நாலு பதிவுகள் இப்பவே ரெடி...
மாற்றுக்கருத்தை வரவேற்கிறேன்... நானும் ரஜினியை ஒரு நடிகராக குறை சொல்லவில்லை... ஒரு மனிதராகவே முரண்பாடுகள் உள்ளன...
ENNA KODUMA PRABHAKARA ITHU!!!
பிரபாகர் மச்சி நீ விருப்ப பட்ட, எனக்கு புடிச்ச கமல் பத்து படங்கள் தொடர் பதிவு போஸ்ட் பண்ணியாச்சு . தெடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள் பல . . . .
http://rockzsrajesh.blogspot.com/2010/11/10-philosophy.html
thanks
rockzs
நல்ல தொகுப்பு.
புதுசா ஒன்ன தயார் பண்ணிவிட்டீங்களே!
இது எத்தனை நாளைக்கு ஓடும்னு தெரியலியே??
எப்பிடி நேக்கா ரஜினி தொடர்பதிவ கமலுக்கு திருப்பி விட்டிருககாருய்யா....! நடத்துங்க நடத்துங்க....!
Post a Comment