வணக்கம் மக்களே...
சென்ற வாரத்தில் ஒருநாள் இன்ட்லி புகைப்படங்கள் தளத்தில் மேயந்துக்கொன்டிருந்தேன். அடிக்கடி ஒரு அருமையாக முகம் தென்படவே யாரென்று ஆராய்ச்சியை ஆரம்பிக்கலானேன். அம்மணி பெயர், கார்த்திகா முன்னாள் கனவுக்கன்னி “முதல் மரியாதை” ராதாவோட மகளாம். செம அழகா இருக்காங்கல்ல... (பிரபா... வாய்ல இருந்து வர்ற வாட்டர்பால்ஸை க்ளோஸ் பண்ணு...)
கொஞ்சம் “காதல்” சந்தியா சாயல். அதுல அப்படியே ஜோதிகா மிக்சிங். ஆனா சந்தியா, ஜோதிகா ரெண்டு பேரை விட இவங்கதான் ரொம்ப க்யூட். (அப்படின்னா, ஜோதிகா இடம் காலியா...?)
கடந்த வருடம் ஜோஷ் என்ற படத்தின் மூலமாக தெலுங்கு பட உலகில் அறிமுகமாகி இருக்காங்க. அந்தப் படத்தில் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக நடிச்சிருக்காங்க. படம் சுமாரா தான் ஓடுச்சு என்றாலும் நாயகி செம ஹிட். (அடுத்த வருட கனவுக்கன்னி லிஸ்டுல துண்டை போட்டுட்டாங்க...)
இந்த வருடம் சந்தோஷ் சிவன் டைரக்ஷனில் மகர மஞ்சுன்னு ஒரு மலையாள சரித்திரப்படத்தில் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தை பார்த்த “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தின் இயக்குனர் டேனி பாய்ல் மேடமை ரொம்ப புகழ்ந்து தள்ளினாராம். (அப்படியே ஹாலிவுடுக்கு தள்ளிட்டு போயிடாம பாத்துக்கணும் :()
இப்போ, தமிழ்ல ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவர இருக்கும் “கோ” படத்தில் இவங்க தான் ஹீரோயின். இந்தப்படம் ஏதோ பத்திரிக்கையாளர் பற்றிய கதை என்றும் State of Play என்ற படத்தின் உருவல் என்றும் பேசிக்கிறாங்க. (நமக்கு அதுவா முக்கியம்...?)
இப்படியாக வந்த வேகத்தில் மூன்று தென்னிந்திய மொழிகளிலும் அறிமுகமாகிட்டாங்க. அநேகமாக அடுத்த அட்டாக் மும்பைக்குத்தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மறுபடி ஒரு மும்பை தாக்குதல் வேண்டாம் மேடம்)
ஒரு வருடத்தில் கண்டபடி இருபது படங்களை நடித்து தள்ளுவதை விட ஒரே ஒரு நல்ல படத்தில் நடித்தாலே போதும் என்பது கார்த்திகாவின் கொள்கை. (அட, நீங்க நடிக்கவே தேவை இல்ல... நீங்க வந்தா மட்டும் போதும்... நீங்க வந்தா மட்டும் போதும்...)
இவங்கள பார்த்தா என்ன வயசு இருக்கும்னு தோணுது. +2 ரிசல்ட்டை பேப்பரில் பார்த்த கையோடு நேரா சினிமாவுல நடிக்க வந்துட்டாங்களாம். இப்போ 17 வயசு. Date of Birth: 27.6.1992. (information is wealth).
லண்டனில் எக்கனாமிக்ஸ் படிக்கலாமா...? சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனஜ்மென்ட் படிக்கலாமா...? என்று யோசித்துக் கொண்டவரை சினிமா சிகப்பு கம்பள வரவேற்பை கொடுத்திருக்கிறது. (குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் பாயல போல...)
கார்த்திகா முறையாக நாட்டியம் பயின்றவராம். மேலும் பெயிண்டிங் இவங்களோட ஹாபியாம். (எனக்கு இனிமே உங்க படங்களை பாக்குறது தான் ஹாபியே...)
போகிற போக்கில், அம்மா ராதா பெரியம்மா அம்பிகாவை எல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஓவர்டேக் பண்ணிடுவாங்க போல. (அப்படின்னா இனி முதல் மரியாதை இவங்களுக்குத்தான்...)
டிஸ்கி 1: படங்களை பெரிதாக்கிப் பார்க்க தனி விண்டோவில் ஒப்பன் செய்யவும்.
டிஸ்கி 2: என்னடா இவன் நடிகையை பத்தியெல்லாம் சிலாகிச்சு எழுதுறானேன்னு யாரும் காரித்துப்பாதீங்க... யூத்துன்னா அப்படித்தான் இருக்கும்... பிடிக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடுங்க... அப்படி இல்லைன்னா யாராவது PhD வாங்கினவங்களோட வலைப்பூவை போய் படிங்க...
இப்படிக்கு,
இவருக்கு கோவில் கட்டலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்
அகில உலக கார்த்திகா ரசிகர் மன்றம்
(விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன)
|
58 comments:
முத வெட்டு
டைட்டில்லயே ஹைக்கூவா?
ராதா.. அம்பிகா லெவ்ல்ல பாதிகூட இந்த ஃபிகர் தாண்டாது.. ஆனானப்பட்ட எமி ஜாக்ஷனே திண்டாடறாங்க..
இதுக்கு காரி துப்பி வேறே எங்கள் சக்தியை வீணாக்கனுமாக்கும். கொஞ்சம் திரும்பி பார்த்தால் நமது அக்கா, தங்கை மனைவியே இவளுங்களை விட மேக்கப் இல்லாமல் அழகானவங்களா யோக்கியமானவங்களா இருப்பாங்க. அவங்களுக்கு கோவில் கட்டுங்க. இன்றைய இளைஞர்கள் இது போல வெட்டி வேலைதான் நிறையா செய்யராங்க.
இப்போ 17 வயசு. Date of Birth: 27.6.1992. (information is wealth).
....17????? பதிவு பூரா -------- "வெள்ளம்" அடிக்குது!
அநியாயத்துக்கு அருவி மாதிரி கொட்டுதே...!
அதுக்கு ஒரு அணை போட்டிருக்கப் படாதோ...!
மேல C. P. செந்தில்குமார் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்...!!
ஜொள்ளு விடுவதற்கென்றே ஒரு பதிவு எழுதி இருக்கிறீர்கள் போலிருக்கிறதே? ஹி ஹி பொண்ணு அழகாத்தான் இருக்கு.
ஆனா கொஞ்சம் சதை போடனும். தமிழ் இளைஞர்களுக்கு குச்சி மிட்டாயை விட 'கொலுக்'கட்டைதான் பிடிக்கும்.
ம்ம்ம்... சரி நடத்துங்க பாஸ்...
அட சே.!!!
நாட்டுக்கு தேவையான நல்ல பல கருத்துக்களை அள்ளி வீசியிருக்கும்
அன்பு தம்பி பிரபாவுக்கு 2016 .
அட அட என்னா பிகரு ,என்னா கலரு ,என்னா சிட்டு ச்சே சைட்டு ,
ம்ஹும் பெருமூச்சு விடுவோம் வேற என்னா பண்ண முடியும்
பிரபாகரனின் தத்துபித்துவங்கள்................./////////////
அட என்ன அருமையான தத்துவங்கள் என் ஐயப்பாட்டை தீர்க்கும் ஆழ்ந்த கருத்துக்கள் ...............
யாருயா இங்க தண்ணிய கொட்டி வச்சது வழுக்குது பாருங்க ....................
நான் கார்த்திகாவின் புகைப்படத் தொகுப்பு ஒன்று பார்த்தேன். நல்ல உயரம், நல்ல அழகு. நல்லா நடிப்பாங்களா?
Funny..:)))
\\ஆனா கொஞ்சம் சதை போடனும். தமிழ் இளைஞர்களுக்கு குச்சி மிட்டாயை விட 'கொலுக்'கட்டைதான் பிடிக்கும்.//
ஆகையால் மக்களே..! நாங்கள் நமீதா,ஜோ,ஷகிலா போன்ற பம்..பம்..பிகர்களை கனவு நாயகிகளாக தேர்ந்தெடுத்து ரசித்தால் அத்தை பெண் கார்த்திகாவுக்கு..கனவுக்கன்ணி போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என பொறுத்திருந்து பார்போம்..
நறுக்குன்னு ரெண்டு ஒட்டு போட்டுவிட்டு கிளம்பியாச்சு.....
நல்லா கட்டுங்க! பூசை நாங்க பண்றோம்!
ராதா.. அம்பிகா லெவ்ல்ல பாதிகூட இந்த ஃபிகர் தாண்டாது
நீங்க தலைவர்னா நான் தான் அம்மணி கொள்கை பரப்பு செயலாளர்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
>>> பிரபா, முக்கியமான மேட்டர். 'கோ' படத்தில் சிம்புவும் உங்க தங்கச்சி கார்த்திகாவும் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த அப்பாவி குழந்தை நன்றாக இல்லை. மாற்றுங்கள் என சிம்பு வம்பு செய்ய, சிம்புவை தூக்கிவிட்டு ஜீவாவை போட்டார் கே.வி. ஆனந்த். பத்திரிக்கையில் படித்தேன். உங்க தங்கச்சி நல்லா இல்லன்னு சிம்பு எப்படி சொல்லலாம்.
புகைப்படங்களில் இருக்கும் எல்லாருமே மேக்கப்பில நால்லாயிருக்காங்க, முகத்தை கழுவினா எப்படி இருப்பார்கள் என்று சொல்ல தெரியவில்லை :-)
'நிலா' தூரத்தில பாக்கிரச்சே நல்லாத்தான் இருக்கும், கிட்டத்தில பார்த்தா குண்டும் குழியுமா இருக்குமாம்; நீல் ஆம் ஸ்டாங் சொன்னதா அவரு பிரண்டோட பேரன் ஹன்டர்சன் சொல்லியிருக்கிறாரு :-)
ரொம்ப ஓவராத்தான் ஜொள்ளு விட்றிங்க..
அநியாயத்துக்கு வழிஞ்சிருக்கீங்க.. ஹி..ஹி.. ஸ்டில்ஸ் எல்லாம் கலக்கல்..
முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி
நல்ல (அறி)முகம்!
இவங்களப் பார்த்தா கிளாமர்ல பின்னுவாங்களான்னு தெரியலையே... நமக்கு அதுதானே பாஸ் முக்கியம்!!
//ராதா.. அம்பிகா லெவ்ல்ல பாதிகூட இந்த ஃபிகர் தாண்டாது.. ஆனானப்பட்ட எமி ஜாக்ஷனே திண்டாடறாங்க.//
வழி மொழிகிறேன் :)
ம்ம் அவ்வளவு அழகாவா இருக்காங்க எனக்கேதோ ராதாவுக்கு பக்கத்திலும் வரமுடியாதென்றே தோன்றுகிறது
பிரபா, இங்க பின்னூட்டம் போட்ட பெரியவங்க நிறைய பேரு உண்மையைப் போட்டு உடைச்சிட்டாங்க, பிகர் தேறாது, படு மொக்கை. இருந்தாலும் உங்களுக்கு நீங்கதான் ராஜா, உங்களுக்கு பிடிசிருக்குதுன்னா தாராளமா ரசிங்க, கோவில் கட்டுங்க ...etc., etc., ஆனா திரைப் படத்துல மேல வரணும்னா லூக்கு பெரிய விஷயமில்லைன்னு திரைப்பட வரலாறு சொல்லுது. நல்ல கதைகளில் நடிச்சு மென் மேலும் பல படங்களுக்கு கமிட்டாகி உங்களை அவங்க மகிழ்விக்கனும்னு வேண்டிக்கிறேன். [அப்படியே இல்லைன்னாலும் ஒரே படத்த முன்னூறு வாட்டி பாருங்களேன், என்ன நஷ்டமாப் போகுது!]
ஸ்டில்ஸ் எல்லாம் கலக்கல்..
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..
ஏன் ரொம்ப நாள் ஆளை காணோம் ?
//டிஸ்கி 2: என்னடா இவன் நடிகையை பத்தியெல்லாம் சிலாகிச்சு எழுதுறானேன்னு யாரும் காரித்துப்பாதீங்க... யூத்துன்னா அப்படித்தான் இருக்கும்... பிடிக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடுங்க... அப்படி இல்லைன்னா யாராவது PhD வாங்கினவங்களோட வலைப்பூவை போய் படிங்க..//
செம செம..
//ராதாவோட மகளாம். செம அழகா இருக்காங்கல்ல... (பிரபா... வாய்ல இருந்து வர்ற வாட்டர்பால்ஸை க்ளோஸ் பண்ணு...)//
ஹே ஹே..
அம்மா ராதாவின் சாயலும் இருக்கு!
சுப்பர் பிகர்!
செம்ம ஃபிகரு..............
ஜனகன்
http://sivagnanam-janakan.blogspot.com/2011/01/127-hours-127-second.html
சூப்பர். டக்கர்.. கும்மு...
http://virtualworldofme.blogspot.com/2011/01/blog-post_25.html
ம்ம்ம்... வெளங்கிருச்சு............
டைட்டில் வெக்கிறதுக்கு பெசல் கோச்சிங் எடுத்தமாதிரி தெரியுதே?
ஆனா, இந்த பிகர் எடுபடுமான்னு தெரியல... ரொம்ப வித்தியாசமான முகவெட்டு எல்லாருக்கும் பிடிக்காது!
@ சி.பி.செந்தில்குமார், கிணற்றுத் தவளை, Chitra, Sathish Kumar, பாலா, vim, தம்பி கூர்மதியன், ஜி.ராஜ்மோகன், நா.மணிவண்ணன், அஞ்சா சிங்கம், சே.குமார், ஆனந்தி.., ☀☃ கிறுக்கன்☁☂, NKS.ஹாஜா மைதீன், வைகை, Speed Master, Madurai pandi, ! சிவகுமார் !, எப்பூடி.., Riyas, ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா), கவிதை காதலன், ஆதவா, சர்பத், தர்ஷன், Jayadev Das, sakthistudycentre-கருன், பார்வையாளன், அன்பரசன், கார்த்தி, “நிலவின்” ஜனகன், Pari T Moorthy, பன்னிக்குட்டி ராம்சாமி
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ சி.பி.செந்தில்குமார்
// டைட்டில்லயே ஹைக்கூவா? //
ஓ இதான் ஹைக்கூவா... நான் மூணு வரி வரணுமின்னுல்ல நினைச்சேன்...
// ராதா.. அம்பிகா லெவ்ல்ல பாதிகூட இந்த ஃபிகர் தாண்டாது.. ஆனானப்பட்ட எமி ஜாக்ஷனே திண்டாடறாங்க.. //
ராதா, அம்பிகா காலத்தை விட இப்போ போட்டி ரொம்ப அதிகம்... அதனால ரொம்ப நாள் தாக்குபிடிக்குறது கஷ்டம்தான்...
@ கிணற்றுத் தவளை
// கொஞ்சம் திரும்பி பார்த்தால் நமது அக்கா, தங்கை மனைவியே இவளுங்களை விட மேக்கப் இல்லாமல் அழகானவங்களா யோக்கியமானவங்களா இருப்பாங்க. அவங்களுக்கு கோவில் கட்டுங்க //
தலைவரே... நீங்க சொல்றது சரிதான்... நடிகைக்கு கோவில் கட்டுற அளவுக்கு நானும் முட்டாப்பய இல்லை... கோவில் கட்டும் கான்செப்ட் தலைப்பில் கிடைத்த மோனை நயத்துக்காக எடுக்கப்பட்டது...
அதுசரி, மத்தவங்கள எல்லாம் Phd படிச்சவங்க தளத்துக்கு டைவர்ட் பண்ணிட்டு திரும்பிப் பார்த்தா Phd படிச்சவரு மாதிரி இருக்குற நீங்களே இங்க இருக்கீங்க... என்ன கொடுமை சார் இது...?
@ Chitra
// ....17????? //
அம்மணியைப் பார்த்த ஹேங் ஓவரில் தவறாக எழுதிவிட்டேன்... திருத்திவிடுகிறேன் மேடம்...
// பதிவு பூரா -------- "வெள்ளம்" அடிக்குது! //
என்ன மேடம்... dash எல்லாம் போடுறீங்க... கெட்டவார்த்தையா...???
@ Sathish Kumar
// அநியாயத்துக்கு அருவி மாதிரி கொட்டுதே...!
அதுக்கு ஒரு அணை போட்டிருக்கப் படாதோ...! //
அய்யய்யோ என்னது கொட்டுது... தெளிவா சொல்லுங்கப்பு... டபிள் மீனிங்கெல்லாம் வேண்டாம்...
@ பாலா
// ஆனா கொஞ்சம் சதை போடனும். தமிழ் இளைஞர்களுக்கு குச்சி மிட்டாயை விட 'கொலுக்'கட்டைதான் பிடிக்கும். //
நல்ல அலசல்... இந்த வனப்பு போதுமென்றே கருதுகிறேன்...
@ ஜி.ராஜ்மோகன்
// அன்பு தம்பி பிரபாவுக்கு 2016 . //
ஏனுங்கண்ணா இந்த கொலைவெறி...? அதான் டாகுடர் இருக்காருங்களே... அப்புறம் நான் வேற எதுக்கு...
@ நா.மணிவண்ணன்
// அட அட என்னா பிகரு ,என்னா கலரு ,என்னா சிட்டு ச்சே சைட்டு ,
ம்ஹும் பெருமூச்சு விடுவோம் வேற என்னா பண்ண முடியும் //
நீங்க மட்டும்தான் மணி என்னோட பீலிங்க்சை சரியா புரிஞ்சிக்குறீங்க...
@ அஞ்சா சிங்கம்
// யாருயா இங்க தண்ணிய கொட்டி வச்சது வழுக்குது பாருங்க //
என்னங்க சொல்றீங்க... ஒழுங்க பேன்ட்டை முட்டி வரைக்கும் மடிச்சு விட்டுட்டு போங்க... இல்லைன்னா நனைஞ்சிடும்...
@ சே.குமார்
// நான் கார்த்திகாவின் புகைப்படத் தொகுப்பு ஒன்று பார்த்தேன். நல்ல உயரம், நல்ல அழகு. நல்லா நடிப்பாங்களா? //
நல்லா நடிப்பாங்கன்னு தான் மகரமஞ்சு ரிப்போர்ட்ஸ் சொல்லுது... இயக்குனர் டேனி பாய்ல் கூட பாராட்டினாராமே...
@ ☀☃ கிறுக்கன்☁☂
// ஆகையால் மக்களே..! நாங்கள் நமீதா,ஜோ,ஷகிலா போன்ற பம்..பம்..பிகர்களை கனவு நாயகிகளாக தேர்ந்தெடுத்து ரசித்தால் அத்தை பெண் கார்த்திகாவுக்கு..கனவுக்கன்ணி போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என பொறுத்திருந்து பார்போம்.. //
எது எப்படியோ... 2011ம் ஆண்டின் என்னோட கனவுக்கன்னி பட்டியலில் நிச்சயமா கார்த்திகாவுக்கு இடமுண்டு...
@ Speed Master
// நீங்க தலைவர்னா நான் தான் அம்மணி கொள்கை பரப்பு செயலாளர்.. //
இவன் பின்னே என்னோட தளபதி...
@ ! சிவகுமார் !
// >>> பிரபா, முக்கியமான மேட்டர். 'கோ' படத்தில் சிம்புவும் உங்க தங்கச்சி கார்த்திகாவும் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த அப்பாவி குழந்தை நன்றாக இல்லை. மாற்றுங்கள் என சிம்பு வம்பு செய்ய, சிம்புவை தூக்கிவிட்டு ஜீவாவை போட்டார் கே.வி. ஆனந்த். பத்திரிக்கையில் படித்தேன். உங்க தங்கச்சி நல்லா இல்லன்னு சிம்பு எப்படி சொல்லலாம். //
என்ன சிவா...? வார்த்தைக்கு வார்த்தை தங்கச்சி தங்கச்சின்னு சொல்லி என்னோட இதயக்கூட்டை தகர்க்குறீங்க... ஏன் இப்படி...? சிம்புவுக்கு முன்னாடி படத்தில் கார்த்தி நடிக்க இருந்ததாக விக்கிபீடியா சொல்கிறது...
@ எப்பூடி..
// புகைப்படங்களில் இருக்கும் எல்லாருமே மேக்கப்பில நால்லாயிருக்காங்க, முகத்தை கழுவினா எப்படி இருப்பார்கள் என்று சொல்ல தெரியவில்லை :-)
'நிலா' தூரத்தில பாக்கிரச்சே நல்லாத்தான் இருக்கும், கிட்டத்தில பார்த்தா குண்டும் குழியுமா இருக்குமாம்; நீல் ஆம் ஸ்டாங் சொன்னதா அவரு பிரண்டோட பேரன் ஹன்டர்சன் சொல்லியிருக்கிறாரு :-) //
சரிதான் தர்ஷன்... இந்தப்பதிவுல கூட நாலாவது ஸ்டில்லை ஜூம் பண்ணிப்பார்த்தால் அம்மணி முகத்தில் குண்டுகுழிகள் தெரிகின்றன... இருக்கட்டும், நமக்கு அதுவா முக்கியம்...
@ ஆதவா
// நல்ல (அறி)முகம்! //
இது கே.வி.ஆனந்த் கிட்ட சொல்ல வேண்டியது...
// இவங்களப் பார்த்தா கிளாமர்ல பின்னுவாங்களான்னு தெரியலையே... நமக்கு அதுதானே பாஸ் முக்கியம்!! //
அதெல்லாம் கிளாமர்ல நல்லாவே கூடை பின்னுவாங்க... கவலைப்படாதீங்க...
@ தர்ஷன்
// ம்ம் அவ்வளவு அழகாவா இருக்காங்க எனக்கேதோ ராதாவுக்கு பக்கத்திலும் வரமுடியாதென்றே தோன்றுகிறது //
அது பழைய கள்ளு இது டின் பீர்...
@ Jayadev Das
// பிரபா, இங்க பின்னூட்டம் போட்ட பெரியவங்க நிறைய பேரு உண்மையைப் போட்டு உடைச்சிட்டாங்க, பிகர் தேறாது, படு மொக்கை. //
என்ன தலைவரே இப்படி சொல்லிட்டீங்க...
// ஆனா திரைப் படத்துல மேல வரணும்னா லூக்கு பெரிய விஷயமில்லைன்னு திரைப்பட வரலாறு சொல்லுது. //
சரிதான்... இவங்க நல்லா நடிக்கவும் செய்வாங்களாம்... நல்லா நடிப்பாங்கன்னு தான் மகரமஞ்சு ரிப்போர்ட்ஸ் சொல்லுது... இயக்குனர் டேனி பாய்ல் கூட பாராட்டினாராமே...
அப்புறம் இந்த நடிகைக்கு கோவில் கட்டுற கான்செப்ட் நகைச்சுவைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது நண்பரே... நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க...
@ பார்வையாளன்
// ஏன் ரொம்ப நாள் ஆளை காணோம் ? //
பாஸ்... நீங்கதான் ரொம்ப நாளா ஆளைக் காணோம்... நான் இங்கேயே தான் இருக்கேன்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// டைட்டில் வெக்கிறதுக்கு பெசல் கோச்சிங் எடுத்தமாதிரி தெரியுதே? //
ஆமாம் ஆமாம் தமிழ் இலக்கணத்தை ஆராய்ஞ்சு கண்டுபுடிச்ச டைட்டில்...
இந்த ஜொள்ளின் அளவு - 99.99% ரிக்டர் அளவுகோலில் பதிவானது - கருப்பு காக்கைக்கு சிகப்பு பெயிண்டு - தத்துவத்துக்கு தத்துவமுங்கோ.........ஹி ஹி
//கொஞ்சம் “காதல்” சந்தியா சாயல். அதுல அப்படியே ஜோதிகா மிக்சிங்.//
இல்லை.. 90 % ராதா சாயல்தான் எனக்குத் தெரியுது..
Post a Comment