வணக்கம் மக்களே...
(மேலே இருக்கும் நடிகை படம் எதுக்கா...? இவங்க நடிச்ச படம் பார்க்கும்போது தான் சம்பவம் நடந்திருக்கு. அப்போ கொல்ல வேண்டியதுதான்)
********************
கலைஞர் குடும்பத்த விட பெரிய்ய்ய்ய குடும்பமா இருக்கும்போல... |
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் ஜியோனா சாணா (Ziona Chana) என்ற 66 வயது ஆசாமி (வயோதிகர்ன்னு சொல்ல மனசு வரலை) இதுவரைக்கும் 39 பெண்களை திருமணம் செய்திருக்கிறாராம். அதைவிட கொடுமை, இவர், இவரது 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரக்குழந்தைகள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்களாம்.
(இப்பக்கூட நாற்பதாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார் மனிதர்)
********************
மேலே பார்க்கும் இந்த கருவியில் டோஸ்ட் செய்வதோடு மட்டுமல்லாமல் பாடல்களையும் கேட்டுக்கொள்ளலாம். சமையலறையில் ஒரு பொழுதுபோக்கு தேவை என்ற நோக்கில் இதை தயாரித்துள்ளதாக சீன நிறுவனம் கூறுகிறது. இதன் விலை 50 அமெரிக்க டாலர்கள் மட்டுமே.
(இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. வந்தாலும் வரவேற்பை பெறாது. ரேடியோவை தனியாவும், டோஸ்டரை தனியாவும் வாங்கிக்க தெரியாதா நம்மளுக்கு)
********************
அச்சாப் கவ்ரா (Assaf Gavra) என்னும் இஸ்ரேலிய புகைப்பட கலைஞர் இந்த புகைப்படத்தை சில மணிநேரங்கள் நதிக்கரையில் காத்திருந்து எடுத்திருக்கிறார்.
********************
மலேசிய – சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா...
(இதையெல்லாம் பார்த்தா என்ன சொல்றதுன்னே தெரியல. நீங்களே ஏதாவது சொல்லிட்டு போங்க)
டிஸ்கி:
வலைச்சரத்தில் இன்று: மருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
49 comments:
present sir
நாலா பக்கமும் சுழட்டி அடிச்ச பதிவு போல...........
சமாச்சாரம்லாம்...நல்லா இருக்கு
நன்றி
////(இப்பக்கூட நாற்பதாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார் மனிதர்)///
கொடுத்து வச்ச மனுஷன்....
என்னது 39 பேர கல்யானம் பண்ணியிருக்காரா???
நான் அப்படியே shock ஆயிட்டேன்....
39 பெண்களை திருமணம் செய்திருக்கிறாராம். அதைவிட கொடுமை, இவர், இவரது 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரக்குழந்தைகள்
////////////////////
மொத்தம் 166 பேர். சத்தியமா அவர் ஒரு மகான்....
நடாலியின் அந்த படம் ப்ளாக் ஸ்வானா?
நம்மூர்ல சினிமா தியேட்டர்ல தொண தொணன்னு பேசிட்டே இருக்கிறவங்களைப் பார்த்தா எனக்குக் கூட சுட்டுக் கொன்னுடலாம்னு தோணும்!!
39 மனைவிகளா??? என்ன வேலைங்க செய்யறாரு?? பேர் ஞாபகம் எப்படி வெச்சுக்கிறாரு?? அடேயப்பா. மாசம் ஒரு மனைவின்னாலும் 9 பேர் அதிகமா இருக்காங்களே
போட்டோகிராஃபி சூப்பர்.
நல்லா இருக்கு.
மலேசிய – சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா...
(இதையெல்லாம் பார்த்தா என்ன சொல்றதுன்னே தெரியல. நீங்களே ஏதாவது சொல்லிட்டு போங்க)...........////////////
ஆணியே புடுங்க வேண்டாம்.................................ஆளை விடுங்கடா சாமி ..........
விடுங்க தங்களை தாங்களே வருத்தி கொள்கிறார்கள் .......நம்ம ஊரு அரசியல்வாதி மாதிரி அடுத்தவங்கள கஷ்டபடுத்தலையே............
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===
.
அனைத்தும் புதிய தகவல்...
பாப்கார்ன் வாங்குறவங்க உஷாரு!
பாப்கார்ன் வாங்குறவங்க உஷாரு!
தூள் கிளப்புறீங்க பிரபா!!
நல்ல கலவை..
present.,
//(இப்பக்கூட நாற்பதாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார் மனிதர்)//
நாகரீகம் கருதி சில விஷயங்களைத் தவிர்த்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. மற்றபடி, இம்மனிதரைப் பற்றிய விபரங்களைப் படித்தபோது எனக்கு அருவருப்பும் எரிச்சலுமே மிஞ்சியது. இந்த அழகில் இது ஒரு சாதனை என்று புகைப்படம் வேறு போட்டுப் பீத்திக்கொள்ளுகிற இவரை என்ன சொல்ல? :-(
ஆமாம் அந்த படத்தின் தலைப்பு?
//கலைஞர் குடும்பத்த விட பெரிய்ய்ய்ய குடும்பமா இருக்கும்போல...//
வருக்குறீங்க ஹா ஹா ஹா
படங்கள் அருமை மக்கா...
பாப்கார்ன் சாப்ட்டதுக்கேவா?
39 கல்யாணம் பண்ணதவிட எல்லாத்தையும் ஒரே வீட்ல வெச்சிருக்காரே? என்னத்த சொல்றது?
சரி சரி நம்பீற்றம்.......
information is wealth
சரி சரி நம்பீற்றம்.......
நல்லாத் தான் போகுதோ நடப்பு.. நடக்கட்டும் நடக்கட்டும்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
படங்கள் அருமை..
39 கல்யாணாமா? ஆள் சரியான திறமை சாலியா இருப்பார் போலிருக்கே?
பாப்கார்ன் சாப்பிட்டதுக்கு துப்பாக்கி சூடா? அப்ப நம்ம ஊர் தியேட்டரில் ஒருத்தன் மிஞ்ச முடியாது...
வலைச்சரம் பார்த்தேன்...என்னை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி....
ஒரு சின்ன சந்தேகம் : பிற கவிகளின்(!?) அறிமுகத்தின் போதெல்லாம் அவர்களின் இன்னொரு முகத்தினையும்(இன்னார் கட்டுரையும் எழுதியுள்ளார்,etc.,) குறிப்பிட்டுள்ளத் தாங்கள் என்னுடைய "கடலும் சில நினைவுகளும்"(http://droana.blogspot.com/2011/02/blog-post_05.html) சிறுகதையினைப் பற்றிக் கூறாதது ஒரு மனக்குறையாக உள்ளது...ஏன் இந்த ஓர வஞ்சனை.?
பி.கு:இது கொஞ்சம் ஓவர்தான்.. இருந்தாலும் pls tolerate
books n music...good...same thoughts...vaalthukkal prabahar..
//39 கல்யாணம் பண்ணதவிட எல்லாத்தையும் ஒரே வீட்ல வெச்சிருக்காரே? என்னத்த சொல்றது?
February 24, 2011 4:10 PM//
வௌங்கிரும். ஒன்னை வெச்சே சமாளிக்க முடியல??
சார் நாங்களும் இப்பிடி எதாவது சாதனை பண்ணணும்!
//(இப்பக்கூட நாற்பதாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார் மனிதர்)//
வாழ்க அவரும் அவருடைய குடும்பமும்.
அருமையான் பதிவு..நண்பரே..
வாவ்... சூப்பராயிருக்கே. தொடருங்கள்.
ஜியோனா சாணா (Ziona Chana) என்ற 66 வயது ஆசாமிக்கு கின்னசுல இடம் கிடைசிருக்கனுமே!! அவனவனும் ஒருத்தியை சந்தோஷமா வச்சிருக்கிரதுக்கே நாய் படாத பாடு படுறான், இரண்டாவது ஒன்னு வந்தா அதுங்களுக்குள்ள நடக்கும் சண்டை இந்தியா-பாகிஸ்தான் சண்டையை விட விபரீதமா இருக்கும், எப்படியோ இவர் ஒரு ஊரையே உண்டு பண்ணி எல்லோரையும் ஒத்துமையா வச்சிருக்கார். மேற்க்கத்திய நாடுகளில் கல்யாணமாகி மூணு மாசத்துக்கு மேல டைவர்ஸ் ஆகவில்லைஎன்றால் துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். நிச்சயம் இது உலக சாதனையாத்தான் இருக்கும்.
//அச்சாப் கவ்ரா (Assaf Gavra) என்னும் இஸ்ரேலிய புகைப்பட கலைஞர் இந்த புகைப்படத்தை சில மணிநேரங்கள் நதிக்கரையில் காத்திருந்து எடுத்திருக்கிறார்.// படம் அருமை. இந்தப் படத்துக்கு சில மணி நேரங்கள் தான் காத்திருந்தாரா? பரவாயில்லையே!! சில சமயம் இவர்கள் நாட்கள், மாதங்கள் என் வருடங்கள் கணக்கில் கூட காத்திருந்து ஆபாத்துகளை எதிர்த்து படமெடுப்பார்கள், நாம சுளுவா அரை மணி நேரத்தில் நேஷனல் ஜியோகிரபி யில் பார்த்திடுவோம். ஹா.. ஹா..ஹா...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.!!! கண்டிப்பாக எழுதணும் ஆமாம் சொல்லிபுட்டன்..
http://kooranpathivu.blogspot.com/2011/02/blog-post_28.html
see this link http://kumpuduraenunka.blogspot.com/2011/03/blog-post.html
see this ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்
நல்லா இருக்கு
//கலைஞர் குடும்பத்த விட பெரிய்ய்ய்ய
குடும்பமா இருக்கும்போல...//
AWESOME!!!
செய்திகளின் தொகுப்பு பிரமிப்பாக அமைந்துள்ளது.
வாசிக்க வாசிக்க யோசிக்க வைக்குது . அருமையான பதிவு
(இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. வந்தாலும் வரவேற்பை பெறாது. ரேடியோவை தனியாவும், டோஸ்டரை தனியாவும் வாங்கிக்க தெரியாதா
அதானே!!!2 இன் 1 ன்னு வாங்கி ஒண்ணு ரிப்பேர் ஆனா ரெண்டையும் தூக்கிட்டு ஓடணும்....தேவையா?
எல்லாமே ரொம்ப வித்தியாசமான செய்திகள் பிரபாகரன்..
கவுண்டமணியின் சில மணியோசைகள்
ரொம்ப நாளா ஆளைக் காணோம்..என்னாச்சு பாஸ்?
பிரபா ஒயின்ஸ் ரொம்ப நாளா பூட்டிக்கிடக்கே...ஏன்?..சீக்க்ரம் திரும்பி வாங்க பிரபா.
4, Cheap Lamisil - lamisil online http://www.lamisilfast24.net/, [url=http://www.lamisilfast24.net/] Terbinafine Generic[/url]
Post a Comment