வணக்கம் மக்களே...
பதிவுலகில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றவரும் சினிமா விமர்சனங்களில் கை தேர்ந்தவருமாகிய ஒரு பதிவர் “அட்ராசக்க” சி.பி.செந்தில்குமார். இன்னும் சொல்லப்போனால் தமிழ்மணம் TOP 20 பதிவுகளின் பட்டியலில் ஆறுவாரமாக ஆரவாரமாக முதலிடத்தில் இருப்பவர். சக பதிவராக அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்பி அவரை தொடர்பு கொண்டேன். அப்போது நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கே:-
(பி.கு: இது நேர்காணல் அல்ல தொலைபேசி உரையாடல்)
ஒரேயடியாக பொங்கல் படங்கள் நான்கையும் பார்த்திருக்கிறீர்களே...? ஏன் இந்த கொலவெறி...?
பொதுவாகவே எனக்கு சினிமாத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று விருப்பம். அதனால் என்னால் முடிந்த வரைக்கும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன்.
நான்கு படங்களையும் பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது...?
(பலத்த சிரிப்புடன்) பீல்ட் வொர்க் என்ற பெயரில் அலுவலகத்தை கட் அடித்துவிட்டு சினிமா பார்க்கவும் பிரவுசிங் செண்டர் போவதற்கும் பயன்படுத்திக் கொள்வேன்.
மொக்கை படங்களை எல்லாம் எப்படி உங்களால் பார்க்க முடிகிறது...?
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது. நல்ல படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டுமென்று கற்றுக்கொள்கிறேன். அதேபோல மொக்கைப் படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்கக் கூடாதென்று கற்றுக்கொள்கிறேன்.
ஒரு படத்தை மொக்கை என்று விமர்சனம் எழுதும் போது எதிர்க்குரல்கள் கிளம்புமே...?
கிளம்பத்தான் செய்கிறது. அவ்வப்போது படத்தின் துணை, இணை இயக்குனர்கள் போன் செய்தும் மெயில் அனுப்பியும் திட்டுகிறார்கள். இருப்பினும் நான் என்னுடைய பார்வையில் தானே படங்களைப் பற்றி எழுதுகிறேன். நான் மொக்கை என்று எழுதிய காரணத்தினால் எந்தப்படமும் தோல்வி அடையப்போவதில்லை.
சமீபத்தில் “சிரிப்பு போலீஸ்” ரமேஷை சந்தித்தபோது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக வார இதழ்களில் ஜோக்ஸ், கதைகள் என்று படைப்புகள் எழுதி வருகிறீர்களாமே...?
உண்மைதான். இதுப்பற்றி ஏற்கனவே எனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேனே. கடந்த 18 வருடங்களில் நான் எழுதி பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்கக் கதைகள், 87 சினிமா விமர்சனங்கள், 145 கட்டுரைகள். பாக்யா இதழின் மூலமாக இயக்குனர் பாக்யராஜுடன் நெருங்கிய பழக்கம் உண்டு.
நான் பதிவெழுத ஆரம்பித்த சமயத்தில் என்னை பெரிதும் ஊக்குவித்தவர் “சிரிப்பு போலீஸ்” ரமேஷ். அவர் என்னைப்பற்றி உயர்வாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.
அப்படி என்றால் சித்து +2 பட விமர்சனத்தில் சொம்படித்திருப்பீர்களே...?
அதுதான் இல்லை. எப்போதும் போல எனது நடையிலேயே எழுதினேன். ஆனால் அதைப் படித்தபின்பு இயக்குனர் பாக்யராஜ் வருத்தப்பட்டார். பின்னர் என்னுடைய விமர்சனம் சரிதான் என்று நேர்மையாக ஏற்றுக்கொண்டார்.
விமர்சனம் எழுதி சர்ச்சையானது போல ஜோக்ஸ் எழுதி ஏதாவது சர்ச்சை ஏற்பட்டது உண்டா...?
சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தலைவிரித்து ஆடியபோது கனிமொழி – ஆ.ராசா பற்றி ஜோக் ஒன்றை எழுதி தி.மு.க தரப்பில் இருந்து அந்த ஜோக்கை நீக்கும்படி மிரட்டல் வந்தது. அலுவலகத்தில் இருப்பதால் வீட்டுக்கு போனதும் டெலீட் செய்துவிடுவதாக கூறினேன். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவசரப்படுத்த உடனடியாக பிரவுசிங் செண்டருக்குப் போய் அந்த ஜோக்கை நீக்கினேன்.
சரி, இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போக வேண்டாம். பொங்கலில் வெளிவந்த நான்கு படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து...?
கமர்ஷியலாக பார்த்தால் சிறுத்தைக்குத் தான் முதலிடம். அடுத்ததாக ஒரு குடும்பப் படம் என்ற முறையில் காவலன் படத்தை சொல்லலாம். ஆடுகளம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து. இளைஞன் டப்பா.
ஆடுகளம் தான் பொங்கல் படங்களில் டாப் என்று சொல்கிறார்களே...?
ஆடுகளம் நல்ல படம்தான். ஆனால் B,C சென்டர்களில் பெறும் வரவேற்ப்பை A செண்டரில் பெறாது என்பதே எனது கணிப்பு.
எதிர்ப்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்....?
அப்படின்னா கலைஞரின் இளைஞன்....?
இளைஞன் விமர்சனத்தை ஆனந்த விகடனில் போட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கேபிள் சங்கரின் விமர்சனமும் உங்கள் விமர்சனமும் முரண்படுகிறதே...? குறிப்பாக காவலன் படம் பற்றிய கருத்து....? (இதுவும் ஒரு ஜாலி கேள்வியே)
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கலாம். கேபிள் சங்கர் அனுபவஸ்தர். அதைவிட முக்கியமானது, அவர் திரையுலகில் இருப்பவர். காவலன் படம் பற்றி சொல்லும்போது, கேபிள் மலையாள பாடிகார்ட் படத்தை பார்த்து அதையும் இதையும் கம்பேர் செய்திருக்கக் கூடும். மேலும் அவர் மேல்தட்டு மக்கள் பார்க்கும் திரையரங்கில் படம் பார்த்திருக்கலாம். திரையுலகத்திற்கு உள்ளே இருந்து பார்த்தால் அவர் கண்களுக்கு அதிக குறைகள் தெரிந்திருக்கலாம். நான் ரசிகர்களோடு அமார்ந்து ரசிகனாகவே படம் பார்த்தேன். நான் பார்த்தவரைக்கும் பொதுமக்கள் படத்தை ரசித்தார்கள், கேட்டவர்கள் நன்றாக இருப்பதாக கூறினார்கள்.
கேபிளின் அரிய புகைப்படம்... உங்கள் பார்வைக்காக... |
மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பட விமர்சனத்திலும் இருபது முப்பது வசனங்களை தொகுத்து வெளியிடுகிறீர்கள்...? அது எப்படி சாத்தியமாகிறது...?
சில பேர் நான் படத்தின் ஆடியோவை பதிவு செய்வதாகவும், பேப்பர் பேனா வைத்து குறித்துக்கொள்வதாகவும் கருதுகின்றனர். ஆனால் அவை உண்மையல்ல. வசனங்களை முடிந்த வரைக்கும் மனதில் பதியவைத்தே எழுதுகிறேன்.
இதை சோதனை செய்வதற்காக ஒருமுறை பதிவர் நண்டு@நொரண்டு என்னோடு திரையரங்கம் வந்திருந்தார். மேலும் சந்தேகம் இருந்தால் அவரிடம் கேட்டுப் பாருங்கள்.
சூப்பர்ப் சிபி, உங்களுடைய மொக்கைப் படங்கள் பார்க்கும் பிஸி ஷெட்யூலில் எனக்காக நேரம் ஒதுக்கி இந்த பேட்டியை கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுலக, திரையுலக எதிர்காலம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்.
சிபியுடன் வகுப்பறைத்தோழனை போல நெருங்கிப் பழகிவரும் நான் அவரைப் பற்றி சில வரிகள் சொல்ல விரும்புகிறேன். சிலர் அவர் ஹிட்சுக்காக எழுதுவதாகவும் பதிவெழுதுவதில் addict ஆகிவிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஹிட்சுக்காக எழுதுவது தவறா என்ன...? ஒவ்வொருவரும் ஏதோவொரு அங்கீகாரத்திற்காகவே எழுதுகிறோம். அப்படி இருக்கும்போது உங்களுக்கு அற்பமாக தெரியும் ஹிட்ஸ் அவருக்கு அற்புதமாக தெரிந்திருக்கலாம். அதிலென்ன தவறு இருக்கிறது...? மேலும், addiction, dedication இவை இரண்டிற்கும் உள்ள வேறுப்பாட்டினை புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் எழுத்துலகிற்கு அடிமையாகி விட்டார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் எழுத்துலகிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.
வேறு ஏதாவது கேள்வி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். அடுத்த பேட்டியில் கேட்டுவிடலாம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
85 comments:
நல்ல போட்டி ச்சீ.. பேட்டி..!! :-))
இதே மாதிரி எல்லா பிரபல பதிவர்களையும் பேட்டி எடுங்க..!!
நல்ல பேட்டி. சி.பி. அவர்கள் பதிவிட எவ்வளவு நேரமும், யோசனையும் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதற்க்காகவே அவரை பாராட்டலாம். அவர் இயக்குநராக விரைவில் வடிவமெடுக்க வாழ்த்துக்கள்.
வலையுலக ரஜினி சி.பி. செந்தில் சார் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
//கமர்ஷியலாக பார்த்தால் சிறுத்தைக்குத் தான் முதலிடம். அடுத்ததாக ஒரு குடும்பப் படம் என்ற முறையில் காவலன் படத்தை சொல்லலாம். ஆடுகளம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து. இளைஞன் டப்பா.//
கேபிளாரின் படம் அருமை.(கிச்சன் கிங்)
நல்ல பதிவு.
//அவர் எழுத்துலகிற்கு அடிமையாகி விட்டார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் எழுத்துலகிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்//
நூற்றுக்கு நூறு உண்மை சார்!
நல்ல பேட்டி இந்த ஹிட்ஸ் பத்தி ஒவ்வொருவரின் கருத்தும் மாறுபடும்
நல்ல கேள்விகள் .பதில்கள் . தரமாக இருந்தது
அருமையான பேட்டி நண்பா, சூப்பர் பதில்கள் :-)
அசத்தல் பேட்டி பிரபா சி.பி.சித்தப்பா வெகுவிரைவில் இயக்குனராக வேண்டும் அவர் கனவு லட்ச்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்
பிரபா பிரபல நிருபர் ஆயிட்டீங்க. செந்தில் அவர்கள் சொன்னது போல்
//காவலன் – 45, சிறுத்தை – 44, ஆடுகளம் – 43// மார்க் எடுத்ததா என்பதை பார்க்க இந்த வார விகடனுக்காக காத்திருக்கிறேன். என் மனதில் ஆடுகளமே நிறைய மதிப்பெண் பெறும் என் தெரிகிறது.
//இளைஞன் விமர்சனத்தை ஆனந்த விகடனில் போட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.//
என்ன காரணத்திற்கு அவர் இப்படி சொன்னார் என்று ஓரளவே யூகிக்க முடிகிறது. மற்ற படங்களுக்கு விமர்சனம் அளித்துவிட்டு இளைஞனை விகடன் கண்டிப்பாக ஒதுக்காது என்பது பல வருடங்களாக விகடனை படித்துவரும் என் எண்ணம். அப்படி ஒதுக்கினால் விகடனுக்கு குட்பை சொல்ல வேண்டியதுதான்.>>
கேபிள் அண்ணன் சைவ கொத்து பரோட்டா போடும் படம் சூப்பர். >>
செந்தில் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற நாம் அனைவரும் துணை நிற்போம்.
இதேபோல் மாதம் ஒருவரை பேட்டி எடுத்து போட்டால் நல்லா இருக்குமே. முயற்சி செய்யுங்களேன்.
நல்ல போட்டி ச்சீ.. பேட்டி..!!
வழிமொழிகிறேன்.
நல்ல கேள்விகள். நல்ல பதில்கள்.
நல்ல பெட்டி ச்சி பேட்டி . அண்ணன் சி.பி .செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
HAI.. WAT HAPPEND TO TAMILMANAM TOOL BAR?
சிவகுமார் said...
பிரபா பிரபல நிருபர் ஆயிட்டீங்க. செந்தில் அவர்கள் சொன்னது போல்
//காவலன் – 45, சிறுத்தை – 44, ஆடுகளம் – 43// மார்க் எடுத்ததா என்பதை பார்க்க இந்த வார விகடனுக்காக காத்திருக்கிறேன். என் மனதில் ஆடுகளமே நிறைய மதிப்பெண் பெறும் என் தெரிகிறது
MAY B A CHANCE.. LET C..
>>>V
//இளைஞன் விமர்சனத்தை ஆனந்த விகடனில் போட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.//
I MEAN COMING WEEK ONLY 3 FILM REVIEWS... NEXT WEEK THERE MAY B A CHANCE
தமிழ்வாசி - Prakash said...
இதேபோல் மாதம் ஒருவரை பேட்டி எடுத்து போட்டால் நல்லா இருக்குமே. முயற்சி செய்யுங்களேன்......./////
நல்ல ஐடியாவா இருக்கே ............
நல்ல பேட்டிங்க. ரொம்ப நல்லா இருந்தது. இருந்தாலும் காவலனுக்கு அத்தனை மார்க் அதிகம் கொடுத்திட்டார்!!
வசனம் குறித்து நானும் அப்படித்தான் நினைத்தேன். பிறகு நமக்கே பல வசனங்கள் ஞாபகத்திற்கு வரும்போது ஒரு டெடிகேடட் ஆளுக்கு நிச்சயம் மனதில் பதிவாகும்தான்!!
நல்ல பேட்டி....
//பேப்பர் பேனா வைத்து குறித்துக்கொள்வதாகவும் கருதுகின்றனர். ஆனால் அவை உண்மையல்ல. வசனங்களை முடிந்த வரைக்கும் மனதில்
பதியவைத்தே எழுதுகிறேன்//
//சிலர் அவர் ஹிட்சுக்காக எழுதுவதாகவும் பதிவெழுதுவதில் addict ஆகிவிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஹிட்சுக்காக எழுதுவது தவறா என்ன...? ஒவ்வொருவரும் ஏதோவொரு அங்கீகாரத்திற்காகவே எழுதுகிறோம். அப்படி இருக்கும்போது உங்களுக்கு அற்பமாக தெரியும் ஹிட்ஸ் அவருக்கு அற்புதமாக தெரிந்திருக்கலாம். அதிலென்ன தவறு இருக்கிறது...? மேலும், addiction, dedication இவை இரண்டிற்கும் உள்ள வேறுப்பாட்டினை புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் எழுத்துலகிற்கு அடிமையாகி விட்டார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் எழுத்துலகிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.//
Philosophy Prabha...
உங்கள் உரையாடல் பதிவு நன்று..
(ஆடியோ பதிவு வச்சிருக்கீங்களா ?)
CPS ஸிடம் எனக்கு பிடித்த வரிகள் மேல் கூறியவை.. அவரின் தன்னிலை விளக்கம் நன்று !
கனிமொழி - ராசா பத்தி அடித்த கமெண்டுக்கு வந்த எதிர்ப்பு..
(இல்லன்னா, வேலைய விட்டு தூக்கிருவாங்களோ ?)
நல்ல கேள்வி அழகான பதில்கள்..இங்கயுமா அரசியல் தலையீடு..
ஆமாம். சி.பி. பற்றிய பதிவில் கேபிளார் படம் எதற்காக... ஏதாவது பிராயச்சித்தமா?
//I MEAN COMING WEEK ONLY 3 FILM REVIEWS... NEXT WEEK THERE MAY B A CHANCE//
right.....
நல்லாருக்கு பேட்டி..
அடுத்த பேட்டி யாருகிட்ட???
நீயும் ஜோதில ஐக்கியமாயிட்டியா..? உருப்பட்டாப்புலதான்..!
இயல்பான வெளிப்படையான பதில்கள். ரசிக்கும்படி இருந்தது.
//9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்கக் கதைகள், 87 சினிமா விமர்சனங்கள், 145 கட்டுரைகள்.//
ஆச்சரியபடுகிறேன்... எழுத்திற்காக நீங்கள் செலவிட்ட நேரங்கள், உங்களின் எழுத்தார்வம் இரண்டையும் பாராட்டுகிறேன்.
நண்பரின் 'இயக்குனர்' விருப்பம் நிறைவேற வாழ்த்துகிறேன்.
இப்படி சிறந்த ஒருத்தரை பேட்டி எடுத்து வெளியிட்ட பிரபாகருக்கு நன்றி.
நல்ல பேட்டி..... சிபியைப் பற்றி தெரியும் என்றாலும், பேட்டி சுவராசியம் பிரபாகர். சீக்கிரமே டைரக்டராக வாழ்த்துக்கள் சிபி!
/////நான் பதிவெழுத ஆரம்பித்த சமயத்தில் என்னை பெரிதும் ஊக்குவித்தவர் “சிரிப்பு போலீஸ்” ரமேஷ். அவர் என்னைப்பற்றி உயர்வாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது./////
சிரிப்பு போலீசுக்கு இதே வேலையா போச்சு... கைல கெடைக்கட்டும் வெச்சிக்கிறேன்.....!
/////கேபிளின் அரிய புகைப்படம்... உங்கள் பார்வைக்காக.../////
அது என்ன அரிய புகைப்படம்? இதெல்லாம் அவரு டெய்லி பண்றதுதானே?
எல்லோரும் கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்டு இருக்கீங்க... பேட்டியின் தரம் நல்லாருக்கு!
///கேபிளின் அரிய புகைப்படம்... உங்கள் பார்வைக்காக.../////
ஆமா, அண்ணன் கிச்சன்ல கூட டிப்டாப்பா நிக்கிறாரே?
//சி.பி.செந்தில்குமார். இன்னும் சொல்லப்போனால் தமிழ்மணம் TOP 20 பதிவுகளின் பட்டியலில் ஆறுவாரமாக ஆரவாரமாக முதலிடத்தில் இருப்பவர்//
இயக்குனருக்கு உண்டான தகுதி நெறையவே இருக்கிறது :)
செய்வதை செம்மையாக செய்வதே யோகம் :)
இயக்குனர் சி.பி-க்கு வாழ்த்துக்கள்....
சென்னிமலையில் இருந்து ஒரு தமிழ் இயக்குனர் ரெடி :)
For following...
நல்ல பேட்டி
நல்ல பேட்டி.. :-)
பேட்டி நல்லாயிருக்கு...
1.மிரட்டலுக்கு உள்ளான அந்த சிரிப்பு என்ன?
2.முட்டையை ஆஃபாயில் போடும்போது கூட கோர்ட் போட்டுகணுமா?
பகிர்வுக்கு நன்றி.
நல்லாருக்கு பேட்டி.. நானும் ரசிகன் தான்.. சி.பி.. அதன் பிறகுதான் இயக்குனர் எல்லாம்.
1990-களின் இறுதியிலும், 2000 தொடக்கத்திலும் நானும் அவ்வப்போது குமுதம், விகடன், பாக்யா, இந்தியா டுடே உள்ளிட்ட வெகுஜன இதழ்களில் எழுதி வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் எந்த பத்திரிகையை திறந்தாலும் சிறுகதையோ, ஜோக்கோ, துணுக்கோ சென்னிமலை சி.பி.செந்தில்குமாரின் பெயர் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். எப்படி இவரு தொடர்ச்சியாக இப்படி எழுதி குவிக்கிறார் என்று வியந்ததுண்டு.....அவருடைய எழுத்துப்பணி இன்னும் உயரத்தில் அவரை வைக்கும்.
பிரபா அருமையான கேள்விகள்
சுவாரஸ்யமான பதில்கள்.
@!@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////கேபிளின் அரிய புகைப்படம்... உங்கள் பார்வைக்காக.../////
//அது என்ன அரிய புகைப்படம்? இதெல்லாம் அவரு டெய்லி பண்றதுதானே? //
நாங்களெல்லாம் அவர் இப்படி நிற்பதை பார்த்தது கிடையாதே, அதனால் அரிதோ என்னோவோ பன்னி சார்!!
//ஆமா, அண்ணன் கிச்சன்ல கூட டிப்டாப்பா நிக்கிறாரே? //
இது ஆம்லேட் போடுவதற்காக கொடுத்த போஸ்!! மற்றபடி அதெல்லாம் சாப்பிடுவதோட சரி!! சரியா தல!
நல்ல சுவாரஸ்யமான பேட்டி.
// பீல்ட் வொர்க் என்ற பெயரில் அலுவலகத்தை கட் அடித்துவிட்டு சினிமா பார்க்கவும் பிரவுசிங் செண்டர் போவதற்கும் பயன்படுத்திக் கொள்வேன்.
//
வன்மையாக கண்டிக்கிறேன்.!!(மாட்டிஉடுறாங்கப்பா.!!!)
//வேறு ஏதாவது கேள்வி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். அடுத்த பேட்டியில் கேட்டுவிடலாம்.
//
இந்த பதிவு பின்பு பிரபாவை எப்படி பார்க்கின்றீர்கள்.??? காமெடியான ஒரு சினிமா வசனம் பதிலாக வேண்டும்..
// பீல்ட் வொர்க் என்ற பெயரில் அலுவலகத்தை கட் அடித்துவிட்டு சினிமா பார்க்கவும் பிரவுசிங் செண்டர் போவதற்கும் பயன்படுத்திக் கொள்வேன்.
//
வன்மையாக கண்டிக்கிறேன்.!!(மாட்டிஉடுறாங்கப்பா.!!!)
//வேறு ஏதாவது கேள்வி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். அடுத்த பேட்டியில் கேட்டுவிடலாம்.
//
இந்த பதிவு பின்பு பிரபாவை எப்படி பார்க்கின்றீர்கள்.??? காமெடியான ஒரு சினிமா வசனம் பதிலாக வேண்டும்..
கேள்வியும் பதிலும் ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை...
வாழ்த்துக்கள் இருவருக்கும்
@ சேலம் தேவா, பாரத்... பாரதி..., அமைதி அப்பா, எல் கே, பார்வையாளன், இரவு வானம், தினேஷ்குமார், சிவகுமார், தமிழ்வாசி - Prakash, sakthistudycentre-கருன், சே.குமார், நா.மணிவண்ணன், சி.பி.செந்தில்குமார், அஞ்சா சிங்கம், ஆதவா, NKS.ஹாஜா மைதீன், ஆகாயமனிதன்.., கந்தசாமி., மாணவன், உண்மைத்தமிழன், Kousalya, பன்னிக்குட்டி ராம்சாமி, தனி காட்டு ராஜா, T.V.ராதாகிருஷ்ணன், பதிவுலகில் பாபு, சி. கருணாகரசு, Cable Sankar, ரஹீம் கஸாலி, எம் அப்துல் காதர், Lakshmi, தம்பி கூர்மதியன், NIZAMUDEEN, சிவகுமாரன்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ சேலம் தேவா
// இதே மாதிரி எல்லா பிரபல பதிவர்களையும் பேட்டி எடுங்க..!! //
எனக்கும் அந்தமாதிரி ஒரு எண்ணம் இருக்கு... எடுத்திட்டா போச்சு...
@ பாரத்... பாரதி...
// வலையுலக ரஜினி சி.பி. செந்தில் சார் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள். //
இப்படி உசுபேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்குவீங்களே...
@ அமைதி அப்பா
// நூற்றுக்கு நூறு உண்மை சார்! //
புரிஞ்சிகிட்டா சரி...
@ எல் கே
// நல்ல பேட்டி இந்த ஹிட்ஸ் பத்தி ஒவ்வொருவரின் கருத்தும் மாறுபடும் //
சரிதான்... என்னுடைய கருத்து மட்டும்தான் சரின்னு நினைக்காமே இருந்தாலே போதுமே எல்கே...
@ தினேஷ்குமார்
// அசத்தல் பேட்டி பிரபா சி.பி.சித்தப்பா வெகுவிரைவில் இயக்குனராக வேண்டும் அவர் கனவு லட்ச்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் //
என்னது சித்தப்பாவா...? அவரும் யூத்து தானாம்ங்க...
@ சிவகுமார்
// என் மனதில் ஆடுகளமே நிறைய மதிப்பெண் பெறும் என் தெரிகிறது //
எனக்கும் அதே தான் தோன்றுகிறது...
// என்ன காரணத்திற்கு அவர் இப்படி சொன்னார் என்று ஓரளவே யூகிக்க முடிகிறது. மற்ற படங்களுக்கு விமர்சனம் அளித்துவிட்டு இளைஞனை விகடன் கண்டிப்பாக ஒதுக்காது என்பது பல வருடங்களாக விகடனை படித்துவரும் என் எண்ணம். //
அரசியல் காரணங்களுக்காக அப்படி கூறுகிறார்... அப்படியே விகடன் வெளியிட்டாலும் நடுநிலையுடன் இருக்காது என்பதே எனது எண்ணம்...
@ தமிழ்வாசி - Prakash
// இதேபோல் மாதம் ஒருவரை பேட்டி எடுத்து போட்டால் நல்லா இருக்குமே. முயற்சி செய்யுங்களேன். //
முயற்சி செய்கிறேன்... நீங்க பேட்டி தருவீங்க தானே...
@ சி.பி.செந்தில்குமார்
// HAI.. WAT HAPPEND TO TAMILMANAM TOOL BAR? //
சரிவர வேலை செய்யாததால் தற்காலிகமாக நீக்கி வைத்திருந்தேன்...
@ ஆகாயமனிதன்..
// உங்கள் உரையாடல் பதிவு நன்று..
(ஆடியோ பதிவு வச்சிருக்கீங்களா ?) //
ஹி... ஹி... இல்லை... லேன்ட்லைனில் இருந்துதான் கால் செய்தேன்... அதோடு பேட்டி யதார்த்தமாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் அவரிடம் பேட்டி என்று சொல்லாமல்தான் கேள்விகளை கேட்டேன்...
// அவரின் தன்னிலை விளக்கம் நன்று ! //
அது அவருடைய தன்னிலை விளக்கமல்ல... அவரைப் பற்றி நான் எழுதிய வரிகள்...
// கனிமொழி - ராசா பத்தி அடித்த கமெண்டுக்கு வந்த எதிர்ப்பு..
(இல்லன்னா, வேலைய விட்டு தூக்கிருவாங்களோ ?) //
ஆட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்...
@ பாரத்... பாரதி...
// ஆமாம். சி.பி. பற்றிய பதிவில் கேபிளார் படம் எதற்காக... ஏதாவது பிராயச்சித்தமா? //
கேபிள் பற்றிய கேள்வி ஒன்று வந்த காரணத்தினால் அவரது படத்தினை வெளியிட்டேன்...
@ மாணவன்
// அடுத்த பேட்டி யாருகிட்ட??? //
நீங்க ரெடின்னா இப்பவே ஆரம்பிச்சிடலாம்...
@ உண்மைத்தமிழன்
// நீயும் ஜோதில ஐக்கியமாயிட்டியா..? உருப்பட்டாப்புலதான்..! //
தலைவரே... என்னை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... நீங்க குறிப்பிட்ட அந்த ஜோதியில் நான் ஐக்கியமாகவில்லை... ஐக்கியமாகவும் மாட்டேன்... தனிப்பட்ட நண்பர் என்ற முறையிலேயே செந்திலை பேட்டி கண்டேன்... இதில் எந்த உள்குத்தும் இல்லை...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அது என்ன அரிய புகைப்படம்? இதெல்லாம் அவரு டெய்லி பண்றதுதானே? //
ம்ம்ம்... எல்லாரும் அவர் பதிவுல போடுற கொத்துபரோட்டாவைத் தான் பார்த்திருப்பீங்க... அதான் ஒரு மாறுதலுக்காக அவர் கிச்சனில் போடும் கொத்துபரோட்டா...
// ஆமா, அண்ணன் கிச்சன்ல கூட டிப்டாப்பா நிக்கிறாரே? //
புத்தக வெளியீட்டு விழாவில் இருந்து நேரா வந்துட்டார் போல :)
@ தனி காட்டு ராஜா
// சென்னிமலையில் இருந்து ஒரு தமிழ் இயக்குனர் ரெடி :) //
சிபி உங்க ஊர்க்காரரா...?
ஆமா... அவரும் பிரபஞ்சத்தில் தான் இருக்கிறார் என்றெல்லாம் மொக்கை போடாதீங்க...
// For following... //
ஓஹோ... இதையெல்லாம் கூட படிக்க ஆள் இருக்கிறார்களா... நல்லது :)
@ சி. கருணாகரசு
// மிரட்டலுக்கு உள்ளான அந்த சிரிப்பு என்ன? //
அதைச் சொன்னால் மறுபடியும் ஆட்டோ அனுப்புவாங்களே...
// முட்டையை ஆஃபாயில் போடும்போது கூட கோர்ட் போட்டுகணுமா? //
முன்னாடியே சொன்னது போல், அவர் புத்தக வெளியீட்டு விழாவில் இருந்து நேரா வந்துட்டார் போல :)
@ ரஹீம் கஸாலி
// 1990-களின் இறுதியிலும், 2000 தொடக்கத்திலும் நானும் அவ்வப்போது குமுதம், விகடன், பாக்யா, இந்தியா டுடே உள்ளிட்ட வெகுஜன இதழ்களில் எழுதி வந்திருக்கிறேன். //
அப்படின்னா அடுத்த பேட்டி உங்ககிட்ட தான்...
@ எம் அப்துல் காதர்
// இது ஆம்லேட் போடுவதற்காக கொடுத்த போஸ்!! மற்றபடி அதெல்லாம் சாப்பிடுவதோட சரி!! சரியா தல! //
நீங்க சொன்னா சரிதான் தல...
@ தம்பி கூர்மதியன்
// இந்த பதிவு பின்பு பிரபாவை எப்படி பார்க்கின்றீர்கள்.??? காமெடியான ஒரு சினிமா வசனம் பதிலாக வேண்டும்.. //
கேள்வி புரியல... ஆனா எதோ வம்புல மாட்டி விடுறீங்கன்னு மட்டும் புரியுது...
பேட்டி சூப்பருங்க வளரும் தலைமுறையே!
பேட்டி நல்லாயிருக்குங்க, ஃபிளா!
பிரபாகர், நீங்கள் ஒரு பத்திரிகையே ஆரம்பிக்கலாம். நல்ல பேட்டி. நானும் செந்தில் அவர்கள் வசனம் எழுதுவதைப் படித்து மலைத்திருக்கிறேன். இருவருக்கும் வாழ்த்துக்கள்.அடுத்தது உண்மைத்தமிழன் அண்ணனையும் பேட்டி காணுங்கள்.
பாஸ்கர்.
அப்படியே விகடன் வெளியிட்டாலும் நடுநிலையுடன் இருக்காது என்பதே எனது எண்ணம்.// ஏன் அப்படி சொல்கிறீர்கள்??
@ விக்கி உலகம், வருண், பாஸ்கர், சிவகுமார்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ சிவகுமார்
// அப்படியே விகடன் வெளியிட்டாலும் நடுநிலையுடன் இருக்காது என்பதே எனது எண்ணம்.// ஏன் அப்படி சொல்கிறீர்கள்?? //
ஒரு பதிவரின் விமர்சனத்தையே ஆளும்கட்சியினர் மிரட்டி நீக்க வைத்திருக்கின்றனர்... அப்படி இருக்கும்போது ஆனந்த விகடனில் அப்படியொரு விமர்சனத்தை வர விடமாட்டார்கள் ஆளும்கட்சியினர்... விமர்சனம் வெளியாகும்வரை பொறுத்திருந்து தான் பார்ப்போமே...
தம்பி பிரபாகரன் அவர்களுக்கு,
உங்கள் பதிவில் ஒரு குறையும் இல்லை. பதிவுலகத்தில் சில தலைப்புகள்தான் இன்றைய தேதியில் பிரபலமாக இருக்கின்றன. அதில் சினிமாவும் ஒன்று. திரு. தொப்பி தொப்பி அவர்கள் இந்த சினிமா சமாசாரங்களை பதிவர்கள் விடுடவிட வேண்டுமென்று எழுதியிருந்தார். அவருக்கு சினிமா விமரிசனங்கள் எவ்வளவு பிரபலமாக இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகத்தான் உங்கள் பதிவின் சுட்டி கொடுத்திருந்தேன். உங்கள் பதிவைக் குறை கூறுவது என் நோக்கமல்ல. அவ்வாறு ஏதாவது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் உங்கள் பதிவில் பின்னூட்டம் போடுவதுதானே முறை. நான் செய்ததில் ஏதாவது தவறு என்று நினைத்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
அன்புள்ள,
ப.கந்தசாமி.
@ DrPKandaswamyPhD
தவறேதும் இல்லை அய்யா... வெறுமனே இதையும் கொஞ்சம் பாருங்க என்று கூறியிருந்ததால் என்னவென்று தெரிந்துக்கொள்ள விரும்பினேன்...
சினிமா பற்றி எழுதுவதை குறிப்பிடவேண்டுமென்றால் எனக்கு எதைப் பற்றி எழுத தெரியுமோ எதைப் பற்றி எழுதப் பிடித்திருக்கிறதோ அதைப்பற்றி மட்டும் எழுத விரும்புகிறேன்... என்னவென்று தெரியாமல் அரசியல் பதிவு எழுதுவதில் அர்த்தமில்லை... அப்படி எழுதினாலும் உங்களைப் போன்று விஷயம் தெரிந்தவர்கள் யாராவது வந்து நீயெல்லாம் எதுக்கு எழுதுறன்னு ஒரு கேள்வி கேப்பாங்க...
75
ஒரேயடியாக பொங்கல் படங்கள் நான்கையும் பார்த்திருக்கிறீர்களே...? ஏன் இந்த கொலவெறி...?
பொதுவாகவே எனக்கு சினிமாத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று விருப்பம். அதனால் என்னால் முடிந்த வரைக்கும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன்.//
ஓ நிறைய படம் பார்த்தா இயக்குனர் ஆகிடலாமா? அப்போ தேவலீலை படம் எதுக்கு பார்த்தீங்க. ஹிஹி
நான்கு படங்களையும் பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது...? -- வார நாள்ல தியேட்டர்ல ஆபரேடர் வேல
மொக்கை படங்களை எல்லாம் எப்படி உங்களால் பார்க்க முடிகிறது...? - மொக்கை பதிவு எழுதும்போது மொக்கை படம் பார்க்க மாட்டனா?
ஒரு படத்தை மொக்கை என்று விமர்சனம் எழுதும் போது எதிர்க்குரல்கள் கிளம்புமே...? - அதுக்குதான் என்னோட பதிவுல என்னை நானே கேவலமா திட்டிக்கிறேன். ஹிஹி
சமீபத்தில் “சிரிப்பு போலீஸ்” ரமேஷை சந்தித்தபோது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக வார இதழ்களில் ஜோக்ஸ், கதைகள் என்று படைப்புகள் எழுதி வருகிறீர்களாமே...? - அந்த ஆளு சும்மாவே இருக்க மாட்டாரா. பின்ன ஆபீஸ் ல எனக்கு எப்படி பொழுது போகும்?
நான் பதிவெழுத ஆரம்பித்த சமயத்தில் என்னை பெரிதும் ஊக்குவித்தவர் “சிரிப்பு போலீஸ்” ரமேஷ். அவர் என்னைப்பற்றி உயர்வாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.///
மேல உள்ளதெல்லாம் சிபி பதில்கள். இது நான்: சிபி ஏழு வருசமா உங்க ஜோக்ஸ் கவிதைகள் படிச்சு உங்க fan ஆனவன் நான். உங்கள் அறிமுகம் எனக்கு மிக்க மழிச்சி
விமர்சனம் எழுதி சர்ச்சையானது போல ஜோக்ஸ் எழுதி ஏதாவது சர்ச்சை ஏற்பட்டது உண்டா...? - திட்டு வாங்கினத சொல்லவா, அடி வாங்கினத சொல்லவா?
சரி, இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போக வேண்டாம். பொங்கலில் வெளிவந்த நான்கு படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து...? -- கனவுகளின் ஊடல் ஹிஹி
வேறு ஏதாவது கேள்வி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். அடுத்த பேட்டியில் கேட்டுவிடலாம். - அடுத்து சென்னை எப்போ வருவார். ஓசி சாப்பாடு வாங்கி தருவார் என்று கேட்டு சொல்லவும்.
சீக்கிரமே டைரக்டராக வாழ்த்துக்கள் சிபி!
Post a Comment