வணக்கம் மக்களே...
முட்டி மோதி எனது நூறாவது பதிவை எட்டியிருக்கிறேன். இப்பொழுதெல்லாம் பதிவர்கள் இரண்டு, மூன்று மாதங்களில் நூறு பதிவுகள், நூற்றைம்பது பாலோயர்கள் என்று சீக்கிரமாக வளர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். என்னால் அப்படி ஒரு வளர்ச்சியை எட்ட முடியவில்லை. ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒரு பதிவு. பின்னர் இரண்டு வாரத்திற்கு ஒன்று. பின்னர் வாரத்திற்கு ஒன்று, வாரத்திற்கு இரண்டு, வாரத்திற்கு மூன்று என்று போய் இப்போது எந்த வேலைவெட்டியும் இல்லாத காரணத்தினால் தினமும் பதிவெழுதி வருகிறேன். நாளைக்கே வேலை கிடைத்துவிட்டாலோ அல்லது திருமணம் போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிட்டாலோ பதிவுலகில் இருந்து ஒரேயடியாக விலகினாலும் விலகுவேன். இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருப்போம் என்ற மனநிலையிலேயே பதிவுலகில் இருந்து வருகிறேன்.
இருக்கட்டும், ஏற்கனவே கடந்த சில இடுகைகளில் நிறைய சுயபுராணம் பாடிவிட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். வழக்கமாக நூறாவது இடுகை என்றால் பழைய இடுகைகளை நினைவுகூருவார்கள் நானும் அதையே செய்கிறேன். எழுதிய இடுகை அனைத்துமே ரசித்து எழுதியவைதான் என்றாலும் கிரிக்கெட்டில் மேன் ஆப் தி மேட்ச் மாதிரி சில வரிகளை ரொம்பவே சிலாகித்து எழுதியிருப்பேன். அந்த வரிகளை மட்டும் மீண்டும் இங்கே ஒருமுறை குறிப்பிடுகிறேன்.
கடந்த வாரம் செய்தித்தாளை மேய்ந்துக்கொண்டிருந்தபோது கண்ணில் தென்பட்ட ஒரு செய்தி, "கோவில் கருவறைக்குள் வைத்து என்னை கற்பழித்தார்; அர்ச்சகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்". சின்னச்சின்ன தப்புக்கெல்லாம் கூட கண்ணைக் குத்தும் சாமி இதற்கு என்ன செய்தது...?, எதை குத்தியது...? பக்தகேடிகள் யாரவது இதற்கு பதில் சொல்ல விரும்பினால் சொல்லலாம்.
தல பேனர் முன்பு தோப்புக்கரணம் போட்ட ஜென்மத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த அறியாமைக்கூட்டத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள அவமானமாக இருக்கிறது.
விஜய் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து சென்னையில் இருக்கும் ரவுடிகளை அழிக்கிறார் என்றால் அஜித் இந்தியாவில் இருந்து கிளம்பி பன்னாடுகளில் உள்ள பன்னாடை டான்களை அழிக்கிறார். பரமசிவனில் பாகிஸ்தான், பில்லாவில் மலேசியா, ஏகனில் ஹாங்காங், இப்போது அசலில் பிரான்ஸ். தல இனியாவது முழிச்சுக்கோங்க, இல்லன்னா சன்ரைஸ வேற யாராவது குடிச்சிடுவாங்க.
நீண்ட நாட்களாகவே தியான சாமியார்கள் பற்றி இருந்துவந்த மனக்குழப்பம் இப்போது தீர்ந்திருக்கிறது. "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்", "கதவைத் திற காற்று வரட்டும், மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்", அத்தனைக்கும் ஆசைப்படு", "ரஞ்சிதா ***க்கும் ஆசைப்படு" என்று மையமாக எதையாவது கூறி தியான வியாபாரம் செய்து வந்த கும்பலின் குட்டு இப்போது வெளிவந்திருக்கிறது. எப்படியோ என் தமிழ் மக்களுக்கு இதன் மூலமாக கொஞ்சமாவது விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் "நித்தி சரியில்லை ஜக்கியிடம் போவோம்" என்று சென்றால் பிள்ளைவரம் வாங்கிக்கொண்டு திரும்பவேண்டியதுதான்.
அம்மா பங்காருவின் காலைக் கழுவி விடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவரது காலைக் கழுவி விடுவதற்கு 25000, 30000 என்று நன்கொடை கட்ட வேண்டுமாம். காலைக் கழுவுவதற்கு ஐம்பதாயிரம் வாங்கினால் குண்டியைக் கழுவி விட எவ்வளவு வாங்குவார் என்று தெரியவில்லை.
என் தமிழ் மக்களுக்கு எப்போதுமே ஞாபக மறதி ரொம்ப அதிகம். நடந்த கதையெல்லாம் மறந்துவிட்டு நெருப்பில் நெய்யள்ளிக்கொட்ட அவாளை கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள். மக்கள் பெரியவா... பெரியவா... என்று இவன் பக்கம் போய்விடக்கூடாது என்பதே என் பெரிய அவா.
எல்லோரும் சரியாக கதை கேட்பதில்லை என்று விஜய்க்கு அட்வைஸ் செய்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய கவலை, அட்வைஸ் எல்லாமே விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அறியாமைக்கூட்டத்திற்குத்தான். உங்கள் தறுதளபதியின் போதைக்கு நீங்கள் ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறீர்கள். உங்களை உசுப்பேற்றி அந்த உஷ்ணத்தில் உங்கள் தலைவர் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். இதை நீங்களெல்லாம் உணர்ந்துக்கொள்ளும் வரை உங்கள் தலைவன் திரையில் சொன்னது போல தமிழன் சுயமரியாதை இல்லாமல்தான் இருப்பான்.
வழக்கமாக சமூகப் பிரச்னையை காசாக்கும் மணி சார் இந்தமுறை ஐஸின் மார்பகத்தை காசாக்க முயன்றிருக்கிறார் என்றே சொல்லலாம். கதைக்கு கொஞ்சமும் தேவையில்லாத சதையை ஐஸ் காட்டியிருக்கிறார். ஐஸ், அவரது வீட்டில் இருக்கும்போது கூட க்ளீவேஜ் தெரிவதுபோல உடையணிந்து இருக்கிறார். மணி சார் வீட்டு பெண்களெல்லாம் அப்படித்தான் உடுத்துவார்கள் போல. ப்ரியாமணி தோன்றும் பாடலில் கூட கேமரா பின்பு நின்றுகொண்டு "கொஞ்சம் மாராப்பை விலக்கிவிட்டு ஆடும்மா..." என்று சொல்லியிருப்பார் போல.
உலகம் போற்றிய மருத்துவரான அவரை அதுநாள் வரை டாக்டர், சார், ஐயா என்று எப்படியெல்லாமோ அழைத்திருக்கலாம். ஆனால் அன்று மருத்துவமனையின் வாட்ச்மேன் முதற்கொண்டு "பாடி" என்றே குறிப்பிட்டனர். இதுதான் வாழ்க்கை. இதுதான் உலகம்.
நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும்போதும் நக்கல்ஸ் குறையாத அப்பா, பொய்க்கோபம் காட்டியபடியே பர்சிலிருந்து பணமெடுத்து கொடுக்கும் அம்மா, டிவி ரிமொட்டுக்காக சண்டை போடும் தங்கை என்று அப்படியே எங்கள் வீட்டை ஜெராக்ஸ் எடுத்து காட்டியதோடு மட்டுமில்லாமல் பொறுப்பில்லாமல், வேலைவெட்டியில்லாமல் இருக்கும் நாயகனின் பாத்திரத்தையும் கச்சிதமாக காட்டியிருந்தார்கள்.
அது ஒரு உன்னதமான அனுபவம். ஒட்டுமொத்த தமிழகத்து வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்து நாங்கள் நான்கு பேர் மட்டுமே பணிபுரிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போதே மனதிற்குள் ஜில்லென்று இருக்கும். நைட் ஷிப்ட் பற்றி மற்றவர்கள் அலுவலகத்து நேரத்தில் தூங்கிக்கொண்டிருப்பவர்கள் என்று அனுமானிக்கக்கூடும். ஆனால் நைட் ஷிப்டில் குறைந்தது ஒரு மாத காலமாவது இருந்து பார்த்தால் தான் தெரியும் அந்த ஆணி எப்படியெல்லாம் குத்துமென்று.
பக்கம் பக்கமாக எழுதலாம். இது வரைக்கும் எங்க அப்பா அம்மா கூட என்னை அந்த மாதிரியெல்லாம் திட்டி இருக்க மாட்டாங்க. கால் கடுக்க கால் எடுத்துக்கொண்டிருக்கும்போது ஒருத்தன் ஜஸ்ட் லைக் தட் ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்துவிட்டு போய்விடுவான். அந்த வார்த்தையில் இருந்து வெளியில் வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி திட்டுவதில் அப்படி என்னதான் சந்தோஷமோ...!!!
- ஹீரோவை யாராவது இரும்புக்கம்பியால் இருபது முறை பின்மண்டையில் அடித்தால் கூட ஹீரோ எழுந்து வந்து வில்லன் கும்பலை புரட்டி எடுத்து புரோட்டா போடுவார்.
- இரண்டரை மணிநேர படத்தில் கடைசி அரைமணிநேரம் இருக்கும்போது எப்படியோ ஹீரோவிற்கு பொறுப்பு வந்து ஒரே பாடலில் பணக்காரன் ஆகிவிடுவார்.
- பையா படத்தில் தமன்னாவும் கார்த்தியும் கட்டிப்பிடித்துக்கொள்வதோடு படம் நிறைவு பெறும். அதன்பிறகு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமன்னாவுடன் பன்னாடைப்பயல் கார்த்தி எப்படி குடும்பம் நடத்தினான் என்பதை யாரும் காட்டமாட்டார்கள் நாமும் யோசிக்க மாட்டோம்.
ஜாக்கியையும் அவரது மனைவியையும் பார்த்தபோது பொறாமையாக இருந்தது. ஒருவனின் படைப்புகளை குறிப்பாக எழுத்துக்களை ரசிக்கும் மனைவி அமைவது மிகவும் அரிது. ஜாக்கிக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது. THEY ARE MADE FOR EACH OTHER என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.
- பெரியாரும் அம்பேத்கரும் இல்லையெனில் இன்று நம்மில் பலர் ஏசி ரூம்களிலும் கண்ணாடி அறைகளிலும் அமர்ந்துக்கொண்டிருக்காமல் செருப்பு தைத்துக்கொண்டும் மலம் அள்ளிக்கொண்டும் இருந்திருப்போம். ஆனால் அந்த நன்றியுணர்ச்சி அவர்களால் பலனடைந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சிலருக்கே இல்லாதது வருத்தத்தை தருகிறது. இன்று அவர்கள் குஷன் சீட்டில் குண்டி வைக்க முடிகிறதென்றால் அதற்கு பெரியார், அம்பேத்கர் போன்றவர்களே காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
- நாம் எதிர்ப்பது, எதிர்க்க வேண்டியது பார்ப்பன மக்களை அல்ல. பார்ப்பனீயம் என்ற உணர்ச்சியை மட்டுமே.
மிகவும் ரசித்து எழுதிய இடுகை: கேரக்டர் – சினிக்கூத்து சித்தன்
பழைய இடுகைகளை புரட்டிப் பார்க்கும்போது தான் சில விஷயங்கள் புரிகின்றன. ஆரம்ப காலத்தில் சில நல்ல சிந்தனைகளை எழுதி வந்த நான் காலப்போக்கில் சினிமா, நடிகை என்று தடம் மாறியிருக்கிறேன். மேலும் எனது பழைய நகைச்சுவை உணர்வு இப்போது என்னிடம் பெரிதளவு குறைந்துள்ளது. மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப முயல்கிறேன்.
டிஸ்கி: நான் மிகந்த மனவலியுடன் எழுதிய பதிவு அன்புள்ள அம்மாவுக்கு... பர்சனலாக என் மீது பாசம் வைத்திருக்கும் நண்பர்கள் எனது அந்தப் பதிவை படித்து கருத்து தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
116 comments:
ஃஃஃஃஃதிருமணம் போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிட்டாலோ பதிவுலகில் இருந்து ஒரேயடியாக விலகினாலும் விலகுவேன். ஃஃஃஃஃஃ
வாறவளை முற்கூட்டியே அறிவுறுத்தி தேர்ந்தெடுங்க பிபி.
பிபி 100 வது பதிவலி்லை 100 க்கு போன் போட வைக்கும் பதிவு...ஹ..ஹ..ஹ..
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
//இப்பொழுதெல்லாம் பதிவர்கள் இரண்டு, மூன்று மாதங்களில் நூறு பதிவுகள், நூற்றைம்பது பாலோயர்கள் என்று சீக்கிரமாக வளர்ச்சி அடைந்துவிடுகிறார்கள்.//
இது போன்றவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் நண்பரே! ஒப்பீடுகளே வேண்டாம். நம் பணி அல்லது பொழுதுபோக்கு இடுகை எழுதிக்கிடப்பதே என்ற அளவில் இருப்போம். தொடர்ந்து தூள் கிளப்புங்கள்!
//நாளைக்கே வேலை கிடைத்துவிட்டாலோ அல்லது திருமணம் போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிட்டாலோ பதிவுலகில் இருந்து ஒரேயடியாக விலகினாலும் விலகுவேன். //
எழுதுவதை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை, வாரம் ஓரிரு பதிவாவது போடலாம் :-)
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
நூறுக்கு வாழ்த்துக்கள் தம்பி ...
மூன்றாம் கோணம் சார்பில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பிரபாகரன்
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் பிரபா...
உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன் பெற்றுக்கொள்ளவும்....
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html
வாழ்த்துக்கள் நண்பா....
//காலைக் கழுவுவதற்கு ஐம்பதாயிரம் வாங்கினால் குண்டியைக் கழுவி விட எவ்வளவு வாங்குவார் என்று தெரியவில்லை. //
எங்க ஊரில் ரெண்டும் ஒன்றுதான்
வாழ்த்துக்கள் தம்பி . நீ ரசித்த வரிகளை நானும் ரசித்தேன் . உன்னை சந்தித்தது இனிய அனுபவம் . நிறைய எழுது . வாழ்த்துக்கள்
100க்கு வாழ்த்துக்கள், பிரபாகரன! :)
ஒரு பிரசன்ட் போட்டுக்கறேன். நூறுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
பழைய இடுகைகளை புரட்டிப் பார்க்கும்போது தான் சில விஷயங்கள் புரிகின்றன. ஆரம்ப காலத்தில் சில நல்ல சிந்தனைகளை எழுதி வந்த நான் காலப்போக்கில் சினிமா, நடிகை என்று தடம் மாறியிருக்கிறேன். மேலும் எனது பழைய நகைச்சுவை உணர்வு இப்போது என்னிடம் பெரிதளவு குறைந்துள்ளது. மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப முயல்கிறேன்.
...... Good self-assessment. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Congratulations!!!
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
"குண்டியைக் "
>>>>
உங்கள் வளர்ச்சிக்கு என் பாராட்டுக்கள்.....அதே நேரம் கொஞ்ச நயமாகவும் சொல்வது நாகரிகம் என்று நினைக்கிறேன்.....
ஆபாசத்தை யார் சொன்னாலும் அது மக்களின் மனத்தை பதிக்கவே செய்யும்.....
"திருமணம் போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிட்டாலோ பதிவுலகில் இருந்து ஒரேயடியாக விலகினாலும் விலகுவேன். ஃஃஃஃஃஃ"
>>>>
ஏனப்பா நாங்கல்லாம் வேலைவெட்டி இல்லாம தான் பதிவேழுதுரோம்னோ, இல்ல என் மனைவி நான் பதிவுலகத்துல இருந்தாதான் அவங்களுக்கு மதிப்புன்னு என்னை விட்டுவச்சி இருக்காங்களோன்னு நினைக்கிறீங்களா.......
>>>>
பொறுப்புகள் ஏறும்போது தான் ஒருவன் செம்மைப்படுத்தப்படுகிறான் தம்பி...............
இது என்னுடைய தாழ்மையான கருது.
நீடூழி வாழ்க.........
arumai..vaazhththukkal nanbha..
வாழ்த்துக்கள் பாஸ்.... நூறாவது பதிவுக்கு.. மென்மேலும் வளர்க...
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
கலக்கல் மன்னனுக்கு எனது வாழ்த்துக்கள்
உமது 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் - ஏதோ பதியனுமேனு பதிந்த உமது பதிப்புக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்
நூறுக்கு வாழ்த்துக்கள் பிரபாகரன்.
மேலும் பல நூறுகளை தொட வாழ்த்துக்கள்.
100 ,1000 thandatum anparae valthukal
நூறுக்கு வாழ்த்துக்கள்!
ஆயிரம் தலைப்பாக மாறட்டும். வாழ்த்துகள்.
நீ மேல்மருவத்தூர் என்ஜினியரிங்க காலேஜ்ல படிச்சியோ??
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பிரபாகரன்.. 100 ஆயிரமாகவும்.. ஆயிரம் 10000 ஆகவும் வாழ்த்துக்கள்..
ஆடினவன் காலும்.. எழுதறவன் கையும் சும்மா இருக்காது.. கண்டிப்பாக உங்களது சிறப்பான பயணம் தொடரும்.. :-)
செஞ்சுரி அடித்த அன்பு நண்பர் பிரபாகரனுக்கு என் வாழ்த்துக்கள்.பல்லாண்டு வாழ்க.
நீ நான் உலகம் அருண் குமார்
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்... :-)
தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்..
I wish that you write your 1000th post soon:)
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுவீர்கள் சும்மா இருக்க முடியாது .......
ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.. திருமணம் என்ன? திருமணம்.. எழுத நினைத்தால் உங்களால் தொடர்ந்து எழுத முடியும்.. வாழ்த்துக்கள் பிரபாகரன்..!
செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள். எக்காரணம் கொண்டும் எழுதுவதை நிறுத்தாமல் எழுதிக்கொண்டிருங்கள்.
அப்போதுதான் பிலாசபி சரியானதாக இருக்கும்.
வாழ்த்துக்கள் பிரபாகர் .............
மேலும் எனது பழைய நகைச்சுவை உணர்வு இப்போது என்னிடம் பெரிதளவு குறைந்துள்ளது. ///
அடடே அப்படியா ???? முதல்ல அத தட்டி எழுப்புங்க ... மத்த விஷயங்கள் தான நடக்கும்
வித்தியாசமா இருக்குங்க பதிவு. இந்த வருடமும் உங்கள் பதிவுகள் ரசித்து எழுதப்படவேண்டும்!!
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் பிரபா
உங்கள் 100வது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் பயணம் மேலும் தொடரட்டும்
எங்க ஏரியாவுக்கும் வாங்க
http://aiasuhail.blogspot.com/2011/01/2011.html
நன்பரே, நான் உங்களுக்கு ஆருதல் சொல்லுமலவிற்கு பெரியவன் அல்ல. இப்ப வந்த சிறியவன். எனக்கு வயது 16 தான் ஆகிறது. ஆனாலும் நான் மனம் வருந்துகிறென். உங்கள் கவலையைப்பற்றி நினைத்தல்ல. அனுபவம் வாய்ந்த நீங்களா? இப்படி கூறுகிறீர் என்று. நான் சிரிப்பவன். நீங்கள் சிரிக்க வைப்பவன். பெரியவர் நீங்கள்தான் 100,200,300 பதிவுகள் இடும் பதிவாளர்களைவிட. மனம் வருந்தாதீர். நான் என்றும் உங்களுடன். (பிழைகள் ஏதுமிருப்பின் மண்ணிக்கவும்.)
1000 பதிவுகளுக்கு மேல் போட வாழ்த்துக்கள்
"நாளைக்கே வேலை கிடைத்துவிட்டாலோ அல்லது திருமணம் போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிட்டாலோ பதிவுலகில் இருந்து ஒரேயடியாக விலகினாலும் விலகுவேன்"
திருமணம் ஆனால் தான் நிறைய எழுதன்னு தோணும் ! 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ! விரைவில் 1000 தொட வேண்டும்
வாழ்த்துக்கள். சில பதிவுகள் படிச்சிருக்கிறேன்.. சிலது இனி படிக்கிறேன்...! சும்மா ஜாலியா எழுதுங்க.. எதையும் கண்டுக்காம....!
வாழ்த்துக்கள் பிரபா...
"அன்புள்ள அம்மாவுக்கு" இப்போ வாசிக்க நேரமில்லை கண்டிப்பாக வாசித்துக் கருத்து கூறுகிறேன்...
தொடர்ந்து எழுதுங்க.... பதிவுலகம் அப்படியேதான் இருக்கப்போகுது.... பதிவர்கள்தான் வந்து போகிறோம்... வாங்க எழுதலாம்! :)
100 பதிவுகளையும் ஒரு சேர படித்த திருப்தி. ஒரு கைதேர்ந்த விமர்சகரின் எழுத்துக்களாய் இருக்கின்றன உங்களது விமர்சனங்களும் பார்வைகளும். எனக்குப் பிடித்தது நைட் ஷிப்ட் பற்றிய பதிவு.நானும் அப்படித்தான் ஊரெல்லாம் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நான் நைட் ஷிப்டில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தேன்.
வேலை கிடைத்தாலும், திருமணம் ஆனாலும் நீங்கள் பதிவுலகை விட்டுப் போக மாட்டீர்கள் எனக்குத் தெரியும். ஏனென்றால் அங்கிருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த OUTLET இதுதான் எங்களுக்கெல்லாம்.
வாழ்த்துக்கள்.
100க்கு வாழ்த்துக்கள் பிரபா....
ஐபிஎல் ஏலத்தை பற்றி எழுதுவீங்கனு எதிர்பார்த்தேன்.... எப்போ எழுதறிங்க.....
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிகிறேன் பிரபாகர்...
100 கமெண்ட்ஸ் வரட்டும் ...
வாழ்த்துக்கள்...
இந்தப்பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்...........
//பழைய இடுகைகளை புரட்டிப் பார்க்கும்போது தான் சில விஷயங்கள் புரிகின்றன. ஆரம்ப காலத்தில் சில நல்ல சிந்தனைகளை எழுதி வந்த நான் காலப்போக்கில் சினிமா, நடிகை என்று தடம் மாறியிருக்கிறேன். மேலும் எனது பழைய நகைச்சுவை உணர்வு இப்போது என்னிடம் பெரிதளவு குறைந்துள்ளது. மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப முயல்கிறேன்//
முழுக்க ஆதரிக்கிறேன். நானும் தங்களது சில பதிவுகளைப்பார்த்து நீங்கள் மொக்கை பதிவுகள் தான் அதிகமாகப் போடுகிறீர்கள் என்று நினைத்தேன். மேலே உள்ள வரிகளில் உள்ளது போன்ற எழுத்தையே நான் எதிர்பார்க்கிறேன்.
அம்மா பங்காருவின் காலைக் கழுவி விடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
நன்றி நண்பரே ..
ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . ..
பகிர்வுக்கு நன்றி
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் :)
அம்மாடி எவ்ளோ பெரிய பதிவு....
நூறாவது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், பிரபா!! மேலும் தொடர்ந்து எழுதுங்கள்..!!
Congrats
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
நூறாவது பதிவிற்காக என் வாழ்த்துக்கள்....பல ஆயிரம் பதிவுவரை நீ போட என் வாழ்த்துக்கள் பிரபா....
"ஆரம்ப காலத்தில் சில நல்ல சிந்தனைகளை எழுதி வந்த நான் காலப்போக்கில் சினிமா, நடிகை என்று தடம் மாறியிருக்கிறேன். மேலும் எனது பழைய நகைச்சுவை உணர்வு இப்போது என்னிடம் பெரிதளவு குறைந்துள்ளது. மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப முயல்கிறேன்."
உங்கள் சுய பரிசோதனை பாராட்டுதலுக்குரியது . எழுத்தாளனுக்கு எப்பொழுதும் சுய பரிசோதனை ( தன் ஆழ்முகத்தை பார்க்கும் ) என்பது அவசியம் . இந்த சிறிய வயதில் மெச்ச கூடிய குணாதிசயம் கொண்ட எழுத்துலக நண்பன் பிரபாகரன் அவர்களை மனதார பாராட்டுகிறேன்........
"நாளைக்கே வேலை கிடைத்துவிட்டாலோ அல்லது திருமணம் போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிட்டாலோ பதிவுலகில் இருந்து ஒரேயடியாக விலகினாலும் விலகுவேன்."
என்னுடை வாழ்க்கை என் எழுத்தை திசை மாற்றவில்லை ,குழி தோண்டி புதைத்து விட்டது தற்போது மீண்டு வந்துள்ளேன். தயவு செய்து இதை போல் எண்ணம் இருந்தால் மாற்றி கொள்ளுங்கள் என்னை போன்று இன்னொரு( பாலா )பிரபாவை பார்க்க விரும்பவில்லை. நீங்கள் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் முன்பே பதிவுலகில் பிரபலம் ஆகி விட்டீர்கள் அதனால் வேலையின்(வாழ்கையின் ) ஊடே உங்கள் எழுத்துக்களை தொடர என் வாழ்த்துகள் நண்பா !...
உங்கள் எழுத்துகளில் ஆதங்கமும் , அறுசுவையும் நிறைதிருகின்றது.
மென்மேலும் தொடர வாழ்த்துகள் ........
நல்ல வேலை, அமைதியான வாழ்க்கை, நல்ல மணைவி அமைய வாழ்த்துகிறேன.
வாழ்த்துக்கள் தம்பி
மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்
விஜய்
திருமணம்,வேலை போன்ற அசம்பாவிதங்கள் நடந்தேறினாலும் தொடர்ந்து எழுத வேண்டும் என வேண்டவில்லை கட்டளையிடுகிறேன்.. மேலும் நானும் உங்கள போல தான் இன்னும் ரெண்டு வருசம் கழித்து தான் 100வது பதிவு போடுவேன்னு நினைக்கிறேன்.. ஒருவேலை அதுவரைக்கும் எழுதாம கயிண்டுகலாம்னு பாத்தீங்கன்னா அப்பரம் உங்க நிம்மதியான வாழ்க்கைக்கு நான் காரண்ட்டி கிடையாது அம்புட்டுதான்..
100TH POST... CONGRATS..
>>>நாளைக்கே வேலை கிடைத்துவிட்டாலோ அல்லது திருமணம் போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிட்டாலோ பதிவுலகில் இருந்து ஒரேயடியாக விலகினாலும் விலகுவேன்.
HA HA HA IT IS IMPOSSIBLE.
>>>பக்தகேடிகள் யாரவது இதற்கு பதில் சொல்ல விரும்பினால் சொல்லலாம்.
GOOD TIMING
>>>பன்னாடுகளில் உள்ள பன்னாடை
VERY GOOD.
>>>ஆனால் "நித்தி சரியில்லை ஜக்கியிடம் போவோம்" என்று சென்றால் பிள்ளைவரம் வாங்கிக்கொண்டு திரும்பவேண்டியதுதான்.
CORRECT
>>>மக்கள் பெரியவா... பெரியவா... என்று இவன் பக்கம் போய்விடக்கூடாது என்பதே என் பெரிய அவா
S S , VAARTHTHAI JAALAM
PLS NOTE DOWN THE VIKKI ULAKAM ADVICE ALSO..
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா
இதைத்தான் பிரித்து மேய்வது என்பது நூறாவது பதிவில் புகுந்து விளையாடி இருக்கிங்களே நல்ல இருக்கு தல . வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள்...!
நூறு...உங்களுக்கு கேள்வியையும், பதிலையும் சேர்த்தே வழங்கி இருக்கிறது. காலம் நம்மை வெகு சுலபத்தில் எங்கேயோ அழத்துச் சென்று விடுகிறது, சுயபரிசோதனை செய்து நேர் செய்யும் வாய்ப்புகள் அனைவருக்கும் கிட்டுவதில்லை.
வாழ்த்துக்கள் நண்பா... இன்னும் அதிகம் அதிகம் எழுதுங்கள்.
பின்னூட்டம் போடாவிடினும், உங்களது அநேகமான பதிவுகளை வாசித்திருக்கிறேன், காரணம் அதிகமாக கூகுல் ரீடரில்தான் வாசிக்கிறேன்
////நாளைக்கே வேலை கிடைத்துவிட்டாலோ அல்லது திருமணம் போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிட்டாலோ பதிவுலகில் இருந்து ஒரேயடியாக விலகினாலும் விலகுவேன். ////
நூறாவது பதிவிலேயே எங்களை கவலைப்பட வைத்து விட்டீர்கள். அது என்னானா பதிவுலகிலிருந்து விலகினாலும் விலகி விடுவேன் என்பதுதான். கவலை வேண்டாம் நண்பா, நானும் திருமணம் ஆனவன் தான், ஷிப்ட் வேலைக்கு செல்பவன் தான், இவைகளுக்கிடையே தான் பதிவுகளையும் எழுதிக் கொண்டிருக்கிறேன், SO அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்.
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்
வாழ்த்துகள் தோழரே....
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே...
#மக்கள் பெரியவா... பெரியவா... என்று இவன் பக்கம் போய்விடக்கூடாது என்பதே என் பெரிய அவா.#
மிக அழகான எழுத்துநடை....சூப்பர்.
100க்கு வாழ்த்துகள்! எல்லாரையும் திட்டியே இந்தப் பதிவு போட்டிருக்கீங்க போல. பெரிய புரட்சிகாரரின் பதிவை படிப்பதில் சந்தோசமே .
பதிவு நூறில், முந்தைய பதிவுகளின் சாறினை
கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, பறிமாறியது,
இனிமை! தொடர்ந்திடுங்கள்; வாழ்த்துக்கள்!.
இந்த நகைச்சுவையையும் படியுங்களேன்.
'நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும்!'
!
சாரி பிரபா நான் கொஞ்சம் லேட்
நூறு பலநூறு படைக்க சிறந்த படைப்புகளை சிந்தித்து படைக்க என் வாழ்த்துக்கள் என்றென்றும் உண்டு
வாழ்த்துக்கள் நண்பா! உங்களுக்குள் ஒரு நகைச்சுவையாளன், சிந்தனையாளன்,எழுத்தாளன்,கலகக்காரன் என எல்லோரும் இருப்பதை உங்கள் இடுகைகளிலிருந்து உணர முடிகிறது... உங்களில் உள்ள இவர்கள் அனைவருமே விரைவில் மிகவும் உயர்ந்த இடத்தினை அடையும் வாய்ப்பும் நிறையவே இருக்கிறது அதனால் தொடர்ந்து எழுதவும்...வலைப்பதிவுகளை தாண்டிய அங்கீகாரம் உங்களுக்காக காத்திருக்கிறது வாழ்த்துக்கள்!
Great da !! Keep up d gud work !!
வாழ்த்துகள் பிரபாகர்.
100 வது பதிவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தல பதிவில் சிந்தனையை கலந்து பின்னால் நடந்த விஷயங்களை முன்நோக்க வச்சீங்களே அருமை!!
100-க்கு வாழ்த்துகள். இன்னும் அசத்தலா தொடருங்க!!
கல்யாணம் முடிந்தா ஏன் விலகனும். அப்பதானே நிறையவிஷயங்களை பகிர்ந்துக்க முடியும் :-)
@ ம.தி.சுதா, சேட்டைக்காரன், எப்பூடி.., கே.ஆர்.பி.செந்தில், மூன்றாம் கோணம், தோழி பிரஷா, முத்துசிவா, SUREஷ் (பழனியிலிருந்து), பார்வையாளன், வருண், ரஹீம் கஸாலி, தமிழ்த்தோட்டம், Chitra, விக்கி உலகம், அவிய்ங்க ராசா, Sukumar Swaminathan, டக்கால்டி, THOPPITHOPPI, மனசாட்சி, எல் கே, Cable Sankar, சி.பிரேம் குமார், ஜீ..., ஜோதிஜி, ஜாக்கி சேகர், பதிவுலகில் பாபு, அருண் குமார், Ananthi (அன்புடன் ஆனந்தி), ManojKumar, Samudra, அஞ்சா சிங்கம், தங்கம்பழனி, Jana, மங்குனி அமைச்சர், ஆதவா, நா.மணிவண்ணன், அஹமட் சுஹைல், புதிய மனிதா, Speed Master, ஜி.ராஜ்மோகன், பன்னிக்குட்டி ராம்சாமி, பிரபு எம், சிவகுமாரன், அருண் பிரசாத், Kousalya, ஆகாயமனிதன்.., தமிழ் உலகம், yeskha, sakthistudycentre.blogspot.com, Subankan, Arun Prasath, சிவகுமார்(சென்னை), middleclassmadhavi, எஸ்.கே, Pari T Moorthy, bala, விஜய், தம்பி கூர்மதியன், சி.பி.செந்தில்குமார், இரவு வானம், !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫, Sathish Kumar, யோ வொய்ஸ் (யோகா), தமிழ்வாசி - Prakash, கோவை ஆவி, நேசமுடன் ஹாசிம், NKS.ஹாஜா மைதீன், ILA(@)இளா, NIZAMUDEEN, தினேஷ்குமார், யோவ், prak, Starjan ( ஸ்டார்ஜன் ), இளம் தூயவன், எம் அப்துல் காதர்
வருகை தந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ ம.தி.சுதா
// வாறவளை முற்கூட்டியே அறிவுறுத்தி தேர்ந்தெடுங்க பிபி. //
வாரவளை ஏற்கனவே தேர்ந்தேடுத்தாச்சு மதி... அறிவுறுத்துகிறேன்...
@ சேட்டைக்காரன்
// இது போன்றவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் நண்பரே! ஒப்பீடுகளே வேண்டாம். நம் பணி அல்லது பொழுதுபோக்கு இடுகை எழுதிக்கிடப்பதே என்ற அளவில் இருப்போம். தொடர்ந்து தூள் கிளப்புங்கள்! //
ச்சே... ச்சே... அதுகுறித்து கவலை எதுவும் இல்லை சேட்டை... சும்மா ஒரு ஒப்பீடுதான்... அதுசரி நான் எழுதிய பின்னூட்டத்திற்கு பதிலளிக்கவில்லையே... பதிலளிக்க மாட்டீர்கள்... அப்படித்தானே...
@ SUREஷ் (பழனியிலிருந்து)
// எங்க ஊரில் ரெண்டும் ஒன்றுதான் //
ஹா... ஹா... ஏங்க ஊரில் கூட இரண்டும் ஒன்றுதான்... ஆனால் இந்த இடத்தில் காலைக் கழுவுவது என்பது பாத பூஜை என்று சொல்லப்படும் பாழாய்ப்போன சடங்கை குறிக்கிறது...
@ விக்கி உலகம்
// உங்கள் வளர்ச்சிக்கு என் பாராட்டுக்கள்.....அதே நேரம் கொஞ்ச நயமாகவும் சொல்வது நாகரிகம் என்று நினைக்கிறேன்.....
ஆபாசத்தை யார் சொன்னாலும் அது மக்களின் மனத்தை பதிக்கவே செய்யும்..... //
சரி அண்ணா உங்கள் அறிவுரைக்கு நன்றி... இனி அதுபோன்ற சொற்களை தவிர்க்க முயல்கிறேன்... என்ன செய்வது சமூகத்தைப் பற்றியும் சாமியார்களைப் பற்றியும் எழுதும்போது என்னை அறியாமல் அப்படிப்பட்ட சொலவடைகள் அருவி போல பொழிகிறது...
// ஏனப்பா நாங்கல்லாம் வேலைவெட்டி இல்லாம தான் பதிவேழுதுரோம்னோ, இல்ல என் மனைவி நான் பதிவுலகத்துல இருந்தாதான் அவங்களுக்கு மதிப்புன்னு என்னை விட்டுவச்சி இருக்காங்களோன்னு நினைக்கிறீங்களா....... //
சரிதான்... நம்ம சூழ்நிலை, வாழ்க்கைமுறை எப்படி அமையப்போகுதுன்னு தெரியல... பொறுத்திருந்து பார்ப்போம்...
என்னுடைய “அன்புள்ள அம்மாவுக்கு” பதிவைப் படித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி... நான் கொஞ்சம் சென்சிடிவ் என்பது உண்மைதான்...
@ மனசாட்சி
// ஏதோ பதியனுமேனு பதிந்த உமது பதிப்புக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் //
இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு சரிவர விளங்கவில்லை...
@ ஜாக்கி சேகர்
// நீ மேல்மருவத்தூர் என்ஜினியரிங்க காலேஜ்ல படிச்சியோ?? //
இல்லை ஜாக்கி... நான் ஆண்டாள் அழகர் கல்லூரியில் (விஜயகாந்த் கல்லூரி) படித்தேன்... நீங்கள் கூட உங்கள் மருமகன் அங்கு படிப்பதாக ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தீர்களே...
என்னுடைய “அன்புள்ள அம்மாவுக்கு” பதிவைப் படித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி... நிறைய பேச நேரம் இருக்கும்போது உங்களை அழைக்கிறேன்...
@ புதிய மனிதா
// நன்பரே, நான் உங்களுக்கு ஆருதல் சொல்லுமலவிற்கு பெரியவன் அல்ல. இப்ப வந்த சிறியவன். எனக்கு வயது 16 தான் ஆகிறது. ஆனாலும் நான் மனம் வருந்துகிறென். உங்கள் கவலையைப்பற்றி நினைத்தல்ல. அனுபவம் வாய்ந்த நீங்களா? இப்படி கூறுகிறீர் என்று. நான் சிரிப்பவன். நீங்கள் சிரிக்க வைப்பவன். பெரியவர் நீங்கள்தான் 100,200,300 பதிவுகள் இடும் பதிவாளர்களைவிட. மனம் வருந்தாதீர். நான் என்றும் உங்களுடன். (பிழைகள் ஏதுமிருப்பின் மண்ணிக்கவும்.) //
அப்படின்னா என்னைவிடவும் இளையவரா நீங்கள்... பொறாமைப்படுகிறேன்.... உங்கள் ஆறுதலுக்கு நன்றி...
@ சிவகுமாரன்
// எனக்குப் பிடித்தது நைட் ஷிப்ட் பற்றிய பதிவு.நானும் அப்படித்தான் ஊரெல்லாம் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நான் நைட் ஷிப்டில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தேன். //
விரிவான பின்நூட்டமிட்டதற்கு நன்றி... நீங்களும் கால் செண்டர் ஊழியரா...? நல்லது... ஆனால் நான் இப்போது வேலையிலிருந்து விலகிவிட்டேன்...
@ அருண் பிரசாத்
// ஐபிஎல் ஏலத்தை பற்றி எழுதுவீங்கனு எதிர்பார்த்தேன்.... எப்போ எழுதறிங்க..... //
அதுபற்றி இன்னும் கொஞ்சம் செய்தி சேகரிப்பு செய்ய வேண்டி இருக்கிறது நண்பரே... மேலும் அதற்கு முன்னரே வெளியிட வேண்டிய இடுகைகள் சில இருக்கின்றன... இன்னும் சில தினங்களில் எழுதிவிடுகிறேன்....
@ yeskha
// முழுக்க ஆதரிக்கிறேன். நானும் தங்களது சில பதிவுகளைப்பார்த்து நீங்கள் மொக்கை பதிவுகள் தான் அதிகமாகப் போடுகிறீர்கள் என்று நினைத்தேன். மேலே உள்ள வரிகளில் உள்ளது போன்ற எழுத்தையே நான் எதிர்பார்க்கிறேன். //
உண்மையைச் சொன்னதற்கு நன்றி எஸ்கா... மாற்றிக்கொள்ள முயல்கிறேன்... எனினும் சமீபகாலமாக சினிமா ஆர்வம் அதிகரித்துவிட்டது...
@ bala
// என்னுடை வாழ்க்கை என் எழுத்தை திசை மாற்றவில்லை ,குழி தோண்டி புதைத்து விட்டது தற்போது மீண்டு வந்துள்ளேன். தயவு செய்து இதை போல் எண்ணம் இருந்தால் மாற்றி கொள்ளுங்கள் என்னை போன்று இன்னொரு( பாலா )பிரபாவை பார்க்க விரும்பவில்லை //
என்ன பாலா நிறைய பார்த்துவிட்டீர்கள் போல... விருப்பமிருந்தால் தனி மெயிலில் நீங்கள் கடந்து வந்த பாதையை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
@ தமிழ்வாசி - Prakash
// நூறாவது பதிவிலேயே எங்களை கவலைப்பட வைத்து விட்டீர்கள். அது என்னானா பதிவுலகிலிருந்து விலகினாலும் விலகி விடுவேன் என்பதுதான் //
இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே...
// நானும் திருமணம் ஆனவன் தான், ஷிப்ட் வேலைக்கு செல்பவன் தான், இவைகளுக்கிடையே தான் பதிவுகளையும் எழுதிக் கொண்டிருக்கிறேன், SO அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம் //
பார்த்தா சின்னப்பையன் மாதிரி இருக்கீங்க... ஆனா நீங்க உண்மையிலேயே திறமைசாலி தான்...
சுய பரிசோதனை சூப்பர் பிரபா ! அதன்படியே சிறக்க வாழ்த்துக்கள் !!
அனைத்தும் அருமை பிரபாகர்.
மனித நலன்,நேயம்,பண்பாடு பற்றிய சிந்தனை,கவலையுடன் நகைச்சுவை கலந்து எழுதும் தங்களைப் போன்றோர் இப்பதிவுலகிற்கு அவசியம், தொடர்ந்து எழுதுங்கள். அ.கா. சொன்னது போல கல்யாணத்திற்கப்புறம் எழுதுவதற்கு விஷயங்கள் நிறைய தோணும் :)
நூறாவது பதிவுக்கு நூற்றியொரு கமெண்ட்ஸ். நான் நூற்றி ரெண்டாக்கும்.
ஒரே நேரத்தில் உங்களின் பல இடுகைகளை படித்த மாதிரி இருந்தது.
நூறாவது பதிவிக்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
//கல்யாணம் முடிந்தா ஏன் விலகனும். அப்பதானே நிறையவிஷயங்களை பகிர்ந்துக்க முடியும் :-)//
நிறைய சோக கதைகளை எழுதலாம்..
ஒரே நேரத்தில் பல பதிவுகள்படித்ததுபோலைருக்கு.100-வதுபதிவுக்குவாழ்த்துக்கள்.
கொஞ்சம் லேட் ஆ விஷ் பண்றேன்...வாழ்த்துக்கள் பிரபா...எனக்கு அந்த cleopatra பதிவு ரொம்ப பிடிச்ச பதிவுகளில் ஒன்று...:))
100 க்கு வாழ்த்துக்கள் .
// நானும் திருமணம் ஆனவன் தான், ஷிப்ட் வேலைக்கு செல்பவன் தான், இவைகளுக்கிடையே தான் பதிவுகளையும் எழுதிக் கொண்டிருக்கிறேன், SO அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம் //
பார்த்தா சின்னப்பையன் மாதிரி இருக்கீங்க... ஆனா நீங்க உண்மையிலேயே திறமைசாலி தான்.../////
பதிவுலகைப் பொறுத்த மட்டில் நான் சின்னப்பையன் தான்.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
congrats for ur 100th post.. Be humble u ill reach many heights...
congrats for 100th post.. Stay humble..
@ பன்-பட்டர்-ஜாம், அரபுத்தமிழன், ஆதி மனிதன், பாரத்... பாரதி..., Lakshmi, ஆனந்தி.., நண்டு @நொரண்டு -ஈரோடு, Harini Nathan, pavi
வருகை தந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ ஆனந்தி..
// எனக்கு அந்த cleopatra பதிவு ரொம்ப பிடிச்ச பதிவுகளில் ஒன்று...:)) //
நன்றி மேடம்... மறுபடி ஒரு கிளியோபாட்ரா பதிவு வர இருக்கு மிஸ் பண்ணிடாதீங்க....
100வது பதிவுக்கு வாழ்த்துகள் பிரபா
சமீபத்திய புதுவரவுகளில் நீங்கள் ரசிக்கவைக்கும் பதிவுகள் எழுதி பிரகாசமாகிவருகிறீர்கள் இன்னும் வளர வாழ்த்துகள்!
/////என் தமிழ் மக்களுக்கு எப்போதுமே ஞாபக மறதி ரொம்ப அதிகம்.////அருமை, 100 வது பதிவு வாழ்த்துக்கள்
கொஞ்சம் லேட்டா படிச்சாலும், படிக்க சுவையாய் இருந்தது.
@ ந.ர.செ. ராஜ்குமார்
// கொஞ்சம் லேட்டா படிச்சாலும், படிக்க சுவையாய் இருந்தது. //
என்னது கொஞ்சம் லேட்டா...? உங்களுக்கே அநியாயமா தெரியல...
வாழ்த்துக்கள் அண்னா...
Post a Comment