வணக்கம் மக்களே...
முதலில் அனைவருக்கும் கேப்பி நியூ இயர்...
புத்தாண்டு முதல்நாளில் பதிவெழுதாதை நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. எனினும் வலைப்பூவின் மேம்பாட்டுக்காக இரண்டு நாட்களாக கடுமையாக உழைத்திருக்கிறேன். புதுப்பொலிவுடன் மீண்டும் வந்திருக்கிறேன். அதற்காக எனக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
1. டெம்ப்ளேட் மாற்றம்
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக டெம்ப்ளேட் மாற்றம் குறித்து சிந்தித்து வருகிறேன். நான் கொஞ்சம் கலர்புல்லான ஆளு. என்னுடைய டெம்ப்ளேட்டும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று விரும்புவேன். அதிலும் கறுப்பு நிற பின்னணியில் கலர் கலரான எழுத்துக்களோடு அமைய வேண்டுமென்று கருதினேன். அங்க சுத்தி இங்க சுத்தி கடல் நீலம் – கறுப்பு காம்பினேஷனில் ஒரு அருமையான டெம்ப்ளேட்டை தேடிப்பிடித்து வைத்திருந்தேன். ஆனால் பதிவர்கள் ம.தி.சுதா உட்பட நிறைய பேர் கறுப்பு நிற பிண்ணனி வேண்டாம் என்று கூறியதாலும் மேலும் மூன்றாம் தரப்பு டெம்ப்ளேட்டுக்களை தவிர்த்து ப்ளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டையே பயன்படுத்தினால் சிறப்பாக இருக்குமென்று கருதியதாலும் இந்த டெம்ப்ளேட்டை தேர்ந்தேடுத்திருக்கிறேன்.
நம்முடைய டெம்ப்ளேட் நமக்கு பிடித்திருகிறதா என்பது முக்கியமில்லை. நம் வாசகர்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதே முக்கியம்.
டெம்ப்ளேட் மாற்றம் குறித்து பதிவு ஒன்றினை எழுதி தெளிவுப்படுத்திய LK அவர்களுக்கும், புத்தாண்டன்று பின்னிரவு தாண்டியும் பின்னூட்டங்கள் மூலமாக தகவல் தந்த “கனவுகளே..,” SUREஷ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
2. பின்தொடர்பவர்கள் பட்டியல்
எனது வலையுலக வாழ்க்கைக்கு தூண்களாக விளங்கி வரும் பின்தொடர்பவர்களை முன்னிலை படுத்த விரும்பியே இந்த “followers widget” மாற்றம். இப்போது வைத்திருக்கும் அளவின படி பின்தொடர்பவர்கள் அத்தனை பேரும் முகப்பு பக்கத்தில் தெரிவார்கள். ஆனால் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்போது இதே மாதிரி வைக்க முடியுமா என்பது தெரியவில்லை. மேலும் இந்தமாதிரி வைப்பதன் மூலம் தளத்தின் வேகம் குறைவது போல தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
3. ப்ரோபைல் பக்கம்
சில மாதங்களுக்கு முன்பு அனானி அன்பர் ஒருவர் என் முகம் குரங்கு போல இருக்கிறது, பிஞ்ச செருப்பு மாதிரி இருக்கிறது என்று அவ்வப்போது பின்னூட்டத்தில் புகழ்ந்துவிட்டு செல்வார். அவருக்கு அதில் என்ன சந்தோசம் என்று தெரியவில்லை. மனப்பிறழ்வு ஏற்பட்ட சிலர் அடுத்தவரை தாக்கி குளிர் காய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். எனினும், அவரது வார்த்தைகளில் கொஞ்சம் உண்மையும் இருப்பதாகவே தோன்றியது. சரி, நம் வாசகர்களுக்கு ஏன் அப்படி ஒரு கஷ்டம் கொடுக்க வேண்டும் என்று ப்ரோபைல் படத்தை மாற்றிவிட்டேன். இப்போது என்னுடைய ரோல்மாடலாக நான் நினைப்பவர்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன்.
4. ஐகான் மாற்றம்
டெம்ப்ளேட் மாற்றுவதற்கு எப்படி சிரமப்பட்டேனோ அதே போல வலைப்பூவிற்கு பொருத்தமான ஐகான் தேடுவதற்கும் ரொம்ப சிரமப்பட்டேன். எப்படியோ கூகிள் பூரா அலசி ஆராய்ந்து இந்த ஆரஞ்சு நிற இதயத்தை கண்டுபிடித்தேன். இதை மாற்றுவதற்கு எனக்கு உதவியாய் இருந்த ஆங்கில வலைத்தளம் “Blogger Tricks” குழுமத்தினருக்கு எனது நன்றிகள்.
5. நண்பர்களுக்கு இணைப்பு
சைட் பாரில் நான் விரும்பி படிக்கும் நண்பர்களது வலைப்பூக்களுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். ஐம்பதிற்கும் மேற்பட்ட நண்பர்கள் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள் எனினும் லேட்டஸ்டாக பதிவு எழுதிய இருபத்தி ஐந்து நண்பர்கள் மட்டும் இங்கே தோன்றுவார்கள். மேலும் எனக்கு பிடித்த பிரபல பதிவர்கள் பத்து பேரின் பதிவுகளுக்கும் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.
இது தவிர்த்து ஷேர் பட்டன்ஸ் இணைப்பது, மொபைலுக்கு ஏற்ற வண்ணம் டெம்ப்ளேட் அமைப்பது, லிங்குகள் அனைத்தையும் புது விண்டோவில் திறக்க வைப்பது என்று நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறேன். இனி வரும் நாட்களில் மேலும் பல மாற்றங்களை செய்யவேண்டி இருக்கிறது.
ஒரு சந்தேகம்:
ப்ளாக்கர் பக்கத்தில் “ADD NEW PAGE” என்றொரு ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷனின் பயன்பாடுகள் என்ன என்பது எனக்கு புலப்படவில்லை. அதை யாராவது தெளிவாக விளக்கிச் சொல்லவும்.
பொதுவாக இந்த மாற்றங்கள் அனைத்திற்கும் உதவியாக இருந்த தமிழ் வலைத்தளங்கள்:
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
டிஸ்கி: பதிவுக்கு மேலொன்றும் கீழோன்றுமாக இரண்டுமுறை ஒட்டுப்பட்டைகளை நிறுவ சொல்லிக்கொடுத்த Starjan அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்... இப்போ பதிவை படிச்சிட்டும் ஓட்டு போடலாம்... ஓட்டு போட்டுட்டும் பதிவை படிக்கலாம்...
|
64 comments:
கண்ணை உறுத்தாத அருமையான வடிவமைப்பு. சூப்பர். புத்தாண்டில் கலக்க வாழ்த்துக்கள்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
டெம்ப்ளேட் எளிமையாக.. நல்லா இருக்கு..
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பிரபாகரன்..
நல்லா இருக்குங்க டெம்ப்ளேட்
கலக்குங்க ..!!
புத்தாண்டுல புதுசு..!! :-)
படிக்க எளிதாக இருக்கிறது. மாற்றத்திற்கு நன்றி
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது. தங்களின் டெம்ப்ளேட் மாற்றம் வரவேற்கத்தக்கது.... இப்போது தான் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஒரு லோகோ சேர்த்தால் நலம்... லோகோ வேண்டும் எனில் ஒரு எளிமையான லோகோவை என்னால் செய்து தர முடியும்.
ADD NEW PAGES என்பது புதிய பக்கங்களை உருவாக்குவது. சில பேர் அல்லது சில தளங்கள் NEW PAGE-யில் எம்மைப்பற்றி என உருவாக்கி அவர்களைப் பற்றி சிறுக் குறிப்பு வைப்பார்கள். அதே போல blogger-யில் 10 பக்கங்கள் வரை உருவாக்கலாம். அதை மெனுக்களாக (MENUS) தளத்தில் காட்டலாம்.....
மேலும் சந்தேகம் இருந்தால் என்னைக் கேட்கலாம். தெரிந்த வரை உதவுவேன்.... நன்றிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள்
அழகான வடிவமைப்பு.. கண்களுக்கு எரிச்சலாக இல்லாமல், இயல்பாய் இருக்கிறது.. வாழ்த்துக்கள் பிரபாகரன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்
படிக்க இலகுவா, உறுத்தாமல் இருக்கு! வாழ்த்துக்கள்!
super pirapaa
wait. i will come back
கண்ணை உறுத்தாத மாற்றங்கள்.... புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என்ன ஆனாலும் ஆரஞ்சு கலர விட மாட்டீங்க போல :-) நல்லா இருக்குங்க பிரபா புத்தாண்டு வாழ்த்துக்கள்
டெம்ப்லேட் மாற்றம் நல்லாருக்கு .வாழ்த்துக்கள்
ஓகே கலக்குங்க பிரபா புத்தாண்டு வாழ்த்துக்கள்
நிஜமாவே பொலிவுதான்..... நல்ல மாற்றம்... புத்தாண்டு வாழ்த்துகள்....!
இது நல்லா குளிர்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் ........................
யப்பா.!!! இப்ப தான் உங்க ப்ளாக்க உத்து பாக்காம படிக்கிறன்.. நான் பாத்ததிலே இந்த புத்தாண்டுக்கு நல்ல மாற்றம் தங்களது தான்.. சிம்பிள் அண்ட் பெஸ்ட்.. கமெண்ட் பாலோ அப் கொடுத்தது இன்னும் சிறப்பு... ஆனா தப்பு பண்ணிட்டீங்க.. இத கொடுத்தா நீங்க பதில் பின்னூட்டம் போடும் வரை உங்க ப்ளாக்க எட்டி கூட பாக்கமாட்டாங்க.. இது இல்லைனா பதில் போட்டிருக்காங்களான்னு பாக்குறதுக்கே நிறைய பேர் வருவாங்க.. ட்ராபிக் ஏறும்ல.. புதுவருடத்தில் கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் பெற்ற முன்னேற்றத்தோடு டபுள் மடக்கு முன்னேற வாழ்த்துக்கள்.. இருந்தாலும் நீங்க கேபிள் அண்ணன் தான் தங்களுக்கு முதல் போட்டினு மெயில் அனுப்புனீங்களே அது மனசுக்கு வருத்தமா இருக்கு...(நாராயணா.! நாராயணா.!)
டெம்ப்ளேட் எளிமையாக.. நல்லா இருக்கு..
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பிரபாகரன்..
மிகவும் அருமையா இருக்கு.
எளிமையான மற்றும் சிறந்த வடிவமைப்பு. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள், பிரபா!
nice one ! happy new year to you!
புதிய மாற்றங்கள் நன்றாக உள்ளன
புது வருடத்திலிருந்து முன்பை விட அதிகமாக கலக்க வாழ்த்துக்கள்.....
வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. நிறைய நேரம் ஒதுக்கியிருப்பது நன்றாகத்தெரிகிறது. வரும் நாட்களில் சிறப்பான பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம். தொடரட்டும் உங்கள் பயணம்.
எல்லாம் சரிதான்...ஆனால் அந்த மெகா followers widget தான் கொஞ்சம் பயமுறுத்துது...:)) அதை நீட் ஆ சின்னதா போட்டால்...இன்னும் அழகாய் இருக்கலாம்...:)))
புது வருடம் புது டெம்பிளட்
கலக்குற பிரபா
//பதிவர்கள் ம.தி.சுதா உட்பட நிறைய பேர் கறுப்பு நிற பிண்ணனி வேண்டாம் என்று கூறியதாலும்//
சுதா சொல்லிதான் நானும் வலை டெம்பிளேட்டை மாற்றினேன்
நண்பேன்டா.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரபா
புது வருடத்தில் புதிய மாற்றங்களுடன்....வெரி நைஸ்.....
தங்களுடைய டெம்ளேட் மற்றும் ப்ரோபையில் பிக்சர் பற்றி உங்களது முன்னைய பதிவில் பின்னூட்டியுள்ளேன்.
இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
முடிந்தால் ப்ரோபைல் பிக்சராக உங்களது படத்தை மீண்டும் போடுங்கள்.
முடிந்தால் ப்ரோபைல் பிக்சராக உங்களது படத்தை மீண்டும் போடுங்கள்"
yes... please bring it back...
முதலிலேயே பார்த்து விட்டேன். ஆனால் கடந்த இரு தினங்களா என்னால comment போட முடியல.. அதான்....
மாற்றம் அருமை.....
மீண்டும் Profile படமாக உங்கள் படத்தை போடவும்...
அட நம்ம பக்கம் வந்து மாற்றத்தை பத்தி கருத்து சொல்லிட்டு போங்க.....
புது டெம்ப்ளேட் நன்றாக உள்ளது. சிறு மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும். சைடில் வரும், ப்ளாக் லிஸ்டில் வெறும் பதிவு பெயர் லிங்குடன் குடுத்தால் போதும். அந்த சம்மரி வருகிறதே அதை நீக்கவும். அதேபோல் பாலோவர் லிஸ்ட்
புதிய மாற்றங்கள் நன்றாக உள்ளன.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்ககிட்ட ஒருவித "தாழ்வுமனப்பான்மை" உள்ளது தயவு செய்து இந்த புது வருடத்திலிருந்து அதனை விட்டு விடவும்.
யார் என்ன சொன்னாலும் நாம் அடுத்தவரை பார்க்காமல் நம் வழிப்பாற்பதே உத்தமம் மன்னிக்கவும் நண்பரே இது அட்வைஸ் அல்ல ஆற்றாமை.
1.மெகா followers widget ஐ சிறிதாக வைக்கவும் அதுதான் அழகு.
2."பழைய பேப்பர்" ஐ சைடுலயே வைக்கலாம்.
நீங்கள் குறிப்பிட்ட ப்ளொக்ஸ் பயன்படுத்தி நானும் கற்றுக் கொள்கிறேன். நன்றி பிரபா !
புதிய மாற்றங்கள் அருமை....
template s nice :) try 2 alter followers widget 2 anywere n side or at bottom
அனானிங்க ஆயிரம் சொல்வானுங்க அதுக்கெல்லாம் நம்மள மாத்திக்க முடியுமா :)
நண்பா.. இந்த டெம்ப்ளேட் நன்றாக உள்ளது..
உங்கள் படம் நன்றாகத் தான் இருந்தது நண்பா.. அதையே வைக்கலாம்..
நண்பர் இக்பால் செல்வன் சொன்னது போல, “ADD NEW PAGE” என்பது பக்கங்கள் ஆகும். அதில் நீங்கள் "About Me", "Contact Us" போன்ற பக்கங்களை உருவாக்கலாம். ஆனால் அந்த பக்கங்களில் வாசகர்கள் பின்னூட்டம் இட முடியாது.
எனது ப்ளாக்கின் சுட்டியை கொடுத்ததற்கு நன்றி, நண்பா!
ரொம்ப அருமையாக இருக்கிறது பிரபா.. அருமை... முக்கியமாக இப்போ தான் பின் ஊட்டம் தெளிவாக வாசிக்க முடிகிறது...
அதோட இப்ப உள்ள படம் நல்லாயிருந்தாலும் பழைய படத்தைப் பார்த்துத் தான் நான் உங்களை காதலிக்க இருந்தேன் அந்த அனானி வந்து என்னை காப்பாத்தி விட்டார்... ஹ...ஹ...ஹ...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
நண்பர் இக்பால் கூறியது போல நிலையான புதியப் பக்கங்களை உறுவாக்கலாம். உங்கள் பாலோயர்களை தனியாக கவுரவப் படுத்த அந்த add New pageஐ பயன்படுத்தலாம். இந்த பக்கத்தின் menuக்களை பார்த்தால் ஒரு புரிதல் கிடைக்கலாம்
நன்றி,
நண்பா! வடிவமைப்பு எளிதாகவும் நன்றாகவும் இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை pages பயன்பாடு முக்கியமானது நாம் பல பக்கங்களை உருவாக்கிக்கொண்டு அதில் தேவையானவைக்கு hide pages select பண்ணிக்கொண்டு அதன் url ஐ மட்டும் குறித்துக்கொண்டு menu bar உருவாக்கலாம். ஆனால் design -ல் அதனை pages எனும் gadget ஆக தொடர்ந்து வைத்துக்கொள்ளவும்.அது மட்டும்மின்றி பக்கங்களையே hosting website களுக்கு பதிலாக உபயோகப்படுத்தலாம். அதில் படங்களை upload பண்ணிவிட்டு அதன் url ஐ பயன்படுத்தி (என் blog -ல் வைத்திருப்பது போல்) மற்றவர் blog ல் இணைப்பு கொடுக்கும் image உருவாக்கலாம். இந்த last matter மட்டும் நானே கண்டுபிடிச்சதாக்கும் அதனால் அதனை எந்தளவுக்கு பயன்படுத்தலாம் என தொழில்நுட்ப பதிவு எழுதுபவர்களிடம் கேட்டு எனக்கும் சொல்லவும்.. வழக்கம் போல் புத்தாண்டிலும் பதிவுகள் நிறைய எழுதி அனைவரையும் தொடர்ந்து உற்ச்சாகப்படுத்துங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி!
அப்புறம் உங்கள் புகைப்படத்தையும் தொடர்ந்து பயன்படுத்துங்கள்... நல்லாதானே இருந்தது. பதிவர் சந்திப்புகளில் அறிமுகம் ஆக எளிதாய் இருக்குமே .
புத்தாண்டு வாழ்த்துகள் பிரபாகரன். டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது ஆனால் வேணாம் ஆயிரம் பேர் ஆயிரம் கருத்து சொல்வாங்க... உங்க மனசுக்கு பிடித்த மாதிரி அமையுங்கள் அதான் சரி...எல்லாரையும் திருப்தி செய்வது கடினம் :)) ஏதாவது பயனர் கஷ்டம் இருந்தால் கண்டிப்பாக மக்களிடமிருந்து வந்துவிடும் :))
@ ரஹீம் கஸாலி, பதிவுலகில் பாபு, சேலம் தேவா, பார்வையாளன், இக்பால் செல்வன், கவிதை காதலன், ஜீ..., சி.பி.செந்தில்குமார், வைகை, இரவு வானம், நா.மணிவண்ணன், dineshkumar, பன்னிக்குட்டி ராம்சாமி, அஞ்சா சிங்கம், தம்பி கூர்மதியன், சே.குமார், Lakshmi, சிவகுமார், குழந்தை நல மருத்துவன்!, ஆர்.கே.சதீஷ்குமார், NKS.ஹாஜா மைதீன், பாரத்... பாரதி..., ஆனந்தி.., டிலீப், தமிழ்வாசி, எப்பூடி.., Pari T Moorthy, எல் கே, விக்கி உலகம், பலே பாண்டியா/பிரபு, பன்-பட்டர்-ஜாம், ஆமினா, ஜில்தண்ணி - யோகேஷ், Abdul Basith, ம.தி.சுதா, நீச்சல்காரன், யோவ், Dubukku
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ இக்பால் செல்வன்
// லோகோ வேண்டும் எனில் ஒரு எளிமையான லோகோவை என்னால் செய்து தர முடியும். //
நீங்கள் favicon பற்றி குறிப்பிடுகிறீர்களா... இப்போதிருக்கும் ஆரஞ்சு நிற இதயமே எனக்கு திருப்தியாக இருக்கிறது... இருப்பினும் உங்கள் அன்புக்கு நன்றி...
// மேலும் சந்தேகம் இருந்தால் என்னைக் கேட்கலாம். தெரிந்த வரை உதவுவேன்.... நன்றிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள் //
ஆமாம்... நிறைய சந்தேகங்கள் உள்ளன... இருப்பினும் எனது சந்தேகங்கள் சிறுபிள்ளைத் தனமாக இருக்கும் எனவே தனி மெயிலில் கேட்கிறேன்...
@ தம்பி கூர்மதியன்
// கமெண்ட் பாலோ அப் கொடுத்தது இன்னும் சிறப்பு... ஆனா தப்பு பண்ணிட்டீங்க.. இத கொடுத்தா நீங்க பதில் பின்னூட்டம் போடும் வரை உங்க ப்ளாக்க எட்டி கூட பாக்கமாட்டாங்க.. இது இல்லைனா பதில் போட்டிருக்காங்களான்னு பாக்குறதுக்கே நிறைய பேர் வருவாங்க.. ட்ராபிக் ஏறும்ல.. //
பிளாக்கர் பத்தி நீங்க இன்னும்கூட தெரிஞ்சிக்கணும்... நான் இதற்கு முன்னாடி வைத்திருந்த பின்னூட்டப் பெட்டியில் கமென்ட் போடாமலே கமென்ட் சப்ஸ்க்ரிப்ஷன் வைத்துக்கொள்ளும் ஆப்ஷன் இருந்தது... இப்போதிருக்கும் முறையில் அப்படிப்பட்ட ஆப்ஷன் கிடையாது...
// இருந்தாலும் நீங்க கேபிள் அண்ணன் தான் தங்களுக்கு முதல் போட்டினு மெயில் அனுப்புனீங்களே அது மனசுக்கு வருத்தமா இருக்கு...(நாராயணா.! நாராயணா.!) //
இதை நீங்க நகைச்சுவையாக எழுதியிருக்கீங்கன்னு புரியுது... ஒருவேளை சீரியஸா எழுதியிருந்தா நானும் கொஞ்சம் சீரியசாவே சொல்றேன்... தயவு செஞ்சு இந்த மாதிரி வதந்திகளை பரப்பாதீங்க ப்ளீஸ்... உங்களுக்கும் எனக்கும் இது பொய்ன்னு தெரியும்... ஆனா மூனாவதா வர்றவங்களுக்கு உண்மை என்னன்னு தெரியாத பட்சத்தில் அவங்களா எதையாவது கற்பனை பண்ணிப்பாங்க...
@ ஆனந்தி..
// எல்லாம் சரிதான்...ஆனால் அந்த மெகா followers widget தான் கொஞ்சம் பயமுறுத்துது...:)) அதை நீட் ஆ சின்னதா போட்டால்...இன்னும் அழகாய் இருக்கலாம்...:))) //
கருத்துக்கு மிக்க நன்றி மேடம் முயற்சி பண்றேன்...
@ எப்பூடி.. & பார்வையாளன்
// முடிந்தால் ப்ரோபைல் பிக்சராக உங்களது படத்தை மீண்டும் போடுங்கள். //
என்னங்க பாஸ் இது... அநியாயமா இருக்கு... நீங்க மட்டும் உள்ளங்கையில உலகத்தையும், உள்ளங்கையில் ஒளிவிளக்கையும் ப்ரோபைல் படமா வச்சிருக்கீங்க... என்னை மட்டும் என்னோட போட்டோவை வைக்கும்படி கேட்கிறீர்கள்... ஏன் இந்த கொலைவெறி...
ஆரம்பத்துல கொஞ்சம் வித்தியாசமா தான் தெரியும் போகப்போக சரியா போயிடும்...
@ Pari T Moorthy
// மீண்டும் Profile படமாக உங்கள் படத்தை போடவும்... //
அது இனி வேண்டாமென்று கருதுகிறேன்...
// அட நம்ம பக்கம் வந்து மாற்றத்தை பத்தி கருத்து சொல்லிட்டு போங்க..... //
நிச்சயம் வருகிறேன்.
@ எல் கே
// சைடில் வரும், ப்ளாக் லிஸ்டில் வெறும் பதிவு பெயர் லிங்குடன் குடுத்தால் போதும். அந்த சம்மரி வருகிறதே அதை நீக்கவும். அதேபோல் பாலோவர் லிஸ்ட் //
பயனுள்ள ஆலோசனை... நான்கூட இடத்தை அடைக்கிறதேன்னு யோசிச்சேன்... மாத்திடறேன்...
@ விக்கி உலகம்
// உங்ககிட்ட ஒருவித "தாழ்வுமனப்பான்மை" உள்ளது தயவு செய்து இந்த புது வருடத்திலிருந்து அதனை விட்டு விடவும். //
என்னை இந்த அளவுக்கு உன்னிப்பாக கவனித்தது ஆச்சர்யம் அளிக்கிறது... மகிழ்ச்சி... எனினும் பதிவுலகத்தை பொறுத்தவரையில் இந்த தாழ்வு மனப்பான்மை அவசியமானது என்பதே ஆனது கருத்து...
// யார் என்ன சொன்னாலும் நாம் அடுத்தவரை பார்க்காமல் நம் வழிப்பாற்பதே உத்தமம் மன்னிக்கவும் நண்பரே இது அட்வைஸ் அல்ல ஆற்றாமை. //
சரிதான் நிச்சயம் முயல்கிறேன்... நீங்க அட்வைஸ் கூட பண்ணலாம்...
@ பலே பாண்டியா/பிரபு
// மெகா followers widget ஐ சிறிதாக வைக்கவும் அதுதான் அழகு. //
சரி... ஒரு வாரத்திற்குள் மாற்றுகிறேன்....
// "பழைய பேப்பர்" ஐ சைடுலயே வைக்கலாம். //
அது ஏனோ எனக்கு பிடிக்கவில்லை... கடைசியிலே இருக்கட்டுமே...
@ பன்-பட்டர்-ஜாம்
// நீங்கள் குறிப்பிட்ட ப்ளொக்ஸ் பயன்படுத்தி நானும் கற்றுக் கொள்கிறேன். நன்றி பிரபா ! //
ம்ம்ம்... மற்றவர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இணைப்பு கொடுத்திருக்கிறேன்...
@ ஜில்தண்ணி - யோகேஷ்
// template s nice :) try 2 alter followers widget 2 anywere n side or at bottom//
சரி ஜில்... மாற்ற முயல்கிறேன்... டுவிட்டரில் தங்களது சேவை அபாரமாக இருக்கிறது...
@ Abdul Basith
// நண்பர் இக்பால் செல்வன் சொன்னது போல, “ADD NEW PAGE” என்பது பக்கங்கள் ஆகும். அதில் நீங்கள் "About Me", "Contact Us" போன்ற பக்கங்களை உருவாக்கலாம். ஆனால் அந்த பக்கங்களில் வாசகர்கள் பின்னூட்டம் இட முடியாது. //
அதுபற்றி இன்னும்கூட தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்... பிற்பாடு மெயில் அனுப்புகிறேன்...
@ ம.தி.சுதா
// அதோட இப்ப உள்ள படம் நல்லாயிருந்தாலும் பழைய படத்தைப் பார்த்துத் தான் நான் உங்களை காதலிக்க இருந்தேன்//
ஆஹா அவனா நீ...
// அந்த அனானி வந்து என்னை காப்பாத்தி விட்டார்... //
அந்த அனானி காப்பாற்றியது உங்களை அல்ல... என்னைத்தான் :)))
@ நீச்சல்காரன்
// நண்பர் இக்பால் கூறியது போல நிலையான புதியப் பக்கங்களை உறுவாக்கலாம். உங்கள் பாலோயர்களை தனியாக கவுரவப் படுத்த அந்த add New pageஐ பயன்படுத்தலாம். இந்த பக்கத்தின் menuக்களை பார்த்தால் ஒரு புரிதல் கிடைக்கலாம்
நன்றி, //
ஆ... சூப்பர்... நீங்கள் வைத்திருப்பதை போலவே நானும் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்...
@ யோவ்
// அப்புறம் உங்கள் புகைப்படத்தையும் தொடர்ந்து பயன்படுத்துங்கள்... நல்லாதானே இருந்தது. பதிவர் சந்திப்புகளில் அறிமுகம் ஆக எளிதாய் இருக்குமே . //
முடிந்தால் தனியொரு ப்ரோபைல் பக்கம் உருவாக்கி அதில் எனது புகைப்படத்தை வெளியிடுகிறேன்...
மாற்றங்கள் புது போலிவைத்தருகிறது
உங்கள் புகைப்படத்தையும் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
Hi praba, Template is simply super,
better to see your blog nice touchings..
//பிளாக்கர் பத்தி நீங்க இன்னும்கூட தெரிஞ்சிக்கணும்... நான் இதற்கு முன்னாடி வைத்திருந்த பின்னூட்டப் பெட்டியில் கமென்ட் போடாமலே கமென்ட் சப்ஸ்க்ரிப்ஷன் வைத்துக்கொள்ளும் ஆப்ஷன் இருந்தது... இப்போதிருக்கும் முறையில் அப்படிப்பட்ட ஆப்ஷன் கிடையாது...//
ஓ..!! இது எனக்கு தெரியாம போயிடுச்சே..#வெட்கம்..
//இதை நீங்க நகைச்சுவையாக எழுதியிருக்கீங்கன்னு புரியுது... ஒருவேளை சீரியஸா எழுதியிருந்தா நானும் கொஞ்சம் சீரியசாவே சொல்றேன்... தயவு செஞ்சு இந்த மாதிரி வதந்திகளை பரப்பாதீங்க ப்ளீஸ்... உங்களுக்கும் எனக்கும் இது பொய்ன்னு தெரியும்... ஆனா மூனாவதா வர்றவங்களுக்கு உண்மை என்னன்னு தெரியாத பட்சத்தில் அவங்களா எதையாவது கற்பனை பண்ணிப்பாங்க...//
காமெடியா தான் சொன்னன்.. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.. முன்பே வந்து சொல்லியிருக்கனும்.. சபரிமலைக்கு சென்றதால் தாமதமாகிவிட்டது.. மன்னிகவும்.. மீண்டும் வருந்துகிறேன்..
Post a Comment