வணக்கம் மக்களே...
பதிவுலக பெரியவர்களோடு சேர்ந்து நாங்க ஆரம்பித்திருக்கும் கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம் பற்றி அறிந்திருப்பீர்கள். அப்படியே, ரசிகர் மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க போன வாரம் பஞ்சாயத்தை கூட்டினோம். ஆக்சுவல்லி, அந்த டிஸ்கஷன் டாஸ்மாக்குல தான் நடந்திருக்கணும். இருந்தாலும், நம்ம “மெட்ராஸ் பவன்” சிவகுமார் சுத்த சைவம் என்பதால் கே.ஆர்.பி அண்ணனின் ஆபிசுல வச்சு டிஸ்கஷனை தொடங்கினோம்.
நம்ம தளத்துல கண்டிப்பா பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுத்தே ஆகணும்னு பொதுக்குழு தீர்க்கமான முடிவொன்றை எடுக்க, நகைச்சுவையுடன் எழுதும் பெண் பதிவர்கள் யாரென்று யோசித்தால் பளிச்சுன்னு நம்ம வெட்டிப்பேச்சு சித்ரா மேடம்தான் தெரிஞ்சாங்க. அப்புறம் இன்னொரு பெண் பதிவருக்கான இடத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி மேடமை தேர்வு செய்தோம். நல்லபடியா ரெண்டு பேரும் நம்ம கரகாட்ட கோஷ்டியில் சேர ஒப்புக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அப்படியே அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்க போஸ்டுக்காகத்தான் காத்திருக்கிறோம் மேடம்ஸ்.
சரி, அடுத்ததா என்ன மாதிரி போஸ்ட் போடலாம்னு யோசிச்சோம். பதிவர்களோட கோக்கு மாக்கா பேட்டி எடுத்து நான் போடுறேன்னு சிவா சொன்னார். அஞ்சா சிங்கம் அவரது காட்டு தர்பார் கான்செப்ட்டை விவரித்தார். இந்த வரிசையில் நேற்று கே.ஆர்.பி அண்ணனின் கோக்கு மாக்கு பேட்டியையும் அதற்கு முந்தய நாள் அஞ்சா சிங்கத்தின் காட்டு தர்பாரையும் படிச்சிருப்பீங்க.
என்னோட பங்குக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சு பார்த்து குமுதத்தில் வெளிவரும் நையாண்டி பவன் மாதிரி ட்ரை பண்ணலாம்ன்னு முடிவு பண்ணேன். நையாண்டி பவன் காமிக்ஸ் கான்செப்ட் பற்றி அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்கு “நையாண்டி பவன்” என்ற இந்த ஹோட்டலுக்கு நம்ம தானைத்தலைவர் கவுண்டமணி அண்ணன்தான் முதலாளி அவரோட உதவியாளரா செந்தில். ஹோட்டலுக்கு வந்துபோற விருந்தாளிகள் கிட்ட செமையா லந்து பண்ணுவாங்க. இந்த கான்செப்ட்டை கே.ஆர்.பி அண்ணனிடம் சொல்லி நீங்க பண்ணா நல்லா இருக்கும்ன்னு சொன்னேன். அவர் நீங்களே பண்ணுங்க தம்பின்னு இளைய தலைமுறைக்கு வழிவிட்டார்.
நானும் கவுண்டமணி – செந்தில் ரசிகன் தான் என்றாலும் அவர்களின் வசனங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அளவிற்கு ஞாபக சக்தி கிடையாது. இருந்தாலும் ரெண்டு நாளா ரொம்ப யோசிச்சு நையாண்டி பவனின் முதல் எபிசோடை ரெடி பண்ணியிருக்கேன். நையாண்டி பவனின் முதல் விருந்தாளி நம்ம ஓலகப்பட இயக்குனர் மிஷ்கின்.
இதனால் கூற வருவது என்னவென்றால் கவுண்டரின் ரசிகர்கள் அனைவரும் அப்படியே மன்றத்துக்கு போய் உங்க கருத்துகுத்துக்களை கும்மு கும்முன்னு கும்முங்க...
லிங்க்: நையாண்டி பவன் – மிஷ்கின்
அப்புறம் முக்கியமான விஷயம்... அங்கேயும் இங்கேயும் உள்ள அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
27 comments:
சுடச்சுட பின்னூட்டம் :)
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் :)
அடுத்த வாரம் - ஒரு ரிலீஸ்!
நானும் வந்துட்டேன்
வலைச்சரத்துக்கு வாங்க
http://blogintamil.blogspot.com/2011/02/2-thursday-in-valaichcharam-rahim.html
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Already noticed that blog....congrats...
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
//அப்புறம் முக்கியமான விஷயம்... அங்கேயும் இங்கேயும் உள்ள அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல...//
ஐ லைக் திஸ் பாயின்ட்..
கீப் திஸ் அப் ஆல்வேஸ் !!
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
பார்த்தாச்சு பார்த்தாச்சு
நையாண்டி பவன் வெற்றி பெற வாழ்த்துகள்!
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
அன்பின் பிரபாகர் - புது முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
>>>அப்படியே, ரசிகர் மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க போன வாரம் பஞ்சாயத்தை கூட்டினோம்.
என்னை கழிச்சு விட்டுட்டு>>?
குட்.. நடத்துங்க
நையாண்டி பவன் வெற்றி பெற வாழ்த்துகள்...
நடத்துங்க எசமான் நடத்துங்க..
முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
டிஸ்க் தேவை இல்லை. ஏனென்றால் யாரும் நம்ப போறதில்லை. நீங்க எல்லாரும் தனியா இருந்தாலே தாங்க முடியாது. ஒண்ணா சேந்துட்டீங்களா? இனி என்ன பண்ண முடியும். கவுண்டர் ஸ்டைலில் "அட்ரா சக்க, அட்ரா சக்க"
அனைவருக்கும் விருந்து படைக்க வாழ்த்துக்கள்..
பிரபாகரன்! நல்ல ஜமாதான்
சேர்ந்திருக்கீங்க. கலக்குங்க. உங்கள் குழுவுக்கு என் வாழ்த்துக்கள்.
@ மாணவன், Chitra, ரஹீம் கஸாலி, விக்கி உலகம், டக்கால்டி, தோழி பிரஷா, Madhavan Srinivasagopalan, சங்கவி, நா.மணிவண்ணன், ! சிவகுமார் !, ஆயிஷா, sakthistudycentre-கருன், cheena (சீனா), சி.பி.செந்தில்குமார், யோவ், MANO நாஞ்சில் மனோ, Pranavam Ravikumar a.k.a. Kochuravi, பாலா, பாரத்... பாரதி..., மோகன்ஜி
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ மாணவன்
// சுடச்சுட பின்னூட்டம் :) //
இது என்னோட ஸ்டைல் ஆச்சே...
@ Chitra
// அடுத்த வாரம் - ஒரு ரிலீஸ்! //
காத்திருக்கிறோம் மேடம்...
@ பாலா
// நீங்க எல்லாரும் தனியா இருந்தாலே தாங்க முடியாது. //
ஹா... ஹா... ஹா... நாங்க அந்த அளவுக்கு அராத்து குருப் இல்லைங்கோ...
பொதுவா நீங்களோ நானோ யாரையாவது திட்டினால் சர்ச்சைகள் வரும் போகும்... கவுண்டர் திட்டினால்...? உலகில் உள்ள அனைவரையும் திட்டுவதற்கும் புட்டத்தில் எட்டி மிதிப்பதற்கும் உரிமம் வைத்திருக்கும் ஒரே ஆள் அவர்தான்...
Post a Comment