வணக்கம் மக்களே...
முஸ்கி 1: விஜய் ரசிகர்கள் யாரும் இந்தக்கோட்டை தாண்டி படிக்க வேண்டாம்.
முஸ்கி 2: சொல்றத சொல்லிட்டேன். அதுக்குமேல, உங்க இஷ்டம்.
ஒரு கட்டத்திற்கு பிறகு விஜய் படங்கள் ரிலீஸ் என்றாலே ஒரு குதூகலம் பிறக்க ஆரம்பித்துவிட்டது. எதுக்கா...? கும்பலா தியேட்டருக்குப் போய் விஜயோட பஞ்ச் டயலாக்குகளுக்கு கவுண்ட்டர் கொடுத்துக்கொண்டு, மனதுவிட்டு சிரித்து படம் பார்ப்பதில் இருக்கும் சுகமே தனி. அந்த வகையில் எனக்குப் பிடித்த என் மனதை கடுமையாக பாதித்த ஐந்து விஜய் படங்களின் பட்டியல்:-
5. திருமலை
அநேகமாக விஜய்க்கு பஞ்ச் டயலாக் கிறுக்கு பிடிக்க ஆரம்பித்தது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன். “நீயா பேசியது...” அப்படின்னு கேக்குறதுக்காக மட்டுமே ஜோதிகாவை எகிப்து வரை கூட்டிட்டுப் போவார். அங்கே காதல் ரசம் சொட்டச் சொட்ட, நம் காதில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு பாடலை பாடி பயங்கரமா வெறுப்பேத்துவார். ஜோதிகாவோடு அசால்ட்டாக காதல் செய்யும் காட்சிகள் அனைத்தும் செம காமெடி.
எ.பி.காட்சி: காட்சி அல்ல பாடல். “நீயா பேசியது...” பாடல் தான். அந்தப்பாடலில் விஜய் – ஜோதிகா முகபாவனைகளை பார்த்தால் நாலு நாளைக்கு சோறு உள்ள இறங்காது.
4. போக்கிரி
இந்தப்படம் நிறைய பேருக்கு சீரியஸா பிடிக்கும். ஆனா செம காமெடி படம். அட, நான் வடிவேலு செய்யும் காமெடிகளை சொல்லவில்லை. நம்ம டாகுடர் காமெடிகளை தான் சொல்கிறேன். விஜய் இந்தப்படத்தில் செம அசால்ட். அடிக்கடி மூக்கை உறிஞ்சுவார் (மேனரிசமாம்). எல்லாவற்றையும் விட மிகப்பெரிய காமெடி க்ளைமாக்ஸ் காட்சியில் வாட்ச்மேன் டிரஸ் போட்டபடி விஜய் நடந்து வருவதுதான். வடிவேலு காமெடிகள் நிஜமாவே நல்லா இருக்கும்.
எ.பி.காட்சி: இரண்டு ரவுடி கும்பலுக்கு மத்தியில் உட்கார்ந்துக்கொண்டு விஜய் மூக்கை உறிஞ்சியபடி செம அசால்ட்டாக பேசும் காட்சி. (அட யாராவது கர்சீப் வாங்கி கொடுங்கப்பா... சின்னப்பிள்ளை மாதிரி மூக்கை உறிஞ்சிக்கிட்டு)
3. வேட்டைக்காரன்
விஜய்யை பற்றி பெட்டிக்கடைக்காரர் ஓவராக பில்டப் கொடுக்க ஆரம்பித்ததும் சிரிக்க தொடங்கியவன் தான் படம் முடியும் வரை நிறுத்தவே முடியவில்லை. விஜய் குல்லா போட்டபடி குதிரையில் வருவது, வில்லன் விஜய் காதில் வந்து பயம்ன்னு சொல்றது எல்லாமே செம காமெடி. அப்புறம் பஞ்ச் டயலாக். “சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன். சாக்கடை முன்னாடி இல்லை...” மறக்கக்கூடிய வசனமா அது...!!!
எ.பி.காட்சி: சொல்லிச் சொல்லி அலுத்துபோச்சு. அறிமுகப்பாடலில் விஜய் கான்க்ரீட் கல்லொன்றை ஓங்கிக் குத்துவாரே... அந்தக்காட்சிதான்... (குத்துங்க எஜமான் குத்துங்க...)
2. சுறா
நண்பர்களின் எச்சரிக்கையை எல்லாம் மீறி முதல்நாள் முதல்காட்சி பார்த்த படம். வேட்டைக்காரனையே கொஞ்சம் உல்டா பண்ணியது போல நிறைய சீன் இருக்கும். உதாரணத்திற்கு டாகுடரின் அறிமுகக்காட்சி உச்சக்கட்ட நகைச்சுவை. விஜய்க்கு ஊர்மக்கள் கொடுக்கும் பில்டப்... அடங்கப்பா... வடிவேலுவும் தமன்னாவும் வேற அவங்கவங்க பங்குக்கு செமையா வருத்தெடுப்பாங்க. அப்பப்ப பாடல்கள் மட்டும் கொஞ்சம் ஆறுதல் தந்தது.
எ.பி.காட்சி: வேறென்ன, விஜய் சுறா நீச்சல் போட்டபடி கடலிலிருந்து கொடுப்பாரே ஒரு இன்ட்ரோ சீன்... அதுதான்...
1. சிவகாசி
விஜய் + பேரரசு = வெறிக்கூட்டணி. இந்தப்படத்தில் மிகவும் ரசிக்க வைத்த விஷயம் விஜய்யின் மேனரிசங்கள். அசினும் விஜய்யும் மாறி மாறி செய்யும் இரட்டையர்கள் காமெடி செம. ரெண்டாவது பாதியில் பிரகாஷ் ராஜும் கூட சேர்ந்து மொக்கை போடுவார். மசாலாத்தனங்கள் என்று சொல்லப்படும் ஊரை ஏமாற்றும் காட்சிகள் எல்லாம் குபீர் சிரிப்பை வரவழைத்தது. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்தமாதிரி எல்லாம் ஊரை எமாற்றுவார்களோ...???
எ.பி.காட்சி: விஜய் அவரது படையோடு அசினிடம் போய் நின்று “எங்க அண்ணனை திட்டினியாமே...?” என்று நக்கலடிக்கும் காட்சி.
ம்ம்ம்... இந்தப்பதிவை இதே ஸ்டைலில் தொடர்வதற்கு மிகவும் ஆசைப்பட்ட பன்னிக்குட்டி ராம்சாமி, “வம்ப வெலைக்கு வாங்குவோம்” மணிவண்ணன், அப்புறம் விஜயின் தீவிர விசிறி ஐத்ரூஸ் மூவரையும் வம்புடன் அழைக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
61 comments:
ரெண்டு மூணு நாளாவும் பரவாயில்லையா எதுக்கா மனச தேத்திகிட்டு பதிவு போட.
செம காமடி..
நடிகர் (?!”) விஜய் என நீங்கள் அன்று எழுதியது நினைவுக்கு வந்து போனது :)
விஜய் கையை நீட்டி ஆடுற டான்சை மறக்க முடியுமா?
***********
இதையும் படிங்க:உடல் எடையை குறைக்க வேண்டுமா? கீழே படிங்க.
நான் வேட்டைக்காரன் படத்தோட பெயரிலே இன்ஸ்பைர் ஆகித்தான் என் பெயரை சேட்டைக்காரன்-னு வச்சுக்கிட்டேன். :-)
என்னத்த சொல்ல.........எல்லாம் சிவமயம் என்பார்கள் இப்படிப்பட்ட பன்சுகளை கேட்க்கும்போது எல்லாம் பய மயம் எனக்கு ஹி ஹி!!
இந்த லிஸ்ட் எனக்கு ரொம்ப நீளம் ..நெஞ்சினிலே ,சுறா,ஆதி ,குருவி ,போக்கிரி ,வேட்டைக்காரன் ,திருமலை ,அழகிய தமிழ் மகன் ,மதுர (கொலை கொடூரம் !!) ,புதிய கீதை .,அப்புறம் ரசிகன் ,மாணவன்
போக்கிரி படத்தின் தெலுங்கு ஒரிஜினலில் மகேஷ் பாபு நடிப்பு அருமையாக இருக்கும்.அந்த அசால்டான நடிப்பு அவருக்கு மட்டுமே வரும்.அதை காப்பி அடிக்க நினைத்து விஜய் அந்தப் படத்தையே கேவலப்படுத்திய விதம் இருக்குதே!
பட்டியல் அவ்ளோதானா?????
இன்னும் அவருடைய நிறைய காவியங்களை எதிர்பார்த்தேனே.. சரி தொடர்பதிவுல வருதானு பாப்போம்.
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===
.
ridhttu
சேட்டைக்காரன் said...
நான் வேட்டைக்காரன் படத்தோட பெயரிலே இன்ஸ்பைர் ஆகித்தான் என் பெயரை சேட்டைக்காரன்-னு வச்சுக்கிட்டேன். :-)......////////
அடபாவமே அப்போ பாதிப்பு மிக கடுமையா இருக்குமே ......
அட என்னையா தளபதி டபுள் ஆக்ட்டு குடுத்த அழுக்கு மூட்டை மகன் சாரி டங்கு ஸ்லிப் ஆய்டுச்சி அழகிய தமிழ் மகன் பத்தி ஒன்னும் இல்லையா ?
ஸ் ஸ் முடியல பார்க்கரதே கஸ்டம் படிக்கனுமா
??????????????
//எல்லாவற்றையும் விட மிகப்பெரிய காமெடி க்ளைமாக்ஸ் காட்சியில் வாட்ச்மேன் டிரஸ் போட்டபடி விஜய் நடந்து வருவதுதான்.//
அதென்ன மாயமோ, மந்திரமோ தெரியல..டாகுடர் மாட்டினதும் போலீஸ் ட்ரெஸ் வாட்ச்மேன் ட்ரெஸ் ஆகிடுது!
அந்தக் கொடுமையான 'பன்ச்' ஐ விட்டுட்டீங்களே! 'ஒருதடவை முடிவு பண்ணிட்டா...'
அதை நம்ம நண்பர்ஸ் உல்டா பண்ணி, மாத்தி வச்சி யூஸ் பண்ணாங்க!
'ஒரு தடவை மூச்சா வந்திடுச்சுன்னா ஆப்புறம் நானே நினைச்சாலும் அடக்கமாட்டேன்!
ஓகே ஓகே கொஞ்ச நாள் ஆகும் நான் 'கலாய்ப்பு' பதிவ தொடர
:-) Good one!
ILLUMINATI said...
//போக்கிரி படத்தின் தெலுங்கு ஒரிஜினலில் மகேஷ் பாபு நடிப்பு அருமையாக இருக்கும்.அந்த அசால்டான நடிப்பு அவருக்கு மட்டுமே வரும்.அதை காப்பி அடிக்க நினைத்து விஜய் அந்தப் படத்தையே கேவலப்படுத்திய விதம் இருக்குதே!//
விஜயை எனக்குப் பிடித்ததற்கு முதற் காரணமே அவரது அசால்டான simple/easy நடிப்புத்தான் (இன்னும் பல நடிகர்களைப் பல காரணங்களுக்காகப் பிடிக்கும்). 1995 க்குப் பிற்பட்ட படங்கள் அதற்கு சாட்சி.
மகேஷ்பாபுவின் முதல் படம் வெளிவந்தது, 1999. அவரது முராரி (2001) நான் பார்த்த முதற்படம். இதில், விஜயைப் போன்ற அவரது அசால்டான simple/easy நடிப்புத்தான் எனக்கு அவரையும் பிடிக்க வைத்தது.
போக்கிரி படத்தில் மகேஷ்பாபுவின் அனேகமான முகபாவங்கள் விஜய்க்கு ஏற்கனவே பரிச்சயமானவை. telugu pokkiri முதல் வந்ததால் விஜயின் நடிப்பு copy பண்ணியது போல் உள்ளது.
அந்தப் படத்தின் police காட்சிகளில் மகேஷ்பாபு விஜயை விட சின்னப்புள்ள போல் தெரிவார்.
உ-ம்: Police அறிமுகக் காட்சி...etc
ஆனால், விஜய் மட்டும் தான் comedy piece ஆக்கப்படுவார். (இதுவும் ஒருவகையில் விஜயின் எதிர்காலத்துக்கு நல்லது.)
தற்போதய விஜயின் உடற்கட்டுக்கு சினிமா police(நிஜ police க்கு அல்ல) வேடம் அவ்வளவு பொருந்தாது என்பது உண்மைதான். ப்ரியமுடன் திரைப்படம் வந்த கால கட்டத்தில்(1998-2001) விஜய்க்கு சினிமா police வேடத்துக்குரிய உடற்கட்டு இருந்தது. அந்தக் கால கட்டத்தில் சூர்யாவுக்கு அந்த உடற்கட்டு இல்லை.
(ஆனால், யுத்தம் செய் படத்தில் சாதாரண உடற்கட்டோடே சேரன் அதைச் செய்திருப்பார்)
***பிரபா, உங்கள் எழுத்துகளை, நகைச்சுவைகளை ரசித்தேன். நன்றி
>>> விஜய் செய்த ஒரே தவறு அவர் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்ததுதான். என்னைப்பொருத்தவரை அவரின் அடுத்த ரவுண்ட் வெற்றிகரமாகவே இருக்கும் என நம்புகிறேன். காவலன் மூலம் அந்த மாற்றம் துவங்கியுள்ளது. 'விஜய்' பெயருக்கு ஏற்றவாறே அவர் படம் அமையும் காலம் தொடங்கிவிட்டது. வேலாயுதம், கோபம் போன்ற படங்கள் இதை நிரூபிக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
kalakkal anne! i like sivakaasi movis! nayanthara dance super!
அஞ்சா சிங்கம் said...
//அழகிய தமிழ் மகன் பத்தி ஒன்னும் இல்லையா ?//
நல்ல கதையிருந்தும் திரைக்கதையில் சொதப்பிய படமிது.
தலயின்(நம்ம அஜித்) பல படங்கள் இந்தமாதிரித்தான் மிக நல்ல கதையிருந்தும் திரைக்கதையில் சொதப்பியவை. (தலயின் கதைத் தேர்வுகள் அனேகமாக நன்றாக இருக்கும்)
விஜய் 'ரசிகை'யாயிடுவேன் போலிருக்கு!
present pirabha
correct..
பின்னி பெடல் எடுத்திட்டீங்க பிரபாகரன். விஜயோட நிறுத்தாம மற்ற தருதல நடிகர்களையும் கலாய்க்கவும்.
சுறாவுக்கு பதில் கில்லி போட்டிருந்தால் எனக்கு பிடித்த படங்கள் அப்படியே இருந்திருக்கும்
முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.
டாகுடறுதான் காவலன் படத்தோட அடங்கிடாரே இன்னும் ஏன் அந்த ஆல போடுகிளிகிறீங்க? விட்டுடுங்க பாவம் பொழச்சி போகட்டும்..
விஜய் படங்களிலேய மிக சிறந்த காட்சியாக நான் கருத்துவது, சுறாவில் டீ ஆர் மாதிரி கோர்ட்டில் மிமிக்ரி செய்வாரே அதுதான்.
இதை வாசிக்கும் போதே மயக்கம் வருதே, நல்ல வேளை நான் Risk எடுத்து பார்கலை !!!
ஆரம்ப காலத்தில் தூங்கிகிட்டே நடிச்ச படங்கள் எதுவும் பார்த்ததில்லையா நீங்க!?
டாகுடர்னு போட்ட உடனேயே நெனச்சேன்....
ஏனுங்ணா... புடிச்ச படம் புடிக்காத படம்னு போட்டுப்புட்டு போக வேண்டியதுதானே, அதென்ன நைசா கோர்த்து விட்டுட்டீங்க......? நான் வேற இனி டாகுடர பத்தி எழுத மாட்டேன்னு அவங்க அப்பாரு மேல சத்தியம் பண்ணிப்புட்டேனே...?
சரி, இருந்தாலும் டாகுடர பத்தி எழுத சொன்னதுக்காக நானும் களத்துல குதிக்கிறேன்.... (என்னோட பழைய பதிவு டாகுடர் விஜயும் நானும் படிச்சீங்களா? அதையே பொட்டி தட்டி பெண்டு நிமித்தி போட்டுடலாமா?.....ஹி...ஹி....)
@ ஐத்ருஸ், பார்வையாளன், தமிழ்வாசி - Prakash, சேட்டைக்காரன், விக்கி உலகம், dr suneel krishnan, ILLUMINATI, இந்திரா, tamilan, சி.பி.செந்தில்குமார், அஞ்சா சிங்கம், Speed Master, ஆதவா, ஜீ..., நா.மணிவண்ணன், Pranavam Ravikumar a.k.a. Kochuravi, கரன், ! சிவகுமார் !, மாத்தி யோசி, middleclassmadhavi, ரஹீம் கஸாலி, Riyas, Thulasi, # கவிதை வீதி # சௌந்தர், மழலைப் பேச்சு, உளவாளி, பாலா, Jhona, வால்பையன், பன்னிக்குட்டி ராம்சாமி
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ ஐத்ருஸ்
// ரெண்டு மூணு நாளாவும் பரவாயில்லையா எதுக்கா மனச தேத்திகிட்டு பதிவு போட. //
பரவாயில்லை... பொறுமையாக எழுதுங்கள்... அதுசரி, சொற்களுக்கு இடையே காற்புள்ளி, முற்றுப்புள்ளி போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கமே இல்லையா...
@ தமிழ்வாசி - Prakash
// விஜய் கையை நீட்டி ஆடுற டான்சை மறக்க முடியுமா?
*********** //
கையை நீட்டி ஆடுற டான்ஸா... அது என்னங்க...
@ சேட்டைக்காரன்
// நான் வேட்டைக்காரன் படத்தோட பெயரிலே இன்ஸ்பைர் ஆகித்தான் என் பெயரை சேட்டைக்காரன்-னு வச்சுக்கிட்டேன். :-) //
தெரியும் நண்பா... படம் வந்த ஒரு மாதம் கழித்து நீங்கள் பதிவெழுத ஆரம்பித்தது நினைவிருக்கிறது... அப்போதிலிருந்தே நான் உங்கள் வாசகன்...
@ விக்கி உலகம்
// என்னத்த சொல்ல.........எல்லாம் சிவமயம் என்பார்கள் இப்படிப்பட்ட பன்சுகளை கேட்க்கும்போது எல்லாம் பய மயம் எனக்கு ஹி ஹி!! //
எவ்வளவோ பார்த்துட்டோம்... இதை பார்க்க மாட்டோமா...?
@ dr suneel krishnan
// இந்த லிஸ்ட் எனக்கு ரொம்ப நீளம் ..நெஞ்சினிலே ,சுறா,ஆதி ,குருவி ,போக்கிரி ,வேட்டைக்காரன் ,திருமலை ,அழகிய தமிழ் மகன் ,மதுர (கொலை கொடூரம் !!) ,புதிய கீதை .,அப்புறம் ரசிகன் ,மாணவன் //
சூப்பர்ப் லிஸ்ட்... உங்க லிஸ்டுல எனக்கு அழகிய தமிழ் மகன் மட்டும் கொஞ்சூண்டு பிடிக்கும்...
@ இந்திரா
// பட்டியல் அவ்ளோதானா?????
இன்னும் அவருடைய நிறைய காவியங்களை எதிர்பார்த்தேனே.. சரி தொடர்பதிவுல வருதானு பாப்போம். //
இதுக்கு மேல சொல்றதுக்கு என்ன இருக்கு... dr suneel krishnan பின்னூட்டத்தை பார்த்துக்கொள்ளவும்...
@ tamilan
// சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <=== //
நண்பா... உங்க பதிவு பிரமாதம்... நான் ஏற்கனவே படிச்சிட்டேன்...
@ அஞ்சா சிங்கம்
// அடபாவமே அப்போ பாதிப்பு மிக கடுமையா இருக்குமே ...... //
தப்பா எடுத்துக்காதீங்க... பெயர் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன்...
// அட என்னையா தளபதி டபுள் ஆக்ட்டு குடுத்த அழுக்கு மூட்டை மகன் சாரி டங்கு ஸ்லிப் ஆய்டுச்சி அழகிய தமிழ் மகன் பத்தி ஒன்னும் இல்லையா ? //
அந்தப்படம் எனக்கு கொஞ்சம் பிடிக்கும்...
@ ஆதவா
// ?????????????? //
இதுக்கு என்ன அர்த்தம்...???
@ ஜீ...
// 'ஒரு தடவை மூச்சா வந்திடுச்சுன்னா ஆப்புறம் நானே நினைச்சாலும் அடக்கமாட்டேன்! //
ஆஹா இது நல்லா இருக்கே...
@ நா.மணிவண்ணன்
// ஓகே ஓகே கொஞ்ச நாள் ஆகும் நான் 'கலாய்ப்பு' பதிவ தொடர //
பரவாயில்லை... பொறுமையாக எழுதுங்கள்...
@ Pranavam Ravikumar a.k.a. Kochuravi
// :-) Good one! //
நண்பா... முதல் வருகை மாதிரி தெரியுது... அடிக்கடி இதே மாதிரி சிரிச்சிக்கிட்டே வந்துட்டு போங்க...
@ கரன்
நண்பா... நீங்க ஒரு ஜென்டில்மேன்... இங்கே வந்து இப்படி பொறுமையாக பின்னூட்டம் போட்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்... மறுபடி ஒருமுறை விஜய்யை கலாய்க்கும் எண்ணம் வந்தால் நான் உங்களை எண்ணி தயங்குவேன்...c
@ ! சிவகுமார் !
// என்னைப்பொருத்தவரை அவரின் அடுத்த ரவுண்ட் வெற்றிகரமாகவே இருக்கும் என நம்புகிறேன். காவலன் மூலம் அந்த மாற்றம் துவங்கியுள்ளது. 'விஜய்' பெயருக்கு ஏற்றவாறே அவர் படம் அமையும் காலம் தொடங்கிவிட்டது. வேலாயுதம், கோபம் போன்ற படங்கள் இதை நிரூபிக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. //
சிவா... அப்படி எல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துடாதீங்க... விஜய்யின் அடுத்த படமான வேலாயுதம், ஆசாத்ன்னு ஒரு மொக்கை தெலுங்கு மசாலா படத்தோட ரீமேக்... நிச்சயமா ஓடாது... கோபம்...? அது என்ன படம்..?
@ மாத்தி யோசி
// kalakkal anne! i like sivakaasi movis! nayanthara dance super! //
அய்யய்யோ... நீங்க எந்த விஜய் படத்துலயும் விஜயை பார்க்கவே மாட்டீங்க போல...
@ middleclassmadhavi
// விஜய் 'ரசிகை'யாயிடுவேன் போலிருக்கு! //
ஆஹா மேடம்... எஸ்.எஸ்.மியூசிக் சேனல்ல அடிக்கடி ஒரு புள்ள வந்து அழுவுதே அது நீங்க தானா...
@ Thulasi
// பின்னி பெடல் எடுத்திட்டீங்க பிரபாகரன். விஜயோட நிறுத்தாம மற்ற தருதல நடிகர்களையும் கலாய்க்கவும். //
ஏண்ணே... ஏன் இந்த கொலைவெறி...
@ # கவிதை வீதி # சௌந்தர்
// சுறாவுக்கு பதில் கில்லி போட்டிருந்தால் எனக்கு பிடித்த படங்கள் அப்படியே இருந்திருக்கும் //
அடடே... கில்லி எனக்கு உண்மையாவே பிடித்த விஜய் பட லிஸ்டில் இருக்கிறதே...
@ மழலைப் பேச்சு
// முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை. //
பதிவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்... பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்... இனி அடிக்கடி வருவேன்...
@ உளவாளி
// டாகுடறுதான் காவலன் படத்தோட அடங்கிடாரே இன்னும் ஏன் அந்த ஆல போடுகிளிகிறீங்க? விட்டுடுங்க பாவம் பொழச்சி போகட்டும்.. //
என்ன அண்ணே இப்படி சொல்லிட்டீங்க... மறுபடி வேலாயுதத்தில் வேலையை காட்ட ஆரம்பிப்பார் பாருங்க...
@ பாலா
// விஜய் படங்களிலேய மிக சிறந்த காட்சியாக நான் கருத்துவது, சுறாவில் டீ ஆர் மாதிரி கோர்ட்டில் மிமிக்ரி செய்வாரே அதுதான். //
ஹா... ஹா... ஹா... விஜய் டி.ஆர் மாதிரி எல்லாம் செய்யத் தேவையில்லை... விஜய் மாதிரி செய்தாலே போதும்...
@ வால்பையன்
// ஆரம்ப காலத்தில் தூங்கிகிட்டே நடிச்ச படங்கள் எதுவும் பார்த்ததில்லையா நீங்க!? //
பார்த்திருக்கேன் அண்ணா... ஆனால் ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது... மனதில் நிற்கவில்லை...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// டாகுடர்னு போட்ட உடனேயே நெனச்சேன்.... //
நீங்க தானே அண்ணே கல்லா கட்டுமா காவலன் எழுதினப்பவே டாகுடர்ன்னு போடவே இல்லைன்னு பீல் பண்ணீங்க...
// சரி, இருந்தாலும் டாகுடர பத்தி எழுத சொன்னதுக்காக நானும் களத்துல குதிக்கிறேன்.... (என்னோட பழைய பதிவு டாகுடர் விஜயும் நானும் படிச்சீங்களா? அதையே பொட்டி தட்டி பெண்டு நிமித்தி போட்டுடலாமா?.....ஹி...ஹி....) //
இப்பதான் படிச்சேன்... அதையே போட்டுடுங்க... ஆனா கலாய்க்கிறதுக்கு புதுப்புது வார்த்தைகள் சேர்த்து பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணவும்...
//சிவா... அப்படி எல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துடாதீங்க... விஜய்யின் அடுத்த படமான வேலாயுதம், ஆசாத்ன்னு ஒரு மொக்கை தெலுங்கு மசாலா படத்தோட ரீமேக்... நிச்சயமா ஓடாது... கோபம்...? அது என்ன படம்..?//
ஆசாத் படம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். கோபம் சீமான் விஜய்யை வைத்து இயக்கப்போகும் படம். விஜய்யின் அடுத்த ரவுண்ட் ஆரம்பம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த கமண்டை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவருடைய அடுத்த சில படங்கள் வந்த பிறகு நாம் மீண்டும் விவாதிக்கலாம். விஜய் நடிப்பு வேறு திசையில் பயணிக்கும். படத்தின் வசூல் ஒருபுறம் இருந்தாலும். I strongly Believe.
என்னதான் சொல்லுங்கள் சுறா தவிர மற்ற நாலு படங்களும் அசால்டா உட்கார்ந்து படபடக்காமல் பார்க்கலாம் ....சுறா????டைட்டிலேயே கிளம்பிடலாம்
'டாகுட்டர்' - தலைப்பு இது தான் சரி
Post a Comment