வணக்கம் மக்களே...
போன வாரம் ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஜனவரி 30ம் தேதி சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே ஒரு சந்திப்பு. தமிழக மீனவர்களுக்கான போராட்டத்தில் நம்முடைய பங்கு என்ன என்பது குறித்தும், போராட்டத்தின் அடுத்தகட்ட திட்டம் குறித்தும் ட்விட்டர் பயனாளர்கள் சார்பாக நடத்தப்பட்ட சந்திப்பு அது. நான் உட்பட சில பதிவர்களும் கலந்துக்கொண்டோம். ஸ்பாட்டிற்கு சென்றபோது அதிர்ச்சியாக இருந்தது. சுற்றிலும் ஒரே போலீஸ் கூட்டம். என்னவென்று விசாரித்துப் பார்த்ததில் அன்றைய தினம் காந்தியின் இறந்தநாளாம். அதற்காக சிலைக்கு பாதுகாப்பு கொடுக்க வந்திருக்கிறார்கள். இறந்துப்போன காந்தியின் சிலைக்கு கொடுக்கும் பாதுகாப்பை கூட, இறந்துக்கொண்டிருக்கும் நம்மின மீனவர்களுக்கு கொடுக்கக்கூடாதா...???
(அந்த சந்திப்பின் முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள இங்கே க்ளிக்கவும்...)
யுத்தம் செய் படம் பார்த்து மூன்று நாளாகிவிட்டது. இருந்தாலும் இன்னும் அந்த ஹேங் ஓவரில் இருந்து வெளியில் வரமுடியவில்லை. படத்தின் நினைவுகள் இன்னும்கூட சுமையாகவே இருக்கின்றன. இயக்குனரின் முந்தய படம் கூட என்னை இந்த அளவிற்கு கலங்கடிக்கவில்லை. ஒருவேளை தமிழ் சினிமாவில் காலம்காலமாக பார்த்து சலித்த அதே அம்மா செண்டிமன்ட் என்பதாலோ என்னவோ. ஆனால், யுத்தம் செய் பார்த்ததிலிருந்து இப்படியெல்லாம் எங்கேயாவது நடக்குமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது.
நேற்றிரவு தென்காசியில் இருந்து நண்பன் கால் பண்ணியிருந்தான். ஏதோ சரத்குமார் மக்கள் கட்சி... ச்சே ச்சே... சமுதாய மக்கள் கட்சி.... என்னது...? அதுவும் இல்லையா...? சரி ஓகே... சமத்துவ மக்கள் கட்சி மாநாடாம். தென்காசியே தினறிவிட்டது. வந்த கூட்டத்தை பார்த்து எதிர்கட்சிகள் மிரண்டு போயிருக்கின்றன. எப்படியும் சரத்குமார் இந்தமுறை 5 சீட் ஜெயித்துவிடுவார் என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான். நானும் நண்பனின் பேச்சை உண்மையென்று நம்பிவிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது, பயபுள்ள சமுதாய பாசத்துல சரக்கடிச்சிட்டு பொய் சொல்லியிருக்கான். ஏலே... உங்காளு டெபாஸிட் வாங்குதாரான்னு பாருலே...
வரலாற்றில் இந்த நாள்:
1914ம் ஆண்டு இதே நாளில் (பிப்ரவரி 7) சார்லி சாப்ளினின் இரண்டாவது படம் ரிலீசானது. இரண்டாவது படத்தில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா...?
சற்று சின்னதாய் இருக்கும் பந்து வீசுபவரின் தொப்பி, இறுக்கமான மேல் அங்கி, அளவில் பெரிதான பேன்ட், மிகவும் பெரிய ஷூக்கள், கையில் சின்னப் பிரம்பு இப்படியான அம்சங்களைக் கொண்ட “சிறிய நாடோடி” (The Little Tramp) எனப்படும் அவரது புகழ்ப்பெற்ற கதாப்பாத்திரம் அறிமுகமானது இந்தப்படத்தில் இந்த தேதியில் தான்.
ட்வீட் எடு கொண்டாடு:
திமுக பொதுக்குழுவில் குசுப்புவின் பக்கத்து சீட்டில் உக்கார நடந்த கைகலப்பில் துரைமுருகன் வெற்றி ஆற்க்காட்டார் அப்போலோவில் அனுமதி!
பொண்ணுங்கள எந்தளவுக்கு லவ் பண்ணனும் தெரியுமா...? நாம லவ் பண்றத பார்த்து அவ ஃப்ரென்ட் நம்மள லவ் பண்ணனும் -காவலன் ஃபேன்ஸ்
இன்னமும் தண்ணி/தம் அடிக்காத பசங்க தான் வேணும்ன்னு யாராவது/எந்த பேரன்ட்ஸாவது கேட்டுட்டு இருக்காங்களா??? #ஐயோ பாவம்
அன்று கோவலன் தண்டிக்கப்பட்டான் - இன்று ராசாவுக்குத் தண்டனை: கி.வீரமணி # அடுத்து கனிமொழிய கண்ணகின்னு சொல்லுவார் பாரு! அதான் ஃபைனல் டச்!
"நாங்கெல்லாம் படுத்துக்கிட்டே ஜெயிப்போம்"
"நீங்க என்ன ப்ராஸ்டிட்யூட்டா?"
பதிவுலகில் புதியவர்: எழுத்துக்கடை
நாகர்கோவிலில் பிறந்து ஊரெல்லாம் அலைந்து திரிந்து இப்போது துபாயில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பதிவுலகத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நேற்றுவரை முப்பத்தியாறு பதிவுகளை எழுதியிருக்கிறார். ஆனால் திரட்டி, ஓட்டுப்பட்டை போன்ற அரசியலில் சிக்காததால் நிறைய பேருக்கு அறிமுகமில்லாமல் இருக்கிறார். பயபுள்ளைங்க அப்படின்னுற வார்த்தைக்கு காப்பிரைட்டே வாங்கி வைத்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, எழுத்துநடை பிரமாதமா இருக்கு. அப்புறம் என்ன சீக்கிரமா போய் ஜோதியில ஐக்கியமாகுங்க...
எனக்குப் பிடித்த பாடல்:
யுத்தம் செய் ஏற்பட்ட பாதிப்பை பற்றி பதிவின் முன்பகுதியில் சொல்லியிருந்தேன். அந்த பாதிப்பில் இருந்து அவ்வப்போது என்னை மீட்டெடுத்ததும் அதே திரைப்படத்தின் “கன்னித்தீவு பொண்ணா...” என்ற பாடல்தான். இடிச்சா உசுரு போகும் தண்ணி லாரி நீ... அடிச்சா போதை வரும் பாண்டிச்சேரி நீ... அடடே என்னே இலக்கிய வரிகள். அதைவிட அருமை, தமிழகத்து ஷகிரா நீத்து சந்திரா. அவரைப்பற்றி தனிப்பதிவே எழுதலாம். திரையரங்கில் பார்த்தபோது பாடலின் நடுநடுவே படத்தின் திருப்புமுனையான காட்சிகள் சில வந்துபோயின. ஆனால், டிவி ஒளிப்பரப்பில் நாசூக்காக அந்தக்காட்சிகளுக்கு பதிலாக வேறு காட்சிகளை சொருகியிருக்கிறார்கள். புத்திசாலித்தனம்.
இந்த வாரப் புகைப்படம்:
மின்கம்பத்தின் மீது அமர்ந்திருக்கும் காக்கைகள்... கேரளாவில் எடுக்கப்பட்ட புகைப்படம், மெயிலில் கிடைத்தது...
இந்த வார காணொளி:
பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டும்தானா...? வேறென்ன... மேலும் விவரங்களுக்கு:
இந்த வார தத்துவம்:
“NEVER SAY ANYTHING BAD ABOUT YOURSELF…
YOU HAVE ENOUGH PEOPLE AROUND YOU TO SPEAK ON THAT SUBJECT…!!!”
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
65 comments:
வாழ்த்துக்கள்.
சில கேள்விகள் அனுப்பியிருக்கேன் பதில் எதிர் பார்க்கிறேன்.
hot rise
superb.. pp..
ம்ம்ம். போதையில என்னமா எழுதிருகிங்க. மீண்டும் ஒரு சூப்பர் காக்டெயில்.
நல்லாருக்கு நண்பா...
தொடர்ந்து கலக்குங்க...
புகைப்படம், காணொளி தத்துவமெல்லாம் செம சூப்பர். சார்லி சாப்ளின் தகவ்ல் புதுசு! ட்வீட்களும் சூப்பர், மொத்தத்தில் இன்று செம அருமை!
Super.... Kalakkal seithigal prabha.
இறந்துப்போன காந்தியின் சிலைக்கு கொடுக்கும் பாதுகாப்பை கூட, இறந்துக்கொண்டிருக்கும் நம்மின மீனவர்களுக்கு கொடுக்கக்கூடாதா...???
ஏன்யா எங்க போலப்பில மண்ணை போடுற?
இப்படிக்கு அரசியல்வியாதிகள்
ட்வீட் எல்லாமே பிரமாதம் அதுவும் பொதுகுழுவில்......???
மொத்தத்தில் நல்ல போதை
nice work...continue..:)
ம.தி.சுதா said...
hot rise .....................////////////////////////
யாருப்பா அது வைன் ஷாப்ல வந்து சுடு சோறு கேக்குறது .
இங்க எல்லாம் சைடிஷ்தான் .......................
தல நல்லா கலக்கலா எழுதி இருக்கீங்க.... யுத்தம் செய் பார்க்கவேண்டும் போல் உள்ளது ஆனால் இங்கு அதற்க்கு வாய்ப்பு இல்லை,சார்லி சாப்ளினின் பற்றிய தகவல் நன்று,கன்னித்தீவு பொண்ணா.. பாடல் நானும் டிவியில் பார்த்தேன்,சாருவைவின் கை நன்றாக நடித்துள்ளது,
Rightu.
Silai matter super.
நைஸ் பிரதர்.. !!!
கலகலப்பான பதிவு..... கலக்கலான பதிவு... :-)
கலக்கல்.. கலந்து கட்டி காக்டெயில் அடிச்சிருக்கீங்க...
காந்திசிலை பாதுகாப்பு நச்...
யுத்தம் செய்......... சேம் பிஞ்ச்
ச.ம.க - ???
ட்வீட்டர் மெஸெஜுகள் சும்மா கதி கலங்குதே, குறிப்பா வீரமணியின் வசனம்
யுத்தம் செய் பாடலை பலரும் தேவையற்றது என்கிறார்கள்... உங்க்ளுக்குப் பிடித்திருக்கிறது???
ஆனாலும் தமிழகத்து ஷகீரா ரொம்ப ஓவருங்க,, முதல்ல அவங்க தமிழகமே கிடையாது, நீங்க ஷகீராவின் whenever wherever லிருந்து Loba வரைக்கும் பார்த்தீங்கன்னா, சத்தியமா யாரையும் இந்தியாவின் ஷகீரான்னு சொல்லமாட்டீங்க............... (ஸ்ரேயாவை சொல்லலாமோ??)
புகைப்படம் - ஜம்ம்!!
கலக்கல் காக்டெயில்
நல்லாருக்கு நண்பா...
தொடர்ந்து கலக்குங்க...
ada செம ...
>>>iamkarki
பொண்ணுங்கள எந்தளவுக்கு லவ் பண்ணனும் தெரியுமா...? நாம லவ் பண்றத பார்த்து அவ ஃப்ரென்ட் நம்மள லவ் பண்ணனும் -காவலன்
கலக்கல்
>>> இந்த வார புகைப்படம் நன்றாக உள்ளது. பிப்ரவரி 14 ரொமாண்டிக் லுக் விட்ருவோம். டோன்ட் வொர்ரி. பீ ஹாப்பி!
புல் மப்பு எத்துன திருப்தி
சார்லி சாப்ளினின் ஃப்ளாஷ்பேக் நினைவுகல் சூப்பர்ப் பிரபா...
//ட்வீட் எடு கொண்டாடு://
சூப்பர்ப்!
கடை களைகட்டுது நண்பா.... செம பேக்கேஜிங்... கலக்குங்க :)
பிரபா ஒயின்ஷாப்ல இதுவரை வந்த சரக்குகள்ல இன்னிக்கு சரக்குகள்தான் டாப்.......!
ட்வீட்டர்ஸ் மீட்டிங்குக்கு போனீங்களா... வெரிகுட்.....!
இந்த வார ட்வீட்டுகள் எல்லாமே அசத்தல்.... நல்லா செலக்ட் பண்ணி இருக்கீங்க பிரபாகரன்!
இந்தக் கன்னித் தீவு பொண்ணா பாட்டு எனக்கென்னமோ ரொம்ப பழையபாட்டு மாதிரியே ஒரு ஃபீல் இருக்கு, ஒருவேளை டீவில திரும்ப திரும்ப விளம்பரம் வர்ரதால இருக்குமோ?
அப்போ காதலர் தினத்துக்கு எழுத ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.. யக்கா மவளே..இந்து......
சார்லி சாப்ளினின் மேட்டர் நல்ல தகவல்
கலக்கல் பாஸ்! :-)
//அப்புறம்தான் தெரிஞ்சது, பயபுள்ள சமுதாய பாசத்துல சரக்கடிச்சிட்டு பொய் சொல்லியிருக்கான். ஏலே... உங்காளு டெபாஸிட் வாங்குதாரான்னு பாருலே...
உங்களுக்கு சரத்குமாரை பிடிக்கலையா ? இல்லை அவரு சமூதாயத்தை பிடிக்கலையா? # டவுட்டு
(எனக்கு சரத்குமாரை சுத்தமாக பிடிக்காது)
"பிரபா வைன்ஸ் ஓனர்ரா?"
"ஆமாங்க"
"கடை எப்போ சார் தெரப்பீங்க?"
all informations are simply super.last message is real.
//இறந்துப்போன காந்தியின் சிலைக்கு கொடுக்கும் பாதுகாப்பை கூட, இறந்துக்கொண்டிருக்கும் நம்மின மீனவர்களுக்கு கொடுக்கக்கூடாதா...???//ஒவ்வொரு ஊரிலும் தலைவர்கள் சிலை [போற வர்ற காக்கா எல்லாம் அங்க தான் கக்கா போகும்..!], எல்லா கட்சிகளின் கொடிக் கம்பங்கள் என எக்கச் சக்கமான இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த தலைவர்களின் சிலைகளுக்கு ஏதாவது முக்கியமான நாளில் எவனாவது வந்து செருப்பு மாலை போட்டுவிட்டுப் போய் விடுவான், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்ப்படும். சென்னை கடற்க்கரை முழுவதும் பத்தடிக்கு ஒரு சிலை, அதுவும் இந்த கண்ணகி சிலை பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா? [முன்பு லைட் எல்லாம் போடாத காலாத்துல, கண்ணகி சிலை பின்னாடி எல்லா 'வேலையும்' சாயங்காலம் ஆறுமணிக்கு மேல நடக்கும், கர்மம், கர்மம்..... இதற்கெல்லாம் ஒரே தீர்வு சிலைகளை அப்புறப் படுத்துவதுதான்.
//ஆனால், யுத்தம் செய் பார்த்ததிலிருந்து இப்படியெல்லாம் எங்கேயாவது நடக்குமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது.// நந்தலாலாவை கொஞ்ச நேரம் பாத்துட்டு போதும்டா சாமின்னு மூடிட்டேன், அதே மாதிரி இந்த படத்தையும் ஸ்கிப் பண்ணிடலாம்னு நினைக்கிறேன்.
//சரத்குமார் மக்கள் கட்சி// ஆஹா இதுதான் ச.மு.க. வின் பெயர்க் காரணமா? இது ஒரு உருப்படியான கட்சியா மாறினா அது இவரோட வீட்டுச் சொத்தாகிவிடும், ஆனா எங்கேயும் டெபாசிட் கூட வாங்காதே!! ஹா..ஹா....ஹா....
சார்லி சாப்ளினை நாட்டில் வாழவிடாமல் விரட்டி விட்டுவிட்டு அவருக்கு ஸ்டாம்பு மட்டும் வெளியிட்டு இருக்கானுங்களா, பாவிப் பசங்க?
காக்கா உட்கார்ந்திருக்கும் படத்த பாகும் போதே பயமா இருக்கு. ஒருதடவை இந்த மாதிரி இருக்கும் போது ஒரு கம்பியிலிருந்த காக்கா பக்கத்து கம்பியிலிருந்த ஒரு காக்கையை டச் பண்ணிவிட்டது, அவ்வளவுதான் மொத்தவும் செத்து விழுந்தன.
இந்த வாரப் புகைப்படம்:
அருமை.காக்கைகள் கட்சி மாநாடா?
Tweets are good!!
ம்ம்ம்....கலக்குங்க.....
மிக்ஸிங் நல்லாயிருக்கு! :-)
Nice
எல்லாம வாசிச்சன். யுத்தம்செய் இன்னும் பார்க்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கிறேன்..
தல பதிவு தலைப்புக்கு இவ்வளவு யோசிச்ச நீங்க, பதிவுல வகை வகையா கலக்கல் காக்டெயில் கொடுக்கிறீங்க, கலக்கல் தொடர வாழ்த்துகள்.
நந்தலாலாவை கொஞ்ச நேரம் பாத்துட்டு போதும்டா சாமின்னு மூடிட்டேன், அதே மாதிரி இந்த படத்தையும் ஸ்கிப் பண்ணிடலாம்னு நினைக்கிறேன்."
பதிவு நன்றாக இருந்தது.. பாராட்டி பின்னூட்டம் இட இருந்தேன்,,
ஆனால் இந்த பின்னூட்டம் இடுகையைவிட சூப்பர்...
பாராட்டுக்கள் Jayadev Das...
@ விக்கி உலகம், ம.தி.சுதா, தமிழ்வாசி - Prakash, மாணவன், எஸ்.கே, சே.குமார், மனசாட்சி, Samudra, அஞ்சா சிங்கம், டெனிம், ஐத்ருஸ், Sukumar Swaminathan, Chitra, ஆதவா, நா.மணிவண்ணன், Speed Master, சி.பி.செந்தில்குமார், ! சிவகுமார் !, FARHAN, பிரபு எம், பன்னிக்குட்டி ராம்சாமி, மங்குனி அமைச்சர், ஜீ..., "ராஜா", Arun Prasath, மாத்தி யோசி, Jayadev Das, இராஜராஜேஸ்வரி, கோவை ஆவி, Pari T Moorthy, சேட்டைக்காரன், T.V.ராதாகிருஷ்ணன், கார்த்தி, கும்மாச்சி, பார்வையாளன்
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... வாராவாரம் தவறாமல் கடைக்கு வந்து உங்கள் பேராதரவைத் தர வேண்டுகிறேன்...
@ விக்கி உலகம்
// சில கேள்விகள் அனுப்பியிருக்கேன் பதில் எதிர் பார்க்கிறேன். //
பார்த்தேன்... நேரமில்லாததால் அப்போது பதிலிட முடியவில்லை... இப்போது அனுப்பிவிடுகிறேன்...
@ ம.தி.சுதா
// hot rise //
அண்ணே... இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீங்க ஆளையே காணோம்...
@ தமிழ்வாசி - Prakash
// போதையில என்னமா எழுதிருகிங்க //
அடப்பாவிகளா... பிரதர் ஊதிக்காட்டவா...
@ மனசாட்சி
// ஏன்யா எங்க போலப்பில மண்ணை போடுற?
இப்படிக்கு அரசியல்வியாதிகள் //
மொத வரியை மட்டும் படிச்சிட்டு பயந்துட்டேன்...
@ அஞ்சா சிங்கம்
// யாருப்பா அது வைன் ஷாப்ல வந்து சுடு சோறு கேக்குறது .
இங்க எல்லாம் சைடிஷ்தான் ....................... //
சரி விடுங்க... பாவம் அண்ணனுக்கு பசிக்குது போல... ஏதாவது சிக்கன் ரைஸ், பீப் ரைஸ் போட்டுத் தருவோம்...
@ டெனிம்
// யுத்தம் செய் பார்க்கவேண்டும் போல் உள்ளது ஆனால் இங்கு அதற்க்கு வாய்ப்பு இல்லை //
உங்க நிலைமையை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு...
// பாடல் நானும் டிவியில் பார்த்தேன்,சாருவைவின் கை நன்றாக நடித்துள்ளது, //
சத்தியமா அதை மட்டும்தான் பார்த்தீங்களா...
@ Chitra
// கலகலப்பான பதிவு..... கலக்கலான பதிவு... :-) //
Madam be steady... ஏன் ஒரே வரியை ரெண்டு முறை சொல்றீங்க...
@ ஆதவா
// யுத்தம் செய் பாடலை பலரும் தேவையற்றது என்கிறார்கள்... உங்க்ளுக்குப் பிடித்திருக்கிறது??? //
தனிப்பட்ட முறையில் அந்தப்பாடல் அருமையாக இருந்தாலும் படத்தில் தேவையில்லாத சொருகல் தான்...
// ஆனாலும் தமிழகத்து ஷகீரா ரொம்ப ஓவருங்க,, முதல்ல அவங்க தமிழகமே கிடையாது //
பாயிண்டை பிடிச்சீங்க... ஆனா நம்மளோடது தான் வந்தாரை வாழ வைக்கும் ஊராச்சே...
// நீங்க ஷகீராவின் whenever wherever லிருந்து Loba வரைக்கும் பார்த்தீங்கன்னா, சத்தியமா யாரையும் இந்தியாவின் ஷகீரான்னு சொல்லமாட்டீங்க............... //
ம்ம்ம்... நீங்க தீவிர ஷகிரா ரசிகர் போல...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// பிரபா ஒயின்ஷாப்ல இதுவரை வந்த சரக்குகள்ல இன்னிக்கு சரக்குகள்தான் டாப்.......! //
நீங்க ஒவ்வொரு வார பிரபா ஒய்ன்ஷாப்புலயும் இதே பின்னூட்டத்தை போடணும்னு ஆசையா இருக்கு...
// இந்தக் கன்னித் தீவு பொண்ணா பாட்டு எனக்கென்னமோ ரொம்ப பழையபாட்டு மாதிரியே ஒரு ஃபீல் இருக்கு //
மிஷ்கினின் முந்தய படப்பாடல்களின் நினைவு வரலாம்...
// அப்போ காதலர் தினத்துக்கு எழுத ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.. யக்கா மவளே..இந்து...... //
ஏதோ ஒரு பதிவுக்கு நான் ஐடியா கொடுத்துட்டேன் போல...
@ "ராஜா"
// உங்களுக்கு சரத்குமாரை பிடிக்கலையா ? இல்லை அவரு சமூதாயத்தை பிடிக்கலையா? # டவுட்டு
(எனக்கு சரத்குமாரை சுத்தமாக பிடிக்காது) //
எனக்கு எந்த சமுதாயத்தையுமே பிடிக்காது... ஐ மீன் சாதிகள்... சரத்குமார் மீது எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது... நல்லது செஞ்சா கண்டிப்பா வரவேற்பேன்...
@ Arun Prasath
// "பிரபா வைன்ஸ் ஓனர்ரா?"
"ஆமாங்க"
"கடை எப்போ சார் தெரப்பீங்க?" //
கடை திறந்து ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு சார்... நீங்க ரொம்ப லேட்...
@ Jayadev Das
// இதற்கெல்லாம் ஒரே தீர்வு சிலைகளை அப்புறப் படுத்துவதுதான். //
என்ன தலைவரே இப்படி சொல்லிட்டீங்க... அது நம்ம இந்திய இறையாண்மைக்கு எதிரானது ஆச்சே... அதுவும் தலைவர்கள் சிலை பற்றியெல்லாம் பேசுவது தேசவிரோத செயலாச்சே...
// நந்தலாலாவை கொஞ்ச நேரம் பாத்துட்டு போதும்டா சாமின்னு மூடிட்டேன், அதே மாதிரி இந்த படத்தையும் ஸ்கிப் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். //
இரண்டுமே அருமையான படங்கள் நண்பரே... எந்த வேலையும் இல்லாமல் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது பாருங்கள்...
// சார்லி சாப்ளினை நாட்டில் வாழவிடாமல் விரட்டி விட்டுவிட்டு அவருக்கு ஸ்டாம்பு மட்டும் வெளியிட்டு இருக்கானுங்களா, பாவிப் பசங்க? //
எப்பவுமே மனுஷப்பயலுக ஆள் இறந்த அப்புறம்தானே கொண்டாடுவாங்க...
// காக்கா உட்கார்ந்திருக்கும் படத்த பாகும் போதே பயமா இருக்கு. ஒருதடவை இந்த மாதிரி இருக்கும் போது ஒரு கம்பியிலிருந்த காக்கா பக்கத்து கம்பியிலிருந்த ஒரு காக்கையை டச் பண்ணிவிட்டது, அவ்வளவுதான் மொத்தவும் செத்து விழுந்தன. //
கேட்கவே கஷ்டமா இருக்கு... இந்தப்படத்தில் உள்ள காக்கைகளுக்கு அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்...
@ இராஜராஜேஸ்வரி
// காக்கைகள் கட்சி மாநாடா? //
அப்படித்தான் போல மேடம்...
@ பார்வையாளன்
// பதிவு நன்றாக இருந்தது.. பாராட்டி பின்னூட்டம் இட இருந்தேன்,,
ஆனால் இந்த பின்னூட்டம் இடுகையைவிட சூப்பர்...
பாராட்டுக்கள் Jayadev Das... //
அய்யய்யய்யய்யே.... அடம புடிக்கிறியே நீயி... (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்...)
நல்லாருக்கு...
எல்லாமே கலக்கல் நண்பா !
வாழ்த்துக்கள்,விக்கி உலகமே உங்களை கேள்வி கேக்குதுனா நீங்கள் ஏதோ எடைக்கு முடக்கா செஞ்சுட்டு வந்திருக்கியனு தெரியுது.
@ அந்நியன் 2
// விக்கி உலகமே உங்களை கேள்வி கேக்குதுனா நீங்கள் ஏதோ எடைக்கு முடக்கா செஞ்சுட்டு வந்திருக்கியனு தெரியுது. //
அதெல்லாம் இல்லைங்க... அது பிளாக்கர் சம்பந்தமான கேள்விதான்...
நல்ல பதிவு !
வாழ்த்துக்கள் !
இறந்துப்போன காந்தியின் சிலைக்கு கொடுக்கும் பாதுகாப்பை கூட, இறந்துக்கொண்டிருக்கும் நம்மின மீனவர்களுக்கு கொடுக்கக்கூடாதா...???
நல்ல கேள்வி , ஆனால் என்வன் கேக்குறான் பிரபா
செம போதை ட்விட்டுகள் அருமை.
Post a Comment