வணக்கம் மக்களே...
கடந்தவாரம், பிரபா ஒயின்ஷாப் விரைவில்ன்னு போட்டு ஒரு பில்டப் கொடுத்திருந்தேனே அதை உடைக்கிற நேரம் வந்தாச்சு. எஸ், நானும் பல்சுவைப்பதிவு எழுதப்போறேன். அவ்வப்போது, மனதில் தோன்றும் ட்விட்டர்த்தனமான கருத்துக்களை எல்லாம் தனிப்பதிவாக விவரிக்க முடியவில்லை. எனவே, இனி அவைகளை வெளிப்படுத்த இது ஒரு நல்ல தளமாக அமையும். இந்த முடிவை செய்தவுடன் பிரபல பதிவர்கள் பலரது பல்சுவைப் பதிவுகளை கூர்ந்து நோக்க ஆரம்பித்தேன். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு டெம்ப்ளேட் வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களது வலைப்பூக்களில் வண்டாக மொய்த்து ஆங்காங்கே கொஞ்சம் சுட்டு எனக்கான டெம்ப்ளேட் ஒன்றினை உருவாக்க முயற்சித்தேன்.
அதுபற்றி, விரிவாக கூறுவதற்கு முன்பு நான் டைட்டில் பிடித்த கதையை சொல்லியாக வேண்டும். பல்சுவைப்பதிவுக்கு தலைப்பு சரக்கு, சரக்கு நிமித்தமாக இருக்க வேண்டுமென்பது எனது விருப்பம். இதற்காக ரொம்ப யோசித்து, காக்டெயில் பக்கங்கள் அல்லது காக்டெயில் தத்துபித்துவங்கள் என்ற ஒரு தலைப்பை நீண்ட நாட்களுக்கு முன்னரே (கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு) யோசித்து வைத்திருந்தேன். அதன்பின்புதான் பதிவர் கும்மாச்சி ஏற்கனவே காக்டெயில் தலைப்பை வைத்திருப்பதைக் கண்டேன். மனமொடிந்து அவரிடம் கூட கொஞ்சம் புலம்பினேன். மறுபடி, எனது சிந்தனை சிறகடிக்க, சில தலைப்புகள் எட்டிப்பார்த்தன. அவை “சாராயக்கடை” – கேபிளின் சாப்பாட்டுக்கடை சாயலில், அப்புறம் “காக்டெயில் அண்ட் மாக்டெயில்” ஜாக்கியின் “சான்ட்வேஜ் அண்ட் நான்வெஜ்” ஸ்டைலில். சரி, இதையெல்லாம் கடைசி ஆப்ஷனாக வைத்துக்கொள்ளலாம் என்று நம்மகிட்ட கிளாஸ்மேட் (Glassmate) மாதிரி பழகும் விக்கி உலகம் வெங்கட்டிடம் கருத்து கேட்டேன். அவர் சரக்கு சந்தானம் என்ற உன்னதமான ஒரு தலைப்பை தந்தார். எனினும் அந்த தலைப்பு எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. காரணம், தலைப்பில் "இங்கே எல்லாம் கிடைக்கும்" என்ற ஒரு அர்த்தமே வரவில்லையே. மீண்டும் சிந்தனைக்கடலில் மூழ்கியபோது தான் வடிவேலு நடித்த காமெடி காட்சி மனதிற்கு வந்தது. என்ன காமெடியா...? அதாங்க “அல்லோ... பிரபா ஒயின்ஷாப் ஓனரா...? கடை எப்ப சார் திறப்பீங்க...?”. அப்படியே என்னோட பெயருக்கும் அது மேட்சிங்கா இருக்க அதையே தேர்வு செய்துவிட்டேன். எனிவே, ரொம்ப தேங்க்ஸ் வெங்கட்.
அடுத்ததா ஒரு லோகோ ரெடி பண்ணனும்னு ப்ரியமுடன் வசந்துக்கு ப்ரியமாக ஒரு மெயில் அனுப்பினேன். அவரும் பிரபா ஒயின்ஸ்ன்னு ரெண்டு லோகோ தயார் பண்ணி கொடுக்க, அவசர அவசரமாக அந்த வடிவேல் காமெடியை யூடியூபில் பார்த்து அது பிரபா ஒயின்ஸ் இல்லைங்க... பிரபா ஒயின்ஷாப் என்று அவருக்கு பதில் அனுப்பினேன். மேலும் லோகொவில் கண்டிப்பாக இந்த பாட்டில்தான் வேண்டுமென அடம்பிடித்து இந்த லோகோவை செய்து வாங்கினேன். வசந்த்ஜி, உங்களுக்கும் எனது நன்றிகள்.
இந்தக்கடையில் என்னென்ன சரக்கு வைக்கலாம் என்பது அடுத்தக்கட்ட திட்டம். முன்னாடி சொன்னமாதிரி பிரபலங்களின் வலைப்பூக்களை பார்த்து சில விஷயங்களை சேகரித்தேன்.
இந்த வார தத்துவம்: தத்துப்பித்துவங்கள்ன்னு பேர் வச்சிட்டு தத்துவம் சொல்லாமலா...? வாரம் ஏதாவதொரு வரலாற்று நாயகரின் மேற்கோள்கள், தத்துவங்கள் இங்கே கூறப்படும்.
எனக்குப் பிடித்த பாடல்: ஒரு பாடலை கேட்டால் அன்றைய தினம் முழுவதும் அந்தப் பாடலையே உதடுகள் முனுமுனுத்துக்கொண்டிருக்குமே. அந்த மாதிரி, அந்த வாரம் முழுவதிலும் முனுமுனுக்க வைத்த பாடலைப் பற்றி சில வரிகள்.
வலைப்பூ அறிமுகம்: நான் ஏராளமான வலைப்பூக்களை பின்தொடர்ந்து வரும் விஷயம் அறிந்ததே. சமயங்களில் பிரமாதமாக எழுதும் பதிவர்கள் கூட வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்கள். இங்கே அவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
புகைப்படம்: எங்கேயோ பார்த்து ரசித்து அடடா சொல்ல வைத்த புகைப்படங்களை சேகரித்து வைத்திருக்கிறேன். வாரம் ஒரு புகைப்படத்தினை இணைக்கிறேன்.
ஜோக்: எத்தனையோ எஸ்.எம்.எஸ்களை தாண்டிவந்தாலும் சில எஸ்.எம்.எஸ்கள் மட்டுமே எனது இன்பாக்ஸில் தாங்கும் பாக்கியத்தை பெறும். அத்தகைய குறுந்தகவல்களில் இருந்து ஏதாவதொரு ஜோக்.
18+ சமாச்சாரம்: நான் கண்டிப்பாக 18+ மேட்டர்களுக்கு எதிரானவன் அல்ல. இருப்பினும் அந்த மாதிரி ஜோக்குகளுக்கு எதை எல்லையாக எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. ஸோ, நோ ஏ ஜோக்ஸ். அதற்குப் பதிலாக ஜாக்கியின் ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட் ஸ்டைலில் நடிகையின் படத்தை இணைக்க விரும்புகிறேன், அதற்கான வரைமுறைகள் எனக்குத் தெரியும் என்பதால். இருப்பினும், முடிவு உங்கள் கையில்.
குறும்படம் / ட்ரெயிலர்: பொதுவாக வலைப்பூவில் வீடியோவை இணைப்பது எனக்குப் பிடிக்காது. எனினும், அதையும் ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருப்பதால் அதுபற்றி பரிசீலிக்கிறேன்.
அப்படியே, ரோட்டோரம் பார்த்த குழாயடி சண்டை, பஸ்சில் சைட் அடித்த பிகர், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமான்னு நிறைய எட்டிப் பார்க்கும். எல்லாத்தையும் பொறுத்துக்கோங்க. நான் மேலே குறிப்பிட்டுள்ள உப-தலைப்புகளை தவிர்த்து வேறு என்னென்ன செய்திகளைத் தரலாம் என்று உங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.
டிஸ்கி 1: புதிர்ப்போட்டியில் சரியான விடை சொன்னவர்களுக்கு இரண்டு மின்-புத்தகங்களை அனுப்பி வைத்திருக்கிறேன்... இன்னும் சிலர் அவர்களது மெயில் ஐடிக்களை குறிப்பிடவில்லை... குறிப்பிட்டால் பரிசு வந்து சேரும்...
டிஸ்கி 2: மற்றவர்கள் வலைப்பூக்களை படிக்க dashboard அவ்வளவு தோதாக இல்லை என்ற காரணத்தினால் எனது பர்சனல் பயன்பாட்டிற்காக இந்த பக்கத்தை உருவாக்கினேன்... உங்களுக்கும் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...
டிஸ்கி 1: புதிர்ப்போட்டியில் சரியான விடை சொன்னவர்களுக்கு இரண்டு மின்-புத்தகங்களை அனுப்பி வைத்திருக்கிறேன்... இன்னும் சிலர் அவர்களது மெயில் ஐடிக்களை குறிப்பிடவில்லை... குறிப்பிட்டால் பரிசு வந்து சேரும்...
டிஸ்கி 2: மற்றவர்கள் வலைப்பூக்களை படிக்க dashboard அவ்வளவு தோதாக இல்லை என்ற காரணத்தினால் எனது பர்சனல் பயன்பாட்டிற்காக இந்த பக்கத்தை உருவாக்கினேன்... உங்களுக்கும் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
110 comments:
முதல் கட்டிங் நமக்கு...
கடை அமோகமாக நடக்க வாழ்த்துகள். நிறைய விஷயங்களை ஒரு இடுகையில் சொல்வது நல்ல முயற்சி.
நானும் பேல்பூரி-ன்னு ஒரு பல்சுவைப் பதிவு போட்டேன். கன்டின்யூ பண்ணலே; இனிமே பண்ணிற வேண்டியது தான்.
6 மணியிலிருந்த கடை வாசலில் சுடு சோற்றுடன் காத்திருந்து களைத்தே போயிட்டேன் நம்மளுக்கு இந்த கட்டிங் பழக்கமெல்லாம் கிடையாது ஏதாச்சும் சாப்பிட இருந்தால் கொடுங்கள்....
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
எனக்கு தான் முதல் வாக்குகள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
வலைப்பூ அறிமுகம்: நான் ஏராளமான வலைப்பூக்களை பின்தொடர்ந்து வரும் விஷயம் அறிந்ததே. சமயங்களில் பிரமாதமாக எழுதும் பதிவர்கள் கூட வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்கள். இங்கே அவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
.......Very good idea. I like it.
......18+ சமாச்சாரம்: நான் கண்டிப்பாக 18+ மேட்டர்களுக்கு எதிரானவன் அல்ல. இருப்பினும் அந்த மாதிரி ஜோக்குகளுக்கு எதை எல்லையாக எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. ஸோ, நோ ஏ ஜோக்ஸ். அதற்குப் பதிலாக ஜாக்கியின் ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட் ஸ்டைலில் நடிகையின் படத்தை இணைக்க விரும்புகிறேன், அதற்கான வரைமுறைகள் எனக்குத் தெரியும் என்பதால். இருப்பினும், முடிவு உங்கள் கையில்.
.....நாங்களும் கடைக்கு வர மாதிரி ஓரளவுக்காகவது "clean " ஆகவும் இருக்குமா?
Please check the alignment... படிக்க கஷ்டமா இருக்கு
சித்ரா சொன்னதுதான் ரிப்பீட்டு.. :))
சித்ரா சொன்னதுதான் ரிப்பீட்டு.. :))
கலக்குங்க! :-)
நல்லா எழுத்துங்க, நாம கட்டிங் அடிக்காட்டியும் சைடிஷாவது தின்னுவோமில்ல.
Valthukkal anparae
அடுத்த ஜாக்கி ஆகனும்னு முடிவு பண்ணிடியலோ? சபாஷ் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
உங்க கடை டாஸ்மாக் சாதனைகளை முறியடித்து , வசூல் சாதனை படைக்க வாழ்த்துக்கள் ...
Super Boss,,Good idea..
http://enathupayanangal.blogspot.com
நல்ல ஐடியா தான்...சித்ரா சொன்னமாதிரி நாங்களும் வந்து விசிட் அடிக்கிற மாதிரி போஸ்ட் ஆ வே இருக்கட்டும்...:))
குட்
கேபிள் சங்கர்
பிரமாதம்.... அப்ப நிறைய விஷயங்களை நீங்க பகிர்ந்துக்குவீங்க... நாங்களும் தெரிஞ்சுக்குவோம்.
வாழ்த்துக்கள்!!!
நான் மிலிட்டரி ஆளு ! ! ! ! மிலிட்டரி சரக்கு கிடைக்குமா ????
ஒயின் ஷாப் திறப்பு விழானு சொல்லீட்டு ஒரு கட்டிங் கூட குடுக்கல , நான் என்ன" கட்டிங் "சொல்றேன்னு உங்களுக்கு தெரியும்
நல்ல ஐடியா.... எழுத சின்னச் சின்ன விஷயங்கள் நிறைய கிடைக்கும் போது இந்த மாதிரி போட்டுட்டா சுலபமா இருக்கும், படிப்பவர்களுக்கும் சுவராசியமா இருக்கும்! கலக்குங்க பிரபாகரன்!
நம்ம வசந்த் மாப்பு வழக்கம்போல கலக்கிப்புட்டாருய்யா... !
அப்புறம் இன்னொரு விஷயம், முடிந்த அளவுக்கு மேட்டரை சம அளவான பாராகிராப்களாக பிரித்து பிரித்து போடுங்கள், படிக்க சுலபமாக இருக்குமே!
வாழ்த்துக்கள் BOSS.உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.
அனைத்து தரப்பும் படிக்கும் படி உங்கள் தளம் இருப்பதே என் விருப்பம்.கலக்குங்க.
good work continue..
தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான முடிவு சீக்கிரம் க டையை ஆரம்பிங்க சார். இது வாழ்த்துக்கள்.
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம கடைக்கும் வந்துட்டு போங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி.
பெயரைப் போட்டு திறப்பு விழாவிற்குக் கூப்பிட்டவுடன் யோசனையுடன் தான் வந்தேன். ஏன் சுடச்சுட கொடுக்கப் போகிற சமாச்சாரங்களுக்கு இந்தப் பெயர்?
முன்னே என் சகோதரிகள் சொன்ன எச்சரிக்கை/வேண்டுகோள் ரிப்பீட்டு!
வாழ்த்துக்கள்!
நமக்கும் ஒரு கட்டிங்
>>> 'கலக்குங்க' பிரபா!! நானும் இதுபோல் ஒரு கலவை பதிவை இட யோசித்து வருகிறேன். நேரம் அமையாததால் தள்ளிப்போகிறது. உங்கள் தலைப்புகளை (எஸ்.எம்.எஸ்,வீடியோ போன்றவை) போல்தான் அநேகமாக என்னுடையதும் அமையும். சீக்கிரம் திறக்கிறேன் கடையை.
லீவு நாள்ளேயும் கடைய ஓபன் பண்ணி வச்சு நல்லா கல்லா கட்டுங்க பிரபா
//இந்தக்கடையில் என்னென்ன சரக்கு வைக்கலாம் என்பது அடுத்தக்கட்ட திட்டம். முன்னாடி சொன்னமாதிரி பிரபலங்களின் வலைப்பூக்களை பார்த்து சில விஷயங்களை சேகரித்தேன்.//
நிச்சயமாக உங்க சொந்த சரக்கா இருக்கட்டும். நீங்கள் எழுதபோவது யாராவது ஒருத்தருக்காவது ஒரு சிறு பலன் கிடைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது இருப்பது மாணவர் பருவம், நிச்சயம் நல்ல எத்தனையோ விசயங்களை உங்களால் சிந்திக்க முடியும் , எதோ இந்த சகோதரனின் சின்ன வேண்டுகோள்.
ஒரு ஒயின்ஷாப் திறப்பு விழாவுக்கு நாம எப்படி போறதுன்னு ஒரு தயக்கத்தில் இருந்தேன்... சரி அழைப்பு வந்திருக்கே போய் பார்க்கலாம் என்று வந்தேன்...:)))
உங்களின் இந்த ஆர்வத்திற்கும், முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள். எதிர்பார்த்ததை விட கடை நல்லாவே இருக்கு...
தொடர்ந்து இப்படியே இருக்கிற மாதிரி பாத்துகோங்க பிரபாகர்... :))
எனக்கு ஒரு க்வாட்டர் சொல்லுங்கள்.
ஓயின்ஷாப்புக்கு இடையிடையே வந்து செல்கின்றேன். ரெகுலராக வர நேரமில்லைங்கோ....
கலக்குங்க!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்! தொடரட்டும் நண்பரே!
உங்கள் ஒயின் ஷாப் நல்லபடியா ஓடுவதற்கு வாழ்த்துக்கள் ! கலக்குங்க !
பிரபா ஒயின் சாப் ஓனரா எப்ப சார் கடை தொறப்பிங்க?
தொறக்கவே இல்ல இதுக்குள்ள இவளவு பேர ?
உங்கள் டாஸ்மாக் பாஸ் மார்க் வாங்க என் வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் தொடருங்கள்...
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
As Chiththra akka said
.....நாங்களும் கடைக்கு வர மாதிரி ஓரளவுக்காகவது "clean " ஆகவும் இருக்குமா? he he
முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
ஒயின்ஷாப் ஓனருக்கு எனது வாழ்ததுக்கள். நீங்கள் சரக்கு சரக்கு என்னும் போது ரொம்ப கவனமாய் இருங்கள். என்னைப் போன்ற இலங்கைத்தமிழர்களிள் அகராதியில் சரக்கு என்றால ”பெண்” (அயிட்டம்) என்ற அர்த்தமும் உண்டு. மற்ந்தும் நம்மூர் ஆட்களிடம் வாங்க தலீவா ”சரக்கு அடிப்பம்” என்று கேட்டு விடாதீர்கள். அப்புறம் செலவு அதிகமாகிவிடும் என்றும் எச்சரிக்கிறேன்..
அன்புடன்
விசரன்
ஓகே ..ஓகே ...
ha ha ha WINESHOP KALAKKAL. CONGRATS..
EVEN THE OPENING IS NOT STARTRD,, BUT THE SUPPORT TO U IS REMARKABLE. GOOD
PLS SENSOR THE A JOKES YOURSELF.
INTRODUCING THE NEW BLOGGWERS IS A GOOD IDEA.
50
ரெண்டு கட்டிங் போடலாம்னு ஓடிவந்து பார்த்தா இது வெறும் கடைத் திறப்பு விழா மட்டும்தானா? சரக்கு இன்னும் கடையில நிரப்ப ஆரம்பிக்க வில்லையா? சீக்கிரம் சரக்க கொண்டு வாங்க, நான் திரும்ப வரேன்.
திறப்பு விழா அழைப்பிதழ் படிக்கும் போதே போதை ஏறுதே, கடைய திறந்தா ஒருவரும் நிதானமா இருக்க முடியாது போல இருக்கே?
அது சரி, பக்கத்துல பார் நடத்த அனுமதி கிடைக்குமா?
சிறப்பு.. நல்ல சரக்கா கிடைக்கும்னு நம்புறன்.. அப்பரம் 18+ஐ தவிர்க்கலாம் என தோன்றுகிறது.. சுவாரஸ்யமான பல தகவலிடத்தே இது நடுவில் சொரிந்துகொண்டிருக்கும்.. அதிகமாக படிக்கும் ஆர்வம் கொண்ட நீங்கள் வரலாற்றின் ஒரு சம்பவத்தை பற்றி ஒவ்வொரு பதிவிலும் போடலாம்..
வாழ்த்துக்கள்
ஏற்கனவே பதிவெல்லாம் கலக்கல் தான்.. இப்போ போது மாதிரி கலக்கல் பண்ணப்போறனு சொல்லு... வாழ்த்துக்கள் நண்பா....
கலக்குங்க...
Enna solrathunnu theriyala.anyway, vazhthukkal.
idea அமர்க்களமா இருக்கு.. எனது நல்வாழ்த்துகளும்
Eagerly awaiting your posts in TN POLITICS!!
பிரபா ஒயின்ஷாப் ஓகோ என்று ஓட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சரக்கு கிக் உள்ளதா மட்டும் இருக்கட்டும்.
பிரபா தலைப்பு சூப்பர், சும்மா கலக்குங்க. பதிவில் என் பெயரையும் போட்டதற்கு நன்றி.
பிரபா இன்னொரு மேட்டர், கொஞ்சம் இலக்கியம் கலந்து கொடுங்க, ஏதோ உங்களால் முடிந்த நல்ல செயல்.
ஏன் எப்பவும் வெளிநாடு சரக்குதான் விக்கனுமா, நம்ம நாட்டு சரக்கு சேருங்க. நான் கட்டாயம் வருவேன்.
தல நீங்க " பிரபா ஒயின்ஷாப் – திறப்புவிழா" ன்னு எழுதி இருந்த உடன் நான் ஒரு வ கட்டிங் கிடைக்குமான்னு பார்த்தேன் நீங்க முழு பாட்டிலே உனக்குதான்னு சொன்ன மாதிரி இருந்தது உங்க சரக்கு நிச்சயம் போதை தரும் வாழ்த்துக்கள்...... அன்புடன் கிறுக்கன்
18+ தவிர மற்றவை ஓ.கே...
நம்ம கடையை திறவுங்கோ கலகிடுங்கோ எனது வாழ்த்துக்கள்
பிரபா தலைப்பு சூப்பர், சும்மா கலக்குங்க.
நான் வராமலா வந்து ஒரு குத்தாட்டம் போட்டுட்ட போகுது .
பிரபா எனக்கு கட்டிங் பழக்கம் இல்ல ஆனால் சைடிஷ் ஒரு வெட்டு வெட்டுவோம் , வாழ்த்துக்கள் ..
தல ஆரம்பிச்சாசுல... ம்ம்ம் அப்படியே டேக் ஆஃப் பண்ணுங்க! நாங்க டேக் கேர் பண்ணிக்கிறோம். ஓகே வா!!
நடத்துங்க நடத்துங்க
@ ரஹீம் கஸாலி, சேட்டைக்காரன், ம.தி.சுதா, மாணவன், Chitra, ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா), தேனம்மை லெக்ஷ்மணன், ஜீ..., எப்பூடி.., சி.பிரேம் குமார், மனசாட்சி, "ராஜா", Thirumalai Kandasami, ஆனந்தி.., கேபிள் சங்கர், ஆதவா, Ponchandar, நா.மணிவண்ணன், பன்னிக்குட்டி ராம்சாமி, malgudi, pavi, sakthistudycentre-கருன், ராஜகோபால், middleclassmadhavi, Speed Master, ! சிவகுமார் !, பன்-பட்டர்-ஜாம், இளம் தூயவன், Kousalya, வந்தியத்தேவன், சே.குமார், எஸ்.கே, ஜி.ராஜ்மோகன், A.சிவசங்கர், பெயர் சொல்ல விருப்பமில்லை, கந்தசாமி., Harini Nathan, Madurai pandi, விசரன், கே.ஆர்.பி.செந்தில், சி.பி.செந்தில்குமார், Jayadev Das, அமைதி அப்பா, தம்பி கூர்மதியன், தங்கராசு நாகேந்திரன், Pari T Moorthy, NKS.ஹாஜா மைதீன், ஐத்ருஸ், ரிஷபன், ManojKumar.A, மதுரை சரவணன், கும்மாச்சி, ☀☃ கிறுக்கன்☁☂, செங்கோவி, sarujan, bala, எம் அப்துல் காதர், Riyas
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... வாராவாரம் தவறாமல் கடைக்கு வந்து உங்கள் பேராதரவை தர வேண்டுகிறேன்...
@ ரஹீம் கஸாலி
// முதல் கட்டிங் நமக்கு... //
வரலாற்றில் இடம் பிடிச்சிட்டீங்க... வாழ்த்துக்கள்...
@ சேட்டைக்காரன்
// நானும் பேல்பூரி-ன்னு ஒரு பல்சுவைப் பதிவு போட்டேன். கன்டின்யூ பண்ணலே; இனிமே பண்ணிற வேண்டியது தான். //
அப்படிங்களா... கண்டின்யூ பண்ணுங்க... உங்க ஸ்டைல் எப்படி இருக்குன்னு பார்க்கணும்...
@ ம.தி.சுதா
// 6 மணியிலிருந்த கடை வாசலில் சுடு சோற்றுடன் காத்திருந்து களைத்தே போயிட்டேன் நம்மளுக்கு இந்த கட்டிங் பழக்கமெல்லாம் கிடையாது ஏதாச்சும் சாப்பிட இருந்தால் கொடுங்கள்.... //
அடப்பாவமே... இங்கே சுடுசோறெல்லாம் கிடைக்காது... வேணும்னா சுண்டக்கஞ்சி சொல்லட்டுமா...?
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// Please check the alignment... படிக்க கஷ்டமா இருக்கு //
இந்த வார தத்துவம்:
எனக்குப் பிடித்த பாடல்:
வலைப்பூ அறிமுகம்:
இதையெல்லாம் வரிசையா போட்டத பத்தி சொல்றீங்கன்னு நினைக்கிறேன்... அது எனக்கு ஒரு பெரிய விஷயமா தோணலை... எனிவே, அடுத்த வாரத்துல இருந்து ஒழுங்கா பாத்துக்குறேன்...
@ எப்பூடி..
// நாம கட்டிங் அடிக்காட்டியும் சைடிஷாவது தின்னுவோமில்ல. //
ஊருக்குள்ள நிறைய பேர் இப்படித்தான் சுத்திட்டு இருக்காங்க...
@ மனசாட்சி
// அடுத்த ஜாக்கி ஆகனும்னு முடிவு பண்ணிடியலோ? சபாஷ் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் //
நண்பா... நீங்க எப்போதுமே நேர்மையா பின்னூட்டம் போடுவீங்கன்னு தெரியும்... எதுவா இருந்தாலும் பளிச்சுன்னு சொல்லிடுங்க... உள்குத்து வேணாம்...
@ Ponchandar
// நான் மிலிட்டரி ஆளு ! ! ! ! மிலிட்டரி சரக்கு கிடைக்குமா ???? //
கண்டிப்பா கிடைக்கும்... லோகோவுல இருக்குற dalmore பாட்டிலை பார்த்த அப்புறம் எப்படி இந்தமாதிரி எல்லாம் கேட்கத்தோணுது...
@ நா.மணிவண்ணன்
// ஒயின் ஷாப் திறப்பு விழானு சொல்லீட்டு ஒரு கட்டிங் கூட குடுக்கல , நான் என்ன" கட்டிங் "சொல்றேன்னு உங்களுக்கு தெரியும் //
உங்களுக்கு இல்லாததா... லோகோவில் இருக்குற dalmore சரக்கு உங்களுக்குத்தான்... எடுத்துக்கோங்க...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அப்புறம் இன்னொரு விஷயம், முடிந்த அளவுக்கு மேட்டரை சம அளவான பாராகிராப்களாக பிரித்து பிரித்து போடுங்கள், படிக்க சுலபமாக இருக்குமே! //
ஆலோசனைகளுக்கு நன்றி... அடுத்த வாரத்தில் இருந்து பாட்டில்களை சரியா அடுக்கி வைக்கிறேன்...
@ ! சிவகுமார் !
// >>> 'கலக்குங்க' பிரபா!! நானும் இதுபோல் ஒரு கலவை பதிவை இட யோசித்து வருகிறேன். நேரம் அமையாததால் தள்ளிப்போகிறது. உங்கள் தலைப்புகளை (எஸ்.எம்.எஸ்,வீடியோ போன்றவை) போல்தான் அநேகமாக என்னுடையதும் அமையும். சீக்கிரம் திறக்கிறேன் கடையை. //
சிவா... நீங்க எழுதினா இன்னும் அருமையா இருக்கும்... எதிர்பார்க்கிறேன்... அப்புறம், தலைப்பு மிக முக்கியம் அமைச்சரே...
@ பன்-பட்டர்-ஜாம்
// லீவு நாள்ளேயும் கடைய ஓபன் பண்ணி வச்சு நல்லா கல்லா கட்டுங்க பிரபா //
நோ... நோ... கடை திங்கட்கிழமைகளில் மட்டும்தான் ஒப்பன் பண்ணுவேன்...
@ இளம் தூயவன்
// நிச்சயமாக உங்க சொந்த சரக்கா இருக்கட்டும். நீங்கள் எழுதபோவது யாராவது ஒருத்தருக்காவது ஒரு சிறு பலன் கிடைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். //
ம்ம்ம்... எந்த மாதிரி எழுத வேண்டும் என்ற ஸ்டைல் மட்டும்தான் சுட்டது... மற்றபடி சரக்கு சொந்தமானதா தான் இருக்கும்... பயனுள்ளதாகவும் இருக்கும்...
உங்களுடைய கனிவான ஆலோசனைகளுக்கு நன்றிகள்...
@ வந்தியத்தேவன்
// எனக்கு ஒரு க்வாட்டர் சொல்லுங்கள்.
ஓயின்ஷாப்புக்கு இடையிடையே வந்து செல்கின்றேன். ரெகுலராக வர நேரமில்லைங்கோ.... //
என்ன பிராண்டுன்னு சொல்லவே இல்லையே சார்... வாரம் ஒருமுறை வந்தாலே போதும் சார்...
@ A.சிவசங்கர்
// தொறக்கவே இல்ல இதுக்குள்ள இவளவு பேர ? //
ஆமாம்... எல்லாம் அன்பு நெஞ்சங்கள்...
@ பெயர் சொல்ல விருப்பமில்லை
// உங்கள் டாஸ்மாக் பாஸ் மார்க் வாங்க என் வாழ்த்துகள்! //
வாவ்... ஏன்னா ரைமிங்கு....
@ விசரன்
// என்னைப் போன்ற இலங்கைத்தமிழர்களிள் அகராதியில் சரக்கு என்றால ”பெண்” (அயிட்டம்) என்ற அர்த்தமும் உண்டு. //
ஆஹா... இது வேறயா... நல்லவேளை முன்னாடியே சொல்லி வச்சீங்க...
@ சி.பி.செந்தில்குமார்
// 50//
என்ன இது...? நம்பெரல்லாம் போட்டுக்கிட்டு... முத்திப்போச்சா...
@ Jayadev Das
// ரெண்டு கட்டிங் போடலாம்னு ஓடிவந்து பார்த்தா இது வெறும் கடைத் திறப்பு விழா மட்டும்தானா? சரக்கு இன்னும் கடையில நிரப்ப ஆரம்பிக்க வில்லையா? சீக்கிரம் சரக்க கொண்டு வாங்க, நான் திரும்ப வரேன். //
என்னாச்சு... கொஞ்ச நாளா ஆளைக்காணோம்... அடுத்தவாரம் வந்திடுங்க... சரக்கு ரெடி ஆயிடும்...
@ அமைதி அப்பா
// அது சரி, பக்கத்துல பார் நடத்த அனுமதி கிடைக்குமா? //
உங்களுக்கு இல்லாமலா... தாராளமா நடத்துங்க...
அமைதி அப்பாவா இருப்பாருன்னு பார்த்தா இவரு ஆப் அடிக்கிற அப்பாவா இருப்பாரு போல இருக்கே :)
@ தம்பி கூர்மதியன்
// அதிகமாக படிக்கும் ஆர்வம் கொண்ட நீங்கள் வரலாற்றின் ஒரு சம்பவத்தை பற்றி ஒவ்வொரு பதிவிலும் போடலாம்.. //
நல்ல ஆலோசனை... முயல்கிறேன்...
@ ஐத்ருஸ்
// Enna solrathunnu theriyala.anyway, vazhthukkal. //
எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க நண்பா...
@ ManojKumar.A
// Eagerly awaiting your posts in TN POLITICS!! //
ஹா... ஹா... ஹா... அரசியல் பத்தி எழுதுறது கொஞ்சம் சிக்கலான விஷயம்... அது ஏன்னு என்னோட வியாழக்கிழமை பதிவில் சொல்கிறேன்...
@ கும்மாச்சி
// பிரபா தலைப்பு சூப்பர், சும்மா கலக்குங்க. பதிவில் என் பெயரையும் போட்டதற்கு நன்றி. //
ம்ம்ம்... இருந்தாலும் முன்னாடி யோசிச்சு வச்சிருந்த காக்டெயிலை விட இப்போ நல்ல தலைப்பு கிடைச்சிருக்கு... உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்...
// பிரபா இன்னொரு மேட்டர், கொஞ்சம் இலக்கியம் கலந்து கொடுங்க, ஏதோ உங்களால் முடிந்த நல்ல செயல். //
இலக்கியமா... அப்படின்னா...
@ ☀☃ கிறுக்கன்☁☂
// தல நீங்க " பிரபா ஒயின்ஷாப் – திறப்புவிழா" ன்னு எழுதி இருந்த உடன் நான் ஒரு வ கட்டிங் கிடைக்குமான்னு பார்த்தேன் நீங்க முழு பாட்டிலே உனக்குதான்னு சொன்ன மாதிரி இருந்தது உங்க சரக்கு நிச்சயம் போதை தரும் வாழ்த்துக்கள்...... அன்புடன் கிறுக்கன் //
வாங்க நண்பா... புது கஸ்டமர் மாதிரி தெரியுது... முழு பாட்டில்தானே... தாராளமா எடுத்துக்கோங்க...
@ bala
// பிரபா தலைப்பு சூப்பர், சும்மா கலக்குங்க.
நான் வராமலா வந்து ஒரு குத்தாட்டம் போட்டுட்ட போகுது .
பிரபா எனக்கு கட்டிங் பழக்கம் இல்ல ஆனால் சைடிஷ் ஒரு வெட்டு வெட்டுவோம் , வாழ்த்துக்கள் .. //
வாங்க பாலா... வந்து ஒரு குத்தாட்டம் போட்டுட்டு சைட் டிஷ் சாப்பிட்டுட்டு போங்க...
@ Chitra, தேனம்மை லெக்ஷ்மணன், ஆனந்தி.., middleclassmadhavi, Kousalya, Harini Nathan, தம்பி கூர்மதியன்
பதிவுலக பெண்கள் மற்றும் தம்பி கூர்மதியானின் வேண்டுகோளுக்கிணங்க 18+ சமாச்சாரம் நம்ம கடையில் இருக்காது என்பதை கொஞ்சம் வருத்தத்துடனேயே தெரிவித்துக் கொள்கிறேன்...
வாழ்த்துக்கள்! தொடரட்டும்...
இன்னிக்குத்தான் மொதவாட்டி ஒங்க கடைக்கு வர்றேன்! அந்த பிரபா ஒயின் ஷாப் ஓனர் அது நீங்கதானா! அப்புறம் நீங்க பல்சுவைப் பதிவு எழுதினா, நான் அடிக்கடி உங்க கடைக்கு வருவேன்! இன்னொரு மேட்டர் சார் ஒலகத்துல முதல்தர ஒயின் உற்பத்தியாகிறது இங்கு பிரான்ஸ்ல! போர்தோ ( BORTHEAUX ) அப்டீன்னு பேரு! உங்க கடைக்கு கொஞ்சம் சப்ளை பண்ணவா?
//சிவா... நீங்க எழுதினா இன்னும் அருமையா இருக்கும்... எதிர்பார்க்கிறேன்... அப்புறம், தலைப்பு மிக முக்கியம் அமைச்சரே.//
>>> பிற பதிவரை உயர்த்திப்பேச ஒரு பெருந்தன்மை வேண்டும். அதுவும் என்னைப்போல் சுண்டைக்கா பதிவரை. மிக்க நன்றி பிரபா!!
// தலைப்பு மிக முக்கியம் அமைச்சரே//
>>> அப்படியே ஆகட்டும் அரசே!
//நோ... நோ... கடை திங்கட்கிழமைகளில் மட்டும்தான் ஒப்பன் பண்ணுவேன்.//
>>> அப்பா அதுல ஏதோ மேட்டர் இருக்கு. சிவா நீயும் திங்கள்கிழமையே ஆரம்பி.
@ மாத்தி யோசி
// இன்னிக்குத்தான் மொதவாட்டி ஒங்க கடைக்கு வர்றேன்! அந்த பிரபா ஒயின் ஷாப் ஓனர் அது நீங்கதானா! அப்புறம் நீங்க பல்சுவைப் பதிவு எழுதினா, நான் அடிக்கடி உங்க கடைக்கு வருவேன்! //
அடிக்கடி வாங்க நண்பா...
// இன்னொரு மேட்டர் சார் ஒலகத்துல முதல்தர ஒயின் உற்பத்தியாகிறது இங்கு பிரான்ஸ்ல! போர்தோ ( BORTHEAUX ) அப்டீன்னு பேரு! //
உருப்படியான தகவல்...
// உங்க கடைக்கு கொஞ்சம் சப்ளை பண்ணவா? //
ஆஹா... நீங்க உலக அளவுல சப்ளை பண்ணுறீங்களா... நடக்கட்டும்...
@ ! சிவகுமார் !
// >>> பிற பதிவரை உயர்த்திப்பேச ஒரு பெருந்தன்மை வேண்டும். அதுவும் என்னைப்போல் சுண்டைக்கா பதிவரை. மிக்க நன்றி பிரபா!! //
சிவா... ஒரு பதிவரின் தன்மை பின்தொடற்பவர்களின் எண்ணிக்கை, அலெக்ஸா ரேங்க் இதிலெல்லாம் இல்லை... நீங்கள் என்னைவிட பெரிய சிந்தனைவாதி... அந்த எண்ணத்திலேயே சொன்னேன்...
// >>> அப்பா அதுல ஏதோ மேட்டர் இருக்கு. சிவா நீயும் திங்கள்கிழமையே ஆரம்பி. //
அது ஏன்னா மேட்டர்ன்னா, வாரக்கடைசியில் கொஞ்சம் புத்தகம் படிப்போம், படம் பார்ப்போம், நிறைய விஷயங்கள் தெரிஞ்சிப்போம்... அதைச் சுடச்சுட திங்கட்கிழமை போட்டுட வேண்டியது தான்....
ஏம்பா ஏதோ என்னை மாதிரி ஆளுங்க ஒப்பேத்திட்டு இருக்கோம் அதுக்கும் போட்டியா........ஸ்ஸ்ஸ்..........உங்கள மாதிரி 40, 50 ஓட்டு வாங்குற ஆளா நானு.......ஏதோ எங்கடை ஈ அடிக்காம போயிட்டு இருந்துது.......ரொம்ப சந்தோசம்........நடத்துங்க..........வாழ்த்துக்கள்.......எப்போவுமே உண்மைய சொல்லிபுடனும்ல....
ஹி ஹி
@ விக்கி உலகம்
// ஏம்பா ஏதோ என்னை மாதிரி ஆளுங்க ஒப்பேத்திட்டு இருக்கோம் அதுக்கும் போட்டியா... //
போட்டியெல்லாம் இல்லைங்க... உங்களோடது unique ஸ்டைல்... இது அந்த மாதிரி இருக்காது...
// உங்கள மாதிரி 40, 50 ஓட்டு வாங்குற ஆளா நானு... //
ஓட்டு வாங்குறதெல்லாம் ஒரு விஷயமே இல்லை... யார் வேணும்னாலும் வாங்கலாம்...
வாழ்த்துக்கள் பிரபா ,தொடருங்கள்
நல்ல கான்செப்ட் பிரபா.... நானும் இப்படி ஒண்ணு சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணுறேன்னு அறிவிப்பு போடுறேன் :)) யோசிச்சுட்டே இருக்கேன் ரொம்ப நாளா.... பட் நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா ஸ்டார்ட் பண்ணியிருக்கீங்க... நல்லா பண்ணுங்க... சித்ரா அக்கா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்....
நிறைய அறிமுகங்கள் தாங்க.... கலக்குங்க பாஸ்... வாழ்த்துக்களும்... ஆதரவும் எப்போதும் உண்டு நட்புக்கு!! :)
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
பிரபு எம்
ம்ம்ம் நடத்துங்க வாழ்த்துக்கள் :)
கடை அமோகமாக நடக்க வாழ்த்துகள். நிறைய விஷயங்களை ஒரு இடுகையில் சொல்வது நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Post a Comment