வணக்கம் மக்களே...
நீங்க வலைப்பூவில் எழுதி வருவதைப் பற்றி எப்பொழுதாவது உங்கள் பள்ளி, கல்லூரி, அலுவலக நண்பர்களிடம் சொல்லியிருக்கிறீர்களா...? நான் நிறைய முறை சொல்லி பல்பு வாங்கியிருக்கிறேன். அதிலும் பெரும்பாலானோர் BLOG என்பதை மிகச்சரியாக BLACK என்று உச்சரித்து வெறுப்பேற்றுவார்கள். அவர்களுக்கு வலைப்பூ என்றால் என்னவென்று விளக்கிச் சொல்வதற்குள் விழி பிதுங்கிவிடும். விளக்கிச் சொன்னபிறகு சில பேர் “அப்படின்னா நீ ஒரு எழுத்தாளன்னு சொல்லு...” என்று நம்மை சுஜாதா, ஞாநி ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசுவார்கள். (உசுபேத்தி உசுபேத்தியே ஒடம்ப ரணகளமாக்குறானுங்க...). அட இவங்களாவது பரவாயில்லை. இந்த பொம்பளைப்பிள்ளைங்க கிட்ட நம்ம லிங்கை கொடுத்து அனுப்பினா மறுநாள் வந்து “நீ என்னென்னவோ எழுதியிருக்க... எனக்கு ஒன்னுமே புரியல...” ன்னு சொல்லுவாங்க. அதாவது அந்தம்மா இங்கிலாந்து மகாராணிக்கு தமிழ் படிக்க தெரியாதாமாம். அதை சொல்லிக்கிறதுல அவங்களுக்கு ஒரு பெருமை.
இப்படியாக எனது வலைப்பூவுலக வாழ்க்கை ஆரம்பித்த புதிதில் சரியான அங்கீகாரமின்றி தவித்திருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லாப் பதிவர்களுக்குமே அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது. பதிவெழுதிவிட்டு ஆர்குட்டில் இருந்த முன்னூறு நண்பர்களுக்கும் scrap அனுப்புவேன், மேலும் மொபைல் காண்டாக்டில் இருக்கும் நூறு பேருக்கு குறுந்தகவல் அனுப்புவேன். இதையெல்லாம் செய்து ஆறுமணிநேரம் ஆனாலும் பதிவில் ஒரு கமென்ட் கூட வந்திருக்காது. அப்பொழுதெல்லாம் எனக்கு திரட்டி என்றால் என்னவென்றே தெரியாது. ஏன்...? பதிவுலகம் என்றாலே என்னவென்று தெரியாது.
நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக எனது நண்பர்கள் சிலர் எனது எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தார்கள். சிலர் பாராட்டுவார்கள். சிலர் படித்துவிட்டு பாராட்டுக்களை மனதிற்குள் வைத்துக்கொள்வார்கள். இன்னும் சிலர் என்னைப் பார்த்து வலைப்பூ ஆரம்பித்தார்கள். அதைவிட மகிழ்ச்சியான தருணம் எனக்கு வேறு இருக்க முடியாது. ஆனால் வந்தவர்கள் சில நாட்களில் சலிப்படைந்து வலையுலகிலிருந்து வெளியேறி விட்டார்கள். மேலும் பதிவெழுத சரக்கில்லாத நிலையில் இருந்தார்கள் என்பதையும் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். (இதை படிக்கும் நண்பர்கள் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம்).
எனக்கு முன்பே வலைப்பூ ஆரம்பித்து நடத்தி வந்த எனது கல்லூரி நண்பர் ஒருவரைப் பற்றி கொஞ்சம் தாமதமாகவே தெரிந்துக்கொண்டேன். ஆனால் அவர் நடத்தி வருவது தொழில்நுட்பம் சார்ந்த ஆங்கில வலைப்பூ. (getch.wordpress.com). அந்த நண்பர் மூலமாக பதிவர் வே.மதிமாறன் அவர்களின் வலைப்பூ அறிமுகமாக அங்கே தான் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை முதல்முறையாக கண்டேன். சும்மா சேர்ந்து வைப்போம் என்று தமிழ்மணம் தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய அண்ணன் உண்மைத்தமிழன் உட்பட மூன்று பேர் பின்னூட்டம் போட்டார்கள். அப்படி ஆரம்பித்தது தான் எனது பதிவுலக வாழ்க்கை.
அதன்பின்பும் கூட எப்போதாவது எழுதும் பர்சனல் வாழ்க்கை குறித்த பதிவுகளும் அதற்கு நண்பர்கள் தந்த ஊக்கங்களுமே என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வந்தது. நாளாக நாளாக பதிவுலக ஜோதியில் ஐக்கியமாகி இப்போது பர்சனல் வாழ்க்கை குறித்த பதிவுகள், நண்பர்கள் இரண்டையுமே மறந்துவிட்டேன். தினமும் போனில் பேசவும், எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொள்ளவும் பதிவுலகிலேயே நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கல்லூரி நண்பன் ஒருவனிடமிருந்து எனது வலைப்பூ என்ற பெயரில் ஒரு லிங்க் வந்திருந்தது. அதை சொடுக்கிப் பார்த்தபோது சொக்கிப்போனேன். பின்ன, என்னை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு ஒருவன் வலைப்பூ ஆரம்பித்திருந்தால் எப்படி இருக்குமாம். மேலும் அவனுடைய முதல் இடுகையில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டதில் ரொம்பவே அகமகிழ்ந்துப் போனேன்.
அப்பொழுதே அவனைப் பற்றி ஒரு அறிமுக இடுகையிட வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் பதிவுலகில் நம்ம நிலைமையே ரொம்ப மோசமாக இருக்கும் வேளையில் நான் அவனை அறிமுகப்படுத்த எனக்கு எதிரான கூட்டம் அவனையும் எதிர்க்க வேண்டாமே என்று எண்ணினேன். மேலும் மற்ற நண்பர்களைப் போல அவனும் சில நாட்களில் வலையுலகில் இருந்து விலகிடுவான் என்ற சந்தேகமும் இருந்தது. இப்போது அந்த சந்தேகம் நீங்கிய நிலையில் எனது கல்லூரி நண்பன் (நான்கு ஆண்டுகள் ஒரே ஹாஸ்டலில் தங்கிப் படித்தோம் என்று சொல்லமாட்டேன்... ஒன்றாகவே குப்பை கொட்டினோம்...) பாரியை அறிமுகப் படுத்துவதில் பெருமையடைகிறேன்.
ஆரம்பத்தில் அவனது வலைப்பூவிற்கு “கருத்துப்பெட்டகம்” என்ற பெயரில் வைத்திருந்தான். அது உப்புசப்பில்லாமல் இருப்பதாக நான் சொல்ல பின்னர் “கனவு உலகம்” என்று மாற்றினான். அதுவும் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஒரு புதுப் பதிவரை அலைக்கழிக்க வேண்டாம் என்று எனக்கு பிடித்ததாக சொல்லி வைத்தேன். இப்போது உண்மையிலேயே ஒரு அற்புதமான பெயரை சூட்டியிருக்கிறார். ஆனா சத்தியமா நான் சொல்லிக்கொடுக்கலை பாஸ் நம்புங்க. அந்தப் புதுப்பெயர் “பச்சைத்தமிழன்”. (கவனிக்க... பச்சைக்கும் தமிழனுக்கும் நடுவில் “த்” இருக்கு). பயபுள்ள பேரைத் தான் பச்சைத்தமிழன்னு வச்சிருக்கான்னு பார்த்தா டெம்ப்ளேட்டையும் பச்சைக் கலரில் வச்சிருக்கான்.
சரி விடுங்க, இப்போ இந்த இடுகையின் நோக்கம் என்னவென்றால் பதிவுலக பெருமக்களாகிய நீங்கள் எனது நண்பன் பச்சைத்தமிழனின் தளத்தில் பின்தொடர்பவராக இணைந்து அவனை தொடர்ந்து உர்சாகப்படுத்துமாறு உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவனது தளத்தை பார்வையிட கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்:-
ஆரம்பத்தில் நண்பனை அறிமுகப்படுத்த மட்டுமே இந்த இடுகையை ஆரம்பித்தேன். பின்னர் பதிவுலக சயின்ஸ் பிக்ஷன் எழுத்தாளர் கணேஷ் பதிவுலக வாழ்க்கையை திரும்பிப்பார்த்து ஒரு தொடர்பதிவை எழுதும்படி கூறியமையால் எனது சுயபுரானாத்தை பெருமளவில் பாட வேண்டியதாகிப் போனது. என்ன கணேஷ்..? திரும்பிப் பார்த்தது போதும்தானே... (யப்பா கழுத்து சுளுக்கிக்கும் போல இருக்கே...)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
65 comments:
அவர் பதிவையும் பார்த்தேன் நண்பரே.
எவ்ளோ எமவ்ண்டு இதுக்காக அவர்கிட்ட வசூலிச்சீங்க :-)))))
நண்பனுக்கு உதவிய நீங்கள் உண்மையிலே 'நண்பேண்டா'
@ பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...என்னைப்பற்றி ஒரு தனி பதிவே இட்டதற்கு மிகவும் நன்றி நண்பா......
நட்புக்கு மரியாதை என்ற கான்சப்ட் நன்றாக இருந்தது
பெயரில் த் போட நீங்கள்தான் காரணமா?
உங்களை போல அவரும் பதிவுலகில் சிறக்க வாழ்த்துகிறேன்
உங்களின் ஆதங்கம் நியாயமானதே,உண்மையும் கூட,காலம் செல்லச் செல்ல பழகிப் போகும்,அல்லது பதிவரும் பதிவும் காணாமல் போய்விடும்
பச்சைத்தமிழனை இதற்கு முன்னும் கண்டுக் கொண்டிருந்தேன்........ அவர் உங்கள் நண்பர் என்பது ஆச்சர்யம்...... அவரது டெம்பேல்ட் பச்சையாக இருந்தாலும் அழகாக இருக்கு...
Good one.
Best wishes to you and to your friend.:-)
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
உங்க நண்பர் கடைக்கு போயிட்டு வந்தேன்....
ஒரே பச்சையா இருக்கு....
ஹி ஹி
நண்பேண்டா...
நண்பேன்டா.......
உன்னை போல் ஒருவன்...
etc etc......
வணக்கம் பிரபா...
நல்ல அறிமுகம்... மிஸ்டர் க்ரீன் நல்லா எழுதறார்... இப்போதான் ஒரு பின்னூட்ட்டம் போட்டுட்டு வந்தேன்... பதிவுலகத்துக்கு வந்த கதைகள் எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் என்றாலும் எல்லாமே சுவாரஸ்யம்... :)
***நான் நிறைய முறை சொல்லி பல்பு வாங்கியிருக்கிறேன். அதிலும் பெரும்பாலானோர் BLOG என்பதை மிகச்சரியாக BLACK என்று உச்சரித்து வெறுப்பேற்றுவார்கள். ***
பிளாக்குனு சொல்லாதவரைக்கும் பரவாலேது, தல :)
நல்லது உங்க நண்பர் தளத்தை பார்த்துவிட்டேன் ......
பின்தொடர்கிறேன் இது வல்லவோ நட்பு...........
வாழ்த்துக்கள்! நண்பேன்டா!
உங்களை போல அவரும் பதிவுலகில் சிறக்க வாழ்த்துக்கள்
அவர் பதிவையும் பார்த்தேன் நண்பரே.
உங்களை போல அவரும் பதிவுலகில் சிறக்க வாழ்த்துகிறேன் :\)
ஓ, ஆரம்பத்தில் உங்களுக்கே அந்த!!!!
நிலமைதானா. அப்ப நாங்கள்ளாம் என்னத்தைச்சொல்ல. அந்த நண்பரின் ப்ளக்கும்போய்ப்பார்த்தேன் பாலோவர் ஆப்ஷனே இல்லியே?
பச்சைத்தமிழன் வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்.
நீங்களும் கூட வாரத்திற்கு ஒரு புதிய பதிவரை அறிமுகம் செய்யலாமே...
உங்கள் பதிவுலக கதை அருமை.
புத்தாண்டு பிறந்தததிலிருந்து உங்கள் சுயபுராணம் அதிகமாக வருவதாக தோன்றுகிறது.
Thank for your wishes..
உங்கள் நண்பர் பச்சைத்தமிழன் பிளாக் பார்த்தேன். முதியோர் இல்லம்-சிறுகதை அருமை.. அவர்க்கும் வாழ்த்துக்கள்...
அவரையும் நான் Follow பன்ன ஆரம்பித்துவிட்டேன்..
///மேலும் பதிவெழுத சரக்கில்லாத நிலையில் இருந்தார்கள் என்பதையும் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.///
.ஆமாமா .எனக்கிட்டையும் சரக்கு தீந்து போச்சு . பதிவு போடுவதற்கு ஒரு ஐடியாவும் கிடைக்கமாட்டேங்குது .கொஞ்ச நாள் பினூட்டமட்டும்தான்
உண்மையாக எழுதியுள்ளீர்கள்...பிரபா.
அப்பொழுதே அவனைப் பற்றி ஒரு அறிமுக இடுகையிட வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் பதிவுலகில் நம்ம நிலைமையே ரொம்ப மோசமாக இருக்கும் வேளையில் நான் அவனை அறிமுகப்படுத்த எனக்கு எதிரான கூட்டம் அவனையும் எதிர்க்க வேண்டாமே என்று எண்ணினேன்.
//
அறிமுகம் நன்று..( சுயபுராணத்தை குறைத்திருக்காம்.. கண்ணை கட்டிவிட்டது..ஹி..ஹி.. என்னோட கண்ணை )
ஆமா.. பச்சை ..பச்சைனு சொல்லியிருக்கீங்களே.. பச்சையா இருக்காதே...
இருங்க போய் அவரின் பதிவை படிச்சுட்டு வரேன்...
புதுப்பதிவர்களை, அவர்களின் நடையில் எழுதவிடவேண்டும்...
ஆமா.. இந்தியா..பாகிஸ்தான் பிரச்சனை இன்னுமா முடியவில்லை...?
:-)
வாழ்த்துக்கள் தலைவா
அவ்வளவுதானே.. ஃபாலோ பண்ணிடலாம்.. :-)
இதுவரை தெரியாது.. உங்க நண்பரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க பிரபாகரன்..
நீங்க சொன்னது உண்மைதான்.. இப்போ என் நிலமையும் அதேதான்.. என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்.. நானும் தமிழ்மணத்துல ரிஜிஸ்டர் பண்ணிதான் வச்சிருக்கன்.. உங்களை போன்ற ஒரு சில நண்பர்கள் மட்டுமே தொடர்ந்து கருத்து போடுறாங்க.. புதுசா யாருமே கருத்து போடுறதில்ல.. அட அது கடக்கட்டும்.. நண்பர்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.. பதிவு எழுதனும்னு நான் இவ்வுலகத்துக்கு வந்தாலும் என்ன பண்றதுனு ஒண்ணுமே புரியாம தான் இருந்தன்.. எனது பக்கங்களின் மேம்பாட்டுக்கு அதிகமாக என்னை ஊக்குவித்தவரும், சொல்லிகொடுத்தவரும்(இன்னமும் சொல்லிகொடுக்கிறார்..) பிரபாகர் என்பதில் நான் தெரிவித்து கொள்கிறேன்.. பிரபாகர் இல்லையென்றால் முதல் மூன்று பதிவோடு நானும் என் பதிவுலகத்திற்கு பெரிய பூட்டா வாங்கி போட்டிருப்பன்னு தான் தோணுது.. பிரபாகர் இப்ப ஒரு மூணு மாசமா ரொம்ப பிரபலமாயிருக்கார்.. ஆனா 2009ல் இருந்து எழுதுகிறார்.. அவரின் விடாமுயற்சியே என்னையும் இப்படியெல்லாம் பண்ணவைக்கிது.. யார் பதிவ படிக்காம போனாலும் பிரபாகர் பதிவ கண்டிப்பா படிச்சிடுவன்..
அப்பரம் பிரபாகர் உங்க நண்பரின் பதிவ நான் கண்டிப்பா தொடருகிறேன்..(கஷ்டம் நானறிவேன்..)
நல்லது, பார்த்துடலாம்.
தோழர் பாரி பதிவை பார்த்தேன்.. படித்தேன். நிஜமாகவே 'பச்சை' பசேல் என்று இருக்கிறது..!!
நீங்க திரும்பி பார்த்தது நன்றாக இருக்கிறது.....உங்க நண்பர் வலை பதிவை பார்கிறேன்
'நண்பேண்டா'
'நண்பேண்டா'
'நண்பேண்டா'
'நண்பேண்டா'
'நண்பேண்டா'
'நண்பேண்டா'
அருமை தமிழா வலைப்புவிலாவது தழிலுக்கு பெறுமை சேரடா!!!! செந்தமிழை செப்பம் அல்ல அல்ல சிற்பம் செய்யுமென உலகம் வாழ்த்துமோ தெரியவில்லை தமிழுக்கடிபணியும் புதியமனிதன் (இந்துஜன்) வாழ்த்துகிறேன். வாழ்வாங்கு வாழ்வாயாக!!!!!! தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க..!
அருமை தமிழா வலைப்புவிலாவது தழிலுக்கு பெறுமை சேரடா!!!! செந்தமிழை செப்பம் அல்ல அல்ல சிற்பம் செய்யுமென உலகம் வாழ்த்துமோ தெரியவில்லை தமிழுக்கடிபணியும் புதியமனிதன் (இந்துஜன்) வாழ்த்துகிறேன். வாழ்வாங்கு வாழ்வாயாக!!!!!! தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க..!
பச்சைத்தமிழன்...... இந்தப் பேருக்கு சொந்தகாரர், டாகுடர். கேப்டன் அவர்கள் மட்டுமே.........! இருந்தாலும் புதுப் பதிவர்னால இத்தோட விடுறேன்... !
pachaiththamizan? ok ok i will c
நானும் போய் படித்தேன்! வாழ்த்துக்கள் அவருக்கு!
நண்பா எங்களையெல்லாம் கண்டு கொள்ள மாட்டீர்களா? கவனிப்பாரின்றி (வாசிக்கும் சில ஜீவன்கள் நீங்கலாக) பாலைவனமாக கிடக்கிறது எனது வலைப்பூ... யாராவது வாங்கப்பா...
varunan-kavithaigal.blogspot.com
அவருடைய வலைத்தலத்த பார்த்தேன் ஒரே பச்சையா இருக்கு
நண்பர் பச்சைக்கு வாழ்த்துக்கள்.
செல்வங்களா...நான் பொழுதுப் போக்கிற்காக எழுதுகிறேன்ப்பா..நீங்கள் போட்டிப் போடறதைப் பார்த்தால் இந்த வலைப் பூவில் லட்சம் லட்ச்சமா சமபாதிரிக்கிற மாதுரி தெரியுது..!!!
எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லுங்கப்பா.
நண்பனை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி பிரபா நாங்களும் பின் தொடருவோம்லே..நண்பன்டா....
Nallaruppom nallaruppom...
Ellarum nallaruppom...
Atharavu thaana thantha pochu..
Tamizhan aache..
நண்பரின் வலைப்பூ அறிமுகம் ,உங்கள் நல்ல எண்ணத்தை காட்டுகிறது.
நானும் போய் படித்தேன் அவருக்கு வாழ்த்துக்கள்!
@ எல் கே, எப்பூடி.., பாரி தாண்டவமூர்த்தி, பார்வையாளன், SUREஷ் (பழனியிலிருந்து), ரஹீம் கஸாலி, உருத்திரா, இக்பால் செல்வன், Chitra, விக்கி உலகம், சங்கவி, டிலீப், பிரபு எம், வருண், வழிப்போக்கன் - யோகேஷ், அஞ்சா சிங்கம், ஜீ..., Speed Master, Harini Nathan, Lakshmi, பாரத்... பாரதி..., Pachai Tamizhan, sakthistudycentre.blogspot.com, நா.மணிவண்ணன், பட்டாபட்டி...., யோ வொய்ஸ் (யோகா), பதிவுலகில் பாபு, தம்பி கூர்மதியன், இரவு வானம், சிவகுமார், சௌந்தர், சே.குமார், புதிய மனிதா, பன்னிக்குட்டி ராம்சாமி, சி.பி.செந்தில்குமார், வைகை, வருணன், THOPPITHOPPI, அன்பரசன், அந்நியன் 2, டக்கால்டி, இளம் தூயவன், யோவ்
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
பச்சைத்தமிழனின் தளத்தில் பின்தொடர்பவராக இணைந்தவர்களுக்கு என்னுடய ஸ்பெஷல் தேங்க்ஸ்...
@ எப்பூடி..
// எவ்ளோ எமவ்ண்டு இதுக்காக அவர்கிட்ட வசூலிச்சீங்க :-))))) //
இது நட்புக்காக செய்த கடமை...
@ பாரி தாண்டவமூர்த்தி
// என்னைப்பற்றி ஒரு தனி பதிவே இட்டதற்கு மிகவும் நன்றி நண்பா...... //
ம்ம்ம்... இது எனது கடமை நண்பா... மேன்மேலும் எழுதி பதிவுலகில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்...
@ SUREஷ் (பழனியிலிருந்து)
// பெயரில் த் போட நீங்கள்தான் காரணமா? //
ஐயோ... இல்லைங்க... அதுக்கும் நான் காரணம் கிடையாது... எல்லாம் அவருடைய சிந்தனையே...
@ Lakshmi
// ஓ, ஆரம்பத்தில் உங்களுக்கே அந்த!!!!
நிலமைதானா. அப்ப நாங்கள்ளாம் என்னத்தைச்சொல்ல. அந்த நண்பரின் ப்ளக்கும்போய்ப்பார்த்தேன் பாலோவர் ஆப்ஷனே இல்லியே? //
மேடம்... அது என்ன எனக்கேன்னு ஒரு இழுவை.... நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க... அப்புறம் பாலோயர் ஆப்ஷன் இருக்குதே... சரியா பாருங்க மேடம்...
@ பாரத்... பாரதி...
// நீங்களும் கூட வாரத்திற்கு ஒரு புதிய பதிவரை அறிமுகம் செய்யலாமே... //
நிச்சயமாக ஆனால் தனி இடுகையாக இல்லாமல் எனது பல்சுவைப்பதிவின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன்...
// புத்தாண்டு பிறந்தததிலிருந்து உங்கள் சுயபுராணம் அதிகமாக வருவதாக தோன்றுகிறது. //
ஆமாம்... குறைத்துக்கொள்கிறேன்... ஆனால் இன்னும் சில தினங்களில் நூறாவது பதிவு வருது... அதுக்கு மறுபடியும் கொஞ்சம் சுயபுராணம் பாட வேண்டி இருக்கு...
@ Pachai Tamizhan
// Thank for your wishes.. //
ஆனா மன்னிக்கணும் பாஸ்... பதிவு உங்களைப் பற்றியது அல்ல... இது வேற பச்சைத்தமிழன்...
@ நா.மணிவண்ணன்
// ஆமாமா .எனக்கிட்டையும் சரக்கு தீந்து போச்சு . பதிவு போடுவதற்கு ஒரு ஐடியாவும் கிடைக்கமாட்டேங்குது .கொஞ்ச நாள் பினூட்டமட்டும்தான் //
நம்மகிட்ட ஏகப்பட்ட ஐடியா கைவசம் இருக்கு... பதிவெழுத தான் நேரம் இல்லை...
@ பட்டாபட்டி....
நீங்கள் என்னுடைய தளத்திற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி பட்டாபட்டி அவர்களே...
// ஆமா.. இந்தியா..பாகிஸ்தான் பிரச்சனை இன்னுமா முடியவில்லை...? //
இதுக்கு என்ன அர்த்தம்...? புரியலையே...
@ தம்பி கூர்மதியன்
ரொம்ப டச்சிங்கா எழுதிட்டீங்க கூர்மதியான் அவர்களே... என்னிடம் வார்த்தைகள் இல்லை...
//பிரபாகர் இப்ப ஒரு மூணு மாசமா ரொம்ப பிரபலமாயிருக்கார்.. ஆனா 2009ல் இருந்து எழுதுகிறார்.. //
இப்ப ஒரு மூணு மாசமா வேலை இல்லாம இருக்கேன்... அதான் அப்படி...
@ வருணன்
// நண்பா எங்களையெல்லாம் கண்டு கொள்ள மாட்டீர்களா? கவனிப்பாரின்றி (வாசிக்கும் சில ஜீவன்கள் நீங்கலாக) பாலைவனமாக கிடக்கிறது எனது வலைப்பூ... யாராவது வாங்கப்பா... //
என்ன நண்பரே... இப்படியெல்லாம் கேட்டு கஷ்டப்படுத்துறீங்க... நாங்க இருக்கோம்... இதோ வர்றேன்...
@ அந்நியன் 2
// செல்வங்களா...நான் பொழுதுப் போக்கிற்காக எழுதுகிறேன்ப்பா..நீங்கள் போட்டிப் போடறதைப் பார்த்தால் இந்த வலைப் பூவில் லட்சம் லட்ச்சமா சமபாதிரிக்கிற மாதுரி தெரியுது..!!!
எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லுங்கப்பா. //
நாங்களும் அதே பொழுதுபோக்கிற்காகத்தான் எழுதறோம் பாஸ்... நான் போட்டி போடுறதா உங்களுக்கு யார் சொன்னது... நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க...
தொடர் பதிவு எழுதியதக்கு மிக்க நன்றி நண்பரே...
அருமையாக சொல்லி இருக்கிறிர்கள் தொடக்கத்தில் எல்லோர்க்கும் இருக்கும் பிரச்சினைகள்..
தொடர்ந்து நிறையா எழுதுங்கள..
பதிவுலக சயின்ஸ் பிக்ஷன் எழுத்தாளர் கணேஷ் """"
ஆனால் இதுதான் கொஞ்சம் ஓவரா இருக்குற மாதிரி இருக்கு இல்லையா))))
எப்படியோ டெல்லி க்கு ஆட்டோ வரமா இருந்தா சரி))))
அருமை :)
உங்கள் நண்பர் பதிவு பாத்தேன் அதுவும் சூப்பர்
பிரபாகரன், நீங்க பதிவுலகில் இந்த நிலைக்கு வர இவ்வளவு கஷ்டப் பட்டிருக்கீங்களா! உங்க பதிவுகளை படிச்சிகிட்டு வரேன், நீங்கள் விபரங்களைச் சேகரிப்பதும், அதை அழகாக பதிவாகப் போடுவதும் அதற்கும் மேல் எல்லா பிரபல பதிவர்களும் உங்களுக்கு நண்பர்களாகவும் இருப்பதும் வியக்க வைக்கிறது. மேலும் படங்களைப் பார்த்துவிட்டு அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து எழுதுவதும், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் detailed அக எழுதுவதும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி!
>எனக்கு முன்பே வலைப்பூ ஆரம்பித்து >நடத்தி வந்த எனது கல்லூரி நண்பர் >ஒருவரைப் பற்றி கொஞ்சம் >தாமதமாகவே தெரிந்துக்கொண்டேன். >ஆனால் அவர் நடத்தி வருவது >தொழில்நுட்பம் சார்ந்த ஆங்கில >வலைப்பூ. (getch.wordpress.com). >அந்த நண்பர் மூலமாக பதிவர் >வே.மதிமாறன் அவர்களின் வலைப்பூ >அறிமுகமாக அங்கே தான் >தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை >முதல்முறையாக கண்டேன். சும்மா >சேர்ந்து வைப்போம் என்று >தமிழ்மணம் தளத்தில் ரெஜிஸ்டர் >செய்ய அண்ணன் உண்மைத்தமிழன் >உட்பட மூன்று பேர் பின்னூட்டம் >போட்டார்கள். அப்படி ஆரம்பித்தது >தான் எனது பதிவுலக வாழ்க்கை.
அனந்த கண்ணீர்!
உண்மைதான் நண்பரே
நாம் எதோ எழுதிருக்கிறோம் என்று சொன்னால் நம்ம வைத்து ஓட்டுரதுக்கே பல பேரு ரெடியா இருப்பாங்க
ஆனால் நமக்கு அங்க அங்கீகாரமே கிடைக்காது
இது எனக்கும் நடந்தது
Post a Comment