வணக்கம் மக்களே...
நடிகர் விஜய்யை கலாய்த்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் பதிவுலக காமெடிகளும் கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில் நக்கலை எல்லாம் ஓரம்கட்டிவிட்டி காவலன் படம் வெற்றி பெறுமா என்பது குறித்த ஒரு நடுநிலைப் பார்வை.
முதலில் எப்படியிருக்கிறது பாடல்கள்:
விஜய் படங்கள் எப்படி இருந்தாலும் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அதிலும் வித்யாசாகர். விஜய்யை பொறுத்தவரையில் ஏ.ஆர்.ரகுமான் இசைகூட சறுக்கிவிட்டது. ஆனால் வித்யாசாகர் இசை சறுக்கியதில்லை.
இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.
- “விண்ணைக் காப்பான் ஒருவன்...” பாடலைக் கேட்டவுடனேயே இது ஒப்பனிங் சாங் என்று எளிதாக கூறிவிடலாம். வழக்கமான ஒன்றே தவிர புதுமைகள் ஒன்றுமில்லை.
- ஐந்தில் என்னுடைய பேவரிட் “சட சட...” பாடல்தான். வித்தியாசமான டெக்னோ இசை. க்ளப் சாங் போல படமாக்கியிருப்பார்கள் என்று எண்ண வைக்கிறது.
- “ஸ்டெப் ஸ்டெப்...” பாடலில் விதவிதமான ஸ்டெப்களை விஜய்யிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம். அவரது நடனத்திறமைக்கு சவால்விடும் பாடல்.
- “யாரது...” மற்றும் “பட்டாம்பூச்சி...” பாடல்கள் டூயட் வகையறா. ஏதோவொரு மலைமுகட்டில் நின்று பாடுவாடு போல என்மனவானில் காட்சி விரிகிறது.
காவலன் படத்தின் கதை:
இந்தப் படம் மலையாள ஹிட் படமான பாடிகார்ட் படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அந்தப் படத்தை தரவிறக்கி பார்த்தேன். சப் டைட்டில் இல்லாமலே புரிந்தது. அதன் கதை பின்வருமாறு.
ஒருவரியில் சொன்னால் ஒரு தாதாவின் அடியாளாக இருந்துக்கொண்டு அவரது மகளை காதலிக்கும் நாயகன் பற்றிய கதை.
கொஞ்சம் விரிவாகச் சொன்னால்,
ராஜ்கிரண் கட்டப்பஞ்சாயத்து வகையறா ரவுடி கம் தொழிலதிபர். ஆனால் நல்லவர் (!!!). அவரை ரோல்மாடலாக கருதி அடியாளாக இணைகிறார் ஹீரோ விஜய். ராஜ்கிரணின் மகளான அசினை பாதுகாக்கும் பொறுப்பு விஜய்யிடம் ஒப்படைக்கப்படுகிறது. அசினின் தோழியாக இரண்டாம் நாயகி மித்ரா. (தமிழில் சகோதரி என்று நினைக்கிறேன்). அசின் – விஜய் மறுபடியும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் ஒரு காதல். ராஜ்கிரண் விஷயம் தெரிந்து சூடானாரா இல்லை காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டினாரா, விஜய்யும் அசினும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.
பழைய கள்ளுதான் என்பது தெளிவாக தெரிந்தாலும் மலையாளத்தில் இதை ஒரு மெல்லிய காதல் படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழில்...?
வித்தியாசமாக இருக்கும் என்று மலையாள ஒரிஜினலை பார்த்தவர்கள் சொல்லக்கூடும். ஆனால் விஜய் வழக்கமான அவரது பார்முலாப்படி திரைக்கதையில் நிறைய மாற்றங்களை புகுத்தியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். விஜய்யை பொறுத்தவரையில் புதுமை என்றால் சிகையலங்காரத்தை மாற்றுவது மட்டும்தான். இந்தப் படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். (மேலே படம் பார்க்க). அதிகபட்சம், பாடல்காட்சிகளில் கலரிங் செய்துக்கொண்டு வருவார்.
படத்தில் காமெடியனாக வடிவேலு. விஜய் – வடிவேலு காம்பினேஷன் நிறைய படங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது எனினும் வில்லு படத்தில் பயங்கர சொதப்பல். சுறா படத்திலும் சுமார் ரகமே. வசீகரா படத்தில் அமைந்தது போல காமெடி காட்சிகள் அமைந்தது என்றால் நிச்சயம் காமெடியில் காவலன் கலக்கும்.
விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் படத்தை பாதிக்கும் ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. அதிலும் விஜய் அம்மா பக்கம் சாய்வது போல இருப்பதால் ஆளும் கட்சி படத்தை முடக்க முயற்சிக்கும். கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை இருட்டடிப்பு செய்வார்கள். அதற்கு பதிலாக ஜெயா டிவி காவலனை விளம்பரப்படுத்தலாம். ஆனால் இப்போ ஜெயா டிவிஎல்லாம் யார் பார்க்கிறார்கள்.
விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், விஜய் எதிர்ப்பாளர்கள் இவ்வளவையும் மீறி காவலன் வெற்றிபெற வேண்டுமென்றால் அது முழுக்க முழுக்க உண்மையான விஜய் ரசிகர்களிடமே இருக்கிறது.
நன்றி: http://vijayfans-vinu.blogspot.com/ (படம் குறித்த செய்திகளை திரட்ட உதவியாக இருந்தது)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
டிஸ்கி: விஜய் ரசிகர்களுக்காக “தளபதிடா” என்ற பெயரில் வலைப்பூ ஒன்றினை நடத்திவரும் திரு.Vinu அவர்கள் காவலன் படத்தின் கதை குறித்து மேலும் சில தகவல்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்திருந்தார். அந்த பின்னூட்டத்தை இந்த இடுகையின் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்.
Vinu (admin of http://vijayfans-vinu.blogspot.com):
நண்பரே நீங்கள் நினைப்பது போல் படத்தின் கதை சுருக்கம் இதுதான் ஆனால் இதில் விஜய் அசினை காதலிக்கவில்லை... இதில் காதல் என்பது பார்க்காமல் காதல் செய்வது... படத்தின் கடைசி காட்சிகள் மனதை உருக்கும்... ஹார்ட் பிரேக்கிங் ஆக இருக்கும்... இன்னொரு விடயம் விஜய்க்கு தன்னை அசின் காதலிப்பது பத்து வருடங்களுக்கு பிறகு தனது மகன் மூலம் அறிகிறார்... இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கலாம் மலையாள பாடி கார்ட் படத்தினை நான் பார்த்துவிட்டேன்...
|
44 comments:
இதே மாதிரி தான் அழகிய தமிழ் மகன் வித்தியாசம் எண்டு சொன்னானுங்க ..எங்க ரெட்டை வேடம்னு கடைசீல தேடி தேடி கண்டு பிடிச்சிட்டன் :D
காவலன் வெற்றிபெறாவிட்டால் விஜய்பாடு ரொம்ப கஷ்டம்.
உண்மையிலேயே நடுநிலையா இருந்துச்சிங்க விமர்சனம்..!!
ஃப்ரெண்ட்ஸ் படத்து க்ரூப் மறுபடியும் சேர்வதால் கொஞ்சம் நம்பிகை இருக்கிறது.பார்ப்போம்.
சித்திக் படம்கறதால காமெடியை நம்பலாம்
நீங்க விஜய் ரசிகரா?
இந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். விஜய்யை பொறுத்தவரையில் புதுமை என்றால் சிகையலங்காரத்தை மாற்றுவது மட்டும்தான். இந்தப் படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். (மேலே படம் பார்க்க). அதிகபட்சம், பாடல்காட்சிகளில் கலரிங்
நக்கலு?
படம் ரிலீஸ் ஆகறதுக்குள்ள விமர்சனமா>? போட்டுத்தாக்குங்க
//கல்லா காட்டுமா காவலன்//
பொறுத்திருந்து பார்ப்போம்...
நடுநிலையான அலசல்
>>> வடிவேலு தான் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பார் என்பது என் கருத்து..எப்படியும் நான் பார்க்கப்போவதில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள். விரைவில் மன்மதன் அம்பு மற்றும் கிகுஜிரோ(நந்தலாலாவை பார்த்து திருடிய ஜப்பானிய படம்(நிஜமாத்தான் ))....விமர்சனம் என் கடையில்.
இப்போமைய நிலைமையில் யாரும் கதாநாயகர்களுக்காக படம் பார்பதில்லை.. கதை மற்றும் திரைகதையே முக்கிய பங்கு வகிக்கிறது.. அந்நிலையில், இந்த கதை பல தமிழ் டப்பா படங்களில் பாத்து சளித்தது தான்.. மியூசிக்கும் எனக்கு பிடிக்கவில்லை.. சும்மா கால கைய ஆட்டிட்டா அது நல்ல படம் ஆகுமா.???
ok
நல்லா கட்டுச்சு கல்லா? எங்க ஊருலா அந்த படம் ரிலீஸ் பண்ண மாட்டோம் னு போர் கொடி தூக்குகிறார்கள் தியேட்டர் சங்க நிர்வாகிகள்.
பொறுத்திருந்து பாப்போம் கல்லா கட்டுதா இல்ல கல்லால அடிபடுதான்னு
எனக்கென்னவோ இந்த படம் ரசிகர்களுக்கு ஆப்பாகவும் பதிவர்களுக்கு ஆட்டுகால் சூப்பாகவும் அமையும் என்று நினைக்கிறன்.............
Vijay will rock
சித்திக் படம்கறதால காமெடியை நம்பலாம்.
இப்போமைய நிலைமையில் யாரும் கதாநாயகர்களுக்காக படம் பார்பதில்லை.. கதை மற்றும் திரைகதையே முக்கிய பங்கு வகிக்கிறது.
திரைக்கதை நல்லா இருந்தாத்தான் படம் வெற்றியடையும்... மற்றபடி விஜய்க்காக வெற்றி பெறாது..
@N.R.PRABHAKARAN
i'm admin of http://vijayfans-vinu.blogspot.com/
நண்பரே நீங்கள் நினைப்பது போல் படத்தின் கதை சுருக்கம் இதுதான் ஆனால் இதில் விஜய் அசினை காதலிக்கவில்லை.....இதில் காதல் என்பது பார்க்காமல் காதல் செய்வது....படத்தின் கடைசி காட்சிகள் மனதை உருக்கும் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருக்கும்........ இன்னொரு விடயம் விஜய்க்கு தன்னை அசின் காதலிப்பது பத்து வருடங்களுக்கு பிறகு தனது மகன் மூலம் அறிகிறார்..........இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கலாம் மலையாள பாடி கார்ட் படத்தினை நான் பார்த்துவிட்டேன்
நல்ல விமர்சனம் நண்பா.. ஆனால் விஜய் படம்னாலே கொஞ்சம் அலர்ஜியா ஃபீல் ஆகுது இப்போல்லாம்..
@ S.Sudharshan, எப்பூடி.., சேலம் தேவா, செங்கோவி, சி.பி.செந்தில்குமார், அன்பரசன், பார்வையாளன், சிவகுமார், தம்பி கூர்மதியன், விக்கி உலகம், நா.மணிவண்ணன், FARHAN, மண்டையன், Rizman, சே.குமார், தமிழ்வாசி - Prakash, Vinu, பதிவுலகில் பாபு
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ S.Sudharshan
// இதே மாதிரி தான் அழகிய தமிழ் மகன் வித்தியாசம் எண்டு சொன்னானுங்க ..எங்க ரெட்டை வேடம்னு கடைசீல தேடி தேடி கண்டு பிடிச்சிட்டன் :D //
அந்த படத்துல விஜய், ரெண்டு பாத்திரங்களுக்கும் வாய்ஸ் மாடுலேஷனில் வித்தியாசம் காட்டியிருப்பார்... அது ஒரு பெரிய வித்தியாசமே இல்லையென்றாலும் அந்தப்படம், அந்தக்கதை விஜய்யிடம் இருந்து ஒரு புது முயற்சியே... ஆனாலும் அந்தப்படம் தோல்வியடைந்தது துரதிர்ஷ்டமே... ஒருவேளை அழகிய தமிழ்மகன் வெற்றியடைந்திருந்தால் விஜய் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருக்கக் கூடும்...
@ செங்கோவி
// ஃப்ரெண்ட்ஸ் படத்து க்ரூப் மறுபடியும் சேர்வதால் கொஞ்சம் நம்பிகை இருக்கிறது.பார்ப்போம் //
ஆமாம்... பிரண்ட்ஸ் மட்டுமில்லாமல் இயக்குனரின் முந்தய தமிழ் படங்களான எங்கள் அண்ணா மற்றும் சாது மிரண்டா படங்களில் கூட காமெடி பார்ட் நன்றாகவே இருக்கும்... அதனால் இந்தமுறையும் நிச்சயம் காமெடியை நம்பலாம்...
@ சி.பி.செந்தில்குமார்
// நீங்க விஜய் ரசிகரா? //
இல்லை.... நான் ஒரு கமல் கம் அஜித் ரசிகர்... ஆனால் நல்ல படமாக இருந்தால் விஜய் படத்தையும் கூட ரசிப்பேன்...
// படம் ரிலீஸ் ஆகறதுக்குள்ள விமர்சனமா>? போட்டுத்தாக்குங்க //
இது விமர்சனம் அல்ல... முன்னோட்டம்....
@ சிவகுமார்
// வடிவேலு தான் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பார் என்பது என் கருத்து //
ம்ம்ம்... வில்லு படத்தை போல காமெடி அமையாமல் இருக்கணும்...
// கிகுஜிரோ(நந்தலாலாவை பார்த்து திருடிய ஜப்பானிய படம்(நிஜமாத்தான் )).... //
நக்கலா... :)))
@ தம்பி கூர்மதியன்
// இப்போமைய நிலைமையில் யாரும் கதாநாயகர்களுக்காக படம் பார்பதில்லை.. கதை மற்றும் திரைகதையே முக்கிய பங்கு வகிக்கிறது.. அந்நிலையில், இந்த கதை பல தமிழ் டப்பா படங்களில் பாத்து சளித்தது தான்.. மியூசிக்கும் எனக்கு பிடிக்கவில்லை.. சும்மா கால கைய ஆட்டிட்டா அது நல்ல படம் ஆகுமா.??? //
ரொம்ப சரி... கதை டப்பாதான் ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கெட்டால் ரசிக்கும் வண்ணம் ஒரு படத்தை தரலாம்... மியூசிக் உங்களுக்கும் எனக்கும் பிடிக்கவில்லை என்றால் கூட ஹிட் ஆகிவிடும்... அதுதானே முக்கியம்...
@ நா.மணிவண்ணன்
// நல்லா கட்டுச்சு கல்லா? எங்க ஊருலா அந்த படம் ரிலீஸ் பண்ண மாட்டோம் னு போர் கொடி தூக்குகிறார்கள் தியேட்டர் சங்க நிர்வாகிகள் //
அப்படியா அது மதுரை சுனாமி அழகிரி அண்ணன் பண்ணுற அலப்பறையா கூட இருக்கலாம்... எப்படியோ இந்த சிக்கல்களுக்கு நிச்சயம் கூடிய விரைவில் தீர்வு கிட்டும்...
@ மண்டையன்
// எனக்கென்னவோ இந்த படம் ரசிகர்களுக்கு ஆப்பாகவும் பதிவர்களுக்கு ஆட்டுகால் சூப்பாகவும் அமையும் என்று நினைக்கிறன்...... //
அடடே.... என்ன ஒரு இலக்கிய நயம்...
@ Vinu
// i'm admin of http://vijayfans-vinu.blogspot.com/ //
வாருங்கள் நண்பரே.... நீங்கள் வருகை தந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி...
// நண்பரே நீங்கள் நினைப்பது போல் படத்தின் கதை சுருக்கம் இதுதான் ஆனால் இதில் விஜய் அசினை காதலிக்கவில்லை.....இதில் காதல் என்பது பார்க்காமல் காதல் செய்வது....படத்தின் கடைசி காட்சிகள் மனதை உருக்கும் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருக்கும்........ இன்னொரு விடயம் விஜய்க்கு தன்னை அசின் காதலிப்பது பத்து வருடங்களுக்கு பிறகு தனது மகன் மூலம் அறிகிறார்..........இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கலாம் மலையாள பாடி கார்ட் படத்தினை நான் பார்த்துவிட்டேன் //
நல்லது அப்படியெனில் உங்களுடைய இந்த பதிலை எனது பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்...
படத்தைப் பற்றிய அலசல் அருமை நண்பா!!
இப்பிடியே நல்லா கெளப்பி விடுங்கப்பா.... இந்த தலைய புளிச் பண்ற கருமாந்திரத்தத் தான் வேட்டைக்காரன்லெயே பண்ணிட்டாரே டாகுடரு?
ஆமா, ஏன் ஒரு எடத்துல கூட டாகுடருன்னு போடவே இல்ல? இனியும் இந்த மாதிரி தப்பு நடந்துச்சு, அப்புறம்,பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஜாக்க்க்க்கிரதை.......!
//ஒருவரியில் சொன்னால் ஒரு தாதாவின் அடியாளாக இருந்துக்கொண்டு அவரது மகளை காதலிக்கும் நாயகன் பற்றிய கதை.//அநூறு தடவை அரைச்ச அதே புளிச்ச மாவுதானா.. :(( //இந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.// இவரோட பிரெண்ட்ஸ் படத்த தவிர [வயதான வேடம் ஒன்னு வருமே அதுதான்] மத்த எந்த படத்த பாத்தாலும் ஆறு வித்தியாசம் கூட சொல்ல முடியாத மாதிரி ஒரே மாதிரிதான் இருக்காரு, எங்கே போயி முட்டிக்கிறது. இதுல புதுசா வித்தியாசமா சிகையலங்காரமா? சினிமாவுல மூஞ்சியில மச்சம் வச்சா அடையாளம் தெரியாத மாதிரி வேற ஆளா ஆயிடுவான்கிற மாதிரி இருக்கு.
முதலில் எல்லாம் படம் வந்த பிறகு தான் விமர்சனம் எழுதுவார்கள்.. இப்பொழுதெல்லாம், அதற்காகக் காத்திராமல், தேர்தல் கருத்துக் கணிப்பு போல, கணிப்பு-விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன.. ஆனாலும் நடுநிலமையாகவே உணர்கிறேன்..
ஒரிஜினல் கதையை மாற்றாமல் நடித்தால் இவரது இமேஜ் பாதித்து விடும். கதையில் இவருக்கு ஏற்றவாறு மசாலா சேர்த்தால், கதையின் கரு கலைந்து விடும். பார்ப்போம், சித்திக் இந்த விஷயத்தை எப்படிக் கையாண்டுள்ளார் என்று.. (முதலில் தியேட்டர் கிடைக்கட்டும்..)
@ எம் அப்துல் காதர், பன்னிக்குட்டி ராம்சாமி, Jayadev Das, சாமக்கோடங்கி
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆமா, ஏன் ஒரு எடத்துல கூட டாகுடருன்னு போடவே இல்ல? இனியும் இந்த மாதிரி தப்பு நடந்துச்சு, அப்புறம்,பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஜாக்க்க்க்கிரதை.......! //
ம்ம்ம்... இது கலாய்ப்பு பதிவு அல்ல... விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்து எழுதப்பட்ட பதிவு... எனவேதான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை...
@ Jayadev Das
// இவரோட பிரெண்ட்ஸ் படத்த தவிர [வயதான வேடம் ஒன்னு வருமே அதுதான்] //
பிரண்ட்ஸ் படத்தில் வயதான காட்சியா... இறுதிக்காட்சியி சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்... அதில் ஒன்றும் பெரிய அளவில் வித்தியாசம் காட்டியிருப்பதாக எனக்கு தெரியவில்லை...
// மத்த எந்த படத்த பாத்தாலும் ஆறு வித்தியாசம் கூட சொல்ல முடியாத மாதிரி ஒரே மாதிரிதான் இருக்காரு //
சுறா படத்துல சர்தார்ஜி கெட்டப் போட்டாரு மறந்துட்டீங்களா :)))
@ சாமக்கோடங்கி
// முதலில் எல்லாம் படம் வந்த பிறகு தான் விமர்சனம் எழுதுவார்கள்.. இப்பொழுதெல்லாம், அதற்காகக் காத்திராமல், தேர்தல் கருத்துக் கணிப்பு போல, கணிப்பு-விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன.. ஆனாலும் நடுநிலமையாகவே உணர்கிறேன்.. //
படம் வந்தபிறகு எழுதுவது Review (விமர்சனம்)... படம் வெளிவருவதற்கு முன்பு எழுதுவது Preview (முன்னோட்டம்)... இது இரண்டாவது வகையைச் சார்ந்தது நண்பரே...
///////philosophy prabhakaran
December 29, 2010 2:20 AM @ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆமா, ஏன் ஒரு எடத்துல கூட டாகுடருன்னு போடவே இல்ல? இனியும் இந்த மாதிரி தப்பு நடந்துச்சு, அப்புறம்,பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஜாக்க்க்க்கிரதை.......! //
ம்ம்ம்... இது கலாய்ப்பு பதிவு அல்ல... விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்து எழுதப்பட்ட பதிவு... எனவேதான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.../////
அடப்பாவி, இந்த அநியாயத்த எங்க போயிச் சொல்ல? டாகுடருன்னு போட்டாவே கலாய்ப்புதானா? யோவ் அவரு நிஜமாவே டாகுடர் பட்டம் வாங்கியிருக்காருய்யா (கேப்டன் மாதிரி டுபாக்கூர் பட்டம் இல்ல அது)
பிரபா... என்ன நடக்கிறது?????????????
http://ajith-vijay.blogspot.com/2010/12/blog-post_5295.html
>>>அண்ணாத்தை தங்கள் பதிவை உருவி தமிழ் மணத்தில் இதுவரை 14 வோட்டு வாங்கி பிரபலமாகி விட்டார். உசாராக அவருடைய பதிவில் நேரத்தை மட்டும் போட்டுவிட்டு தேதி மற்றும் மாதத்தை மறைத்து விட்டார். உண்மைத்தமிழன் மற்றும் பலருக்கு சமீபகாலமாக இது போன்ற இம்சைகள் தொடர்வதை அறிவீர்கள். இது குறித்து உடனே தனிப்பதிவு போடுங்கள். தங்களை பின் தொடர்பவர்களுக்கு தெரிவிக்க இது ஒரு வாய்ப்பு. அகிம்சையை சற்று இளைப்பாற வைத்து விட்டு ரௌத்ரமும் பழகுங்கள்....இது அதற்கான நேரம்!!
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அடப்பாவி, இந்த அநியாயத்த எங்க போயிச் சொல்ல? டாகுடருன்னு போட்டாவே கலாய்ப்புதானா? யோவ் அவரு நிஜமாவே டாகுடர் பட்டம் வாங்கியிருக்காருய்யா (கேப்டன் மாதிரி டுபாக்கூர் பட்டம் இல்ல அது) //
அப்படின்னா அது டாகுடர் இல்ல... டாக்டர்...
உங்கள் பதிவு திருடப்பட்டதை அறிகிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறித்து அனைவருக்கும் தெரிவிய்ங்கள். குறிப்பாக, தமிழ்ம்ணம், இண்ட்லி போன்ற திரட்டிகளுக்கும் தெரிவியுங்கள்...........!
Post a Comment