வணக்கம் மக்களே...
கடந்த வாரத்தில் ஒருநாள் ஒரு பெட்டிக்கடையில் பார்த்தேன். இந்தியா டுடே ஆங்கில மற்றும் தமிழ் பதிப்புகள் அருகருகே வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலப் பதிப்பின் அட்டைப்படத்தில் தோனி கிரிக்கெட் உடையுடன் போஸ் கொடுப்பது போலவும், தமிழ் பதிப்பின் அட்டைப்படத்தில் அதே தோனி நெற்றியில் வீரத்திலகத்தோடு கையில் தேங்காயை வைத்துக்கொண்டு பூஜைக்கு தயாராக இருப்பது போலவும் வெளியிட்டிருந்தார்கள். அட்டைப்படத்தில் இருக்கும் இந்த முரண்பாடு என்ன மாதிரியான உள்குத்து என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழகம், தமிழக மக்கள் என்றால் அப்படிப்பட்ட பிம்பம் தான் இருக்கிறது போலும்.
இந்த வருடத்திலிருந்து சி.பி.செந்தில்குமார் மாதிரி மொக்கைப்படங்களை எல்லாம் பார்த்து நேரத்தை விரயம் செய்யாமல் செலக்டிவாக நல்ல படங்களை மட்டுமே பார்க்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். அதற்காக பொங்கலுக்கு வெளிவந்த ஓரளவுக்கு நல்ல கமர்ஷியல் படங்களை கூட புறக்கனித்தேன். ஆனால் இப்போது கெளதம் மேனனால் எனது முடிவு முடிவுக்கு வந்துவிட்டது. எப்போதுமே அதிகம் எதிர்பார்க்கும் படங்கள் இப்படித்தான் ஏமாற்றி விடுகின்றன. அதே சமயம் போன வாரம் வெளிவந்த பயணம் படத்தை தவறவிட்டதற்காக வருந்துகிறேன். இதனால் கூற வருவது என்னவென்றால், யாராவது நடுநிசி நாய்கள் படம் பார்க்கும் எண்ணத்திலிருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொண்டு பயணம் படத்தை பாருங்கள்.
எனது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் குறித்த பதிவை இன்னும் விரிவாக விரிவாக எழுதியிருக்கலாம் என்றெண்ணி வருந்துகிறேன். பதிவை படித்த சிலர் “ஒருநாள் கொண்டாட்டம் தானே...”, “இளைஞர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்...” என்ற ரீதியில் பின்னூட்டமிட்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய பதில்: நீங்கள் நினைப்பது போல இது வருடத்தில் ஒருநாள் மட்டும் நடைபெறும் நிகழ்வல்ல. அவர்களின் தினசரி பயனமுறை அப்படித்தான் இருக்கிறது. இதில் ஈவ்-டீசிங், எல்லை மீறல்கள், வன்முறை, ஆராஜகம் என்று என்னென்னவோ நடக்கின்றன. இதையெல்லாம் நம்பமாட்டேன் நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான் என்று அடம் பிடிப்பவர்கள் காலை வேளையில் என்னோடு சென்னை வள்ளலார் நகர் (மிண்ட்) பேருந்து நிலையத்திற்கு வந்து அந்த அவலங்களை உங்கள் கண்ணால் பாருங்கள். இங்கே எனக்கு பக்கம் பக்கமாக அட்வைஸ் பண்ணுவது போல அவர்களுக்கு அட்வைஸ் பண்ணி அசிங்கப்படுங்கள்.
கிழக்கு பதிப்பகத்தின் டிஸ்கவுண்ட் சேல் இந்தமாத இறுதிவரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனோ தெரியவில்லை, ஆன்மிகம் குறித்த புத்தகங்கள் வாங்குவதற்கு ஆளில்லாமல் குவிந்துக்கிடக்கின்றன. ஒருவேளை மக்கள் திருந்திவிட்டார்களோ...??? அப்புறம், வாங்குவதற்கு கூச்சப்படுகிறார்கள் என்றேண்ணுகிறேன், பாலியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் குவிந்திருந்தன. சரி, நாமாவது ஆதரவு கொடுப்போம் என்ற நல்ல எண்ணத்தில் (!!!) பாலியல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்தேன். (என்னது..? புத்தக விமர்சனமா... அட போங்கப்பா எனக்கு ஒரே வெட்கமா இருக்கு...)
ட்வீட் எடு கொண்டாடு:
ஜெ. பிறந்த நாள்... 5 நாட்கள் கொண்டாட்டம்...! # அடேங்’கொப்பா’... அஞ்சு நாளா.... பொறாந்தாங்க போல....
வந்தியத்தேவனாக விஜய்! - தட்ஸ்தமிழ் எக்ஸ்க்ளூஸிவ்!! # funnyin செல்வனாக ஆகாம இருந்தா சரி.
"இது தப்புன்னு" நேரா சொல்லாம நாசூக்கா சொல்றேன் பேர்வழின்னு மொக்கை போடும்போது எரிச்சல் தான் வருது... #"மேனேஜ்மென்ட் ஸ்கில்"லாமாம்
கல்யாணங்கற தேர்ல போறதுக்கு எல்லோரும் துடிக்கிறாங்க..ஆனா அது சந்தோஷங்களின் இறுதி ஊர்வலத் தேருங்கறது யாருக்கும் தெரியறதில்லை # எச்சரிக்கை
பதிவுலகில் புதியவர்:
நூற்றுக்கணக்கான பதிவர்களையும் இடுகைகளையும் பற்றி வலைச்சரத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்க வேற தனியா எதுக்கு. வலைச்சரத்திற்கு போய் அள்ளிக்கோங்க.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html
எனக்குப் பிடித்த பாடல்:
இது கொஞ்சம் பழைய பாடல்தான், ஆனால் நிறைய பேர் கேட்டிருக்கமாட்டீர்கள். ஸ்ரீகாந்த் – சினேகா நடித்து வெளிவந்த போஸ் என்ற படத்தில் இடம்பெற்ற “வைத்த கண் வைத்தது தானோடி...” என்ற பாடல். ஒரு திருமண இல்லத்தில் பாடுவதாக வரும் அந்த கொண்டாட்டப் பாடலைத்தான் இந்த வாரம் முழுக்க கொண்டாடினேன். ஆண்குரல் மது பாலகிருஷ்ணன் என்று நினைக்கிறேன், அவரது குரலும் மதுவாகவே கிறக்கம் தந்தது. அப்புறம், “யாரோ எந்தன் உயிரின் அறையிலே கவிதை புத்தகம் படித்தது... தேடிப்பார்த்தேன் அந்த இடத்திலே உந்தன் வாசனை...” என்று ரொமாண்டிக்கான வரிகளும் பாடாய்ப்படுத்தியது.
இந்த வார புகைப்படம்:
ஒரு கிழக்கத்திய டாய்லெட்டை மேற்கத்திய டாய்லெட்டாக மாற்றுவது எப்படியென்று யாரோ ஒரு அறிஞர் கழிவறையில் அமர்ந்து கனநேரம் சிந்தித்திருக்கிறார்.
இந்த வார தத்துவம்:
“GRAVITATION IS NOT RESPONSIBLE FOR PEOPLE FALLING IN LOVE…”
- Albert Einstein
பார்த்ததில் பிடித்தது:
இந்த வார ஆவியில் “என்னைப் பெண் பார்த்த படலம்” என்ற பெயரில் ஒரு கவிதை தொகுப்பும், “அம்மாவின் பெயர்” என்ற பெயரில் ஒரு சிறுகதையும் வெளிவந்திருக்கிறது. நான் சொல்லவந்தது அந்த படைப்புகளை பற்றியல்ல. அவற்றிற்கு எஸ்.இளையராஜா என்றொரு ஓவியர் மிகவும் அழகாக புகைப்படங்கள் வரைந்திருக்கிறார்.
அந்த ஓவியம் இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை. முடிந்தால் ஆவி வாங்கிப் பாருங்கள். மேலே இருப்பது அவர் வரைந்த வேறொரு ஓவியம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
49 comments:
தியாக ராஜா காலேஜ விடவா மோசமா போயிட்டாங்க ஹி ஹி!
உங்களுக்கு இந்த வாரம் நெறைய வேலன்னு நெனைக்கிறேன்........
கடமைக்கு போட்டாப்புல இருக்கு சாரி உண்மைய உண்மையா சொல்லனும்ல ஹி ஹி!
ஓவியர் இளையராஜா அவர்களின் லின்க் வழங்கியமைக்கு மிகவும் நன்றி.
கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை
வட இந்தியர்கள் தமிழனை ஒதுக்கி தான் பாக்குறாங்க,
this week all are intresting..
//கல்யாணங்கற தேர்ல போறதுக்கு எல்லோரும் துடிக்கிறாங்க..ஆனா அது சந்தோஷங்களின் இறுதி ஊர்வலத் தேருங்கறது யாருக்கும் தெரியறதில்லை # எச்சரிக்கை// முடிஞ்ச வரைக்கும் தள்ளிப் போட்டு சுதந்திரமான நிம்மதியான, கவலையில்லாத வாழ்கையை முடிஞ்சவரைக்கும் அனுபவிச்சிட்டு அப்புறமா இந்த எலிப் பொறியில போய் தலையை விடலாம். ஹா...ஹா...ஹா...ஹா...
தேடிப்பிடித்து அந்தப்பாடலை கேட்டேன்.. ஹி.ஹி...
அந்த புத்தகங்கள் பேரை சொன்னீங்கன்னா, கொஞ்சம் உபயோகமா இருக்கும்.. ஹி..ஹி..
ஒரு கிழக்கத்திய டாய்லெட்டை மேற்கத்திய டாய்லெட்டாக மாற்றுவது எப்படியென்று யாரோ ஒரு அறிஞர் கழிவறையில் அமர்ந்து கனநேரம் சிந்தித்திருக்கிறார்.//
எங்கிருந்துய்யா இதுமாறி போட்டோவை புடிக்கிறீங்க..பதிவு கலக்கல்..
யாராவது நடுநிசி நாய்கள் படம் பார்க்கும் எண்ணத்திலிருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொண்டு பயணம் படத்தை பாருங்கள்.
//
ஆகா.. அந்த அளவுக்கு மோசம்ம்ம்ம்மாவா இருக்க்க்க்குத்த்த்த்து?.. ஹி..ஹி
நல்லவேளை.. படம் பார்க்கவில்லை...
ஓவியர் இளைய ராஜா லிங்க் கொடுத்ததற்கு நன்றி. பதிவும் ஓ, கே தான்.
அருமை நண்பா அருமை..
ஒயின்ஷாப் களைகட்டுது...
Good Collection Prabha...
kadamaiku potta maathiri enakku theriala.... suvaarasyamaa dhan irunthichu eduthukkitta vishayangal.... nice :)
///வந்தியத்தேவனாக விஜய்! - தட்ஸ்தமிழ் எக்ஸ்க்ளூஸிவ்!! # funnyin செல்வனாக ஆகாம இருந்தா சரி.///
அவரு இன்னைக்கு மீனவர்களுக்காக போராட்டம் நடத்தபோராராமா
புகைப்படம் :
இதுல போறது ரெம்ப கஷ்ட்டமா இருக்குமே
அந்த ஓவிய பகிர்வுக்கு மிக்க மிக்க நன்றி... அழகு.
//வந்தியத்தேவனாக விஜய்! - தட்ஸ்தமிழ் எக்ஸ்க்ளூஸிவ்!! # funnyin செல்வனாக ஆகாம இருந்தா சரி.
//
செல்வனா!., சிரிப்பு போலிஸ்சா கூட ஆக முடியாது
இன்னக்கி சரக்கு கொஞ்சம் கம்மிதான் ஆனாலும் கிக்கா தான் இருக்கு ..........
இந்த வார சரக்கு சூப்பர்.
பதிவு கலக்கல்.
அவர்களின் அலப்பரையை நானும் பார்த்திருக்கிறேன்.. சென்னையில் வேலை செய்யும் போது... சில சமயம் ஓங்கி குத்தனும் போல இருக்கும்:))
கல்லூரி மாணவர்களை போலீஸ்காரர் கூட கண்டிக்க தயங்குகிறார். இது நேரில் கண்டது. கொடுமை.
பெண்ணின் ஓவியம் அருமை.
அந்த பாத்ரூம் போட்டோ எங்க எடுத்தது?
//தியாக ராஜா காலேஜ விடவா மோசமா போயிட்டாங்க ஹி ஹி!//
!!! என்ன பிரபா, தியாகராயா காலேஜ் இப்ப எப்பிடி இருக்கு.
ALL ITEMS ARE SUPER! THANKS FOR BOSE SONG........
>>>இந்த வருடத்திலிருந்து சி.பி.செந்தில்குமார் மாதிரி மொக்கைப்படங்களை எல்லாம் பார்த்து நேரத்தை விரயம் செய்யாமல் செலக்டிவாக நல்ல படங்களை மட்டுமே பார்க்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்
நண்பேண்டா...
//ஒருநாள் கொண்டாட்டம் தானே...”, “இளைஞர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்...” என்ற ரீதியில் பின்னூட்டமிட்டிருந்தார்கள்//
அவர்கள் சொல்வதைச் சொல்லிக்கொண்டிருக்கட்டும். நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதை பல மாணவர்களே தர்மசங்கடத்தோடு ஒப்புக்கொள்ளுவார்கள். நிஜம் சுடும்
ஒயின்ஷாப் செம்ம கிக்... :)
செம போதை
பிரபா உங்க டிவிட்டர் பெயர் என்ன.???
சரக்கு செம கிக்குப்பா
நானும் சேர்ந்துகிட்டேன்..
இன்றை அனைத்து விஷயங்களும் அருமை..
///(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////
என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...
என்னயும் ஒரு ஆளா கருதி வலைசரத்தில் போட்டதுக்கு மிக்க நன்றிகள் பிலோசபிபிரபாகரன்...
பயணம் படத்தை இயக்குவது ராதாமோகன் என்பதால் எதிர்பார்புகள் கூடுதலாக இருக்கிறது.
அந்தப்பாடல் எனக்கும் பிடித்த பாடல் அந்தபாடலை பாடிய பாடகர் மதுபாலகிருஸ்ணன்தான் மற்ற பெண் குரல் சிறிவர்த்தளியினுடையது
புகைப்படம் நல்லாயிருந்தது.
@ விக்கி உலகம், King Viswa, தமிழ்வாசி - Prakash, ப்ரியமுடன் வசந்த், Jayadev Das, கவிதை காதலன், பட்டாபட்டி...., Lakshmi, வேடந்தாங்கல் - கருன், சங்கவி, பிரபு எம், நா.மணிவண்ணன், Chitra, ராஜகோபால், அஞ்சா சிங்கம், N.H.பிரசாத், சே.குமார், வைகை, பாலா, ! சிவகுமார் !, ஓட்ட வட நாராயணன், சி.பி.செந்தில்குமார், சேட்டைக்காரன், மாணவன், Speed Master, தம்பி கூர்மதியன், கும்மாச்சி, # கவிதை வீதி # சௌந்தர், கார்த்தி, டக்கால்டி
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...
@ விக்கி உலகம்
// தியாக ராஜா காலேஜ விடவா மோசமா போயிட்டாங்க ஹி ஹி! //
ஆஹா நீங்க தியாகராஜா காலேஜ் ஸ்டூடன்ட்டாச்சே... நான் இந்த வெளையாட்டுக்கு வரலை...
// உங்களுக்கு இந்த வாரம் நெறைய வேலன்னு நெனைக்கிறேன்........ //
ஆமாம்... வலைச்சர ஆசிரியர் பணி...
// கடமைக்கு போட்டாப்புல இருக்கு சாரி உண்மைய உண்மையா சொல்லனும்ல ஹி ஹி! //
மேட்டர் எல்லாம் ஓகே... ஆனா டைப் பண்ணும்போது கொஞ்சம் அவசரமாகத்தான் செய்தேன்...
@ Jayadev Das
// முடிஞ்ச வரைக்கும் தள்ளிப் போட்டு சுதந்திரமான நிம்மதியான, கவலையில்லாத வாழ்கையை முடிஞ்சவரைக்கும் அனுபவிச்சிட்டு அப்புறமா இந்த எலிப் பொறியில போய் தலையை விடலாம். ஹா...ஹா...ஹா...ஹா... //
அதான் சிக்கிட்டேனே மக்கா... இனிமே எங்க தள்ளிப்போடுறது....
@ கவிதை காதலன்
// அந்த புத்தகங்கள் பேரை சொன்னீங்கன்னா, கொஞ்சம் உபயோகமா இருக்கும்.. ஹி..ஹி.. //
ம்ம்ம்... ரொம்ப ஆர்வமோ... புத்தகங்களின் தன்மைக்கேற்ப வரிசைப்படுத்துகிறேன்...
டீனேஜ் பிரச்சனைகள்
பெண்கள் மனசு
ஆண்களின் அந்தரங்கம்
திருமண கைடு
இனிய தாம்பத்தியம்
ஆண் – பெண்: சந்தேகங்களும் விளக்கங்களும்
உடலுறவில் உச்சம்
@ பட்டாபட்டி....
// எங்கிருந்துய்யா இதுமாறி போட்டோவை புடிக்கிறீங்க..பதிவு கலக்கல்.. //
பட்டாப்பட்டியிடம் இருந்து பாராட்டா... அதிர்ச்சி எனினும் மகிழ்ச்சி...
அந்த புகைப்படம் கூகிள் பஸ்ஸில் வந்தது...
// ஆகா.. அந்த அளவுக்கு மோசம்ம்ம்ம்மாவா இருக்க்க்க்குத்த்த்த்து?.. ஹி..ஹி //
ஆமாண்ணே மோசம்தான்...
@ நா.மணிவண்ணன்
// அவரு இன்னைக்கு மீனவர்களுக்காக போராட்டம் நடத்தபோராராமா //
இதையெல்லாம் ஆதரிப்பதா வேண்டாமா என்று ஒன்றும் புரியவில்லை...
// இதுல போறது ரெம்ப கஷ்ட்டமா இருக்குமே //
அனுபவமா...?
@ ராஜகோபால்
// செல்வனா!., சிரிப்பு போலிஸ்சா கூட ஆக முடியாது //
நீங்க வேற ஏங்க பதிவுலகத்துல குழப்பத்த உண்டாக்குறீங்க...
@ பாலா
// கல்லூரி மாணவர்களை போலீஸ்காரர் கூட கண்டிக்க தயங்குகிறார். இது நேரில் கண்டது. கொடுமை. //
அவர்கள் பாதுகாப்போடு தானே அது நடக்கிறது...
// அந்த பாத்ரூம் போட்டோ எங்க எடுத்தது? //
கூகிள் பஸ்ஸில் நேரில் பார்த்திராத பழக்கம் இல்லாத ஒரு வட இந்தியர் அனுப்பினார்... மேலதிக தகவல்களை அவர் குறிப்பிடவில்லை...
@ ! சிவகுமார் !
// !!! என்ன பிரபா, தியாகராயா காலேஜ் இப்ப எப்பிடி இருக்கு. //
ஏன் கேக்குறீங்க...? 500 பேரை கூட்டிட்டு வந்து என்னை கும்முவதற்கு உத்தேசமா...?
@ தம்பி கூர்மதியன்
// பிரபா உங்க டிவிட்டர் பெயர் என்ன.??? //
nrflyingtaurus
@ # கவிதை வீதி # சௌந்தர்
// என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க... //
பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்...
@ கார்த்தி
// என்னயும் ஒரு ஆளா கருதி வலைசரத்தில் போட்டதுக்கு மிக்க நன்றிகள் பிலோசபிபிரபாகரன்... //
இந்த தன்னடக்கம் டூ மச்...
// பயணம் படத்தை இயக்குவது ராதாமோகன் என்பதால் எதிர்பார்புகள் கூடுதலாக இருக்கிறது. //
படமும் பிரமாதமாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்...
// அந்தப்பாடல் எனக்கும் பிடித்த பாடல் அந்தபாடலை பாடிய பாடகர் மதுபாலகிருஸ்ணன்தான் மற்ற பெண் குரல் சிறிவர்த்தளியினுடையது //
தகவலுக்கு நன்றி...
//// யாராவது நடுநிசி நாய்கள் படம் பார்க்கும் எண்ணத்திலிருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொண்டு பயணம் படத்தை பாருங்கள்/////
நன்றி பீபீ... நன்றி....
டுவீட்டிலும் நல்ல த்த்தவமாக அல்லவா இருக்கு...
அது சரி என் இப்ப நம்ம ஓடைக்கு குளிக்க வாறதே இல்ல
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
கட்டுப்பாடான சுதந்திரத்திரத்திற்கு இந்தியா மாறவேண்டும்.
வண்ணக் கலவையும் பெண்ணின் சாந்தமான முகபாவமும் பார்க்கும் போது ரவிவர்மாவை குருவாக வணங்கி வரைந்தாற் போலிருக்கிறதே...
ஓவியர் இளையராஜாவின் வலைத்தளம்:
http://www.elayarajaartgallery.com
அவர் வரைந்த Oil on Canvas Paintings சில: http://www.elayarajaartgallery.com/oilpainting.html
Post a Comment