27 November 2010

நந்தலாலா - கர்சீப் எடுத்துட்டு போங்க...

வணக்கம் மக்களே...

பலத்த எதிர்(பார்)ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்திருக்கிறது. முதல்நாள் முதல்காட்சி பார்க்க வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் முக்கியமாக சுற்றுவட்டாரத்தில் எந்த திரையரங்கிலும் வெளியாகாத காரணத்தினால் இரண்டாம் நாளே பார்க்க முடிந்தது.

திரைக்கு முன்...
- சென்னை மாநகரின் பழமையான திரையரங்கில் ஒன்றான சென்னை அகஸ்தியாவில் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அகஸ்தியா திரையரங்கில்தான் சென்னையிலே முதல் முறையாக 70MM வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
- சீக்கிரமாகவே திரையரங்கம் சென்றுவிட்டதால் ரசிகர்கள் சிலரது பேச்சுக்களை கேட்க நேர்ந்தது. ஒருத்தர் கெளரவர்கள், புழல், நகரம், மகிழ்ச்சி என்று அவர் சமீபத்தில் பார்த்த படங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அட்ராசக்க என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.
- பெருசு ஒன்று தான் அந்தக்காலத்தில் பதினாறு வயதினிலே படத்தை இரண்டு ரூபாய் பத்து பைசா கொடுத்து பார்த்த கதையையும் ஷோலே படத்தை நாலு ரூபாய் கொடுத்து பார்த்த கதையையும் சொல்லிக்கொண்டிருந்தது.
- வாலிப குஞ்சுகள் சில ஒவ்வொரு காட்சியிலும் படத்தை நக்கலடித்து சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் என்ன மயித்துக்கு படம் பார்க்க வந்தார்கள் என்று தெரியவில்லை. %$#@&* ^!@#%

கதைச்சுருக்கம்
பாட்டியின் கவனிப்பில் வளரும் சிறுவன் அஸ்வத். பாட்டியிடம் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் போவதாக போய் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்புகிறான். மனநல காப்பகத்தில் இருக்கும் இளைஞன் காவலாளியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். இவ்விருவரும் சூழ்நிலையின் காரணமாக சந்திக்க நேரிடுகிறது. இருவரும் தத்தம் தாயை தேடி பயணிக்கின்றனர். அந்த பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யங்களும் நெகிழ்வுகளும் தான் கதை. கடைசியில் இருவரும் அவர்களது தாயை கண்டுபிடித்தார்களா என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்
-          மிஷ்கின் மனப்பிறழ்வு ஏற்பட்டவராக அருமையாக நடித்திருக்கிறார். அவிழ்ந்துவிடாமல் இருப்பதற்காக பேண்ட்டை பிடித்தபடி படம் நெடுக வருகிறார். நிச்சயம் இமேஜ் பார்க்காத ஒருவரால் மட்டுமே இதையெல்லாம் செய்ய முடியும்.
-          சிறுவன் அஸ்வத், வயதை மீறிய நடிப்பு. புத்திசாலித்தனமான சிறுவன் என்ற பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சுட்டித்தனங்கள் மட்டும் மிஸ்ஸிங்.
-          ஸ்னிக்தா, அதிக காட்சிகள் இல்லையெனிலும் அவரது வேலையை சரிவர செய்திருக்கிறார். ரோகிணி சில நிமிடங்கள் மட்டும்வந்து அழ வைக்கிறார்.
-          நாசர் உட்பட பல நடிகர்கள் ஆங்காங்கே தலைகாட்டி நெகிழ வைக்கின்றனர்.

இசை
படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதே இளையராஜாவின் இசைதான். சிடியில் ஆறு பாடல்கள் இருந்தாலும் படத்தில் இடம் பெறுவது மூன்று பாடல்கள் மட்டும்தான். அந்தப்பாடல்களும் காட்சிகளுக்கு பிண்ணனி இசையைப் போலவே இணைக்கப்பட்டிருக்கின்றன. மெல்ல ஊர்ந்து... என்று ஆரம்பிக்கும் பாடல்கள் சில நொடிகளும், ஒண்ணுக்கொண்ணு... என்று ஆரம்பிக்கும் பாடல் படம் நெடுக ஆங்காங்கே சில இடங்களிலும் வர தாலாட்டு கேட்க நானும்... என்ற பாடல் படத்தின் நாடித்துடிப்பாக விளங்குகிறது. "எலிலே எலிலே..." பாடலை நீக்கியது ஏமாற்றம் அளிக்கிறது.

திரைக்கதை
படத்தில் வசனங்கள் மிகக்குறைவு. அதற்கு பதிலாக படத்திற்கு பக்கபலமாக இருப்பது திரைக்கதை. படம் முழுவதும் ஹைக்கூ கவிதைகள் போல காட்சியமைப்புகள். உதாரணமாக, ஊனமுற்றவரின் காலுக்கு கட்டு போட்டுவிட்டு தாங்கி தாங்கி நடந்துபோகும் மருத்துவச்சி, மேரி மாதா சிலைக்கு அருகில் இருக்கும் விளக்கை மிஷ்கினும் சிறுவனும் எடுத்துச்செல்வது போன்ற காட்சிகளை குறிப்பிடலாம்.

இன்னபிற
டைட்டில் ஷாட்டை பற்றி முந்தாநாள் பேட்டியில் மிஷ்கின் சிலாகித்திருந்தார். ஆனால் அப்படி அந்தக் காட்சியில் எப்படி என்னதான் இருக்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை கலைக்கண்களோடு பார்த்தால் புரியுமோ என்னவோ...? மற்றபடி ஒளிப்பதிவில் புதியதொரு மைல்கல்லை எட்டியிருப்பதாக அதுபற்றி தெரிந்த அறிஞர்கள் சொல்கின்றனர். முதல்பாதியில் முக்கால்வாசி படத்தையும் இரண்டாம் பாதியில் மீதி படத்தையும் காட்டியது தமிழ் சினிமாவிற்கு புதுசு.

எனக்குப் பிடித்த காட்சி
படத்தின் உயிரே அந்த காட்சிதான் என்ற காரணத்தினால் அதுபற்றி விவரிக்க விரும்பவில்லை. திரையில் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக தாலாட்டு கேட்க நானும்... என்று இளையராஜாவின் குரல் கேட்கும் நொடியில் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுவதை தடுக்க முடியவில்லை.

ரசிகன் தீர்ப்பு
உலகப்படத்தின் காப்பி என்பது தொண்ணூறு சதவிகித காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது.

மிஷ்கின் தனது பேட்டிகளில் போடும் ஓவர் சீன்களை எல்லாம் மறந்து எதையும் எதிர்பார்க்காமல் திரையரங்கிற்கு சென்றால் நிச்சயம் படத்தை ரசிக்க முடியும்.

படத்தின் முதல்பாதியில் ஒரு ஐந்தாறு காட்சிகளில் கண்ணீர் துளிர்த்தது. படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் கண்ணீர் தாரைத்தாரையாக என் கண்களில் இருந்து வழிந்துக்கொண்டிருந்தது. அந்த கடைசி இருபது நிமிடங்களுக்காகவே படத்தை பலமுறை பார்க்கலாம்.

நந்தலாலா மறக்காம கர்சீப் எடுத்துட்டு போங்க
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

65 comments:

nis said...

நல்லா analysis பண்ணியிருக்கீங்க. super


///பெருசு ஒன்று தான் அந்தக்காலத்தில் பதினாறு வயதினிலே படத்தை இரண்டு ரூபாய் பத்து பைசா கொடுத்து பார்த்த கதையையும் ஷோலே படத்தை நாலு ரூபாய் கொடுத்து பார்த்த கதையையும் சொல்லிக்கொண்டிருந்தது./// hahaha

Unknown said...

அடேங்கப்பா உடனுக்குடன் விமர்சனமா .நல்லாத்தான் இருக்கு .அதென்னாங்க வாலிபா குஞ்சுகள் ? படத்த பாத்துடுவோம்

Philosophy Prabhakaran said...

@ nis
நேரமே வந்து பின்னூட்டம் போட்டதற்கு நன்றி nis...

@ நா.மணிவண்ணன்
// அடேங்கப்பா உடனுக்குடன் விமர்சனமா //
என்னை பொறுத்தவரையில் இதெல்லாம் ரொம்ப லேட்...

// நல்லாத்தான் இருக்கு // - நன்றி...

// அதென்னாங்க வாலிபா குஞ்சுகள் //
டபுள் மீனிங்கெல்லாம் இல்லை நண்பா...

Madhavan Srinivasagopalan said...

என்னோட கர்ச்சீப்ப காணூம்.. அப்ப நா 'எஸ்'....

எஸ்.கே said...

மிக நல்ல விமர்சனம்!

ம.தி.சுதா said...

ஃஃஃஃபடம் முழுவதும் ஹைக்கூ கவிதைகள் போல காட்சியமைப்புகள். ஃஃஃஃ

அருமையாக பார்த்து பதிந்திருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்..

அமைதி அப்பா said...

நல்ல விமர்சனம். படத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா
4 1/2 ஸ்டார் கொடுத்திருக்கிறார்கள். அண்மையில் இவ்வளவு ஸ்டார் எந்தப் படத்துக்கும் கொடுத்ததாக தெரியவில்லை.

கேரளாக்காரன் said...

சூப்பர் வாத்தியாரே இன்னிக்கு ராவோட ராவா ராவா சரக்கடிச்சுட்டு பாத்துடறேன்

pichaikaaran said...

வழக்கமாக என் கருத்தை பிரதிபலிக்கும் நீங்கள் , இதில் வித்தியாச தீர்ப்பை வழங்கி இருக்கிறீர்கள்

பரவாயில்லை..
புறக்கணிக்கப்பட வேண்டிய படம் என்பது என் கருத்து..

படம் குப்பையாக இருந்தால், உங்கள் விமர்சன ஸ்டைல் சூப்பர்

Philosophy Prabhakaran said...

@ Madhavan Srinivasagopalan
படம் நல்லா இருக்கு... பாருங்க...

@ எஸ்.கே, ம.தி.சுதா
நன்றி நண்பர்களே...

@ அமைதி அப்பா
ஆனாலும் நாலரை ஸ்டார் இந்த படத்திற்கு அதிகம் தான்... மூன்றரை கொடுக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)
சும்மா பார்த்தாலே அழுகை வருகிறது... இதில் சரக்கை அடித்துவிட்டு பார்த்தால் ஒரே களேபரம் தான்... கலக்குங்க...

@ பார்வையாளன்
// வழக்கமாக என் கருத்தை பிரதிபலிக்கும் நீங்கள் // - மகிழ்ச்சி...

// இதில் வித்தியாச தீர்ப்பை வழங்கி இருக்கிறீர்கள் // - அடடே...

// புறக்கணிக்கப்பட வேண்டிய படம் என்பது என் கருத்து.. //
மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன... எதனால் என்பதை தெளிவுப்படுத்தவும்... மிஸ்கின் உதவி இயக்குனர்களை அவதூறாக பேசியதாலா அல்லது உலகப் படத்தில் இருந்து ஆட்டையை போட்டார் என்பதாலா...

// படம் குப்பையாக இருந்தால், உங்கள் விமர்சன ஸ்டைல் சூப்பர் // - நன்றி...

கேரளாக்காரன் said...

இங்க ஒரு படைப்பும் ஓவரா பேசுது
படைப்பாளியும் ஓவரா பேசுறாரு சரிதானே

Philosophy Prabhakaran said...

@ கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)
மிஷ்கின் பற்றிய எனது கருத்தினை அழகாக இரண்டே வரியில் சொல்லிவிட்டீர்கள்... சூப்பர்...

Unknown said...

தம்பி இது ஜப்பானிய மொழிப் படமான கிகுஜிரே யின் தழுவல் என அவரே சொல்லியிருக்கிறார், ஆனால் அந்தப்படத்தில் இல்லாத உயிரோட்டம் இதில் இருக்கிறது ..

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
படம் எனக்கும் பிடித்திருக்கிறது... ஆனால் உங்களுடைய விமர்சனத்தையும் கேபிள் அண்ணனின் விமர்சனத்தையும் படித்துவிட்டு சென்றதால் நிறைய ஏமாற்றம் அடைந்தேன்... ஜப்பானிய படத்தில் இல்லாத உயிரோட்டம் உள்ளதென்றால் அதற்கு காரணம் முழுக்க முழுக்க இளையராஜா மட்டுமே...

சி.பி.செந்தில்குமார் said...

பிரபா ,விமர்சனம் அழகு.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>ஒருத்தர் கெளரவர்கள், புழல், நகரம், மகிழ்ச்சி என்று அவர் சமீபத்தில் பார்த்த படங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார். “அட்ராசக்க” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.>>>

லொள்ளு..?ம் ம் நடத்துங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>>டைட்டில் ஷாட்டை பற்றி முந்தாநாள் பேட்டியில் மிஷ்கின் சிலாகித்திருந்தார். ஆனால் அப்படி அந்தக் காட்சியில் எப்படி என்னதான் இருக்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை கலைக்கண்களோடு பார்த்தால் புரியுமோ என்னவோ...?>>>

நக்கலு?

Unknown said...

சாரி நண்பா முன்னமே பார்த்தேன், அவசர வேலை இருந்ததால் பின்னூட்டம் இட முடியவில்லை, கர்சீப் எடுத்துவிட்டு போனாலும், யாராவது பார்த்திருவாங்களோன்னு அவசர அவசரமா கண்ணீரை துடைக்க வேண்டி உள்ளது, நல்லா எழுதி இருக்கீங்க.

எப்பூடி.. said...

மிஸ்கினுக்காக இல்லாவிட்டாலும் இசைக்கடவுளின் பின்னணி இசைக்காக நிச்சயமாக நாளை காலை பார்த்து விடுவேன், உங்கள் விமர்சனம் நேர்த்தியாக உள்ளது.

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் விமர்சனத்தில் நாளுக்கு நாள் மெருகு கூடுகிறது வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
என்ன பண்றது...? ஒவ்வொரு விமர்சனம் எழுதும்போதும் என்னை அறியாமல் என் கைகள் உங்களை நக்கலடிக்கும் விதமாக டைப்படிக்கிறது...

நீங்கள் படம் பார்த்துவிட்டீர்களா.... ஆமாம் மொக்கை படங்களையெல்லாம் பாக்குறீங்க... இதைப் பாக்க மாட்டீங்களா...

போன வாரம் நடந்த பதிவர் சந்திப்புக்கு ஏன் வரவில்லை...?

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
ஆஹா... நானெல்லாம் அப்படி இல்லை... யார் பார்த்தாலும் பரவாயில்லை என்று மனதுவிட்டு அழுதுடுவேன்...

@ எப்பூடி..
ம்ம்ம்... பாருங்க... உங்க விமர்சனத்துக்காக வெயிட்டிங்...

சிநேகிதன் அக்பர் said...

எதார்த்தமான விமர்சனம்.

NaSo said...

அப்போ மற்றுமொரு உலகப் படமா?

Philosophy Prabhakaran said...

@ சிநேகிதன் அக்பர்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிநேகிதரே...

@ நாகராஜசோழன் MA
உலகப்பட காப்பி என்று வேண்டுமானால் சொல்லலாம்... இதை எல்லாம் உலகப்பட விழாவுக்கு அனுப்பினால் தமிழன் மானம் கப்பலேறும்... சும்மா நம்ம ஊருக்குள்ளேயே ரசிச்சுக்க வேண்டியது தான்...

Ramesh said...

நல்ல விமர்சனம்..

Chitra said...

.... Very nice review.

சாமக்கோடங்கி said...

முதல் முறையாக உங்கள் பகுதிக்கு வருகிறேன்.. சூப்பரா இருக்கு விமர்சனம்.. தொடருங்கள்..

நன்றி..
சாமக்கோடங்கி..

Sivakumar said...

நேற்று நீங்கள் அழைத்தும் என்னால் படம் பார்க்க வர இயலவில்லை. என்னை பொறுத்தவரை மற்றவரின் படத்தை அவர்களின் அனுமதி இன்றி ஒரு ஸ்டில்லை உருவினாலும் குற்றம் குற்றமே! இந்த இன்ஸ்பிரேசன் அப்டின்னு சொல்ற ஈர வெங்காயம் எல்லாம் சப்பைக்கட்டு பிரபா. இளையராஜா போன்ற கலைஞன் இது கிகுஜிரோ எனும் ஜப்பானிய படத்தின் உருவல் என்று தெரிந்து இசை அமைத்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அஞ்சாதே trade படத்தின் அலேக் என்றும் யுத்தம் செய் Memories of Murder படத்தின் அலேக் என்றும் கேள்விப்பட்டதில் இருந்து மிஸ்கின் படத்தை இனி வாழ்நாளில் பார்க்கப்போவதில்லை. அமீர் மீது வைத்திருந்த மதிப்பும் 'யோகி Tsotsi படத்தின் அப்பட்டமான உருவல் என்று தெரிந்ததும்' போய் விட்டது. மிஞ்சி இருப்பது பாலா மட்டுமே. சாதாரண கமெர்சியல் தமிழ் படமோ அல்லது 127 ஹவர்ஸ் வந்தாலோ கண்டிப்பாக உங்களுடன் வருகிறேன். உங்களை புகைப்படத்தில் பார்ப்பதற்கும்....எழுத்து வீச்சிற்கும் பெரிய வித்யாசம் உள்ளது. தொடரட்டும் இந்த பயணம்! கிகுஜிரோ டி வி டி கிடைத்தால் சொல்லுங்கள். நானும் முயற்சி செய்கிறேன். நன்றி!

Unknown said...

அடுத்த வாரம்தான் படம் பார்க்கனும்..

விமர்சனம் சூப்பர்..

Unknown said...

இசையைப் பற்றி என்ன சொல்லப்போறீங்க என எதிர்பார்த்து வந்தேன். நல்லவே சொன்னீங்க. நன்றி..

Philosophy Prabhakaran said...

@ பிரியமுடன் ரமேஷ், Chitra
நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

@ சாமக்கோடங்கி
// முதல் முறையாக உங்கள் பகுதிக்கு வருகிறேன்.. சூப்பரா இருக்கு விமர்சனம்.. தொடருங்கள்.. //

உங்களிடம் இருந்து வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Unknown said...

//மிஸ்கினுக்காக இல்லாவிட்டாலும் இசைக்கடவுளின் பின்னணி இசைக்காக நிச்சயமாக நாளை காலை பார்த்து விடுவேன்,//

Philosophy Prabhakaran said...

@ சிவகுமார்
// நேற்று நீங்கள் அழைத்தும் என்னால் படம் பார்க்க வர இயலவில்லை. //
பரவாயில்லை நண்பரே... கூடிய விரைவில் சந்திப்போம்...

// என்னை பொறுத்தவரை மற்றவரின் படத்தை அவர்களின் அனுமதி இன்றி ஒரு ஸ்டில்லை உருவினாலும் குற்றம் குற்றமே! இந்த இன்ஸ்பிரேசன் அப்டின்னு சொல்ற ஈர வெங்காயம் எல்லாம் சப்பைக்கட்டு பிரபா. //
உங்களது வாதம் மிகவும் நியாயமானதாக இருக்கும் வேளையில் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... இருப்பினும் சிறு எண்ணம்... உலகப்படங்கள் காணக்கிடைக்காத பாமர மக்களுக்கு மிஷ்கின் போன்றவர்களின் படங்கள் சென்றடைந்தால் மகிழ்ச்சி தானே...

// உங்களை புகைப்படத்தில் பார்ப்பதற்கும்....எழுத்து வீச்சிற்கும் பெரிய வித்யாசம் உள்ளது. //
ம்ம்ம்... :) இங்கேயும் அதே எண்ணம் தான்... உங்களின் எழுத்துக்களை படிக்கும் போது ஜாலி பதிவரென்றே நினைத்தேன்... ஆனால் பேசும்போது உங்கள் குரலில் சமூகக்கோபம் எக்கச்சக்கமாக தெரிந்தது... அது சரிதான் என்று நீங்கள் என்னை "சோ" பேட்டி பார்க்கச் சொன்னபோது கன்பார்ம் செய்துக்கொண்டேன்...

// கிகுஜிரோ டி வி டி கிடைத்தால் சொல்லுங்கள் //
டி.வி.டி. கிடைப்பது கடினம்... டோரன்ட் லிங்க் முயற்சி செய்யுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ பதிவுலகில் பாபு, பாரத்... பாரதி...
தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே...

Anonymous said...

பிரபா, இந்த லிங்க்கை பாருங்கள்.... http://kuzhali.blogspot.com/2010/11/blog-post_27.html . எப்போதாவது தமிழில் ஒரு நல்ல படம் வந்தாலும் அது உருவல் படமாகவே இருக்கும் என்பதை நிரூபித்து இருக்கிறது. //இருப்பினும் சிறு எண்ணம்... உலகப்படங்கள் காணக்கிடைக்காத பாமர மக்களுக்கு மிஷ்கின் போன்றவர்களின் படங்கள் சென்றடைந்தால் மகிழ்ச்சி தானே...// இல்லை பிரபா. அப்படிதான் நானும் எண்ணினேன். ஆனால் சில வருடங்களாக அயல்நாட்டு படங்களை நான் பார்ப்பதோடு, என் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பலருக்கு அவற்றை பரிந்துரை செய்தேன். ஆரம்பத்தில் அவர்கள் தயங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களில் பலர் நல்ல ஆங்கில/உலக சினிமாக்களை பார்க்க தொடங்கிவிட்டனர். சிறு வித்தை இன்று ஒரு செடியாகி உள்ளதில் எனக்கு திருப்தியே. எப்படி ஒரு கலப்பட பொருளை வாங்க தயங்குவோமா அப்படியே இதையும் செய்வோம். தெரிந்தே நாம் ஏமாற வேண்டாம்.

Anonymous said...

Correction: சிறு வித்தை இன்று ஒரு செடியாகி உள்ளதில் எனக்கு திருப்தியே //சிறு விதை இன்று ஒரு செடியாகி உள்ளதில் எனக்கு திருப்தியே//.

BoobalaArun said...

//ஊனமுற்றவரின் காலுக்கு கட்டு போட்டுவிட்டு தாங்கி தாங்கி நடந்துபோகும் மருத்துவச்சி//

படம் இன்னும் பாக்கல. ஆனா இந்த இடத்துல மருத்துவச்சியை தனியாக இசையை போட்டு காட்டி இருந்தால் அது வழக்கம். இசை இல்லாமல் அதை ஒரு பொருட்டாக காட்டாமல் பின்னணியாக காட்டினால் அது தான் வித்தியாசம்.

இந்த படத்துல எப்படி காட்டினாரு நம்ம மிஸ்கின்???

சர்பத் said...

அது என்னவோ இந்த மாதிரி சோக படங்கள் பார்க்கவே மனம் மறுக்கிறது. படம் பார்ப்பதே இருக்கும் பிரச்சினைகளை ஒரு இரண்டு மணி நேரமாவது மறப்பதற்கு தானே? ஆனால் பார்க்க வேண்டிய படம் தான், பார்த்துவிட வேண்டியது தான்.

Philosophy Prabhakaran said...

// இந்த லிங்க்கை பாருங்கள்... //
பார்த்தேன்... ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது...

இரவு வானம் என்ற பதிவர் தனது வலைப்பதிவில் எழுதிய வரிகள்:
இது ஜப்பான் படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள், அதே ஜப்பான் படத்தை சப் டைட்டிலுடன் திரையிட்டால் எவ்வளவு பேர் சிலாகிக்க முடியும்? எத்தனை பேருக்கு புரியும்? எது எப்படி இருந்தாலும் மிஸ்கினின் இந்த படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

இதை நானும் ஆமோதிக்கிறேன்...

// என் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பலருக்கு அவற்றை பரிந்துரை செய்தேன். ஆரம்பத்தில் அவர்கள் தயங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களில் பலர் நல்ல ஆங்கில/உலக சினிமாக்களை பார்க்க தொடங்கிவிட்டனர் //
நல்ல விஷயம் தான்... நானும் முயல்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ WiNnY...
// படம் இன்னும் பாக்கல. ஆனா இந்த இடத்துல மருத்துவச்சியை தனியாக இசையை போட்டு காட்டி இருந்தால் அது வழக்கம். இசை இல்லாமல் அதை ஒரு பொருட்டாக காட்டாமல் பின்னணியாக காட்டினால் அது தான் வித்தியாசம். //

நீங்கள் குறிப்பிட்டது போல வித்தியாசமாகவே காட்டினார் மிஷ்கின்...

'பரிவை' சே.குமார் said...

ராஜாவின் இசையில் பாடல்களை பலமுறை கேட்டாச்சு....
சோகம் இழைந்தோடும் எலிலே... படத்தில் இல்லையா?
அருமையான விமர்சனம்.

Philosophy Prabhakaran said...

@ சர்பத்
// படம் பார்ப்பதே இருக்கும் பிரச்சினைகளை ஒரு இரண்டு மணி நேரமாவது மறப்பதற்கு தானே? //
நியாயம் தான்... ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற படங்கள் நமக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கும்... உதாரணத்திற்கு இந்தப் படத்தில், உங்களிடமும் என்னிடமும் இல்லாத மனிதாபிமானம் ஒரு சிறுவனிடமும் மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒரு மனிதனிடமும் இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
வாங்க குமார்...
எலிலே சோகம் இழைந்தோடும் பாடலா...?

BoobalaArun said...

சரி படம் பாக்க நான் தயாராகிவிட்டேன்.

இப்ப தாங்க "அஞ்சாதே" படத்த பாக்க போறேன். பாத்துட்டு சொல்றேன்.

Philosophy Prabhakaran said...

@ WiNnY...
// சரி படம் பாக்க நான் தயாராகிவிட்டேன்.
இப்ப தாங்க "அஞ்சாதே" படத்த பாக்க போறேன். பாத்துட்டு சொல்றேன். //

பாருங்க... ஆனா நந்தலாலாவும் அஞ்சாதே மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்து போகாதீங்க...

அன்பரசன் said...

நல்ல விமர்சனம்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்ல விமர்சனம்! தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..

Unknown said...

உங்கள் விமர்சனம் அருமை நன்றி.

என்னதான் அருமையான படம் என்றாலும் இந்த director உண்மையிலேயே அப்படிதான்(கேரக்டராக இல்லாமல்) இருக்கிறாரா?

சான்சு கிடைக்கரவரைக்கும் அழுதுபுலம்புவது, கிடைத்து கொஞ்சம் வெற்றியை பார்த்து விட்டால் நான் தான் சிறந்தவன் என்று தனக்கு தானே மொட்டை அடித்துக்கொள்வது.

அது சரி அது என்ன கலைக்கண் = மாலைக்கண் மாதிரியோ>
pls விளக்கவும்.

Philosophy Prabhakaran said...

@ அன்பரசன், பிரஷா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

@ விக்கி உலகம்
// என்னதான் அருமையான படம் என்றாலும் இந்த director உண்மையிலேயே அப்படிதான் (கேரக்டராக இல்லாமல்) இருக்கிறாரா? //
அப்படித்தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க...

// சான்சு கிடைக்கரவரைக்கும் அழுதுபுலம்புவது, கிடைத்து கொஞ்சம் வெற்றியை பார்த்து விட்டால் நான் தான் சிறந்தவன் என்று தனக்கு தானே மொட்டை அடித்துக்கொள்வது. //
நீங்க என்னையா சொல்றீங்க...???

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ்மணத்தில் இந்த வாரமும் 11-வது இடம். வாழ்த்துக்கள்.

Unknown said...

padam appattamaana kaappithan.eduththa vitham super.atellaam rasikkura manappakkuvam venum.thamizh makkalukku irukku.muthal naale padam paarththuvitten.marupadiyum kudumbaththudan paarkkanum.

புலிகுட்டி said...

படம் எப்படி வேனாலும் இருந்துட்டு போகட்டும்.டைடில் போடூம் போது கதை,திரைக்கதைனு யார் பெயரை போடாங்கனு பார்த்திங்களா?.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

karthikkumar said...

பின்னூட்டமிடும் இந்த நேரத்தில்தான் உங்கள் விமர்சனத்தை படிக்கிறேன் நண்பா. ஏனென்றால் படம் பார்த்துவிட்டு படிக்கலாமே என்று இருந்தேன். அதனால்தான் தாமதம். இப்போது படம் பார்த்துவிட்டேன்.விமர்சனம் நன்று. மிஸ்கின் இதுபோன்ற படங்கள் கொடுக்கும்போது அவர் பேசலாமே

karthikkumar said...

philosophy prabhakaran
@ சர்பத்
// படம் பார்ப்பதே இருக்கும் பிரச்சினைகளை ஒரு இரண்டு மணி நேரமாவது மறப்பதற்கு தானே? //
நியாயம் தான்... ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற படங்கள் நமக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கும்... உதாரணத்திற்கு இந்தப் படத்தில், உங்களிடமும் என்னிடமும் இல்லாத மனிதாபிமானம் ஒரு சிறுவனிடமும் மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒரு மனிதனிடமும் இருக்கிறது...///
மிக சரி

Unknown said...

உங்கள சொல்லல தம்பி. இந்த அறிவாளி டைரடக்கருகள சொன்னேன்.

Philosophy Prabhakaran said...

@ ரஹீம் கஸாலி
தகவல் சொன்னதற்கு நன்றி...

@ thamizhan
எனக்கு கூட குடும்பத்தினரை படம் பார்க்க செய்யவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ புலிகுட்டி
// படம் எப்படி வேனாலும் இருந்துட்டு போகட்டும்.டைடில் போடூம் போது கதை,திரைக்கதைனு யார் பெயரை போடாங்கனு பார்த்திங்களா?.நான் இன்னும் படம் பார்க்கவில்லை. //

மிஷ்கின் பெயரைத் தான் போடுகிறார்கள்...

Philosophy Prabhakaran said...

@ karthikkumar
// மிஸ்கின் இதுபோன்ற படங்கள் கொடுக்கும்போது அவர் பேசலாமே //

இது காப்பி அடித்த படம் என்று உங்களுக்கு தெரியாது போல...

@ விக்கி உலகம்
// உங்கள சொல்லல தம்பி. இந்த அறிவாளி டைரடக்கருகள சொன்னேன். //

நல்லது...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

பிரபாகர் மச்சி நீ விருப்ப பட்ட, எனக்கு புடிச்ச கமல் பத்து படங்கள் தொடர் பதிவு போஸ்ட் பண்ணியாச்சு . தெடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள் பல . . . .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/10-philosophy.html

thanks
rockzs

shanmugavel said...

படத்த பாத்துடுவோம்

Philosophy Prabhakaran said...

@ ♔ℜockzs ℜajesℌ♔™
பார்த்தேன் நண்பா... தொடர் பதிவு எழுதியமைக்கு நன்றி...

@ shanmugavel
கண்டிப்பா பாருங்க... நன்றி...

அருண் பிரசாத் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html

நன்றி.

Anonymous said...

Why is everyone so upset about inspirations from other language movies. people like me wud like to watch such movies wid a touch of our culture in it rather than the slow moving originals. I hv already watched Kikujiro and Nandalala.

When u say that u have not watched kikujiro but know that nandalala is a inspiration thro other people's word, it means u r viewing it thro other ppls view. Is that not a robbery? The least u can do s at least watch both d movies and then decide..

I belive that Nandalala is a classic, try not to discourage producing gud movie