வணக்கம் மக்களே...
கடந்த நவம்பர் 23ம் தேதி நடந்த பதிவர் சந்திப்பு கம் ப்ரிவியூ ஷோ அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
பதிவுலகம் அறிமுகமான புதிதில் இருந்தே பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்வதில் எனக்குள் ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த நவம்பர் மாத 22ம் தேதி உண்மைத்தமிழன் அவர்கள் அவரது வலைப்பூவில் ஒரு இடுகையை இட்டிருந்தார். சென்னை பதிவர்களுக்கு ஒரு அவசர அழைப்பு என்று தலைப்பிட்டிருந்த அந்த இடுகையில் இயக்குனர் கரு.பழனியப்பன் பதிவர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாக எழுதியிருந்தார். இதைப் படித்ததும் நான் கொண்ட மனமகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஸ்கூல் பசங்க எக்ஸ்கர்ஷன் போகும்போது முந்தய நாள் இரவே ஒருவித திளைப்பில் இருப்பார்கள். எனக்கும் அப்படித்தான் இருந்தது. பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டிருந்தேன். மறுநாள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உண்மைத்தமிழனுக்கு போன் செய்து எனது வருகையை உறுதி செய்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டேன். நினைத்தது போலவே விடிந்ததும் போனை எடுத்து அவரை அழைத்து நல்ல தூக்கத்தில் இருந்த அவரை எழுப்பிவிட்டேன். மனிதர் கடுப்பாகிவிட்டார் என்பது அவரது குரலிலேயே தெரிந்தது.
மாலையில் சம்பவ இடத்திற்கு ஊருக்கு முன்னாடி சென்றுவிட்டேன். மறுபடியும் உண்மைத்தமிழனுக்கு கால் செய்து ப்ரோக்ராம் இருக்குதானே என்று சந்தேகத்தொனியில் கேட்டேன். இருக்கு தம்பி நான் வர்றதுக்கு இன்னும் அரைமணிநேரம் ஆகும் அதுவரைக்கும் அங்கேயே இருங்கன்னு சொன்னார். அந்த அரைமணிநேரத்தை நான் கடப்பதற்குள் விழி பிதுங்கிவிட்டது. பின்னர் ஒருவழியாக உண்மைத்தமிழன் வந்திறங்கினார். ஏற்கனவே அவரை ப்ரோபைல் படத்திலும், ஒரு திருமண புகைப்படத்திலும் பார்த்திருந்ததால் உடனே அடையாளம் கண்டு அவரிடம் சென்று கைகுலுக்கினேன்.
சில நிமிடங்களில் அந்த இடத்தில் ஒரு பத்து பதினைந்து பேர் கூடிவிட்டனர். ஆனால் அவர்கள் யார்...? அவர்களுடைய வலைப்பூவின் பெயர்...? என்ன என்பதை தெரிந்துக்கொள்ள முடியவில்லை. பாதி பேர் வடிவேலு படத்தையும், கவுண்டமணி படத்தையும் தானே ப்ரோபைல் படத்தில் வைக்கிறார்கள். சிலர் உண்மைத்தமிழனை ஆரத்தழுவியதை பார்த்தபோது பிரபல பதிவர்களாக இருக்கக்கூடும் என்று மட்டும் தெரிந்தது. ஆனால் ஒரு பிரபல பதிவரிடம் போய் நீங்கள் யார் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பேன். எனவே, எனது துளைகளை மூடிக்கொண்டு இருந்தேன். ஆர்வம் தாங்க முடியாமல் அவ்வப்போது உண்மைத்தமிழனிடம் ரகசியமாக இவர் யார்...? அவர் யார்...? என்று கேட்டபடி இருந்தேன்.
பதிவர்களை விட வாசகர்கள் அதிகம் வந்திருந்தனர். எனினும், அனைவருமே ஏதோ முதியோர் கிரிக்கெட் டீமை சேர்ந்தவர்கள் போலவே காட்சியளித்தனர். சிறிது நேரத்தில் வாலிப வயது பதிவராக “வலைமனை” சுகுமாரன் வந்து சேர்ந்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். நேரம் ஆக, ஆக பதிவர்கள் வருகை தந்தபடி இருந்தனர். ஆனால் பெரும்பாலான முகங்கள் புதியதாக ஆனால் முதியதாக இருந்தன. பலரிடம் கைகுலுக்கி அறிமுகம் செய்துக்கொண்டேன். பதிலுக்கு அவர்களும் அவர்களின் இயற்பெயர்களை சொல்லி அறிமுகம் செய்துக்கொண்டார்கள். யோவ்... உங்க பெயரை யார் கேட்டது...? ப்ளாக் பெயரை சொல்லுங்கய்யா என்று செல்லமாக கடிந்துக்கொண்டேன்.
கொஞ்சம் இருட்டியதும் நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நம்ம தல ஜாக்கி சேகர் குடும்பத்தோடு என்ட்ரி கொடுத்தார். ஜாக்கியையும் அவரது மனைவியையும் பார்த்தபோது பொறாமையாக இருந்தது. ஒருவனின் படைப்புகளை குறிப்பாக எழுத்துக்களை ரசிக்கும் மனைவி அமைவது மிகவும் அரிது. ஜாக்கிக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது. THEY ARE MADE FOR EACH OTHER என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். என்னுடைய பதிவுகளை சில பெண் தோழிகள் படித்துவிட்டு “நீ என்னென்னவோ எழுதியிருக்க... எனக்கு ஒண்ணுமே புரியல...” என்று சொல்கின்றனர். அதாவது எனக்கு தமிழ் படிக்க தெரியாது என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்கு ஒரு பெருமை. அப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் கலியுகத்தில் உங்கள் மனைவியைப் போல சில பெண்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.
இந்த பதிவர் சந்திப்பில் எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரம் “அலைகள்” பாலாவின் நட்பு. என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுபிடித்தது, எனது பழைய இடுகை ஒன்றைப் பற்றி நினைவில் வைத்துக்கொண்டு கூறியது என்று மனிதர் சில ஆச்சர்யங்களை கொடுத்தார். ஒரே வயதுவரம்பை சார்ந்தவர்கள் என்பதால் இருவரும் ஒட்டிக்கொண்டோம். இனி எந்தப்படம் பார்த்தாலும் இருவரும் சேர்ந்தே பார்த்து சேர்ந்தே விமர்சனம் எழுதுவோம் என்று முடிவு செய்துக்கொண்டோம். நண்பேண்டா...!
படம் ஆரம்பித்த பிறகு நிறைய பேர் வருகை தந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லை. பார்வையாளன் உட்பட சில பதிவர்கள் வந்திருந்ததாக கூறுகின்றனர். ஆனால் அவர்களை சந்திக்க முடியாமல் போனதில் எனக்கு ரொம்பவும் வருத்தம். கேபிள் அண்ணன் தாமதமாக வந்திருந்த போதிலும் இடைவேளையின் போது அவரிடம் சில வார்த்தைகள் பேச முடிந்ததில் மகிழ்ச்சி. மேலும் இடைவேளையில் இயக்குனர் கரு.பழனியப்பனை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அவருடன் மீனாட்சியை அழைத்து வராதது ஏமாற்றம் அளித்தது.
நான் எதிர்பார்த்து வராமல் போன பதிவர்கள் பட்டியல் நீளமானது. கே.ஆர்.பி.செந்தில், டோண்டு, மங்குனி அமைச்சர், அட்ராசக்க செந்தில் குமார், சிரிப்பு போலீஸ், வந்தே மாதரம் சசி இப்படி ஏகப்பட்ட பெரிய தலைகள் மிஸ்ஸிங். அதிமுக்கியமாக திரையரங்க வாடகை பற்றிய விவரங்களை கேட்டறிய நவீன நாரதர் வராதது குறித்து மிகவும் அப்செட்.
கொஞ்சம் சீரியஸ்:
(சம்பந்தப்பட்ட பதிவர்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை)
பிரபல பதிவர்கள் எப்பொழுதுமே எல்லோருடனும் சுமூக உறவை மெயின்டெயின் பண்ண விரும்புகின்றனர். நல்ல விஷயம் தான், ஆனால் இதன் காரணமாக ஒருவருக்கொருவர் மாற்றுக்கருத்துக்களை கூட பகிர்ந்துக்கொள்வதில்லை. பதிவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் மாற்றுக்கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் தானே அது ஆரோக்கியமான நட்பு.
கொஞ்சம் சிரிப்பு:
நீண்ட நாட்களாகவே பதிவுலகில் நானொரு இளம்பதிவர் என்ற கர்வம் எனக்கு இருந்தது. அதை மறுபடியும் ஒருமுறை கன்பார்ம் செய்தது பதிவர் சந்திப்பு. அநேகமாக வந்திருந்தவர்களில் என்னை விட வயது குறைவானவர்கள் யாரும் இல்லை என்றே கருதுகிறேன். ஒருவேளை, யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
அடுத்த பதிவர் சந்திப்புக்காக காத்திருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
87 comments:
உங்கள் அனுபவத்தை மிக அழகாக பதிவிட்டுள்ளீர்கள் நண்பரே...உங்களுக்கு எனது வாழத்துக்கள்....
யாராவது இந்தத் தம்பிக்கு "இளைய பதிவர் விருது" கொடுங்கப்பா...
நீண்ட நாட்களாகவே பதிவுலகில் நானொரு இளம்பதிவர் என்ற கர்வம் எனக்கு இருந்தது//
ஹெல்லோ..நாங்க இருக்கோம் பாஸ்..
நவீன நாரதர் வராதது குறித்து மிகவும் அப்செட்.//
ரைட்டு..இந்த ஆட்டைக்கு நான் வரல..
அனுபவம் அழகாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே.....
பதிவர் சந்திப்பை குறித்த உங்களது மனம் திறந்த கருத்துக்களுடன், இடுகையை நன்றாக தொகுத்து இருக்கீங்க. :-)
பகிர்வுக்கு நன்றி நண்பா.
ஒரு பதினைந்து நாள் லீவ் எடுத்ததில இதெல்லாம் நான் மிஸ் பண்ணிட்டேன்!!!:-(
நல்ல HAPPY ஆ இருந்திருக்கீங்க போல
எனக்கு ஒரு 15 வயது என வைத்து கொள்ளுங்களேன்.
:)))))))
:)
Good one
Kudukuduppai
உங்க அனுபவத்தை நல்லா எழுதியிருக்கிறீங்க, உங்க நெத்தியோட ரெண்டு கரையையும் தலை மயிரால எதுக்கு கவர் பண்ணியிருக்கிறீங்க? முகம் முளுசா தெரியணுமில்ல :-)
நாங்களும் இருக்கோம்ல ..... வாழ்த்துக்கள் ...இனிய பகிர்வு....
சந்திப்பு பற்றி நீங்க தான் தெளிவா எழுதியிருக்கறீங்க போல! படங்களுடன் பதிவை எதிர்பார்த்தேன்.
ஒரு மணி நேரம் முன்பே சென்று அனைவருடனும் பேச நினைத்தேன்...
அதை மனத்தில் வைத்து சீக்கிரம் கிளம்பினேன்.. ஆனால். எதிர்பாராத விதமாக , காங்கிரஸ் கட்சியன்ரின் ஊர்வலம்...டிராஃபிக்...
இதை மீறி நான் அங்கே வரும்போது படம் ஆரம்பித்து விட்டது...
உண்மைதமிழன் உள்ளிட்ட சிலரை மட்டுமே பார்த்து பேச முடிந்தது..
அனைவரையும் பார்க்க முடியவில்லையே என்ற வருத்ததை , இந்த பதிவு போக்கி விட்டது...
குட் ரிப்போர்ட்...
சூப்பரப்பு! நல்லா இருக்கு உங்க அனுபவம்!
//என்னுடைய பதிவுகளை சில பெண் தோழிகள் படித்துவிட்டு “நீ என்னென்னவோ எழுதியிருக்க... எனக்கு ஒண்ணுமே புரியல...” என்று சொல்கின்றனர்//
எங்கயுமே அப்பிடித்தானா?
ஆனா படிச்சாங்க இல்ல? அதச்சொல்லுங்க..
அவ்வ்வ்வ்!
//என்னை விட வயது குறைவானவர்கள் யாரும் இல்லை என்றே கருதுகிறேன்.//
ஏன் நானில்லை.. :))
கேபிள் சங்கர்
அருமையான சந்திப்பு!
உங்கள் அனுபவத்தை அழகாக தொகுத்திருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
ஒரு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது உங்களுக்கு.. அநேகமாக நானும் வயதில் குறைந்த பதிவர் தான் என நினைக்கிறேன்.
ஹும்ம்ம்ம்ம்ம்ம்,,, பொறாமை லைட்டாஆ
// சிறிது நேரத்தில் வாலிப வயது பதிவராக “வலைமனை” சுகுமாரன் //
என்னை ரொம்ப புகழ்றீங்க...
ஹி... ஹி.. நைஸ் போஸ்ட் நண்பா...
//பாதி பேர் வடிவேலு படத்தையும், கவுண்டமணி படத்தையும் தானே ப்ரோபைல் படத்தில் வைக்கிறார்கள்.//
நான் என் ஒரிஜினல் புகைப்படத்தையே புரோபைலிலும் வைத்துள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நான் நீங்கள் கூறியுள்ள பாதி பேரில் வராமல், மீதிப்பேரில் வருகிறேன் எனத் தெரிவித்துக்கொள்கிறேன், யுவர் ஹானர்!
நீண்ட நாட்களாகவே பதிவுலகில் நானொரு இளம்பதிவர் என்ற கர்வம் எனக்கு இருந்தது//
நான் இருக்கேன் அண்ணே
நீங்க இளம் பதிவர்னு சொல்றீங்க..
வயசு என்னனு சொல்லவே இல்லையே..
அப்ப தான மத்தவங்கள ஒப்பிட்டு சொல்ல முடியும்.
Thampikku age 22 , profile parunga. @pirabha , profile la age thappa irukke .
தம்பி..
கடுப்பெல்லாம் இல்லை.. அரைத் தூக்கத்துல இருந்ததாலேயும், காது மக்கர் செய்ததாலேயும்தான் திருப்பித் திருப்பி யார், யாருன்னு கேட்டேன். ஸாரி. மன்னிச்சுக்க..
ஆனாலும் இப்போதைக்கு நீதான் வலையுலகின் சின்னப்புள்ளை.. நிஜமான யூத்துன்னும் சொல்லலாம்.. இதையே கடைசிவரைக்கும் மெயின்டெயின் பண்ணு..!
//என்னை விட வயது குறைவானவர்கள் யாரும் இல்லை என்றே கருதுகிறேன்.//
நான் வந்திருந்தா இந்த கேள்விக்கு இடமே இருந்திருக்காது.
// நீண்ட நாட்களாகவே பதிவுலகில் நானொரு இளம்பதிவர் என்ற கர்வம் எனக்கு இருந்தது. அதை மறுபடியும் ஒருமுறை கன்பார்ம் செய்தது பதிவர் சந்திப்பு. //
நா என்னாத்துக்கு அங்கிட்டு வரலைன்னு இப்ப தெரியுதா
எனக்கும் வயசு கம்மிதான் ஆனா நான் பதிவர இல்லையா அப்படிங்கரத நீங்களே முடிவு பண்ணிகோங்க.
@ arunprasath
நீண்ட நாட்களாகவே பதிவுலகில் நானொரு இளம்பதிவர் என்ற கர்வம் எனக்கு இருந்தது//
நான் இருக்கேன் அண்ணே///
மச்சி எதுக்கு இப்படி காலங்காத்தாலே பொய் சொல்றீங்க
நல்ல பகிர்வு... அனுபவம் சூப்பர் போல.... good flow
சென்ற வாரம் சுகப்பிரசவத்தில் பிறந்து இன்று இல்லத்தில் தொட்டில் குழந்தையாக மல்லாக்க படுத்து கொண்டு பதிவுகளை எழுதுவது பற்றி சிந்தித்து கொண்டிருக்கும் என்னை விட இளையவன் என சொல்லும் பிரபா! தங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்.
கொஞ்சம் சிரிப்பு:
நீண்ட நாட்களாகவே பதிவுலகில் நானொரு இளம்பதிவர் என்ற கர்வம் எனக்கு இருந்தது. அதை மறுபடியும் ஒருமுறை கன்பார்ம் செய்தது பதிவர் சந்திப்பு. அநேகமாக வந்திருந்தவர்களில் என்னை விட வயது குறைவானவர்கள் யாரும் இல்லை என்றே கருதுகிறேன். ஒருவேளை, யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்////
யோவ் உனக்கு என்ன வயசு உன்னைவிட நாங்க சின்ன பசங்க இருக்கோம்....
அப்போ நீங்க என்னைவிட வயதில் மூத்தவரா? நல்ல பகிர்வு நண்பா!! நன்றி!
என்ன வயசு என்பதை விட எவ்வளவு ரவுசு என்பதே முக்கியம்.
விரைவில் உங்களை சந்திக்கிறேன்
nan vara muyarchi seythen.aluval kaaranamaka varamudiyavillai. arumaiyaana pathivu.vaazhththukkal:ENNA NADAKKUTHU NAATTULA:BLOG.
அருமையான சந்திப்பு + பகிர்வு நண்பா!!
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
நல்ல அனுபவம்!!!!
//ஒருவேளை, யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.//
நான் இருக்கேன்........சொன்னா நம்புவீங்களா? ;)
ஹரிஸ்
நீண்ட நாட்களாகவே பதிவுலகில் நானொரு இளம்பதிவர் என்ற கர்வம் எனக்கு இருந்தது//
ஹெல்லோ..நாங்க இருக்கோம் பாஸ்..
நாங்களும் இருக்கோம்ல
vandhavanga ellam chennai la irundhu vandhala apdi irukalam prabha!!!... Naangalum irukomla!!!
தம்பி புத்தக கண்காட்சி வருது அப்போ மீட் பண்ணலாம் ..
//இதன் காரணமாக ஒருவருக்கொருவர் மாற்றுக்கருத்துக்களை கூட பகிர்ந்துக்கொள்வதில்லை//
அதான் பதிவுகள்லேயே வந்துருதுங்களே, பதிவர் சந்திப்பு பெரும்பாலும் ஜால்ரா சத்தமாத்தான் இருக்கும், இருக்கனும்.
சிறந்த அனுபவம் கொடுத்து வைத்தவர் தம்பி நீங்கள்
வாழ்த்துகள் சிறந்த பதிவு:)
மிக நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...!
தயவு செய்து எனக்கு போன் செய்யாதிங்க .....! ப்ளீஸ் .....
http://erodethangadurai.blogspot.com/
பிரபா செம சூப்பர் பதிவு,அனுபவத்தை பதிவிடும்போது கற்பனையை விட செம சூப்பராக அமைந்து விடுவது கண்கூடு
>>>ஸ்கூல் பசங்க எக்ஸ்கர்ஷன் போகும்போது முந்தய நாள் இரவே ஒருவித திளைப்பில் இருப்பார்கள். எனக்கும் அப்படித்தான் இருந்தது. >>>
பிரமாதமான சிறு பிராயத்து நினைவுகள்
<>>>. ஒருவனின் படைப்புகளை குறிப்பாக எழுத்துக்களை ரசிக்கும் மனைவி அமைவது மிகவும் அரிது. ஜாக்கிக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது.>>>
அவருக்கு வாழ்த்துக்கள்,உங்களுக்கு நன்றிகள்
...>>>நீண்ட நாட்களாகவே பதிவுலகில் நானொரு இளம்பதிவர் என்ற கர்வம் எனக்கு இருந்தது. அதை மறுபடியும் ஒருமுறை கன்பார்ம் செய்தது பதிவர் சந்திப்பு. அநேகமாக வந்திருந்தவர்களில் என்னை விட வயது குறைவானவர்கள் யாரும் இல்லை என்றே கருதுகிறேன். ஒருவேளை, யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.>>>
இதோ நான் இருக்கேன் ,உங்களை விட 4 வயது இளையவன்,,ஹி ஹி ஹி
>>> பதிவர்கள் எப்பொழுதுமே எல்லோருடனும் சுமூக உறவை மெயின்டெயின் பண்ண விரும்புகின்றனர். நல்ல விஷயம் தான், ஆனால் இதன் காரணமாக ஒருவருக்கொருவர் மாற்றுக்கருத்துக்களை கூட பகிர்ந்துக்கொள்வதில்லை. >>>
அப்படி இல்லை ,எல்லோரும் தனி மெயிலில் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
நான் வராததற்க்கு காரணம்,
1நான் ஈரோடு 400 கி மீ
2..லீவ் கிடைக்கலை.
3.படம் பார்த்தாச்சு (ரிலீஸ் ஆனதும்)
அப்பா பிரபாகரு, நல்லவேளை இந்த பதிவை கேபிள் அண்ணா படிக்கவில்லை, இல்லை என்றால் அவர் இருக்கும் போது நீங்க எப்படி யூத்துன்னு சொல்லலாம்.
நான் வராவிட்டால் நீங்கதான் யூத்து. நல்ல பதிவு.
////////நீண்ட நாட்களாகவே பதிவுலகில் நானொரு இளம்பதிவர் என்ற கர்வம் எனக்கு இருந்தது. அதை மறுபடியும் ஒருமுறை கன்பார்ம் செய்தது பதிவர் சந்திப்பு. அநேகமாக வந்திருந்தவர்களில் என்னை விட வயது குறைவானவர்கள் யாரும் இல்லை என்றே கருதுகிறேன். ஒருவேளை, யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.//////
எல் .கே .ஜி டீச்சர் ஹோம் வொர்க் குடுத்துடாங்க அங்கிள் இல்லேன்னா நான் வந்திருப்பேன்
நல்லதொரு பகிர்வு!
சந்தோசப்பகிர்வு போல இடுகை முழுவதும் சந்தோசமே அப்பியிருக்கிறது
அலைகள் பாலாவிற்கும் வாழ்த்துகள்
நல்ல பதிவு பிரபாகர்! நிறைய உண்மைய சொல்லியிருக்கிங்க! ஆனா ஒரே ஒரு பொய் மட்டும் சொல்லியிருக்கிங்க! நீங்கதான் இளைய பதிவர் என்று!! இது அலுவலக பெட்டியிலிருந்து எழுதுறேன், உங்க ப்பாலோ பண்ண கனெக்ட் பண்ண முடியல பிறகு வருகிறேன்!! நீங்கலு நேரமிருந்தால் வரவும் http://unmai-sudum.blogspot.com/
மிக அழகாக தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள்.. தங்களின் அனுபவங்களை.. ! பாராட்டுக்கள்..!
நன்றி! வாழ்த்துக்கள்..!
அன்பின் பிரபாவுக்கு..
என்னை பற்றிய உங்கள் கூர்ந்த கவனிப்புக்கு மிக்க நன்றி.
மாற்றுகருத்து இருக்கவில்லை பேசவில்லை என்று யார் சொன்னது... பதிவ்ர் சந்திப்பு முடிந்து குழு குழவாக நிறைய மர்க நியாயங்கள் நடக்கும் அதை நீ பார்க்கவில்லை.. இந்த சந்திப்பில் அது கொஞ்சமாக நடந்தது அவ்வவளவுதான்.
மெரினா சந்திப்பில் மாற்றுகருத்தை முன் வைத்து விவாவதம்பெரிய அளவில் இருக்கும்..
விரிவான பதிவுக்கு நன்றி..
நிறைய தமிழ் படிக்கும் அலட்டாத பெண்கள் இருக்கின்றார்கள்.. கர்வம் இருக்கும் இடத்தில் நிச்சயம் அலட்டல் வரும்.. கர்வமுள்ளவர்களோடு பழக்கம் வைத்தால் அது எப்படியும் நம்மையும் கர்வம்அ கொள்ள செய்ய உசுப்பும்...எனக்கு நிறைய வாசகிகள் இருக்கின்றார்கள். அது பற்றி வெளிப்படையாக பேசமுடியாது...காரணம் அந்த பேரை வைத்து கூட நக்கல் விட வாய்ப்பு இருக்கின்றது என்பதால்...
ஹலோ....நாங்களும் யூத் தான் தெரியும்ல....என்னோட profile போட்டோவை பாருங்க உண்மை தெரியும்.
@ பிரஷா, கலாநேசன், ஹரிஸ், தமிழ் மதி, Chitra, சைவகொத்துப்பரோட்டா, சிவா என்கிற சிவராம்குமார், nis, Kudukuduppai, எப்பூடி.., தமிழன்-கோபி, KANA VARO, பார்வையாளன், ஜீ..., கேபிள் சங்கர், எஸ்.கே, பதிவுலகில் பாபு, கவிதை காதலன், இரவு வானம், Sukumar Swaminathan, வழக்கறிஞர் சுந்தரராஜன், Arun Prasath, இந்திரா, மதார், உண்மைத் தமிழன், மண்டையன், Madhavan Srinivasagopalan, karthikkumar, அருண் பிரசாத், சிவகுமார், சௌந்தர், நாகராஜசோழன் MA, விக்கி உலகம், THOPPITHOPPI, thamizhan, எம் அப்துல் காதர், anu, ஆமினா, நா.மணிவண்ணன், மதுரை பாண்டி
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...
@ @ ஹரிஸ், nis, தமிழன்-கோபி, கேபிள் சங்கர், கவிதை காதலன், Arun Prasath, மண்டையன், Madhavan Srinivasagopalan, karthikkumar, சிவகுமார், சௌந்தர், நாகராஜசோழன் MA, ஆமினா, நா.மணிவண்ணன், மதுரை பாண்டி, சி.பி.செந்தில்குமார், பித்தனின் வாக்கு, அப்பாவி தமிழன், ரஹீம் கஸாலி
அய்யா பெரிய மனுஷங்களா... நாங்க இருக்கோம், நாங்க இருக்கோம்னு வாசன் ஐ கேர் விளம்பரம் மாதிரி சொல்றீங்க... நம்ம அண்ணன் உண்மைத்தமிழன் பின்னூட்டத்தை படித்து பாருங்கள்... அவரே சொல்லிவிட்டார் நான் தான் ஒரிஜினல் யூத்துன்னு... இப்போ என்ன சொல்றீங்க...
@ சிவா என்கிற சிவராம்குமார்
// ஒரு பதினைந்து நாள் லீவ் எடுத்ததில இதெல்லாம் நான் மிஸ் பண்ணிட்டேன்!!!:-( //
அதனாலென்ன... கவலை வேண்டாம் அடுத்த பதிவர் சந்திப்பில் நிச்சயம் கலந்துக்கொள்வீர்கள்...
@ எப்பூடி..
// உங்க நெத்தியோட ரெண்டு கரையையும் தலை மயிரால எதுக்கு கவர் பண்ணியிருக்கிறீங்க? //
நான் என்ன பண்றது...? எதுவுமே ப்ளான் பண்ணி பண்ணலை... அதுவா அந்த மாதிரி வளருது...
@ KANA VARO
// படங்களுடன் பதிவை எதிர்பார்த்தேன். //
அதிக படங்கள் எடுக்க முடியவில்லை... மன்னிக்கவும்...
@ கேபிள் சங்கர்
//என்னை விட வயது குறைவானவர்கள் யாரும் இல்லை என்றே கருதுகிறேன்.//
ஏன் நானில்லை.. :))
கேபிள் அண்ணே... நியாயப்படி நான் உங்களை சித்தப்பான்னு தான் கூப்பிடனும் இருந்தாலும் ஏதோ சின்னப்பையன் மனசு வச்சி அண்ணன்னு கூப்பிட்டுட்டு இருக்கேன்...
@ வழக்கறிஞர் சுந்தரராஜன்
// நான் என் ஒரிஜினல் புகைப்படத்தையே புரோபைலிலும் வைத்துள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நான் நீங்கள் கூறியுள்ள பாதி பேரில் வராமல், மீதிப்பேரில் வருகிறேன் எனத் தெரிவித்துக்கொள்கிறேன், யுவர் ஹானர்! //
Mr.Public Prosecuter, உங்கள் வாதத்தில் எள்ளளவும் நியாயம் இல்லை... ஏனெனில் உங்களுடைய ப்ரோபைலை நான் பார்க்கவே முடியவில்லை...
@ இந்திரா
// நீங்க இளம் பதிவர்னு சொல்றீங்க..
வயசு என்னனு சொல்லவே இல்லையே..
அப்ப தான மத்தவங்கள ஒப்பிட்டு சொல்ல முடியும். //
அடியேன் வயது 22 வருடங்கள் 2 மாதங்கள்....
@ மதார்
// Thampikku age 22 , profile parunga. @pirabha , profile la age thappa irukke . //
மன்னிக்கவும்... அது ஒரு வருடத்திற்கு முன்பு அப்டேட் செய்தது... இப்பொழுது நீங்கள் சொன்னது போல 22 வயது...
@ உண்மைத் தமிழன்
// ஆனாலும் இப்போதைக்கு நீதான் வலையுலகின் சின்னப்புள்ளை.. நிஜமான யூத்துன்னும் சொல்லலாம்.. //
அய்யா இங்க இருக்குற பெரிய மனுஷங்க எல்லோரும் கேட்டுக்கோங்க... அண்ணன் உண்மைத்தமிழனே சொல்லிவிட்டார் இப்ப ஒத்துக்குறீங்களா...
@ உண்மைத் தமிழன்
// இதையே கடைசிவரைக்கும் மெயின்டெயின் பண்ணு..! //
அதுக்காக வயசாகாம இருக்க முடியுமா... இளைஞர்கள் வந்தா வழிவிட்டுத்தானே ஆகவேண்டும்...
@ மண்டையன்
//என்னை விட வயது குறைவானவர்கள் யாரும் இல்லை என்றே கருதுகிறேன்.//
நான் வந்திருந்தா இந்த கேள்விக்கு இடமே இருந்திருக்காது.
அண்ணே... உங்களுடைய வயசு என்னன்னு எனக்கு நல்லா தெரியும்... உங்களை போட்டியில் இருந்து eliminate பண்றேன்...
@ சௌந்தர்
// யோவ் உனக்கு என்ன வயசு உன்னைவிட நாங்க சின்ன பசங்க இருக்கோம்.... //
கைல கொழந்தையோட இருக்குறவங்கள எல்லாம் ஆட்டத்துல சேத்துக்க மாட்டோம்...
@ விக்கி உலகம்
// என்ன வயசு என்பதை விட எவ்வளவு ரவுசு என்பதே முக்கியம். //
அப்படி சொல்லி மனச தேத்திக்க வேண்டியது தான்...
@ anu
// Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article //
என்ன போதையா... சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றீங்க...
@ நா.மணிவண்ணன்
// நாங்களும் இருக்கோம்ல //
அண்ணே... உங்களுக்கு என்னை விட நாலஞ்சு வயசு அதிகம்...
@ சி.பி.செந்தில்குமார்
// இதோ நான் இருக்கேன் ,உங்களை விட 4 வயது இளையவன்,,ஹி ஹி ஹி //
நாலு வயசு மூத்தவன்னு சொல்றதுக்கு பதிலா இளையவன்னு சொல்றீங்களே... நியாயமா...
// அப்படி இல்லை ,எல்லோரும் தனி மெயிலில் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் //
அப்படிஎன்றால் மகிழ்ச்சி தான்...
@ பித்தனின் வாக்கு
// நல்லவேளை இந்த பதிவை கேபிள் அண்ணா படிக்கவில்லை, இல்லை என்றால் அவர் இருக்கும் போது நீங்க எப்படி யூத்துன்னு சொல்லலாம். //
அண்ணே... நீங்கள் பின்னூட்டப்பெட்டியை சரிவர அலசவில்லை... கேபிள் அண்ணன் ஏற்கனவே வந்து நான் தான் யூத்துன்னு அறிவிச்சிட்டு போயிட்டார்...
// நான் வராவிட்டால் நீங்கதான் யூத்து. //
நீங்களுமா...
@ வைகை
// ஆனா ஒரே ஒரு பொய் மட்டும் சொல்லியிருக்கிங்க! நீங்கதான் இளைய பதிவர் என்று!! //
அதுவும் உண்மைதான் அண்ணே....
// நீங்கலு நேரமிருந்தால் வரவும் //
நிச்சயமாக வருகிறேன்...
@ ஜாக்கி சேகர்
முதலில் நம்ம கடைக்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி ஜாக்கி...
// மாற்றுகருத்து இருக்கவில்லை பேசவில்லை என்று யார் சொன்னது... பதிவ்ர் சந்திப்பு முடிந்து குழு குழவாக நிறைய மர்க நியாயங்கள் நடக்கும் அதை நீ பார்க்கவில்லை.. இந்த சந்திப்பில் அது கொஞ்சமாக நடந்தது அவ்வவளவுதான். //
அப்படியா... மிக்க மகிழ்ச்சி...
// மெரினா சந்திப்பில் மாற்றுகருத்தை முன் வைத்து விவாவதம்பெரிய அளவில் இருக்கும்.. //
அது என்ன...? இனி வரவிருக்கும் பதிவர் சந்திப்பா... சொல்லவே இல்லை...
// நிறைய தமிழ் படிக்கும் அலட்டாத பெண்கள் இருக்கின்றார்கள்.. //
உண்மைதான் இருக்கிறார்கள்... ஆனால் நான் சில கால் செண்டர் கலியுகத்து மங்கைகளை பற்றி கூறியிருந்தேன்...
@ ரஹீம் கஸாலி
// ஹலோ....நாங்களும் யூத் தான் தெரியும்ல....என்னோட profile போட்டோவை பாருங்க உண்மை தெரியும். //
ம்ம்ம்... அது உங்க குழந்தையோட போட்டோன்னு எனக்கு தெரியுமே...
திரு. philosophy பிரபாகரன் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்,மற்றும் கண்டன போராட்டம் நாள் குறிப்பிடப்பட்டு நடத்தப்படும்.
இப்படிக்கு யூத்துகள் சார்பாக 60 வயது நிரம்பிய இளமையான பதிவர்!
நானும் நோர்வேயில ஒரு பதிவர் சந்திப்பை நடாத்தும் யோசனையில் இருக்கிறேன். உங்கள் பதிவர் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் இருந்தால் தாங்களேன். சில எண்ணக்கருத்துக்கள் கிடைக்கலாம்.
@ விசரன்
நல்ல விஷயம் நண்பரே... நான் கலந்துகொண்ட முதல் பதிவர் சந்திப்பு இதுதான்... இது ப்ரிவ்யூ ஷோ கம் பதிவர் சந்திப்பாக நடந்ததால் நிகழ்ச்சி நிரல் என்றெல்லாம் Official ஆக எதுவும் இல்லை... நீங்கள் உண்மைத்தமிழன் அவர்களது வலைப்பூவில் சென்று கேளுங்கள் அவர் பல பதிவர் சந்திப்புகளை முன்னின்று நடத்தியதில் அனுபவம் வாய்ந்தவர்...
ஏம்பா, நாங்கல்லாம் இருக்கோம்ல!
நான் கலந்துகிட்ட பதிவர் சந்திப்புகள்ல இதுவரை, நான்தான் வயசுல சின்னவன் தெரியுமா?! :)
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
Post a Comment