வணக்கம் மக்களே...
இலவச வலைப்பூ சேவையில் முன்னணி வகிப்பது ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ். இந்த இரண்டில் எது சிறந்தது என்று அறிந்துக்கொள்ள ஒரு சிறிய தேடல். வேர்ட்பிரஸில் இலவச, மற்றும் கட்டண சேவை இரண்டும் இருந்தாலும் இலவச சேவையை மட்டுமே இங்கே ப்ளாக்கரோடு ஒப்பிட்டிருக்கிறேன்.
ஏன் பெரும்பாலானவர்கள் ப்ளாக்கர் சேவையில் வலைப்பூ ஆரம்பிக்கிறார்கள்...?
· இலவசம் + எளிமையானது.
· கூகிள் என்ற மதிப்புமிக்க நிறுவனத்தின் சேவை.
· ஆட் சென்ஸ், பிகாஸா, பிரண்ட் கனெக்ட், யூடியூப் போன்ற இணைந்த சேவைகள்.
· எண்ணிலடங்கா இலவச விட்ஜெட்டுகள்.
· எத்தனை வலைப்பூ வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள்ளலாம். இலவசமாக.
· குறிச்சொற்களுக்கு ஏற்ப கூகிள் தேடுபொறியில் உங்கள் வலைப்பூ முன்னிலைப்படுத்துப்படும்.
ஏன் வேர்ட்பிரஸ்...?
· இலவசம். எளிமையானது எனினும் ப்ளாக்கர் அளவிற்கு எளிமையானது அல்ல.
· தனி வலைத்தளமாக மாற்றும் செய்முறை சுலபமானது.
· பிற சேவையில் இருந்து வலைப்பூவை ஏற்றுமதி செய்வது எளிது.
· ஏகப்பட்ட டெம்ப்ளேட்ஸ்.
· சேவையைப் பற்றி விசாலமான உதவி வழங்க: en.forums.wordpress.com/
வேர்ட்பிரஸ் சேவையை பயன்படுத்துவது கடினமா...?
· கொஞ்சம் கடினம்தான். ஆனால் பழகினால் இரண்டே நாட்களில் எளிமையாகிவிடும்.
புதிதாக வலைப்பூ ஆரம்பிக்கப் போகிறீர்களா...?
முதலில் நீங்கள் என்ன காரணத்திற்காக வலைப்பூ ஆரம்பிக்க விரும்புகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள்.
· பொழுதுபோக்கிற்காகவும், பர்சனல் விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காகவும் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் ப்ளாக்கர் சேவையே போதுமானது. எளிமையானதும் கூட.
· டெக்னிக்கலான விஷயங்களை எழுதுவும், தனி வலைத்தளமாக மாற்ற திட்டம் வைத்திருந்தாலும் வேர்ட்பிரஸ் சேவையை தேர்ந்தெடுக்கவும்.
ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாறும் வசதி இருக்கிறதா...?
· ப்ளாக்கரிலிருந்து வேர்ட்பிரஸ் சேவைக்கு மாறுவது சாத்தியம். ஆனால் வேர்ட்பிரஸ் சேவையில் இருந்து ப்ளாக்கருக்கு மாறுவது சாத்தியமில்லை.
பிற இலவச வலைப்பூ சேவைகள்...?
· TypePad
· BlogSome
இன்னும் ஏராளமான இலவச சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன.
இப்போதைக்கு இவ்வளவுதான். வேற ஏதாவது இருந்தால் அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறேன்.
டிஸ்கி 1: இன்றைக்கு வேறொரு பதிவு போடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் இன்றைக்கு குடியரசு தினம் என்பது நினைவுக்கு வந்தது. எப்படியும் வழக்கம்போல எல்லாரும் டெம்ப்ளேட் வாழ்த்துக்களே கூறுவார்கள் என்பதால் அந்தப்பதிவை பதுக்கிவிட்டு அரைகுறையாக எழுதி வைத்திருந்த இந்தப்பதிவை வெளியிடுகிறேன். குறைகள் இருப்பின் மன்னிக்க...
டிஸ்கி 2: (குடியரசு தின சிறப்பு டிஸ்கி) யாராவது குடியரசு தின வாழ்துக்கள்ன்னு பின்னூட்டம் போட விரும்பினால் இந்தப்பதிவை படிச்சிட்டு அப்புறமா வந்து சந்தோஷமா சொல்லுங்க...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
59 comments:
போடு முத வெட்டு முத ஓட்டு
தானிக்கு தீனி சரியாப்போச்சு
நண்பா.. உங்க செல் நெம்பரை மிஸ் பண்ணீட்டேன்.. அதாவது என் செட் மிஸ். சோ இப்போ உங்க நெம்பரை எஸ் எம் எஸ் பண்ணுங்க
ஓ சி ல எது கிடைக்குதோ அதுதான் தமிழனுக்கு பிடிக்கும். நான் ஒரு தமிழன். ஹி ஹி ஹி
பரீட்சையில, எனக்கு தெரிந்த இரண்டு வரி பதில வச்சு அதையே மாத்தி மாத்தி எழுதி ஒரு பக்கத்துக்கு கட்டுரை எழுதிய ஞாபகம் வருது. அத்தோட, நீங்க போட்டோ போட்ட மாதிரி நான் ஒரு வரைபடமும் போடுவேன்.
நாங்களும் எல்லாத்திலேயும் ஓட்டு போடுவோம்ல....
எளிதாக புரியும் வண்ணம் , விளக்கம் இருக்கிறது. நன்றி.
எளிமையான விளக்கம் .. நன்றி
எளிமையான விளக்கம் .. நன்றி
நல்லா இருக்குங்க.
பயன்னுள்ள பதிவு நன்றி!!!
எளிமையான விளக்கம்.
பயனுள்ள பதிவு. நன்றி.
முதலில் வர்ட்பிரஸில்தான் வலைப்பதிவு துவங்கினேன். ஆனால் ஏனோ ப்லாக்கருக்கு வந்துவிட்டேன். ஒருவேளை தமிழில் ப்லாக்கர்களே அதிகமிருப்பதால் இருக்கலாம்
புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும்..!!
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
ரஹீம் கஸாலி அவர்களின் வலைப்பூவில் நீங்கள் இட்ட பின்னூட்டதுக்கு பதில்:
நண்பா நான் "தமிழ் வலைப்பதிவர்களின் அடையாளம்" என்ற வலைப்பூ ஆரம்பிக்க காரணம். நான் நிறைய பதிவர்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பியதுதான்.
இன்று அந்த நோக்கம் நம் பதிவர்கள் தங்கள் அடையாளங்களையும், மற்றவர்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலைக்கு வந்து உள்ளது.
வெறும் கருத்துக்களை மட்டும் பகிந்து கொள்ளும் நாம் அதையும் தாண்டி ஒரு அமைப்பாக உருவாகலாம், சமூக தளங்களில் அவர்கள் நண்பர்கள் ஆக இணைய முடியும்.
புதிய பதிவர்கள் வரும்போது அவர்கள் எழுதும் பிரிவில் உள்ள பதிவர்களை எளிதாக தெரிந்து கொள்ள இயலும்.
மேலும் முக்கியமாக அவர்கள் முகவரி, தொலைபேசி கொடுக்கப்பட்டு இருந்தால் தொடர்பு கொள்ள இயலும்(எல்லோரையும் இதற்கு வற்புறுத்தவில்லை).
மேலும் தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி!!
நல்ல தகவல்கள்.....குடியரசு தின வாழ்த்துக்கள்.....
நல்ல தகவல், ஆனா கண்டிப்பா வாழ்த்துக்கள் கிடையாது!(நானும் படிச்சேன்)
வேர்ட்பிரஸ் ஏன் கஷ்டம்னு விளக்கலாமே? அதே மாதிரி, வேர்ட்பிரஸ் யூஸர் ப்ளாக்கரிலும், ப்ளாக்கர் வேர்ட்பிரசிலும் கமெண்ட் போடமுடியுமா?
//////சி.பி.செந்தில்குமார் said...
நண்பா.. உங்க செல் நெம்பரை மிஸ் பண்ணீட்டேன்.. அதாவது என் செட் மிஸ். சோ இப்போ உங்க நெம்பரை எஸ் எம் எஸ் பண்ணுங்க/////
பொறுப்பில்லாம செல்போனைத் தொலைச்சிட்டு, நேக்கா செல் நம்பரை இஸ் பண்ணிட்டேன், செட்ட மிஸ் பண்ணிட்டேன்னு பீலா விடுறதப் பாருங்கய்யா....!
நல்லா ஒப்பிட்டு சொல்லி இருக்கீங்க பாஸ்! நம்ம கடையில இன்னிக்கு பால் பிசினெஸ் வந்து வாங்கி குடிச்சிட்டு போங்க பாஸ்!!
இந்த டீடைல் யாருக்கு நம்மளுக்கு 'அந்த' டீடைல் தான் வேணும்
எளிமையான விளக்கம்
பயனுள்ள பதிவு :)
தகவலுக்கு நன்றிங்க..
நல்ல தகவல். போட்டு தாக்குங்க.
Thank u for ur information.ரொம்ப நாள் கழித்து ஏன் ஆத்திரத்தை பதிவு செய்துள்ளேன் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.நன்றி.
trjprakash.blogspot.com
எளிமையான விளக்கம் .. நன்றி
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...
Have a look @ here too.
வோர்ட்பிரஸ் (WordPress) பற்றி ஒரு விரிவான பார்வை
Thanks
LV
thanks
tell me how to change from Blog to WordPress
pl give the tips to change
speedmasterblog@gmail.com
//அதே மாதிரி, வேர்ட்பிரஸ் யூஸர் ப்ளாக்கரிலும், ப்ளாக்கர் வேர்ட் பிரசிலும் கமெண்ட் போட முடியுமா? //
ப்ளாக்கர் வேர்ட்பிரசிலும் கமெண்ட் போடலாம், நான் போட்டிருக்கிறேன். ஆனால் மற்றது தெரியவில்லை தல!!
@!@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
//அதே மாதிரி, வேர்ட்பிரஸ் யூஸர் ப்ளாக்கரிலும், ப்ளாக்கர் வேர்ட் பிரசிலும் கமெண்ட் போட முடியுமா? //
ப்ளாக்கர் வேர்ட்பிரசிலும் கமெண்ட் போடலாம், நான் போட்டிருக்கிறேன். ஆனால் மற்றது தெரியவில்லை தல!!
நல்ல தகவல்கள் பாஸ்
வணக்கம்.நான் வலைப்பூவுக்குப் புதுசு எனக்கு என்குழந்தைகள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.நிறைய விஷயங்களை இனிமேல்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.பிரபகரன்வலைப்பூவில் தந்திருக்கும் குறிப்புகளைப் பார்த்து கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.நல்லது.
சும்மாவின் அம்மா.
நல்ல தகவல்கள்
Thanks..
நல்ல விளக்கம் நண்பா....இதுகளை எல்லாம் எப்படி இணைக்கிறது என்றுதான் குழப்பமா இருக்கு இருந்தாலும் முயற்சி செய்வோம்லே...வாழ்த்துக்கள்.
பயனுள்ள தகவல்கள் நண்பரே.நானும் wordpress பலமுறை பயன்படுத்தலாம் என நினைத்து கணக்கு ஆரம்பிப்பேன் ஆனால் எளிதாக இல்லாததால் விட்டுவிடுவேன்.
சில புதுவிடயங்கள் அறிந்து கொண்டேன்!
நீங்கள் சொன்னதுபோல் Professional Pageஆக எமது தளத்தை வைத்திருக்க Wordpressதான் சிறந்தது!
useful information, thala! :)
அன்பின் பிரபாகரன் - நல்ல தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நல்ல தகவல்கள் .
@ சி.பி.செந்தில்குமார், ரஹீம் கஸாலி, Chitra, பார்வையாளன், ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா), ந.ர.செ. ராஜ்குமார், pavi, சே.குமார், Lakshmi, ஆதவா, "நந்தலாலா இணைய இதழ்", பலே பிரபு, NKS.ஹாஜா மைதீன், வைகை, பன்னிக்குட்டி ராம்சாமி, மாத்தி யோசி, நா.மணிவண்ணன், Harini Nathan, கந்தசாமி, ! சிவகுமார் !, jayaramprakash, sakthistudycentre-கருன், IT Tweets, Speed Master, T.V.ராதாகிருஷ்ணன், எம் அப்துல் காதர், Jhona, முத்துசபாரெத்தினம், Madhavan Srinivasagopalan, அந்நியன் 2, Lucky Limat லக்கி லிமட், கார்த்தி, வருண், cheena (சீனா), இளம் தூயவன்
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ சி.பி.செந்தில்குமார்
// தானிக்கு தீனி சரியாப்போச்சு //
இதென்ன புது தத்துவமா இருக்கு...
// நண்பா.. உங்க செல் நெம்பரை மிஸ் பண்ணீட்டேன்.. அதாவது என் செட் மிஸ். சோ இப்போ உங்க நெம்பரை எஸ் எம் எஸ் பண்ணுங்க //
அடப்பாவமே... என்ன மாடல் போன்...
@ Anonymous
// பரீட்சையில, எனக்கு தெரிந்த இரண்டு வரி பதில வச்சு அதையே மாத்தி மாத்தி எழுதி ஒரு பக்கத்துக்கு கட்டுரை எழுதிய ஞாபகம் வருது. அத்தோட, நீங்க போட்டோ போட்ட மாதிரி நான் ஒரு வரைபடமும் போடுவேன். //
கரெக்டா தான் சொல்லியிருக்கீங்க... டிஸ்கியில சொன்னது போல இது ஒரு முழுமை பெறாத பதிவு... இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும்...
@ ஆதவா
// முதலில் வர்ட்பிரஸில்தான் வலைப்பதிவு துவங்கினேன். ஆனால் ஏனோ ப்லாக்கருக்கு வந்துவிட்டேன். ஒருவேளை தமிழில் ப்லாக்கர்களே அதிகமிருப்பதால் இருக்கலாம் //
அப்படிங்களா... ஆச்சர்யம்... சரிதான் தமிழ் பதிவர்கள் பிளாக்கரில் தான் அதிகம்...
@ பலே பிரபு
// ரஹீம் கஸாலி அவர்களின் வலைப்பூவில் நீங்கள் இட்ட பின்னூட்டதுக்கு பதில்: //
எளிதாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் பதிவர்களுக்கு ஆர்குட், பேஸ்புக் போன்ற ஒரு சமூக வலையமைப்பு தளத்தை ஏற்படுத்த விழைகிறீர்கள்... நல்ல முயற்சி... உண்மைத்தமிழன் போன்ற பதிவுலக பெரியவர்களிடம் பேசினால் நல்ல ரீச் கிடைக்கும்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// வேர்ட்பிரஸ் ஏன் கஷ்டம்னு விளக்கலாமே? //
ஓரளவேனும் HTML, PHP போன்ற கோடிங்குகள் தெரிந்திருக்க வேண்டும் என்று அறிகிறேன்...
// அதே மாதிரி, வேர்ட்பிரஸ் யூஸர் ப்ளாக்கரிலும், ப்ளாக்கர் வேர்ட்பிரசிலும் கமெண்ட் போடமுடியுமா? //
ப்ளாக்கர் பயனாளர்கள் வேர்ட்பிரசில் பின்னூட்டங்கள் போடலாம்... வேர்ட்பிரஸ் பயனாளர்களும் ப்ளாக்கரில் பின்னூட்டம் போடலாம் ஒப்பன் ஐடி என்னும் ஆப்ஷன் மூலமாக...
@ மாத்தி யோசி
// நல்லா ஒப்பிட்டு சொல்லி இருக்கீங்க பாஸ்! நம்ம கடையில இன்னிக்கு பால் பிசினெஸ் வந்து வாங்கி குடிச்சிட்டு போங்க பாஸ்!! //
உங்க பால் பிசினசை காலையிலேயே பார்த்தேன்... விரிவா படிக்க முடியல... இப்ப வர்றேன்... என்னுடைய தளத்தில் பின்தொடற்பவராக இணைந்ததற்கு நன்றி...
@ நா.மணிவண்ணன்
// இந்த டீடைல் யாருக்கு நம்மளுக்கு 'அந்த' டீடைல் தான் வேணும் //
எந்த டீடெயில் மணி விளக்கமா சொன்னாதானே தெரியும்...
@ jayaramprakash
// ரொம்ப நாள் கழித்து ஏன் ஆத்திரத்தை பதிவு செய்துள்ளேன் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.நன்றி. //
படித்தேன்... கிட்டத்தட்ட கே.ஆர்.பி பதிவில் இருக்குற அதே சமூக கோபம் தெரிகிறது, தெறிக்கிறது...
@ IT Tweets
// Have a look @ here too. //
பார்த்தேன்... அநியாயத்திற்கு விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...
@ Speed Master
// tell me how to change from Blog to WordPress //
இந்த இணைப்பை முயற்சி செய்யுங்கள்...
http://www.freetipsandwits.com/moneymakingblog/12-steps-to-convert-your-blog-from-blogger-to-wordpress.html
@ முத்துசபாரெத்தினம்
// வணக்கம்.நான் வலைப்பூவுக்குப் புதுசு எனக்கு என்குழந்தைகள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.நிறைய விஷயங்களை இனிமேல்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.பிரபகரன்வலைப்பூவில் தந்திருக்கும் குறிப்புகளைப் பார்த்து கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.நல்லது.
சும்மாவின் அம்மா. //
வணக்கம் அம்மா என்னுடைய தளத்திற்கு முதல் முறையாக வருகை தந்ததற்கு நன்றி...
@ cheena (சீனா)
// அன்பின் பிரபாகரன் - நல்ல தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //
அய்யா... முதல் வருகை தந்ததற்கும் எனது தளத்தில் பின்தொடற்பவராக இணைந்ததற்கும் நன்றிகள்...
Good post. I used wordpress too before. For me, Blogger is best.
//வேர்ட்பிரஸ் சேவையில் இருந்து ப்ளாக்கருக்கு மாறுவது சாத்தியமில்லை//
சாத்தியம்! ஆனால் கொஞ்சம் சிக்கலானது. export file conversion script மூலமாகச் செய்யமுடியும்.
வேர்ட் ப்ரெஸ்ஸிலிருந்து ப்ளாக்ஸ்பாட்டிற்கு மாற்ற இந்த உரலி உதவும்
http://wordpress2blogger.appspot.com/
எளிமையான விளக்கம்
good
நல்ல பதிவு.
நல்ல விளக்கங்கள் உள்ள பதிவு.
Post a Comment