12 January 2011

சிறுத்தை சீறுமா...?

வணக்கம் மக்களே...

தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் கார்த்தியின் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளிவர இருக்கும் படம் சிறுத்தை. ஒரு மாஸ் எண்டர்டேயினர் என்று சொல்லப்படும் இந்தப்படம் வெற்றி பெறுமா...? அல்லது மண்ணைக் கவ்வுமா...? என்பது குறித்த ஒரு அலசல்.

பாடல்கள் எப்படி...?
முதல்முறையாக கார்த்திக்காக இசை அமைத்திருக்கிறார் வித்யாசாகர். குத்துப் பாடல்களுக்கு பேமஸ் என்று சொல்லப்படும் வித்யாசாகர் வாத்தியங்களின் விளையாட்டு எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்.

மொத்தம் ஐந்து பாடல்கள்...
-          நான் ரொம்ப ரொம்ப... என்று ஆரம்பிக்கும் பாடலை கேட்கும்போதே ஹீரோ அறிமுகப் பாடல் என்று தெளிவாக தெரிகிறது. இந்தப் பாடலை பற்றி நிறைய சொல்ல வேண்டி இருப்பதால் அதை பிற்பாதியில் பார்ப்போம்.
-          செல்லம் வாடா செல்லம்... என்று ஆரம்பிக்கும் பாடல் உதித் நாராயண் சுர்முகி குரலில் ஒரு மெலோடி டூயட் பாடல். எல்லா தமிழ் படங்களிலும் ஒரு பாடலையாவது உதித் நாராயண் பாட வேண்டும் என்று ஒரு செண்டிமெண்ட் போல.
-          அழகா பொறந்துபுட்டா... என்ற பாடல் மாலதி லஷ்மன் குரலில் ஆரம்பிக்கும்போதே ஐட்டம் பாடல் என்று தெரிந்துவிடுகிறது. மேக்னா நாயுடு ஆட்டம் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.
-          தாலாட்டு... என்று ஆரம்பிக்கும் பாடல் உண்மையிலேயே ஒரு தாலாட்டுப் பாடல். ஸ்ரீவர்த்தினி குரலில் வரும் இந்த சிறிய பாடல் ஏதாவதொரு செண்டிமன்ட் காட்சியின் பிண்ணனியில் சேர்க்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
-          அடி ராக்கம்மா ராக்கு... என்ற பாடல் வழக்கமாக தமிழ் சினிமாக்களில் க்ளைமாக்ஸ் சீனுக்கு முன்னாடி ஒரு குத்துப்பாடல் வருமே அப்படி ஒரு பாடல். முதல்முறை கேட்கும்போதே பாடல் நிச்சயம் சூப்பர்ஹிட் என்று சொல்லத் தோன்றுகிறது.

டைட்டில் விளக்கம்
"பகலில் வேட்டையாடும் ஒரே விலங்கு சிறுத்தைதான். பயமில்லாததும் எதிரியை நேருக்கு நேர் மோதுவதும் சிறுத்தைதான். அதன் வேகம் இணையில்லாதது. இப்படத்தின் நாயகனின் கதாபாத்திரமும் இதே குணம் கொண்டதுதான், அதனால்தான் இந்தப் பெயரை படத்தின் தலைப்பாக வைத்தேன்" என்று சொன்னது நானில்லை. படத்தின் இயக்குனர் சிவா.

கதைதான் என்ன...?
மறுபடியும் ஒரு தெலுங்கு ரீமேக். ஆமாம்... ரவிதேஜா, அனுஷ்கா நடித்து 2006ம் ஆண்டு வெளிவந்த விக்ரமாற்குடு என்ற தெலுங்கு படத்தின் ரிமேக்கே சிறுத்தை. வேட்டைக்காரன் படம்கூட இந்தப்படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. பின்னர் கதையில் பல மாற்றங்களோடு வெளிவந்தது வேட்டைக்காரன்.

படத்தில் கார்த்திக்கு இரட்டை வேடம். ஒருவர் திருடன், இன்னொருவர் போலீஸ் (யப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே... பழைய எம்.ஜி.ஆர் காலத்து கதை). பிக்பாக்கெட் அடித்துக்கொண்டு சந்தானத்துடன் காமெடி, தமன்னாவுடன் காதல் என்று லூட்டி அடித்துக்கொண்டிருக்கும் கார்த்தியை திடீரென ஒரு சிறுமி அப்பா என்று கைகாட்ட அதன் பிண்ணனியை திருடன் கார்த்தி ஆராய்கிறார். அப்போது அவரைப்போலவே உருவத்தோற்றம் கொண்ட போலீஸ் கார்த்தியைப் பற்றி தெரிந்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில், சந்தர்ப்ப சூழ்நிலையால் போலீஸ் கார்த்தி இறந்துபோக அவரது இடத்தில் ஆள்மாறாட்டம் செய்கிறார் திருடன் கார்த்தி. போலீஸ் கார்த்தியின் மரணத்திற்கு காரணமாக இருந்த சமூக விரோத கும்பலை சிறுத்தை வேட்டையாடியதா என்பதே மீதிக்கதை...

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு போலீஸ் கதை. வழக்கம்போலவே இந்தப் போலீஸும் ரொம்ப நேர்மையானவர், நல்லவர், வல்லவர், துடிப்பானவர், முரட்டுத்தனமானவர் etc etc.

கார்த்தி ஐந்தாவது வெற்றி...?
ஒரு ஹீரோ தான் இதுவரை நடித்திருக்கும் நான்கு படங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது அபூர்வம் + ஆச்சர்யம். (சிலபேர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை மொக்கை என்றும் பிளாப் என்றும் கூறுவார்கள். அதனை நான் ஏற்கமாட்டேன். சொல்லப்போனால் கார்த்தியின் தற்போதைய பெஸ்ட் ஆயிரத்தில் ஒருவனே). இந்தப் படத்தில் கார்த்தி ஆக்ஷனிலும் நகைச்சுவையிலும் கலக்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஐந்தாவது மாடியில் இருந்து டூப் போடாமல் குதித்திருக்கிறாராம். ஒரு பாடல் காட்சியில் ஒன்பது விதமான கெட்டப்களில் தோன்றி அசத்துவது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும்.

தமன்னா பொன்னா...? மண்ணா...?
வழக்கமாக ஆக்ஷன் படங்களில் ஹீரோயினுக்கு வேலை இருக்காது. வெறும் பாடல்காட்சிகளில் இடுப்பு காட்டுவதோடு சரி. அது தவிர்த்து சில காட்சிகளில் லூசுத்தனமாக வந்துபோவார். (கேட்டால் பக்கத்துவீட்டுப் பெண் போல துறுதுறு கேரக்டராம்). இந்தப் படத்தில் தமன்னா நகைச்சுவை காட்சிகளில் அருமையாக நடித்திருப்பதாக சொல்லப்பட்டாலும் நம்ப முடியவில்லை. மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் காமெடியாகவா தெரிகிறது...?

சந்தானம் சந்தணம் மணக்குமா...?
இப்போது வரும் பெரும்பாலான படங்களை தூக்கி நிறுத்துவதே சந்தானத்தின் நகைச்சுவை தான். இந்தப் படமும் அந்த வரிசையில் இடம் பெறலாம். ட்ரைலரில் வரும் காட்சிகளைப் பார்த்தால் சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன் போன்ற படங்களின் காமெடி காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் ஒரிஜினல் பதிப்பான விக்ரமாற்குடுவில் இல்லாத வண்ணம் புதிதாக எடுக்கப்பட்டுள்ளதாம்.

ரசிகன் தீர்ப்பு
எனக்கென்னவோ தெலுங்கு ரீமேக் படங்களின் மீது துளியளவு கூட நம்பிக்கை இல்லை. அதிலும் இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் பழிவாங்கும் கதையை வைத்து காய் நகர்த்துவார்கள் என்று புரியவில்லை. இந்தப் படம் கார்த்தியின் கலையுலக வாழ்வில் முதல் அடியாக இருக்கக் கூடும் என்பது எனது கணிப்பு.

நன்றி:

டிஸ்கி 1: படத்தைப் பற்றிய முன்னூட்டமே மிகவும் நீளமாக போய்விட்டதால் நான் ரொம்ப ரொம்ப... பாடலின் மீதுள்ள எனது கொலைவெறியை வேறொரு பதிவில் தீர்த்துக்கொள்கிறேன்.

டிஸ்கி 2: பதவில் காணொளியை இணைப்பது எனக்கு பிடிக்கவில்லை. வலைப்பூவின் வேகம் குறைந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை. அதனால் படத்தின் ட்ரைலரை இணைக்கவில்லை. பார்த்தே ஆகவேண்டும் என்று துடிப்பவர்கள் இந்த இணைப்பை சொடுக்கி பார்த்துக்கொள்ளவும்.

டிஸ்கி 3 (மீள் டிஸ்கி): வலைப்பூவின் ஓரமாக இருக்கும் "பொங்கல் ரேசில் ஜெயிக்கப்போவது...?" கருத்துக்கணிப்பு ஜோதியில் நீங்களும் ஐக்கியமாகுங்க...

டிஸ்கி 4: அது என்ன மீள் டிஸ்கி என்று கேட்பவர்களுக்கு, அந்த டிஸ்கி ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் எழுதியது. ஸோ, மீள் பதிவு மாதிரி மீள் டிஸ்கி.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

54 comments:

ம.தி.சுதா said...

காவலனை விட சிறப்பாக இருக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது..

பிபி உங்களை விட நம்மளுக்க வயச கம்மி தான்.. ஹ..ஹ..ஹ..

pichaikaaran said...

இரட்டை வேடம் சிறப்பாக செய்யகூடிய ஒரே நடிகர் அஜித் மட்டுமே . சரியா ?

டிலீப் said...

சிறுத்தை காவலனுக்கு முன்னால் சுருண்டும் பிரபா

தமிழன்-கோபி said...

Siruthai padathavida pathivu romba nalla irukku....

முத்தரசு said...

பொங்கல் முடிந்த பின் படம் பார்த்து விட்டு என் கருத்தை பின்னோட்டம் போடுறேன் அதுவரை......

THOPPITHOPPI said...

//சிறுத்தை சீறுமா...?//

நம் பதிவுலக ஜாம்பவான்கள் விமர்சனம் பார்த்தால் பொது

Anonymous said...

>"பகலில் வேட்டையாடும் ஒரே விலங்கு >சிறுத்தைதான். பயமில்லாததும் எதிரியை
>நேருக்கு நேர் மோதுவதும் சிறுத்தைதான்.
>அதன் வேகம் இணையில்லாதது.


This is wrong!
Leopard is a cowardly animal. It fears human beings. I suggest you to research on this topic. you will get interesting results.
I base this comment on the facts I read in the book by Jim Corbett.
--
Thank You!
Manoj
Micmanz Blog

Ram said...

இப்போதெல்லாம் முன்னோட்டம் அதிகமாகுது உங்ககிட்ட.???

மீள் டிஸ்கி- என்ன ஒரு புத்திசாலித்தனம்..

படத்தோட டிரைலர பார்த்ததுமே படத்த பாக்ககூடாதுன்னு முடிவு பண்ணிட்டன்.. அதுவம் கார்த்தி 'ரத்தினவேல் பாண்டியன்'னு உரக்க பேசுறது அப்படியே தெலுங்கு படத்த பாத்தாப்புல இருக்கு.. இருந்தாலும் காவலன் பக்கம் போறதுக்கு இந்த சிறுத்தை பக்கம் போனாலாவது சாகாம தப்பிக்கலாம்..

@Manoj: Thanks for the info.:-) but i request u to read the further lines as he had indicated that those are the words from the director's mouth and nt from his own...

அஞ்சா சிங்கம் said...

சிறுத்தை நன்றாக ஓடும் ...........
(டிஸ்கவரி சானலில் பார்த்திருக்கிறேன் )

Arun Prasath said...

பயமில்லாததும் எதிரியை நேருக்கு நேர் மோதுவதும் சிறுத்தைதான்.//

சிறுத்தை சிங்கத்துக்கு பயப்படுமாமே... discovery ல காமிச்சாங்க.. அதான் கேட்டேன் :)

அஞ்சா சிங்கம் said...

பூனை இனத்தில் மிகவும் பயந்தாங்ல்லி விலங்கு சிறுத்தைதான் .......................

Indujan said...

சிறுத்தை சீறும் என்பது பழையது. இந்த சிறுத்தை வித்தியாசமா ஏதாவது செய்யுன்னு நெனக்கிறேன்.

என்றும் அன்புடன் - புதிய மனிதன்

Speed Master said...

படம் உ ஊ வா?

FARHAN said...

சிறுத்தை சீரும இல்லை பம்புமா என்று பொறுத்திருந்து பாப்போம்

'பரிவை' சே.குமார் said...

நல்ல பார்வை.

ADMIN said...

சிறுத்தை சீறுகிறதோ இல்லையோ... தங்களின் ஒவ்வொரு விமர்சனமும் சீறிப் பாய்ந்துகொண்டு இருக்கிறது... சீறிப் பாய்ந்தமைக்கும் நன்றி..!பிபி..!

Unknown said...

பார்வையாளன் said...

இரட்டை வேடம் சிறப்பாக செய்யகூடிய ஒரே நடிகர் அஜித் மட்டுமே . சரியா ?

சரிதான்

Unknown said...

சிறுத்தை சீறுமா ?

Unknown said...

டிலீப் said...

சிறுத்தை காவலனுக்கு முன்னால் சுருண்டும் பிரபா


இந்த கமெண்ட்டிர்க்காகவே சிறுத்தை சீறும்

NKS.ஹாஜா மைதீன் said...

சிறுத்தை சீறுமா என்று பார்ப்போம்....

சி.பி.செந்தில்குமார் said...

>>>>மேலும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஐந்தாவது மாடியில் இருந்து டூப் போடாமல் குதித்திருக்கிறாராம்

WHERE? 5TH TO 4TH? OR GROUND FLOUR.

சி.பி.செந்தில்குமார் said...

MY GUESSING SIRUTHTHAI UTTER FLOP AND KAAVALAN PONGAL RELEASE HIT..

சி.பி.செந்தில்குமார் said...

THE VIEWS ABOUT DHAMANAA IS NOT SO GOOD. C IS ALSO A GOOD ARTIST.

ஆதவா said...

சிறுத்தையைப் பத்தி ஒரு தகவல் சொல்றேனுங்க.... என்னதான் அது வேகமா ஓடக்கூடிய விலங்குன்னாலும் வேட்டையாடியதை அதைவிட கீழ்நிலையிலுள்ள விலங்குகளிடமோ, பறவைகளிடமோ பறிகொடுக்கக் கூடிய விலங்கு சிறுத்தை.. அவ்.....

பொங்கலுக்கு ஆடுகளம் போலாம்னு இருக்கேன். முடிஞ்சா காவலன்.. அப்பறமாத்தான் சிறுத்தை சிங்கமெல்லாம்..

அப்ப இளைஞ்சன்?

Unknown said...

தியேட்டரை விட்டு ஓடாம இருந்தா சரி :-)

Unknown said...

சிறுத்தை ஹிட்டாகுமோ இல்லையோ உங்களின் இந்த பதிவு ரசிக்க வைத்ததால் ஹிட்டாகி விட்டது..

Unknown said...

//சிறுத்தை நன்றாக ஓடும் ...........
(டிஸ்கவரி சானலில் பார்த்திருக்கிறேன் )//
aha...

Sivakumar said...

வரும் ஞாயிறு 'சிறுத்தை' செல்கிறேன். பார்த்துவிட்டு சொல்கிறேன்..!!

Sivakumar said...

I go for this film only for THAMANNAA..Other things doesnt matter.

பாரி தாண்டவமூர்த்தி said...

நல்ல விமர்சனம் பிரபா..நானும் அந்த தெலுங்கு படத்தோட மலையாள dubbing பார்த்தேன். படம் ஓகே....

Anonymous said...

this two film not realsed because of sun tv and dmk

ஆனந்தி.. said...

அதுக்குள்ளே விமர்சன ட்ரைலர் ஆ...கொஞ்சம் ஓவர் ஆ இல்ல இது...?:))))

தமிழ்வாசி பிரகாஷ் said...

இப்பவே விமர்சனம் போட்டு சூடு ஏத்துறீங்க. ம்ம்ம்ம் கலக்குங்க...

தூயவனின் அடிமை said...

வந்துட்டேன் நண்பரே.

எப்பூடி.. said...

//சிலபேர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை மொக்கை என்றும் பிளாப் என்றும் கூறுவார்கள். அதனை நான் ஏற்கமாட்டேன். சொல்லப்போனால் கார்த்தியின் தற்போதைய பெஸ்ட் ஆயிரத்தில் ஒருவனே//

ஆயிரத்தில் ஒருவன் நல்ல படம்தான், அதுக்காக அதை வெற்றி என்று சொல்வது சரியாகப் படவில்லை. உங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் பிடித்தது போல வேறு ஒருவருக்கு ராவணன் பிடித்திருக்கலாம் அதற்காக அவர் அதை வெற்றி என்றால் ஒத்துக் கொள்வீர்களா? எமக்கு பிடித்த படங்களை வெற்றிப்படங்கள் என்று என்னும் மனோபாவம் தவறானது. (எனக்கும் ஆயிரத்தில் ஒருவன் பிடிக்கும் என்பதை எனது முன்னைய பதிவுகளை படித்திருந்தால் தங்களுக்கு புரியும் )

எப்பூடி.. said...

//குத்துப் பாடல்களுக்கு பேமஸ் என்று சொல்லப்படும் வித்யாசாகர் வாத்தியங்களின்//

வித்யா குத்துபாடல்களிலும் கலக்குபவர்தான், ஆனால் வித்தியாசாகர் பட்ட பெயரே 'மெலடிகிங்' என்பதுதான்

எப்பூடி.. said...

//வலைப்பூவின் ஓரமாக இருக்கும் "பொங்கல் ரேசில் ஜெயிக்கப்போவது...?" கருத்துக்கணிப்பு ஜோதியில் நீங்களும் ஐக்கியமாகுங்க...//

எது ஜெயிக்கும் என்று ஆரூடம் கூற முடியாவிட்டாலும் நிச்சயம் ஆடுகளம் 2011 இன் மிகச்சிறந்த படைப்பாக வெறும் என்று நம்பலாம்.

Unknown said...

நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்னு நினைக்கிறேன்.. உங்களுடைய அலசலும் அசத்தல்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடைசில கார்த்தியும் ரீமேக்குல? டாகுடர் எவ்வழி மக்களும் அவ்வழி.......!

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும் சிறுத்தை சீறுமா? பதுங்குமா? படுக்குமா வென்று....

Philosophy Prabhakaran said...

@ ம.தி.சுதா, பார்வையாளன், டிலீப், தமிழன்-கோபி, மனசாட்சி, THOPPITHOPPI, getch, தம்பி கூர்மதியன், அஞ்சா சிங்கம், Arun Prasath, புதிய மனிதா, Speed Master, FARHAN, சே.குமார், தங்கம்பழனி, நா.மணிவண்ணன், NKS.ஹாஜா மைதீன், சி.பி.செந்தில்குமார், ஆதவா, இரவு வானம், பாரத்... பாரதி..., சிவகுமார், Pari T மூர்த்தி, ஆனந்தி.., தமிழ்வாசி - Prakash, இளம் தூயவன், எப்பூடி.., பதிவுலகில் பாபு, பன்னிக்குட்டி ராம்சாமி, ரஹீம் கஸாலி

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ ம.தி.சுதா
// எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா... //

தினமும் சுடுசோறு பொங்குற நேரத்தை சரியா நாட் பண்ணிட்டீங்க... இனிமே தினமும் கரெக்ட்டா வந்திடுவீங்க தானே...

// பிபி உங்களை விட நம்மளுக்க வயச கம்மி தான்.. ஹ..ஹ..ஹ.. //

முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயற்சியா...? செல்லாது... செல்லாது...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// இரட்டை வேடம் சிறப்பாக செய்யகூடிய ஒரே நடிகர் அஜித் மட்டுமே . சரியா ? //

அப்படியெல்லாம் இல்லை... கமலை விட ஒரு சிறந்த நடிகர் இருக்கிறாரா என்ன...?

Philosophy Prabhakaran said...

@ டிலீப்
// சிறுத்தை காவலனுக்கு முன்னால் சுருண்டும் பிரபா //

நீங்க விஜய் ரசிகர்ன்னுரதால இந்த மாதிரி எல்லாம் அநியாயமாக பேசக்கூடாது...

Philosophy Prabhakaran said...

@ getch
// This is wrong!
Leopard is a cowardly animal. It fears human beings. I suggest you to research on this topic. you will get interesting results.
I base this comment on the facts I read in the book by Jim Corbett. //

மனோஜ்... நான் சொல்லவேண்டிய பதிலை நண்பர் தம்பி கூர்மதியான் சொல்லிவிட்டார்... தகவல்களுக்கு நன்றி... பொதுவாக படத்தின் தலைப்பு குறித்து இயக்குனர்கள் லூசுத்தனமாக ஏதாவது உளறுவார்கள்... அப்படி உளறியதுதான் அந்த பத்தி...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// இப்போதெல்லாம் முன்னோட்டம் அதிகமாகுது உங்ககிட்ட.??? //

இதுவரைக்கும் இரண்டுதான் போட்டிருக்கேன்... இது இன்னும் தொடரும்...

// காவலன் பக்கம் போறதுக்கு இந்த சிறுத்தை பக்கம் போனாலாவது சாகாம தப்பிக்கலாம்.. //

பேசாம ஆடுகளத்துக்கு போகலாமே...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// WHERE? 5TH TO 4TH? OR GROUND FLOUR.//

இரண்டுமே இல்லை... ஐந்தாவது மாடியில் நின்றுக்கொண்டு சின்னப்பிள்ளைகள் அடம் பிடிப்பதைப் போல அங்கேயே குதித்திருக்கிறார்... அதை ஊடகங்கள் பெரிதாக்கி விட்டன...

//THE VIEWS ABOUT DHAMANAA IS NOT SO GOOD. C IS ALSO A GOOD ARTIST. //

தமன்னா நல்ல நடிகைதான்... ஆனால் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லையே...

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// சிறுத்தையைப் பத்தி ஒரு தகவல் சொல்றேனுங்க.... என்னதான் அது வேகமா ஓடக்கூடிய விலங்குன்னாலும் வேட்டையாடியதை அதைவிட கீழ்நிலையிலுள்ள விலங்குகளிடமோ, பறவைகளிடமோ பறிகொடுக்கக் கூடிய விலங்கு சிறுத்தை.. அவ்..... //

சிறுத்தையை பற்றி நீங்கள் தந்த தகவல் கலக்கல் தலைவா...

// அப்ப இளைஞ்சன்? //

அவரை எல்லாம் லிஸ்டிலேயே சேர்ப்பது இல்லை...

Philosophy Prabhakaran said...

@ சிவகுமார்
// வரும் ஞாயிறு 'சிறுத்தை' செல்கிறேன். பார்த்துவிட்டு சொல்கிறேன்..!! //

நீங்க பார்த்தா என்ன நான் பார்த்தா என்ன...? சீக்கிரம் பார்த்துட்டு வந்து ரிசல்ட்டை சொல்லுங்க...

// I go for this film only for THAMANNAA..Other things doesnt matter. //

சிவா... நீங்க நடிகையின் அழகை எல்லாம் கூட ரசிப்பீர்களா... ஆச்சர்யமாக இருக்கிறது... அம்மாஞ்சி மாதிரி இருந்துட்டு இந்த வேலையெல்லாம் கூட செய்வீங்களா...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// ஆயிரத்தில் ஒருவன் நல்ல படம்தான், அதுக்காக அதை வெற்றி என்று சொல்வது சரியாகப் படவில்லை. உங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் பிடித்தது போல வேறு ஒருவருக்கு ராவணன் பிடித்திருக்கலாம் அதற்காக அவர் அதை வெற்றி என்றால் ஒத்துக் கொள்வீர்களா? எமக்கு பிடித்த படங்களை வெற்றிப்படங்கள் என்று என்னும் மனோபாவம் தவறானது. //

நீங்க சொன்னது சரிதான் நண்பரே... ஒப்புக்கொள்கிறேன்... எனினும் ஆயிரத்தில் ஒருவன் போட்ட பணத்தை எடுத்திருக்கும்...

// வித்யா குத்துபாடல்களிலும் கலக்குபவர்தான், ஆனால் வித்தியாசாகர் பட்ட பெயரே 'மெலடிகிங்' என்பதுதான் //

தகவலுக்கு நன்றி... உங்க சினிமா ஞானம் வியக்க வைக்கிறது...

Unknown said...

//இந்தப் படம் கார்த்தியின் கலையுலக வாழ்வில் முதல் அடியாக இருக்கக் கூடும் என்பது எனது கணிப்பு.//

அதுதான் ராக்கெட் ராஜா ரூபத்துல...
போனா மாசம் குப்புரபோட்ட செயற்கைக்கோள் மாதிரியோ, என்னவோ ?

நிகழ்வுகள் said...

சிறுத்தை பாயுமா தெரியாது, ஆனால் கார்த்தியும் தம்னாவும் "வீட்டை விட்டு பாயாமல்" இருந்தால் சரி தான்

Jayadev Das said...

சிறுத்தையை வேறு எந்த மிருகத்தாலும் வேகத்தில் அடித்துக் கொள்ளவே முடியாது. [மணிக்கு 150 கி.மீ.! ஆனால் ஓரிரு நிமிடங்களுக்கு மட்டும்தான், ஹி....ஹி....ஹி....]. ஆனால் சிங்கம், புலி போன்ற மற்ற மிருகங்கள் பார்த்து விட்டால் அவை ஓடிவந்து சிறுத்தை வேட்டையாடிய மிருகத்தை பறித்துக் கொள்ளும், . ஹையீனா [அதான் பார்க்கிறதுக்கு கிட்டத் தாட்ட சொறி புடிச்ச நாய் மாதிரியே அசிங்கமா இருந்துகிட்டு மத்த மிருகங்கள் தின்ன மிச்சம் மீதியையே தின்னுமே அது.] கூட சிருத்தையிடம் இருந்து பிடுங்கி கொண்டு ஓடிவிடும். சில சமயம் சிறுத்தையின் குட்டிகளை சிங்கம், புலி வந்து கொன்று போட்டுவிடும். சிறுத்தையால் ஒன்னும் பண்ண முடியாது. [ஸ்..... இதே போதும்னு நினைக்கிறேன்!!] //(சிலபேர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை மொக்கை என்றும் பிளாப் என்றும் கூறுவார்கள். அதனை நான் ஏற்கமாட்டேன். சொல்லப்போனால் கார்த்தியின் தற்போதைய பெஸ்ட் ஆயிரத்தில் ஒருவனே).// படம் ஓடவில்லை சார். படத்த எடுத்த செல்வராகவனே நொந்து போயிட்டாரு, வாங்கினவங்க தலை மேல துண்டு போட்டுகிட்டாங்க, ரீமா சென் செல்வராகவன் மேல இப்படி தப்பா படமா எடுத்துட்டாறேன்னு கடுப்பயிட்டங்க. [அது சரி, சிலர் உழைப்பாளி படம் கூட வெற்றி படம்னு பதிவு போடுறாங்க, சிவாஜி படமும் அமோக வெற்றி, வரலாறு காணாத வசூல்னு பீலா விடுறாங்க, பதிவருக்கு நடிகரைப் பிடிச்சு போச்சுன்னா இப்படி அள்ளி விடுவாங்களோ? உழைப்பாளி தோல்விப் படம்னு எல்லோருக்குமே தெரியும், சிவாஜி க்கு வெற்றியா, வீரமரனமான்னு தெரியலைன்னு தினமணிக் கதிரில் போட்டிருந்தார்கள், இப்போ நீங்க ஆயிரத்தில் ஒருவன் வெற்றீங்கறீங்க என்பா குழப்புறீங்க?]

Jayadev Das said...

//மேலும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஐந்தாவது மாடியில் இருந்து டூப் போடாமல் குதித்திருக்கிறாராம். //இந்த கிராபிக்ஸ் காலத்துல இதெல்லாம் தேவையா, படம் பார்ப்பவர்களுக்கு நீங்க நிஜமாவே குதிச்சாலும் ஒண்ணுதான், பொம்மையை தள்ளிவிட்டோ, கிராபிக்ஸ் செய்தோ எடுத்தாலும் ஒண்ணுதான். [நிஜமா குதிச்சார்னு போட்டா, அதுவே விளம்பரமாகி சிலர் அது எப்படின்னு பார்ப்போமேன்னு வரலாம். பாலசுப்ரமணியம் மூச்சு விடாமா பாடினார்னு புருடா விட்டாங்களே அப்படி. ஹி...ஹி...ஹி...ஹி...]