வணக்கம் மக்களே...
ஒரு நல்லவரை, தலைவரை தெரிந்துக்கொள்வோம் - அம்பேத்கர் சினிமா என்ற தலைப்பில் பதிவொன்றை எழுதி எனது ஆர்வத்தை தூண்டிய பார்வையாளருக்கும், என்னை இந்த திரைப்படத்திற்கு அழைத்துச் சென்ற “மெட்ராஸ் பவன்” சிவகுமாருக்கும் எனது முதற்கண் நன்றிகள். ஒத்த கருத்துடைய பார்வையாளரும், மெட்ராஸ் பவன் சிவகுமாரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துக்கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
பெரியார் திரைப்படத்தை பலமுறை பார்த்தவனும் அவரது சுயசரிதை உட்பட இன்னபிற புத்தகங்கள் சிலவற்றை படித்தவனும் ஆகிய நான் அம்பேத்கரை பற்றி புத்தகங்கள் எதுவும் படித்ததில்லை. செவிவழிச் செய்தியாக சில தகவல்களை மட்டுமே அறிந்திருக்கிறேன். இந்நிலையில் அம்பேத்கர் சினிமா அவரைப் பற்றி எளிதாக தெரிந்துக்கொள்வதற்கு வடிகாலாக அமைந்தது.
1998ம் ஆண்டு ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்பொழுதும் வார இறுதி நாட்களில் மட்டும், ஒரே ஒரு காட்சி மட்டும் என்று குறுகிய வட்டத்திற்குள் வெளியாகி உள்ளது. பலர் இப்படி ஒரு படம் வெளியானதே தெரியாமல் இருப்பது அவலம். சென்னை சத்யம் திரையரங்கில் ஜீன்ஸ் போட்ட சில சிட்டுக்களும், நவநாகரீக மங்கைகள் சிலரும் வருகை தந்தது பாராட்டுக்குரியது.
ஒரு வரலாற்று தலைவனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பது சுலபமல்ல. முன்னூறு மணிநேரம் கொடுத்தாலும் பத்தாது என்ற சூழ்நிலையில் மூன்றே மணிநேரத்தில் ஒரு தலைவரின் வரலாற்றை படம் பிடித்து காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. அதிலும் பல புத்தகங்கள் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை நமது மரமண்டையில் சுருக்கென்று ஏற்றியிருக்கிறார்கள்.
பல விஷயங்களில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்கள் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. குறிப்பாக, காந்தியின் பொதுவுடைமை கொள்கை பற்றிய கருத்து. என்ன, பெரியார் படத்தில் நாசூக்காக ஒரே ஒரு காட்சியில் மட்டும் காட்டிய விஷயத்தை இந்தப் படத்தில் பாதிக்கும் மேல் காட்டியிருக்கிறார்கள். ஆனால், காந்தியை ஏதோ க்ளைமாக்ஸ் காட்சியில் திருந்தும் வில்லனை போல காட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. காந்தியை பற்றி தெரிந்துக்கொள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் திரைப்படங்களை மட்டும் பார்த்திருந்தால் போதாது காந்தி திரைப்படம் பார்த்திருக்க வேண்டும் அல்லது அவரைப் பற்றிய புத்தகங்களை படித்திருக்க வேண்டும்.
பெரியாரும் அம்பேத்கரும் இல்லையெனில் இன்று நம்மில் பலர் ஏசி ரூம்களிலும் கண்ணாடி அறைகளிலும் அமர்ந்துக்கொண்டிருக்காமல் செருப்பு தைத்துக்கொண்டும் மலம் அள்ளிக்கொண்டும் இருந்திருப்போம். ஆனால் அந்த நன்றியுணர்ச்சி அவர்களால் பலனடைந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சிலருக்கே இல்லாதது வருத்தத்தை தருகிறது. இன்று அவர்கள் குஷன் சீட்டில் குண்டி வைக்க முடிகிறதென்றால் அதற்கு பெரியார், அம்பேத்கர் போன்றவர்களே காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி எடுத்திருந்தால் நிறைய மக்களை சென்றடைந்திருக்கும் என்பதே எனது கருத்து. ஒரு ஐட்டம் சாங்கிற்கு ரகசியாவையும், நடிப்பதற்கு குஷ்பூவையும் அழைத்து வருவதால் சொல்ல வந்த கருத்து அதிக மக்களை சென்றடைகிறது என்றால் அதை செய்வதில் தவறேதும் இல்லை. இப்படிப்பட்ட சீரியசான பதிவில் ஜீன்ஸ் அணிந்த சிட்டு என்றும் குண்டியென்றும் குஷ்பூவென்றும் அலங்கார வார்த்தைகளை பயன்படுத்துகிறேன் என்றால் அதுவும் அப்படிப்பட்ட ஒரு நோக்கில்தான்.
“தமிழ் ஓவியா” என்ற பெயரில் ஒரு பதிவர் எழுதி வருவது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை ஓயாமல் எழுதிவரும் அவரது எழுத்துக்கள் எத்தனை பேரை சரியாக சென்றடைகிறது என்று எண்ணிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வெறுமனே ஆவணப்படங்கள் போல பதிவு எழுதிவரும் அவர் கொஞ்சம் சுவை கலந்து அதிகம் பேருக்கு சென்றடையும் வகையில் எழுத வேண்டுமென்பதே எனது கருத்து. இல்லையெனில் அவரது கடின உழைப்பு வீண்போகும் அபாயம் உள்ளது.
இருக்கட்டும். இப்பொழுது அம்பேத்கர் படம் பார்த்ததில் இருந்து நான் அறிந்துக்கொண்ட புரிந்துக்கொண்ட சில கருத்துக்கள்:-
- நாம் எதிர்ப்பது, எதிர்க்க வேண்டியது பார்ப்பன மக்களை அல்ல. பார்ப்பனீயம் என்ற உணர்ச்சியை மட்டுமே.
- மனிதர்களை மேல் சாதி என்றும் கீழ் சாதி என்றும் பிரித்துப்பார்க்குமானால் அது கடவுளே அல்ல. அது வெறும் கல்.
- நான் ஒரு இந்துவாக பிறந்ததற்கு அவமானப்படவில்லை. ஆனால் ஒரு இந்துவாக வாழ்வதற்கும் இறப்பதற்கும் அவமானப்படுகிறேன்.
- பெளத்தம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு நெறி, உணர்ச்சி, கொள்கை. கம்யூனிசம், சோசியலிசம் போன்றவைகள் எப்படியோ அப்படியே.
மேலே குறிப்பிட்டுள்ள நான்கையும் நானே சொன்னது போல சிலர் ஓங்கிமிதிக்க ஓடிவருவார்கள். இவை அனைத்தும் பெரியாரும் அம்பேத்கரும் சொல்லி நான் ஏற்றுக்கொண்ட தத்துவங்கள்.
நிச்சயம் உங்களில் பலருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் – பின்னூட்டமிடுங்கள். ஆனால் இப்பொழுது சில ஆணிகளுடன் இருப்பதால் இன்றிரவே பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க முடியும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
50 comments:
//ஒரு ஐட்டம் சாங்கிற்கு ரகசியாவையும், நடிப்பதற்கு குஷ்பூவையும் அழைத்து வருவதால் சொல்ல வந்த கருத்து அதிக மக்களை சென்றடைகிறது என்றால் அதை செய்வதில் தவறேதும் இல்லை//
நாலு பேருக்கு நல்லதிண்ணா எதுவுமே தப்பில்லை.
நன்றி மற்றும் நீங்கள் எனக்களித்த பதிலில் கூறியிருந்த "கப்பித்தனமாக"- இதற்கு அர்த்தம் என்ன மற்றும் இதை யாரிடம் கற்றீர்.
@ எப்பூடி..
// நாலு பேருக்கு நல்லதிண்ணா எதுவுமே தப்பில்லை. //
அதேதான் நண்பா...
@ விக்கி உலகம்
ஹா...ஹா... ஹா... அனுப்பும்போதே கொஞ்சம் தயங்கினேன்... கப்பித்தனமாக என்றால் சின்னப்பிள்ளைத்தனமாக என்று அர்த்தம்...
@ விக்கி உலகம்
// இதை யாரிடம் கற்றீர் //
வடிவேலு ஏதோவொரு படத்தில் சொன்னதாக ஞாபகம்...
நான் இன்னும் படம் பார்க்கவில்லை நண்பா..பார்த்துவிடுகிறேன்...நல்ல பதிவு..
@ ஹரிஸ்
// நான் இன்னும் படம் பார்க்கவில்லை நண்பா.. //
சீக்கிரமா பாருங்க... இல்லைன்னா தூக்கிடுவாங்க...
”காந்தியை ஏதோ க்ளைமாக்ஸ் காட்சியில் திருந்தும் வில்லனை போல காட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.”
அவ்வப்போது உங்கள் கருத்து என்னை ஆச்சர்யப்படுத்தும்.. இந்த வரிகளில் இருக்கும் ஆழந்த புரிதலும், நடு நிலையும், வாசிப்பும், துவேஷமின்மையும் என்னை ஆச்ச்ர்யப்படுதியது... மகிழ வைத்த்து....
”நாம் எதிர்ப்பது, எதிர்க்க வேண்டியது பார்ப்பன மக்களை அல்ல. பார்ப்பனீயம் என்ற உணர்ச்சியை மட்டுமே.”
மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டிய சிந்தனை
”இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி எடுத்திருந்தால் நிறைய மக்களை சென்றடைந்திருக்கும் என்பதே எனது கருத்து”
வெளினாட்டு காட்சிகளை குறைத்து விட்டு, இந்தியாவில் நடக்கும் விஷ்யங்களை விறுவிறுப்பாக காட்டி இருக்கலாம் என்பது என் கருத்து..
”அதிலும் பல புத்தகங்கள் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை நமது மரமண்டையில் சுருக்கென்று ஏற்றியிருக்கிறார்கள்.”
உண்மை
”என்னை இந்த திரைப்படத்திற்கு அழைத்துச் சென்ற“மெட்ராஸ் பவன்”சிவகுமாருக்கும்”
நானும்தான் உங்களை அழைத்தேன். மறுத்துவிட்டீர்கள்..
என் அழைப்பை மறுத்து, அவர் அழைப்பை ஏற்றதன் காரணம் என்ன? என் அழைப்பு முறைப்படி இல்லையா? அல்லது வேறு காரணமா? வெளிப்படையாக சொல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
// அவ்வப்போது உங்கள் கருத்து என்னை ஆச்சர்யப்படுத்தும்.. இந்த வரிகளில் இருக்கும் ஆழந்த புரிதலும், நடு நிலையும், வாசிப்பும், துவேஷமின்மையும் என்னை ஆச்ச்ர்யப்படுதியது... மகிழ வைத்த்து.... //
ஊக்கம் அளிக்கும் பாராட்டுக்கள் :) நன்றி...
// வெளினாட்டு காட்சிகளை குறைத்து விட்டு, இந்தியாவில் நடக்கும் விஷ்யங்களை விறுவிறுப்பாக காட்டி இருக்கலாம் என்பது என் கருத்து.. //
அதே... முதல்பாதியில் அம்பேத்கரின் மேல்படிப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைத்திருக்கலாம்... ஆனால் படத்தை குறை சொல்ல வேண்டாமே என்று அதுபற்றி எதுவும் எழுதவில்லை...
// என் அழைப்பை மறுத்து, அவர் அழைப்பை ஏற்றதன் காரணம் என்ன? என் அழைப்பு முறைப்படி இல்லையா? அல்லது வேறு காரணமா? வெளிப்படையாக சொல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. //
அய்யய்யோ... அது அவ்வளவு சீரியசான மேட்டரே இல்லை... முதலில் தேர்வை மனதில் வைத்துக்கொண்டு அவ்வாறு கூறினேன்... ஒருநாள் கழிந்த பின்னர் தேர்வை துச்சமாகிவிட்டது... அவ்வளவே...
// என் அழைப்பு முறைப்படி இல்லையா? //
என்னை அழைப்பதற்கு முறை எல்லாம் எதிர்பார்க்கமாட்டேன்... நான் ரொம்ப சின்ன ஆள்... எனக்கு முறை தேவையும் இல்லை...
நீங்கள் குறிப்பிட்ட -
//அம்பேத்கர் படம் பார்த்ததில் இருந்து நான் அறிந்துக்கொண்ட புரிந்துக்கொண்ட சில கருத்துக்கள்//
இதை புரிந்து கொண்டாலே 70% பிரச்சனைகள் முடிந்து விடும்
@ nis
// இதை புரிந்து கொண்டாலே 70% பிரச்சனைகள் முடிந்து விடும் //
ம்ம்ம் சரிதான்... மீதி 30% பிரச்சனைகளும் எப்போ முடியும்னு தெரிஞ்சிட்டா நல்லா இருக்கும்ல...
காந்தி,பெரியார்,அம்பேத்கர் சொன்ன நல்லவைகளை ஒதுக்கி விட்டு அவர்களைக் குறைகூறுபவர்கள் ஏமாற்று வித்தைக் காரர்கள். அவர்களையும் புரிந்து கொண்டு,ஏமாற்றுக் காரர்களையும் சரியாகப் புரிந்து கொண்டால்தான் இந்தியா உண்மையிலேயே முன்னேற முடியும்.பொருளாதார முன்னேற்றம் என்று சொல்லிச் சமுதாயச் சுரண்டலும்,பின்னேற்றமும் இந்தியாவை முன்னேற விடாது.
நல்ல பதிவு .பெரியாரை காந்தியை பற்றியஅவர்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே படித்துதிருக்கிறேன்/ படித்துகொண்டிருக்கிறேன் . இனி இவரையும் படிப்பேன்
@ Thamizhan
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
// காந்தி,பெரியார்,அம்பேத்கர் சொன்ன நல்லவைகளை ஒதுக்கி விட்டு அவர்களைக் குறைகூறுபவர்கள் ஏமாற்று வித்தைக் காரர்கள். அவர்களையும் புரிந்து கொண்டு,ஏமாற்றுக் காரர்களையும் சரியாகப் புரிந்து கொண்டால்தான் இந்தியா உண்மையிலேயே முன்னேற முடியும் //
சரியாக சொன்னீர்கள்...
@ நா.மணிவண்ணன்
// நல்ல பதிவு .பெரியாரை காந்தியை பற்றியஅவர்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே படித்துதிருக்கிறேன்/ படித்துகொண்டிருக்கிறேன் //
அட... புத்தகங்கள் கூட படிப்பீர்கள... ஆச்சர்யம் தான்...
எங்க வூர்ல இந்த படம் ரிலேசே ஆகலைன்னு நெனைக்கிறேன். பாப்போம் அநேகமா கோவைலதான் பாக்கணும்
@ karthikkumar
// எங்க வூர்ல இந்த படம் ரிலேசே ஆகலைன்னு நெனைக்கிறேன். பாப்போம் அநேகமா கோவைலதான் பாக்கணும் //
ம்ம்ம்... சென்னையில் கூட சொற்ப திரையரங்குகளிலேயே படம் வெளியாகி உள்ளது... பார்க்க முயலுங்கள்... இல்லையெனில் அதிகாரப்பூர்வமான டி.வி.டி. வெளிவந்தவுடன் பார்க்கவும்...
அட... புத்தகங்கள் கூட படிப்பீர்கள... ஆச்சர்யம் தான்...
what a great insult ?
@ நா.மணிவண்ணன்
// what a great insult ? //
தெரியாம சொல்லிட்டேன் அண்ணே... நீங்க நிறைய குறும் புத்தகங்கள் படிப்பீர்கள் என்று எனக்கு தெரியும்...
இங்க பாக்க முடியாது ஒரிஜினல் dvd வரட்டும் பாத்துட்டு நானும் என் கருத சொல்றேன்
Interesting review. :-)
அம்பேத்கர் திரைப்படம் குறித்து மாதவராஜ் அண்ணா அவரது பதிவில் நிறைய எழுதியிருந்தார்... நாமெல்லாம் தலைவர்கள் குறித்த படங்களை பார்ப்பதும் இல்லை பார்க்க நினைப்பதும் இல்லை.... எந்திரங்களையும்.... சந்திரன் களையும் பலமுறை பார்ப்போம். இங்கு அம்பேத்கர் வருவதற்கு வாய்ப்பில்லை... டிவிடி வரட்டும் பார்க்கிறேன். நல்ல பதிவு.
//இப்படிப்பட்ட சீரியசான பதிவில் ஜீன்ஸ் அணிந்த சிட்டு என்றும் குண்டியென்றும் குஷ்பூவென்றும் அலங்கார வார்த்தைகளை பயன்படுத்துகிறேன் என்றால் அதுவும் அப்படிப்பட்ட ஒரு நோக்கில்தான். //
நோக்கம் புரிகிறது.. வார்த்தைகளின் ஆழமும் தெளிவுபெறுகிறது.. !
தொடருங்கள்..!
நன்றி! வாழ்த்துக்கள்..!
@ அப்பாவி தமிழன்
// இங்க பாக்க முடியாது ஒரிஜினல் dvd வரட்டும் பாத்துட்டு நானும் என் கருத சொல்றேன் //
நல்லது சீக்கிரமாக பாருங்கள்...
எனது தளத்தில் பின்தொடர்பவராக இணைந்ததற்கு நன்றி...
@ Chitra
// Interesting review. :-) //
நன்றி மேடம்...
@ சே.குமார்
// அம்பேத்கர் திரைப்படம் குறித்து மாதவராஜ் அண்ணா அவரது பதிவில் நிறைய எழுதியிருந்தார்... //
அப்படியா...
// நாமெல்லாம் தலைவர்கள் குறித்த படங்களை பார்ப்பதும் இல்லை பார்க்க நினைப்பதும் இல்லை.... எந்திரங்களையும்.... சந்திரன் களையும் பலமுறை பார்ப்போம். //
என்னை அந்த லிஸ்டில் சேர்க்க வேண்டாம்...
// இங்கு அம்பேத்கர் வருவதற்கு வாய்ப்பில்லை... டிவிடி வரட்டும் பார்க்கிறேன் //
நிச்சயம் பாருங்கள்...
@ தங்கம்பழனி
// நோக்கம் புரிகிறது.. வார்த்தைகளின் ஆழமும் தெளிவுபெறுகிறது.. ! //
புரிந்துக்கொண்டதற்கு நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்..
ஒட்டு பட்டை மேலயும் கீழையும் எப்படி வைப்பது: blogger->design->edit html-> முதலில் இன்டலி ஒட்டுபட்டை கோடிங்கை காப்பி செய்து தமிழ்மணம் ஒட்டுபட்டை கோடிங் அருகில் பேஸ்ட் செய்யவும் அதே போல் தமிழ்மணம் கோடிங்கை காபி செய்து இன்ட்லி கோடிங் அருகில் பேஸ்ட் செய்யவும்.
தமிழ்மணம் கோடிங் தேட ctrl+f அழுத்தி tamilmanam என்று தேடவும் அதே போல் இன்ட்லி கோடிங் தேட indli என்று தேடவும் பின்பு கிடைத்த கோடிங்கை காப்பி செய்து மேலே சொன்னது போல் முயற்சிக்கவும். மேலும் சந்தேகம் இருந்தால் கூறுங்கள் அடுத்த பதிவின் கீழ் படங்களுடம் விளக்கமாக கூறுகிறேன்
@ THOPPITHOPPI
அருமை... அருமை... இதற்காகத்தான் follow up comments வைத்துக்கொண்டு நேற்றிலிருந்து காத்திருந்தேன்...
GOOD POST
நான் முன்பே சொன்னதுபோல சில விஷயங்களில் உங்கள் கருத்தை ஓர் ஆராய்ச்சியாளன் போல ஆவலாக எதிர்பார்ப்பேன்..
அந்த வகையில், காந்தியை எதிர்ப்பதுதான் ஹீரோயிசம் என எல்லா இள வயதினரும் நினைக்கிறார்களா அல்லது உண்மை நிலை தெரியுமா என்ற நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது , இந்த பதிவின் மூலம்..
நான் முதல் நாள் முதல் ஷோவுக்கு உங்களை அழைத்தது இது போன்ற பல அலசல்களுக்கும், முதல் நாள் அங்கு உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனுபவங்களுக்கும், அந்த அனுபவங்களை நீங்கள் எப்படி எழுத்தில் பிரதிபலிக்கிறீர்கள் என நான் கவனிப்பதற்கும்தான்..
சும்மா டைம் பாசுக்காக அழைக்கவில்லை..
ஓர் நல்ல அனுபவத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என சொல்வதை விட , எனக்கு ஓர் இழப்பு இது என சொல்வதுதான் சரியாக இருக்கும்
@ இரவு வானம்
நன்றி...
@ பார்வையாளன்
உங்கள் பின்னூட்டத்தை கைபேசியில் படித்துவிட்டு பதில் போடுவதற்காக விரைந்து வந்திருக்கிறேன்...
// அந்த வகையில், காந்தியை எதிர்ப்பதுதான் ஹீரோயிசம் என எல்லா இள வயதினரும் நினைக்கிறார்களா அல்லது உண்மை நிலை தெரியுமா என்ற நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது , இந்த பதிவின் மூலம்.. //
உண்மையில் நிறைய இளைஞர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்பதை திரையரங்கில் வந்த கைதட்டல் சத்தங்களே நிரூபணம் செய்தன... என்னுடன் வந்த மெட்ராஸ் பவன் பதிவர் கூட அவரது பதிவில் அப்படித்தான் எழுதியிருந்தார்...
// சும்மா டைம் பாசுக்காக அழைக்கவில்லை.. //
உங்கள் வார்த்தைகளில் இருக்கும் கோபம் புரிகிறது... மிகவும் வருந்துகிறேன்...
// ஓர் நல்ல அனுபவத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என சொல்வதை விட , எனக்கு ஓர் இழப்பு இது என சொல்வதுதான் சரியாக இருக்கும் //
நானும் நல்ல அனுபவத்தை இழந்துவிட்டேன்...
அடுத்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பயன்படுத்திக் கொள்கிறேன்... மன்னிக்கவும்...
நாங்கல்லாம் உர்ருன்னு மூஞ்ச வச்சிகினு பேப்பரை கீறி கீறி எழுதினாலும் நாலு பேர்தான் படிக்கிறாங்க என்பது உண்மைதான்.நகைச்சுவையாய் நல்ல கருத்துக்கள் சொல்கிற உங்களுக்கு சின்னக்கலைவாணர் ஏற்கனவே இருப்பதால் குட்டிக் கலைவாணர் பட்டம் வழங்கப்படுகிறது...தொடர்ந்து கலக்குங்க!
நன்று! நண்பர்களையும் படம் பார்க்க வைக்கவும். :)
உங்கள் பின்னூட்டத்தை கைபேசியில் படித்துவிட்டு பதில் போடுவதற்காக விரைந்து வந்திருக்கிறேன்."
விளையாட்டு பையன் போல சிலர் கருதினாலும் உங்கள் உயர்பண்புகளை நான் அறிவேன்.. அதே சமயம் வயதுக்கேற்ற நடவடிக்கைகளை ஆதரித்தும் வந்து இருக்கிறேன்.
”உங்கள் வார்த்தைகளில் இருக்கும் கோபம் புரிகிறது”
அழைத்ததன் முக்கியத்துவத்தை வற்புறுத்தி சொல்லாதது என் தவறுதான்..
சரி.. நடந்தது நடந்த்தாக இருக்கட்டும்..
இப்போது இன்னொரு சீரியஸ் கோரிக்கை..
காந்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி நீங்கள் ஒரு பதிவிட வேண்டும் என்பது என் கோரிக்கை..
எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது எழுதுங்கள்..
பாராட்டியும் எழுதலாம். திட்டியும் எழுதலாம்... பிரச்சினை இல்லை..
நீங்கள் அவரை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை அறிய மிகுந்த ஆவல்..
@ யோவ்
// நகைச்சுவையாய் நல்ல கருத்துக்கள் சொல்கிற உங்களுக்கு சின்னக்கலைவாணர் ஏற்கனவே இருப்பதால் குட்டிக் கலைவாணர் பட்டம் வழங்கப்படுகிறது... //
மிக்க நன்றி அய்யா... இந்த டாக்டர் பட்டமெல்லாம் கொடுக்க மாட்டீர்களா...
@ ஊர்சுற்றி
// நன்று! நண்பர்களையும் படம் பார்க்க வைக்கவும். :) //
அது மிகவும் கடினமான செயல்... முயல்கிறேன்...
@ பார்வையாளன்
// காந்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி நீங்கள் ஒரு பதிவிட வேண்டும் என்பது என் கோரிக்கை.. //
உங்கள் அன்புக்கு நன்றி...
நிச்சயம் எழுதுகிறேன்... ஆனால் கால அவகாசம் தேவை... இப்பொழுது எனக்கு தெரிந்தவற்றை எழுதினால் அது சின்ன பசங்களோட சோஷியல் புக் மாதிரி இருக்கும்... ஆதலால் நான் சிறிய ஆராய்ச்சி, சில புத்தகங்கள் படிப்பது, திரைப்படம் பார்ப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்... எப்பொழுது சாத்தியப்படும் என்று தெளிவாக கூற முடியவில்லை... ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் எழுதிவிடுகிறேன்...
அம்பேத்கார் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவு
உங்க கருத்துகள்ல தெளிவு இருக்கு..
//பெரியாரும் அம்பேத்கரும் இல்லையெனில் இன்று நம்மில் பலர் ஏசி ரூம்களிலும் கண்ணாடி அறைகளிலும் அமர்ந்துக்கொண்டிருக்காமல் செருப்பு தைத்துக்கொண்டும் மலம் அள்ளிக்கொண்டும் இருந்திருப்போம்.//
இதே மாதிரியான கருத்தை நான் தொடர்ந்து என் நண்பர்களிடத்தும் குழந்தைகளிடத்தும் கூறி வருகிறேன். நீங்கள் கூறியிருப்பது போல் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமில்லை. Backward class என சொல்லப்படும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெரும்பாலானவர்கள் பெரியாரால் பயனடைந்தவர்கள் என்பதே உண்மை.
"நாம் எதிர்ப்பது, எதிர்க்க வேண்டியது பார்ப்பன மக்களை அல்ல. பார்ப்பனீயம் என்ற உணர்ச்சியை மட்டுமே".
Thanks for learning this. Even bloggers sometimes write against upper class(as per Govt of India classification) people.
///பெரியாரும் அம்பேத்கரும் இல்லையெனில் இன்று நம்மில் பலர் ஏசி ரூம்களிலும் கண்ணாடி அறைகளிலும் அமர்ந்துக்கொண்டிருக்காமல் செருப்பு தைத்துக்கொண்டும் மலம் அள்ளிக்கொண்டும் இருந்திருப்போம்.///
கோப்பர் நிக்கஸ் கண்டு பிடிக்காவிட்டால், இன்னும் நாம் பூமியைத்தான் சூரியனும் மற்ற கோள்களும் சுற்றுகின்றன என்று தான் நாம் இன்னும் நினைத்துக் கொண்டிருப்போம்.
காந்தி இல்லை என்றால் இன்னும் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.
ரைட் சகோதரார்கள் கண்டுபிடிக்காவிட்டால் நமக்கு ஆகாய விமானத்தை நாம் பார்த்திருக்கவே மாட்டோம்.
இவைகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ அந்த அளவுக்கே நீங்கள் கூறியதிலும் உண்மை இருக்கிறது.
@ சி.பி.செந்தில்குமார், எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// அம்பேத்கார் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவு //
// உங்க கருத்துகள்ல தெளிவு இருக்கு.. //
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே...
@ ஆதி மனிதன்
// இதே மாதிரியான கருத்தை நான் தொடர்ந்து என் நண்பர்களிடத்தும் குழந்தைகளிடத்தும் கூறி வருகிறேன். //
நல்லது... குறிப்பாக குழந்தைகளிடம் நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்...
// நீங்கள் கூறியிருப்பது போல் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமில்லை. Backward class என சொல்லப்படும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெரும்பாலானவர்கள் பெரியாரால் பயனடைந்தவர்கள் என்பதே உண்மை. //
உண்மைதான்... ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அந்த நன்றிக்கடன் இல்லை...
@ Super Cook
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
// Thanks for learning this. Even bloggers sometimes write against upper class(as per Govt of India classification) people. //
புரிந்துக்கொண்டேன் சகா... கலங்க வேண்டாம்...
@ தனபால்
// இவைகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ அந்த அளவுக்கே நீங்கள் கூறியதிலும் உண்மை இருக்கிறது //
சரிதான் நண்பரே... பெரியார் ஒரு சமூக விஞ்ஞானியே...
//என்னை இந்த திரைப்படத்திற்கு அழைத்துச் சென்ற
“மெட்ராஸ் பவன்”
சிவகுமாருக்கும் எனது முதற்கண் நன்றிகள். ஒத்த கருத்துடைய பார்வையாளரும், மெட்ராஸ் பவன் சிவகுமாரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துக்கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது// பிரபல பதிவராக இருப்பினும் என்னை போன்ற 'புதுமுக' பதிவர்களை உற்சாகப்படுத்தும் பிரபா.. வாழ்க! என் பதிவிற்கு லிங்க் குடுத்து உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. நம் நட்பு பல்லாண்டு தொடர்ந்தே தீர வேண்டும்! நண்பேன்டா! நண்பேன்டா! (மழை அடித்ததில் நெட் நட்டு கொண்டதால் சில நாட்கள் நட்டு கழன்று திரிந்தேன். I AM BACK!
/ என் அழைப்பை மறுத்து, அவர் அழைப்பை ஏற்றதன் காரணம் என்ன? என் அழைப்பு முறைப்படி இல்லையா? அல்லது வேறு காரணமா? வெளிப்படையாக சொல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. //
அய்யய்யோ... அது அவ்வளவு சீரியசான மேட்டரே இல்லை... முதலில் தேர்வை மனதில் வைத்துக்கொண்டு அவ்வாறு கூறினேன்... ஒருநாள் கழிந்த பின்னர் தேர்வை துச்சமாகிவிட்டது... அவ்வளவே...
// என் அழைப்பு முறைப்படி இல்லையா? //
என்னை அழைப்பதற்கு முறை எல்லாம் எதிர்பார்க்கமாட்டேன்... நான் ரொம்ப சின்ன ஆள்... எனக்கு முறை தேவையும் இல்லை...//
ஆஹா....இது தெரியாம போச்சே! ஏற்கனவே நம்ம ரெண்டு பேரும் படம் பார்க்க முயன்று அது முடியாததால் தான் இந்த முறை சென்றோம். அண்ணன் கோபித்து கொண்டாரோ?
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி !!!
Post a Comment