22 December 2010

ஏகாதசி இரவில் நடந்தவை...!

வணக்கம் மக்களே...

முன்பே மார்கழி மாத மயக்கம் பதிவில் குறிப்பிட்டிருந்தது போல வைகுண்ட ஏகாதசி இரவில் சினிமா பார்ப்பது என்று முடிவு செய்தோம். சென்ற ஆண்டு ஏகாதசி பின்னிரவில் சிவகாசி படத்தைப் பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்ததை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. வழக்கமாக ஏரியாவில் இருக்கும் ரெண்டு மூன்று திரையரங்குகளில் படம் போடுவார்கள். நாங்களும் எந்த தியேட்டரில் பயங்கரமான மொக்கை படங்கள் வருகிறதோ அந்த தியேட்டருக்கு கிளம்புவோம். இந்த முறை சாய்சே இல்லை ஒரே திரையரங்குதான்.

சிவாஜி, சிங்கம், வேட்டைக்காரன் மூன்று படங்கள் போடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மயிரிழையில் விருதை இழந்த வேட்டைக்காரன் படத்தை கடைசியாக போட்டால் இறுதி வரை சூடு குறையாமல் இருக்குமென்று அந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை மனதார வேண்டிக்கொண்டேன். ஒரு வழியாக தள்ளுமுள்ளுகளை எல்லாம் கடந்து டிக்கெட் எடுத்து உள்ளே சென்றோம். உள்ளே மாவா மண்டையர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

இந்த இடத்தில் சீரியசாக ஒரு பத்தியை எழுதியாக வேண்டும். அய்யப்ப பக்தர்களில் சிலர் செய்யும் அளப்பறைகளைத் தான் சொல்ல வந்தேன். மாலையையும் போட்டுக்கொண்டு மாவாவையும் போடுகிறார்கள். தியேட்டர் சுவர்களில் காவி பெயின்ட் அடிக்கும் காண்ட்ராக்ட் இவர்களிடம் ஒப்படைக்க பட்டிருந்தது போல. இவர்கள் எல்லாம் பக்தகோடிகளா பக்தகேடிகளா என்று விளங்கவில்லை. கடுபேத்துறாங்க மை லார்ட்.

பத்து மணிக்கு படம் போட்டாங்க. என்னுடைய எதிர்பார்ப்புகளை தகர்த்தெறியும் வண்ணம் முதலில் நம்ம டாகுடர் விஜய் நடிப்பில் (அவ்வ்வ்வ்...) வெளிவந்த வேட்டைக்காரனை ஒளிபரப்பினார்கள். ஒப்பனிங் சாங்கில் விஜய் கான்க்ரீட் கல்லொன்றை முரட்டுத்தனமாக குத்தி உடைப்பாரே, அந்த காட்சியிலேயே டிக்கெட் எடுத்த அறுபது ரூபாய் தாராளமாக கழிந்தது. வேட்டைக்காரன் படத்தில் எனக்கு பிடித்த ஒரு விஷயம் வில்லன் ஜிந்தாவின் நடிப்பும் வசன உச்சரிப்பும். மனிதர் ஒவ்வொரு முறை பயம்ன்னு விஜய் காதுல வந்து சொல்லும்போதும் படம் பாக்குறவங்களுக்கு ரொம்ப பயமாக இருந்தது. இந்தமுறை வேட்டைக்காரன் படத்தில் இருந்து ஒரு வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்துக்கொண்டேன். சரக்கடிச்ச அப்புறமா கொய்யாப்பழம் சாப்பிட்டா ஸ்மெல் வராதாம்.

அடுத்ததாக கஞ்சிசட்டை சிங்கம் படத்தை ஒளிபரப்பினார்கள். இந்தப் படத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆனாலும் அரிவாள் இயக்குனர் ஹரி படம் என்றாலே ஒரு அலாதிப்பிரியம் உண்டு. வேல்கம்பு, வீச்சரிவாள், முட்டிக்கிட்டு நிக்கும் ரெண்டு குடும்பம் இதை வச்சியே நான் எத்தனை படம் வேணும்னாலும் எடுப்பேன்னு சொன்ன பேரறிஞர் தானே அவர். அடங்கப்பா படம் முழுவதும் சூர்யா பக்கம்பக்கமா வசனம் பேசி எகிறி எகிறி அடிக்கிறார். (ஹைட் பத்தலைப்பா...) விஜய்யை விட சூர்யா கொஞ்சம் ஓவராகவே பஞ்ச் டயலாக் பேசுகிறார். பயந்து போகலை, ஒதுங்கி போகுறேன், சாக்கடைல கல்லை தூக்கி போட்டா அது நம்ம மேலதான் படும் அப்படி இப்படின்னு சூடா சூழ்நிலை வசனம் பேசி ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.

வேட்டைக்காரன் படத்தின் மூன்று பாடல்களிலும் சிங்கம் படத்தின் மூன்று பாடல்களிலும் கெளரவ தோற்றத்திலும் வந்து ஆடிவிட்டுப் போனார். ஒரு டவுட்டு, மேல ஒரு கர்சீப் கீழே ஒரு கர்சீப் போட்டுட்டு வந்தா அதுக்கு பேருதான் கெளரவ தோற்றமா...? (அப்பாடா... அனுஷ்கா ஸ்டில் போட மேட்டர் கிடைச்சாச்சு...)

ரெண்டு படம் முடிந்திருந்த வேளையில் முக்கால்வாசி கூட்டம் உறங்கிக்கொண்டிருந்தது. சிவாஜி படம் போட்டதும் பயபுள்ளைங்க எப்படி முழிச்சாங்கன்னு தெரியல ஒரே விசில் சத்தம். ஒரு வழியாக நயன்தாரா ஆட்டம் முடிந்ததும் கூட்டம் மறுபடியும் தூங்க ஆரம்பித்தது. எனக்கு மட்டும் தூக்கம் வரலை. ங்கொய்யால... அடுத்தடுத்து வேட்டைக்காரனையும் சிங்கத்தையும் பார்த்தால் எப்படி தூக்கம் வரும். சிவாஜி படத்தில் ஒரு சிறிய ஆராய்ச்சி (மறுபடியுமா...?). அதாவது நம்ம ஸ்ரேயாவுக்கு ஆரம்பத்துல ரஜினியைக் கண்டாலே பிடிக்காது பீரோ புல்லிங் என்றெல்லாம் சொல்லி கலாய்ப்பார். அப்புறம் ரஜினி பெரிய கோடீஸ்வரர்ன்னு தெரிஞ்சதும் டிங்குன்னு கண்ணை சிமிட்டி ஓகே சொல்லுவாங்க. பின்னர் ரஜினி கோர்ட் கேஸ்ன்னு போய் மொத்த சொத்தையும் இழந்து நிக்கும்போது இனிமே என்னை தேடி வராதீங்கன்னு சொல்லி படார்ன்னு கதவை சாத்துவார். மறுபடி சில காட்சிகள் தாண்டி ரஜினி வந்து இன்னும் 24 மணி நேரத்தில் ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கப்போகிறதுன்னு சொல்ல ஸ்ரேயா தாவணி தலைப்பை தவறவிட்டு ரஜினியை கட்டிபிடித்துக் கொள்கிறார். இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் குத்துங்க... (ஓட்டைச் சொன்னேன்)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

35 comments:

எல் கே said...

ஹஹஅஹா . என்ன ஒரு ஆராய்ச்சி

Unknown said...

நல்லாருக்கு சிங்கம்!

pichaikaaran said...

சிவாஜி ஆராய்ச்சி சூப்பர் .

எப்பூடி.. said...

நல்லாத்தான் நித்திரை முளிச்சிருக்கிறீங்க, எனக்கு சிங்கம் திரையரங்கில் பார்க்கும்போது பிடிக்கவில்லை, பின்னர் dvd யில் பார்க்கும்போது பிடித்தது, இப்படி இன்னும் சில திரைப்படங்களும் உண்டு :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஏகாதசி நாள் வருவது கூட தெரயாத நம் வாழ்க்கை.. வெளிநாட்டு வாழ்க்கை.. அருமை ஏகாதசி பற்றிய பதிவு போட்டு ஊருக்கு நினைவில் போய் வர வைத்தீர்கள் பிரபா..

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட்

சி.பி.செந்தில்குமார் said...

அனுஷ்கா ஸ்டில்ஸ் கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

விஜய்,சூர்யானு ஒரு ஆளை விடலை போல

Unknown said...

3 in 1 ஆ கலக்குங்க

Unknown said...

படித்தேன் பார்த்தேன் ரசித்தேன் .ரசித்தேன் .ரசித்தேன் .ரசிச்சுகிட்டே இருக்கேன்

test said...

//ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மயிரிழையில் விருதை இழந்த வேட்டைக்காரன் படத்தை கடைசியாக போட்டால் இறுதி வரை சூடு குறையாமல் இருக்குமென்று அந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை மனதார வேண்டிக்கொண்டேன்//
அவ்வவ்வ்வ்வ் ! :-)

அஞ்சா சிங்கம் said...

மாவா மண்டையர்களின்...........///////

நான் என்னையா பாவம் பண்ணினேன்.
வேற நல்ல பேரு கெடைக்கலையா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஸ்டில்லு....
அனுஷ்காஆஆஆஆ...............

FARHAN said...

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் குத்துங்க... (ஓட்டைச் சொன்னேன்)

சிவாஜியை புது கோணத்தில் செய்த ஆராய்ச்சி சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் மாங்கு மாங்குன்னு எழுதிட்டு இப்பிடி ஸ்டில் போட்டா யாராவது படிப்பாங்களா?

NKS.ஹாஜா மைதீன் said...

உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.....நேரம் இருந்தால் எழுதுங்கள்....

ஐயையோ நான் தமிழன் said...

பரவால்லயே நித்திரை எல்லாம் முழிச்சிருக்கீங்க................................

Unknown said...

இப்படி ஸ்டில் போட்டா.. எப்படி ஆபிஸ்ல ஓப்பன் பண்றது.. ஒரு நிமிசம் பதறிட்டேன்.. :-)

Madurai pandi said...

anushkaa still top!!! Sivaji araichi !!! ovvoru ponnukum oru feeling pa!!!

மாணவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி
December 22, 2010 11:28 AM

யோவ் மாங்கு மாங்குன்னு எழுதிட்டு இப்பிடி ஸ்டில் போட்டா யாராவது படிப்பாங்களா?//

ஹிஹிஹி நாங்கலெல்லாம் யூத்துண்ணே ஏதாவது கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தாதான் படிப்போம்....

மாணவன் said...

நைட்டு முழுவதும் கண் முழிச்சு மூனு படத்தயும் பார்த்தீங்களா?

ஏகாதசி நல்லா கொண்டாடியிருக்கீங்க வெரி குட்...

பகிர்வுக்கு நன்றி பாஸ்

Philosophy Prabhakaran said...

@ எல் கே. விக்கி உலகம், பார்வையாளன், எப்பூடி.., பிரஷா, சி.பி.செந்தில்குமார், இரவு வானம், நா.மணிவண்ணன், ஜீ..., மண்டையன், பன்னிக்குட்டி ராம்சாமி, FARHAN, NKS.ஹாஜா மைதீன், ஐயையோ நான் தமிழன், பதிவுலகில் பாபு, மதுரை பாண்டி, மாணவன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// நல்லாத்தான் நித்திரை முளிச்சிருக்கிறீங்க, எனக்கு சிங்கம் திரையரங்கில் பார்க்கும்போது பிடிக்கவில்லை, பின்னர் dvd யில் பார்க்கும்போது பிடித்தது, இப்படி இன்னும் சில திரைப்படங்களும் உண்டு :-) //

சிலகாலம் நைட் ஷிப்டில் வேலை பார்த்த எனக்கு நித்திரை விழிப்பதேல்லாம் சாதாரண விஷயம்... சிங்கம் போன்ற படங்களை எப்படி பார்த்தாலும் எனக்கு பிடிக்காது...

Philosophy Prabhakaran said...

@ பிரஷா
// ஏகாதசி நாள் வருவது கூட தெரயாத நம் வாழ்க்கை.. வெளிநாட்டு வாழ்க்கை.. அருமை ஏகாதசி பற்றிய பதிவு போட்டு ஊருக்கு நினைவில் போய் வர வைத்தீர்கள் பிரபா.. //

அப்படியா.... இங்கே ஏகாதசியை பக்திப்பூர்வமாக கொண்டாடுபவர்கள், வழிபடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்... பட் எனக்கும் அதற்கும் ரொம்ப தூரம்... என்னைப் பொறுத்தவரையில் ஏகாதசி என்றால் நைட் ஷோ சினிமா மட்டும்தான்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// படித்தேன் பார்த்தேன் ரசித்தேன் .ரசித்தேன் .ரசித்தேன் .ரசிச்சுகிட்டே இருக்கேன் //

நீங்க அனுஷ்கா ஸ்டில்லை தான் சொல்றீங்கன்னு நல்லா தெரியுது....

Philosophy Prabhakaran said...

@ மண்டையன்
// நான் என்னையா பாவம் பண்ணினேன்.
வேற நல்ல பேரு கெடைக்கலையா //

இதேதான் நானும் உங்ககிட்ட கேட்டேன்... உங்களுக்கு வேற நல்ல பேர் கிடைக்கலையா...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யோவ் மாங்கு மாங்குன்னு எழுதிட்டு இப்பிடி ஸ்டில் போட்டா யாராவது படிப்பாங்களா? //

படிக்கிறவங்க படிக்கட்டும் பாக்குறவங்க பாக்கட்டும்... மொத்தத்தில் இங்கே வந்தா ரெண்டும் கிடைக்கும்...

Philosophy Prabhakaran said...

@ NKS.ஹாஜா மைதீன்
// உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.....நேரம் இருந்தால் எழுதுங்கள்.... //

மன்னிக்கணும் நண்பரே.... ஏற்கனவே கலியுகம் தினேஷ் குமாரும், எப்பூடி ஜீவதர்ஷனும் அழைத்து நான் அந்த தொடர் பதிவை எழுதி முதல் பாகத்தை வெளியிட்டுவிட்டேன்... இரண்டாம் பாகத்தை நாளை வெளியிட்டுவிடுவேன்...

Philosophy Prabhakaran said...

@ பதிவுலகில் பாபு
// இப்படி ஸ்டில் போட்டா.. எப்படி ஆபிஸ்ல ஓப்பன் பண்றது.. ஒரு நிமிசம் பதறிட்டேன்.. :-) //

உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம்தான்... இனிமேல் கொஞ்சம் அலர்ட்டா இருக்கேன்...

வருண் said...

***அதாவது நம்ம ஸ்ரேயாவுக்கு ஆரம்பத்துல ரஜினியைக் கண்டாலே பிடிக்காது பீரோ புல்லிங் என்றெல்லாம் சொல்லி கலாய்ப்பார்.***

நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்ளோதானா!!!

***அப்புறம் ரஜினி பெரிய கோடீஸ்வரர்ன்னு தெரிஞ்சதும் டிங்குன்னு கண்ணை சிமிட்டி ஓகே சொல்லுவாங்க. பின்னர் ரஜினி கோர்ட் கேஸ்ன்னு போய் மொத்த சொத்தையும் இழந்து நிக்கும்போது இனிமே என்னை தேடி வராதீங்கன்னு சொல்லி படார்ன்னு கதவை சாத்துவார். மறுபடி சில காட்சிகள் தாண்டி ரஜினி வந்து இன்னும் 24 மணி நேரத்தில் ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கப்போகிறதுன்னு சொல்ல ஸ்ரேயா தாவணி தலைப்பை தவறவிட்டு ரஜினியை கட்டிபிடித்துக் கொள்கிறார். இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் குத்துங்க... (ஓட்டைச் சொன்னேன்)***

ஆம்பளைங்க எப்படினு சொல்லுங்க சார்! :)

அவருக்கு வேவெரிங்க் மைண்ட். பிடிக்கும், பிடிக்காது, பிடிக்கும், இப்படியே போகும் :))

Philosophy Prabhakaran said...

@ வருண்
என்னது பின்னிரவில் பின்னூட்டமா... அமீரக நேரம் என்று பார்த்தால் கூட மணி இப்போது நள்ளிரவு தாண்டியிருக்குமே... நீங்களும் என் இனம் போல... இருக்கட்டும்...

மேலோட்டமாக பார்த்தால் ஸ்ரேயாவின் காதல் உண்மையானதாக தோன்றும்... சிவாஜி படத்திலும் ஸ்ரேயாவின் காதல் உண்மையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது... ஆனால் நிஜவாழ்க்கையில் பெண்கள் என்பவர்கள் இயற்கையாகவே சுயநலம் கொண்டவர்கள் என்பதே எனது கருத்து இதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்...

உன்னாலே உன்னாலே படத்தில் பெண்களின் எண்ணம் பற்றி ஒரு டயலாக் வரும்... அதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை... So அவள் ரஜினி உயிருக்கு ஆபத்து எதுவும் வரக்கூடாது என்ற நோக்கில் "இனிமே என்னைத் தேடி வராதீங்க" ன்னு சொல்லி கதவை சாத்துவாள்... ஆனால் அதன் உள்ளர்த்தம் காசுபணம் இல்லாதவருடன் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்பதே... பெண்கள் மண்டையே சரியான matrix மண்டை...

Philosophy Prabhakaran said...

@ வருண்
ஆண்களைப் பற்றி என்னத்த சொல்ல... நம்மைப் பற்றி நாமே சொல்லக்கூடாது... யாராவது பெண் பதிவர்கள் ஆராய்ச்சி செய்து சொன்னால் தேவலை...

Admin said...

கலக்கல்... அசத்தல் எல்லாமே இருக்கு..

'பரிவை' சே.குமார் said...

//ஏகாதசி நாள் வருவது கூட தெரயாத நம் வாழ்க்கை.. வெளிநாட்டு வாழ்க்கை.. அருமை ஏகாதசி பற்றிய பதிவு போட்டு ஊருக்கு நினைவில் போய் வர வைத்தீர்கள் பிரபா..//

Repeat Prasha.

Unknown said...

ஏகாதசி நாளில் மூன்று படங்கள், நேரா சொர்க்கத்துக்கு போவீங்க...
கங்ராட்ஸ்..