வணக்கம் மக்களே…
நம் தமிழ்மொழிக்கு இணையாக காதிலே தேனை வார்க்கக்கூடிய மொழி என்றால் அது மலையாளம் என்று சொல்லலாம். நான் வேலை பார்த்த அலுவலகத்தில் மலையாள ப்ராசஸ் ஒன்று இருந்ததால் எனக்கும் அடிக்கடி அந்த தேனை ருசிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
நான் மட்டுமல்ல பொதுவாக நம்மூரில் எல்லோருமே மலையாளிகளின் பேச்சை விரும்புவார்கள். ஆனால், மலையாளிகள் பேசும் ஆங்கிலத்தை...? நம்மூரில் பொதுவாக மலையாளிகள் பேசும் ஆங்கிலம் என்றால் கிண்டல் தான். (என்னவோ இவனுங்க எல்லாம் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டில படிச்சிட்டு வந்தவுனங்கன்னு நெனப்பு). குறிப்பாக அவர்கள் ஓ போடும் விதம். அதாங்க ஆயிலை ஓயில் என்று கூறுவதும், ஆபிஸை ஒபீஸ் என்று கூறுவதும். இவ்வாறாக எனது அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவரை தமிழர்கள் ஏகத்துக்கும் நக்கலடிப்பார்கள். ஒருநாள், கொஞ்சம் சத்தமாக அவர் காதுபட கலாய்த்துவிட்டார்கள். மனிதர் கொஞ்சம் கூட கோபப்படவில்லை. மாறாக அதற்கான காரணத்தை குறிப்பிட்டார். அதாவது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கு முன்னதாக பதினாறாம் நூற்றாண்டில் கேரளாவில் போர்ச்சுகீஸ் ராஜாங்கம் நடந்து வந்தது. அவர்களின் வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பே இப்பொழுது தங்களுக்கும் தொடர்வதாக கூறினார். அன்றிலிருந்து யாரும் அவரை கிண்டலாடிப்பது இல்லை.
நான் கல்லூரியில் படித்தபோது நடைபெற்ற ஒரு சம்பவம். விடுதியில் நண்பர்கள் பலர் ஒன்றுகூடி “நான் கடவுள்” திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தோம். (திருட்டு டி.வி.டி தான்). எங்களுடன் மலையாள நண்பன் ஒருவனும் படம் பார்த்துக்கொண்டிருந்தான். படத்தில் ஒரு வசனம், “மாட்டுக்கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை”. இந்த வசனத்தை எழுதியவர், நம்ம அறிவு ஜீவி, தத்துவ ஞானி, ஜெயமோகன் அவர்கள். இந்த வசனத்தை கேட்டதும் நண்பர்கள் அந்த மலையாள நண்பனை வறுத்தெடுத்து வருத்தப்பட வைத்துவிட்டார்கள். அந்தப்படம் மட்டுமல்ல நிறைய தமிழ் சினிமாக்களில் மலையாளிகளை கேவலப்படுத்தி காட்டுவார்கள். அரைகுறை ஆடையுடன் வரும் டீக்கடை நாயரின் மனைவிகள் தமிழ் சினிமாவில் பிரசித்தம். (அதற்கு மலையாளிகளும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களின் படங்களிலும் தமிழனை அழுக்கு பிடித்தவனாக சித்தரிப்பதுண்டு).
இதுப்போன்ற திரைக் காட்சிகளையோ, கிண்டல்களையோ நான் எப்போதுமே விரும்புவதில்லை. எனது கண்ணோட்டத்தின் படி, கேரளா என்றால் படிப்பறிவில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக விளங்கும் ஒரு மாநிலம். ஆனால், நேற்று வெளிவந்த ஒரு செய்தியில் மலையாளிகள் மேல் நான் வைத்திருந்த மலையளவு மரியாதை ஏகத்துக்கும் குறைந்துவிட்டது. அந்த கொடுமையை நீங்களே பாருங்க.
தமிழர்கள் கூட இப்படி ஒரு மானங்கெட்ட செயலை செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
76 comments:
ஹஹஅஹா பார்த்தேன்
மலையாளிகளில் சில முட்டாள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அந்த இணைப்பை பார்த்ததும் தெரிந்தது
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
மிகவும் ரசித்தவை
//(என்னவோ இவனுங்க எல்லாம் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டில படிச்சிட்டு வந்தவுனங்கன்னு நெனப்பு)//
//(திருட்டு டி.வி.டி தான்)//
//அரைகுறை ஆடையுடன் வரும் டீக்கடை நாயரின் மனைவிகள் தமிழ் சினிமாவில் பிரசித்தம்//
//தமிழர்கள் கூட இப்படி ஒரு மானங்கெட்ட செயலை செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.//
அட Click செய்தா பிறகு தான் தெரியுது , , நீங்களும் நம்மோட கட்சி தான். ;))
படம் அசத்தல் பிரபா
நான் கூறிய படம் கோபிகாவினுடையது
ஹா ஹா :))
:) :)
நினைத்தேன் நண்பா.. உன் கோவத்திற்கு இது தான் காரணமாக இருக்கும் என்று...
//அரைகுறை ஆடையுடன் வரும் டீக்கடை நாயரின் மனைவிகள் தமிழ் சினிமாவில் பிரசித்தம்//
//
நம்ம மக்களாவது மலையாளியை இப்படி காட்டுகிறார்கள்.. ஆனால் அவர்கள் இன்னும் கேவலமாக காட்டுவதுண்டு,
பாஸு... குஸ்புவுக்கு கோவில் கட்டுன ஊரல்லவா நம்ம ஊரு வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே
ச்சே! என்ன கொடுமை இது?
நான் கூட மலையாளிகள் மேல் ஒரு மரியாதை வைத்திருந்தேன்...
ஆனா சமீப காலமாகவே அவர்களும் டாகுடரின் படங்களை விரும்புகிறார்கள் என்றதும்..எனைத்த சொல்ல? முடியல!
இது ஒரு கலாச்சார அதிர்ச்சி!
ச்சே! ஏண்டா பார்த்தோம் ன்னு இருக்கு!
one this is very clear .. ne 'o'oficele vela pakala malayala ponu pathueruka.. sari ne fitst paragraphla yaro oru malayala fig kuda pasura vaipu kedichadunu sona aparam yana achu andha fig ?
ம்ம் ம்ம்.. என்ன சொல்ல..?
விடுங்க சார், என்ன படிச்சி என்ன பிரயோஜனம், அவங்க சாவ அவங்களே தேடிக்கிறாங்க
இதுக்கு தான இவ்ளோ பில்ட் அப்.. ஹி ஹி
ஐயையோ ஐயையோ என் கண்ணு நொள்ளையா போச்சு .இனைப்ப குடுத்து கண்ணுக்கு போற நரம்பு இனைப்ப துண்டிச்சுட்டீங்களே
விடுங்க பாஸு. ஆனா ஒரு டவுட்டு மம்முட்டி மோகன்லால விட விஜய் அங்க என்னத்த செஞ்சார்?
இனிமேல் டாகுடரு படம் ரிலீஸ் ஆனா இரண்டு மாநில மக்களுக்கும் கஷ்டம்!
இணைப்பை பார்த்ததும் மலையாளிகளில் சில முட்டாள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று தெரிந்தது.
நானும் கொஞ்ச நாளா பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன், டாகுடரப் பத்தி கேரளா நியூசு ரெகுலரா வந்துக்கிட்டு இருக்கு, இதெல்லாம் இயல்பா நடக்குதா, இல்ல தமிழ்னாட்டுல அசிங்கப்படுத்துறாய்ங்கன்னு, டாகுடரும் நைனாவும் திட்டம் போட்டு ஏதாவ்து பண்ணிக்கிட்டு இருக்கானுங்களா?
“மாட்டுக்கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை”/////
இதுக்காக தான் அந்த வசனம்.வெளங்கிரும் .
“மாட்டுக்கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை”
ஒருவேளை தொடர்ந்து மாட்டுக்கறி சாப்பிட்டு இப்பிடி ஆகிட்டாங்களா?
வேற ஒரு நல்ல கட்டையப் போட்டிருக்கலாம், மேல படத்தச் சொன்னேங்க!
இணைப்பை சொடுக்கும் வரை மலையாளிகள் மீது கோவத்தில் இருந்த நான் படத்தை பார்த்து கொலைவெறி ஆகிவிட்டேன் ...
உங்களுக்கான கோவம் நியாயமானதே
எப்பிடிங்க இப்பிடி ஆனாங்க? இன்னிக்கு நாளே அப்செட் ஆகிடிச்சு! இன்னும் மனசு ஆறல!
ஒருவேளை டாகுடரும், அவங்கப்பாவும் ஏதாவது காசு குடுத்து, புதுசா ப்ளான் பண்றாங்களோ?
ஹா..ஹா..ஹா...
வேற ஒரு நல்ல கட்டையப் போட்டிருக்கலாம், மேல படத்தச் சொன்னேங்க//
ஸேம் பிளட்...
அய்யோ இது என்ன கொடுமை!
ஹா ஹா ஹா.. நினைச்சேன் இப்படி எதையாவது கடைசில காட்டுவீங்கன்னு..
ஆனாலும் நீங்க சப்போர்ட் பண்றதைப் பார்த்தா ஏதோ மலையாள பிகரை கரெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கமாதிரி தெரியுதே.. :-)
சந்தேகமே இல்லாமல் இது ஒரு சில விசில் அடிச்சான் குஞ்சுகளின் வேலையோ அல்லது தூண்டுதலின் காரணாமாகவோ இருக்குமே தவிர வேறில்லை. கோயில்/சிலை வைப்பவன் என்னை பொறுத்தவரை எவ்வளவோ மேல். என் என்றால் அவன் தன் செயலை ஊருக்கு பகிரங்கமாக தெரிவிக்கிறான்(முட்டாள்தனம் என்றாலும்). ஆனால் ரத்தம் சிந்தி சம்பாதித்த மாத சம்பளத்தை ஒரே ஒரு திரைப்படத்தின் முதல் காட்சிக்காக வீணடிப்பவனை விட இவர்கள் மேல்.
:-))
முதலில் குழம்பி விட்டேன்!
// குறிப்பாக அவர்கள் ஓ போடும் விதம். அதாங்க ஆயிலை ஓயில் என்று கூறுவதும், ஆபிஸை ஒபீஸ் என்று கூறுவதும்//
இந்தியாவின் வேறு மானிலங்களில் இலங்கையில் கூட இப்படித்தான் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்கிறார்கள் என்பதோடு உடன்பட மறுக்கிறேன் நண்பா.. காரணம் ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்தில் கூட ஆயில்,ஆபிஸ் என உச்சரிப்பது கிடையாது..
மலையாளிகள் என்றால் தமிழனை விட அறிவாளிகள், எபோதும் படித்துக்கொண்டே இருப்பார்கள் ... மசாலா படம் பார்க்க மாட்டர்கள் என்பதெல்லாம் இங்கு நிலவும் மாயைதான்.. அங்கு போய் ஒரு மாதம் இருந்து வந்தால் இது மாறும்...
ஆனால் அது எல்லோராலும் முடியாது என்ற நிலையில், இது போன்ற பதிவுகள் உண்மை நிலையை உணர்த்த உதவும்..
மலையாளிகளை தரக்குறைவாக கிண்டல் செய்வதும் தவறு, ஓவராக புகழ்வதும் தவறு
காலத்தால் அழியாப் புகழ்கொண்ட எங்கள் வேந்தன், மன்னன், டாக்டர், எஞ்சினியர், பைலட், தததபத.....ஏதோ ஒன்னு, இப்பிடி பல புனைப்பெயர்ர் கொண்ட தன்மானத் 'டமிழன்' எஸ்.எ.சியின் இதயக்கனி, பதிவுகளின் காமடிக்கனி, மொக்கை எஸ்.எம்.எஸ் களின் உறைவிடம் அண்ணன் விஜைக்கு சிலை வைத்ததை கிண்டலடித்த உங்களுக்கு என் கண்டனங்கள்.
விஜய்க்கு ஒபாமா வீட்டு கழிவறையில் சிலை வைக்கு மட்டும் நாங்கள் ஓயப்போவதில்லை.
உயிர் விஜய்க்கு, உடம்பு எஸ்.ஏ.சிக்கு.
இப்படிக்கு
எ.ப.தோ.சூ.சொ.இ.ச (எத்தனை படம் தோற்றாலும் சூடு சொரணை இல்லாதோர் சங்கம். )
@ Riyas
//இந்தியாவின் வேறு மானிலங்களில் இலங்கையில் கூட இப்படித்தான் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்கிறார்கள் என்பதோடு உடன்பட மறுக்கிறேன் நண்பா.. காரணம் ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்தில் கூட ஆயில்,ஆபிஸ் என உச்சரிப்பது கிடையாது..//
it's true.
இது மிகவும் கண்டிக்கதக்கது பிரபாகரன்..
இதற்கு பதிவுலக நண்பரிடத்து நீங்கள் கட்டாயமாக மன்னிப்பு கோரவண்டும்.. பதிவுலக நண்பர் மட்டுமின்றி அவர்களது உறவினர்கள், சகாக்கள் என அனைவரிடத்தும் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என தெரியவில்லை.. எல்லாத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது.. ஒரு மனிதனை இப்படியா கொடுமை படுத்துவது.. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள், தடைகற்கள் தாண்டி இந்த நிலைமை... இருந்தும் உங்கள் செயல்களால் அந்த மனிதன் இன்னும் அதிகமாக சோகத்தில் ஆழ்ந்துள்ளார்...
அந்த மனிதன் நான் தான்.. ஏற்கனவே வேறு ஒரு தளத்தில் இதை பார்த்துவிட்டு மிகவும் எரிச்சலோடு நம்ம பய பிரபாகரன் கண்ணுக்கு குளிர்ச்சியா ஏதாவது எழுதியிருப்பார்னு என் குடும்பத்தையே கூட்டி வச்சி உங்க பதிவ துறந்தால் இப்படி ஒரு கொடுமையை செய்துவிட்டீர்கள்... இதெல்லாம் ஒரு இணைப்புன்னு ஒரு பதிவ வேற வீண்டிச்சீங்கள்ள... இப்ப மலையாளிகல விட உங்க மேல தான் எனக்கு கோபம் அதிகமா இருக்கு.. உங்க மேல எப்படி ஒரு மரியாத வச்சியிருந்தன்.. அந்த சர்கஸ் காரன பத்தி எழுதி உங்க மரியாதைய குறச்சிகிட்டீங்க.. இந்த இணைப்ப வேற பாத்து எங்க ஏரியாவுல நாளு பேர் நாக்கு தள்ளி, உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க.. உயிர் இழப்பு நேர்ந்தால் நீங்கள் சிறைக்கு செல்வது உறுதி...
கடுப்பேத்துறார் மை லார்ட்...
அன்புடைய பதிவருக்கு வணக்கம்,
தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...
அன்புடன்,
வலைச்சரம் நிர்வாகம்.
//சமீபத்தில் ஒத்தப்பாலம் அருகே தனது காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் இந்த சிலையை ஒரு தேரில் வைத்து இழுத்து //
முழு செய்தியை இங்கு காணலாம்
http://thatstamil.oneindia.in/movies/news/2010/11/29-actor-vijay-statue-kerala.html
ஒத்தப்பாலம் என்ற இடத்தில சிலை வைத்து உளதாக இந்த செய்தில் உளது . ஒத்தப்பாலம் பகுதில் நிறைய தமிழர்களும் உள்ளார்கள் . இந்த சிலை வைத்தது தமிழர்களா இல்லை மலையாளி என்று தெரிய வில்லை .
குறிப்பு : கேரளாவில் விஜய் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. மலையாள தொலை கட்சி பார்த்தாலே தெரியும்.
அய்யோ சாமிகளா!!!! என்னை விட்டுருங்க!
@ LK, ரஹீம் கஸாலி, Chitra, nis, Balaji saravana, அன்பரசன், வெறும்பய, தமிழ் செல்வன், ஜீ..., karthik, தங்கம்பழனி, இரவு வானம், Arun Prasath, நா.மணிவண்ணன், karthikkumar, நாகராஜசோழன் MA, சே.குமார், பன்னிக்குட்டி ராம்சாமி, மண்டையன், FARHAN, அருண் பிரசாத், பதிவுலகில் பாபு, சிவகுமார், எஸ்.கே, Riyas, பார்வையாளன், எப்பூடி.., தம்பி கூர்மதியன், VALAICHARAM, Anonymous, சிவா என்கிற சிவராம்குமார்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...
@ nis
// அட Click செய்தா பிறகு தான் தெரியுது , , நீங்களும் நம்மோட கட்சி தான். ;)) //
என்னது கட்சியா...? அவ்வ்வ்வ்... முடியல...
// படம் அசத்தல் பிரபா - நான் கூறிய படம் கோபிகாவினுடையது //
அதானே... நான்கூட விஜயை தான் சொல்றீங்களோன்னு நெனச்சு பதறிட்டேன்...
@ வெறும்பய
// நம்ம மக்களாவது மலையாளியை இப்படி காட்டுகிறார்கள்.. ஆனால் அவர்கள் இன்னும் கேவலமாக காட்டுவதுண்டு, //
அப்படியா... நான் கேள்விப்பட்ட சில கருத்துக்களை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன்... மன்னிக்கவும்...
@ தமிழ் செல்வன்
// பாஸு... குஸ்புவுக்கு கோவில் கட்டுன ஊரல்லவா நம்ம ஊரு வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே //
நெஞ்சு குமுறுது... ஞாபகப்படுத்தாதீங்க...
@ ஜீ...
// எப்பிடிங்க இப்பிடி ஆனாங்க? இன்னிக்கு நாளே அப்செட் ஆகிடிச்சு! இன்னும் மனசு ஆறல! //
நீங்க கடுமையா பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு உங்களுடைய பின்னூட்டங்களை பார்த்தாலே தெரிகிறது... Take Care...
// “மாட்டுக்கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை”
ஒருவேளை தொடர்ந்து மாட்டுக்கறி சாப்பிட்டு இப்பிடி ஆகிட்டாங்களா? //
இருந்தாலும் இருக்கும்...
// ஒருவேளை டாகுடரும், அவங்கப்பாவும் ஏதாவது காசு குடுத்து, புதுசா ப்ளான் பண்றாங்களோ? //
ஆஹா.... நான் இதை யோசிக்கவே இல்லையே...
@ karthik
// sari ne fitst paragraphla yaro oru malayala fig kuda pasura vaipu kedichadunu sona aparam yana achu andha fig ? //
அது மலையாளக்கரையோரம் ஒதுங்கிவிட்டது நண்பா...
@ நா.மணிவண்ணன்
// ஐயையோ ஐயையோ என் கண்ணு நொள்ளையா போச்சு .இனைப்ப குடுத்து கண்ணுக்கு போற நரம்பு இனைப்ப துண்டிச்சுட்டீங்களே //
ஒரு எச்சரிக்கை கூட இல்லாமல் இணைப்பை சொடுக்கவும்னு போட்டதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// டாகுடரும் நைனாவும் திட்டம் போட்டு ஏதாவ்து பண்ணிக்கிட்டு இருக்கானுங்களா? //
நீங்க சொல்ற மாதிரி இருக்கலாம் பன்னிக்குட்டி... நான் இதுபற்றி யோசிக்கவே இல்லை...
// வேற ஒரு நல்ல கட்டையப் போட்டிருக்கலாம், மேல படத்தச் சொன்னேங்க! //
தேடிப்பார்த்தேன்... கிடைக்கவில்லை...
@ பதிவுலகில் பாபு
// ஆனாலும் நீங்க சப்போர்ட் பண்றதைப் பார்த்தா ஏதோ மலையாள பிகரை கரெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கமாதிரி தெரியுதே.. :-) //
அய்யய்யோ அதெல்லாம் ஒன்றும் இல்லை...
மேலும் உங்களுக்கு ஒரு உண்மை தெரியாது... Almost மலையாள பெண்கள் அனைவருமே தமிழனை ஏறெடுத்துக்கூட பார்க்கமாட்டாள்... மனுசுகுள்ளே காதல் வந்துச்சான்னு பாடுறதெல்லாம் சினிமாவுல மட்டும்தான்...
// குறிப்பாக அவர்கள் ஓ போடும் விதம். அதாங்க ஆயிலை ஓயில் என்று கூறுவதும், ஆபிஸை ஒபீஸ் என்று கூறுவதும்//
மன்னிக்கவும் அவர் சரியாகத்தான் உச்சரிகின்றார் " வெட்கப்பட வேண்டியவர்கள் நீங்கள் தான், உலகத்திலேயே ஆங்கிலத்தை மிக மோசமாக உச்சரிப்பவர்கள் இந்தியர்கள் தான்
தவறாக பேசுவது மட்டுமல்லாமல் சரியாக பேசுபவரை நக்கலடிப்பது என்ன ஒரு மனநிலை. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் இது சர்வதேசரீதியாக நக்கலடிக்கபடுவது உங்களின் உச்சரிப்புதான்
from suresh
@ Riyas
// இந்தியாவின் வேறு மானிலங்களில் இலங்கையில் கூட இப்படித்தான் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்கிறார்கள் என்பதோடு உடன்பட மறுக்கிறேன் நண்பா.. காரணம் ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்தில் கூட ஆயில்,ஆபிஸ் என உச்சரிப்பது கிடையாது.. //
அப்படியா நண்பா... உங்களுடைய தகவலுக்கு நன்றி... ஏற்றுக்கொள்கிறேன்...
@ பார்வையாளன்
// மசாலா படம் பார்க்க மாட்டர்கள் என்பதெல்லாம் இங்கு நிலவும் மாயைதான்.. //
அது மாதிரி எல்லாம் நான் நினைப்பதில்லை... ஏனெனில் அங்கே மம்மூட்டி, மோகன்லால் படங்களை விட ஷகீலா படங்கள் ஹிட்டடித்த காலத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்...
// மலையாளிகளை தரக்குறைவாக கிண்டல் செய்வதும் தவறு, ஓவராக புகழ்வதும் தவறு //
ம்ம்ம்... நான் ஓவராக எல்லாம் புகழவில்லை என்று நினைக்கிறேன்...
@ தம்பி கூர்மதியன்
உண்மையில் உங்களுடைய மிகப்பெரிய பின்னூட்டத்தை பார்த்ததும் நிஜமாகவே கண்டனக்குரலை தான் எழுப்பியிருக்கிறீர்கள் என்று நினைத்து பயந்துவிட்டேன்...
@ LK
ஆஹா... மறுபடியும் விருது கொடுக்கும் கலாச்சாரம் ஆரம்பமாகிவிட்டதா...
மிக்க நன்றி LK... வந்து பெற்றுக்கொள்கிறேன்...
@ Anonymous
// ஒத்தப்பாலம் பகுதில் நிறைய தமிழர்களும் உள்ளார்கள் //
ஓஹோ... அப்போ சிலையை வைத்தது நம்மாளுங்க வேலைதான்னு சொல்றீங்களா... ம்ம்ம் அப்படியும் இருக்கலாம்...
@ Anonymous (suresh)
// நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் இது சர்வதேசரீதியாக நக்கலடிக்கபடுவது உங்களின் உச்சரிப்புதான் //
உங்களுடைய தகவலுக்கு நன்றி சுரேஷ்... ஏற்றுக்கொள்கிறேன்...
// தவறாக பேசுவது மட்டுமல்லாமல் சரியாக பேசுபவரை நக்கலடிப்பது என்ன ஒரு மனநிலை //
சரிதான்... எனினும், நான் அதுபோல யாரையும் நக்கலடிப்பது இல்லை...
நம்ம விஜயை நாம கலாய்க்கலாம் கிண்டல் அடிக்கலாம் அடுத்த மாநிலக்காரன் அடிச்சா நாம கேப்போம் ...
இல்லையா பிரபாகரன்
அந்த லிங்க் பற்றி -
மவனே இப்போ மாட்னீங்களா. அதான் சொல்றது தான் தான் பெரிய அறிவாளின்னு சொல்லிகப்படாது!?
இனிமே பாருங்க உங்க ஊருல இருக்கவன் எல்லாம் தனக்கு தானே பன்ச் வச்சி பேசிப்பானுங்க!?
அது சரி! அந்த விஜய் குருதிபுனல் க்ளைமாக்ஸ் கமல் ரேஞ்சுக்கு காணப்படுவது ஏன்?
adu enna tamzarka koda ippadi seiya mattarkal apati
ena tamilan enntral kavalama
@ goma
// நம்ம விஜயை நாம கலாய்க்கலாம் கிண்டல் அடிக்கலாம் அடுத்த மாநிலக்காரன் அடிச்சா நாம கேப்போம் ... //
ஆமா ஆமா... நமக்கு உரிமை இருக்கே...
@ விக்கி உலகம்
// மவனே இப்போ மாட்னீங்களா. அதான் சொல்றது தான் தான் பெரிய அறிவாளின்னு சொல்லிகப்படாது!? //
ஏன் கேரளா மக்கள் மீது இந்த கொலைவெறி...?
@ basheer
// அது சரி! அந்த விஜய் குருதிபுனல் க்ளைமாக்ஸ் கமல் ரேஞ்சுக்கு காணப்படுவது ஏன்? //
அதெல்லாம் சிரிப்பின் கைவண்ணம் (அவருக்கு என்ன கோபமோ...?)
மேலும் விஜய் சாதாரணமாகவே அப்படித்தான் இருப்பார்...
@ Anonymous
// adu enna tamzarka koda ippadi seiya mattarkal apati
ena tamilan enntral kavalama //
அடடே... தவறான புரிதல்... நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை... விஜயின் சொந்த மாநிலம் தமிழகம் தானே, தமிழகத்தில் கூட அப்படி ஒரு செயலை செய்யமாட்டார்கள் என்றே கூறினேன்... தவறு இருந்தால் மன்னிக்கவும்...
தல: நீங்க சினிமாவையும் நிஜ வாழ்வவில் சொல்லும் ஸ்டேட்மெண்ட் ரெண்டையும் பிரிச்சுடனும் :)
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
மலையாளிகள் ஒரு போதும் ஏமாளிகள் அல்ல. மற்ற மாநிலங்களில் தொலைக் காட்சி, திரைப்படங்கள் மற்றும் தொழில் நுட்பம் நிறைய சீரழிவுகளைக் கொண்டு வந்துள்ளது, ஆனால் அவர்கள் தங்களை இவை எதுவும் பாதிக்காத வகையில் இதுவரை காத்து வந்துள்ளனர். சுற்றுப் புறச் சூழலையும், தங்களது பாரம்பரியத்தையும் அவர்கள் இன்றளவும் காத்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஏதோ செய்கிறார்கள், ஆனா போதிலும் தங்களது சொந்த வாழ்வில் எந்த பாதிப்பும் வராமலும், மேலும் இந்தச் செயல் மூலம் ஏதாவது வருவாய் வரும் வகையிலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். மலையாளிகள் ஏமாளிகள் அல்ல. இளிச்ச வாயன் தமிழன் மட்டுமே. அடிமைத் தனம் தமிழனுக்கு கைவந்த கலை, எப்போதும் வேற்று மாநிலத்தவருக்கு பல்லக்கு தூக்வதே அவன் வேலை, ஆனால் இன்னொரு தமிழனை வாழ விடமாட்டான், தமிழன் உருப்படுவது ரொம்ப கஷ்டம்.
@ வருண்
// தல: நீங்க சினிமாவையும் நிஜ வாழ்வவில் சொல்லும் ஸ்டேட்மெண்ட் ரெண்டையும் பிரிச்சுடனும் :) //
மன்னிக்கணும் நீங்கள் எதைப் பற்றி சொல்கிறீர்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லையே...
@ அருண் பிரசாத்
// உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் //
என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே... சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்... என்னுடைய ப்ளஸ் திரை விமர்சனங்கள் என்னும் கருத்தை எனக்கு புரிய வைத்திருக்கிறீர்கள்...
@ Jayadev Das
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... நீங்கள் மலையாளியா தமிழரா என்று எனக்கு தெரியாது... இருப்பினும் உங்களது பின்னூட்டம் நடுநிலையாக உள்ளது...
நான் தமிழர்கள் மற்றவர்களால் [முக்கியமாக மலையாளிகளால்] ஏய்க்கப் படுவதைப் பார்த்து நொந்து போன தமிழன். எங்கள் ஊர்களில் எக்கச் சக்கமான சந்தன மரங்கள், அவை அத்தனையும் வெட்டப் பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப் பட்டு மலிவு விலைகளில் அங்குள்ள சந்தன ஆயில் மில்களில் விற்கப் பட்டன. இப்போது சந்தன மரங்களின் வேர் கூட இல்லை. அதே போல தமிரபருணி ஆற்று மணல் நூற்றுக் கணக்கான லாரிகளில் கேரளாவுக்கு கடத்தப் படுகிறது, அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி. அது மட்டுமல்ல, ரே ஷன் அரிசி, இலவச தொலைக் காட்சி எல்லாம் போகிறது. இவை அத்தனையுமே கொண்டு போய் கொடுப்பவன் தமிழன். மலையாளி சட்டத்துக்கு முன் மாட்டாமலேயே உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டே நமது வளங்கள் எல்லாவற்றையும் சுரண்டி காசு பார்க்கிறான்.
அதற்க்கு அவர்களை குறை சொல்ல மாட்டேன், கொண்டு போய் கொடுக்கிறானே, தமிழன் அவனுக்கு பணத்துக்காக மலத்தையும் தின்னும் புத்தி இருக்கிறதே என்பதே என் வருத்தம். ஆனால் கேரளாவிலும் அரசியல் வாதிகள் இருக்கிறார்கள், அவர்களும் பணம் சம்பாதிக்க நினைக்கலாம், ஆனாலும் அவர்களின் இயற்க்கை வளம், மரங்கள், ஆற்று மணல் எல்லாம் காக்கப் படுகிறது, மேலும் மற்ற மாநிலங்களுடனான உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை. கர்நாடகத்திலும் காவிரி என்று வரும் போது எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும், மக்களும், ஆட்சி செய்பவரும் பணத்துக்காக மாநிலத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகவே இருக்கிறார்கள். இருவருமே அயோக்கியர்கள், திருடர்கள். தமிழைத்தான் வாழ வைப்பார்கள், தமிழனைச் சாகடிப்பார்கள். அதை நினைக்கும் போதுதான் வயிறு எரிகிறது, ஜெலுசில் சாப்பிட வைக்கிறது.
பெப்சி, கோலா பானங்கள் உண்டல் நலத்துக்குத் தீங்கு என்று எல்லோருக்குமே தெரியும். நமது அரசாங்கம் தான் மக்களின் நலனை புறக்கனித்தாயிற்றே! அதனால் தீங்கு என்ற சொன்ன புது தில்லி ஆய்வுக்கூட அறிக்கையை பூசி மெழுகி, நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர். இருந்த போதும் கேரளாவில் இருந்த பெப்சி ஆலைக்கு மக்கள் சென்று அடித்து நொறுக்கி மூட வைத்தனர். இந்த ரிலையன்ஸ், Big Bazaar, More போன்ற சில்லறை வியாபாரக் கடைகள், இவை சிறு வியாபாரிகளை அழித்து விடும், அதற்க்கப்புறம் அவர்கள் மக்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம். இந்தக் கடைகளை கேரளாவில் திறந்த போது முதல் நாள் போய் அவன் கொடுக்கும் இலவச உணவுப் பொருகள் பழ ரசம் எல்லாம் வாங்கிக் குடித்து விட்டு வந்தனர். அதற்க்கு அடுத்த நாள் முதல் ஒரு பயல் கூட அந்தப் பக்கம் போகவில்லை. பேசாமல் அவர்கள் எல்லோரும் மூடி விட்டு வந்து விட்டனர். ஆனால் அவர்கள் மற்ற மாநிலங்களில் கோடி கட்டிப் பறக்கின்றனர். மலையாளிகள் செய்திகள் தவிர மற்ற எதையும் தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. அவர்களிடம் எனக்குப் பிடிக்காதது, அவர்கள் சுய நலத்துக்காக மற்றவர்களை பலியிடுவார்கள், அவர்கள் மற்றவர்களிடமிருந்து எல்லா உதவியும் பெற்றுக் கொள்வார்கள், ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்கள்.
பிற மொழிகளையும் கலாசாரத்தையும் மதிக்க வேண்டும் என்பதை அழகாக வலியுறுத்தியுள்ளீர்கள். இதுதான் தங்கள் வலைப்பூவில் படிக்கும் முதல் பதிவு.
:) Thanks for that link praba..
Boss may be they would have made fun of him :-)
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய தாத்தா நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் ஏறி மலாயா வந்தார். வெள்ளைக் காரனுக்கு அடிமையாக எடுபிடி வேலை செய்தார். அப்போது அந்த ரப்பர் தோட்டத்தில் பெரிய கிராணியாக இருந்த வர்கீஸ் (மலையாளி) என்பவரின் மகள் மீது விருப்பம் ஏற்பட்டு இரண்டு பேரும் மலாயாவை விட்டு பர்மாவிற்குப் போனார்கள்.
முப்பது வருடங்களுக்குப் பிறகு தாத்தா பர்மாவில் இறந்து போனார். அதன் பின்னர் என்னுடைய அப்பா அவருடைய அம்மா(என்னுடைய பாட்டி) உடன் பிறந்தவர்களைக் கூட்டிக் கொண்டு மலாயாவுக்கு வந்தார். சில ஆண்டுகளில் பாட்டி இறந்து போனார்.
என் அப்பா ஒரு தெலுங்குப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆறு பிள்ளைகள். எல்லோரையும் நன்றாகப் படிக்க வைத்தார். மூத்த மகன் நான் மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஒரு மலையாளப் பெண்ணை விரும்பித் திருமணம் செய்து கொண்டேன்.
எனக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்கும அவர்கள் விரும்பியவர்களையே திருமணம் செய்து கொடுத்து விட்டோம். எனக்கு இப்போது எட்டு பேரப் பிள்ளைகள். என்னைத் தமிழன் என்று சொல்வதா அல்லது ஒரு திராவிடன் என்று சொல்வதா.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நானும் என் மனைவியும் தமிழ்நாட்டிற்கு வருவோம். தர்மபுரியில் தங்கி தமிழ்நாட்டையே சுற்றி வருவோம்.
அப்படியே எர்ணாகுளம் போய் என் மனைவியின் சொந்தக்காரர்களையும் பார்த்து விட்டு வருவோம். எனக்கும் என் மனைவிக்கும் இப்போது வயது 63.
ஆக, எப்பேர்ப்பட்ட பிரச்னை வந்தாலும் முடிந்த வரை சமாதானமாகப் போய் விடுவதே நல்லது என்பது என்னுடைய கருத்து.
மலேசியாவில் இருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
ரொம்ப மோசம்......
Post a Comment