வணக்கம் மக்களே...
என்னுடைய எதிர்பார்ப்பு லிஸ்டிலேயே இல்லாத படம். நேற்று மாலை வரை படம் பார்க்கும் எண்ணமே கிடையாது. திடீரென, பார்த்தால் என்ன என்றொரு எண்ணம் தோன்ற திரையரங்கிற்கு நடையை கட்டினேன். பெரிய வரவேற்பெல்லாம் இல்லை. பெரிய நடிகர்கள் படமென்றால் சோறுதண்ணி இல்லாமல் திரையரங்கம் முன்பு காத்துக்கிடக்கும் கூட்டம் எங்கே போனதென்று தெரியவில்லை. மு.க.அழகிரியின் திரையரங்கினில் அடிதடி இல்லாமல் டிக்கட் கிடைத்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பாதி அரங்கம் மட்டுமே நிரம்பியிருந்தது.
கதைச்சுருக்கம்
நகரில் முக்கியமான பகுதிகளில் அட்டைப்பெட்டியில் வைத்து மூடப்பட்ட நிலையில் வெட்டப்பட்ட மானிட கைகள் கிடைக்கின்றன. வழக்கு சி.பி.ஐ துறையில் பணிபுரியும் சேரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு உதவியாக ஒரு இளைஞனும் (நடிகரின் பெயர் தெரியவில்லை... ஆனால் கலைஞரின் இளைஞன் அல்ல...) தீபாஷாவும் வருகின்றனர். தொடர்ச்சியாக இப்படிப்பட்ட சம்பவங்கள் நகரில் நடைபெற அதை துப்பு துலக்க ஆரம்பித்தால் மர்மம் நீள்கிறது. இதுதவிர்த்து, தங்கையை தொலைத்துவிட்டு சேரன் தவிப்பதாக ஒரு கிளைக்கதை. தொலைந்துபோனவர் கிடைத்தாரா...? அவர் தொலைந்து போனதற்கும் கைகள் வெட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும் வழக்கிற்கும் என்ன சம்பந்தம்...? இன்ன பிற மர்ம முடிச்சுக்களை இரண்டாம் பாதி அவிழ்க்கிறது.
அதிகம் பேசாத, வாழ்க்கையின் வழியில் பல வலிகளை கடந்த மனிதராக சேரன் பிரமாதமாக நடித்திருக்கிறார். தனது பணியில் நேர்மையா...? தங்கையின் மீதுகொண்ட பாசமா...? என்று பரிதவிக்கும் காட்சியில் நேர்த்தியான நடிப்பு. வழமையான மிஷ்கின் படநாயகனாக தலைகுனிந்தபடி வரும் காட்சிகள் மட்டும் எரிச்சலூட்டுகின்றன.
ஹி.. ஹி... பேண்ட் சட்டை போட்ட படம் கிடைக்கவில்லை... |
தீபாஷா, பேண்ட் சட்டை அணிந்த பூவாக மலர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கொஞ்சம் வித்தியாசமான நாயகி கேரக்டர். நாயகியிடம் போலீஸ் வேடத்திற்குரிய விறைப்புத்தனம் மட்டும் மிஸ்ஸிங். மற்றபடி, அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார். நாயகியை லூசுப்பென்னாக காட்டாததற்க்காகவே ஹாட்ஸ் ஆப் டூ மிஷ்கின்.
லட்சுமி ராமகிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், ஜெயபிரகாஷ், மாணிக்கவிநாயகம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு தூணாக விளங்குவதே இந்த மற்றும் பலரின் நடிப்புதான். இவர்களின் பாத்திர படைப்பு, நடிப்பு போன்றவற்றை விவரித்தால் படத்தின் உயிர்நாடியையே அறுத்தது போல் ஆகிவிடும். மேலே இருக்கும் ஸ்டில்லை பார்த்து நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள். மற்றவைகளை திரையரங்கம் சென்று பாருங்கள்.
படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அது என்ன பாடலென்று உங்களுக்கே தெரியும். அதைப் பற்றிய எனது எண்ணங்கள் அடுத்த பத்தியில்... கே என்றவர் இசையமைத்திருக்கிறார். பிண்ணனி இசை காதுகளையும் மனதையும் உறுத்தாமல் அருமையாக அவரது கடமையை செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் இடத்தில் பிண்ணனி இசை பிரமாதம். அதுமட்டுமில்லாமல் மழை பெய்யும் சத்தம், கார் கதவை மூடும் சத்தம் என்று ஒலிப்பதிவில் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
தமிழகத்து ஷகிரா – நீத்து
எப்பேற்பட்ட மனிதனையும் ஒரு ஆட்டம் ஆடவைக்கும் குத்தாட்டப் பாடல், கன்னித்தீவு பொண்ணா. நீத்து சந்திரா தமிழகத்து ஷகிரா என்று பெயரெடுக்காமல் விடமாட்டார் போல தெரிகிறது. ஆனால் நாயகியாக வலம்வரத் தகுதி உள்ள ஒருவர் குத்தாட்டப் பாடல் நடிகையாக ஓரம்கட்டப் பட்டுவிடுவாரோ என்று நினைத்தால் பதறுகிறது நெஞ்சம். மிஷ்கின் அவருடைய போதைக்கு அமீரையும் சாருவையும் ஊறுகாயாக பயன்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சாரு என்றால் யாருன்னே தெரியவில்லை என்பதுதான் உச்சக்கட்ட காமெடி.
மிஷ்கின் படத்தில் ஒளிப்பதிவு பற்றி சொல்லத் தேவையில்லை. அதிலும் நந்தலாலா படத்தில் காட்டியது போலவே “அந்தப்பக்கம் என்ன இருக்குதுன்னு சீக்கிரமா காட்டி தொலைங்களேன்டா...” என்று சொல்லவைக்கிறது கேமரா கோணங்கள்.
வசனங்கள் படத்தில் குறைவு எனினும் மனதிற்கு நிறைவு. சில வசனங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. சில இடங்களில் என்னையே அறியாமல் எனது கைகள் க்ளாப் செய்துக்கொண்டிருந்தன.
படத்தின் ப்ளஸ்:
- தீபாஷாவுக்கும் சேரனுக்கு இடையே காதலை சொருகி அவர்களுக்கு வெளிநாட்டு தெருக்களில் ரெண்டு டூயட் வைக்காதது.
- முக்கால்வாசி படம் முடியும் வரையில் சஸ்பென்ஸ் காட்டியது.
- இவரா இப்படி நடித்தார்...? என்று அதிசயிக்க வைக்கும் அளவிற்கு சில நடிகர்களின் அற்பணிப்பான நடிப்பு.
- உலகப்படத்தை அப்பட்டமாக காப்பி அடிக்காமல், முக்கிய கருவை மட்டும் வைத்துக்கொண்டு நன்றாக தமிழ்ப்படுத்தியிருக்கிறார். (அட, நாதாரிதனத்தை நாசூக்கா பண்ணியிருக்கிறார்ன்னு சொல்ல வருகிறேன்...)
படத்தின் மைனஸ்:
- மிஷ்கின் இனியாவது சாருவுடன் நட்பு பாராட்டாமல் இருந்தால் வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலாம்.
- பல காட்சிகள் இயக்குனரின் முந்தய படங்களை நினைவூட்டுகின்றன, குறிப்பாக சண்டைக்காட்சிகள் அப்படியே அஞ்சாதே ஸ்டைல்.
- படத்தின் ப்ளஸ் என்று கூறிய அதே சஸ்பென்ஸ். கீழ்த்தட்டு ரசிகர்கள் என்னடா படம் எடுக்குறானுங்க என்று கெட்டவார்த்தை கமெண்ட் அடிக்கிறார்கள்.
- படத்தை நிச்சயமாக குடும்பத்துடன் போய் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கோரமான காட்சிகள்.
எனக்குப் பிடித்த காட்சி:
மருத்துவம் படித்த ஒருவர் குண்டடிப்பட்டு சாகக்கிடக்கும் நிலையில் தனது உடலில் எந்தெந்த பாகத்தில் குண்டு பாய்ந்திருக்கிறது என்று விளக்கி, தான் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறும் காட்சி. தவிர்த்து அந்த ஒட்டுமொத்த காட்சியுமே அருமை.
வெர்டிக்ட்:
இயக்குனர் அஞ்சாதே படத்தின் வெற்றி டெம்ப்ளேட்டை வைத்துக்கொண்டு அதற்குள் வேறொரு கதையை கச்சிதமாக பொருத்தியிருக்கிறார். நிச்சயம் இத்திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு மணிமகுடம்தான். ஆனால், கதை இதுதான் என்று தெரிந்துவிட்டால் அதிகம் ரசிக்க முடியாது. ஆகவே மக்களே, கதையை முழுமையாக எழுதிவைக்கும் சிலருடைய விமர்சனங்களை படிக்காமல் கூடிய மட்டும் வெண்திரையில் பாருங்கள்.
டிஸ்கி 1: இத்திரைப்படத்தின் ஒரிஜினல் உலகப்பட பதிப்பான “Memories of Murder” குறித்த பதிவை மறுபடி ஒருமுறை படிக்க இங்கே கிளிக்கவும்.
டிஸ்கி 2: “அட்ராசக்க” சிபி, வழக்கம் போல அவரது ஸ்டைலில் ஆ.வி மார்க் 42 என்றும் குமுதம் ரேட்டிங் ஓகே என்றும் போட்டிருந்தார். அதில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. என்னுடைய கணிப்பு,
ஆனந்த விகடன் மார்க்: 45
குமுதம் ரேட்டிங்: நன்று
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
92 comments:
எங்களுக்காக முதல் ஷோவே பார்த்து விமர்சனம் தந்ததற்கு நன்றி பிரபா
45 ... அடேங்கப்பா.... பாக்கலாம்
விமர்சனம் நல்லாயிருக்கு பிரபாகரன்..
படம் நல்லாயிருக்குன்னு சொன்னாலும்.. பார்க்கனும்னு தோனல.. பார்க்கலாம் முடிந்தால்..
அப்போ படம் பார்க்கலாம்....!
//படத்தை நிச்சயமாக குடும்பத்துடன் போய் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கோரமான காட்சிகள்.
//
avarum maathi solli irukkiraar
பார்த்துடுவோம் பாஸ் :)
அப்ப பாக்கலாம்னு சொல்லுங்க..
விமர்சனம் நல்லாயிருக்கு பிரபாகரன்..
ஞாயிறு அன்று பார்க்க வேண்டும்
நா இன்னைக்கி நைட் ஷோ போறேன்
படம் பார்க்க நேரம் இல்லை.. தங்களைப்பார்த்து தங்கள் தளத்திலுள்ளதைப்போல் ப்ளாக் கவுண்டரை நானும் சேர்த்தேன், நாங்களும் பேமஸ் ஆகணும்ல...
rightu
என்றும் அன்புடன் ஃ பிலாசஃபி விமர்சனம் படத்தை பார்க்கசொல்லுது...
இன்னொரு பதிவுலே நம்ம சி.பி.எஸ். எழுதின பின்னூட்டத்தையே கொஞ்சம் உட்டாலக்கிடி பண்ணுறேன். (தல கோச்சுக்க மாட்டார்னு தெரியும்!)
சி.பி.செந்தில்குமார் கூட சேராதீங்கன்னா கேட்குறாங்களா? இவரும் சினிமா விமர்சனம் சூட்டோட சூடா எழுத ஆரம்பிச்சிட்டாரு பாருங்க!
பார்க்கிற ஆசையைத் தூண்டுனதுக்கு நன்றி! :-)
அப்போ, படம் பாக்கலாம்னு சொல்லறீங்க...
நல்ல படங்களை வரவேற்போம் ! ரொம்ப நடுநிலையான விமர்சனம் ஆனால் என்னோட கணிப்பு
குமுதத்தில் கண்டிப்பாக நன்று என்று போட மாட்டார்கள் . ஆ. வி என் எதிர்பார்ப்பு 43 .
நண்பரென்பதால் சொல்கிறேன். பல வரிகளில் அதிகப்பிரசங்கித்தனம்.!
indriravu padam pakka poren
- //தீபாஷாவுக்கும் சேரனுக்கு இடையே காதலை சொருகி அவர்களுக்கு வெளிநாட்டு தெருக்களில் ரெண்டு டூயட் வைக்காதது//
இந்த வரி அருமை நண்பரே !விமர்சனமும் அருமை
ஆ.வி-யில் யாருடைய கணிப்பு சரியாக வருகிறதென்று பார்ப்போம்
//பெரிய நடிகர்கள் படமென்றால் சோறுதண்ணி இல்லாமல் திரையரங்கம் முன்பு காத்துக்கிடக்கும் கூட்டம் எங்கே போனதென்று தெரியவில்லை//
அதுதான் பெரிய நடிகர்கள் படத்தில் இல்லையின்னு தெரியிதெல்ல, பிறகேன் இந்த கேள்வி? :-))
நீங்க என்னத்தை சொன்னாலும் டீவீ டில கூட இந்த படத்தை பாக்க நான் தயாரில்லை, அப்புறம் இந்த படத்தை மூன்றாம் தர படமென்று மிஸ்கினே சொல்லுவாரு.
நண்பரே உங்க விமர்சனத்தை ஆட்டைய போட்டுட்டாய்ங்களா?
http://thiruttu.blogspot.com/2011/02/blog-post_3219.html
wanna watch this !!!
பிரபாகரனின் பதிவை திருடியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
இந்த திருட்டு யாரையும் காயபடுத்த அல்ல ப்ளாக் பேரே திருட்டுன்னு தானே வைச்சுருக்கேன்
ஒருத்தன் ரஜினி வேஷம் போட்டு நாலு பேரு கைதட்டினா
ரஜினி என்ன கொபபடவா செய்றாரு
இருந்தாலும் குழந்தை பிள்ளையை மன்னிச்சிக்கோங்க
முதல் பாதி..நன்று..
இரண்டாம் பாதி பக்கா டிராமா..மிஷ்கின் அங்கு ரொம்ப தடுமாறி இருக்கார்..
விகடனில் நாற்பது...குமுதத்தில் நன்று....
very nice review. Kudos!
நான் இன்னும் பாக்கவில்லை. ஆனால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
விமர்சனம் நல்லாயிருக்கு பிரபாகரன்..
அப்ப பாத்துட வேண்டியது தான் ,எதையும் அதிகம் சொல்லாமல் குறிப்புகளாக சொல்லி இருக்கீங்க ,நான் இனி வேறு விமர்சனம் படிக்க போவது இல்லை ,எனக்கு இந்த கதைக்கு சேரன் தேர்வு சரியா என்று ஒரு சந்தேகம் இருந்தது, பாத்துட்டு சொல்லுறேன்
நல்லா இருக்கும் போல,இங்கு மும்பையில் படம் வெளியாகவில்லை,அதனால் பார்க்க முடியாது,விமர்சனம் நன்று,அதுவும் படம் வெளியான அன்றே விமர்சனம்,கலக்க்ட்டீங்க தல
Hi Praba, Nice review. But one thing. Could you tell me what are same among Memories of murder and yutham sei. I dont think there are similarity between these two movies except genre (Investigation). Still I believe you have seen memories of murder.
Thanks,
Ramesh
அஞ்சாதேயில் அசத்தியிருந்தார். கண்டிப்பாக பார்க்க வேண்டியது தான்! கதையை சொல்லாமல் விமர்சனம் எழுதியதற்கு மிக்க நன்றி!
சினிமா ரசிகர்கள் எதுக்கு சாருவை பத்தி தெரிஞ்சுக்கனும்..? நீங்க சொல்றதை பாத்தா எந்த புதுமுகம் நடித்த படத்திற்கும் அவர்களை பற்றி தெரிந்துகொண்டுதான் பார்க்கணும் போலிருக்கே..
ஓஹ..நீங்கள்தான் திரைப் பட விமர்சகரா !!!
வாழ்த்துக்கள் பார்த்து எழுதுங்கப்பு விகடன் குழுவினர் காப்பி அடிச்சிரே போறானுங்க.
விமர்சனம் நல்லாயிருக்கு....
அப்ப படம் நல்லா இருக்குன்னு சொல்றீங்க.....சரி அப்படியே ரெண்டு டிக்கட்டு எடுத்து வைங்க வாரேன்.............
>>> துணை இயக்குனர்களையும், இன்றைய இளைஞர்களையும் படு கேவலமாக மிஸ்கின் பேசியது, போலீஸ் கதை, மஞ்சப்புடவை பாட்டு, "கிகுஜிரோ" திருட்டு, சித்திரம் பேசுதடி-அஞ்சாதே ஹாங் ஓவரில் இருந்து வெளியே வராது இருத்தல்...ஆகிய காரணங்களுக்காக இப்படம் பார்க்க செல்லவில்லை. தங்களுக்கே அது தெரியும். மிஸ்கின் மீது இருக்கும் கோபம் என்று தணியும் என்று தெரியாது. மேற்சொன்னவற்றை தவிர்த்துவிட்டு அவர் படம் எடுக்கும் நாள் வந்தால் கண்டிப்பாக அவர் படங்களை பார்ப்பேன்.
// பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சாரு என்றால் யாருன்னே தெரியவில்லை என்பதுதான் உச்சக்கட்ட காமெடி.//
தயவு செய்து இந்த வரிகளை நீக்கி விடுங்கள். உங்கள் நன்மைக்காக சொல்கிறேன்.
சாருவும், ஸ்பெக்ட்ரமும் ஒன்னு தான். இணையத்தில் மட்டுமே பிரபலம்!
ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கான நல்ல விமர்சனம். நீங்கள் சொன்னது போல் மற்ற விமர்சனங்களைப் படித்து விட்டு, படம் பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.
>>>வழமையான மிஷ்கின் படநாயகனாக தலைகுனிந்தபடி வரும் காட்சிகள் மட்டும் எரிச்சலூட்டுகின்றன.
suupar சூப்பர்
>>>பிண்ணனி இசை பிரமாதம். அதுமட்டுமில்லாமல் மழை பெய்யும் சத்தம், கார் கதவை மூடும் சத்தம் என்று ஒலிப்பதிவில் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
100% கரெக்ட்
>>>ஆகவே மக்களே, கதையை முழுமையாக எழுதிவைக்கும் சிலருடைய விமர்சனங்களை படிக்காமல் கூடிய மட்டும் வெண்திரையில் பாருங்கள்.
ஆப்பு?
>>>“அட்ராசக்க” சிபி, வழக்கம் போல அவரது ஸ்டைலில் ஆ.வி மார்க் 42 என்றும் குமுதம் ரேட்டிங் ஓகே என்றும் போட்டிருந்தார். அதில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. என்னுடைய கணிப்பு,
ஆனந்த விகடன் மார்க்: 45
குமுதம் ரேட்டிங்: நன்று
சி பி யை கேவலப்படுத்திய பிரபா.. பதிவுலகில் பரபரப்பு.. ( யாரும் நம்மளை கண்டுக்கலைன்னாலும் இப்படி பீதியை கிளப்பிடனும்.. ஹா ஹா )
>>>சேட்டைக்காரன் said...
இன்னொரு பதிவுலே நம்ம சி.பி.எஸ். எழுதின பின்னூட்டத்தையே கொஞ்சம் உட்டாலக்கிடி பண்ணுறேன். (தல கோச்சுக்க மாட்டார்னு தெரியும்!)
சி.பி.செந்தில்குமார் கூட சேராதீங்கன்னா கேட்குறாங்களா? இவரும் சினிமா விமர்சனம் சூட்டோட சூடா எழுத ஆரம்பிச்சிட்டாரு பாருங்க!
பார்க்கிற ஆசையைத் தூண்டுனதுக்கு நன்றி! :-)
ஹா ஹா சேட்டை அண்ணே.. செம நக்கல்... அவரு சென்னை நான் சென்னிமலை.. இன்னும்நேர்ல கூட சந்திச்சதில்லை..
படம் மெமரிஸ் ஆப் மர்டர் மாதிரி இருக்கா இல்லையான்னு நீங்கள் சொல்லவேயில்லையே??
நாளைதான் என்னால் இந்த படத்தைப் பார்க்க முடியும்.
நண்பரே, எனது சினி தளத்தை பழைய தளத்தோடு இணைக்கவுள்ளேன், முகவரி : http://aadav.blogspot.com/ ஆகவே அங்கே வருகை புரியவும்.
பார்த்துடுவோம் பாஸ்! :-)
மிஷ்கின் இனியாவது சாருவுடன் நட்பு பாராட்டாமல் இருந்தால் வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலாம்."
wrong view...
if he lose his frindship with charu, next film will not be good as this
good
@ ப்ரீதம் கிருஷ்ணா, Arun Prasath, பதிவுலகில் பாபு, பன்னிக்குட்டி ராம்சாமி, எல் கே, இராமசாமி, சாமக்கோடங்கி, Speed Master, நா.மணிவண்ணன், வசந்தா நடேசன், சங்கர் நாராயண் @ Cable Sankar, ஆகாயமனிதன்.., சேட்டைக்காரன், கோவை ஆவி, ஜி.ராஜ்மோகன், ஆதிமூலகிருஷ்ணன், HJ, சி.பிரேம் குமார், ரஹீம் கஸாலி, எப்பூடி.., பாலா, Jhona, பாரத்... பாரதி..., திருடன், Karthik, Chitra, கார்த்தி, சே.குமார், dr suneel krishnan, டெனிம், இரமேஷ் இராமலிங்கம், bandhu, A.R.AMAL, அந்நியன் 2, தோழி பிரஷா, விக்கி உலகம், ! சிவகுமார் !, கொக்கரகோ..., சி.பி.செந்தில்குமார், ஆதவா, ஜீ..., பார்வையாளன், Geetha6
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ ப்ரீதம் கிருஷ்ணா
// எங்களுக்காக முதல் ஷோவே பார்த்து விமர்சனம் தந்ததற்கு நன்றி பிரபா //
அந்த பொதுநலத்தில் நான் படம் பார்த்தே ஆகவேண்டுமென்ற சுயநலமும் இருக்கு பிரதர்...
@ பதிவுலகில் பாபு
// படம் நல்லாயிருக்குன்னு சொன்னாலும்.. பார்க்கனும்னு தோனல.. //
நீங்களும் உலகப்படங்கள் மட்டும்தான் பார்க்கணும்னு ஏதாவது கொள்கை வச்சிருக்கீங்களா...?
@ வசந்தா நடேசன்
// தங்களைப்பார்த்து தங்கள் தளத்திலுள்ளதைப்போல் ப்ளாக் கவுண்டரை நானும் சேர்த்தேன், நாங்களும் பேமஸ் ஆகணும்ல... //
நல்லது... ஓட்டுப்பட்டையை செக்கச் சொன்னேனே... என்ன ஆச்சு...?
@ சேட்டைக்காரன்
// சி.பி.செந்தில்குமார் கூட சேராதீங்கன்னா கேட்குறாங்களா? இவரும் சினிமா விமர்சனம் சூட்டோட சூடா எழுத ஆரம்பிச்சிட்டாரு பாருங்க! //
என்ன சேட்டை இப்படி சொல்லிட்டீங்க... 2011 ஆரம்பிச்சதுல இருந்து அவர் இதுவரைக்கும் 9 தமிழ்ப்படங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கார்... நான் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு... அவருடைய ரேஞ்சே வேற...
@ ஜி.ராஜ்மோகன்
// ரொம்ப நடுநிலையான விமர்சனம் ஆனால் என்னோட கணிப்பு
குமுதத்தில் கண்டிப்பாக நன்று என்று போட மாட்டார்கள் . ஆ. வி என் எதிர்பார்ப்பு 43 . //
உங்களையும் இந்த ஆரோக்கியமான போட்டியில் சேர்த்துக்கொள்கிறோம்... யாருடைய கணிப்பு சரியாக வருகிறது என்று பார்ப்போம்...
@ ஆதிமூலகிருஷ்ணன்
// பல வரிகளில் அதிகப்பிரசங்கித்தனம்.! //
எந்தெந்த வரிகள் என்று குறிப்பிட்டுச் சொன்னால் விளக்கமளிக்க தயாராக இருக்கிறேன்...
@ எப்பூடி..
// அதுதான் பெரிய நடிகர்கள் படத்தில் இல்லையின்னு தெரியிதெல்ல, பிறகேன் இந்த கேள்வி? :-)) //
பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு பெரிய இயக்குனர்களுக்கு கிடைப்பதில்லையே என்றொரு ஆதங்கம் தான்...
// நீங்க என்னத்தை சொன்னாலும் டீவீ டில கூட இந்த படத்தை பாக்க நான் தயாரில்லை, அப்புறம் இந்த படத்தை மூன்றாம் தர படமென்று மிஸ்கினே சொல்லுவாரு. //
மிஷ்கின் மேல இருக்குற கோபம் இன்னும் குறையலையா...
@ பாலா
// நண்பரே உங்க விமர்சனத்தை ஆட்டைய போட்டுட்டாய்ங்களா? //
அவர் பதிவு திருட்டின் சீரியஸ்நெஸ் தெரியாமல் செய்திருக்கிறார்... இப்போது நன்றி என்று போட்டு லிங்க் கொடுத்திருக்கிறார்... அது போதுமே...
@ திருடன்
// பிரபாகரனின் பதிவை திருடியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் //
இதெல்லாம் அவசியமற்றது நண்பா... அதான் மெயில் அனுப்பிட்டீங்களே... அதுவே போதும்...
// இந்த திருட்டு யாரையும் காயபடுத்த அல்ல ப்ளாக் பேரே திருட்டுன்னு தானே வைச்சுருக்கேன் //
நீங்கள் செய்யும் விஷயம் தவறல்ல... ஆனால் செய்யும் முறைதான் தவறு... சம்பந்தப்பட்ட பதிவர்களிடம் முறைப்படி அனுமதி வாங்கி உங்களுடைய இடுகையின் இறுதியில் நன்றி தெரிவித்து லிங்க் கொடுத்து வெளியிடுங்கள்...
// ஒருத்தன் ரஜினி வேஷம் போட்டு நாலு பேரு கைதட்டினா
ரஜினி என்ன கொபபடவா செய்றாரு //
இது தவறான உதாரணம்... நீங்கள் செய்தது அப்படிப்பட்டதல்ல... ரஜினி நடிச்ச படத்தோட திருட்டு டிவிடி தயாரிச்சு சப்ளை பண்ணது மாதிரி...
@ Karthik
// முதல் பாதி..நன்று..
இரண்டாம் பாதி பக்கா டிராமா..மிஷ்கின் அங்கு ரொம்ப தடுமாறி இருக்கார்.. //
எனக்கென்னவோ இரண்டாம் பாதி தான் அதிகம் பிடித்திருந்தது...
// விகடனில் நாற்பது...குமுதத்தில் நன்று.... //
வாங்க... உங்களையும் ஆட்டத்துல சேர்த்துக்குறோம்...
@ dr suneel krishnan
// எதையும் அதிகம் சொல்லாமல் குறிப்புகளாக சொல்லி இருக்கீங்க ,நான் இனி வேறு விமர்சனம் படிக்க போவது இல்லை //
இதுபோன்ற பாராட்டு வரிகள் என்னை மென்மேலும் உற்சாகப்படுத்துகின்றன... உங்களுக்கு எனது ஸ்பெஷல் தேங்க்ஸ்...
@ டெனிம்
// இங்கு மும்பையில் படம் வெளியாகவில்லை,அதனால் பார்க்க முடியாது //
So sad... இருந்தாலும் பதிவுலகில் சிலர் முழுக்கதையையும் எழுதியிருக்காங்க... அங்கபோய் ஒரு எட்டு படிச்சிருங்க... படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடும் :)))
@ இரமேஷ் இராமலிங்கம்
// Could you tell me what are same among Memories of murder and yutham sei. I dont think there are similarity between these two movies except genre (Investigation). Still I believe you have seen memories of murder. //
ஒற்றுமைகள் மிகவும் குறைவே... நீங்கள் குறிப்பிட்டது போல புலனாய்வு பின்னணி... ஒரு உயரதிகாரி, அவருக்கு கீழ் நாயகன், அவருக்கு இரண்டு உதவியாளர்கள் என்ற கான்செப்ட்... நாயகி, காதல் இல்லாதது...
ஆனாலும் மூலக்கதை அங்கிருந்து சுட்டதே... மிஷ்கின் அதை லாவகமாக தமிழ்ப்படுத்தி இருக்கிறார்...
@ A.R.AMAL
// சினிமா ரசிகர்கள் எதுக்கு சாருவை பத்தி தெரிஞ்சுக்கனும்..? நீங்க சொல்றதை பாத்தா எந்த புதுமுகம் நடித்த படத்திற்கும் அவர்களை பற்றி தெரிந்துகொண்டுதான் பார்க்கணும் போலிருக்கே.. //
நீங்க அவரை ஒரு புதுமுக நடிகரா பாக்குறீங்க... நான் அவரை பிரபல எழுத்தாளரா பார்க்கிறேன்... பிரபல எழுத்தாளர் ஒருவரை சினிமா ரசிகர்கள் அறிந்திராதது ஒரு வித ஆதங்கத்தை ஏற்படுத்தியது...
@ அந்நியன் 2
// ஓஹ..நீங்கள்தான் திரைப் பட விமர்சகரா !!!
வாழ்த்துக்கள் பார்த்து எழுதுங்கப்பு விகடன் குழுவினர் காப்பி அடிச்சிரே போறானுங்க. //
இதுல ஏதோ ஊமைக்குத்து இருக்குறா மாதிரி தெரியுதே...
@ ! சிவகுமார் !
// மேற்சொன்னவற்றை தவிர்த்துவிட்டு அவர் படம் எடுக்கும் நாள் வந்தால் கண்டிப்பாக அவர் படங்களை பார்ப்பேன். //
அது கண்டிப்பாக வராது என்று எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது...
// தயவு செய்து இந்த வரிகளை நீக்கி விடுங்கள். உங்கள் நன்மைக்காக சொல்கிறேன். //
அதிலென்ன தவறு இருக்கிறது... உண்மையைத் தானே எழுதினேன்...
@ சி.பி.செந்தில்குமார்
// ஆப்பு? //
புரிஞ்சா சரி...
// சி பி யை கேவலப்படுத்திய பிரபா.. பதிவுலகில் பரபரப்பு.. //
யோவ்... ஏன்யா கத்துற...?
@ ஆதவா
// படம் மெமரிஸ் ஆப் மர்டர் மாதிரி இருக்கா இல்லையான்னு நீங்கள் சொல்லவேயில்லையே?? //
மெமரீஸ் ஆப் மர்டர் மாதிரி இல்லை... ஆனால் அஞ்சாதே மாதிரியே இருக்கு...
// நண்பரே, எனது சினி தளத்தை பழைய தளத்தோடு இணைக்கவுள்ளேன், முகவரி : http://aadav.blogspot.com/ ஆகவே அங்கே வருகை புரியவும். //
வந்துவிடுகிறேன்...
@ பார்வையாளன்
// wrong view...
if he lose his frindship with charu, next film will not be good as this //
நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்தான்னு அடம் பிடிக்கிறவர் கிட்ட நான் என்னத்த சொல்றது...
//மிஷ்கின் இனியாவது சாருவுடன் நட்பு பாராட்டாமல் இருந்தால் வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலா//
நண்பரே,
மிஸ்கின் சாருவுடன் நட்பு கொள்வதற்கு வேக நாட்கள் முன்பே இந்த கதை ரெடியாகிவிட்டது. ஆகையால் அதற்க்கும், இதற்கும் தொடர்பில்லை.
// இத்திரைப்படத்தின் ஒரிஜினல் உலகப்பட பதிப்பான“Memories of Murder” குறித்த பதிவை மறுபடி ஒருமுறை படிக்கஇங்கே கிளிக்கவும்//
அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் விளக்குங்களேன்?
கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - சமீபத்திய வார இதழ்களில் வந்த காமிக்ஸ் பற்றிய நிகழ்வுகள்
>>> >>> ரைட்டு. நேத்து பேசும்போது புரிஞ்சிருச்சி.
பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சாரு என்றால் யாருன்னே தெரியவில்லை என்பதுதான் உச்சக்கட்ட காமெடி ”
அல்ட்டிமேட் ரைட்டர் சாருவை தெரியவில்லை என்றால் அது டிராஜடி.. காமடி அல்ல....
தமிழ்மணத்தில் 3-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்
hai congrats. i expect u will come 2nd or 3rd.. தமிழ்மணத்தில் 3-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்
Tamizhmanathil 3rd rank vangiyulleerkal vazhthukal.
Ungaludaiya vimarsanathodu en vimarsanamum sila idangalil otthu pokirathu.ithu coincidence
naan vimarsanam podum varai entha yutham sei cinema vimarsanamum padikkala.
பிரபா படத்தை ஏன் குடும்பத்தோடு பாக்க முடியாதுன்னு சொன்னீங்க. இது ஒரு Adults only படம் அது குழந்தைகளுக்கு மட்டுந்தானே.. வயது வந்த பெண்ணோ மகளிரோ பார்த்தால் என்ன தப்பு என் கருத்து இதை பெண்கள் கண்டிப்பா பார்க்கணும் படத்தில் வரும் மிருகங்கள் நம் சமூகத்திலும் உண்டு.. My opinion பெண்களிடம் இப்படம் சிறு விழிப்புணர்வையாவது உண்டாக்கும்.
I agree with you in anantha vikatan and kumutham ratings
வன்முறை காட்சிகள் ரொம்ப அதிகமோ?
*****
மனைவியும் ஆம்லெட்டும்
உங்க புண்ணியத்தில படம் பாத்த திருப்தி.
பார்வையாளனை நான் கவனிச்சிட்டுத்தான் வர்றேன்... சாரு ஹேங் ஓவர் ரொம்ப அதிகமாத்தான் இருக்கு. தலைவரே! ஆழ்ந்த அனுதாபங்கள் :)))
என்னடா இப்படி சொல்றானேன்னு நெனைக்காதீங்க... ஒருநாள் புரியவரும்!
This movie is not an exact copy of memoirs of murder only the investigation type of story is similar in both the movies,then some of the rape scenes shown in thz movie are from takeshi mike movies inspiration especially the bondage scenes ,then plz watch LAST HOUSE ON THE LEFT movie it shows some similarity
@ King Viswa, ! சிவகுமார் !, பார்வையாளன், ரஹீம் கஸாலி, சி.பி.செந்தில்குமார், ஐத்ருஸ், தமிழ்வாசி - Prakash, சிவகுமாரன், விந்தைமனிதன், karthik
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ King Viswa
// நண்பரே,
மிஸ்கின் சாருவுடன் நட்பு கொள்வதற்கு வேக நாட்கள் முன்பே இந்த கதை ரெடியாகிவிட்டது. ஆகையால் அதற்க்கும், இதற்கும் தொடர்பில்லை. //
அப்படிங்களா... ஏதோ நல்லா இருந்தா சரி...
// அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் விளக்குங்களேன்? //
ஒற்றுமைகள் மிகவும் குறைவே... புலனாய்வு பின்னணி... ஒரு உயரதிகாரி, அவருக்கு கீழ் நாயகன், அவருக்கு இரண்டு உதவியாளர்கள் என்ற கான்செப்ட்... நாயகி, காதல் இல்லாதது...
ஆனாலும் மூலக்கதை அங்கிருந்து சுட்டதே... மிஷ்கின் அதை லாவகமாக தமிழ்ப்படுத்தி இருக்கிறார்...
@ பார்வையாளன்
// அல்ட்டிமேட் ரைட்டர் சாருவை தெரியவில்லை என்றால் அது டிராஜடி.. காமடி அல்ல.... //
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே...
@ ஐத்ருஸ்
// பிரபா படத்தை ஏன் குடும்பத்தோடு பாக்க முடியாதுன்னு சொன்னீங்க. இது ஒரு Adults only படம் அது குழந்தைகளுக்கு மட்டுந்தானே.. வயது வந்த பெண்ணோ மகளிரோ பார்த்தால் என்ன தப்பு என் கருத்து இதை பெண்கள் கண்டிப்பா பார்க்கணும் படத்தில் வரும் மிருகங்கள் நம் சமூகத்திலும் உண்டு.. My opinion பெண்களிடம் இப்படம் சிறு விழிப்புணர்வையாவது உண்டாக்கும். //
கண்டிப்பாக பெண்கள் பார்க்கலாம்... பிரசவத்தின் போது கொடுமையான வலியை தாங்கிக்கொள்ளக் கூடிய பெண்கள்... வன்முறை காட்சிகளை தாங்கிக்கொள்ள மாட்டார்களா என்ன...? ஆனால் மகள் தந்தையுடனோ, சகோதரனுடனோ சேர்ந்து திரையரங்கம் சென்று பார்க்க முடியாதென்று நினைக்கிறேன்... இதற்கு பெண்கள்தான் கருத்து சொல்லவேண்டும்...
@ karthik
// This movie is not an exact copy of memoirs of murder only the investigation type of story is similar in both the movies,then some of the rape scenes shown in thz movie are from takeshi mike movies inspiration especially the bondage scenes ,then plz watch LAST HOUSE ON THE LEFT movie it shows some similarity //
நிறைய உலகப்படங்களில் இருந்தும் ஒவ்வொரு காட்சி சுடப்பட்டிருப்பதாக அறிகிறேன்... no mercy, i saw the devil, old boy,the chaser இந்த படங்களில் இருந்தெல்லாம் சுட்டிருப்பதாக நண்பர் ஒருவர் பதிவில் எழுதியிருந்தார்...
//@ King Viswa
// நண்பரே,
மிஸ்கின் சாருவுடன் நட்பு கொள்வதற்கு வேக நாட்கள் முன்பே இந்த கதை ரெடியாகிவிட்டது. ஆகையால் அதற்க்கும், இதற்கும் தொடர்பில்லை. //
அப்படிங்களா... ஏதோ நல்லா இருந்தா சரி...//
அப்படியா, ஏதோ நீங்களும் நல்ல இருந்தா சரி. உங்களுக்கும் விஷயம் புரிஞ்சா சரி.
// அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் விளக்குங்களேன்? //
ஒற்றுமைகள் மிகவும் குறைவே... புலனாய்வு பின்னணி... ஒரு உயரதிகாரி, அவருக்கு கீழ் நாயகன், அவருக்கு இரண்டு உதவியாளர்கள் என்ற கான்செப்ட்... நாயகி, காதல் இல்லாதது...
ஆனாலும் மூலக்கதை அங்கிருந்து சுட்டதே... மிஷ்கின் அதை லாவகமாக தமிழ்ப்படுத்தி இருக்கிறார்..//
அப்படி பார்த்தால் இது மாதிரி என்னால் முன்னுத்தி எண்பத்தி நாலு தமிழ் படங்களையும், ஆயிரத்தி ஐநுத்தி நாற்பத்தி ஐந்து ஹிந்தி படங்களையும் சொல்ல முடியுமே? ஏதோ கூகுல் இலவசமாக கொடுக்குறான் என்பதற்காக பலரும் ஏதேதோ எழுதுவது போல நீங்களும் எழுதினால் எப்படி சார்? நேத்து இது மாதிரி பேஸ் புக்கில் எழுதி சாரு வாங்கி கட்டிக்கொண்டார்.
//நிறைய உலகப்படங்களில் இருந்தும் ஒவ்வொரு காட்சி சுடப்பட்டிருப்பதாக அறிகிறேன்... no mercy, i saw the devil, old boy,the chaser இந்த படங்களில் இருந்தெல்லாம் சுட்டிருப்பதாக நண்பர் ஒருவர் பதிவில் எழுதியிருந்தார்.//
தயவு செய்து அந்த நண்பரை போய் முதலில் யுத்தம் செய் படத்தையும், அதற்க்கு பின்பு நீங்கள் சொன்ன அந்த படங்களையும் பார்க்க சொல்லுங்கள்.
@ King Viswa
அடடே... நீங்கள் பதிலுக்காக காத்திருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை... தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்...
// அப்படி பார்த்தால் இது மாதிரி என்னால் முன்னுத்தி எண்பத்தி நாலு தமிழ் படங்களையும், ஆயிரத்தி ஐநுத்தி நாற்பத்தி ஐந்து ஹிந்தி படங்களையும் சொல்ல முடியுமே? //
மிகவும் சரியான கருத்து தான்...
// ஏதோ கூகுல் இலவசமாக கொடுக்குறான் என்பதற்காக பலரும் ஏதேதோ எழுதுவது போல நீங்களும் எழுதினால் எப்படி சார்? //
படம் வெளியாவதற்கு முன்பு பலரும் சொல்லக் கேள்விப்பட்டு அந்த இடுகைக்கு யுத்தம் செய் - memories of murder என்று பெயர் சூட்டினேன்... மற்றபடி வேறொன்றும் உள்குத்து இல்லை... மிஷ்கின் இத்திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பு memories of murder பார்த்திருக்கிறார் என்பது மட்டும் உறுதி... அது காப்பி இல்லை என்றாலும் inspiration அல்லது பாதிப்பு என்று கூறலாம்...
// நேத்து இது மாதிரி பேஸ் புக்கில் எழுதி சாரு வாங்கி கட்டிக்கொண்டார். //
அவரது தளத்திலும் அப்படித்தான் எழுதி வைத்திருக்கிறார்... அதாவது யுத்தம் செய் memories of murder படத்தின் டப்பிங் என்று எழுதி தொலைத்திருக்கிறார்... நானும் பார்த்தேன்...
http://charuonline.com/blog/?p=1823
@ King Viswa
// தயவு செய்து அந்த நண்பரை போய் முதலில் யுத்தம் செய் படத்தையும், அதற்க்கு பின்பு நீங்கள் சொன்ன அந்த படங்களையும் பார்க்க சொல்லுங்கள். //
அந்த லிங்கை இங்கே கொடுத்து அவரது பதிவிற்கு ஆதரவு தெரிவிக்க விரும்பவில்லை... மெயில் அனுப்புகிறேன்... பாருங்கள்...
cheran is the minus point of this film.He should see' memories of murder',in that film even the retarded boy's charecter also done very well by that actor. cheran dosnt make it well,his body longuage,facial reactions are very poor along with dialog delivery.This film is a mixer of themes stollen from few international films. cinematography is really wonderful with lengthy shots,aerial view shots and cut shots.The musisian done the job partially well,he should have left silent wherever necessary. however a typical mysskin film with wrong hero. the supporting actors are really appreciated especially Jayaprakash, YGM,selva.Better luck next time.
nalla padipuku oru salute ...
Post a Comment