29 December 2010

TOP 25 தமிழ்ப்படங்கள் – 2010

வணக்கம் மக்களே...

நடந்துமுடிய இருக்கும் ஆண்டில் எத்தனை தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறேன் என்று லிஸ்ட் எடுத்தேன். 25 படங்கள் லிஸ்டில் வந்தது. அவற்றை வரிசைப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் அந்தப் படங்கள் குறித்த என்னுடைய ஒருவரி விமர்சனங்களை எழுதுகிறேன். அதற்கு முன்னதாக நான் பார்க்க நினைத்து தவறவிட்ட படங்கள்:-
-          நாணயம்
-          கோவா
-          சிந்து சமவெளி
-          சித்து +2
-          ஈசன்

இப்ப மெயின் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்...

25. ஆனந்தபுரத்து வீடு இதெல்லாம் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய விட்டலாச்சார்யா டைப் படம்.

24. சிங்கம் ஓவர் இரைச்சல். ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்த மசாலாக்கலவை.

23. கோரிப்பாளையம் போதையில் பார்த்த படம். சுப்ரமணியபுரம் + மாயாண்டி குடும்பத்தார் மிக்சிங் சூப்பர்.

22. கற்றது களவு ஆர்ப்பாட்டமில்லாத கமர்ஷியல் திரைப்படம் எனினும் க்ளைமாக்ஸ் காட்சிகள் எப்போதும் போல சலிப்பு.

21. குட்டி ஒருதலைக்காதலின் மகத்துவத்தை சொன்ன படம். ஆனால் தெலுங்கு வாடை கொஞ்சம் தூக்கல். க்ளைமாக்ஸ் இழுவை.

20. ராவணன் புரிந்துக்கொள்ள முடியாத மணிரத்னம் படங்களில் இதுவும் ஒன்று. எனக்கு புரிந்துக்கொள்ளும் ஞானம் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்.

19. இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் நல்லதொரு நகைச்சுவை திரைப்படம். எனினும் அதிகம் பரிட்சயமில்லாத கவ்பாய் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

18. மதராசப்பட்டினம் தமிழில் ஒரு டைட்டானிக். அதற்காக டைட்டானிக்கையே உல்டா பண்ணி எடுத்ததை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

17. வ குவாட்டர் கட்டிங் மரணமொக்கை. எனினும் இயக்குனர் இணையின் கிரியேட்டிவிட்டி மற்றும் வசனங்கள் பிடித்திருந்தன.

16. நான் மகான் அல்ல இரண்டாம் பாதியில் காட்டியிருந்த புதுமையை முதல் பாதியில் காட்ட தவறியிருந்தார்கள்.

15. தமிழ் படம் வெள்ளித்திரையில் ஒரு லொள்ளு சபா. தமிழ் சினிமாவால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு இனிப்பு.

14. களவாணி வழமையான கிராமத்து காவியம் எனினும் ஏதோவொன்று படத்தை ரொம்பவே ரசிக்க வைத்தது.

13. வம்சம் சுனைனாவுக்காகவும் இயக்குனரின் கிரியேட்டிவிட்டிக்காகவும் பிடித்திருந்தது. மற்றபடி படத்தில் ஒன்றும் இல்லை.

12. மன்மதன் அம்பு கமலிடம் இருந்து மீண்டுமொரு நகைச்சுவை படைப்பு. இரண்டாம் பாதியில் கிரேசி மோகன் டைப் ஆள் மாறாட்ட காமெடிகள் கலக்கல்.

11. மந்திரப் புன்னகை மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒரு மனிதனும் ஆவனது காதலும். படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் தத்துவங்கள்.

10. பாஸ் (எ) பாஸ்கரன் மூன்று மணிநேரம் மனதுவிட்டு சிரிக்கவைத்த கமர்ஷியல் படம். வேலை கிடைக்கலைன்னா பொண்ணு கிடைக்காது என்று மெசேஜ் சொன்ன படம்.

9. அசல் படம் என்னவோ மொக்கைதான் என்றாலும் அஜித் ரசிகனாக ரசித்தேன்.

8. மைனா ஒரு கிராமத்து பயணக்காதல். தம்பி ராமையாவின் நடிப்பு பிடித்திருந்தது. அமலா பால் மனதை அள்ளிச் சென்றார்.

7. பையா வழமையான கமர்ஷியல் சினிமா எனினும் காதலியோடு தனியாக ஒரு டூர் போய்வந்தது போல ஒரு உன்னத அனுபாவம்.

6. அங்காடித் தெரு டி.நகர் ரெங்கநாதன் தெருவின் மறுப்பக்கத்தையும் முதலாளிகள் செய்யும் அநியாயங்களையும் வெளிச்சம் போட்டு காட்டிய கம்யூனிச திரைப்படம் கூடவே காதலும்.

5. சுறா என்னடா மொக்கை படத்திற்கு ஐந்தாவது இடம் என்று பார்க்கிறீர்களா. நீங்க எல்லாம் தமிழ் படத்தை எப்படி ரசித்தீர்களோ அதுபோல குலுங்கி சிரித்து ரசித்த படம்.

4. எந்திரன் தமிழ் சினிமாவின் மற்றுமொரு மைல்கல். ஏகப்பட்ட பிரம்மாண்டங்கள். தொழில்நுட்ப அளவில் சிலிர்க்க வைத்த படம்.

3. நந்தலாலா உலகப்பட காப்பி என்பது குறை என்றாலும் தாய்ப்பாசத்தை வலியுறுத்தி என் மணம் கவர்ந்த படம்.

2. விண்ணைத்தாண்டி வருவாயா நெகடிவ் விமர்சனம் எழுதியதற்காக பின்னாளில் வருத்தப்பட்டேன். காதலிப்பவர்கள், காதலித்தவர்கள் மட்டுமே ரசிக்க முடியும்.

1. ஆயிரத்தில் ஒருவன் மூன்று மணிநேரத்திற்கு வேறொரு உலகிற்கு சென்று வந்ததுபோல இருந்தது. செல்வாவின் தற்போதைய பெஸ்ட். பீரியட் பிலிம், அட்வென்ச்சர் என்று பார்க்காத பல விஷயங்களை காட்டியது.

டிஸ்கி: வாசகர்கள் சும்மா படிச்சிட்டு போகாம  உங்களோட பார்வையில் குறைந்தபட்சம் TOP 5 சொல்லிவிட்டு சென்றால் விழா களைகட்டும்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

61 comments:

சி.பி.செந்தில்குமார் said...

போட்றா முத வெட்டை

சி.பி.செந்தில்குமார் said...

சிந்து சமவெளியை பாக்கலையா? அய்யகோ நீரும் ஒரு தமிழன் தானா>?

சி.பி.செந்தில்குமார் said...

அஜித் ரசிகனா இருந்தாலும் படம் பற்றி உங்க நேர்மையான கருத்தை சொன்னதுக்கு பாராட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>>விண்ணைத்தாண்டி வருவாயா – நெகடிவ் விமர்சனம் எழுதியதற்காக பின்னாளில் வருத்தப்பட்டேன்.

அடப்பாவி நெகட்டிவ் விமர்சனமா>அந்த லிம்க்க்கை என் மெயிலுக்கு அனுப்புங்க பாக்கறேன்

எல் கே said...

நான் பார்த்தது இந்திரன் மட்டுமே. எனவே வரிசைப் படுத்த இயலாது

வைகை said...

சுறா – என்னடா மொக்கை படத்திற்கு ஐந்தாவது இடம் என்று பார்க்கிறீர்களா. நீங்க எல்லாம் தமிழ் படத்தை எப்படி ரசித்தீர்களோ அதுபோல குலுங்கி சிரித்து ரசித்த படம்./////////////


இதே உணர்வோடுதான் நானும் பார்த்தேன்!

pichaikaaran said...

உங்கள் தர வரிசையை நான் ஏற்கவில்லை . இருந்தாலும் உங்கள் விளக்கங்கள் அருமை

ரஹீம் கஸ்ஸாலி said...

யாராவது சி.பி.-க்கு தடை போடுங்கப்பா.தமிழ்மணத்துல தான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறாரென்றால்....பின்னூட்டம் போடுவதிலும் முதலிடம் வகிக்கிறாரப்பா....பிரபா உங்களிடமிருந்து சுட்ட கல்லா கட்டுமா காவலன் பதிவு தமிழ்-10-இல் 13 வோட்டு வாங்கி பிரசுரம் ஆகிருக்கு. என்ன கொடுமை பிரபா இது.

idroos said...

5.enthiran
4.aayiratthil oruvan
3.maina,nandalala
2.angadi theru
1.vinnai thaandi varuvaaya

idroos said...

Kadhalin Manapporaatangalai vivarippathal vtv mudhalitam

ரஹீம் கஸ்ஸாலி said...

இதில் இன்னொரு விஷேசம் என்னவென்றால்
அந்த பதிவிற்கு நீங்களே6 ஓட்டுதான் வாங்கியிருக்கீங்க....அங்கே

வருண் said...

உங்களுக்கு விஜயை ரொம்பப் பிடிக்கும்போல இருக்கு. அதனால் சூர்யாவை வெறுக்குறீங்க போல.

சிங்கம் 24 இடம்

சுறா 5 வது இடம்

ஒண்ணு சுறா 23 அல்லது 25 ஆ இருக்கனும்

இல்லைனா சிங்கம் 4 இல்ல 6 வது இடத்தில் இருக்கனும்னு பலர் எதிர் பார்ப்பாங்க! :)

THOPPITHOPPI said...

வாழ்த்துக்கள்

டிலீப் said...

நல்லதொரு வரிசைப்படுத்துல்
1.Enthiran
2.Vinnaithaandi Varuvaayaa
3.Singam
4.Boss Engira Bhaskaran
5.Mynaa

Unknown said...

"எடு அருவாள"

Unknown said...

தொடர் பதிவு எழுதுவதற்கு அழைப்பு குடுக்கவா என்று கேட்டிரு இருந்தீர்கள் .

எழுதலாம் but அடுத்த வருடம் ஆகிவிடும் பரவாலையா

Unknown said...

அசல்
களவாணி
பாஸ் (எ) பாஸ்கரன்
அங்காடித் தெரு
எந்திரன்

தினேஷ்குமார் said...

களவானி - பார்த்துக்கிட்டே இருக்கலாம் சூப்பர்
நந்தலாலா - சொல்ல வார்த்தைகள் இல்லை தாய்பாசம்
மந்திர புன்னகை - பித்தனாக மாறி ரசித்தேன்
குட்டி - நகைச்சுவையோடு ஒருதலை காதல்
ராவணன் - புரியாமல் புரிந்து பார்த்தேன்

Srinivas said...

1- ENTHIRAN : Thalaivar Kalakkal
2- MAN MADHAN AMBU : Comedy Thookkal
3- MADHARASAPATTINAM : Namma Chennai
4- VTV : TRISHAA TRISHAAA
5- AAYIRATHIL ORUVAN : Arpudham
6- RAAVANAN : VIkram Rockz
7- SINGAM : He is Durai Singam
8- NAAN MAHAN ALLA : Sema Time pass
9- KALAVANI : Kalavaandutaan
10- PAIYA : Namma Tammanaaa :)

Innum Mynaa Paakala :)

Speed Master said...

அருமை 1000ல் ஒருவன் முதல் இடம் இதுதான் ............

Unknown said...

நாணயம் படம் உண்மையிலேயே அருமையான படம் கண்டிப்பா அத பாருங்க, அப்புறம் உங்க டாப் 5 மாறிடும்

Mohan said...

உங்களின் படங்களின் தரவரிசை மிகவும் நன்றாக இருந்தது.

Unknown said...

ஆஹா!! சுறாவுக்கு ஐந்தாவது இடமா..

முதல் சீன் மட்டும்தான் அந்தப் படத்தில் பார்த்தேன்..

குறையொன்றுமில்லை. said...

இதில் ஒருபடம் கூட பார்த்ததில்லை,:)))))

Anonymous said...

>>> நீங்கள் பார்க்க நினைத்து தவற விட்ட படங்கள் தவற விட்டதாகவே இருக்கட்டும். ஏன் என்று சந்திக்கையில் சொல்கிறேன்.

......கோரிப்பாளையம் – போதையில் பார்த்த படம்(தண்ணி அடிப்பீங்களா??????????????????)

..............வ குவாட்டர் கட்டிங் – மரணமொக்கை. எனினும் இயக்குனர் இணையின் கிரியேட்டிவிட்டி.........Thats just a ad film kinda stuff!!!!

...................ஆயிரத்தில் ஒருவன் – மூன்று மணிநேரத்திற்கு வேறொரு உலகிற்கு சென்று வந்ததுபோல இருந்தது. செல்வாவின் தற்போதைய பெஸ்ட். பீரியட் பிலிம், அட்வென்ச்சர் என்று பார்க்காத பல விஷயங்களை காட்டியது............unexpected. நிறைய பேசணும், பிரபா.

விருதகிரி??????????????????????????????????????????????????????????????????????????????????

Anonymous said...

>>> பிரபா உங்களிடமிருந்து சுட்ட கல்லா கட்டுமா காவலன் பதிவு தமிழ்-10-இல் 13 வோட்டு வாங்கி பிரசுரம் ஆகிருக்கு. என்ன கொடுமை பிரபா இது...

>>> ரஹீம் என்ன சொல்றார்...புரியல..வஞ்ச புகழ்ச்சியா...

Ram said...

16.கோவா
15.காதல் சொல்ல வந்தேன்
14.ஆயிரத்தில் ஒருவன்
13.கோரிபாளையம்
12.நாணயம்
11.வம்சம்
10.ஈசன்
9.மன்மதன் அம்பு
8.பாஸ்
7.எந்திரன்
6.விண்ணை தாண்டி வருவாயா
5.அங்காடி தெரு
4.ராவணன்
3.மைனா
2.நந்தலாலா
1.மதராசபட்டிணம்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை...

'பரிவை' சே.குமார் said...

நல்ல பார்வை.

http://vayalaan.blogspot.com/2010/12/blog-post_29.html

படிச்சிட்டு திட்டப்படாது.

பாரி தாண்டவமூர்த்தி said...

உன்னோட பதிவ வேறு ஒருத்தர் தமிழ்10 போட்டிருக்கார். இப்பவே கவனிக்கவும்...

எப்பூடி.. said...

1 எந்திரன்
2 எந்திரன்
3 எந்திரன்
4 எந்திரன்
5 எந்திரன்
6 எந்திரன்
7 எந்திரன்
8 எந்திரன்
9 எந்திரன்
10 எந்திரன்
11 எந்திரன்
12 எந்திரன்
13 எந்திரன்
14 எந்திரன்
15 எந்திரன்
16 எந்திரன்
17 எந்திரன்
18 எந்திரன்
19 எந்திரன்
20 எந்திரன்
21 எந்திரன்
22 எந்திரன்
23 எந்திரன்
24 எந்திரன்
25 எந்திரன்

Unknown said...

1.Enthiran
2.Maina
3.Kalavani
4.vinnai thandi varuvayaa
5.Boss engira baskaran
6.Angadi theru
7.Singam
8.Manthira punnagai
9.Vamsam
10.Nan magan alla

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிவுக்கு நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

karthik said...

மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற படங்கள்
1. எந்திரன்






2. சிங்கம்

3. பையா
4. விண்ணை தாண்டி வருவாயா
5. பாஸ் என்கிற பாஸ்கரன்
6. நான் மகான் அல்ல
7. மதராசபட்டினம்
8. மைனா
9. தமிழ்படம்
10. அங்காடி தெரு & களவானி

11 இல் 9 படம் கலைஞர் & co. தயரிப்பு அல்லது விநியோகம்

திருப்பூர் சரவணக்குமார் said...

நச்சுன்னு இருக்குங்க....

Anonymous said...

1.ankaditheru
2.mynaa
3.kalavaani
4.vinnai thandi varuvaaya
5.boss enkira baskaran

சுதன் said...

1. Ayirathil oruvan
2. vinnaithaandi varuvaya
3. angadi theru
4. maina
5. kalavani

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார், எல் கே, வைகை, பார்வையாளன், ரஹீம் கஸாலி, ஐத்ருஸ், வருண், THOPPITHOPPI, டிலீப், விக்கி உலகம், நா.மணிவண்ணன், dineshkumar, Srinivas, Speed Master, இரவு வானம், Mohan, பதிவுலகில் பாபு, Lakshmi, சிவகுமார், தம்பி கூர்மதியன், பிரஷா, சே.குமார், Pari T Moorthy, எப்பூடி.., ஹாஜா மொஹைதீன், T.V.ராதாகிருஷ்ணன், karthik, திருப்பூர் சரவணக்குமார், சுதன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// சிந்து சமவெளியை பாக்கலையா? அய்யகோ நீரும் ஒரு தமிழன் தானா>? //

அவ்வளவு நல்ல படமா... டி.வி.டி கூட வச்சிருக்கேன்... ஆனா பாக்குறதுக்குத்தான் நேரமில்ல...

// அடப்பாவி நெகட்டிவ் விமர்சனமா>அந்த லிம்க்க்கை என் மெயிலுக்கு அனுப்புங்க பாக்கறேன் //

அனுப்பியிருந்தேனே படிச்சீங்களா...

Philosophy Prabhakaran said...

@ வைகை
// இதே உணர்வோடுதான் நானும் பார்த்தேன்! //

என் இனமடா நீ... இப்போ நிறைய பேர் இந்த மாதிரி தான் இருக்குறாங்க... நான் சுறா படத்துக்கு போனப்ப பக்கத்துல இருந்தவர் கூட நம் இனம் தான்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// உங்கள் தர வரிசையை நான் ஏற்கவில்லை . இருந்தாலும் உங்கள் விளக்கங்கள் அருமை //

உங்களுடைய தரவரிசையை பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கலாமே... தனிப்பதிவாக வெளியிட்டாலும் மகிழ்ச்சியே...

Philosophy Prabhakaran said...

@ ரஹீம் கஸாலி
// பிரபா உங்களிடமிருந்து சுட்ட கல்லா கட்டுமா காவலன் பதிவு தமிழ்-10-இல் 13 வோட்டு வாங்கி பிரசுரம் ஆகிருக்கு. என்ன கொடுமை பிரபா இது. //

அதுகுறித்து தனிப்பதிவு போட்டிருக்கிறேன்... பாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ ஐத்ருஸ்
// 5.enthiran
4.aayiratthil oruvan
3.maina,nandalala
2.angadi theru
1.vinnai thaandi varuvaaya //

உங்க ரசனையும் என்னுடைய ரசனையும் நல்லாவே ஒத்துப்போகுது... love feelings மட்டும் உங்ககிட்ட கொஞ்சம் தூக்கல் போல...

Philosophy Prabhakaran said...

@ வருண்
// ஒண்ணு சுறா 23 அல்லது 25 ஆ இருக்கனும்

இல்லைனா சிங்கம் 4 இல்ல 6 வது இடத்தில் இருக்கனும்னு பலர் எதிர் பார்ப்பாங்க! //

ஆமாம்... சிங்கம், சுறா ரெண்டுமே ஒரே மாதிரியான மொக்கைப்படங்கள் தான்... இருந்தாலும் சில விஷயங்களை விஜய் செய்தால் குபீர் சிரிப்பு வரும்... அதனால சுராவை ரசிச்ச அளவுக்கு சிங்கத்தை ரசிக்கவில்லை...

Philosophy Prabhakaran said...

@ டிலீப்
// 1.Enthiran
2.Vinnaithaandi Varuvaayaa
3.Singam
4.Boss Engira Bhaskaran
5.Mynaa //

ம்ம்ம்... நல்ல வரிசைப்படுத்தல்... சிங்கம் மூன்றாவது இடத்தை பிடித்தது மட்டும் கொஞ்சம் ஓவர்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// தொடர் பதிவு எழுதுவதற்கு அழைப்பு குடுக்கவா என்று கேட்டிரு இருந்தீர்கள் .

எழுதலாம் but அடுத்த வருடம் ஆகிவிடும் பரவாலையா //

ஆகட்டும் ஆகட்டும் அதனால என்ன...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// அசல்
களவாணி
பாஸ் (எ) பாஸ்கரன்
அங்காடித் தெரு
எந்திரன் //

உங்க லிஸ்டும் சூப்பர்... என்னைவிட தீவிர அஜித் ரசிகரா இருப்பீங்க போல...

Philosophy Prabhakaran said...

@ dineshkumar
// களவானி - பார்த்துக்கிட்டே இருக்கலாம் சூப்பர்
நந்தலாலா - சொல்ல வார்த்தைகள் இல்லை தாய்பாசம்
மந்திர புன்னகை - பித்தனாக மாறி ரசித்தேன்
குட்டி - நகைச்சுவையோடு ஒருதலை காதல்
ராவணன் - புரியாமல் புரிந்து பார்த்தேன் //

ம்ம்ம்... உங்கள் வரிசைப்படுத்தலும் விளக்கங்களும் சூப்பர்... ராவணன் மட்டும்தான் கொஞ்சம் இடிக்குது...

Philosophy Prabhakaran said...

@ Srinivas
// 1- ENTHIRAN : Thalaivar Kalakkal
2- MAN MADHAN AMBU : Comedy Thookkal
3- MADHARASAPATTINAM : Namma Chennai
4- VTV : TRISHAA TRISHAAA
5- AAYIRATHIL ORUVAN : Arpudham
6- RAAVANAN : VIkram Rockz
7- SINGAM : He is Durai Singam
8- NAAN MAHAN ALLA : Sema Time pass
9- KALAVANI : Kalavaandutaan
10- PAIYA : Namma Tammanaaa :) //

ஒரே சமயத்த்துல எந்திரனையும் மன்மதன் அம்புவையும் ரசிக்கும் உங்கள் ரசனை பாராட்டுக்குரியது... விளக்கங்கள் அருமை...

// Innum Mynaa Paakala :) //

சும்மா ஒருமுறை பாருங்க...

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
// நாணயம் படம் உண்மையிலேயே அருமையான படம் கண்டிப்பா அத பாருங்க, அப்புறம் உங்க டாப் 5 மாறிடும் //

கேள்விப்பட்டிருக்கிறேன்... டி.வி.டி கூட இருக்கு... நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ சிவகுமார்
// கோரிப்பாளையம் – போதையில் பார்த்த படம்(தண்ணி அடிப்பீங்களா??????????????????) //

ஹி... ஹி... ஹி... ஆமாம் நண்பா... ஆனா இப்போ கொஞ்ச நாளா கம்பெனிக்கு ஆள் இல்லாம தண்ணி அடிக்கவே முடியுறதில்லை...

என்னது ஆயிரத்தில் ஒருவன் படமும் உங்களுக்கு பிடிக்கலையா... ஓகே... கண்டிப்பா பேசலாம்...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// 16.கோவா
15.காதல் சொல்ல வந்தேன்
14.ஆயிரத்தில் ஒருவன்
13.கோரிபாளையம்
12.நாணயம்
11.வம்சம்
10.ஈசன்
9.மன்மதன் அம்பு
8.பாஸ்
7.எந்திரன்
6.விண்ணை தாண்டி வருவாயா
5.அங்காடி தெரு
4.ராவணன்
3.மைனா
2.நந்தலாலா
1.மதராசபட்டிணம் //

பரவாயில்லையே... இந்த வருடத்தில் நீங்க பார்த்தா எல்லாப் படங்களையும் பொறுமையா தொகுத்து எழுதியிருக்கீங்க... நன்றிகள்...

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
// படிச்சிட்டு திட்டப்படாது. //

படிச்சேன் நண்பரே... நல்ல முயற்சி... ஆனா உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்...

Philosophy Prabhakaran said...

@ Pari T Moorthy
// உன்னோட பதிவ வேறு ஒருத்தர் தமிழ்10 போட்டிருக்கார். இப்பவே கவனிக்கவும்... //

அதுகுறித்து தனிப்பதிவு போட்டாச்சு போட்டாச்சு...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// 1 எந்திரன்
2 எந்திரன்
3 எந்திரன்
4 எந்திரன்
5 எந்திரன்
6 எந்திரன்
7 எந்திரன்
8 எந்திரன்
9 எந்திரன்
10 எந்திரன்
11 எந்திரன்
12 எந்திரன்
13 எந்திரன்
14 எந்திரன்
15 எந்திரன்
16 எந்திரன்
17 எந்திரன்
18 எந்திரன்
19 எந்திரன்
20 எந்திரன்
21 எந்திரன்
22 எந்திரன்
23 எந்திரன்
24 எந்திரன்
25 எந்திரன் //

ஏன் இந்த கொலைவெறி... முரட்டுத்தனமான ரஜினி ரசிகரா இருப்பீங்க போல...

Philosophy Prabhakaran said...

@ ஹாஜா மொஹைதீன்
// 1.Enthiran
2.Maina
3.Kalavani
4.vinnai thandi varuvayaa
5.Boss engira baskaran
6.Angadi theru
7.Singam
8.Manthira punnagai
9.Vamsam
10.Nan magan alla //

உங்களோட top 10 என்னுடைய top டெண்னோடு நல்லாவே ஒத்துப்போகுது... நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ரசனை போல :)

Philosophy Prabhakaran said...

@ karthik
// மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற படங்கள் //

ஸோ இதெல்லாம் உங்களுக்கு பிடித்த படங்களோட லிஸ்ட் இல்லையா...

அது என்ன எந்திரனுக்கும் அடுத்த படத்திற்கும் அப்படி ஒரு இடைவெளி...

// 11 இல் 9 படம் கலைஞர் & co. தயரிப்பு அல்லது விநியோகம் //

அட ஆமாம்ல...

Philosophy Prabhakaran said...

@ சுதன்
// 1. Ayirathil oruvan
2. vinnaithaandi varuvaya
3. angadi theru
4. maina
5. kalavani //

சுதன் சார்... உங்க லிஸ்டும் சூப்பர்... அடிக்கடி வந்தாத்தான் என்னவாம்...

Sheela Browsing Centre said...

12. மன்மதன் அம்பு – கமலிடம் இருந்து மீண்டுமொரு நகைச்சுவை படைப்பு. இரண்டாம் பாதியில் கிரேசி மோகன் டைப் ஆள் மாறாட்ட காமெடிகள் கலக்கல்.

Itha parthathan siruppu varuthu

Philosophy Prabhakaran said...

@ Sheela Browsing Centre
// Itha parthathan siruppu varuthu //

இப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்று குறிப்பிடவே இல்லையே...

Unknown said...

one and only VTV !!