வணக்கம் மக்களே...
இரண்டு வாரத்திற்கு முன்பு Memories of Murder படம் குறித்து எழுதியிருந்தேன். அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள். இரண்டும் உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன, இரண்டுமே வன்புணர்ச்சி குறித்த படங்கள், இரண்டுமே இன்றுவரை தீர்வாகாத வழக்குகள்.
- Title: Border Town
- Country: United States of America
- Language: English
- Year: 2006
- Genre: Crime, Thriller
- Cast: Jennifer Lopez, Maya Zapata, Rene Rivera
- Director: Gregory Nava
- Producers: David bergstein, Gregory Nava, Simon Fields
- Cinematographer: Reynaldo Villalobos
- Editor: Padraic McKinley
- Music: Graeme Revell
- Length: 111 Minutes
அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள ஜூவாரெஸ் எனும் தொழிற்சாலை நகரத்தில் 1993ம் ஆண்டு முதல் இன்றுவரை ஏராளமான பெண்கள் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400 பெண்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அரசு குறிப்பேடுகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த வரிகளை எழுதவே வலிக்கிறது. வீட்டில் இளம்பெண்கள் யாராவது காணாமல் போனால் ஒரு குறிப்பிட்ட மலையடிவாரத்திற்கு சென்று குச்சியை மணலில் குத்தி தங்கள் மகளின் பிணம் இருக்கிறதா என்று தேடிப்பார்ப்பார்களாம். கிட்டத்தட்ட, ஈழப் படுகொலைகள், தமிழக மீனவர்கள் பிரச்சனை எப்படியோ அதுபோலவே இதுவும் ஒரு துயர சரித்திரம். இந்த உண்மைச்சம்பவங்களை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமே Border Town.
ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஜூவாரெஸ் நகரில் பெரும்பாலும் இளம்பெண்களே பணியமர்த்தப்படுகின்றனர். நம்ம ஊரில் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் என்ன நடக்கிறதோ அதே காரணம்தான். குறைவான ஊதியத்தை கொடுத்து அதிக நேரம் வேலை வாங்கலாம், கடுமையாக உழைப்பார்கள் என்ற கேவலமான மார்கெட்டிங் மென்டாலிட்டி. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறாள் ஈவா எனும் இளம்பெண். ஒருநாள் அவள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது அலுவலக வாகன ஓட்டுனரும் மற்றொருவனும் சேர்ந்து அவளை வன்புணர்கின்றனர். அவள் இறந்துவிட்டதாக நினைத்து மண்ணில் புதைத்துச்செல்கின்றனர். ஆனால் அவள் இறக்கவில்லை, புதையுண்ட மண்ணில் இருந்து மீண்டு வீடு திரும்புகிறாள். இந்நிலையில் அமெரிக்க பத்திரிகை ஒன்றின் சார்பாக இந்த தொடர்கொலைகள் பற்றி செய்தி சேகரிக்க ஜெனிபர் லோபஸ் அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே உள்ளூர் பத்திரிகை ஒன்றை சொந்தமாக நடத்திவரும் தனது பழைய காதலர் டியாசின் உதவியை நாடுகிறார். இருவருக்கும் ஈவாவிற்கு ஏற்பட்ட கொடுமைகள் தெரிய வருகிறது. ஜெனிபர் லோபஸ், ஈவாவிற்கு ஆதரவளித்து உதவியாக இருக்கிறார். மேலும் அவளுக்கு எதிராக வன்செயல் புரிந்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதாக உறுதியளிக்கிறார். இந்த தொடர்கொலைகளை இருட்டடிப்பு செய்யும் அரசாங்கம், அவர்களுக்கு துணைபோகும் போலீஸ், அரசுக்கு அடிபணியும் / அடிபணிய வைக்கப்படும் ஊடகங்கள், பணம் தின்று கொழுத்த தொழிலதிபர்கள் இவர்களுக்கு மத்தியில் ஈவாவிற்கு நியாயம் கிடைத்ததா...? ஜெனிபர் லோபஸின் லட்சியம் நிறைவேறியதா...? ஜூவாரெஸின் தொடர்கொலைகள் நிறுத்தப்பட்டதா...? என்பதே மீதிக்கதை.
இத்திரைப்படம் 2006ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் பல எதிர்ப்புகளை கடந்து 2007ம் ஆண்டில் ஜெர்மனியில் தொடங்கி பல உலக நாடுகளில் வெளியிடப்பட்டது. அப்பொழுதும் அமெரிக்காவில் வெளியிடப்படவில்லை. இறுதியாக 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் டிவிடியாக இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் இத்திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஜெனிபர் லோபஸுக்கு விருது கிடைத்தது.
இப்படி ஒரு கதைக்களன் கொண்ட படத்தில் ஜெனிபர் லோபஸின் அழகை ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் நிறைய காட்சிகளில் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணைப் போலவே உடையலங்காரம் செய்துக்கொண்டு வரும் காட்சியில் கொள்ளை அழகு. அப்புறம், மேலோட்டமான ஒரு பாலுறவு காட்சியும் படத்தில் இருக்கிறது.
படத்தின் பிளஸ் பாயிண்டுகள்:
- ஜெனிபர் லோபஸ். இவர் மட்டும் நடிக்காமல் போயிருந்தால் படம் இந்த அளவிற்கு கூட வரவேற்பை பெற்றிருக்காது. ஆவணப்படம் போல ஆகியிருக்கும்.
- ஈவாவாக நடித்த இளம்பெண் பல இடங்களில் பிரமாதமான நடிப்பு. மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் காட்சிகளில் கச்சிதமான நடிப்பு.
- அமெரிக்கா – மெக்சிகோவின் அரசியல் பூசல்களை முடிந்தவரைக்கும் பிற நாட்டு மக்களுக்கும் புரியும் வகையில் காட்டியிருக்கிறார்கள்.
எனக்குப் பிடித்த காட்சி:
தான் சேகரித்து தந்த செய்திகளை பத்திரிகை நிறுவனம் இருட்டடிப்பு செய்வதை அறிந்து தனது உயரதிகாரியிடம் ஜெனிபர் லோபஸ் கோபப்படும் காட்சி. ஒரு கட்டத்தில் ஜெனிபர் அநீதியின் பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்றொரு சந்தேகம் ஏற்படும். ஆனால் அடுத்த சில நொடிகளில் அப்படியெல்லாம் இல்லை என்று ஜெனிபர் ரெளத்திரம் பழகும் காட்சி. சூப்பர் மேடம்.
நல்லா நோட் பண்ணிக்கோங்க. நடுநிசி நாய்கள் இந்தப்படத்தின் காப்பி என்று நான் குறிப்பிடவில்லை. அது காப்பியா, தழுவலா, பாதிப்பா என்று சில தினங்களில் தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம். எனினும் நான் அறிந்தவரைக்கும் கெளதம் மேனன் செய்திருக்கும் புதுமைகள் / மாற்றங்கள்:
- தொழிற்சாலை பிண்ணனி என்பது கால் செண்டர் பின்னணியாக மாற்றப்பட்டுள்ளது இது ஈசன் படத்தையும் வன்புணர்ச்சி குறித்த கதைக்களன் யுத்தம் செய் படத்தையும் நினைவூட்டும் ஆபத்து இருக்கிறது.
- பார்டர் டவுன் படத்தில் கொலையாளி ஒருவனல்ல. ஆனால் நடுநிசி நாய்கள் படத்தில் நடக்கும் கொலைகளுக்கு எல்லாம் ஒரே ஒரு சைக்கோ கில்லரே காரணம் என்று அறியப்படுகிறது.
- நடுநிசி நாய்கள் படத்தில் பாடல்களோ, இசையோ கிடையாது.
வெர்டிக்ட்:
ஒரு கமர்ஷியல் சினிமாவாக ரசிக்க முடியுமா என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும், ஜூவாரெஸின் துக்க சரித்திரத்தை அறிந்துக்கொள்ள ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
பதிவிறக்க இணைப்புகள்:
நேரடி இணைப்பு:
கிடைக்கப்பெறவில்லை...
டோரன்ட் இணைப்பு:
(இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப்-டைட்டில்கள் இணைக்கப்பட்டுள்ளன).
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
40 comments:
!காப்பி வித் கௌதம் நிகழ்ச்சியில் உங்கள தேடிகிட்டு இருக்காங்க!
வெயிட் அண்ட் வாட்ச். இன்று இரவு சொல்கிறேன் (அது காப்பியா இல்லையா என்று).
கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்
என்ன பிரபா.. இனைக்கு உங்க தியேட்டர்ல 2 படமா?
நாளைக்கு நடு நிசி நாய்கள் ரிலீஸ். இன்னைக்கே உங்க பிளாக்ல விமர்சனமா? ம் ம்
நல்லா சொல்லி இருக்கீங்க ..........என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாதவங்களுக்காக ஹி ஹி!!
துரை ஒரே தமிங்கிளிபீசா எழுதுது...........
நல்லா சொல்லி இருக்கீங்க ..........என்ன மாதிரி ஆங்கிலம் தெரியாதவங்களுக்காக ஹி ஹி!!
துரை ஒரே தமிங்கிளிபீசா எழுதுது...........
நாளைக்கு நடு நிசி நாய்கள் ரிலீஸ். இன்னைக்கே உங்க பிளாக்ல விமர்சனமா?ஸ்பீடுதான்...
//இப்படி ஒரு படம் எடுக்கப்படுவதே தமிழில் இதுவே முதன்முறை//
Not really.
1.அந்த நாள்
2. வண்ணக் கனவுகள்
3. கடமை கண்ணியம் கட்டுப்பாடு
4. குருதிபுனல்
//ஜூவாரெஸ்//
That is ஹுவாரேஸ்.
//கேன்ஸ்//
That is கான்.
பார்க்கலாம் படம் எப்படின்னு இது எல்லாம் இப்போ ஒரு ட்ரெண்டு மாதிரி . சீக்கிரம் போர் அடிச்சிடும் .
பகிர்விற்கு நன்றி பார்த்துடுவோம்
//5000க்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த வரிகளை எழுதவே வலிக்கிறது. வீட்டில் இளம்பெண்கள் யாராவது காணாமல் போனால் ஒரு குறிப்பிட்ட மலையடிவாரத்திற்கு சென்று குச்சியை மணலில் குத்தி தங்கள் மகளின் பிணம் இருக்கிறதா என்று தேடிப்பார்ப்பார்களாம். //
எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லை, இதன் கதை உண்மை சம்பவம் என்று கூறும் பொழுது ஒரு கணம் ஆடி போய்விட்டேன்.
நல்லா சொல்லி இருக்கீங்க
பஞ்ச் டயலாக், குத்து பாட்டு, இதெல்லாம் இல்லாம தமிழ் சினிமால நிலைக்க முடயுமானு யோசிக்கமா யுத்தம் செய், நடு நிசி நாய்கள் போல புது முயற்சியா வரவேர்த்தே ஆகனும். இல்லன திரும்பவும் டாகுடர் மாதிரி பலபேர் வந்துடுவாங்க....
//நல்லா நோட் பண்ணிக்கோங்க. நடுநிசி நாய்கள் இந்தப்படத்தின் காப்பி என்று நான் குறிப்பிடவில்லை.எனினும் நான் அறிந்தவரைக்கும் கெளதம் மேனன் செய்திருக்கும் புதுமைகள் / மாற்றங்கள்//
உங்கள் எழுத்து மிகவும் திறமையாக வெளிப்படுகிறது...
சிவகுமாரின் comment ம் சூப்பர்!
அழகாய் சொல்லியிருக்கீங்க!
படத்தின் கதையப் பத்தி நீங்க கொடுத்துள்ள பேக்ரவுண்ட் தகவல், ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு... அமெரிக்காவுல கூட இப்படித்தானா?
இந்தப் படம் அமெரிக்காவில் ஏன் தடை செய்ப்பட்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது, அது பற்றி கொஞ்சம் டீடெயிலா ஒரு பதிவு போடலாமே?
கவர்ச்சிக் கன்னி ஜெனிஃபர் லோபெஸ் இந்தமாதிரி படத்துல நடிச்சிருக்காங்கன்னா அது ஆச்சர்யம்தான்....
அடுத்த ஆப்பு கௌதம் மேனனுக்கா? நடக்கட்டும்........
நாங்களும் எதிர்பார்ப்போடு காத்திருக்கோம் படம் வரட்டும்.. பார்த்திட்டா போச்சு....
இவங்கதான் ஜெனிபர் லோபஸா? beautiful woman..!
நான் இங்கிளிபீசு படமெல்லாம் பாக்குறதில்லே நண்பரே! இன்னும் ’பயணம்’ படமே பார்க்கலே! பட், ந.நி.நா பார்ப்பேன்- சமீரா ரெட்டி......! :-))
I had an opportunity to talk to a person, who had been to Juarez. He shared few heart-breaking incidents. :-(
நல்ல விமர்சனம்.. படம் வெளிவந்தா தெரிஞ்சிடும்..
நல்ல விமர்சனம் பிரபா.. உங்கள் எழுத்து நடை அழகாகிக்கொண்டே போகிறது.. நல்ல புத்தகங்கள் படிப்பதாலா.
@ ! சிவகுமார் !, King Viswa, சி.பி.செந்தில்குமார், விக்கி உலகம், sakthistudycentre-கருன், Indian, அஞ்சா சிங்கம், Speed Master, இளம் தூயவன், ஆயிஷா, உளவாளி, யோவ், மோகன்ஜி, பன்னிக்குட்டி ராம்சாமி, Kanchana Radhakrishnan, ம.தி.சுதா, சேட்டைக்காரன், Chitra, சாமக்கோடங்கி, Riyas
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ King Viswa
// வெயிட் அண்ட் வாட்ச். இன்று இரவு சொல்கிறேன் (அது காப்பியா இல்லையா என்று). //
இன்றிரவே பார்த்துவிடுவீர்களா... நீங்க ரொம்ப பாஸ்ட்...
@ சி.பி.செந்தில்குமார்
// என்ன பிரபா.. இனைக்கு உங்க தியேட்டர்ல 2 படமா? //
ஆமாம்... நாளைக்கும் இரண்டு படம்தான்...
// நாளைக்கு நடு நிசி நாய்கள் ரிலீஸ். இன்னைக்கே உங்க பிளாக்ல விமர்சனமா? ம் ம் //
ஒரிஜினல் விமர்சனம் நாளைக்கு வரும்...
@ விக்கி உலகம்
// துரை ஒரே தமிங்கிளிபீசா எழுதுது........... //
சில வார்த்தைகளை தமிழ்ப்படுத்தி எழுதினா நல்லா இருக்காது...
@ Indian
// Not really.
1.அந்த நாள்
2. வண்ணக் கனவுகள்
3. கடமை கண்ணியம் கட்டுப்பாடு
4. குருதிபுனல் //
இவை பாடல்கள் இல்லாத படங்கள் தானே... பின்னணி இசை கூட இல்லாத படங்களா என்ன...?
// That is ஹுவாரேஸ். //
படத்தில் ஜூவாரெஸ் என்றே உச்சரித்தார்கள்... ஆஅந்கிலத்தில் Juarez...
// That is கான். //
அப்படியா...
@ உளவாளி
// பஞ்ச் டயலாக், குத்து பாட்டு, இதெல்லாம் இல்லாம தமிழ் சினிமால நிலைக்க முடயுமானு யோசிக்கமா யுத்தம் செய், நடு நிசி நாய்கள் போல புது முயற்சியா வரவேர்த்தே ஆகனும். இல்லன திரும்பவும் டாகுடர் மாதிரி பலபேர் வந்துடுவாங்க.... //
உண்மைதான்... ஆனா நம்மூர் ரசிகர்கள் கிட்ட அதெல்லாம் நடக்காது அவர்கள் டாகுடர் வகையறா படங்களையே எதிர்பார்க்கிறார்கள்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// படத்தின் கதையப் பத்தி நீங்க கொடுத்துள்ள பேக்ரவுண்ட் தகவல், ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு... அமெரிக்காவுல கூட இப்படித்தானா? //
ஆமாம் உண்மைதான்... மேலும் விவரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/Female_homicides_in_Ciudad_Ju%C3%A1rez
// இந்தப் படம் அமெரிக்காவில் ஏன் தடை செய்ப்பட்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது, அது பற்றி கொஞ்சம் டீடெயிலா ஒரு பதிவு போடலாமே? //
எனக்கு நம்மூர் அரசியல் பற்றியே தெளிவான அனுபவ அறிவு கிடையாது... அமெரிக்கா பற்றி தெரியாமல் எப்படி எழுதுவது... பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்பவர்கள் மட்டுமே அதைப் பற்றி சரியாக எழுத முடியும்... கீழே சித்ராக்கா பின்னூட்டத்தையும் அவருக்கு என்னுடைய பதிலையும் பார்க்கவும்...
// கவர்ச்சிக் கன்னி ஜெனிஃபர் லோபெஸ் இந்தமாதிரி படத்துல நடிச்சிருக்காங்கன்னா அது ஆச்சர்யம்தான்.... //
ஹாலிவுட் நடிகைகள் நிறைய பேருக்கு சேவை மனப்பான்மை அதிகம்... உண்மையாவே...
@ சேட்டைக்காரன்
// நான் இங்கிளிபீசு படமெல்லாம் பாக்குறதில்லே நண்பரே! இன்னும் ’பயணம்’ படமே பார்க்கலே! பட், ந.நி.நா பார்ப்பேன்- சமீரா ரெட்டி......! :-)) //
நீங்க நடுநிசி நாய்கள் பார்க்கலைன்னாலும் பரவாயில்லை... ஆனால் பயணம் படத்தை தவறாமல் பார்க்கவும்... ஓ சமீரா ரெட்டி விசிறியா...
@ Chitra
// I had an opportunity to talk to a person, who had been to Juarez. He shared few heart-breaking incidents. :-( //
மேடம்... பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் சொன்னது போல நீங்கள் இதுகுறித்து விரிவாக ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்...
//இவை பாடல்கள் இல்லாத படங்கள் தானே... பின்னணி இசை கூட இல்லாத படங்களா என்ன...?//
They do have background score. I stand corrected.
@ Indian
// They do have background score. I stand corrected. //
ஓகே தகவலுக்கு நன்றி... அந்த வரியை நீக்கிவிட்டேன்... இந்த தகவலை அறிந்தபிறகு மீண்டும் குருதிப்புனல் படத்தை பார்க்க வேண்டுமென தோன்றுகிறது...
//// That is ஹுவாரேஸ். //
படத்தில் ஜூவாரெஸ் என்றே உச்சரித்தார்கள்... ஆஅந்கிலத்தில் Juarez...//
I guess it is Spanish.
Check this out.
http://www.forvo.com/word/benito_ju%C3%A1rez/
At the same time, in Portuguese it is ஜூவாரெஸ்.
Check it here.
http://www.forvo.com/word/juarez/
மிக அருமையான திரைப்படம்.
http://www.putlocker.com/file/375AWA4JO4O4SWS4
//சி.பி.செந்தில்குமார் said...
நாளைக்கு நடு நிசி நாய்கள் ரிலீஸ். இன்னைக்கே உங்க பிளாக்ல விமர்சனமா? ம் ம்//
CPS, ஒரு வேளை ரெண்டு படத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ ?
இந்தப்படம் பாக்கவில்லை. இந்த பாடத்தின் பாதிப்பு நடுநிசி நாய்கள் படத்தில் இருக்கவில்லை என்றே சொல்கிறீர்கள் இப்போதைய விமர்சனத்தில் சொல்கிறீர்கள் உண்மையாகவோ????
Post a Comment