14 December 2010

அலெக்ஸா – ஓர் அலசல்

வணக்கம் மக்களே...

சில வாரங்களுக்கு முன்பு நடந்த பதிவர் சந்திப்பில் அண்ணன் ஜாக்கி சேகர் பதிவரல்லாத வாசக நண்பர் ஒருவரை அழைத்து வந்து நாளொன்றுக்கு 20 மணிநேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பவர் என்று அறிமுகம் செய்துவைத்தார். அன்றைய தினத்தில் பதிவர்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டிய அவர் அலெக்ஸா ரேட்டிங் பற்றி சில தகவல்களை கூறினார். அவற்றுடன் நான் அலெக்ஸா பற்றிய சில தகவல்களை வலையில் இருந்து திரட்டி உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன்.

என்ன...?
அலெக்ஸா என்பது உலகளவில் வலைத்தளங்களுக்கு தரவரிசை வெளியிடும் ஒரு நிறுவனம். அலேக்ஸாவின் தரவரிசை பெரும்பாலும் தினமும் அப்டேட் செய்யப்படுகிறது. (இவர்களின் வரிசைபடுத்தல் நேர்மையானதா என்று பதிவின் பிற்பாதியில் பார்ப்போம்).

ஏன்...?
வலைஞர்கள் மத்தியில் அலெக்ஸா ரேங்க் என்பது அதிமுக்கியமாக கருதப்படுகிறது. அலெக்ஸா ரேங்க் ஒரு லட்சத்திற்கும் குறைவாக வந்துவிட்டால் தங்களது தளத்திற்கு தனி அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக கருதுகின்றனர்.

பெரும்பாலும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் அலெக்ஸா ரேங்கை வைத்தே தளங்களை மதிப்பிடுகின்றன. அதனால் உங்கள் தளங்கள் குறைவான அலெக்ஸா ரேங்க் வைத்திருந்தால் அதிக விளம்பர வருவாய் கிடைக்கும்.

மேலும் நல்ல அலெக்ஸா ரேங்க் கிடைத்தால் உங்கள் தளத்திற்கு அதிக ரீச் கிடைக்கும் வாசகர்கள் எண்ணிக்கை பெருகும். உங்கள் கருத்துக்கள் அதிக மக்களை போய்சேரும்.

எப்படி...?
பொதுவாக அலெக்ஸா ரேங்கை மூன்று முக்கியமான விஷயங்களை வைத்து கணக்கிடுகிறார்கள்.
-          Page views per User
-          Bounce Rate
-          Time on Site

Page Views per User
உங்கள் தளத்திற்கு எத்தனை ஹிட்ஸ் கிடைக்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. இதன் மீது சில தவறான புரிதல்கள் உள்ளன.
-          உதாரணத்திற்கு உங்கள் தளத்திற்கு நாளொன்றுக்கு பத்து வாசகர்கள் வருகிறார்கள் ஆனால் அனைவருமே ஒரே இடுகையின் இணைப்பையே கிளிக் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுவே, மற்றொரு தளத்திற்கு நாளொன்றுக்கு ஒரே ஒரு வாசகர்தான் வருகிறார் ஆனால் இருபது வெவ்வேறு இடுகையை கிளிக் செய்கிறார் என்றால் உங்களது தளத்திற்கு பத்து ஹிட்சும் மற்றொரு தளத்திற்கு இருபது ஹிட்சுமாக கணக்கிடப்படுகிறது. ஆக, உங்கள் தளத்திற்கு வருகை புரிவோரின் எண்ணிக்கையை விட ஹிட்சின் எண்ணிக்கையே முக்கியம்.
-          அதே சமயம், ஒரே இணைப்பை ஒரே வாசகர் பலமுறை கிளிக் செய்தால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. உதாரணமாக, உங்கள் தளத்தில் பத்து பக்கங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வாசகர் ஒருவர் பத்து பக்கங்களையும் பத்து பத்து முறை படித்தால் உங்களுக்கு நூறு ஹிட்ஸ் கிடைக்காது. பத்து ஹிட்ஸ் மட்டுமே கிடைக்கும்.

Bounce Rate & Time On Site
இரண்டிற்கும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் தான். வாசகர்கள் உங்கள் தளத்தை விட்டு வெளியேறுவதே Bounce Rate என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு வாசகர் உங்கள் தளத்திற்குள் நுழைந்தவுடன் அதில் உள்ள விளம்பரமோ அல்லது ஒலிக்கும் இசையோ பிடிக்காமல் உடனடியாக வெளியேறினால் அது உங்களது அலெக்ஸா ரேங்கை பாதிக்கும்.

மேலும், வாசகர் உங்கள் தளத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதே Time On Site. உங்களுடைய தளத்தில் நீங்கள் எழுதியிருக்கும் பதிவு வாசகருக்கு மிகவும் பிடித்திருக்கும் பட்சத்தில் அவர் அதை ரசித்து முழுமையாக படித்தால் அது உங்கள் அலெக்ஸா ரேங்கை குறைக்க வழிவகை செய்யும்.

சில சர்ச்சைகள்
அலெக்ஸா ரேங்க் எனப்படுவது உங்கள் தளத்தின் உண்மையான ஹிட்சை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. உங்கள் தளத்திற்கு வருகை தரும் வாசகர் அலெக்ஸா டூல்பாரை பயன்படுத்துபவராக இருந்தால் மட்டுமே ஹிட்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
-          அதாவது, உங்கள் தளத்திற்கு நாளொன்றிற்கு ஆயிரம் வாசகர்கள் வருகை தருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஆனால் அவர்களில் பத்து பேர் மட்டுமே அலெக்ஸா டூல்பாரை பயன்படுத்துகிறார்கள். அதுவே, எனது தளத்திற்கு நாளொன்றிற்கு ஐம்பது வாசகர்கள் மட்டுமே வருகை தருகிறார்கள் ஆனால் அவர்கள் அனைவருமே அலெக்ஸா டூல்பார் பயன்படுத்துபவர்கள் என்றால் எனது தளமே அலெக்ஸா ரேங்கில் முன்னிலை வகிக்கும்.

அலெக்ஸா ரேங்க் என்பது உங்கள் தளத்தின் கடைசி மூன்று மாத செயல்பாடுகளை வைத்தே கணக்கிடப்படுகிறது.
-          அதாவது, நீங்கள் மூன்று மாதத்திற்கு முன்பு பெரிய அப்பாடாக்கராக இருந்துவிட்டு இப்போது பதிவெழுதுவதை முற்றிலுமாக நிறுத்தியிருந்தால் உங்கள் தளத்திற்கு மோசமான அலெக்ஸா ரேங்க் தான் கிடைக்கும்.

மாற்று
அலெக்ஸா ரேங்கை தவிர்த்து வேறு வகைகளில் உங்கள் தளத்தை மதிப்பிட முடியும் என்றால் கூகிள் பேஜ் ரேங்கை குறிப்பிடலாம். இது பெயரில் மட்டுமே ரேங்க் மற்றபடி இது ஒரு மார்க். உங்கள் தளம் பத்துக்கு எத்தனை மதிப்பெண்களுக்கு எத்தனை மதிப்பெண் வாங்கியிருக்கிறது என்பதே இதன் கணக்கு. மேலும் இது அலெக்ஸாவை போல தினமும் ரேங்க் வெளியிடுவது அல்ல. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் ரேங்க் வெளியிடப்படும்.

இந்த பதிவு புரியும்படியும் பயனுள்ளதாகவும் இருந்ததா என்பது பற்றியும், அலெக்ஸா ரேங்க் பற்றிய உங்களது கருத்து என்ன என்பது பற்றியும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

51 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நண்பரே...

அந்நியன் 2 said...

Nalla vilakkam praba.

ஆமினா said...

விளக்கமாக சொல்லியிருக்கீங்க!!

அன்பரசன் said...

தெளிவான விளக்கம்.

nis said...

//உங்கள் தளத்திற்கு வருகை தரும் வாசகர் அலெக்ஸா டூல்பாரை பயன்படுத்துபவராக இருந்தால் மட்டுமே ஹிட்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்//

இதுதான் மிகப்பெரிய சிக்கல்

துமிழ் said...

அவர் அதை ரசித்து முழுமையாக படித்தால் அது உங்கள் அலெக்ஸா ரேங்கை குறைக்க வழிவகை செய்யும்.
//

purayaleenga?

சி.பி.செந்தில்குமார் said...

சூப்ப்ர் போஸ்ட் பிரபா

சி.பி.செந்தில்குமார் said...

நான் படித்த மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று

எப்பூடி.. said...

எனக்கு இந்த அலெக்ஸா பத்தி எதுவும் தெரியாததால கிளம்பிரன்.

அப்பாவி தமிழன் said...

////// அதாவது, உங்கள் தளத்திற்கு நாளொன்றிற்கு ஆயிரம் வாசகர்கள் வருகை தருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஆனால் அவர்களில் பத்து பேர் மட்டுமே அலெக்ஸா டூல்பாரை பயன்படுத்துகிறார்கள். அதுவே, எனது தளத்திற்கு நாளொன்றிற்கு ஐம்பது வாசகர்கள் மட்டுமே வருகை தருகிறார்கள் ஆனால் அவர்கள் அனைவருமே அலெக்ஸா டூல்பார் பயன்படுத்துபவர்கள் என்றால் எனது தளமே அலெக்ஸா ரேங்கில் முன்னிலை வகிக்கும்////////

இல்லை நண்பா இது தவறு , அலெக்சா டூல் பார் மூலம் ஹிட்ஸ் உயர்வு பெறுவது உண்மை தான் ஆனால் நீங்கள் கூறுவது போல 50 பேரில் 20 பேர் அலெக்சா டூல் பார் வைத்திருப்பவர் படித்தால் 1000 ஹிட்ஸ் வாங்குபவரை விட அதிகமாக எல்லாம் காட்டாது , unique user , geo location , clicks அண்ட் impressions இதை பொறுத்தே அலெக்சா கணக்கீடு படப் படுகிறது , எல்லாரும் புரியற மாதிரி நல்லா எழுதி இருக்கீங்க தமிழ்10 ல ஓட்டும் குத்தியாச்சு . ப்த்வ் எப்போடி தல டெய்லி பதிவு போடறீங்க

Prem S said...

Arumai anparae thelivana vilakam

Anonymous said...

Thanks for information.

see the link

http://bit.ly/i1LFG3

Kousalya Raj said...

good information...thank u for this.

Unknown said...

மிகவும் பயனுள்ள பதிவுங்க.. இங்கு புதியவனாக இருந்தாபோது இந்த விசயத்தைப் பற்றி சரியாகத் தெரியாமல் குழம்பியிருக்கிறேன்.. நல்ல பதிவு..

pichaikaaran said...

தமிழ்மணம் போட்டியில் வெல்ல கூடிய இடுகை இது.
இன்னொரு சந்தேகம் . காசு வாங்கி கொண்டு சிலருக்கு நல்ல ரேங்க் கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா ?

ADMIN said...

புதியவர்களுக்குகூட எளிதாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள்..! அருமை..! நன்றி! வாழ்த்துக்கள்..!

Admin said...

புதியவர்களுக்கும் புரியும் வகையில் அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

நீங்கள் சொன்னது உண்மை தான்.. இந்த மதிப்பு சரியான மதிப்பல்ல.. அலெக்ஸா டூல்பார் மட்டுமின்றி அலெக்ஸா widget-ஐ நமது தளத்தில் வைப்பது மூலமும் நமது தளத்தை கணக்கிடுகிறது. இவை இரண்டும் இல்லாத தளங்களின் மதிப்பை குறைத்து காட்டுகிறது.

Google Page Rank என்னை போல் சோம்பேறி என நினைக்கிறேன். அது கடைசியாக அப்டேட் செய்தது ஏப்ரல் மாதத்தில்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அலெக்ஸா பதிவு என்னைப் போல் புதியவர்களுக்கு தேவையான ஒன்று.

Unknown said...

இதுதான் ஹிட்ஸா? சொல்லவே இல்லை

karthikkumar said...

விளக்கத்திற்கு நன்றி பங்கு

தமிழ்த்தோட்டம் said...

பகிர்வுக்கு நன்றி

vinhvishali said...

நன்றி மற்றும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

test said...

நன்றி பகிர்தலுக்கு!
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!!
நீங்க கமல் ரசிகரா? நம்ம பக்கம் வாங்க! :-)

தூயவனின் அடிமை said...

தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

சேலம் தேவா said...

அலெக்ஸாவை நல்லா அலசியிருக்கீங்க..!! பயனுள்ள பதிவு..!!

Anonymous said...

அலெக்ஸா டூல் பாரை பயன்படுத்துவது இல்லாமல் இருந்தால் இன்னும் அலெக்ஸா நம்பகமாக இருக்கும்

'பரிவை' சே.குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவுங்க.

தீபிகா said...

முதன் முதலாக உங்கள் பதிவை படிக்கிறேன்...
சிறப்பாக உள்ளது.. நன்றி..

பாரி தாண்டவமூர்த்தி said...

அருமையான அலசல் நண்பரே...

ARV Loshan said...

நான் ஆங்கிலத்தில் முன்பு சில விஷயம் அறிந்திருந்தாலும் தமிழில் பூரணமாக,அழகாக விளக்கியுள்ளீர்கள் அருமை.

LOSHAN
www.arvloshan.com

tamil blogs said...

அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் http://tamilblogs.corank.com/

Harini Resh said...

அருமையானப் பதிவு.
தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையானப் பதிவு

THOPPITHOPPI said...

நன்றி

நிலாமதி said...

அருமையானப் பதிவு.

எம் அப்துல் காதர் said...

ரொம்ப விவரமா எழுதியிருகீங்க பிரபா. சூப்பர் போஸ்ட்!!

Philosophy Prabhakaran said...

@ பிரஷா, அந்நியன் 2, ஆமினா, அன்பரசன், nis, துமிழ், சி.பி.செந்தில்குமார், எப்பூடி.., அப்பாவி தமிழன், சி.பிரேம் குமார், Anonymous, Kousalya, பதிவுலகில் பாபு, தங்கம்பழனி, Abdul Basith, தமிழ்வாசி - Prakash, இரவு வானம், karthikkumar, தமிழ்த்தோட்டம், vinhvishali, ஜீ..., இளம் தூயவன், சேலம் தேவா, ஆர்.கே.சதீஷ்குமார், சே.குமார், தீபிகா, Pari T Moorthy, LOSHAN, tamil blogs, Harini Nathan, T.V.ராதாகிருஷ்ணன், THOPPITHOPPI, நிலாமதி, எம் அப்துல் காதர்

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ துமிழ்
// அவர் அதை ரசித்து முழுமையாக படித்தால் அது உங்கள் அலெக்ஸா ரேங்கை குறைக்க வழிவகை செய்யும்.
purayaleenga? //

அதாவது, உங்கள் தளத்தில் வாசகர் அதிக நேரத்தை செலவிட்டால் என்பதையே அப்படி குறிப்பிட்டேன்... வாசகர் ஒருவர் உங்கள் தளத்திற்கு வந்து பத்தே நொடிகளில் வெளியேறுவதிலும் பத்து நிமிடங்கள் இருந்துவிட்டு போவதிலும் வித்தியாசங்கள் உள்ளன...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// நான் படித்த மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று //

அப்படியா மிக்க நன்றி... நீங்கள் எழுதி இதுபோல ஒரு வார்த்தையை படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// எனக்கு இந்த அலெக்ஸா பத்தி எதுவும் தெரியாததால கிளம்பிரன் //

படிச்சு தெரிஞ்சிக்க வேண்டியது தானே...

Philosophy Prabhakaran said...

@ அப்பாவி தமிழன்
// unique user , geo location , clicks அண்ட் impressions இதை பொறுத்தே அலெக்சா கணக்கீடு படப் படுகிறது //

நான் இந்த பதிவை இடுவதற்கு சுமார் பத்து பதினைந்து ஆங்கில தளங்களை refer செய்தேன்... ஆனால் எந்த தளத்திலும் இதுபோன்ற வார்த்தைகளை பற்றி கேள்விப்படவில்லை... இருப்பினும் நீங்கள் சொன்ன terms பற்றி ஆராய்கிறேன்... மேலும் தகவல்கள் கிடைத்தால் இந்த இடுகையில் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்... சுட்டிக்காட்டியதற்கு நன்றி...

// எப்போடி தல டெய்லி பதிவு போடறீங்க //

முன்னாடி வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு தான் போட்டுக்கொண்டிருந்தேன்... இப்போது திடீரென அலெக்சா ரேங்க் மீது வந்த ஆசையில் தினமும் பதிவிடுகிறேன்...
இப்போதெல்லாம் வாரக்கடைசியிலேயே அந்த வாரத்திற்கு சேர்த்து ஐந்தாறு பதிவுகளை எழுதி வைத்துவிடுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// see the link
http://bit.ly/i1LFG3 //

வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் நிச்சயம் எனக்கு தேவையானது தான்... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// தமிழ்மணம் போட்டியில் வெல்ல கூடிய இடுகை இது //

ஆனால் அடுத்த ஆண்டுதான் இணைக்க முடியும் :(

// காசு வாங்கி கொண்டு சிலருக்கு நல்ல ரேங்க் கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா ? //

விக்கிலீக்சுக்கே வெளிச்சம்...

Philosophy Prabhakaran said...

@ Abdul Basith
// Google Page Rank என்னை போல் சோம்பேறி என நினைக்கிறேன் //

கூகிளை பற்றி சாதாரணமாக என்ன முடியாது... அவர்கள் யாருக்கும் தெரியாமல் அலெக்ஸாவுக்கு போட்டியாக எதையாவது உருவாக்கிக் கொண்டிருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ ஜீ..
// நீங்க கமல் ரசிகரா? நம்ம பக்கம் வாங்க! :-) //

வந்தாச்சு... ஜோதியில் கலந்தாச்சு...

Philosophy Prabhakaran said...

@ LOSHAN
// நான் ஆங்கிலத்தில் முன்பு சில விஷயம் அறிந்திருந்தாலும் தமிழில் பூரணமாக,அழகாக விளக்கியுள்ளீர்கள் அருமை. //

வாங்க லோஷன்... பிரபல பதிவரான நீங்கள் முதல்முறையாக எனது தளத்திற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி... சில வாரங்களுக்கு முன்பு உங்களை வைத்து நம்ம கடையில் வெட்டுகுத்தே நடந்தது... அப்போதுகூட நீங்கள் வருகை தராதது குறித்து வருந்தினேன்... இனி அந்த வருத்தத்திற்கு வேலை இல்லை...

Philosophy Prabhakaran said...

@ tamil blogs
// உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் http://tamilblogs.corank.com/ //

இனி பகிர்ந்துக்கொள்கிறேன்...

Geetha6 said...

congratulations.

ஜோதிஜி said...

நண்பர் சாய்தாசன் (ஆனால் பிரபு என்று கீழே எழுதியிருந்தார்?) உங்கள் இந்த தலைப்பை எனக்கு புரிதலுக்காக அனுப்பியிருந்தார்.

ஒரே வார்த்தையில் சொன்னால் மிக அற்புதம்.

ஸ்ரீதர் நாரயணன் இது குறித்து கூகுள் பஸ்ஸில் எழுதியிருந்தார்.

நன்றி பிரபாகரன்.

Anonymous said...

பயனுள்ள தகவல்

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com