வணக்கம் மக்களே...
ஒருவழியாக 2010ம் ஆண்டு முடிவடைந்துவிட்டது. கடந்த ஆண்டில் நான் பார்த்த 25 படங்களை ஏற்கனவே வரிசைப் படுத்தியிருந்தேன். இந்த ஆண்டு இதுவரை எந்தப் படமும் பார்க்கவில்லை. இந்நிலையில் ஒரு சில படங்கள் வெளிவருவதற்காக பேராவலுடன் காத்திருக்கிறேன். அவற்றை இங்கே TOP 10 பாணியில் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.
மயிரிழையில் படவரிசை பத்தை தவற விட்ட படங்கள்...
- ஆரண்ய காண்டம் (மறுபடியும் ஒரு கேங் ஸ்டர் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் குறைந்துவிட்டன. இருப்பினும் விளம்பர யுக்தி கவர்கிறது).
- ஆதி பகவன் (அமீர் படம் என்றொரு எதிர்பார்ப்பு, இருப்பினும் டைட்டில் வசீகரிக்கவில்லை. மேலும் காதல் சார்ந்த படங்களில் ஈடுபாடு இல்லை).
- தலைவன் இருக்கிறான் (படம் ட்ராப் என்று தகவல்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை ஓரம் கட்டிவிட்டேன்).
ஓகே... இப்போ கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்...
10. முகமூடி
மிஷ்கின் இயக்கி ஆர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் ஆக்ஷன் திரைப்படம். எப்படியும் இந்தப் படத்தை மிஷ்கின் ஏதாவதொரு உலகப்படத்தில் இருந்து உருவியிருப்பார் என்பது தெரிந்த விஷயமே. இருப்பினும் இதுவரை பார்த்திராத புதிய கூட்டணி என்பதால் ஒரு எதிர்பார்ப்பு. மேலும் இந்தப் படத்தில் ஆர்யா குங்பூ கலைஞராக நடிக்கிறார் என்று அறிந்தேன்.
9. ஹரா (சுல்தான்)
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் தமிழின் முதல் முழுநீள அனிமேஷன் திரைப்படம். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்துவருகிறது. நாளாக நாளாக ஒருவித சலிப்பு ஏற்படுகிறது. சீக்கிரமாக வெளிவந்தால் சிறப்பு. இஸ்லாமிய தலைப்பான சுல்தானை இந்துக்கடவுளின் பெயரான ஹரா என்று மாற்றியதன் மர்மம் புரியவில்லை, கர்த்தருக்கே வெளிச்சம்.
8. ஏழாம் அறிவு
முருகதாஸ் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் ஒரு கமர்ஷியல் திரைப்படம். கஜினிக்கு பிறகு சூர்யா, முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் வெற்றிக்கூட்டணி இணைந்திருக்கிறது. இதற்க்கெல்லாம் மேலாக நம்முடைய எதிர்பார்ப்பை கூட்டுவது கமல் மகள் ஸ்ருதிஹாசனின் அறிமுகம். கமல், ஸ்ருதியை முத்தக் காட்சியில் நடிக்க அனுமதிப்பாரா...?
7. களவாடிய பொழுதுகள்
உருக்கமான, தரமான படங்களை தருபவர் தங்கர்பச்சான். அப்படிப்பட்டவர், பிரபுதேவாவையும், பூமிகாவையும் வைத்து படம் எடுப்பது சற்றே ஆச்சர்யம் அளிக்கிறது. வித்தியாசமான கூட்டணி. மேலும் சத்யராஜ் இந்தப் படத்தின் சில காட்சிகளில் மீண்டும் பெரியாராக தோன்ற இருக்கிறார் என்பது இனிப்பான செய்தி. பெரியார் புதிதாக ஏதாவது சொல்கிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
6. அவன் இவன்
ஆர்யா, விஷால் நடிப்பில் பாலா இயக்கம் படம். கோரமான படங்களை இயக்கம் பாலா முழுநீள நகைச்சுவையில் இறங்கியிருப்பது எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக கூட்டியிருக்கிறது. இயக்குனரின் முந்தய படங்களிலும் கூட நகைச்சுவை ஆங்காங்கே சிறப்பாகவே இருக்கும். இதுவரை மாடலாக இருந்து வந்த என்னுடைய பேவரிட் ஜனனி நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். சூர்யாவும், ரீமா சென்னும் கெளரவத் தோற்றத்தில் நடிப்பது கூடுதல் சிறப்பு.
முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கும் படங்களை பதிவின் அடுத்த பாகத்தில் (இன்னும் ஓரிரு நாட்களில்) பார்க்கலாம். அதுவரை எதிர்பார்ப்புகள் எகிரட்டும்...
வாசகர்களுக்காக...
டிஸ்கி 1: முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கும் அந்த எதிர்பார்ப்பு படங்கள் என்னவாக இருக்கும் என்று யூகியுங்கள் பார்ப்போம்.
டிஸ்கி 2: கனவுக்கன்னி பதிவில் சொன்னது போலவே முதலிடம் பிடித்திருக்கும் படத்தை அவ்வளவு எளிதாக யாரும் யூகிக்க முடியாது.
டிஸ்கி 3: சரியாக யூகிப்பவர்களுக்கு எனது மின்-புத்தக கலெக்ஷனில் இருந்து ஏதாவதொரு நல்ல புத்தகத்தை பரிசாக மெயிலுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
64 comments:
எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com
ம்ம் .நல்ல தர வரிசை .
தல: காவலன் #1 :)
அருமையான தெரிவு நண்பா
இதில் நான் எதிர்பார்க்கும் படங்கள் ஏழாம்அறிவு மற்றும் அவன் இவன் மட்டுமே!
அழகான தேர்வு.. அருமையான தரவரிசை...
நச் ,என்று நாலு வரியில் அழகாக எழுதியுள்ளீர்கள்.
---->மங்காத்தா?
//கமல், ஸ்ருதியை முத்தக் காட்சியில் நடிக்க அனுமதிப்பாரா...?//
அடப்பாவமே...!!அவரோட ஹிந்தி படம் நீங்க பாக்கலன்னு தோனுது..அதை விட கேவலமா தமிழ்ல காட்ட ..சாரி...நடிக்க முடியுமா..? :-)
உங்க வரிசை நல்லா இருக்கு.
கமல் ஒரு திறந்த வெளி அப்பா!?
1 பில்லா2
2 மங்காத்தா
3 வேலாயுதம்
4 காவலன்
5 வானம்
உங்களின் சிறகொடிந்த மைனாக்கள் தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகயுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள்
தயவுசெய்து உதவுங்கள்
http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html
காத்திருக்கிறேன்
super praba. congradulation for selection of final roun in tamilmanam maina
//இஸ்லாமிய தலைப்பான சுல்தானை இந்துக்கடவுளின் பெயரான ஹரா என்று மாற்றியதன் மர்மம் புரியவில்லை, கர்த்தருக்கே வெளிச்சம்//
பளிச் சிந்தனை..!!
//கமல், ஸ்ருதியை முத்தக் காட்சியில் நடிக்க அனுமதிப்பாரா...?//
நல்ல கேள்வி..!!
//எகிரட்டும்..//
எகிறட்டும் என்று நினைக்கிறேன். :-)
ஏழாம் அறிவு, அவன் இவன்....
அப்புறம்?
நீங்க முதல என்ன என்ன மின் புத்தகம் வைத்திருக்கிறீர்கள் என்று கூறுங்கள் .பிறகு அந்த ஐந்து படங்களை நான் கூறுகிறேன்
நல்ல தரவரிசை.
Enathu Ennangal said...
1 பில்லா2
2 மங்காத்தா
3 வேலாயுதம்
4 காவலன்
5 வானம்///
1 . ஓகே
2 . ஓகே
3 .
4 இந்த ரெண்டு படத்தையும் ஆட்டைலே சேர்த்துகொள்ளமாட்டேன்
5 . இந்த படம் ஒரு மொக்க படம்ங்க .கடேசில அந்த ரெண்டு ஹீரோக்களும் புட்டுக்குவாங்க . நா தெலுங்கு வெர்சன்ல பார்த்துட்டேன்
7ஆம் அறிவு,அவன் இவன்,சுல்தான் எதிர்பார்ப்பான படங்கள்
I think unga edhirpaarpil mudhal idam perum padam veerachami 2 ""oru thalai kaadhal""
1.t.rajendar oru thalai kaadhal
2.billa 2
3.vasanthabalan aravaan
4.ko
5.moonu muttaalkal(3 idiots)
6.siruthai,aadukalam
7.kaavalan
8.ilainyan
9.miskin"yuttham sei"
10.jeyam ravi "ich"
ivatril ethunum ainthu
Muslimkalai cinemavil ilivupaduthaamal irunthaale podhum.sultan thalaipai thookiyathu paravayillai.oru velai rasipalan paarthu peyar maatri irupparkal.periya idathu vivakaram namakkethukku.
Boss innoru mukkiyaamana padam ramarajanin dharma
நீங்கள் இவ்வளவு தீர்க்க தரிசனவாதியா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
நானும் எதிர்பார்க்கிறேன்..
நல்ல தர வரிசை
ஏழாம் அறிவு பார்ப்பதற்கு முன் இன்சப்சன் பார்க்கவும்...சொல்லிட்டேன். டீ. ஆரின் ஒரு தலைக்காதல் மாற்று ராமராஜனின் மேதையும் வருது...GET READY FOLKS!!
Udhayanidhi stalin oru padathula herovaa nadikkiraaraam oru velai andha padama.
Parisai pera evvalavu yosikkavendiyirukku.
oru kal oru kannadi
Aravaan
உங்களின் சிறகொடிந்த மைனாக்கள் தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகயுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள்
நீங்க டிவில கவுன்ட் டௌன் நிகழ்ச்சி நடத்தலாம் நண்பா !
என்ன உங்க இஷ்டத்துக்கு எல்லாம் கவுன்ட் டௌன் சொல்ல முடியாது
அம்புட்டுதான்
உங்கள் எதிர்பார்ப்பில் ரஜினி படமா? தமாசா இருக்கு :-))))
கமல் படம் வெளிவராதவிடத்து மங்காத்தா, பில்லா முதல் 2 இடங்களையும் பெரும் என்று எதிர் பார்க்கிறேன் !!!!!
எனது மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ஒரே படம் 'ஆடுகளம்'
ஆடுகளம்
அழகான தேர்வு
அடுத்த ஐந்திலாவது நான் நடிக்கவிருக்கும் ஏதாவது ஒரு படத்தை சொல்ல மாட்டீங்களா?
நல்ல அறிமுகமும் கூட...
"Nadunisi naaikal"
parisai vaangamal viduvaadhai illai.
//டிஸ்கி 3: சரியாக யூகிப்பவர்களுக்கு எனது மின்-புத்தக கலெக்ஷனில் இருந்து ஏதாவதொரு நல்ல புத்தகத்தை பரிசாக மெயிலுகிறேன்.//
டீல் நல்லா இருக்கே..
mangaath
Mangaatha
Vaanam
Vedi
Yudham Sei
Velayutham
மனிதனின் பிரச்சினைகளை மையமாக வைத்து இன்று படம் எடுக்க எத்தனை டைரக்டர் தாயராக உள்ளார்கள். அப்படி எடுத்தால் அவற்றை பார்க்க இந்த இளைய சமுதாயமாவது தயாராக உள்ளதா இல்லவே இல்லை. அனைத்தும் வியாபார நோக்கோடு நடைபெறுகிறது நண்பரே, நினைத்தால் மனம் கனத்து விடும்.
@ பார்வையாளன், வருண், டிலீப், வைகை, சங்கவி, malgudi, ஜெய்லானி, விக்கி உலகம், Enathu Ennangal, ரஹீம் கஸாலி, சி.பி.செந்தில்குமார், சேலம் தேவா, ஜீ..., நா.மணிவண்ணன், சே.குமார், ஆர்.கே.சதீஷ்குமார், ஐத்ருஸ், ம.தி.சுதா, பதிவுலகில் பாபு, Speed Master, சிவகுமார், Tamil World, bala, எப்பூடி.., பாஸ்கர், T.V.ராதாகிருஷ்ணன், யோ வொய்ஸ் (யோகா), tms.blogspot.com, அன்பரசன், கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ), இளம் தூயவன்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ குறட்டைப்புலி
// எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது. //
என்ன இது...? முதல் பின்னூட்டமே இப்படியா... சரிங்க குறட்டைப்புலி சார் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்... இது மனுஷங்க வந்து போகுற இடம்... இங்க எல்லாம் பதுங்கிடாதீங்க ப்ளீஸ் :)))
@ வருண்
// தல: காவலன் #1 :) //
சாரி... காவலன் எல்லாம் லிஸ்டுல இல்லை...
@ malgudi
// மங்காத்தா? //
தல ரசிகனாக இருந்துக்கொண்டு மங்காத்தா இல்லாமலா...? நிச்சயம் இருக்கிறது...
@ ஜெய்லானி
// அடப்பாவமே...!!அவரோட ஹிந்தி படம் நீங்க பாக்கலன்னு தோனுது..அதை விட கேவலமா தமிழ்ல காட்ட ..சாரி...நடிக்க முடியுமா..? :-) //
பார்க்கலை... ஆனா பிகினி ஸ்டில்ஸ் மட்டும் எங்கேயோ பார்த்த ஞாபகம்...
@ விக்கி உலகம்
// கமல் ஒரு திறந்த வெளி அப்பா!? //
வெளங்கிடும்...
// தயவுசெய்து உதவுங்கள்
http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html
காத்திருக்கிறேன் //
இதுவரை முதியோ இல்லங்கள் பற்றி யாரிடமும் எதற்காகவும் விசாரித்ததில்லை... அது எனக்கு தேவையில்லாத விஷயம் என்பதால்... இருப்பினும் எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்... நான் கண்டிப்பாக கேட்டு சொல்கிறேன்...
@ Enathu Ennangal
// 1 பில்லா2
2 மங்காத்தா
3 வேலாயுதம்
4 காவலன்
5 வானம் //
நீங்க சொன்னதுல முதல் ரெண்டு என்னோட லிஸ்டுல இருக்கு... மூனாவதும் நாலாவதும் கணக்கிலேயே சேர்த்துக்கல... வானம் ஒன்னும் அப்படி எதிர்பார்ப்பை தூண்டவில்லை...
@ ரஹீம் கஸாலி
// உங்களின் சிறகொடிந்த மைனாக்கள் தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகயுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள் //
முதல் தகவல் தந்ததற்கு நன்றி...
@ சி.பி.செந்தில்குமார்
// super praba. congradulation for selection of final roun in tamilmanam maina //
மிக்க நன்றி நண்பரே...
@ சேலம் தேவா
// எகிறட்டும் என்று நினைக்கிறேன். :-) //
உங்களுடைய இந்த பின்னூட்டத்தை வைத்து எங்க வீட்டுல ஒரு நீயா நானாவே நடந்துச்சு... எனினும் நீங்க சொன்னதே சரி... மாத்திடுறேன்...
@ நா.மணிவண்ணன்
// நீங்க முதல என்ன என்ன மின் புத்தகம் வைத்திருக்கிறீர்கள் என்று கூறுங்கள் .பிறகு அந்த ஐந்து படங்களை நான் கூறுகிறேன் //
என்னிடம் சுஜாதா எழுதிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன... மேலும் சேரனின் டூரிங் டாக்கீஸ், சாருவின் கோணல் பக்கங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன... இவை தவிர்த்து பாலியல் சம்பந்தப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன... (ஆனால் உங்களுக்கு தமிழ் புத்தகங்களை மட்டுமே அனுப்புவேன்...)
// 1 . ஓகே
2 . ஓகே
3 .
4 இந்த ரெண்டு படத்தையும் ஆட்டைலே சேர்த்துகொள்ளமாட்டேன்
5 . இந்த படம் ஒரு மொக்க படம்ங்க .கடேசில அந்த ரெண்டு ஹீரோக்களும் புட்டுக்குவாங்க . நா தெலுங்கு வெர்சன்ல பார்த்துட்டேன் //
என்னுடைய மனசை ரொம்ப கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கீங்க மணி... வானம் படத்தின் கதைச் சொல்லி தெளிவுப்படுத்தியதற்கு நன்றி...
@ ஐத்ருஸ்
// I think unga edhirpaarpil mudhal idam perum padam veerachami 2 ""oru thalai kaadhal"" //
அவ்வ்வ்வ்... அந்த மாதிரி ஒரு லிஸ்டும் நம்மகிட்ட இருக்கு... நான் எதிர்பார்க்கும் மொக்கை படங்கள்ன்னு சொல்லலாம்... ஆனா இந்த லிஸ்டுல அந்தப் படங்கள் இல்லை...
// 1.t.rajendar oru thalai kaadhal
2.billa 2
3.vasanthabalan aravaan
4.ko
5.moonu muttaalkal(3 idiots)
6.siruthai,aadukalam
7.kaavalan
8.ilainyan
9.miskin"yuttham sei"
10.jeyam ravi "ich"
ivatril ethunum ainthu //
நீங்க சொன்னதுல மூணு படம் நம்ம லிஸ்டுல இருக்கு... அது எந்த மூணுன்னு நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க...
// Udhayanidhi stalin oru padathula herovaa nadikkiraaraam oru velai andha padama.
Parisai pera evvalavu yosikkavendiyirukku. //
அந்தப் படத்தோட பெயர் நண்பேண்டா... அதுவும் என்னோட லிஸ்டில் இல்லை... இருந்தாலும் நீங்க கவலைப்பட தேவையில்லை... நிச்சயமா உங்களுக்கு பரிசு உண்டு...
// "Nadunisi naaikal"
parisai vaangamal viduvaadhai illai. //
உங்களுடைய dedication வியக்க வைக்கிறது... நிச்சயம் உங்கள் பரிசு உண்டு... வாழ்த்துக்கள்...
கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி என்னிடம் இருந்து புத்தக லிஸ்டை பாருங்கள்... உங்களுக்கு பிடித்த புத்தகத்தை சொல்லுங்கள்... அனுப்பிவிடுகிறேன்...
http://i53.tinypic.com/2eulu02.jpg
@ சிவகுமார்
// ஏழாம் அறிவு பார்ப்பதற்கு முன் இன்சப்சன் பார்க்கவும்...சொல்லிட்டேன் //
கண்டிப்பா பார்க்கிறேன்... அப்படின்னா ஏழாம் அறிவு இன்செப்ஷனில் இருந்து சுட்ட பழமா... ஆறாவது அறிவு கூட இல்லாமல் ஆங்கில படத்தில் இருந்து சுட்டுவிட்டு ஏழாம் அறிவுன்னு தலைப்பு வைப்பதில் நியாயம் இல்லை...
// டீ. ஆரின் ஒரு தலைக்காதல் மாற்று ராமராஜனின் மேதையும் வருது...GET READY FOLKS!! //
கண்டிப்பா ரெண்டு படங்களையும் பாக்குறோம்... கலக்குறோம்...
@ bala
// உங்களின் சிறகொடிந்த மைனாக்கள் தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகயுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள் //
நன்றி நண்பரே...
// நீங்க டிவில கவுன்ட் டௌன் நிகழ்ச்சி நடத்தலாம் நண்பா !
என்ன உங்க இஷ்டத்துக்கு எல்லாம் கவுன்ட் டௌன் சொல்ல முடியாது
அம்புட்டுதான் //
ஒரு காலத்துல ஞாயிற்றுக்கிழமை சன் டிவியிலும் ராஜ் டிவியிலும் டாப் 10 நிகழ்ச்சி பார்ப்பதற்கு வாரம் முழுவதும் காத்திருப்போம்... இப்போ அவன் அவன் எடுத்த படங்களை அவன் அவன் நம்பர் ஒன்ல வச்சிக்குறானுங்க... கடுப்பேத்துறாங்க மை லார்ட்...
@ எப்பூடி..
// உங்கள் எதிர்பார்ப்பில் ரஜினி படமா? தமாசா இருக்கு :-)))) //
நான் ரஜினி படமே பார்க்க மாட்டேன் என்று நினைத்தீர்களா என்ன... அதிலும் இது ரஜினி படம் என்ற நிலையை கடந்து ஒரு அனிமேஷன் படம் அப்படின்ற எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு...
// கமல் படம் வெளிவராதவிடத்து மங்காத்தா, பில்லா முதல் 2 இடங்களையும் பெரும் என்று எதிர் பார்க்கிறேன் !!!!! //
லிஸ்டில் இருக்கின்றன... ஆனால் முதலிரண்டு இடங்கள் இல்லை...
// எனது மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ஒரே படம் 'ஆடுகளம்' //
எனக்கு நம்பிக்கை இல்லை...
@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
உங்களை நம்ம கடைப்பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சே... என்னாச்சு சார்... வெல்கம் பேக் டூ தத்துப்பித்துவங்கள்...
// Mangaatha
Vaanam
Vedi
Yudham Sei
Velayutham //
மங்காத்தா தவிர்த்து வேறு எதுவும் லிஸ்டில் இல்லை...
@ இளம் தூயவன்
// மனிதனின் பிரச்சினைகளை மையமாக வைத்து இன்று படம் எடுக்க எத்தனை டைரக்டர் தாயராக உள்ளார்கள். அப்படி எடுத்தால் அவற்றை பார்க்க இந்த இளைய சமுதாயமாவது தயாராக உள்ளதா இல்லவே இல்லை. அனைத்தும் வியாபார நோக்கோடு நடைபெறுகிறது நண்பரே, நினைத்தால் மனம் கனத்து விடும். //
என்னையும் அந்த லிஸ்டில் சேர்க்காதீர்கள்... ஆனால் அதற்காக கமர்ஷியல் சினிமாவே பார்க்கக் கூடாதென்றும் என்னை தடுக்காதீர்கள்... நான் இரண்டையும் ரசிக்கும் ஒரு நடுநிலையான ரசிகன்...
முதல் ஐந்து படங்களின் விவரத்தையும் போட்டிருக்கலாம்..
:-)
HAPPY NEW YEAR!
5. வேலாயுதம்
4. தில்லுமுல்லு
3. தாளமில்லா ராகம்
2. தளபதி
1. வேட்டைக்கார புலி
//மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்துவருகிறது. நாளாக நாளாக ஒருவித சலிப்பு ஏற்படுகிறது. //வரும் ஆனா வராது- என்ற ரேஞ்சில் போய்க் கொண்டிருக்கிறது. செல்வராகவனையே மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது!
DAI VENNA VETTINGALAA.... YOUR GUSS ALL WRONG... KAVALAN ROCKS.... WITH RULING PARTY OPPOSE, WITHOUT MEDIA SUPPORT , WITHOUT PAPER ADD..... KAVALAN IS A BLOCK BUSTER MOVIE OF THE YEAR 2011. VIJAY MEANS VICTORY
Post a Comment