வணக்கம் மக்களே...
வரலாற்று நாயக - நாயகிகளுள் எகிப்து ராணி கிளியோபாட்ராவை எனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது எனது பழைய பதிவான “கட்டழகி கிளியோபாட்ரா” படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி என் மனம் கவர்ந்த கிளியோபாட்ராவைப் பற்றி சமீபத்தில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா...? கவர்ச்சிக்காக (நம்மூர் இளசுகளை ஏமாற்றுவதற்காக) “மகாராணியும் மன்மதராஜாவும்” என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. இந்த மாதிரி தலைப்பு வைத்தால் இளைஞர்கள் எல்லாம் “அட்ராசக்க” என்று அடித்துபிடித்து ஓடிவருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். நண்பர்கள் சிலரை கூப்பிட்டு அவர்கள் கிலியாக நான் தனியாகவே புறப்பட்டேன் கிளியைப் பார்ப்பதற்கு. திரையரங்கில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. நிறைய பேர் போஸ்டரில் “இளமை + கலக்கல்” என்று போட்டிருந்ததை பார்த்து வந்திருக்கிறார்கள் என்பது அவர்களது மொகரக்கட்டையை பார்த்தபோதே தெரிந்தது. ஓகே தியேட்டர் கதவை திறந்திட்டாங்க... வாங்க உள்ளே போவோம்...
Title: Astérix & Obélix: Mission Cléopâtre
Country: France, Belgium
Language: French
Year: 2002
Genre: Adventure, Fantasy, Comedy
Cast: Monica Bellucci, Gérard Depardieu, Christian Clavier
Director: Alain Chabat
Producer: Claude Berri
Cinematographer: Laurent Dailland
Editor: Stéphane Pereira
Music: Philippe Chany
Length: 107 Minutes
இந்தப்படம் எகிப்து நாட்டில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை ஜூலியஸ் சீசருக்கும் கிளியோபாட்ராவுக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. திறமையில் சிறந்தவர்கள் ரோமானியர்களே என்று சீசர் மார்தட்ட, கிளி சூடாகி நீங்களே பார்த்து வியக்கும் வகையில் எகிப்தியர்கள் இன்னும் மூன்றே மாதங்களில் பிரம்மாண்ட மாளிகை ஒன்றை கட்டிமுடிப்பார்கள் என்று சவால் விடுகிறார். ஆனால் மூன்று மாதத்தில் மாளிகையை கட்டுவது சாத்தியமா என்ன...? மாளிகையை புதுமையாக கட்டும் நோக்கில் வழக்கமாக அரசு பணியில் ஈடுபடும் கலைஞனை தவிர்த்து வேறொரு கட்டிடகலைஞனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. மூன்று மாதங்களில் மாளிகை கட்டமுடியாது என்று உணர்ந்த கட்டிடகலைஞன் அவனது நண்பர்களான ஜெடாபிக்ஸ், அஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒபெளிக்ஸ் ஆகியோரை நாடுகிறான். அவர்களிடம் அபார சக்தி தரும் மந்திரப்பானம் ஒன்று இருக்கிறது. அதன்மூலம் மாளிகை குறிக்கோளை நோக்கி பயணிக்கிறார்கள். இந்நிலையில் அரசின் வழக்கமான கட்டிடகலைஞனும் ரோமப் பேரரசு ஜூலியஸ் சீசரும் இவர்களின் லட்சியத்திற்கு தடையாக இருக்கிறார்கள். அந்த தடையை மீறி மாளிகையை கட்டி முடித்தார்களா என்பதே மீதிக்கதை.
இந்தப்படம் காமிக்ஸ் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டது. மேலும் படத்தில் கிளியோபாட்ராவை விட அஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒபெளிக்ஸ் என்ற இரண்டு பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் யாரென்று ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் லாரல் – ஹார்டி போன்றதொரு இணை, ஆனால் கற்பனை பாத்திரங்கள். நம்மூர் கவுண்டமணி – செந்தில் மாதிரி என்றுகூட சொல்லலாம். ஆனா கவுண்டமணி – செந்தில் அளவுக்கு எல்லாம் யாராவது நம்மை சிரிக்க வைக்க முடியுமா என்ன...? இந்த பாத்திரங்களை வைத்து உலக அளவில் நிறைய படங்களை எடுத்திருக்கிறார்கள் அவற்றில் இதுவும் ஒன்று. இந்தப்படத்தில் Gérard Depardieu, Christian Clavier என்று இரண்டு நடிகர்கள் அந்தப் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்.
படத்தில் கிளியோபாட்ராவாக நடித்திருப்பவர் மோனிகா பெளுசி எனும் நடிகை. அட ஆமாங்க... அவங்களேதான். இவங்கதான் சோனியா காந்தி வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. கிளியோபாட்ரா வேடத்தில் நடிக்குமளவிற்கு பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் முகத்தில் திமிர் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கிளியோபாட்ராவை விட அவரது பணிப்பெண்ணாக நடித்திருப்பவர்களுள் ஒருவரான Noémie Lenoir செம க்யூட். பேசாமல் அவரையே கிளியோபாட்(ராவாக) போட்டிருக்கலாம். கிளியோபாட்ரா கருப்பழகி தானே. அப்படியென்றால் இவர்தானே பொருத்தம். அவரது ஸ்டில்லை நம்ம பதிவில் இணைக்க விரும்பி கூகிளாண்டவரை வேண்டினால் ஒரே 18+ ஸ்டில்கள். சல்லடை போட்டு தேடியதில் கிடைத்த கொஞ்சம் கெளரவமான ஸ்டில் மேலே இருப்பதுதான்.
கடைசி நொடிவரை சீட்டை விட்டு எழுந்திருக்காமல் பார்த்துவிட்டேன். படத்தில் ஒரு சின்ன பிட்டு கூட இல்லை. இறுதிக்காட்சியில் சீசருக்கும் கிளியோபாட்ராவுக்கும் இடையே ஏற்படும் முத்தச்சத்தத்தை தவிர்த்துவிட்டால் இந்தப்படம் குழந்தைகுட்டிகளோடு சென்று குதூகலமாக பார்க்க வேண்டிய திரைப்படம். இந்தப்படத்தை இந்த மாதிரி விளம்பரப்படுத்தியதற்கு பதிலாக “கிளியோபாட்ரா” என்று பெயரை காட்டி ஒரு வரலாற்றுப்படமாக முன்னிலை படுத்தியிருந்தால் இன்னும்கூட அதிக வரவேற்பு பெற்றிருக்கும்.
டிஸ்கி 1: பதிவிறக்க லிங்குகள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. பர்மா பஜாராய நமஹ...
டிஸ்கி 2: அவசர அவசரமாக எழுதி வெளியிடப்பட்ட பதிவு... எழுத்துப்பிழைகள், எண்ணப்பிழைகள் ஏதேனும் இருந்தால் தயங்காமல் தெரிவியுங்கள்.
டிஸ்கி 3: அவசர அவசரமாக எழுதியதன் காரணம், திரையரங்குகளில் படம் இன்றே கடைசி... முந்துங்கள்...
டிஸ்கி 4: நேற்றைய பதிவு ஹிட் ஆக இன்னும் சில வாக்குகளே தேவைப்படுகின்றன... கொஞ்சம் அதையும் கவனிச்சிட்டு போங்க:- "சிறுத்தை சீறுமா...?"
டிஸ்கி 5: வலைப்பூவின் ஓரமாக இருக்கும் "பொங்கல் ரேசில் ஜெயிக்கப்போவது...?" கருத்துக்கணிப்பு ஜோதியில் நீங்களும் ஐக்கியமாகுங்க... (இன்றே கடைசி நாள்)
டிஸ்கி 2: அவசர அவசரமாக எழுதி வெளியிடப்பட்ட பதிவு... எழுத்துப்பிழைகள், எண்ணப்பிழைகள் ஏதேனும் இருந்தால் தயங்காமல் தெரிவியுங்கள்.
டிஸ்கி 3: அவசர அவசரமாக எழுதியதன் காரணம், திரையரங்குகளில் படம் இன்றே கடைசி... முந்துங்கள்...
டிஸ்கி 4: நேற்றைய பதிவு ஹிட் ஆக இன்னும் சில வாக்குகளே தேவைப்படுகின்றன... கொஞ்சம் அதையும் கவனிச்சிட்டு போங்க:- "சிறுத்தை சீறுமா...?"
டிஸ்கி 5: வலைப்பூவின் ஓரமாக இருக்கும் "பொங்கல் ரேசில் ஜெயிக்கப்போவது...?" கருத்துக்கணிப்பு ஜோதியில் நீங்களும் ஐக்கியமாகுங்க... (இன்றே கடைசி நாள்)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
66 comments:
//கவர்ச்சிக்காக (நம்மூர் இளசுகளை ஏமாற்றுவதற்காக) “மகாராணியும் மன்மதராஜாவும்” என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது..
இந்த பார்முலாவதான் பதிவர்கள் பதிவர்கள் பயன்படுத்துராங்களோ?
மற்றபடி பதிவு அருமை.
நேற்றைய பதிவு ஹிட் ஆக இன்னும் சில வாக்குகளே தேவைப்படுகின்றன... கொஞ்சம் அதையும் கவனிச்சிட்டு போங்க:- "சிறுத்தை சீறுமா...?"
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
தமிழ்மணத்தில் முதல்ல உங்க ஓட்டு போடுங்க தலைவரே...
இதை விட ஒரு பெரிய கொடுமை தெலுங்கில் ஹிட் ஆனா வேதம் படத்தை டப் செய்து
தமிழ்ல தாகம் ன்னு வெளியிட்டாங்க. வேதத்துக்கும் தாகத்துக்கும் என்ன ஒற்றுமைன்னு
எனக்கு இன்னும் புரியல. (இந்த படத்தை தான் வானம் ன்னு சிம்பு நடிக்காரு )
இங்கலீஷ் படம் , இங்க்லீஷ் புத்தகம் , கலக்கறீங்க
நல்ல விமர்சனம்...இதே ரெண்டு காமடி ஆளுங்க தான் தமிழ்ல இம்சை அரசி இரண்டாம் கிளியோபட்ரானு வந்த படத்துல நடிச்சது...ரெண்டும் ஒரே படமா????
Gilma missing...
So Sad...
Padam parthu neenga emaaantha mathiri, pathivai padiccha naanum emaanthutten.
நம்ம ஆளுங்க எப்பவுமே லேட்டு தான். இந்த படம் 2002 -லயே வெளி வந்து விட்டது..
மேலும் தகவலுக்கு
http://www.imdb.com/title/tt0250223/
rightu
புத்தக விமர்சனமும் எழுதலாமே.. நீங்க படிச்சதா பார்வையாளன் சொன்னாரே அந்த புத்தகம்..
கிளீயோபாட்ரா என்றாலே எனக்கு எலிசபெத் டெய்லர் நடிச்ச படம்தான் ஞாபகத்துக்கு வரும். ஏன்னா அது எங்கப்பாவோட ஃபேவரைட். ஆனா இந்த படம் எங்க ஊர்ல ரிலீஸ் ஆவலையே..
அதுக்குப் பதிலா, என்னோட ஃப்ரெண்ட் எனக்கு ஆப்பு வெச்சான்.. சாக்கிசான் படம் ரிலீஸ் ஆயிருக்கு, போலாம்டான்னு கூப்பிட்டான்.. குழப்பத்தோட அங்க போய் நின்னா, Blade of the Rose நு ப்ளேடு போட்டானுங்க... அதனால பழைய படங்கள நான் நம்பி போறதேயில்ல....
அடங்கப்பா இது எப்ப வந்த படம் . இதுக்கு விமர்சனம் வேறையா .ஏதோ ஸ்டில் இருக்குரனால உங்கள சும்மா விடுகிறேன்.( ச்சே ச்சே காலங்காத்தால இவரு கடைய ஓபன் பண்ணி முடியுதா )
படம் பார்க்க செல்லும் முன் நெட்டில் சில தகவல்களை பார்த்துவிட்டு செல்லவும்
இப்படி பல்பு வாங்க வேண்டிய அவசியம் இருக்காது
தேடி தேடி பாப்பீங்க போல
// இந்த மாதிரி தலைப்பு வைத்தால் இளைஞர்கள் எல்லாம் “அட்ராசக்க” என்று அடித்துபிடித்து ஓடிவருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.//
வண்மையாக கண்டிக்கிறேன். எங்கள் யூத்துக்களுக்கு மாபெரும் தொண்டாற்றிவரும் எங்கள் தலைவரை கலாய்த்ததை கண்டித்து இந்த பிளாக்கை விட்டு வெளியேறுகிறேன். கடைசிவரைக்கும் பதிவை படிக்கலை.. ஒரு ஸ்டில் கூட பார்க்கலை.. நம்புங்கப்பா..
அருமை சூப்பர், நான் போட்டோவை மட்டுமே பார்த்தேன்,பதிவை படிக்கவில்லை :-)
போட்டாச்சு போட்டாச்சு !
கிளி,கிளி, கிளி
ஸ்டில்லை நம்ம பதிவில் இணைக்க விரும்பி கூகிளாண்டவரை வேண்டினால் ஒரே 18+ ஸ்டில்கள். சல்லடை போட்டு தேடியதில் கிடைத்த கொஞ்சம் கெளரவமான ஸ்டில் மேலே இருப்பதுதான்
//நல்ல வேலை இதாவது கிடைத்ததே //
1.intha padam vandhu 3-4 varusham aayituche.ithu chamibathya padam alla.
2.intha padathai erkanave raj tvyil niraiya vaati potutaan.
3.monicca belluccithaan elezebeth taylorai vida cleopatra vedathukku siranthavar
“மகாராணியும் மன்மதராஜாவும்” ///
நம்ம மக்களோட கேவலமான மென்டாளிடிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு
தம்பி பிரபா..... நல்லாதான் குடுக்கிறீங்க டீடெயில்... Keep it up!
விமலானந்தன், ராயபுரம்.
நல்ல விமர்சனம்.
ரொம்ப பழைய படம் பாஸ் . நான் பார்த்து நாலாண்டுகள் ஆகிவிட்டது .....
இருந்தாலும் நல்ல காமடி படம் .................
#இந்த மாதிரி தலைப்பு வைத்தால் இளைஞர்கள் எல்லாம் “அட்ராசக்க” என்று அடித்துபிடித்து ஓடிவருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.#
சூப்பர்.......
//மோனிகா பெளுசி எனும் நடிகை. அட ஆமாங்க... அவங்களேதான். இவங்கதான் சோனியா காந்தி வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது//
அவங்களும் இத்தாலி தானே!
//Noémie Lenoir செம க்யூட். பேசாமல் அவரையே கிளியோபாட்(ராவாக) போட்டிருக்கலாம். கிளியோபாட்ரா கருப்பழகி தானே//
உண்மை!
இந்தப் படத்தை 'சன்' டாப் டென்னில் பார்த்த ஞாபகம்! ஒரு நாய்க்குட்டி காரெக்டரும் வருமா?
அருமை நண்பா!
விமர்சனம் அருமை பாஸ்!!
நான் Asterix comics-ன் ரசிகை (இப்போது என் மகன்களும்). எஙகள் ஊருக்கு இந்தத் திரைப்படம் வந்தால், போய்ப் பார்க்கிறோம். தகவலுக்கு நன்றி.
Ippadam 4 aandukalukku mun
""imsai arasi irantaam cleopatra""!!!
endra peyaril tamilil velivandhathu.peyarai mattum maathi etthanai muraithaan release seivarkalo.
இந்த படம் நல்ல படம் தான் இதோட முதல் பார்ட் இன்னும் சூபேரா இருக்கும்.
//இந்தப்படம் குழந்தைகுட்டிகளோடு சென்று குதூகலமாக பார்க்க வேண்டிய திரைப்படம். //
இங்கே இப்படம் குழந்தைகளைப் பார்வையாளராக மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட படமே!குழந்தைகளிடம் வரவேற்பையும் பெற்ற படமே!
பிரபா..எது சுகம்????????????????????????????????????????????????????????????????? (உபயம்..பார்வையாளன்)
ம்ம்ம்.. எல்லா இடங்கள்லயும் முதல்ல தலைப்புதான ஈர்க்குது.. :-)
நல்ல விமர்சனம்..
trailer - மட்டுமே வைத்தும் விமர்சனம் எழுதிறீங்க, எப்பவோ ரிலீஸ் ஆன படத்துக்கும் விமர்சனம் எழுதிறீங்க, அனேகமா இனி வர்ற பதிவுகள்ல படத்துக்கு பூஜை போடுற நாளன்றே விமர்சனம் எழுதுவீங்கனு நினைக்கிறேன்.
உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம். நகைச்சுவை உணர்வுடன். அட்ராசக்க....
நான் இந்தப் படத்த ரொம்ப வருஷம் முன்னாடி பிரெஞ்சிலேயே பார்த்ததுதான் ஆங்கில உப தலைப்புகளுடன். கமிக்ஸாகவும் கார்ட்டூனாகவும் வேறு பார்த்திருக்கிறேன் ஒரு போதும் அலுத்ததில்லை.
//கிளியோபாட்ரா வேடத்தில் நடிக்குமளவிற்கு பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது.//
வன்மையாக கண்டிக்கிறேன் நீங்கள் மெலினா, சூட் எம் அப் எல்லாம் பார்த்ததில்லையோ இதைக் கொஞ்சம் பாருங்க
http://sridharshan.blogspot.com/2009/12/2.html
ஆமாப்பா, அந்த கறுத்த குட்டியின் photos எல்லாம் சும்மா தெறிசிக்கிட்டு இருந்திச்சி ......
நல்ல படம், அட நீங்க போட்ட கருங்குட்டி போட்டோவ சொன்னேங்க.........!
@ # கவிதை வீதி # சௌந்தர், sakthistudycentre.blogspot.com, mazhaikkalam, பார்வையாளன், Pari T Moorthy, டக்கால்டி, Sathishkumar, எல் கே, தம்பி கூர்மதியன், ஆதவா, நா.மணிவண்ணன், Speed Master, Arun Prasath, கவிதை காதலன், இரவு வானம், ஜி.ராஜ்மோகன், FARHAN, ஐத்ருஸ், மங்குனி அமைச்சர், Vimal, சே.குமார், அஞ்சா சிங்கம், NKS.ஹாஜா மைதீன், ஜீ..., எம் அப்துல் காதர், middleclassmadhavi, ராஜகோபால், யோகன் பாரிஸ்(Johan-Paris), சிவகுமார், பதிவுலகில் பாபு, தமிழ்வாசி - Prakash, பன்-பட்டர்-ஜாம், தர்ஷன், malar, பன்னிக்குட்டி ராம்சாமி
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ # கவிதை வீதி # சௌந்தர்
// இந்த பார்முலாவதான் பதிவர்கள் பதிவர்கள் பயன்படுத்துராங்களோ? //
நானும் அதே தலைப்பை பதிவிற்கு பயன்படுத்தியதை சுட்டிக் காட்டுகிறீர்களா...
@ sakthistudycentre.blogspot.com
// நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா? //
ஹிட் ஆயிடுச்சு... நன்றி...
// நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா? //
திரட்டிகளில் இணைச்சுட்டு கடைசியா வந்து போடுவேன்... அதுக்குள்ள நீங்க முந்திட்டீங்க...
@ mazhaikkalam
// இதை விட ஒரு பெரிய கொடுமை தெலுங்கில் ஹிட் ஆனா வேதம் படத்தை டப் செய்து
தமிழ்ல தாகம் ன்னு வெளியிட்டாங்க. வேதத்துக்கும் தாகத்துக்கும் என்ன ஒற்றுமைன்னு
எனக்கு இன்னும் புரியல //
ஆமா ஆமா அனுஷ்கா இடுப்பு காட்டுற மாதிரியும் முதுகு காட்டுற மாதிரியும் ரெண்டு ஸ்டில்லை வச்சியே ஓட்டிட்டாங்க...
@ பார்வையாளன்
// இங்கலீஷ் படம் , இங்க்லீஷ் புத்தகம் , கலக்கறீங்க //
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை பாஸ்... இங்கிலீஷ் படங்களை சப் - டைட்டில் இல்லாமல் ஒருபோதும் பார்த்ததில்லை... இங்கிலீஷ் புத்தகம் இப்போது தான் படிக்கலாமா என்று யோசித்து வருகிறேன்...
@ Pari T Moorthy
// இதே ரெண்டு காமடி ஆளுங்க தான் தமிழ்ல இம்சை அரசி இரண்டாம் கிளியோபட்ரானு வந்த படத்துல நடிச்சது...ரெண்டும் ஒரே படமா???? //
அப்படித்தான் போல... எனக்கும் இங்கே பின்னூட்டமிட்டவர்கள் சொல்லியே தெரிய வந்தது...
@ டக்கால்டி
// Gilma missing...
So Sad...
Padam parthu neenga emaaantha mathiri, pathivai padiccha naanum emaanthutten. //
நீங்க ஏமாறக் கூடுதுன்னு தான் அந்த நடிகையோட பிகினி படத்தை போட்டேன்... இதைவிட மோசமா எதையாவது போட்டா பதிவுலகத்துல வெட்டுகுத்து ஆகிப்போயிடுமே...
@ Sathishkumar
// நம்ம ஆளுங்க எப்பவுமே லேட்டு தான். இந்த படம் 2002 -லயே வெளி வந்து விட்டது.. //
எனக்கும் இந்தத் தகவல் தெரியும்... உலக சினிமா விமர்சனம் எழுதும்போது imdb, wikipedia இரண்டையும் பார்க்காமல் எழுதுவதே இல்லை...
@ தம்பி கூர்மதியன்
// புத்தக விமர்சனமும் எழுதலாமே.. நீங்க படிச்சதா பார்வையாளன் சொன்னாரே அந்த புத்தகம்.. //
அய்யா நான் படிக்கவே இல்லை... சும்மா கையில எடுத்து தான் பார்த்தேன்... நம்புங்க...
@ ஆதவா
// கிளீயோபாட்ரா என்றாலே எனக்கு எலிசபெத் டெய்லர் நடிச்ச படம்தான் ஞாபகத்துக்கு வரும். ஏன்னா அது எங்கப்பாவோட ஃபேவரைட். ஆனா இந்த படம் எங்க ஊர்ல ரிலீஸ் ஆவலையே.. //
எலிசபெத் டெய்லர் நடித்த கிளியோபாட்ரா நடித்த படம் இணையத்தில் எளிதாக கிடைக்கும்... பதிவிறக்கிப் பார்க்கலாமே...
// அதுக்குப் பதிலா, என்னோட ஃப்ரெண்ட் எனக்கு ஆப்பு வெச்சான்.. சாக்கிசான் படம் ரிலீஸ் ஆயிருக்கு, போலாம்டான்னு கூப்பிட்டான்.. குழப்பத்தோட அங்க போய் நின்னா, Blade of the Rose நு ப்ளேடு போட்டானுங்க... அதனால பழைய படங்கள நான் நம்பி போறதேயில்ல.... //
நல்லவேளை நான் ஒருபோதும் ஜாக்கி சான் வகையறா சண்டைப் படங்களை விரும்புவதில்லை...
@ நா.மணிவண்ணன்
// அடங்கப்பா இது எப்ப வந்த படம் . இதுக்கு விமர்சனம் வேறையா //
எல்லாம் ஒரு சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத் தான்...
@ Speed Master
// படம் பார்க்க செல்லும் முன் நெட்டில் சில தகவல்களை பார்த்துவிட்டு செல்லவும் //
அந்தமாதிரி செயல்களை எல்லாம் நான் ஒருபோதும் செய்ய விரும்புவதில்லை... பல்பு வாங்குவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது...
@ கவிதை காதலன்
// வண்மையாக கண்டிக்கிறேன். எங்கள் யூத்துக்களுக்கு மாபெரும் தொண்டாற்றிவரும் எங்கள் தலைவரை கலாய்த்ததை கண்டித்து இந்த பிளாக்கை விட்டு வெளியேறுகிறேன் //
ஹா... ஹா... ஹா... அது ச்சும்மா உல்லுல்லாயி கலாய்ப்பு... நீங்க சொன்னதும் உல்லுல்லாயி கண்டிப்பு தானே...
@ இரவு வானம்
// அருமை சூப்பர், நான் போட்டோவை மட்டுமே பார்த்தேன்,பதிவை படிக்கவில்லை :-) //
என்னங்க இது அநியாயமா இருக்கு... அட்லீஸ்ட் டிஸ்கியையாவது படிங்களேன்...
@ ஐத்ருஸ்
// intha padam vandhu 3-4 varusham aayituche.ithu chamibathya padam alla. //
தெரியும்... உலக சினிமா பற்றி எழுதும்போது பழைய படம் புது படம் என்ற பாகுபாடெல்லாம் பார்ப்பது இல்லை...
// intha padathai erkanave raj tvyil niraiya vaati potutaan. //
இது நான் கேள்விப்பட்டிராத செய்தி... அடுத்தமுறை போடும்போது தகவல் சொல்லுங்கள்...
// monicca belluccithaan elezebeth taylorai vida cleopatra vedathukku siranthavar //
நான் எலிசபெத் டெய்லர் நடித்த கிளியோபாட்ராவைப் பார்த்ததில்லை...
@ Vimal
// தம்பி பிரபா..... நல்லாதான் குடுக்கிறீங்க டீடெயில்... Keep it up!
விமலானந்தன், ராயபுரம். //
என்னது ராயபுரமா... நெருங்கி வந்துட்டீங்க சார்... நான் திருவொற்றியூர் தான்... நீங்களும் அகஸ்தியா தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருந்தீர்களா என்ன...
@ ஜீ...
// இந்தப் படத்தை 'சன்' டாப் டென்னில் பார்த்த ஞாபகம்! ஒரு நாய்க்குட்டி காரெக்டரும் வருமா? //
ஆமாம்... கரெக்டு தான்... நான்தான் பதிவில் சொல்ல மறந்துட்டேன்... நாய்க்குட்டி ஒன்றும் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறது....
@ middleclassmadhavi
// எஙகள் ஊருக்கு இந்தத் திரைப்படம் வந்தால், போய்ப் பார்க்கிறோம். //
மேடம் உங்க ஊருல இந்த மாதிரி தலைப்பு வச்சி படம் வந்தா தயவு செய்து போயிடாதீங்க... இந்த மாதிரி தலைப்பு வைத்த காரணத்தினால் நானே எங்க வீட்டில் பொய் சொல்லிவிட்டுத் தான் படத்திற்கு சென்றேன்...
@ ராஜகோபால்
// இந்த படம் நல்ல படம் தான் இதோட முதல் பார்ட் இன்னும் சூபேரா இருக்கும். //
முதல் பாகம் மட்டுமல்ல... Asterix and obelix series படங்கள் அனைத்துமே நன்றாகவே இருக்கும்...
@ சிவகுமார்
// பிரபா..எது சுகம்????????????????????????????????????????????????????????????????? (உபயம்..பார்வையாளன்) //
சிவா இதையெல்லாம் நீங்க அவர்கிட்டே கேளுங்களேன்... நமக்கு வெறும் கேள்வி ஞானம் தான்... அவர்தான் அனுபவஸ்தர்...
@ தமிழ்வாசி - Prakash
// அனேகமா இனி வர்ற பதிவுகள்ல படத்துக்கு பூஜை போடுற நாளன்றே விமர்சனம் எழுதுவீங்கனு நினைக்கிறேன். //
படம் ரீமேக்காவோ, சுட்டதாகவோ இருந்தால் கண்டிப்பாக அதையும் செய்ய முடியும்... ஐடியா தந்ததற்கு நன்றி...
@ தர்ஷன்
// வன்மையாக கண்டிக்கிறேன் நீங்கள் மெலினா, சூட் எம் அப் எல்லாம் பார்த்ததில்லையோ இதைக் கொஞ்சம் பாருங்க //
உங்களுடைய பதிவைப் படித்தேன்... நீங்கள் குறிப்பிட்டுள்ள malena, shoot em up போன்ற படங்களை நான் பார்த்ததில்லை... புகைப்படங்களில் பார்க்கும்போது மோனிகா அழகாகவே இருக்கிறார்... அவர் அழகிதான்... ஆனால் கிளியோபாட்ரா உடையலங்காரம், கண்ணுக்கு தீட்டப்பட்ட கண்மை இவை அவருக்கு பொருந்தாது போல தோன்றுகிறது...
பை தி வே... ஏஞ்செலினா ஜோலியிருந்து மீனா வரை மாறுபடும் உங்க ரசனை வியப்புக்குரியது...
@ malar
// ஆமாப்பா, அந்த கறுத்த குட்டியின் photos எல்லாம் சும்மா தெறிசிக்கிட்டு இருந்திச்சி ...... //
ஆஹா... கூகிள் வழியா எல்லாத்தையும் பாத்துட்டீங்களா...
டைட்டிலே செம கிக்கா இருக்கே
பொங்கலோ...பொங்கல்!
பொங்கலோ...பொங்கல்!!
உங்கள் வாழ்வில்
இன்பத்தின் தங்கல்...
ஆஹா.. பிரபா நம்ம் கூட மோதறாரே.. ஓ தமிழர்களே தமிழர்களே... ஆங்கிலப்படத்துக்கு ஆதரவு தர்றீங்க தமிழ்ப்பிட்டுப்படத்தை கண்டுக்க மாட்டேங்கறீங்களே...
ஹா ஹா செம ஹிட்டுப்பதிவு.. ஆனா தமிழ்மணஓட்டு கம்மி
...>>>
கடைசி நொடிவரை சீட்டை விட்டு எழுந்திருக்காமல் பார்த்துவிட்டேன். படத்தில் ஒரு சின்ன பிட்டு கூட இல்லை.
haa haa haa ஹா ஹா நீங்களும் என்னை மாதிரியே ஏமாந்தீங்களா? ரொம்ப சந்தோஷம்..
தமிழேண்டா
>>>பதிவுலகில் பாபு said...
ம்ம்ம்.. எல்லா இடங்கள்லயும் முதல்ல தலைப்புதான ஈர்க்குது.. :-)
பாபு கேப் கிடைக்கறப்ப கிடா வெட்டறீங்களே.. என்னைத்தானே நக்கல் அடிச்சீங்க..?
கிளியோபாட்ரா எங்க போனாலும் இருநூறு கழுதைகளோடு தான் போவார்களாம், எதுக்கு தெரியுமா? [கொஞ்சம் கண்ணை மூடி யோசிங்களேன்!.....................]. அதுங்க பாலைக் கறந்து தொட்டியில் நிரப்பி அதுலதான் குளிப்பாங்கலாம், ஹா... ஹா... ஹா... ஹா...
Post a Comment