வணக்கம் மக்களே...
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் 2010 பற்றி மெயில் வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. 15ம் தேதி வரை கால அவகாசம் இருந்ததால் பொறுமையாக இருந்தேன். நேற்றுதான் அவர்களின் மெயிலை படித்தேன். 20 பிரிவுகளில் விருது என்றதும் எப்படியும் ஒரு எட்டு பிரிவுகளிலாவது கலந்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்திருந்தேன். ஆனால் தாமதமாகவே தெரிந்துக்கொண்டேன் ஒருவர் மூன்றே பிரிவுகளில் தான் கலந்துக்கொள்ள முடியுமாம்.
1. திரைப்பட விமர்சனங்கள் – தமிழ் சினிமா விமர்சனங்கள்
நான் மிகவும் விரும்பி, ரசித்து எழுதுவதென்றால் திரை விமர்சனங்கள் என்று கூறலாம். ஆனால் இதுவரை நான் எழுதியிருக்கும் பன்னிரண்டு திரை விமர்சனங்களில் எதை இணைப்பது என்று குழப்பம் நீடித்தது. ஒரு காலத்தில் ரசித்து எழுதிய இடுகைகளை கூட இப்போது திரும்பி பார்த்தால் மொக்கைஎன தோன்றுகிறது. ஒவ்வொரு விமர்சனத்திலும் நிறைய குறைகளும், கோணல் பார்வைகளும் இருக்க மைனா பட விமர்சனம் மட்டும் ஓரளவுக்கு சரியாக இருந்ததினால் அதை தேர்வு செய்திருக்கிறேன். எனவே எனது முதல் பரிந்துரை:-
2. உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்
சிலரது வலைப்பூக்களை படித்துதான் உலகசினிமாக்களை பார்க்க கற்றுக்கொண்டேன். இதுவரை நான்கு உலக சினிமாக்களை பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன். Don't Look Down மற்றும் Y Mama Tu Tambien இந்த இரு இடுகைகளில் எதை இணைப்பது என்று யோசித்தேன். Don't Look Down படத்தைப் பற்றி ஏற்கனவே ஜாக்கியும் கேபிளும் எழுதியிருப்பதால் அது செல்லாது என்று புரிந்துக்கொண்டேன். ஆனால் இது ஒரு 18+ பதிவு என்பதால் ஏதோவொரு தயக்கம் நீடிக்கிறது. சரி, ஆணுப்பிதான் பார்ப்போமே. எனது இரண்டாவது பரிந்துரை:-
3. நகைச்சுவை, கார்ட்டூன்
எனது எல்லாப் பதிவுகளிலும் நகைச்சுவை கொஞ்சமாக கலந்திருந்தாலும் நகைச்சுவைக்கென தனி இடுகை எழுதியதாக நினைவில்லை. விஜய்யை கலாய்த்து எழுதிய பதிவை பரிந்துரை செய்வதில் விருப்பமில்லை. தீவிரமாக ஆராய்ந்து பார்த்ததில் நான் எனது நண்பனை ரசித்து கலாய்த்த பதிவு ஒன்று நினைவிற்கு வந்தது. இது நகைச்சுவைதானா என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் நான் மிகவும் ரசித்து எழுதிய பதிவு. எனவே, எனது மூன்றாவது பரிந்துரை:-
கேரக்டர் - சினிக்கூத்து சித்தன்
இவற்றிற்கு பதிலாக வேறு எதையாவது இணைக்கலாம் என்று யாருக்காவாது தோன்றினால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள். ஏனெனில் நான் நாளைதான் எனது பரிந்துரைகளை தேர்வு செய்ய இருக்கிறேன்.
மேற்கண்ட மூன்று பிரிவுகளிலும் கடும் போட்டி இருக்கும் என்பது எனக்கு தெரியும். நான் தேர்ந்தெடுத்துள்ள ஒவ்வொரு பிரிவிலும் எழுதுவதற்கு ஸ்பெஷல் ரைட்டர்ஸ் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, திரை விமர்சனம் என்றால் கேபிள், அட்ராசக்க. உலக சினிமா என்றால் ஜக்கி, வருண், பதிவுலகில் பாபு. அப்படி இருக்கும்போது எனக்கு விருது கிடைக்க வாய்ப்புகள் சொற்பமே. மேலும் வாசகர்கள் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள் என்பதால் மிகப்பெரிய வாசகர் வட்டம் கொண்டவர்களுக்கு கொண்டாட்டம் தான். எனினும் போட்டியில் வெல்வதை விட கலந்துக்கொள்வதே முக்கியமானது.
நானும் கோதாவில் இறங்கிட்டேன்.
ஆங் மறந்துட்டேன்... நான் சொல்லிக்கொடுத்த மாதிரியே எழுதி முதலிடம் பெற்ற சி.பி.எஸ்., அதிவேகமாக டாப்புக்கு வந்திருக்கும் பதிவுலகில் பாபு, பார்வையாளன், பத்திற்குள் நுழைந்த ரஹீம், சுடுசோறு, சுடுதண்ணி பதிவர்கள், சென்ற வாரம் சொன்னது போலவே இருபதிற்குள் நுழைந்த LK அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
டிஸ்கி: அடப்பாவிகளா... கும்மி அடிச்சே வலைச்சரத்தையும் TOP 20க்குள் கொண்டு வந்துட்டீங்களே... உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா :)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
35 comments:
வெற்றி பெற வாழ்த்துக்கள்
2 வது பரிந்துரையை எல்லோரிடமும் ஆலோசித்து போடுங்க.
வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்..
மொக்கைஎன தோன்றுகிறது. ஒவ்வொரு விமர்சனத்திலும் நிறைய குறைகளும், கோணல் பார்வைகளும்
நாங்கள் ரசிப்பதே அதைத்தானே,....
Best wishes to you..! :-)
வெற்றிபெற வாழ்த்துக்கள் பிரபாகரன்!!
//
போட்டியில் வெல்வதை விட கலந்துக்கொள்வதே முக்கியமானது.
நானும் கோதாவில் இறங்கிட்டேன்.
//
சூப்பர்,,,,,,,,,,,,,
நீங்கள் வெற்றி பெறுவீர்கள்...!நன்றி! வாழ்த்துக்கள்..!
வற்றிபெற வாழ்த்துக்கள் பிரபா.
வெற்றி அடைய வாழ்த்துக்கள்
நான் ஆல்ரெடி அனுப்பிட்டேன், ஆனா அத வச்சும் ஒரு பதிவு போடலாம்னு என் அறிவு கண்ண தொறந்திட்டீன்க பாஸ்.
ம்ம்ம்..போட்டியில் கலந்துக்கிட்டிங்க, வாழ்த்துக்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
//கும்மி அடிச்சே வலைச்சரத்தையும் TOP 20க்குள் கொண்டு வந்துட்டீங்களே... உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா :)//
எப்பூடி?
வாழ்த்துக்கள் நண்பா!
இரண்டாவது பரிந்துரையை பரிசீலிக்கவும்..
வாழ்த்துக்கள் கலக்குங்க
வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்...!!!
வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துகளும் பாராட்டுகளும் .
போளூர் தயாநிதி
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
நட்புடன்...
"நந்தலாலா" இணைய இதழ்,
nanthalaalaa.blogspot.com
விருது பெற வாழ்த்துக்கள்
http://www.youtube.com/watch?v=1WDvqPOn6g4
http://www.youtube.com/watch?v=75fCJ69mtoo
=
nanthalaalaaaaaaaaaaaaaaaaa
இந்தப் பதிவையே போடுங்கள் நண்பா... இது தான் வெற்றி பெறும்...
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ ஆமினா, ரஹீம் கஸாலி, விக்கி உலகம், பதிவுலகில் பாபு, பார்வையாளன், Ananthi, வைகை, வழிப்போக்கன் - யோகேஷ், தங்கம்பழனி, Lakshmi, karthikkumar, இரவு வானம், தமிழ்வாசி - Prakash, மண்டையன், அருண் பிரசாத், Abdul Basith, ஆர்.கே.சதீஷ்குமார், இளம் தூயவன், சே.குமார், அந்நியன் 2, இந்திரா, polurdhayanithi, Arun Prasath, நந்தலாலா, எப்பூடி.., சாமக்கோடங்கி, Starjan (ஸ்டார்ஜன்)
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...
@ பார்வையாளன்
// மொக்கைஎன தோன்றுகிறது. ஒவ்வொரு விமர்சனத்திலும் நிறைய குறைகளும், கோணல் பார்வைகளும்
நாங்கள் ரசிப்பதே அதைத்தானே... //
இதெல்லாம் உங்களால் மட்டுமே முடியும் பார்வையாளரே...
@ இரவு வானம்
// நான் ஆல்ரெடி அனுப்பிட்டேன், ஆனா அத வச்சும் ஒரு பதிவு போடலாம்னு என் அறிவு கண்ண தொறந்திட்டீன்க பாஸ். //
வாராவாரம் தமிழ்மணம் நமக்கு ஒரு தலைப்பை தயார் செய்து தருகிறதே... உங்களுக்கு தெரியாதா...?
@ நந்தலாலா
// தங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறோம்!! //
எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாதே... வேண்டுமானால் உங்களது இணைய இதழுக்கு வாசகனாக இருக்கிறேன்...
வாழ்த்துக்கள் பிரபா
நான் சொல்லிக்கொடுத்த மாதிரியே எழுதி முதலிடம் பெற்ற சி.பி.எஸ்.,
குரு சொன்னா சரிதான்
மைனா விமர்சனத்துல நீங்க அடிச்சிடுவீங்கன்னு நினைக்கறேன்
Post a Comment