வணக்கம் மக்களே...
வாசிப்பனுபவம் வாய்த்த சென்னைவாசிகளுக்கு வருடம்தோறும் திருவிழாவாக வந்து மகிழ்ச்சி தரும் புத்தக்காட்சி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:-
இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி, (பச்சையப்பன் கல்லூரி எதிரில்), சென்னை – 600030.
தேதி: 04-01-2011 முதல் 17-01-2011 வரை
நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை (வார நாட்கள்)
காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை (விடுமுறை நாட்கள்)
- அனைத்து புத்தகங்களுக்கும் 10% சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படும். அது நமக்கு ஒரு பொருட்டில்லை எனினும் புதியவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக அமையட்டும்.
- சுமார் 650 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
- இங்கே கிடைக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தமிழ் புத்தகங்கள் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி மற்றும் இன்னபிற மொழி புத்தகங்களும் கிடைக்கும்.
- சமய புத்தகங்களில் இருந்து சமையல் புத்தகங்கள் வரை எல்லா வகையறா புத்தகங்களும் கிடைக்கும்.
- இது தவிர்த்து தினந்தோறும் தமிழறிஞர்களின் சொற்பொழிவு நடைபெறும். அதன் அட்டவணை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் விவரங்களுக்கு: http://bapasi.com/
புத்தக சந்தை குறித்த எனது அனுபவத்துளிகள் சில:
- இது எத்தனையாவது வருடம் என்று சரிவர நினைவுக்கூர முடியவில்லை. ஆனால் புத்தக சந்தை காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்றுவந்த காலம்தொட்டே சென்றுவருகிறேன். அப்பொழுதெல்லாம் ஸ்டால்கள் தமிழக தெருக்களை போல கோணல் மாணலாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இப்போது நடைபெறவிருக்கும் இடத்தில் ஸ்டால்கள் பாண்டிச்சேரி தெருக்களை போல நேராகவும் சீராகவும் இருக்குமென்பது தனிச்சிறப்பு.
- ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களை பார்வையிட ஒரு முறை புத்தகங்களை வாங்குவதற்கு ஒரு முறை என்றும் இரண்டுமுறை செல்வேன். இந்தமுறை நான் ஆணிபுடுங்கிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து புத்தக சந்தை பத்து நிமிட பயணமே என்பதால் தினமும் கூட செல்லலாம்.
- வருடாவருடம் வாசிப்பனுபவம் வாய்க்காத அதே சமயம் ஆர்வமுள்ள நண்பர்கள் ஒருவருக்காவது புத்தக சந்தையை அறிமுகப்படுத்துவேன். மேலும் அவர்களுக்கு என் சாய்ஸில் ஏதாவதொரு புத்தகத்தை பரிசளிப்பேன். இந்தமுறை யாரை அழைத்துச் செல்வதென்று இதுவரை முடிவு செய்யவில்லை.
- சிற்றிதழ்களை வாங்குவதில் எனக்கு ஒரு அலாதிப்பிரியம் உண்டு. வருடாவருடம் உயிர்மை, காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களை தேடித் தேடி வாங்குவேன். இந்த முறை வழமையை விட அதிக அளவில் புத்தகங்கள் வாங்க விருப்பம்.
- கிழக்கு பதிப்பகம், விகடன் பப்ளிகேஷன்ஸ், நக்கீரன் பதிப்பகம் போன்ற கடைகளுக்குள் நுழைந்தால் வெளியே வருவதற்கே மனமிருக்காது. அவர்களும் அதற்கு தகுந்தபடி நான்கு ஸ்டால்களை ஒன்றாக இணைத்து ப்ரைம் ஸ்டால் போட்டு நம்மை மகிழ்விப்பார்கள்.
- சென்ற ஆண்டு புத்தக சந்தைக்கு சென்றபோதே வலைப்பூ வைத்திருந்தேன் என்றாலும் தீவிரமாக எழுத ஆரம்பித்த பின்பு காணும் முதல் புத்தக சந்தை இதுதான். எனவே எனது புத்தக தேடல் நிச்சயம் இந்தமுறை புது வகையில் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
- பார்வையாளன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், அஞ்சாசிங்கம் மண்டையன் என்று நிறைய பேரிடம் புத்தக சந்தைக்கு உடன் வருவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். மேலும் அந்தநாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்.
- என் இனிய எந்திரா புத்தகத்தை படித்ததில் இருந்து ஏனோ சயின்ஸ் பிக்ஷன் கதைகள் மீது ஒரு அதீத ஆர்வம் வந்திருக்கிறது. அதிலும் ஜுராசிக் பார்க் படத்தின் கதாசிரியரான மைக்கேல் க்ரிக்டன் புத்தகங்களில் எதையாவது வாங்கிப் படிக்கவேண்டுமென விரும்புகிறேன். அத்தகைய புத்தகம், நமது புத்தக காட்சியில் கிடைக்குமா என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...
டிஸ்கி: பதிவை படித்துவிட்டு ஓட்டு போட்டு கருத்து தெரிவிக்கும் வெளிநாடுவாழ்/வெளியூர்வாழ் பதிவர்களுக்கு ஒரு அட்டை ஜெளுசில் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
31 comments:
//தமிழக தெருக்களை போல கோணல் மாணலாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்//
34 கோட்டரின் ச்சீ..,கோட்டத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்..!! ஹி.ஹி..ஹி..
//வெளிநாடுவாழ்/வெளியூர்வாழ் பதிவர்களுக்கு ஒரு அட்டை ஜெளுசில் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படும்.//
சேலத்துக்கும் ஒன்ணு அனுப்பி வையுங்க..!!
பிரபாகரன் தளத்தின் பின்புலமான வண்ணத்தை நீக்கி விட்டு வெள்ளை நிறம் வருமாறு செய்ய முடியுமா என்று பாருங்கள். தரவிறக்கம் நீண்ட நேரம் ஆகின்றது.
பார்ப்போம் நேரம் எப்படி அமைகின்றது என்று...
mudinthal todarbu kollungal nanbare santhippom kangkaatchiyil
பகிர்விற்கு நன்றி
உங்கள் புத்தக ஆர்வம் வியக்க வைக்கிறது.. இம்முறையும் நல்ல வாசிப்பு அனுபவம் கிட்டட்டும்..
நான் க்ரிக்டனின் prey எனும் நாவல் படித்திருக்கிறேன்.. "நானோ" கிருமிகளைப் பற்றியது.. அங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.. (இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகி விட்டார்..)
"பார்வையாளன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், அஞ்சாசிங்கம் மண்டையன் என்று நிறைய பேரிடம் புத்தக சந்தைக்கு உடன் வருவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். மேலும் அந்தநாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்"
அந்த நன்னாளை எதிர் நோக்கி நானும் காத்து இருக்கிறேன்...
அனைவருக்கும் இனிய அனுபவமாக இருக்கும் என்பது உறுதி...
//என் இனிய எந்திரா புத்தகத்தை படித்ததில் இருந்து ஏனோ சயின்ஸ் பிக்ஷன் கதைகள் மீது ஒரு அதீத ஆர்வம் வந்திருக்கிறது//
:-)
உங்களது டிஸ்கி க்கு பதில்
குஸ்கி: புத்தக சந்தை தொடங்கியதில் இருந்து உங்களுக்கு காலவரையற்ற நிலையில் போக உள்ளதால் உங்களுக்கு அது நிற்பதற்க்கான மாத்திரை அனுப்பி வைக்க படும்
இப்படிக்கு
வெளியூர் வாழ் மக்கள்
//- என் இனிய எந்திரா புத்தகத்தை படித்ததில் இருந்து ஏனோ சயின்ஸ் பிக்ஷன் கதைகள் மீது ஒரு அதீத ஆர்வம் வந்திருக்கிறது. அதிலும் ஜுராசிக் பார்க் படத்தின் கதாசிரியரான மைக்கேல் க்ரிக்டன் புத்தகங்களில் எதையாவது வாங்கிப் படிக்கவேண்டுமென விரும்புகிறேன். அத்தகைய புத்தகம், நமது புத்தக காட்சியில் கிடைக்குமா என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...
//
இது ஜுராசிக் பூங்காவின் இரண்டாம் பகுதி http://www.flipkart.com/lost-world-michael-crichton-book-0099240629
பிற நூல்கள் : http://www.flipkart.com/search-books?query=crichton&from=all
உங்களது டிஸ்கி க்கு பதில்
குஸ்கி: புத்தக சந்தை தொடங்கியதில் இருந்து உங்களுக்கு காலவரையற்ற நிலையில் போக உள்ளதால் உங்களுக்கு அது நிற்பதற்க்கான மாத்திரை அனுப்பி வைக்க படும்
இப்படிக்கு
வெளியூர் வாழ் மக்கள்////
ஹா ஹா ஹா.. ரிப்பீட்டு...
போன வருடம் போயிருந்தேன்.. இந்த வருடம் நோ சான்ஸ்..
தெரியப்படுத்தியற்கு நன்றி..
2009 வரை சென்னையில் இருந்த காலத்தில் வருடம் தவறாமல் சென்று வருவேன் அதே போல் இரண்டு நாள் :) ஒரு நாள் பார்க்க -என்னென்ன புத்தகங்கள் ,அதன் விலை-பின்பு மற்ற்றொரு நாள் வாங்க .சென்றமுறை இதற்காகவே இரண்டு நாள் ஊரிலிருந்து கிளம்பி வந்தேன் ,இம்முறையும் அப்படி தான் ஊரிலிருந்து வருகிறேன் ஒரு நாள் மட்டும் தான் .இங்கு எங்கள் ஊரில் சித்திரை மாதம் போடுவார்கள் இருந்தும் சென்னையில் கிடைக்கும் புட்த்தக குவியல் போல் எங்கும் இல்லை .இது ஒரு திருவிழாவாக மாறி உள்ளது நல்ல விஷயம் .
// இந்தமுறை யாரை அழைத்துச் செல்வதென்று இதுவரை முடிவு செய்யவில்லை.//
நான் வர்றேனே டிக்கெட் அனுப்பி விடுங்க பாஸ் ஹி.. ஹி..
//வெளிநாடுவாழ்/வெளியூர்வாழ் பதிவர்களுக்கு ஒரு அட்டை ஜெளுசில் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படும்.//
டிக்கெட் அனுப்பும் முன் ஜெளுசில் பார்சல் சவூதிக்கு ஒன்னும் அனுப்பி விடுங்க..
மற்றவை டிக்கெட் கிடைத்தப்பின் நேரில் ..!!! :-)))
நானும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்..............
//பதிவை படித்துவிட்டு ஓட்டு போட்டு கருத்து தெரிவிக்கும் வெளிநாடுவாழ்/வெளியூர்வாழ் பதிவர்களுக்கு ஒரு அட்டை ஜெளுசில் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படும்.//
எதுக்கு ?
கடைசி வரை
வாங்கிய புத்தகங்களை
சொல்லாதது ஏனோ!
எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.
@ சேலம் தேவா, ஜோதிஜி, எல் கே, Gopi Ramamoorthy, எல் போர்ட்.. பீ சீரியஸ்.., பார்வையாளன், ஜீ..., நா.மணிவண்ணன், புருனோ Bruno, பதிவுலகில் பாபு, dr suneel krishnan, எம் அப்துல் காதர், மண்டையன், எப்பூடி.., ....., இளம் தூயவன்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ சேலம் தேவா
// சேலத்துக்கும் ஒன்ணு அனுப்பி வையுங்க..!! //
ரைட்டு நண்பா... அனுப்பியாச்சு...
@ ஜோதிஜி
// பிரபாகரன் தளத்தின் பின்புலமான வண்ணத்தை நீக்கி விட்டு வெள்ளை நிறம் வருமாறு செய்ய முடியுமா என்று பாருங்கள். தரவிறக்கம் நீண்ட நேரம் ஆகின்றது. //
இன்னும் ஒரு வாரத்திற்கு பொறுத்துக்கொள்ளவும்... 2011ம் ஆண்டுமுதல் தளம் உங்களின் விருப்பப்படி மாறும்...
@ எல் கே
// mudinthal todarbu kollungal nanbare santhippom kangkaatchiyil //
கண்டிப்பாக சந்திக்கிறோம்... நான் இது குறித்து உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்...
@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// நான் க்ரிக்டனின் prey எனும் நாவல் படித்திருக்கிறேன்.. "நானோ" கிருமிகளைப் பற்றியது.. அங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.. (இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகி விட்டார்..) //
சோகமான செய்தி :(
@ பார்வையாளன்
// அந்த நன்னாளை எதிர் நோக்கி நானும் காத்து இருக்கிறேன்...
அனைவருக்கும் இனிய அனுபவமாக இருக்கும் என்பது உறுதி... //
ஜனவரி 8 அல்லது 9 அன்று போகலாம் என்பது எங்களுடைய விருப்பம்... உங்களுடைய விருப்பத்தை தெரியப்படுத்தவும்...
@ நா.மணிவண்ணன்
// குஸ்கி: புத்தக சந்தை தொடங்கியதில் இருந்து உங்களுக்கு காலவரையற்ற நிலையில் போக உள்ளதால் உங்களுக்கு அது நிற்பதற்க்கான மாத்திரை அனுப்பி வைக்க படும்
இப்படிக்கு
வெளியூர் வாழ் மக்கள் //
என்ன இது சாபமா...?அதெல்லாம் இங்கே பலிக்காது பாஸ்... நாங்கள்லாம் டாக்டர்கிட்டேயே முன்ஜாமீன் வாகி வைக்கிறவங்க... மதுரைக்கு ஜெலுசில் பார்சல் அனுப்பிட்டேன்... யூஸ் பண்ணிக்கோங்க...
@ புருனோ Bruno
// இது ஜுராசிக் பூங்காவின் இரண்டாம் பகுதி http://www.flipkart.com/lost-world-michael-crichton-book-0099240629
பிற நூல்கள் : http://www.flipkart.com/search-books?query=crichton&from=all //
சூப்பர் ப்ருனோ... மிக்க நன்றி... எனக்கு ஆன்லைனில் வாங்குவது குறித்து அதிகம் தெரியாது... இருப்பினும் முயல்கிறேன்...
@ dr suneel krishnan
// ஒரு நாள் பார்க்க -என்னென்ன புத்தகங்கள் ,அதன் விலை-பின்பு மற்ற்றொரு நாள் வாங்க //
நீங்களும் என்னைப்போல் தானா... பின்னே ஒருநாள் போதுமா...?
// இம்முறையும் அப்படி தான் ஊரிலிருந்து வருகிறேன் ஒரு நாள் மட்டும் தான் //
எந்த தேதி என்று சொல்லுங்கள் முடிந்தால் சந்திக்கலாம்...
@ எம் அப்துல் காதர்
// நான் வர்றேனே டிக்கெட் அனுப்பி விடுங்க பாஸ் ஹி.. ஹி.. //
புத்தக சந்தைக்கான டிக்கெட்டை தானே சொல்கிறீர்கள்... பத்து ரூபாய்தான்... வாங்கே அனுப்பி வைக்கிறேன்...
@ எப்பூடி..
// எதுக்கு ? //
புரியலையா... வயிற்ரேரிச்ச்சலை போக்கத்தான்... இங்கு ஒருமுறை வந்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியும், எவ்வளவு பெரிய புத்தகக் காட்சியை இழக்கிறோம் என்று...
@ .....
// கடைசி வரை
வாங்கிய புத்தகங்களை
சொல்லாதது ஏனோ! //
அதைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் பதிவின் நீளம் அதிகமாகும்...
***அதிலும் ஜுராசிக் பார்க் படத்தின் கதாசிரியரான மைக்கேல் க்ரிக்டன் புத்தகங்களில் எதையாவது வாங்கிப் படிக்கவேண்டுமென விரும்புகிறேன். அத்தகைய புத்தகம், நமது புத்தக காட்சியில் கிடைக்குமா என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...***
நல்ல ஐடியா! க்ரைக்டன் ஒரு டாக்டரும்கூட, 63 வயதிலேயே மறைந்துவிட்டார் :(. டிஸ்க்ளோஷர் படம் பார்க்கலைனா, அந்தப்புத்தகம்கூட நீங்க வாங்கிப் படிக்கலாம் :)
// நல்ல ஐடியா! க்ரைக்டன் ஒரு டாக்டரும்கூட, 63 வயதிலேயே மறைந்துவிட்டார் :(. டிஸ்க்ளோஷர் படம் பார்க்கலைனா, அந்தப்புத்தகம்கூட நீங்க வாங்கிப் படிக்கலாம் :) //
அந்தப்படத்தை நான் பார்த்ததில்லை... வாங்கிவிடலாம்... ஆனால் அது அங்கே கிடைக்குமா என்பதே எனது கேள்வி...
Post a Comment