வணக்கம் மக்களே...
எனக்குப் பிடித்த பாடல்களை இருபது பிரிவுகளாக பிரித்து அதில் முதல் பாதியை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தேன். மேலும் இதே தொடர்பதிவிற்கு அதிரடி ஹாஜாவும், குண்டு ராஜகோபாலும் அழைத்திருந்தார்கள். அவர்குளுக்கும் சேர்த்தே இந்தப் பதிவினை எழுதிக்கொள்கிறேன். பதிவின் முதல் பகுதியை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்:-
எனக்குப் பிடித்த பாடல்கள் – I
இப்போது மீதமுள்ள பத்து பிரிவுகளில் எனக்குப் பிடித்த பாடல்களை தொகுத்திருக்கிறேன்.
11. ரொமான்ஸ்:
ரொமான்ஸ் என்றாலே கெளதம் மேனன் போல யாரும் யோசிக்க முடியாது. அருமையான கிரியேட்டிவிட்டியுடன் பாடலை வடிவமைத்திருப்பார்.
- அன்பில் அவன் (விண்ணைத்தாண்டி வருவாயா)
- ஒன்றா ரெண்டா (காக்க காக்க)
- அனல் மேலே பனித்துளி (வாரணம் ஆயிரம்)
- நீயேதான் எனக்கு மணவாட்டி (குடியிருந்த கோவில்)
- இஞ்சி இடுப்பழகி (தேவர் மகன்)
- ஓவியா உன் ஓரப்பார்வை (குறும்பு)
- காதல் சடுகுடு (அலைபாயுதே)
- தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் (பசும்பொன்)
12. தத்துவம்:
இது நம்ம ஏரியா. தத்துவம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எம்.ஆர்.ராதா மட்டுமே.
- குற்றம் புரிந்தவன் (ரத்தக்கண்ணீர்)
- புத்தியுள்ள மனிதரெல்லாம் (அன்னை)
- ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)
- ரா ரா ராமையா (பாட்ஷா)
- ஒரு நாளில் வாழ்க்கை இங்கே (புதுப்பேட்டை)
- மார்கழியில் குளிச்சு பாரு (ஒன்பது ரூபாய் நோட்டு)
- காட்டுவழி கால்நடையா போற தம்பி (அது ஒரு கனாக்காலம்)
- தாயும் யாரோ தந்தை யாரோ (பெரியார்)
13. கதாநாயகி – அறிமுகம்:
இசையை விட அதில் நடித்த நாயகிகளுக்காக ரசித்த பாடல்கள். முதலாவது பாடல் நடிகையே பாடியது.
- சொந்தக் குரலில் பாட (அமர்க்களம்)
- ஒரு ஊரில் அழகே உருவாய் (காக்க காக்க)
- நன்னாரே (குரு)
- ஷலாலா (கில்லி)
14. நட்பு:
பழைய கல்லூரி / பள்ளி நாட்களை நினைவூட்டும் பாடல்கள். முதலாவது பாடலை அடிக்கடி கேட்டு அழுதிருக்கிறேன்.
- மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் (குளிர் 100 டிகிரி)
- தேநீரில் சிநேகிதம் (சுப்ரமணியபுரம்)
- முஸ்தபா முஸ்தபா (காதல் தேசம்)
15. குத்து:
வழக்கமாக க்ளைமாக்ஸுக்கு முன்பு தமிழ் சினிமாவில் வரக்கூடிய உற்சாகமூட்டும் பாடல்கள்.
- கத்தாழ கண்ணால (அஞ்சாதே) [பிரசன்னா தலைமுடிக்காகவே]
- சரோஜா சாமான் நிக்காலோ (சரோஜா)
- நெருப்பு கூத்தடிக்குது (துள்ளுவதோ இளமை)
- தொட்டா பவருடா (தொட்டி ஜெயா)
16. பக்தி
கடவுள் நம்பிக்கை இல்லை எனினும் சில பாடல்களை திரும்ப திரும்ப கேட்கத் தோன்றும்.
- ஜனனி ஜனனி (இளையராஜா)
- ஹரிவராசனம் (கே.ஜே.யேசுதாஸ்)
- நமச்சிவாய (எஸ்.பி.பாலசுப்பிரமணியம்)
17. திரைப்படம் சாராதவை
திரைப்படங்கள் அல்லாமல் ஆல்பமாக வெளிவந்த பாடல்களில் என் மணம் கவர்ந்த மூன்று பாடல்கள்.
- ஏய் உன்னோட (டான்ஸ் பார்ட்டி – தேவி ஸ்ரீ பிரசாத்)
- இசையே (S5)
- போதை ஏறுதே (தடையப்பா)
- வால்பாறை வட்டப்பாறை (என்ன பாரு – மால்குடி சுபா)
18. சோகம்
சில சமயங்களில் சோகப்பாடல்களை கேட்டால் நிம்மதியாக இருக்கும். அப்படிப்பட்ட பாடல்கள் சில.
- பறவையே எங்கு இருக்கிறாய் (தமிழ் M.A)
- உச்சி வகுந்தெடுத்து (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
- காடு பொட்டக்காடு (கருத்தம்மா)
- தாய் தின்ற மண்ணே (ஆயிரத்தில் ஒருவன்)
19. கொண்டாட்டம்
கொண்டாட்டப் பாடல்கள் என்றால் மணிரத்னத்தை யாரும் மிஞ்ச முடியாது. நான்கில் இரண்டு அவரது படப்பாடல்கள் தான்.
- அந்திமழை மேகம் (நாயகன்)
- காட்டுக்குயிலு மனசுக்குள்ள (தளபதி)
- நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே (வேட்டையாடு விளையாடு)
- Celebration of Life (ஆயிரத்தில் ஒருவன்)
20. காமத்துப்பால்:
தமிழ் சினிமாவின் சூடேற்றும் பாடல்களில் எனக்கு பிடித்தவை.
- மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)
- சிவராத்திரி தூக்கமேது (மைக்கேல் மதன காம ராஜன்)
- பள்ளிக்கூடம் போகலாமா (கோவில்காளை)
- அடிக்குது குளிரு (மன்னன்)
மொத்தம் தொண்ணூறு பாடல்களை தொகுத்து முடிப்பதற்குள் மிகவும் சிரமப்பட்டேன். இப்போது அந்த சிரமத்தை நான் தொடர அழைப்பது:-
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
51 comments:
நல்ல தேர்வுகள்
adadaa வட போச்சே
இன்னும் இருக்கா?
ரொம்ப கடுமையா உழைச்சிருக்கீங்க
ஃபிகரு ஷாலினி தானே >ஸ்டில்ஸு சூப்பரு
அருமையான தேர்வு பிரபா....வாழ்த்துகள்.
தொண்ணூறு பாட்டு எடுத்ததும் எடுத்தீங்க, இன்னுமொரு பத்து பாட்டு எடுத்திருந்தா ஒரு செஞ்சரி வந்திருக்குமெல்ல :-)
பல பாடல்கள் எனக்கு உங்கள் தெரிவில் பிடித்தாலும் 'பறவையே எங்கு இருக்கிறாய்' ராஜாவின் குரலில் உயிரை வருடும் யுவனின் இசை. அதேபோல ஜனனி ஜனனி, அந்திமழை மேகம், காட்டுக்குயிலு என்பனவும் எனக்கு மிகவும் பிடித்த என்னோட பேவரிட் பாடல்கள்.
சி.பி.செந்தில்குமார்
ஃபிகரு ஷாலினி தானே ஸ்டில்ஸு சூப்பரு////
இருங்க தலகிட்ட போட்டுகொடுக்கிறேன்...
பாடல்களை விட விளக்கங்கள் சூப்பர்
ஒவ்வொரு பிரிவையும் தனித்தனி பதிவுகளாகப் போட்டிருக்கலாமே..அட்டகாசமான தேர்வு..
-----செங்கோவி
மன்மதன் அம்பு-விமர்சனம்
அருமையான தொகுப்பு நண்பா
Supper விளக்கங்கள், தேர்வு :)
பகிர்வுக்கு நன்றி
தேர்வுக்கு படிப்பதைவிட இந்தப்பாடல்களின் தேர்வுக்கு உங்கள் உழைப்பு அதிகம் என்று நினைக்கிறேன்.
நல்ல தொகுப்பு..
:))
கடும் உழைப்பு, கடும் தொகுப்பு...........!
நல்ல பகிர்வு
எல்லாம் சூப்பர் சாங்க்ஸ்!
அட்டகாசமான தேர்வு,அருமையான தேர்வு வாழ்த்துகள்
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்
அட்டகாசமான தேர்வு,அருமையான தேர்வு வாழ்த்துகள்
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
உங்களுக்கு மட்டுமா..? எங்களுக்கும் தான் பிடிக்கும்..!
சி.பி.செந்தில்குமார்
December 24, 2010 6:25 AM
ஃபிகரு ஷாலினி தானே >ஸ்டில்ஸு சூப்பரு
எங்கள் அண்ணியை பிகுரு என்று கொச்சையாக கூறிய சி.பி .செந்தில்குமாருக்கு கடும் கண்டனங்கள்
இவன்
தல படத்தை படத்தை ஒபெணிங் ஷோவிலே பார்க்கும் ரசிகன்
இப்பலாம் கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றது பேஷன் ஆய்ப்போச்சு
யப்பா?
நன்றி முயற்சிக்கிறேன்................
ரைட்டு.... ரொம்ப ஆராய்ஞ்சு இருக்கீங்க
நல்ல தொகுப்பு
நல்ல தேர்வுகள் பிரபா வாழ்த்துக்கள்
புத்தியுள்ள மனிதரெல்லாம் - சூப்பர்
நல்ல கலெக்ஷன் ...90 ஆ.... :-)
அவனவனுக்கு பத்து பாடல் தொகுக்கவே தாவு தீர்ந்துடுது. நீங்க எப்படி 90 பாடல்களை தொகுத்தீர்கள் என்று தெரியவில்லை. பாடல் தேர்வுகள் அனைத்து அருமை.
தல எல்லாமே நம்ம ஃபிரிக்வென்சியோடு ஒத்து போகுதே....அசத்தல்!! உழைப்புக்கேற்ற பாட்டு!!
சரியாகத் தேர்வு செய்து இருக்கிறீர்கள். இவற்றுள் உச்சி வகுந்தெடுத்து என்னை அதிகம் கவரும் பாடல்
>>> பதிவை படித்துக்கொண்டே வந்தேன்...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சி... கடைசில என் சீட்டுக்கு அடில குண்டு வச்சிட்டீங்களே பிரபா!! உங்க அளவுக்கு எல்லாம் பார்ட் பார்ட்டா பிரிச்சி எழுத முடியாது சாமி!! ஏதோ என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன்..!! சற்று தாமதம் ஆகும்!! பொறுத்தருள்க!
@ எல் கே, சி.பி.செந்தில்குமார், கலாநேசன், அந்நியன் 2, எப்பூடி.., ரஹீம் கஸாலி, பார்வையாளன், செங்கோவி, டிலீப், Harini Nathan, விக்கி உலகம், பதிவுலகில் பாபு, karthikkumar, பன்னிக்குட்டி ராம்சாமி, இரவு வானம், எஸ்.கே, sakthistudycentre.blogspot.com, தங்கம்பழனி, நா.மணிவண்ணன், Speed Master, மண்டையன், அருண் பிரசாத், Pari T Moorthy, dineshkumar, ஜெய்லானி, பாலா, எம் அப்துல் காதர், Meena, சிவகுமார்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...
@ கலாநேசன்
// இன்னும் இருக்கா? //
இல்லை நண்பரே... இரண்டு பாகங்கள் தான்... இத்தோடு முடித்துக்கொள்கிறேன்...
@ சி.பி.செந்தில்குமார்
// ஃபிகரு ஷாலினி தானே >ஸ்டில்ஸு சூப்பரு //
நான் சொல்ல நினைத்ததையே மணிவண்ணனும் சொல்லியிருக்கிறார்... எங்கள் அண்ணி ஷாலினியை பிகர் என்று கூறிய உங்களுக்கு கடும் கண்டனங்கள்...
@ எப்பூடி..
// தொண்ணூறு பாட்டு எடுத்ததும் எடுத்தீங்க, இன்னுமொரு பத்து பாட்டு எடுத்திருந்தா ஒரு செஞ்சரி வந்திருக்குமெல்ல :-) //
அது திட்டமிட்டு தேர்வு செய்ததல்ல... எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்களை எல்லாம் லிஸ்ட் போட்டுவிட்டு எண்ணிப் பார்த்தேன்... 89 பாடல்கள் இருந்தன... அதன்பின்பு ஒன்றை இணைத்து தொண்ணூறாக்கினேன்...
@ ரஹீம் கஸாலி
// இருங்க தலகிட்ட போட்டுகொடுக்கிறேன்... //
நீங்களும் தல ரசிகரா...
@ செங்கோவி
// ஒவ்வொரு பிரிவையும் தனித்தனி பதிவுகளாகப் போட்டிருக்கலாமே..அட்டகாசமான தேர்வு.. //
அவ்வாறு போட்டிருந்தால் மொக்கையாக இருந்திருக்கும்... படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும்... (இப்ப மட்டும் என்னவாம்...? என்று நீங்கள் மைன்ட் வாய்சில் கேட்பது எனக்கு புரிகிறது...)
@ விக்கி உலகம்
// தேர்வுக்கு படிப்பதைவிட இந்தப்பாடல்களின் தேர்வுக்கு உங்கள் உழைப்பு அதிகம் என்று நினைக்கிறேன் //
சரியாகவே சொன்னீர்கள்... வீட்டில் வெளக்குமாறு கொண்டு அடிக்காத குறையாக திட்டி தீர்க்கிறார்கள்...
@ sakthistudycentre.blogspot.com
// உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும். //
உங்களுடைய தளத்தைப் பார்த்தேன்... nice... இனி பின்தொடர்கிறேன்...
@ நா.மணிவண்ணன்
// எங்கள் அண்ணியை பிகுரு என்று கொச்சையாக கூறிய சி.பி .செந்தில்குமாருக்கு கடும் கண்டனங்கள்
இவன்
தல படத்தை படத்தை ஒபெணிங் ஷோவிலே பார்க்கும் ரசிகன் //
மறுபடி மறுபடி நான் உங்களுக்கு பின்னூட்ட பதில் மூலம் தெரிவிக்கும் ஒரே வரிகள்... என் இனமடா நீ...
// இப்பலாம் கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றது பேஷன் ஆய்ப்போச்சு //
இதுக்கு பதிலா நீங்க என்னை கெட்டவார்த்தைல திட்டியிருக்கலாம்...
@ மண்டையன்
// நன்றி முயற்சிக்கிறேன்.... //
முயற்சி எல்லாம் கிடையாது.... கண்டிப்பா எழுதணும் இல்லையெனில் ஆட்டோ வரும்... எப்படி வசதி...?
@ பாலா
// அவனவனுக்கு பத்து பாடல் தொகுக்கவே தாவு தீர்ந்துடுது. நீங்க எப்படி 90 பாடல்களை தொகுத்தீர்கள் என்று தெரியவில்லை. பாடல் தேர்வுகள் அனைத்து அருமை. //
ரொம்ப சுலபம்... நீங்க கணினியில் இருந்து மொபைல் போனுக்கு எப்படி பாட்டு ட்ரான்ஸ்பர் பண்ணுவீங்களோ அதே மாதிரிதான் நான் இந்த பதிவை எழுதினேன்...
@ எம் அப்துல் காதர்
// தல எல்லாமே நம்ம ஃபிரிக்வென்சியோடு ஒத்து போகுதே... //
அப்படியா... அப்படின்னா நண்பேண்டா...
@ சிவகுமார்
// பதிவை படித்துக்கொண்டே வந்தேன்...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சி... கடைசில என் சீட்டுக்கு அடில குண்டு வச்சிட்டீங்களே பிரபா!! உங்க அளவுக்கு எல்லாம் பார்ட் பார்ட்டா பிரிச்சி எழுத முடியாது சாமி!! ஏதோ என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன்..!! சற்று தாமதம் ஆகும்!! பொறுத்தருள்க! //
தாராளமாக நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்... ஆனால் கண்டிப்பாக எழுத வேண்டும்...
என்ன தலைவா இது!!! தத்துவத்துக்கு பேர்போன நடிகர் திலகம் பாடல்கள் ஒண்ணுகூட இல்லை :(
இங்கே ஒண்ணு!
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே!
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பார்த்துக்கோ நல்லபடி!
புது பதிவு போடலையா?
எனது அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி......பாடல் தேர்வு அருமை....
மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மத்தின் தலைவன்)
Sir Athu Dharmathurai padam Sir...
@ sekarst
// மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மத்தின் தலைவன்)
Sir Athu Dharmathurai padam Sir... //
கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி நண்பரே... இப்போ மாத்திட்டேன்...
Post a Comment