வணக்கம் மக்களே...
சில நாட்களுக்கு முன்பு எந்தெந்த ப்ளேயர்களை எந்தெந்த அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் என்பது குறித்த பதிவொன்றை எழுதியிருந்தேன். இப்போது ப்ளேயர்களை தக்கவைக்கும் படலம் முடிந்திருக்கும் நிலையில் அதுகுறித்த ஒரு அலசல்.
Mumbai Indians:
Malinga, Pollard, Sachin, Harbhajan என்று பிளேயர்கள் பிடிமானத்தில் தன்னுடைய பங்கினை மிகச்சரியாக செய்துள்ள அணி என்று குறிப்பிடலாம். குறிப்பாக போல்லார்ட் மற்றும் மலிங்கா ஆட்டத்தையே புரட்டிப்போடக் கூடியவர்கள். சச்சினை விட்டிருந்தால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும். மேலும் மும்பை என்றாலே சச்சின் ஒரு ட்ரேட்மார்க் என்பதால் மும்பை ரசிகர்கள் அணியின் மீதுகொண்ட ஆதரவை கைவிட்டுருப்பார்கள். நான்காவது பிளேயரை தக்க வைத்துக்கொள்ள 0.5 million USD மட்டுமே தேவை என்ற நிலையில் ஹர்பஜனை வைத்துக்கொண்டது நல்ல முடிவு.
Chennai Super Kings:
Dhoni, Raina, Vijay, Morkel. தோனியையும் ரைனாவையும் தக்க வைத்துக்கொண்டது சரியான முடிவு. பொலிங்கரை தக்க வைப்பதற்கு ஐ.பி.எல் விதிகள் இடமளிக்காதது துரதிர்ஷ்டவசமானது. நல்லதொரு வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது சென்னை அணிக்கு ஒரு மிகப்பெரிய குறைபாடு. ஆனால் எப்போதாவது ஒருமுறை சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தும் மார்கலை நம்ப முடியாது. மார்கலை தக்க வைத்ததற்கு பதிலாக ஏலத்தில் வேறு ஏதாவதொரு வேகப்பந்து வீச்சாளரை எடுத்திருக்கலாம். சென்னை வீரர் விஜய்யை தக்க வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சிதான் ஆனால் அது சரியான முடிவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Rajasthan Royals:
Warne, Watson. வார்னே ஒரு நல்ல கேப்டன், திறமைசாலி. இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆடுவாரா என்பது மட்டும் சந்தேகம். வாட்சனும் அரிதான ஆல்-ரவுண்டர். இந்த இருவரை மட்டும் தக்க வைத்திருக்கும் ராஜஸ்தான் அணி யூசூப் பதானை தவறவிட்டது முட்டாள்தனமாக இருக்கிறது. இத்தனைக்கும் மூன்றாவது வீரரின் விலை 0.9 million USD மட்டுமே என்ற நிலையில் அவரை அருமையாக தக்க வைத்திருக்கலாம். மூன்றாவதாக ஒரு வெளிநாட்டு வீரரை தக்க வைத்துக்கொள்ள விதிகள் அனுமதிக்காத நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முனாப் படேலை வைத்திருக்கலாம்.
Delhi Dare Davils:
Seheag. அடிமுட்டாள்த்தனம் என்றே எண்ணத் தோன்றுகிறது. Dilshan, Warner, Nannes, De Villiers, Gambhir என்று நட்சத்திர பட்டாளத்தையே வைத்துக்கொண்டு ஒரே ஒரு வீரரை தக்க வைத்திருப்பதை வேறு எப்படி சொல்வது. ஆரம்ப ஆட்டத்தில் சேவாக்கிற்கு பக்க பலமாக இருந்துவந்த கம்பிரை தவற விட்டிருக்கக் கூடாது. மேலும் வேகப்பந்து வீச்சில் திறமையை வெளிப்படுத்திவந்த Nannes மற்றும் அதிரடி ஆட்டத்தோடு அவ்வப்போது சுழற்பந்து வீசும் Dilshan இருவரையும் அருமையாக தக்க வைத்திருக்கலாம்.
Royal Challengers Bangalore:
டிராவிட், கும்பிளே, உத்தப்பா போன்ற சீனியர் வீரர்கள் இருக்கும்போது கோலியை தக்க வைத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இருப்பினும் அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். நியூசிலாந்து அணியின் மோசமான பார்மை மனதில் வைத்துக்கொண்டு ராஸ் டெய்லரை தவற விட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது அவ்வளவு பெரிய தவறு என்பதை டெய்லர் வேறு ஒரு அணிக்கு சென்று பொளந்து கட்டும்போது உணர்ந்துக்கொள்வார்கள். ஆக, டெய்லர், டிராவிட், கும்பிளே ஆகிய மூவரையும் தக்க வைத்திருக்கலாம். நான்காவது வீரராக உத்தப்பா அல்லது கோலியை வைத்திருக்கலாம்.
மற்ற மூன்று அணிகளும் எந்தவொரு வீரரையும் தக்க வைத்துக்கொள்ளவில்லை. கொல்கத்தா அணி கெய்லை தக்க வைத்துக்கொள்ள நினைத்து கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தை கைவிட்டதாக தெரிகிறது.
கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு சிறந்த ப்ளேயர் எல்லா ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று சொல்ல முடியாது. ஆனால் சில வீரர்கள் பெரும்பாலான சமயத்தில் சிறப்பாக ஆடுவார்கள். அப்படிப்பட்ட நட்சத்திர வீரர்களை சிலரை அவர்களது அணிகள தவற விட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீரர்களின் லிஸ்ட்:
- Adam Gilchrist
- Tilakaratne Dilshan
- David Warner
- Gautam Gambhir
- Kumar Sangakkara
- Yuvraj Singh
- Chris Gayle
- Yusuf Pathan
- Ross Taylor
அட., யாருப்பா அங்க ரொம்ப நேரமா கங்குலி கங்குலின்னு கத்திக்கினு இருக்குறது...
என்றும் அன்புடன்,
|
42 comments:
நான்தான் முதல் போனி
ஆபரேஷன் என்னமா வேலசெஞ்சிருக்கு !!!!!!!!!!
முடியல!!
ஹி ஹி
முரளிதரன் என்ன ஆச்சு ?
ஸ்டில்லை வைத்து கப்பித்தனமாக ஒரு கமெண்ட் போட நினைத்தேன் . ஆனால் சிறந்த அலசலாக விளங்கும் இந்த பதிவின் விவாதம் திசை மாற விரும்பவில்லை .
வாவ்.. அருமையான சுருக்க அலசல்.. கலக்கிறீங்க பாஸ்.. நீங்க சொன்ன சில வீரர்கள் பற்றிய விஷயங்கள் சரியே.. ஆனால் சென்னையின் தெரிவில் போல்லின்ஜர் விடுபட்டது கவலையே.. அதே போல பெங்களூரும் உத்தப்பாவை வைத்திருந்திருக்கலாம், கலிசையும்.
form is temporary;class is permanent
மேலே படம் கலக்கல் :)
நல்ல தகவல்கள்
பகிர்வுக்கு நன்றி சார்
தொடர்ந்து கலக்குங்க....
முத வெட்டு
போடலாம்னு நினைச்சேன்,மிஸ் ஆகிடுச்சு
எனக்கு கிரிக்கெட் நாலெட்ஜ் நஹி ,சாரி
:-)
கிரிக்கெட்டு பார்க்கத்தான் தெரியும்,புள்ளிவிவரம் எல்லாம் ஒன்னும் தெரியாது, நல்லா எழுதி இருக்கீங்க
புள்ளிவிவரம் செம கலக்கல்ஸ்
வாழ்த்துகள் சகோ !
கலக்கல் ஆய்வு
மேலே உள்ள படத்துல, ஏதோ வித்தியாசம் தெரியுதே...
கீழே என்னமோ எழுதியிருக்கீங்கன்னு தெரியுது, ஆனா அந்தப்பபடம் மறைக்குதுங்க....!
கிரிக்கெட் பார்க்க தெரியும், மற்றவை ரொம்ப தூரம்.
விஜய்க்கு பதிலாக போல்லிங்கேர் அ எடுத்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.. நடந்து முடிந்த IPL போட்டிகளில் போல்லிங்கேர் வருகைக்கு பின்பு தான் சென்னை அணி எழுச்சி கண்டது திண்ணம்.
மந்திரா பேடி படம் சூப்பர்! இவங்க இந்த வாட்டி வருவாங்களா இல்லையா? (என் கவலை எனக்கு!)
முரளி சென்னையில் இல்லாதது மிகப்பெரும் ஏமாற்றமே !!!
மும்பை அணியின் முடிவு சரியானதே.... சென்னையில் ”மார்கல்” தற்போது நல்ல பார்மில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவி நடை பெரும் MTN40 தொடரில் நன்றாகவே ஆடி வருகிறார். விஜய்க்கு பதிலாக் அஸ்வின்னை வைத்து இருக்கலாம். டில்லி சேவாக், கம்பீர் இருவைரயும் வைத்து இருக்க வேண்டும். நீங்க சொல்வது போல சேவாக் அவ்வளவு மோசமாக விளையாடுபவர் அல்ல... he is a icon player
சிறப்பாக அலசியுள்ளீர்கள், ஆனால் சென்ற ஆண்டு பஞ்சாப் வீரர்களிலேயே அதிக ஓட்டமும் அதிக ஸ்ரைக் ரேட்டும் (சதம் உட்பட) பெற்ற மகேலாவின் பெயரை தவற விட்ட நட்சத்திர லிஸ்டில் சேர்த்திருக்க வேண்டும். அதிலும் சங்ககாராவின் பெயருக்கு முன்னதாக மகேலாவின் பெயர் வந்திருக்கவேண்டும் என்பது என் கருத்து.
bangalore கும்பிளேவையும் உத்தப்பாவையையும் விட்டு இருக்க கூடாது. கோலி செலக்ஷன் ஒரு மாஸ்டர் ஸ்ரோக். மற்ற அணிகள் புதிய வீரர்களை தேர்ந்து எடுப்பதே சிறந்தது... குறிப்பாக கோல்கத்தா, பஞ்சாப்....
இன்னுமா நீங்க யுவராஜ் சிங்கை நம்பிட்டு இருக்கீங்க?
நல்ல அலசல் . மந்த்ரா பேடி நல்ல சாப்பிடுவாங்க போலேயே
அருமையான அலசல்.
மந்திரா பேடி படத்தை போட்டுட்டு என்னென்னவோ சொல்றீங்க ஒன்னுமே நினைவுக்கு வரல...!! அவ்வ்வ்வ்வ்
பி.பி (இனி இப்பிடித் தான் செல்லமா அழைப்பேன்..)
அன்றைய பதிவில் குறிப்பிட்ட பல விடயத்தை இன்று உறுதிப்படுத்திவிட்டீர்கள்.. நன்றி...
நண்பா முடிஞ்சா ஒனக்கு புடிச்ச பத்து பாட்ட ஒரு போடு போடு. தொடர்பதிவு புடிச்சா எழுது.
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/12/10.html
@ ரஹீம் கஸாலி, விக்கி உலகம், பார்வையாளன், LOSHAN, மாணவன், சி.பி.செந்தில்குமார், ஜீ..., இரவு வானம், Geetha6, FARHAN, பன்னிக்குட்டி ராம்சாமி, இளம் தூயவன், மதுரை பாண்டி, நா.மணிவண்ணன், சேட்டைக்காரன், எப்பூடி.., அருண் பிரசாத், சே.குமார், ஜெய்லானி, ம.தி.சுதா
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...
@ விக்கி உலகம்
// ஆபரேஷன் என்னமா வேலசெஞ்சிருக்கு !!!!!!!!!!
முடியல!! //
நண்பரே "அது" நீங்கள் நினைப்பது போல ஆப்பரேஷன் செய்த வேலையல்ல... இயற்கையாகவே "அது" அப்படித்தான்... (உனக்கு எப்படித் தெரியும் என்றெல்லாம் கேட்கக் கூடாது... எல்லாம் கேள்வி ஞானம் தான்...)
@ பார்வையாளன்
// முரளிதரன் என்ன ஆச்சு ? //
முரளிதரன் ஏலத்திற்கு வருவார்... யாராவது எடுக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
// ஸ்டில்லை வைத்து கப்பித்தனமாக ஒரு கமெண்ட் போட நினைத்தேன் . ஆனால் சிறந்த அலசலாக விளங்கும் இந்த பதிவின் விவாதம் திசை மாற விரும்பவில்லை //
என்ன பெரிய விவாதம்... நீங்கள் போட்டிருக்கலாம்...
@ LOSHAN
// ஆனால் சென்னையின் தெரிவில் போல்லின்ஜர் விடுபட்டது கவலையே.. //
ஐ.பி.எல் விதிகளின் படி போல்லிங்கரை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று நண்பர் ஒருவர் சொல்லி அறிந்துக்கொண்டேன்...
என்னுடைய வலைப்பூவினை பின்தொடர்பவராக இணைந்ததற்கு நன்றி...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மேலே உள்ள படத்துல, ஏதோ வித்தியாசம் தெரியுதே... //
படத்தில் எந்தவித கிராபிக்ஸும் இல்லை நண்பா...
@ மதுரை பாண்டி
// விஜய்க்கு பதிலாக போல்லிங்கேர் அ எடுத்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.. நடந்து முடிந்த IPL போட்டிகளில் போல்லிங்கேர் வருகைக்கு பின்பு தான் சென்னை அணி எழுச்சி கண்டது திண்ணம். //
ஐ.பி.எல் விதிகளின் படி போல்லிங்கரை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று நண்பர் ஒருவர் சொல்லி அறிந்துக்கொண்டேன்...
அடடே எண்ணம், திண்ணம்... என்ன ஒரு எதுகை நயம்...
@ சேட்டைக்காரன்
// மந்திரா பேடி படம் சூப்பர்! இவங்க இந்த வாட்டி வருவாங்களா இல்லையா? (என் கவலை எனக்கு!) //
மந்திரா பேடி வருவது சந்தேகம் தான்... ஆனால் சியர்லீடர்ஸ் ஆட்டம் உண்டு...
@ அருண் பிரசாத்
// சென்னையில் ”மார்கல்” தற்போது நல்ல பார்மில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவி நடை பெரும் MTN40 தொடரில் நன்றாகவே ஆடி வருகிறார் //
அப்படியா... இந்தியாவில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்... எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை...
// விஜய்க்கு பதிலாக் அஸ்வின்னை வைத்து இருக்கலாம் //
அவ்வாறு செய்வதாக இருந்தால்... சீனியர் ஸ்பின்னரான முரளிதரனை தக்க வைத்திருக்கலாம்...
// நீங்க சொல்வது போல சேவாக் அவ்வளவு மோசமாக விளையாடுபவர் அல்ல //
சேவாக் மோசமான வீரர் என்று குறிப்பிடவில்லை... அணியில் அவரை விட திறமைசாலிகள் சிலர் இருப்பதாக குறிப்பிட்டேன்....
// இன்னுமா நீங்க யுவராஜ் சிங்கை நம்பிட்டு இருக்கீங்க? //
ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்தவரை மறக்க முடியுமா...
உங்களுடைய கிரிக்கெட் ஞானம் வியக்க வைக்கிறது...
@ எப்பூடி..
// ஆனால் சென்ற ஆண்டு பஞ்சாப் வீரர்களிலேயே அதிக ஓட்டமும் அதிக ஸ்ரைக் ரேட்டும் (சதம் உட்பட) பெற்ற மகேலாவின் பெயரை தவற விட்ட நட்சத்திர லிஸ்டில் சேர்த்திருக்க வேண்டும். அதிலும் சங்ககாராவின் பெயருக்கு முன்னதாக மகேலாவின் பெயர் வந்திருக்கவேண்டும் என்பது என் கருத்து. //
ஆம்... சென்ற ஆண்டு கலக்கினார்... ஆனால் இந்த ஆண்டும் அதே பார்மில் இருப்பார் என்பதை நான் நம்பவில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...
@ நா.மணிவண்ணன்
// நல்ல அலசல் . மந்த்ரா பேடி நல்ல சாப்பிடுவாங்க போலேயே //
உண்மையை சொல்லுங்க.... நீங்க பதிவை படிச்சீங்களா அல்லது மந்திராவை பார்த்தீர்களா...
// This post has been removed by the author. //
வார்த்தைகளே தேவை இல்லை மணி... நீங்கள் இந்த இடத்தில் என்ன கமென்ட் போட்டிருப்பீர்கள் என்று என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது... என் இனமடா நீ...
@ ம.தி.சுதா
// பி.பி (இனி இப்பிடித் தான் செல்லமா அழைப்பேன்..) //
ம்ம்ம்... தாராளமா கூப்பிடுங்க நண்பரே...
// ஆபரேஷன் என்னமா வேலசெஞ்சிருக்கு !!!!!!!!!!
முடியல!! //
நண்பரே "அது" நீங்கள் நினைப்பது போல ஆப்பரேஷன் செய்த வேலையல்ல... இயற்கையாகவே "அது" அப்படித்தான்... (உனக்கு எப்படித் தெரியும் என்றெல்லாம் கேட்கக் கூடாது... எல்லாம் கேள்வி ஞானம் தான்...)
ரொம்ப நாளைக்கு முன்னே "சாந்தின்னு" ஒரு டப்பிங் சீரியலு வந்தது. அதிலிருந்துதான் இந்த ஆத்தா பேமசாச்சி. அப்போ இந்தா மாதிரி கிடையாது. அப்புறம் ஒரு ஆபரேஷனுக்கு பிறகுதான் இந்தா மாதிரி.
வராலாறு முக்கியம் நண்பரே!?
@ விக்கி உலகம்
// ரொம்ப நாளைக்கு முன்னே "சாந்தின்னு" ஒரு டப்பிங் சீரியலு வந்தது. அதிலிருந்துதான் இந்த ஆத்தா பேமசாச்சி. அப்போ இந்தா மாதிரி கிடையாது. அப்புறம் ஒரு ஆபரேஷனுக்கு பிறகுதான் இந்தா மாதிரி. //
எனக்கு மூன்று வகையான எண்ணங்கள் உள்ளன...
1. அப்போ அம்மணி அடக்கமான முறையில் சேலை அணிந்திருக்கலாம்... இப்போது இறுக்கமான முறையில் டீ-ஷர்ட் அணிந்திருக்கிறார்... அதனால் வித்தியாசமாக தெரிகிறது... மற்றபடி சைஸ் அப்பாவும் இப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கிறது....
2. அது இப்போ இயற்கையான முறையில் வளர்ந்திருக்கு...
3. நீங்கள் சொன்னதுபோல ஆப்பரேஷன் நடந்திருக்கலாம்... ஆனால் அதிகாரப்பூர்வமற்ற முறையிலேயே நடந்திருக்கும்... ஏனெனில் நான் கூகிளில் "mandira bedi operation" என்று டைப் செய்து தேடினேன்... வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் தென்படவில்லை...
அந்த படத்துல இருக்க மூணு பேரையும் IPL தக்க வச்சிருக்கானு ஒண்ணும் எழுதலயே ஏன்?
(படம் போட்டு ஒங்களுக்கு தான் வெறுப்பேத்த முடியுமா?.கேள்வி கேட்டு எங்களுக்கும் வெறுப்பேத்த தெரியும்)
Post a Comment