10 December 2010

எந்திரனின் முன்னோடி – Astro Boy

வணக்கம் மக்களே...

சில வாரங்களுக்கு முன்பு எந்திரனின் முன்னோடியான Bicentennial Man பற்றிய பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தேன். இப்போது அந்த வரிசையில் எந்திரனின் மற்றுமொரு முன்னோடியான Astro Boy என்ற அனிமேஷன் படத்தை பற்றி எழுதுகிறேன். எந்திரன் படம் வெளியானபோதே படத்தில் வரும் அழிவு சக்தி கொடுக்கும் ரெட் சிப் பற்றிய கான்செப்ட் இந்தப் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என சில நண்பர்கள் மூலமாக தெரிந்துக்கொண்டேன். இருப்பினும் சோம்பலின் காரணமாக படத்தை சில நாட்களுக்கு முன்னரே பார்க்க முடிந்தது. இப்பொழுது பதிவிடுகிறேன்.

-          Title: Astro Boy
-          Country: USA, Japan
-          Language: English
-          Year: 2009
-          Genre: Animation, Science-Fiction
-          Cast (Voice): Freddie Highmore, Nicolas Cage, Donald Sutherland
-          Director: David Bowers
-          Producers: Maryann Garger, Kuzuka Yayoki
-          Cinematographer: Pepe Valencia
-          Editor: Robert Anich Cole
-          Music: John Ottman
-          Animation: Imagi Animation Studios
-          Length: 94 Minutes

அறிமுகக்காட்சி வால்-ஈ திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அதாவது பூமியில் ஏற்பட்ட அதீத சுற்றுப்புறச்சூழல் மாசின் காரணமாக மனிதர்கள் பூமிக்கு அப்பால் மெட்ரோ சிட்டி என்னும் ஒரு மிதக்கும் நகரத்தை உருவாக்கி அங்கே வாழ்கின்றனர். மனிதனின் பெரும்பாலான வேலைகளை ரோபோக்களே செய்துவிடுகின்றன.

கதையின் நாயகன் டோபி, ஒரு புத்திசாலி சிறுவன். அவனது தந்தை பிரபல விஞ்ஞானி டென்மா. ஒரு நாள் டோபி தனது தந்தையுடன் அவரது ஆய்வுக்கூடத்திற்கு செல்கிறான். அங்கே டென்மா, மற்றொரு அனு விஞ்ஞானியான எலிபன், மெட்ரோ சிட்டியின் சர்வாதிகார ஜனாதிபதி ஸ்டோன் மூவரும் ஒரு ஆராய்ச்சி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். எலிபன் தான் கண்டுபிடித்துள்ள நீல, சிகப்பு அனுக்களை பற்றி விவரிக்கிறார். நீல நிற அனுவை ரோபோவிற்குள் செலுத்தினால் ஆக்க சக்தியையும் சிகப்பு நிற அனுவை செலுத்தினால் அழிவு சக்தியையும் தரும் என்று குறிப்பிடுகிறார். ஒரு சோதனை முயற்சிக்காக ரோபோவின் உடலில் சிகப்பு நிற அனுவை செலுத்த அப்போது நடக்கும் ஒரு விபத்தில் சிறுவன் டோபி உயிரிழக்கிறான்.

இதனால் கவலையும் குற்ற உணர்ச்சியும் ஏற்பட்ட நிலையில் டென்மா, எலிபனின் உதவியோடு டோபியின் உயிரனுவையும் எலிபன் கண்டுபிடித்த நீல நிற அனுவையும் பயன்படுத்தி டோபி உருவில் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். ஆனால் அந்த ரோபோ டோபியை விட செயற்கைத்தனமாக டோபியை விட அதிபுத்திசாலியாக இருக்க டென்மா அதை வெறுத்து வீட்டை வீடு வெளியே அனுப்புகிறார்.

வீட்டை விட்டு வெளியேறும் டோபி பூமியில் தரையிறங்க நேரிடுகிறது. அங்கே கோடிக்கணக்கான பழைய, உடைந்த ரோபோக்களுடன் சில மனிதர்களுடன் இருக்கின்றனர். டோபிக்கு சில நண்பர்கள் கிடைக்க அவர்கள் டோபியை மனிதன் என்று எண்ணிக்கொள்கின்றனர். அவனது புது நண்பர்கள் அவனை ஹாமெக் என்னும் ரோபோக்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தும் விஞ்ஞானியிடம் அழைத்து செல்கின்றனர். அனைவரும் ஒரே குடும்பத்தினர் போல நெருக்கமாகின்றனர். மேலும் பூமியில் உள்ள ZOG என்ற பழுதடைந்த ராட்சத ரோபோவை டோபி தனது நீல நிற அனுவின் உதவியோடு சரி செய்கிறான்.

இந்நிலையில் காணாமல் போன நீலநிற அனுவிற்காக சர்வாதிகாரி ஸ்டோன் ராணுவத்தின் உதவியோடு டோபியை வலைவீசி தேடி வருகிறார்.

பூமியில், டோபியும் ஒரு ரோபோ என்று கண்டுபிடித்துவிடும் ஹாமேக் அவனையும் அடிமைப்படுத்தி Gladiator டைப்பில் ஒரு மைதானத்தில் ரோபோக்களுக்கு இடையே சண்டை நடத்தி அதில் டோபியை மற்ற ரோபோக்களுடன் சண்டையிட வைக்கிறான். ஒரு கட்டத்தில் ZOGம் டோபியும் நேருக்கு நேர் மோதும் சூழல் வர ZOG நன்றி மறக்காமல் டோபியுடன் சண்டையிட மறுக்கிறது. இந்நிலையில் மெட்ரோ சிட்டியின் ராணுவம் பூமிக்கு வந்து டோபியை கைது செய்கிறது.

சர்வாதிகாரி விஞ்ஞானியிடம், டோபியை dismantle செய்து நீலநிற அனுவை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார். அப்போது விஞ்ஞானிக்கு பீலிங் வந்து டோபியை காப்பாற்ற நினைக்கிறார். இதனால் கோபமடைந்த சர்வாதிகாரி போருக்காக தயார் செய்துவைத்திருந்த ஒரு ராட்சத ரோபோவில் சிகப்புநிற அனுவை செலுத்துகிறார். இப்போது சிகப்புநிற அனுவை உட்கொண்ட ராட்சத ரோபோவிற்கும் நீலநிற அனுவை உட்கொண்ட டோபிக்கும் நடக்கும் சண்டையே க்ளைமாக்ஸ். இரண்டு அனுக்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டால் இறந்துவிடும் என்று அறிந்துக்கொள்ளும் டோபி சிகப்புநிற அனுவின் மீது வேண்டுமென்றே மோதி தன் உயிரை மாய்த்து ராட்சத ரோபோவையும் மாயக்கிறான்.

க்ளைமாக்ஸ் சுபமாக, முன்னர் ZOGக்கு கொடுத்த நீலநிற அனுவின் இரவல் மூலம் டோபியை காப்பாற்றுகிறது ZOG.
இந்தப்படத்தில் இந்திய திரைப்படங்களில் இடம்பெறுவது போல ஒரு பாடல் கூட இருக்கிறது. மேலும் காமெடி காட்சிகள் பல இருக்கின்றன. ஆனால் அவை குழந்தைகள் புரிந்துக்கொள்ளும் வகையில் இல்லை. இந்தப்படத்தை 3Dயில் எடுக்க முயற்சிகள் நடந்து இறுதியில் அந்த எண்ணம கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு (2009) இறுதியில் ஆங்கிலத்திலும் ஜப்பானிய மொழியிலும் வெளியிடப்பட்டு சுமாரான வெற்றியினை பெற்றது.

எந்திரன் டச்:
-          அழிவு சக்தி கொடுக்கும் சிகப்புநிற அனு (எந்திரனில் சிகப்புநிற சிப்)
-          விஞ்ஞானி ரோபோவை dismantle செய்யும் காட்சியும் அதில் ஊட்டப்பட்ட செண்டிமன்ட் கலவையும்.
-          அதிமுக்கியமாக படத்தின் கடைசி பத்து நிமிடங்கள் டோபிக்கும் ராட்சத சிகப்புநிற அனுவை உட்கொண்ட ராட்சத ரோபோவுக்கும் நடக்கும் சண்டைக்காட்சி அச்சுஅசலாக எந்திரனை நினைவுப்படுத்தியது.

ப்ளஸ்: அருமையான அனிமேஷன். அனிமேஷன் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியாக ஒரு வித இதமான மனநிலையை கொடுத்தது.

மைனஸ்: காம்ப்ளிகேட்டட் கதை. சிறுவர்களுக்கான படம் என்று சொல்லிவிட்டு சர்வாதிகாரம், கம்யூனிசம் என்று எதை எதையோ படத்திற்குள் நுழைத்திருக்கிறார்கள்.

பதிவிறக்க லிங்குகள்:
டோரன்ட் லிங்க்: Astro Boy DVD RIP
நேரடி லிங்குகள்: Astro Boy DVD RIP

இரண்டிலும் சப்-டைட்டில்கள் இணைக்கப்பட்டுள்ளன.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 comments:

எல் கே said...

:))

nis said...

நல்லவேளை படம் பார்க்க முதல் இந்த திரைப்படத்தை பற்றி எழுதவில்லை :)

Anonymous said...

:O
:)

வைகை said...

இந்த படத்தையும் பாத்துருவோமே!! தகவலுக்கு நன்றி பிரபாகரன்!!

karthikkumar said...

:)))))

Unknown said...

சூப்பரா இருக்குங்க விமர்சனம்.. கண்டிப்பாகப் பார்க்கனும்..

Arun Prasath said...

ஏன் தல, எந்திரன் 3 வருசமா எடுத்தாங்க. இந்த படம் 2009 ல தான் வந்திருக்கு? அப்பறம் எப்டி முன்னோடின்னு சொல்ல முடியும்?

Unknown said...

ஆஹா .படத்த டவுன்லோட் பண்ணிடுவோம்

ADMIN said...

வழக்கமான விமரிசையான விமர்சனம்... நானும் டவுன்லோட் பண்ணி பார்த்துடுறேன்..!

***********

தங்கள் வருகைக்கும் விமரிசனத்திற்கு மிக்க நன்றி.. பிரபாகரன் அவர்களே..!

Unknown said...

விமர்சனம் அருமை

எஸ்.கே said...

சூப்பர் விமர்சனம்!

சைவகொத்துப்பரோட்டா said...

விரிவான அலசலுக்கு நன்றி நண்பா.

Anonymous said...

அட...ரொம்ப நல்ல விமர்சனம் ...//உதவியோடு டோபியை //வலைவீசி// தேடி வருகிறார்//தினத்தந்தி வார்த்தை.

எப்பூடி.. said...

எந்திரன் திரையரங்க வசூல் குறைஞ்சாகூட எந்திரன் பதிவுலக வசூல் குறையாது போல?

Admin said...

நான் கார்டூன் பிரியன். Astro Boy முதலில் கார்டூனாக வந்தது. முதலில் சில எபிசோட்கள் வேறு ஏதோ சேனலில் பார்த்துள்ளேன். பிறகு சுட்டி டிவியில் இந்த கார்ட்டூனை நான் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். எனக்கு பிடித்த கார்ட்டூன்களில் இதுவும் ஒன்று. இது படமாக வந்துள்ளது என்பது இதை படித்த பின் தான் தெரிந்துக் கொண்டேன். விரைவில் இதை பார்க்கிறேன். தகவகுக்கு நன்றி, நண்பா..!

Admin said...

//தகவகுக்கு நன்றி, நண்பா..!//

மன்னிக்கவும்.

தகவலுக்கு நன்றி, நண்பா!

ம.தி.சுதா said...

நல்லதொரு பதிவு.. தேடலின் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனமும் போட்டு லிங்க்கும் குடுத்து டவுன்லோடு பண்ணச்சொல்லும் உங்க நல்ல மனசு யாருக்கு வரும்?

NKS.ஹாஜா மைதீன் said...

நானும் ஆஜர் நண்பரே....

Philosophy Prabhakaran said...

@ LK, nis, கல்பனா, வைகை, இரவு வானம், karthikkumar, பதிவுலகில் பாபு, Arun Prasath, நா.மணிவண்ணன், தங்கம்பழனி, விக்கி
உலகம், எஸ்.கே, சைவகொத்துப்பரோட்டா, ஆர்.கே.சதீஷ்குமார், எப்பூடி.., Abdul Basith, ம.தி.சுதா, சி.பி.செந்தில்குமார், NKS.ஹாஜா மைதீன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ Arun Prasath
// ஏன் தல, எந்திரன் 3 வருசமா எடுத்தாங்க. இந்த படம் 2009 ல தான் வந்திருக்கு? அப்பறம் எப்டி முன்னோடின்னு சொல்ல
முடியும்? //

இது ஒரு நல்ல கேள்வி இருப்பினும் astro boy என்பது 1952ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைகாட்சி தொடர்... பின்னர்
பல வருடங்கள் கழித்து நாவலாக வெளிவந்து இப்போது திரைப்படமாக வெளிவந்திருக்கிறது...

மேலும் மூன்று வருடங்களுக்கு முன்பு ஷங்கர் எந்திரன் படத்தின் முழுக்கதையையும் கையில் வைத்திருந்தார் என்று
நீங்கள் எண்ணுகிறீர்களா... astro boy வெளிவந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது... அதை பார்த்தபின்பு எந்திரன் படத்தில்
மாறுதல்களை செய்திருக்கலாம் என்பது எனது கருத்து...

Philosophy Prabhakaran said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்
// அட...ரொம்ப நல்ல விமர்சனம் ...//உதவியோடு டோபியை //வலைவீசி// தேடி வருகிறார்//தினத்தந்தி வார்த்தை. //

விவரம் தெரிந்த வயதில் இருந்து தினத்தந்தி வாசிப்பதன் விளைவு... சுட்டிக்காட்டியதற்கு நன்றி... மாற்றிக்கொள்ள
முயல்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// எந்திரன் திரையரங்க வசூல் குறைஞ்சாகூட எந்திரன் பதிவுலக வசூல் குறையாது போல? //

இதனால் தாங்கள் கூற விரும்புவது...?

Philosophy Prabhakaran said...

@ Abdul Basith
// நான் கார்டூன் பிரியன். Astro Boy முதலில் கார்டூனாக வந்தது. முதலில் சில எபிசோட்கள் வேறு ஏதோ சேனலில்
பார்த்துள்ளேன். பிறகு சுட்டி டிவியில் இந்த கார்ட்டூனை நான் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். எனக்கு பிடித்த கார்ட்டூன்களில்
இதுவும் ஒன்று. இது படமாக வந்துள்ளது என்பது இதை படித்த பின் தான் தெரிந்துக் கொண்டேன். விரைவில் இதை
பார்க்கிறேன். தகவகுக்கு நன்றி, நண்பா..! //

சுட்டி டி.வியில் Astro Boy ஒளிபரப்பு என்ற தகவலை உங்கள் மூலமாகவே தெரிந்துக்கொண்டேன்... எந்த நேரத்தில்
ஒளிபரப்புகிறார்கள் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்...

Admin said...

//எந்த நேரத்தில்
ஒளிபரப்புகிறார்கள் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்..//

இப்பொழுது நிறுத்திவிட்டார்கள் நண்பா... 2008-2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பினார்கள்.