வணக்கம் மக்களே...
எனது வலைப்பூவின் டெம்ப்ளேட் மாற்றும் பணியில் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் ஆரம்பகால இடுகைகளையும் அவற்றிற்கு வந்த பின்னூட்டங்களையும் காண நேர்ந்தது. எனது பழைய இடுகைகள் பலவற்றிற்கும் போதிய வரவேற்பு கிடைக்காததில் எனக்கு கொஞ்சம் வருத்தமே. ஆனால் மீள்பதிவுகள் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நித்தியானந்தா குறித்த தினகரன் நாளிதழின் செய்தியினை பதிவாக வெளியிட்டிருந்தேன். அப்போது ரஞ்சிதா மேட்டரில் நித்தி செம பேமஸ். எனது அந்தப் பதிவில் சக பதிவர் ஒருவர் கவிதை ஒன்றினை பின்னூட்டமாக இட்டிருந்தார். புரிந்தும் புரியாமலும் இருந்த அந்த கவிதையினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்...
இனி ஒரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனி ஒரு மனிதனுக்குக்
காயடித்த பின்னரே - இனி
காவி அணிவிப்போம்...
எந்த நாளும் காப்போம்
தனி ஒரு மனிதனுக்குக்
காயடித்த பின்னரே - இனி
காவி அணிவிப்போம்...
தனியொரு மனிதனின் லீலையைப்
படம் பிடித்து
வினியோகிப்பவனைத்
தரணியில் துரோகி என்போம்...
காமத்தை உணராத் துறவி
முற்றும் அறிந்தவனும் இல்லை
முற்றும் துறக்காத துறவி
பரமஹம்சன் என்பதும் இல்லை
காமம் செய்யும் குரு என்பவன்
கெட்டவனுமில்லை...
தொலைக் காட்சியில்
ஒளிபரப்புவோன்
புனிதனுமில்லை...
ஊரான் சொத்து 90 ஏக்கரை
தன் குடும்பம் என்ற கலைக்
குடும்பத்திற்குக் கொள்ளை அடித்ததை
கவனச் சிதறல் செய்ய
அஜீத் டயலாக் எபிசோட்...
மாணவர்கள் கொலை,
ஸ்டாலின் புத்தக சுயபாராட்டு
கவனச் சிதறலுக்கு
பேரம் படியாத
நித்தியானந்தா - ரஞ்சிதா
பழைய வீடியோ
ஒளிபரப்பு...
வாழ்க தமிழகம்!
நித்தியானந்தா
தற்கொலை வேண்டாம்..
துறவைத் துறந்து
ரஞ்சிதாவை
அவர் விவகாரத்துப்
பெற்றபிறகு
முறைப்படி
மணந்து இன்புறுவாயாக...
பிறக்கும் குழந்தைக்கு
பரமானந்தன்
எனப் பெயர் சூடுக...
யார் யாரோ வாழ்கிறார்கள்
அட
நீங்களும்தான் வாழ்ந்துவிட்டுப்
போங்களேன்...
நடந்த அவமானமே
உங்களுக்குப்
போதிய தண்டனை!
இந்த கவிதையின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அமைந்திருந்தன. உங்கள் கருத்துக்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
டிஸ்கி: ஹி... ஹி... ஹி... படம் நம்மளோட கைவண்ணம்தான்... எப்பூடி...?
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
53 comments:
நல்லா (டி)சைன் பண்ணுவிங்க போல இருக்கே..!! :-)))
UthamaPuthra என்கிற அவரது பெயரையும் பதிவில் சேர்த்திருக்கலாமே!!!!
அவரது கவிதையில் அவரது தனிப்பட்ட மற்றும் சமூக விருப்பு வெறுப்புக்கள் தெரிகின்றது.
அவர் கவிதையில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடுதான் .எழுதிய விதமும் சூப்பர்
கவிதை சூப்பர் பாஸ் !!! நம்மளும் புதுசா எழுத ஆரம்பிச்சுருக்கோம். கொஞ்சம் கைக் கொடுத்து உதவலாமே !!!
கீழே பெயரை குறிப்பிட்டுள்ளீர்கள் நான்தான் சரியாக கவனிக்கவில்லை, sorry
சூப்பர். உண்மையிலயே நல்லா எழுதிருக்காரு. தமிழ்நாட்டு ஆட்சிய பாத்தி ரொம்ப நொந்து, உண்மைய எழுதிருக்காரு.... :)
நல்ல கவிதை....
கவிதையில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடுதான் .எழுதிய விதமும் சூப்பர் உத்தம புத்திரா &பிரபாகரன் sir
நித்தியானந்தாவின் விவகாரத்தில், அவரைக் காட்டிலும் மற்றவர்களின் மனவிகாரம்தான் அதிகம் வெளிப்பட்டது நண்பரே!
உண்மைதான் சில விசயங்களை திசை திருப்பவே இந்த விவகாரம் பயன்பட்டது! அதனால் நாட்டுக்கு எந்த கெடும் இல்லையே?! இரண்டு தனி மனிதர்களின் விருப்பம் அது!
unable to vote thamilmanam
கவிதை நல்லாருக்கு. ஆனா நீங்க உங்க கருத்தையும் சொல்லி இருக்கலாம்
வைகை.. 3 அல்லது 4 டைம் ட்ரை பண்ணுங்க
கவிதை அருமை நண்பா.. இதுவரை பார்க்காத கோணத்தில் பார்த்திருக்கிறார் அந்நண்பர்.
கடை சூப்பர் மார்க்கட்டாக மாறி சூப்பராகிட்டது...
good one!
நடந்த அவமானமே
உங்களுக்குப்
போதிய தண்டனை!////////
அருமையான கவிதை.....
இருவருக்கும் நன்றி ...........
super
//பிறக்கும் குழந்தைக்கு
பரமானந்தன்
எனப் பெயர் சூடுக...
யார் யாரோ வாழ்கிறார்கள்
அட
நீங்களும்தான் வாழ்ந்துவிட்டுப்
போங்களேன்...//
சூப்பர். உண்மையிலயே நல்லா எழுதிருக்காரு
சில விசயங்களை திசை திருப்பவே இந்த விவகாரம் பயன்பட்டது!
கவிதை சூப்பர்.
கவிதை சூப்பருங்க!
நண்பரே உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்..வாருங்கள்..
உண்மையிலேயே ரொம்ப நல்லா எழுதி இருக்காரு
அவர் கவிதையில் முழுவதும் எனக்கு உடன்பாடு உண்டு
கவிதை சூப்பர். பல்சுவை பகுதி தலைப்பு என்ன என்று சொல்லவில்லையே?
உண்மையைத்தான் எழுதியிருக்கார்
பாவமய்யா மனுஷன்
காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு
//தனி ஒரு மனிதனுக்குக்
காயடித்த பின்னரே - இனி
காவி அணிவிப்போம்...// காய் அடிச்சா என்ன நடக்கும்? அவனால் எந்த பெண்ணுடைய கற்ப்புக்கும் செய்கூலி[!], சேதாரம் இருக்காது. அது மட்டும் போதுமா? அவன் அந்த நிலையிலும் உட்கார்ந்து கொண்டு பெண்ணுடன் சல்லாபம் செயவைதையே மனதில் நினைத்து கொண்டிருக்க முடியும், அதை யார் தடுப்பது? அந்த மாதிரி புத்தியை சரி செய்ய வேண்டும், அதை விடுத்து உடல் உறுப்புக்களை மொக்கை செய்வது வேஸ்ட். புத்தியை மற்றவர்கள் சரி செய்தால், அவர்கள் சாமியாருக்கே குரு ஆகத் தகுதி படைத்தவர்களாகிவிடுவார்கள். அதுக்கப்புறம் இவரோட ஆலோசனை எதற்கு? மேலும் ஆன்மீக குரு என்பவர் மற்றவர்களால் சான்றளிக்கப் பட்டு குருவாவதில்லை. நறுமணமுள்ள மலர் எல்லோரையும் இழுப்பது போல அவரது நன்னடைத்தையாலும், ஆன்மீக தகுதிகளாலும் தானாகவே வெளிப்படுபவர். LKG பையன் சொல்லியா Ph.D., செய்தவருடைய அருமை பெருமைகள் தெரிய வேண்டும்?இன்னொருத்தர் ஸ்டாம்ப் குத்தி வருவதென்றால் நித்தி மாதிரி ஆட்கள் தான் வருவார்கள்.
//தனியொரு மனிதனின் லீலையைப்
படம் பிடித்து
வினியோகிப்பவனைத்
தரணியில் துரோகி என்போம்...// இது மிக்க சரி, ஆனா நித்தி விஷயத்தில் அவர் தனி மனிதரல்ல. உலகம் முழுவதும் லட்சக் கணக்கான பலி ஆடுகளுக்கு தன்னை குரு என்று சொல்லிக் கொண்டு பஜனை செய்து வருபவர். இந்த ஒரு மனிதனின் அந்தரங்கத்தை படம் பிடித்ததன் மூலம் அத்தனை லட்சம் மக்களையும் காக்க வேண்டுமென்ற எண்ணம் இருப்பதால் அது மிக்க சரியே. இதைப் பார்த்த பின்னும் செம்மறி ஆடுகள் மாதிரி அந்த சாமியார் பின்னாடியே பஜனை செய்யச் சொல்லி சுற்றிக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது?
சில கருத்துகளில் எனக்கும் உடன்பாடு இல்லை.
//காமத்தை உணராத் துறவி
முற்றும் அறிந்தவனும் இல்லை
முற்றும் துறக்காத துறவி
பரமஹம்சன் என்பதும் இல்லை.// நீங்கள் ஒரு கணினியை வாங்குகிறீர்கள், அதில் Windows 7- Pre Load செய்யப் பட்டிருக்கிரதென்று வைத்துக் கொள்வோம். அதில் உள்ள MS-Word, Excel, Power Point மற்ற கனிகளைப் போலவே வேலை செய்யும். சந்தேகமே வேண்டாம். நீங்கள் அவற்றை உபயோகப் படுத்தவே இல்லை என்றாலும் இது உண்மை. அதே மாதிரி, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனுடைய ஜீன்களிலேயே உண்ணுதல், உறக்கம், உடலுறவு கொள்ளுதல், தன்னைப் ஆபத்து வந்தால் பாது காத்துக் கொள்ளுதல் பற்றிய விவரங்கள் போடப் பட்டுள்ளது. இதை யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை, காமத்தை பற்றி தெரிந்து கொள்ள பெண்ணிடம் சுகம் கண்டால் மட்டும் தான் முடியும் என்றால், மன்னிக்கணும், அது சரியல்ல. காம சூத்ரா எழுதிய வாத்சாயனர் ஒரு பிரம்மச்சாரி. [வேண்டுமானால் ஒரு பையனை, பெண்களைப் பார்க்க விடாமலேயே,பெண்ணைப் பற்றிய எந்த விவரமும் எந்த வழியிலும் தெரியப் படுத்தாமலே
பதினெட்டு வயது வரை வளர்த்து வாருங்கள், அவனை அதற்க்கப்புறம் ஒரு பெண்ணோடு தனியாக தங்க விடுங்கள், அடுத்த பத்து மாதத்தில் அவள் குழந்தையைப் பெற்றெடுப்பாள்.] [If both are physiologically normal!]
//காமம் செய்யும் குரு என்பவன்
கெட்டவனுமில்லை...// குரு என்பதற்கு அர்த்தம் என்னவென்று முதலில் சொல்லுங்கள், அதற்க்கப்புறம் நீங்கள் சொன்னபடி அவன் நல்லவனா கெட்டவனா என்று பார்ப்போம்.
//நித்தியானந்தா
தற்கொலை வேண்டாம்..
துறவைத் துறந்து
ரஞ்சிதாவை
அவர் விவகாரத்துப்
பெற்றபிறகு
முறைப்படி
மணந்து இன்புறுவாயாக...// I agree with this 100%. ஆனா ரஞ்சிதாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சே, குழந்தை பாக்கியம் இருக்குமா, உங்க கனவு நிறைவேருமான்னுதான் தெரியல!
அப்பாடா வெள்ளை நிற டெம்ப்ளேட் போட்டாச்சா.............
நல்ல கவிதை
அட அருமையா இருக்குங்க....
...உங்க வலைபூவில் வரும் என்னுடைய வலைபூவின் பெயர மாற்றினால் நன்றாக இருக்கும்...
இத ஒரு நிமிஷம் பாருங்க தல
http://www.youtube.com/watch?v=GZwplBsRWmU
நாங்க மறந்தாலும் நீங்க மறக்கலை நித்தியானந்-தாவையும்
ரஞ்சிதாவையும். பழைய பதிவிலிருந்து தேடி பிடிச்சி
மறுபடியும் கொண்டுவந்திட்டீங்களே!
இதையும் படியுங்க:
""நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும்!""
அவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் இருக்கிறது என்று இதன் மூலம் தெரிகிறது !!!
@ சேலம் தேவா, எப்பூடி.., பார்வையாளன், ஆரோனன் றெஜிவ்நாலட், முத்துசிவா, வழிப்போக்கன் - யோகேஷ், kalpanarajendran, சேட்டைக்காரன், வைகை, சி.பி.செந்தில்குமார், யோ வொய்ஸ் (யோகா), Samudra, அஞ்சா சிங்கம், ஆர்.கே.சதீஷ்குமார், Harini Nathan, Speed Master, சே.குமார், விக்கி உலகம், கணேஷ், இரவு வானம், நா.மணிவண்ணன், கும்மாச்சி, dineshkumar, டிலீப், Jayadev Das, இளம் தூயவன், THOPPITHOPPI, T.V.ராதாகிருஷ்ணன், பாரி தாண்டவ மூர்த்தி, அப்பாவி தமிழன், NIZAMUDEEN, suriya
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ ஆரோனன் றெஜிவ்நாலட்
// கவிதை சூப்பர் பாஸ் !!! நம்மளும் புதுசா எழுத ஆரம்பிச்சுருக்கோம். கொஞ்சம் கைக் கொடுத்து உதவலாமே !!! //
கண்டிப்பா அதுக்குத்தானே இருக்கோம்... ஆனா உங்களுடைய பதிவுகளை பாண்டிச்சேரி வலைப்பூவில் படித்ததாக ஞாபகம்...
@ kalpanarajendran
// கவிதையில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடுதான் .எழுதிய விதமும் சூப்பர் உத்தம புத்திரா &பிரபாகரன் sir //
sir என்ற வார்த்தையை எல்லாம் என்னிடம் பயன்படுத்தாதீர்கள் மேடம்... நான் ரொம்ப சின்ன பையன்...
@ வைகை
// இரண்டு தனி மனிதர்களின் விருப்பம் அது! //
உண்மைதான்... ஆனா நான் இப்படித்தான் என்று நித்தி வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை... அதை விடுத்து துறவி வேஷம் போட்டு பல லட்சகணக்கான மக்களின் பணத்தையும் நம்பிக்கையும் மோசடி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது...
// unable to vote thamilmanam //
பரவாயில்லை... நீங்க வந்தா மட்டும் போதும் :)))
@ சி.பி.செந்தில்குமார்
// ஆனா நீங்க உங்க கருத்தையும் சொல்லி இருக்கலாம் //
எதுக்கு வம்புன்னு தான் பேசாம விட்டுட்டேன்...
@ கணேஷ்
// நண்பரே உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்..வாருங்கள்.. //
ம்ம்ம்... படித்தேன்... ஆனால் நீங்கள் எதைப்பற்றி எழுத அழைத்திருக்கிரீர்கள், அதைப் பற்றி என்ன எழுதுவது என்று சரிவர விளங்கவில்லை... எனது பதிவுலக வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வேண்டுமா...?
எனினும் நிச்சயம் எழுதுகிறேன்...
@ கும்மாச்சி
// பல்சுவை பகுதி தலைப்பு என்ன என்று சொல்லவில்லையே? //
ஓ அதுவா... ம்ம்ம்... வர்ற திங்ககிழமை சொல்றேனே... அது வரைக்கும் சஸ்பென்ஸ்...
@ Jayadev Das
ஹி... ஹி... ஹி... உங்களுக்கு பதில் போடுவதற்கு மட்டும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது... ஓரிரு நாட்களில் பதிலிடுகிறேன்... அது கிடக்கிறது... வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்லியிருந்தேனே என்ன ஆச்சு... வேறு ஏதாவது உதவி வேண்டுமென்றாலும் தயங்காமல் கேளுங்கள்...
@ பாரி தாண்டவ மூர்த்தி
// ...உங்க வலைபூவில் வரும் என்னுடைய வலைபூவின் பெயர மாற்றினால் நன்றாக இருக்கும்... //
மாற்றிவிடுகிறேன்...
@ அப்பாவி தமிழன்
// இத ஒரு நிமிஷம் பாருங்க தல
http://www.youtube.com/watch?v=GZwplBsRWmU //
பார்த்தேன் தல... அவர் உங்களை மாதிரி அப்பாவி தமிழன் இல்ல போல... ஆனா இந்த வீடியோவை இங்க வந்து போட்டதுல ஏதாவது உள்குத்து இருக்கா...
@ NIZAMUDEEN
// இதையும் படியுங்க:
""நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும்!"" //
படிச்சேன்... நல்ல இர்டுந்துச்சு உங்க கற்பனை கதை...
முன்ன மாதிரியே உங்க முகத்தையே லோகோவா போடுங்க பிரபாகரன், ஏன்னா அந்த இமேஜ் மனசில உண்டாயிடுச்சு, இப்ப மாத்த முடியாது. [அடுத்தவங்க சொல்ற கருத்துக்களுக்கு கொஞ்சம் செவி மடுக்கலாம், ஆனா ஒரு அளவுக்குத்தான், எல்லாத்தையும் கேட்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. உங்க படம் நல்லாத்தான் இருக்குது, அதையே போடுங்க.]
ஜெய் ரஞ்சிதா
'"தனியொரு மனிதனின் லீலையைப்
படம் பிடித்து
வினியோகிப்பவனைத்
தரணியில் துரோகி என்போம்...'"
ஆமாம், ஆனால் இவருக்கு பொருந்தாது , காரணம் நம்பி வந்தவர்களுக்கு ஒரு வழியை கட்டி விட்டு , இவரு மட்டும் பை பாஸ்சுல போனது ....
"தனி ஒரு மனிதனுக்குக்
காயடித்த பின்னரே - இனி
காவி அணிவிப்போம்...'"
கண்டனத்திற்குரிய வார்த்தை, நம்பி நம்பி ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இந்த மாதியான சம்பவங்கள் அரங்கேறும் நண்பா ......
"காமம் செய்யும் குரு என்பவன்
கெட்டவனுமில்லை...
தொலைக் காட்சியில்
ஒளிபரப்புவோன்
புனிதனுமில்லை..."
செய்தி சொல்பவன் புனிதமா இருக்க வேண்டிய அவசியம் இல்ல , செய்தி உண்மைய என்பது மட்டுமே முக்கியம் , ஆனால் போதிப்பவனுக்கு புண்ணிதம் முக்கியம் அவன் போதிக்கும் கருத்தில் . என்ன நண்பா !
Post a Comment