வணக்கம் மக்களே...
காதலித்தால் கவிதை வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் காவலன் படம் ஹிட்டானால் கூட கவிதை வராது என்றே தோன்றியிருந்தது சில நாட்கள் முன்பு வரை. அப்படி இருக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் அமர்ந்து பிகர்களை முரட்டுத்தனமாக சைட்டடித்ததில் கவிதை போன்ற வரிகள் சில என் மன வானில் உதித்தன.
கவிஞர்கள் யாராவது படித்து கருத்து சொல்லுங்கள். சின்னப்பயலை ஊக்குவிக்கும் நோக்கில் நன்றாக இருக்கிறதென்று போலி வார்த்தைகள் கூற வேண்டாம். அப்புறம் அடிக்கடி இதுபோல எதையாவது எழுதி தொல்லை கொடுப்பேன். எனவே பிடித்திருக்கிறதோ, இல்லையோ உங்கள் மனதில் தோன்றும் வார்த்தைகளை கூச்சப்படாமல் பளிச்சென்று சொல்லிவிடுங்கள்.
வகுப்பறைக்குள் நுழையும்போது
Excuse Me என்கிறாய்...
என் மனவறைக்குள் நுழையும்போது
மட்டும் கேட்க மறுக்கிறாயே...!
உனக்கு அழகாக இருக்குமென்று சொன்னதால்
கூந்தலை விரித்துப்போட்டபடி வந்தாய்...
ஆனால் என் மனதை மட்டும்
கொத்தாக அள்ளி முடிந்துக்கொண்டாயே...!
“ஒரு முத்தம் தா...” என்றதும் வெட்கப்பட்டு
நீ இடம்புறமாக தலையசைத்து மறுக்க,
உன் காதணிகள் மட்டும்
முன்னும்பின்னுமாக அசைந்து என்னை அழைக்கிறதே...!
டிஸ்கி: மேற்படி கவிதைகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்களின் பெயர்களை கூற முடியாத நிலையில் இருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
62 comments:
எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் எங்க பெயர்களை சொன்னா செருப்படி கிடைக்கும் என்று அந்த பெண்கள் சொன்னார்களா பிரபாகரன்....
படிக்க அனுப்புனா கவிதையா எழுதுறீங்க????? :))
சொல்லாமல் இருக்கவும் முடியல. எல்லாமே அருமை ப்ரபா!!!
இப்படியே தொடர்ந்து எழுதுனா கண்டிப்பா நல்லா எழுத ஆரம்பிச்சுடுவீங்க
ஆல் த பெஸ்ட்
ஒ இதுவா, சரி சரி சரி :-)
இந்த கவிதைகள்ல ஏதும் டபுளு மீனிங்கு இல்லையே
என்னா படிக்குற புல்லைங்கன்னாவே சிங்கிள் மீனிங்குல பேசாதுங்கலே அதான் கேட்டேன்.
//முரட்டுத்தனமாக சைட்டடித்ததில்//
யாரிடமும் முரட்டுத்தனமாக அடி வாங்காவிட்டால் சரி
முதல் வாட்டி தானே.. போகப் போக சரியாகிடும்.. எல்லாத்தையும் ஏ ன்னே முடிக்கனுமா?
//டிஸ்கி: மேற்படி கவிதைகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்களின் பெயர்களை கூற முடியாத நிலையில் இருக்கிறேன்//
ok ok congrats:)))))))
நிஜமாவே நல்லா இருக்கு...இன்னும் முயற்சி பண்ணுங்க...
ok
all the best
for next kavithai
நிஜமாகவே சிறப்பாக இருக்கிறது பிலாசபி..
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்
ரைட்டு! :-)
// மேற்படி கவிதைகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்களின் பெயர்களை கூற முடியாத நிலையில் இருக்கிறேன்.
//
அந்த ரெண்டாவது பொண்ணோட பேரு மட்டும் எனக்கு தெரியும்.................த்ரிஷா தான?
http://terrorkummi.blogspot.com/2010/12/blog-post_17.html
நல்லா எழுதியிருக்கீங்க.. தொடர்ந்து எழுதுங்க..
nice...wishes !!
இந்த வியாதி இன்னும் ரெண்டு வருசத்துக்கு இருக்கும் அப்புறம் தன்னால சரியாயிடும்.
suri : நிஜமாகவே சிறப்பாக இருக்கிறது பிலாசபி..
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்
மொத்தத்துல மூனு பிகரை டிரை பண்றேன்னு சொல்றீங்க ரைட்டு
ரைட்டு .மூணு .வாழ்த்துக்கள் .(மனதிற்குள் : அழுகையுடன் இங்க ஒரு பிகுருக்கே வழிய காணோம் ) நல்லாருங்க .நல்லாருங்க .
பாலகனை இந்த பதிவிற்காக யாரும் திட்டவில்லை என்பது மகிழ்ச்சி
என்னோட கண்ணுக்கு நல்லா தெரியுது பாஸ்................
ம்ம்ம்...........
ஏதாவது ஒரு பொண்ணு பேரக்கூடவா சொல்ல மாட்டிங்க..................
கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு... :)
இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் அமர்ந்து பிகர்களை முரட்டுத்தனமாக சைட்டடித்ததில் கவிதை போன்ற வரிகள் சில என் மன வானில் உதித்தன///////
கவிதை எழுதனும்னு பேப்பர், பேனா எடுத்து வச்சு யோசிச்சா எதுவும் தோனாது. இந்த மாதிரி நேரத்துலதான் தோனும். :)
இன்னும் நிறைய எழுதுங்க...
மூன்றில் முதலும், கடைசியும் நன்றாக இருக்கிறது... இடைபட்டதில் ஏதோ சில குறைகள் இருக்கிறது என தோன்றுகிறது.. ஆனால் அது என்ன என்பதை சொல்ல தெரியவில்லை.. நானும் உங்கள போல கத்துகுட்டி தான் பாருங்க...
கவிதைகள் சூப்பர். அதைவிட திரிஷா படம் சூப்பர் ஹி ஹி
- இவன் அகில இந்தியா திரிஷா ரசிகர் மன்றம் 123ஆவது வட்டம்.
நல்லா இருக்கு
கவிதை.. கவிதை .. அருமை அதைவிட அருமை படங்கள் .கடைசி கவிதை டாப்
கவிதைகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெண் ..யாரு போட்டோல இருக்கறவங்களா?!
@ தமிழ்வாசி - Prakash, ஆமினா, எப்பூடி.., விக்கி உலகம், nis, எல் போர்ட்.. பீ சீரியஸ்.., ஆனந்தி.., shameena, யோ வொய்ஸ் (யோகா), ஜீ..., அருவா வேலு, பதிவுலகில் பாபு, எஸ்.கே, Kousalya, மண்டையன், suri, இரவு வானம், நா.மணிவண்ணன், பார்வையாளன், ஐயையோ நான் தமிழன், ஜெ.ஜெ, காடுவெட்டி, தம்பி கூர்மதியன், பாலா, T.V.ராதாகிருஷ்ணன், RAASUKUTTY, ரிஷபன்
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே...
@ தமிழ்வாசி - Prakash
// எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் எங்க பெயர்களை சொன்னா செருப்படி கிடைக்கும் என்று அந்த பெண்கள் சொன்னார்களா பிரபாகரன்.... //
அப்படியெல்லாம் இல்லை நண்பரே... அவர்களைப் பற்றி கவிதை எழுதியிருக்கும் விஷயம் அவர்களுக்கே தெரியாது...
@ ஆமினா
// படிக்க அனுப்புனா கவிதையா எழுதுறீங்க????? :)) //
என்ன பண்றது மேடம்... மூளைக்கு புரிஞ்சாலும் கண்ணும் மனசும் கேட்க மாட்டேங்குது...
@ விக்கி உலகம்
// இந்த கவிதைகள்ல ஏதும் டபுளு மீனிங்கு இல்லையே //
சத்தியமா இல்லை நண்பரே... மூன்றுமே அனைத்து வயதினருமே படிக்கக் கூடிய கவிதைகள் தான்...
@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// முதல் வாட்டி தானே.. போகப் போக சரியாகிடும்.. எல்லாத்தையும் ஏ ன்னே முடிக்கனுமா? //
நானும் இது குறித்து யோசித்தேன்... சொல்லப்போனால் மூன்று கவிதைகளுமே ஒரே சாயலில் இருக்கிறது... அடுத்த முறை புதுசா முயற்சி செய்கிறேன்...
@ அருவா வேலு
// அந்த ரெண்டாவது பொண்ணோட பேரு மட்டும் எனக்கு தெரியும்.................த்ரிஷா தான? //
நீங்க சொல்றது சம்பந்தப்பட்ட நடிகையோட பெயர் நண்பரே...
@ Anonymous
// http://terrorkummi.blogspot.com/2010/12/blog-post_17.html //
என்னுடைய தலைக்கணத்தை தவிடுபொடியாக்கி விட்டீர்கள்... உங்களது இந்த இடுகையிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்... இதுவரை நடந்த தவறுகளுக்காக வருந்துகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன்... மகாத்மா குறித்த இடுகையை உடனடியாக நீக்கிவிடுகிறேன்... இனியாவது திருந்த முயற்சிக்கிறேன்... நன்றி...
@ மண்டையன்
// இந்த வியாதி இன்னும் ரெண்டு வருசத்துக்கு இருக்கும் அப்புறம் தன்னால சரியாயிடும். //
அது என்ன ரெண்டு வருஷ கணக்கு... ஒன்னும் புரியலையே...
@ suri
// நிஜமாகவே சிறப்பாக இருக்கிறது பிலாசபி..
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் //
வாங்க எரிச்சல் சார்... இப்போதான் வழி தெரிஞ்சதா...
@ இரவு வானம்
// மொத்தத்துல மூனு பிகரை டிரை பண்றேன்னு சொல்றீங்க ரைட்டு //
ஏன் இப்படி வம்புல மாட்டி விடுறீங்க... சத்தமா பேசாதீங்க...
@ பார்வையாளன்
// பாலகனை இந்த பதிவிற்காக யாரும் திட்டவில்லை என்பது மகிழ்ச்சி //
வாங்கய்யா பெரியவரே... உங்களைத்தான் கொலவெறியோட தேடிக்கிட்டு இருக்கேன் :)
@ காடுவெட்டி
// வாடி செல்லம்.. இந்தா இங்க கிழிச்சு தொங்க விட்டுகிட்டு இருக்காங்க சீக்கிரம் வந்து பாரு வா வா வா செல்லம் உனக்காகத்தான் வெயிட்டிங்:
டெரர் கும்மி குரூப்ஸ் //
நானும் உங்களில் ஒருவன் என்ற எண்ணத்தில் அப்படி ஒரு பின்னூட்டத்தை நகைச்சுவையாக இட்டேன்... தவறு இருப்பின் மன்னிக்கவும்... குறிப்பிட்ட அந்த பின்னூட்டத்தை நீக்கிவிடுகிறேன்...
@ தம்பி கூர்மதியன்
// மூன்றில் முதலும், கடைசியும் நன்றாக இருக்கிறது... இடைபட்டதில் ஏதோ சில குறைகள் இருக்கிறது என தோன்றுகிறது.. ஆனால் அது என்ன என்பதை சொல்ல தெரியவில்லை.. //
அப்படியா... நானும் என்னவென்று பார்க்கிறேன்...
@ பாலா
// கவிதைகள் சூப்பர். அதைவிட திரிஷா படம் சூப்பர் ஹி ஹி
- இவன் அகில இந்தியா திரிஷா ரசிகர் மன்றம் 123ஆவது வட்டம். //
நீங்களுமா... இங்கேயும் அதேதான்...
@ ரிஷபன்
// கவிதைகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெண் ..யாரு போட்டோல இருக்கறவங்களா?! //
நிச்சயம் கிடையாது... அவர்கள் மாடல்களே...
//வகுப்பறைக்குள் நுழையும்போது
Excuse Me என்கிறாய்...
என் மனவறைக்குள் நுழையும்போது
மட்டும் கேட்க மறுக்கிறாயே.//
வகுப்பறையில் வாத்தியார் இருப்பார். மனவறையில் அவருக்கு இடம் இல்லையே! :D
//டிஸ்கி: மேற்படி கவிதைகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்.//
ஒவ்வொரு பெண்கள் இருக்கிறார்கள் என்று வந்திருக்க வேண்டும்... பரவா இல்லை..
கவிதை நல்லாருக்கு பிரபா வாழ்த்துக்கள் இன்னும் ஆழமா சிந்திச்சா கண்டிப்பா இன்னும் நல்லா வரும்
//என்னுடைய தலைக்கணத்தை தவிடுபொடியாக்கி விட்டீர்கள்... உங்களது இந்த இடுகையிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்... இதுவரை நடந்த தவறுகளுக்காக வருந்துகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன்... மகாத்மா குறித்த இடுகையை உடனடியாக நீக்கிவிடுகிறேன்... இனியாவது திருந்த முயற்சிக்கிறேன்... நன்றி...//
தலைக்கனம் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு?
தவறு செய்வது பிழை அல்ல, ஆனால் அந்தத் தவறை ஒப்புக் கொள்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது.
Hats off!
நல்லா இருக்கு. ஸ்டார்ட் பண்ணியாச்சுல்ல, இனிமே எல்லாம் சுகமே...(கவிதைகளைச் சொன்னேன்)
நல்லா எழுதியிருக்கீங்க.. தொடர்ந்து எழுதுங்கள் பிரபா
//உனக்கு அழகாக இருக்குமென்று சொன்னதால்
கூந்தலை விரித்துப்போட்டபடி வந்தாய்...
ஆனால் என் மனதை மட்டும்
கொத்தாக அள்ளி முடிந்துக்கொண்டாயே...//
விஜய்யின் டொப் டென் பாடல்கள்
அருமை நண்பா.....
//////philosophy prabhakaran
December 17, 2010 7:18 PM @ Anonymous
// http://terrorkummi.blogspot.com/2010/12/blog-post_17.html //
என்னுடைய தலைக்கணத்தை தவிடுபொடியாக்கி விட்டீர்கள்... உங்களது இந்த இடுகையிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்... இதுவரை நடந்த தவறுகளுக்காக வருந்துகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன்... மகாத்மா குறித்த இடுகையை உடனடியாக நீக்கிவிடுகிறேன்... இனியாவது திருந்த முயற்சிக்கிறேன்... நன்றி.../////
நீங்கள் இதற்காகப் பதிவை நீக்கியிருக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன். சென்சிட்டிவான விஷயங்கள் எழுதும் போது விமர்சனங்கள் வருவது சகஜம் !
/////philosophy prabhakaran
December 17, 2010 7:20 PM @ காடுவெட்டி
// வாடி செல்லம்.. இந்தா இங்க கிழிச்சு தொங்க விட்டுகிட்டு இருக்காங்க சீக்கிரம் வந்து பாரு வா வா வா செல்லம் உனக்காகத்தான் வெயிட்டிங்:
டெரர் கும்மி குரூப்ஸ் //
நானும் உங்களில் ஒருவன் என்ற எண்ணத்தில் அப்படி ஒரு பின்னூட்டத்தை நகைச்சுவையாக இட்டேன்... தவறு இருப்பின் மன்னிக்கவும்... குறிப்பிட்ட அந்த பின்னூட்டத்தை நீக்கிவிடுகிறேன்.../////
உங்கள் பின்னூட்டம் சரியில்லை என்று அந்தப் பதிவை எழுதியவர் அல்லவா சொல்ல வேண்டும். வேறு யாரோ சொல்வதற்கு நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்கிறீர்கள்? தவறு செய்வது மனித இயல்பே, அதை ஒப்புகொள்வதற்கு மிகுந்த பக்குவம் வேண்டும். இந்த வயதிலேயே அது உங்களுக்கு இருப்பது மகிழ்ச்சி.
"மகாத்மா குறித்த இடுகையை உடனடியாக நீக்கிவிடுகிறேன்.."
சிலர் விளையாட்டாக சீண்டியத்தை வைத்து கொண்டு , அதை நீக்கி இருக்க வேண்டியதில்லை... உங்கள் விமர்சனமும் சரிதான், எதிர் விமர்சனமும் சரியானதுதான்...
இரண்டையும் காந்தி ஏற்று இருப்பார்...ஆனால் இது போல நீக்கியதை அவரே ஏற்க மாட்டார்...
அந்த திபத் உங்களிடம் இருந்தால், எனக்கு அனுப்பவும்... நான் பயன்படுத்தி கொள்கிறேன்...
>>>ஆனால் எனக்கு மட்டும் காவலன் படம் ஹிட்டானால் கூட கவிதை வராது என்றே தோன்றியிருந்தது
நக்கலு?
பிரபல பதிவர்கள்னா பிரச்சனை வரத்தான் செய்யும்,அதுக்காக பதிவை ஏன் எடுக்கனும்?
முடிஞ்சா ஃபிகர்களோட ஃபோட்டோவை வெளியிடவும்,சர்ச்சை ஏற்பட்டு சீக்கிரமே பிரபலம் ஆகிடலாம்
ராம்சாமி அண்ணனின் கமெண்ட்ல இருந்து கும்மி குரூப்ஸ் கூட ஏதோ பிரச்சனைன்னு தெரியுது,விருப்ப இருந்தா தனி மெயிலில் விளக்கவும்
பதிவுக்கான டைட்டில் அலப்பறை - வகுப்பறை கலக்கல்
போற போக்க பாத்தா உங்க பேரு "சர்ச்சை பிரபான்னு" மாறிடும் போல.
என்னமோ சின்ன வயசுல பிரபலம் ஆகறதுன்ன சும்மாவா!!
ஒரு முறை காந்திய சுட்டு சரித்திரதுல பேர் வாங்கிய கோட்சே போல. ஒரு முறை அவர அரப்பக்கதுக்கு யூசு பண்ணதுக்கு பாதிபேருக்கு மேல வறுத்து எடுத்துட்டாங்களே யப்பா!?
சின்ன வயசுல பிரபலம் ஆகறதுன்னா சும்மாவா!!
டாக்டர்ருக்கே சலுகை இருக்கும் போது கவிதை தானே !
வார்த்தை முக்கியம் தான் கவிதைக்கு அதை விட படித்தவுடம் அந்த கவிதையில் ஈர்ப்பு இருக்கணும் , அது இருக்கு உங்க கவிதைல. எல்லாருமே முதல்ல அப்படித்தான் ... நீங்க தைரியமா எழுதுங்க
யதார்த்த கவிதைகளே இன்று அதிகம் பிடிக்கின்றது .......... வாழ்த்த்துக்கள் ..... நண்பா !!
அருமையான கற்பனை .. வாழ்த்துக்கள் தம்பி !!!
Post a Comment