வணக்கம் மக்களே...
காதலில் வென்றவர்கள் சந்தோஷமாகவும், காதலில் தோற்றவர்கள் அதைவிட டபுள் மடங்கு சந்தோஷமாகவும் சரக்கடித்து கொண்டாடுங்கள்...
ஒருதலை காதலர்கள், பிரிந்துபோன காதலர்கள் எல்லாருக்கும் ஒரு அட்வைஸ். உங்கள் காதல் கைகூடாததை நினைத்து சந்தோஷப்படுங்கள். ஒருவேளை, காதல் வெற்றி பெற்றிருந்தால் தம்மடிக்கவும், சரக்கடிக்கவும் ரோட்டில் கும்முன்னு போகும் பிகரை சைட்டடிக்கவும் சுதந்திரம் இல்லாமல் போயிருந்திருக்கும். அந்த நிலை உங்களுக்கும் தேவையா...? இந்த உலகத்துல, பேச்சுலர் லைப் மாதிரி சந்தோஷமானது ஏதாவது இருக்கா...? அதனால பழசை நினைச்சு வருத்தப்பட்டு வருத்தெடுக்காமல் வாழ்க்கையை கொண்டாடுங்கள்.
பொதுவா, யாருக்காவது கல்யாணம் ஆச்சுன்னா குவா... குவா... எப்போன்னு எல்லாரும் கேப்பாங்க. ஆனா சினிமாக்காரங்களுக்கு கல்யாணம் ஆனா மட்டும் டைவர்ஸ் எப்போன்னு கேக்கணும் போல. அப்படித்தாங்க இருக்குது நிலைமை.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஜோடின்னு எல்லாருக்கும் முன்னுதாரணமா வாழ்ந்துட்டு இருக்காங்க நம்ம “தல” அஜீத்தும் – ஷாலினி அண்ணியும். இந்த வார ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் அஜித் – ஷாலினி காதல் பேட்டியை வெளியிட்டிருக்கிறார்கள். அட, கோவிச்சுக்காதீங்கப்பா அப்படியே மூணு பக்கம் தள்ளி விஜய் – சங்கீதா லவ் ஸ்டோரியும் போட்டிருக்காங்க.
ஒரு வாரமா நம்ம கவுண்டமணி அண்ணன் கையில ரோஜாப்பூவோட ரொமாண்டிக் லுக் விடுற ஸ்டில்லை போட்டு பில்டப் பண்ணிட்டு இருந்தோம். அந்த சஸ்பென்சை உடைக்கிற நேரம் வந்தாச்சு. அண்ணன் கையில வச்சிக்கிட்டு இருந்தது ரோஜாப்பூ மட்டுமல்ல. அது ஒரு வலைப்பூவும் கூட. நீங்களும் வந்து நம்ம மன்றத்துல சேருங்க... மதியத்துக்குள்ள பெரிய மனுஷங்க யாராவது வந்து ரிப்பன் கட் பண்ணி திறந்து வைப்பாங்க...
வரலாற்றில் இந்த நாள்:
பென் ஹர் என்ற திரைப்படம் பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்கு, இது 1959ம் ஆண்டு வெளிவந்த ஒரு இதிகாசத் திரைப்படம். பதினோரு ஆஸ்கர் விருதுகளை வாங்கிக் குவித்த திரைப்படம்.
இந்தப்படம் 1971ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதிதான் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த காலக்கட்டம் இப்போது மாதிரியானது அல்ல. போன வாரம் வெளிவந்த படத்தை இந்த வாரமெல்லாம் டிவியில் போடமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழலில் இத்திரைப்பாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது ஒரு வரலாற்று சம்பவமாக கருதப்படுகிறது.
ட்வீட் எடு கொண்டாடு:
காதல் தோல்விக்கு பெண்களை காரணம் சொல்லும் ஒவ்வொரு ஆணும் அடுத்த காதலுக்கு தயாராகின்றான் # கூட்டத்துல கட்டு சோற்றை அவிழ்த்தல்
எதிர் வீட்டு ஃபிகர் கூட சரியா தெரியாம கஷ்டப்பட்டேன்; ஆனா இப்போ அடுத்த தெரு ஆன்ட்டி கூட அம்சமா தெரியுது! # THANKS TO VAASAN EYE CARE
பல நேரங்களில் காதலியின் அழகைக்காட்டிலும், அறிவு அச்சப்படுத்துகிறது # ஓவரா கேள்வி கேட்கிறாங்க
நாளைக்கு காதலர் கிரகணம், வெளில போனாக்கா மனசுக்கு கெடுதி!CartoonNetwork அல்லது DiscoveryTamil பார்த்துகிட்டு வீட்லயே இருப்பேன்
காதல் காதல் காதல்! காதல், ஒரு கழட்டி போட்ட செருப்பு. சைஸ் சரியா இருந்தா யாரு வேணுனா மாட்டிக்கலாம்!
உலகின் மிகச்சிறந்த ரொமாண்டிக் படங்கள் என்று கூகிளி பார்த்தேன். நிறைய லிஸ்ட் கிடைத்தது. கிட்டத்தட்ட, எல்லா லிஸ்டிலும் இருந்த ஐந்து படங்கள்.
1. City Lights
2. Gone with the Wind
3. Casablanca
4. The English Patient
5. Titanic
பதிவுலகில் புதியவர்: ஐ ஆம் சீரியஸ்...
ஆக்சுவல்லி, இவர் புதியவர் அல்ல. நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச பிரபல பதிவர் தம்பி கூர்மதியான்தான். அவர் வைத்திருக்கும் ஆங்கில வலைப்பூ உட்பட நான்கு வலைப்பதிவுகளில் இதுவும் ஒன்று. அதிகம் அறியப்படாதது. தலைப்பு மட்டும்தான் சீரியஸ் மற்றபடி இடுகைகள் அனைத்தும் செம காமெடி ரகம். ஏனோ தெரியல, இந்த வலைப்பூவில் அடிக்கடி இடுகையிடுவது இல்லை. வாருங்கள் அவரை ஊக்குவித்து நிறைய எழுத வைப்போம்.
எனக்குப் பிடித்த பாடல்:
என்னன்னு தெரியல. இந்த வாரம் எந்த பாடலும் பெரிய அளவில் மனதை ஈர்க்கவில்லை. ஒருவேளை, ஆணி அதிகம் என்பதாலோ என்னவோ. இருந்தாலும், சிறுத்தை படத்தின் “ராக்கம்மா...” பாடல் கொஞ்சூண்டு பிடித்திருந்தது. தமன்னாவின் இடுப்பில் இல்லாத ஈர்ப்பு கூட சுச்சியின் குரலில் இருக்கிறது.
கூகிள் பஸ்ஸில் ஒரு வட இந்தியர் அனுப்பியிருந்தார். எந்த இடத்தில் எடுத்த புகைப்படம் என்று கேட்டேன், பதிலே வரவில்லை. அநேகமாக ராஜஸ்தானாக இருக்குமென்று நானாகவே யூகித்துக்கொண்டேன்.
இந்த வார காணொளி:
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எனக்கு பிடித்த போட்டியாளர் மாதங்கியை வெளியேற்றிவிட்டார்கள் :(
இந்த வார கவுஜை: (நண்பர் ஒருவரின் வலைப்பூவில் எப்பவோ படித்தது...)
என் நண்பனின் காதலி கிங்க்பிஷரே...
உன்னிடம் ஒரு கேள்வி:
அரைலிட்டர் தண்ணீரே என்னால் அருந்தமுடியவில்லை...
உனைமட்டும் எப்படி ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே விடுகின்றான்...?
இந்த வார எஸ்.எம்.எஸ்:
காதல் ஜோடிக்கு கொடுக்க சிறந்த பரிசுப்பொருள் எது....???
வெங்காயம்...
காரணம்:
- காதலின் நிறம் பிங்க்.
- விலை உயர்வானது.
- காதலன் / காதலியின் கண்களில் ஆனந்த கண்ணீர் கேரண்டி.
இந்த வார தத்துவம்:
“DON’T FALL FOR ANYONE… UNTIL THEY ARE READY TO CATCH YOU…”
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
74 comments:
இவ்வளவு செய்திகளா ? அண்ணனோட வலைப்பூவிலை இணைந்தாச்சு ..கலக்குங்க :)
//உலகின் மிகச்சிறந்த ரொமாண்டிக் படங்கள்//
"A walk to remember" நல்ல காதல் படம் :)
“DON’T FALL FOR ANYONE… UNTIL THEY ARE READY TO CATCH YOU…”
Nice :)
மாதங்கி உங்களுக்கு பிடிச்சா ஆளா? அப்போ அந்த ஃபிகரு?(ஆள் மாத்தியாச்சா?)
ட்வீட்ஸ் கலக்கல்
//உலகின் மிகச்சிறந்த ரொமாண்டிக் படங்கள்//
notebook இல்லையே......... இன்னும் கொஞ்சம் காதல் ரசம் இருந்து இருக்கலாமோ......... மற்றபடி தகவல்கள் அனைத்தும் அருமை
கவுண்டமணி பிளாக் பார்த்தேன். லோகோ மாத்துங்க.. சேர்ந்தாச்சு
உங்களுக்கு எப்படி காதலர் தின கொண்டாட்டம் உண்டா ?
//காதலில் வென்றவர்கள் சந்தோஷமாகவும், காதலில் தோற்றவர்கள் அதைவிட டபுள் மடங்கு சந்தோஷமாகவும் சரக்கடித்து கொண்டாடுங்கள்..//
இதுல நீங்க எதுலன்னு தெரியல.. ஆனாலும் வாழ்த்துக்கள் :)
(சரக்கு அடிப்பதுக்கு ஆதரவு கிடையாது :) )
இந்த வார புகைப்படம் ஆப்ரிக்காவில் எடுக்க பட்டு உள்ளது. வண்டியில் அமர்ந்து இருக்கும் முகங்களை பாருங்கள்.
நல்லாஇருக்கு எல்லாமே
என்னப்பா காலையில லீவ போட்டுட்டு கெளம்பியாச்சா ஹி ஹி!!
காதலர் தின ஸ்பெஷல் செம கலவை நண்பா....
வாழ்த்துக்கள் :)
அந்த தத்துவம் ட்வீட்ஸ் இன்னும் எல்லாமே சூப்பரா இருக்கு. இன்னைக்கும் எல்லாமே கலக்கல்! Happy Valentine's day!
கவுண்டமணி ராக்ஸ் கலக்குங்க
காதலர்தின மிக்சிங் சூப்பர்! கலக்குங்க! :-)
அந்த போட்டோ ஆப்ரிக்கான்னு நெனைக்கறேன் தல
கலக்கல்.
//ஒருவேளை, காதல் வெற்றி பெற்றிருந்தால் தம்மடிக்கவும், சரக்கடிக்கவும் ரோட்டில் கும்முன்னு போகும் பிகரை சைட்டடிக்கவும் சுதந்திரம் இல்லாமல் போயிருந்திருக்கும். // நம்ப பசங்களை "ரொம்ப நல்லவனுங்க" அப்படின்னு நினைச்சுகிட்டிருகீங்க! அஞ்சு பேரை சைட் அடிப்போம், நாலு பேருக்கு லெட்டர் கொடுப்போம், மூணு பேரை லவ்வு பண்ணுவோம், ரெண்டு பேரோடு ஊரு சுற்றுவோம் ஒருத்தியை கல்யாணம் பண்ணிப்போம். இதுதான் நம்மாளுங்களோட லவ்வு கொள்கை, எப்போ யாரு டாட்டா காட்டுவாளுங்கன்னு யாருக்குத் தெரியும், safe ஆக இருக்கனும்மில்ல. ஐயோ...ஐயோ...
இவ்வளவு செய்திகளா ?
கலக்கல் தல..
//நீங்களும் வந்து நம்ம மன்றத்துல சேருங்க... // செர்ந்தான்ச்சு, கவுண்டமணி அண்ணன்னா நமக்கு உசுருங்கன்னா!
//பென் ஹர் என்ற திரைப்படம் பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். //தெரியாது, பார்க்கலாமுன்னு இருக்கேன்.
//அநேகமாக ராஜஸ்தானாக இருக்குமென்று நானாகவே யூகித்துக்கொண்டேன்.// பிரபா February 14, 2011 8:45 AM அனானி சொன்ன மாதிரி உட்கார்ந்திருக்கும் பயல்கள் எல்லாம் தார் ரோடு கலர்ல இருக்கனுங்க. ஆப்பிரிக்கா படமாத்தான் இருக்கும் போல.
City Lights படத்தை நான் பார்த்திருக்கேன் பிரபா, அந்த படம் பூராவும் சிரிச்சுப் பார்த்தாலும், அந்த கடைசி சீன்ல அழுதிட்டேன். [அந்த பொண்ணு புகை வச்சிருப்பா, சார்லி சாப்ளின் அடையாளம் கண்டுபிடிச்சு அங்கேயே நின்னு அந்தப் பெண்ணைப் பார்ப்பார், காசு வேணுமான்னு குடுக்கப் போவாள், ம்ஹும்..என்று மனதில் வலியோடு சாப்ளின் தூரப் போவார், அப்போ நான் அழுதிட்டேன். அப்புறம் அவள் அவர் கையைப் பிடிப்பாள் அந்தப் ஸ்பரிசத்தில் அவர் தனக்கு பார்வை வர உதவியவர் என்பதைக் கண்டுபிடித்து விடுவாள், அதுவும் மனதைத் தொட்ட காட்சி. [இந்தப் படத்தை உல்டா பண்ணித்தான் டாக்குடர் விஜய், சிம்ரன் வச்சு ஒரு படம் வந்துச்சு, தெரியுமா?
//விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எனக்கு பிடித்த போட்டியாளர் மாதங்கியை வெளியேற்றிவிட்டார்கள் :(//முன்பு, ராகினிஸ்ரீ ன்னு ஒரு மாமி வந்தாங்களே தெரியுமா? அவங்கதான் நமக்கு ரொம்ப பிடிச்ச பிகர், நடுவர்கள் எல்லாம், நீங்க இந்த dress- ல ரொம்ப அழகா இருக்கீங்கன்னு appreciation பண்ண ஆரம்பிச்சுட்டாங்க! ஹி...ஹி...ஹி...
//அரைலிட்டர் தண்ணீரே என்னால் அருந்தமுடியவில்லை...
உனைமட்டும் எப்படி ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே விடுகின்றான்...?// எங்க ஊரில் கூட தண்ணீர் கால் லிட்டர் கூட குடிக்க முடியாத ஆளுங்க, கள் என்றால் இரண்டு லிட்டர் வேண்டுமானாலும் குடிப்பார்கள். ஹா..ஹா..ஹா..
arasu1691
பல நேரங்களில் காதலியின் அழகைக்காட்டிலும், அறிவு அச்சப்படுத்துகிறது # ஓவரா கேள்வி கேட்கிறாங்க////
அதான ............ வெரி பேட் ஹேபிட் சார்
பெஸ்ட் தமிழ் காதல் திரைப்படங்களைப் பத்தியும் எழுதுங்க...! பெரிய லிஸ்ட், அஞ்சு தேர்ந்தெடுக்கிறது கஷ்டம்...
நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )
எங்க இருந்து புடிச்சிங்க இவ்வளவு வகையறாக்களையும் தல. பிரபா ஒயின் ஷாப் 'கலக்கலா' இருக்கு!!
காதலர் தின Special அருமை Mr. பிரபா.
///காதலில் வென்றவர்கள் சந்தோஷமாகவும், காதலில் தோற்றவர்கள் அதைவிட டபுள் மடங்கு சந்தோஷமாகவும் சரக்கடித்து கொண்டாடுங்கள்..///
நா நேத்து நைட்டே கொண்டாடிட்டேங்க
பிரபா நேத்து நீங்க கால் பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன்
//சினிமாக்காரங்களுக்கு கல்யாணம் ஆனா மட்டும் டைவர்ஸ் எப்போன்னு கேக்கணும் போல. அப்படித்தாங்க இருக்குது நிலைமை.//
அடடா என்னே ஒரு நல்லெண்ணம்....
//தமன்னாவின் இடுப்பில் இல்லாத ஈர்ப்பு கூட சுச்சியின் குரலில் இருக்கிறது//
>>> கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
‘வெள்ளை வெளேர்’ தமன்னா நற்பணி இயக்கம், உஸ்பெகிஸ்தான் பார்டர்.
இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ்
ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......
ஓ இன்னிக்கு காதலர் தின ஸ்பெசலா... நடக்கட்டும் நடக்கட்டும்.....
என்ன மாடரேசனைத் தூக்கியாச்சா?
அப்படியே உங்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள் (உண்டுதானே?)
ட்வீட் எல்லாமே அருமை
கலக்கல்
அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க
ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்
http://speedsays.blogspot.com/2011/02/ipl.html
காதலர் சிறப்பு என்பதைவிட, பிரபா ஒயின்ஷாப்பில் இது உயரிய சரக்கு!!! அற்புதமான தொகுப்பு
வெங்காய எஸ் .எம்.எஸ் சூப்பர்
காதலில் வென்றவர்கள் சந்தோஷமாகவும், காதலில் தோற்றவர்கள் அதைவிட டபுள் மடங்கு சந்தோஷமாகவும் சரக்கடித்து கொண்டாடுங்கள்...
////
VILANKIDUM.....
//காதலில் வென்றவர்கள் சந்தோஷமாகவும், காதலில் தோற்றவர்கள் அதைவிட டபுள் மடங்கு சந்தோஷமாகவும் சரக்கடித்து கொண்டாடுங்கள்..//
இதுல நீங்க எதுலன்னு தெரியல.. ஆனாலும் வாழ்த்துக்கள் :)
கலக்குங்க.. கலக்குங்க ..
நாங்கள் எல்லாம் உங்களின் முதல் பராவில் குறிப்பிட்ட யூத்துகள் பேச்சுலர் லைவ் தான் பெஸ்ட்
அஜித் ஷாலினி விஜய் சங்கீதா நல்ல ஜோடிகள்.
தலைவர் மன்ரத்திலை ஜாயிண்டாகிடவேண்டியதுதான்
விஜய் டிவி பொலிடிக்ஸ் தமிழ்நாடு அரசியலைவிட கேவலம்.
இன்றைக்கு நல்ல போதை....
தமிழில் டாப் ஃபைவ் ரொமாண்டிக் படங்களை உங்கள் பார்வையில் சொல்லியிருக்கலாம்
காதல்னாலே போதைதான்,,,, தண்ணி வேற தனியா அடிக்கணுமாக்கும்?
இதையும் படிங்க: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி
நல்லாஇருக்கு
கலக்கல்ஸ்
நல்ல ஒரு அறிவுரை காதலிக்காதோருக்கு! இதை பார்த்தா காதலிச்சவனும் ஆளை கழட்டிட்டு ஓடி வந்திடுவான்.
பென் ஹர் திரைப்படம் பற்றி புதிய தகவல்
அந்தப்படம் மாதிரி பல படங்கள் இந்தியாவிலிருந்து வர பாத்திருக்கிறேன். Train Bus Car ஒண்டையும் விட மாட்டாங்க போல.
எதிர் வீட்டு ஃபிகர் கூட சரியா தெரியாம கஷ்டப்பட்டேன்; ஆனா இப்போ அடுத்த தெரு ஆன்ட்டி கூட அம்சமா தெரியுது! # THANKS TO VAASAN EYE CARE
இந்த டுவீட்டு சுப்பர்
கலல்குங்க பிரபா.... தலைவர் கவுண்டமனியோட சங்கத்துல சேர்ந்துட்டேன்....
@ S.Sudharshan, சி.பி.செந்தில்குமார், டெனிம், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., விக்கி உலகம், பிரபு எம், எஸ்.கே, ராஜகோபால், ஜீ..., Arun Prasath, சே.குமார், Jayadev Das, sakthistudycentre-கருன், மங்குனி அமைச்சர், சேட்டைக்காரன், மாத்தி யோசி, எம் அப்துல் காதர், N.H.பிரசாத், நா.மணிவண்ணன், MANO நாஞ்சில் மனோ, ! சிவகுமார் !, ரஹீம் கஸாலி, பன்னிக்குட்டி ராம்சாமி, அஞ்சா சிங்கம், Speed Master, ஆதவா, shanmugavel, பிரியமுடன் பிரபு, கே.ஆர்.பி.செந்தில், வந்தியத்தேவன், பார்வையாளன், தமிழ்வாசி - Prakash, ஆகாயமனிதன்.., T.V.ராதாகிருஷ்ணன், கந்தசாமி., கார்த்தி, Pari T Moorthy
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... வாராவாரம் தவறாமல் கடைக்கு வந்து உங்கள் பேராதரவைத் தர வேண்டுகிறேன்...
@ S.Sudharshan
// இவ்வளவு செய்திகளா ? //
இன்னும் கூட இருந்துச்சு... எடிட் பண்ணிட்டேன்... மாதங்கிக்காகவே ஒரு பத்தி வச்சிருந்தேன்...
// "A walk to remember" நல்ல காதல் படம் :) //
அப்படிங்களா... பார்க்க முயல்கிறேன்...
@ சி.பி.செந்தில்குமார்
// மாதங்கி உங்களுக்கு பிடிச்சா ஆளா? //
ரொம்ப ரொம்ப...
// அப்போ அந்த ஃபிகரு?(ஆள் மாத்தியாச்சா?) //
எனது இதயம் ஒரு திறந்தவெளி மைதானம்... இங்கே ஆயிரக்கணக்கானோருக்கு இடம் உண்டு...
// லோகோ மாத்துங்க.. //
அதுக்கு ஒரு பதினோரு பேர் கொண்ட குழு இருக்காங்க... மாத்தச் சொல்றேன்...
@ டெனிம்
// notebook இல்லையே......... //
நல்ல படமோ... பார்த்துவிடுகிறேன்...
// இன்னும் கொஞ்சம் காதல் ரசம் இருந்து இருக்கலாமோ......... //
போதும்டா சாமி...
// உங்களுக்கு எப்படி காதலர் தின கொண்டாட்டம் உண்டா ? //
காதலும் உண்டு... கொண்டாட்டமும் உண்டு... ஆனா காதலர் தின கொண்டாட்டம் இல்லை...
@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// இதுல நீங்க எதுலன்னு தெரியல.. ஆனாலும் வாழ்த்துக்கள் :) //
முதல் பிரிவில் இருக்கேன்... இந்த நகைப்பான் :) போடுறதா இந்த நகைப்பான் :( போடுறதான்னு தெரியல...
// (சரக்கு அடிப்பதுக்கு ஆதரவு கிடையாது :) ) //
வெளங்கிடும்...
@ Anonymous
// இந்த வார புகைப்படம் ஆப்ரிக்காவில் எடுக்க பட்டு உள்ளது. வண்டியில் அமர்ந்து இருக்கும் முகங்களை பாருங்கள். //
தகவலுக்கு நன்றி பாஸ்... சொந்தப்பெயரில் வந்திருக்கலாமே...
@ விக்கி உலகம்
// என்னப்பா காலையில லீவ போட்டுட்டு கெளம்பியாச்சா ஹி ஹி!! //
இப்போ எல்லாம் யாரும் காதலர் தினத்தன்று வெளியே போறதில்லை... போலீஸ் தொல்லை, சிவா சேனா குண்டர்கள் இந்தமாதிரி நிறைய தொல்லை இருக்கு... தவிர எங்க போனாலும் கூட்டம் அதிகமா இருக்கு... நான் மூணு நாளைக்கு முன்னாடியே கொண்டாடியாச்சு...
@ ராஜகோபால்
// கவுண்டமணி ராக்ஸ் கலக்குங்க //
அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க...
@ Arun Prasath
// அந்த போட்டோ ஆப்ரிக்கான்னு நெனைக்கறேன் தல //
தகவலுக்கு நன்றி தல...
@ Jayadev Das
// செர்ந்தான்ச்சு, கவுண்டமணி அண்ணன்னா நமக்கு உசுருங்கன்னா! //
தலைவரை பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா என்ன...???
// தெரியாது, பார்க்கலாமுன்னு இருக்கேன். //
பார்த்தே தீர வேண்டிய படமுங்கோ...
// [இந்தப் படத்தை உல்டா பண்ணித்தான் டாக்குடர் விஜய், சிம்ரன் வச்சு ஒரு படம் வந்துச்சு, தெரியுமா? //
பிரியமானவளே...???
// முன்பு, ராகினிஸ்ரீ ன்னு ஒரு மாமி வந்தாங்களே தெரியுமா? அவங்கதான் நமக்கு ரொம்ப பிடிச்ச பிகர், நடுவர்கள் எல்லாம், நீங்க இந்த dress- ல ரொம்ப அழகா இருக்கீங்கன்னு appreciation பண்ண ஆரம்பிச்சுட்டாங்க! ஹி...ஹி...ஹி... //
அடடே... நான் பார்த்ததில்லையே...
// எங்க ஊரில் கூட தண்ணீர் கால் லிட்டர் கூட குடிக்க முடியாத ஆளுங்க, கள் என்றால் இரண்டு லிட்டர் வேண்டுமானாலும் குடிப்பார்கள். ஹா..ஹா..ஹா.. //
அப்படிப்பட்ட உற்சாக பானமல்லவா அது...
பக்கம் பக்கமா பின்னூட்டம் போடுறீங்க... ஒரு வலைப்பூ ஆரம்பிங்கன்னு சொன்னா கேக்குறீங்களா...
@ சேட்டைக்காரன்
// பெஸ்ட் தமிழ் காதல் திரைப்படங்களைப் பத்தியும் எழுதுங்க...! //
முன்னாடியே சொல்லி இருந்தா போன வாரமே தொடர்பதிவு ஆரம்பிச்சிருக்கலாம்...
// பெரிய லிஸ்ட், அஞ்சு தேர்ந்தெடுக்கிறது கஷ்டம்... //
அது மட்டும் இல்லாம, ரசனை ஒவ்வொருவருக்கும் நிறைய மாறுபடும்...
@ மாத்தி யோசி
// நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க ) //
அடிக்கடி இதையே சொல்றீங்க... லாஸ்ட் வார்னிங்... படுவா பிச்சுபுடுவேன் பிச்சி :)
@ N.H.பிரசாத்
// காதலர் தின Special அருமை Mr. பிரபா. //
இந்த Mr எல்லாம் வேணாங்கண்ணா...
@ நா.மணிவண்ணன்
// நா நேத்து நைட்டே கொண்டாடிட்டேங்க //
இங்கேயும் நேத்து நைட் அதேதான் நடந்தது... ஆனா காதலர் தினத்துக்காக அல்ல...
// பிரபா நேத்து நீங்க கால் பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன் //
தப்பா எடுத்துக்காதீங்க... நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்... யார்கிட்டயும் அவ்வளவு ஈசியா பேசமாட்டேன்... இருந்தாலும் கூடிய விரைவில் உங்களோடு பேசுவேன்... அடுத்த பதிவர் பேட்டி உங்ககிட்ட தான்...
@ ! சிவகுமார் !
// ‘வெள்ளை வெளேர்’ தமன்னா நற்பணி இயக்கம் //
அது ஜஸ்ட் க்ரீம் யா...
@ ரஹீம் கஸாலி
// இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ் //
கண்டிப்பா வந்துடறேன்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// என்ன மாடரேசனைத் தூக்கியாச்சா? //
அண்ணே... பப்ளிக் பப்ளிக்...
// அப்படியே உங்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள் (உண்டுதானே?) //
உண்டுதான்... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
யக்கா மக இந்துவுக்கு லெட்டர் எழுதனும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு...?
@ வந்தியத்தேவன்
// நாங்கள் எல்லாம் உங்களின் முதல் பராவில் குறிப்பிட்ட யூத்துகள் பேச்சுலர் லைவ் தான் பெஸ்ட் //
வயிற்றெரிச்சல்...
// விஜய் டிவி பொலிடிக்ஸ் தமிழ்நாடு அரசியலைவிட கேவலம். //
இது வேறயா..? வெளங்கிடும்...
@ பார்வையாளன்
// தமிழில் டாப் ஃபைவ் ரொமாண்டிக் படங்களை உங்கள் பார்வையில் சொல்லியிருக்கலாம் //
அது பெரிய ப்ராசஸ் தல... எல்லாப் படத்தையும் பார்க்கணுமே...
@ கார்த்தி
// அந்தப்படம் மாதிரி பல படங்கள் இந்தியாவிலிருந்து வர பாத்திருக்கிறேன் //
இது எனக்கு புதிய தகவல்... படத்தோட பெயரை சொன்னா நல்லா இருக்குமே...
வழமைபோலவே கிக்குதான்.. அந்த புகைப்படம் சூப்பர்...
காதலர் தின ஸ்பெசல்ல சரக்கு கம்மியாயிருக்கு.
photo super.
தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நண்பரே....பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களையும், வாக்குகளையும் தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/1-tuesday-in-valaichcharamrahim-gazali.html
14ம் தேதி பிஸி.. நேத்தி பதிவுல பிஸி.. இன்னைக்கு தான் எட்டி பாக்க முடிஞ்சுது..
என்ன எழுதியிருக்கீங்க...
ஓ இட்ஸ் மீ.. ரொம்ப தேங்கஸ்..
நான் அந்த வலைப்பூவில் அதிகமாக பதிவு போடாததுக்கு காரணம் என்னனா நான் பிரபாகரன், சி.பி., இல்ல பாருங்க.. உங்க அளவுக்கு எனக்கு மூளையில்லீங்க.. நாலு வலைப்பூல மூணுல தொடர்ந்து பதிவு போடுறன்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவு போட நினச்சாலும் நடுவுல இந்த காதலர் தினம் அது இதுன்னு வந்து இடஞ்சல் கொடுக்குது..
அப்பரம் ரசிகர் மன்றத்துல சேந்தாச்சு.!! அப்பரம் என்ன எல்லார்டயும் போய் உங்க டகால்டி வேலைய காட்ட வேண்டியதுதானே.!!
@ தம்பி கூர்மதியன்
// 14ம் தேதி பிஸி.. //
ஆஹா... அந்த பொண்ணுக்கு ஓகே சொல்லிட்டீங்களா... நடக்கட்டும் நடக்கட்டும்... எல்லாம் சுபமாக முடிய எனது வாழ்த்துக்கள்...
// நான் அந்த வலைப்பூவில் அதிகமாக பதிவு போடாததுக்கு காரணம் என்னனா நான் பிரபாகரன், சி.பி., இல்ல பாருங்க.. உங்க அளவுக்கு எனக்கு மூளையில்லீங்க.. //
இது ஏதோ ஊமைக்குத்து மாதிரி இருக்கே...
// அப்பரம் ரசிகர் மன்றத்துல சேந்தாச்சு.!! அப்பரம் என்ன எல்லார்டயும் போய் உங்க டகால்டி வேலைய காட்ட வேண்டியதுதானே.!! //
நாளைக்கு பாருங்க நம்ம டக்கால்ட்டி வேலையை...
Post a Comment