வணக்கம் மக்களே...
பொதுவாக ஊருக்குள்ள ஏதாவது பரபரப்பான சம்பவம் நடந்தால், சம்பவத்தை அப்படியே சினிமாவாக எடுப்பது ஒரு பாரம்பரிய முறை போல ஆகிவிட்டது. அதுபோன்ற படங்கள் சில சமயங்களில் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக அமையும். உதாரணத்திற்கு மலையூர் மம்பட்டியான், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற படங்களை சொல்லலாம். இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பிறந்த ஒருவனுக்கு மலையூர் மம்பட்டியான் என்றால் தியாகராஜனும், கோவில்பட்டி வீரலட்சுமி என்றால் சிம்ரனும் தானே நினைவுக்கு வருகிறார்கள். இத்தகைய படங்கள் சில சமயங்களில் எப்படி வாழ வேண்டுமென்று கற்றுக்கொடுக்கும், பல சமயங்களில் எப்படியெல்லாம் வாழக் கூடாதென்றும் கற்றுக்கொடுக்கும். சரி, இந்த பழக்கம் நம்மூரில் மட்டும்தான் இருக்கிறதா என்று கொஞ்சம் மேலை நாடுகளை அண்ணாந்து பார்த்தால் அங்கேயும் உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து படங்களை எடுக்கிறார்கள். அப்படி ஒரு படம் தான் 살인의 추억. விட்டுத்தொலைங்க, நமக்கு சொல்ல வரலை. ஆங்கிலத்தில் “மெமரீஸ் ஆப் மர்டர்”.
- Title: Sarinŭi Ch'uǒk
- a.k.a.: Memories of Murder
- Country: South Korea
- Language: Korean
- Year: 2003
- Genre: Crime, Mystery
- Cast: Kang-ho Song, Sang-kyung Kim, Roe-ha Kim
- Director: Joon-ho Bong
- Producer: Cha Seoung-Jae
- Cinematographer: Hyung-ku Kim
- Editor: Sun-min Kim
- Music: Tarō Iwashiro
- Length: 127 minutes
ஒரு கிராமத்து வயல்வெளியின் வறண்ட கால்வாயில் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டு பாதி அழுகிய நிலையில் உள்ள ஒரு பெண்ணின் உடலை கண்டெடுகின்றனர். அதுபற்றிய விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் அதே பாணியில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். பார்க், சோ (துக்ளக் சோ அல்ல...) எனும் இரு துப்பறிவாளர்கள் கொலையை துப்பறிக்க நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை தவிர்த்து, தென் கொரியாவின் தலைநகரான சியோலிலிருந்து சியோ எனும் துப்பறிவாளன் வான்ட்டடாக முன்வந்து இந்த கொலைகளுக்கான விசாரணையில் பங்கெடுத்துக்கொள்கிறான். இதில் பார்க்கும், சோவும் கொஞ்சம் காமெடி பீஸுகள். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படக்கூடியவர்கள். சியோ அப்படிப்பட்டவன் அல்ல, அவன் புத்திசாலி. (ஹீரோவாச்சே...).
கொலை செய்யப்படும் பெண்கள் அனைவரும் ஒரே நிலையில் அதாவது மார்கச்சையால் வாயைக் கட்டிய நிலையிலும் ஜட்டியால் முகம் மூடப்பட்ட நிலையிலும் பிணமாக கிடைக்கின்றனர். மேலும், சியோ தனது புத்திசாலித்தனத்தால் கொலைகள் அனைத்தும் மழை பெய்யும் இரவுகளில் நடப்பதாகவும் சம்பந்தப்பட்ட பெண்கள் கொலையுண்ட போது சிகப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும் கண்டுபிடிக்கிறான். மேலும் கொலை நடந்த தினங்களில் மட்டும் வானொலியில் ஒரு குறிப்பிட்ட சோகப்பாடல் ஒலிப்பரப்பப்படுவதாக கண்டுபிடிக்கின்றனர்.
பார்க்கும் சோவும் ஒரு மனப்பிறழ்வு ஏற்பட்ட வாலிபனை கொலைகாரன் என்று சந்தேகப்பட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள். பின்னர், ஆளில்லாத வெளியில் பெண்களின் உள்ளாடைகளை பார்த்து சுயஇன்பம் அனுபவிக்கும் ஒருவனை கண்டு அவனை சந்தேக்கிக்கின்றனர். இறுதியாக சம்பவம் நடந்த இடத்தின் அருகிலுள்ள தொழிற்சாலை ஊழியன் ஒருவனின் மீது சந்தேகப்படுகின்றனர். இவர்கள் மூவரில் யார் உண்மையான கொலைகாரன்...? உண்மையான கொலைகாரன் சிக்கினானா...? என்பதே மீதிக்கதை.
தென் கொரியாவின் ஜியோன்ஜி என்னும் கிராமத்தில் 1986ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுக்குள் நடந்த தொடர்கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், 2003ம் வெளிவந்து ஒரு மாஸ் மற்றும் கிளாஸ் படமாக வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான கிரான்ட் பெல் விருதினை தட்டிச்சென்றது. அதுமட்டுமில்லாமல் 2003ம் ஆண்டு தென் கொரியாவில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையும் இத்திரைப்படத்திற்கு உண்டு.
படத்தின் பிளஸ் பாயிண்டுகள்:
- ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு இரண்டுமே அருமை. குறிப்பாக சுயஇன்பம் அனுபவிப்பவனை துப்பறிவாளர்கள் சந்தேகப்பட்டு துரத்த ஆரம்பிக்கும் காட்சியில் பிண்ணனி இசை பிரமாதம்.
- வன்புணர்ச்சி, படுகொலை போன்றவைகள் கதைக்களமாக இருந்தாலும் அவைகளை முடிந்தவரைக்கும் வக்கிரம் இல்லாமல் காட்டி இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
- இதுபோன்ற படங்கள் எப்படி கொலை செய்வது, எப்படி செய்த கொலையை மறைப்பது என்றெல்லாம் சமூக விரோதிகளுக்கு டெமோ காட்டுவதாக அமையும். இந்தப்படம் ஒரு விதிவிலக்கு.
- உண்மைச்சம்பவம் என்ற காரணத்தினால் சினிமாவுக்காக அதிகபட்ச மாற்றங்களை எதையும் செய்யாமல் நிஜத்தில் நடந்த முடிவையே திரையிலும் காட்டியது சூப்பர்.
- துப்பறிவாளன் சியோ தான் கதையின் நாயகன் எனினும் மற்றொரு துப்பறிவாளனான பார்க்கின் பார்வையில் இருந்து கதை சொல்லப்படுவது புதுமை.
எனக்குப் பிடித்த காட்சி:
நடந்த கொலைகளில் உள்ள பொதுவான விஷயங்களை ஆராயும்போது மற்ற இரண்டு துப்பறிவாளர்களும் அனைவரும் மணமாகாதவர்கள், அனைவரும் அழகான பெண்கள் என்று வழமையான விஷயங்களை குறிப்பிடும்போது சியோ மட்டும் கொலைகள் அனைத்தும் மழையிரவுகளில் நடந்ததாகவும் கொலையுண்டவர்கள் சிகப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும் குறிப்பிடும் காட்சி.
வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளிவந்தபோது இத்திரைப்படமே அதன் முன்னோடி என்று பேசப்பட்டது. இப்போது மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடித்து வெளிவர இருக்கும் “யுத்தம் செய்” படத்தின் கதை, இந்தப்படத்தில் இருந்து உருவப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அது உண்மையானால் எனது சந்தேகங்கள்:
- நாயகி இல்லாத இந்தக்கதையில் தமிழில் நாயகியாக நடிக்கும் தீபா ஷாவுக்கு என்ன வேலை...?
- சியோ வேடத்தில் சந்தேகமில்லாமல் சேரன். மற்ற இரண்டு காமெடி பீஸு துப்பறிவாளர்களாக யார் நடித்திருப்பார்கள்...?
- இந்தப்படத்தில் நீத்து சந்திராவின் குத்தாட்டப் பாடலான “கன்னித்தீவு பொண்ணா...” எந்த இடத்தில் சொருகப்பட்டிருக்கும்...? அங்கே சாருவின் விரல்களுக்கென்ன வேலை...?
வெர்டிக்ட்:
நாயகியே இல்லாத படம் என்பது என்னைப்போன்ற ஜொள்ளர்களுக்கு ஒரு பெரிய குறையே என்றாலும், படம் தனது திரைக்கதை நடையில் இரண்டு மணிநேரம் நம்மை கட்டிப்போடுகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. அனைவரும் பார்க்கவேண்டிய படம். அதிலும் கொலை, பாலியல் வன்முறை போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்றும் சொல்லலாம்.
பதிவிறக்க இணைப்புகள்:
டோரன்ட் இணைப்பு: Memories of Murder DVD RIP (700MB)
(இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப்-டைட்டில்கள் இணைக்கப்பட்டுள்ளன).
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
70 comments:
ரசித்தி எழுதியிருக்கிறாய் . ரசிக்கும்படி எழுதியிருக்கிறாய் .துக்ளக் சோவை குறிப்பிட்ட இடம் சூப்பர்
போடு 2வது வெட்டை... ( வட போச்சேன்னு எத்தனி நாளுக்கு தான்போடறது?
சூப்பர் பிரபா... டைமிங்க் போஸ்ட் நாளைக்கு தான் யுத்தம் செய் ரிலீஸ் ஆகுது..இன்னைக்கே போட்டு ஹிட் ஆக்கப்போறீங்க..வாழ்த்துக்கள்
very interesting and funny. superb naretion praba. keep it up.
ஆனா எனக்கென்ன தோணுதுன்னா இன்னைக்கு ஆ ராசா கைது தான் ஹாட் நியூஸ்... அதனால 10 % ஹிட் இதுக்கு குறையலாம் அல்லது எல்லாரும் அதை பற்றியே எழுதறப்ப உங்களுது தனித்து தெரிஞ்க்சு சூப்பர் ஹிட் ஆகலாம். காலை 10 மணீக்கு தெரிஞ்சுடும்..
>>>>அனைவரும் பார்க்கவேண்டிய படம்.
ஆனா கதையைப் பார்த்தா பெண்கள், சிறுவர்கள் பார்க்க முடியாது போல
உங்க விமர்சனம் நல்லாருக்கு..
அப்படியே முடிவையும் சொல்லியிருந்திங்கன்னா நல்லாருந்திருக்கும்.
அடப்பாவிகளா இதுவும் காபியா..... ஏற்கனவே எடுத்த படத்தை எதுக்க திரும்ப எடுக்கணும் தல,உங்கள மாதிரி நல்ல படம்னு ஒரு லிங்க் கொடுத்த பாத்துட்டு போறோம்,
அது காபியாக இருக்கும் பட்சத்தின் அதை நான் பார்க்கமாட்டேன்,மிஸ்கின் அஞ்சாதே படத்திற்கு பிறகு கொஞ்சம் நம்பிக்கை வந்தது,ஒரு நல்ல டைரக்டர் கிடைத்து விட்டார் என்று,நந்தலாலாவுக்கு அப்புறம் அது போய் விட்டது,இப்படி காபி அடித்து ஒரு தேர்ந்த அசிச்டன்ட் வைத்துக்கொண்டு நானும் ஆயரம் படம் எடுப்பேனே,கடுப்பாக இருக்கிறது நண்பரே,
முதலில் படம் வரட்டும். அப்புறம் பார்க்கலாம். படத்தை பார்த்து நன்றாக ரசித்து விட்டு அப்புறம் கலாய்க்கலாம்...
Good review
Good Review
நல்ல பகிர்வு! அடப்பாவிகளா இதுவும் copy ஆ?
அழகா எழுதியிருக்கறீங்க....
முடிஞ்சா இந்தப்பக்கம் வாங்க...
www.sangkavi.com
சினிமாவுக்கும் எப்படி நேரம் ஒதுக்குகிறீர்களோ தெரியவில்லை.. நல்ல கட்டுரை படத்தைப்பார்க்க தூண்டுகிறது.. நான் என் வாழும் முறையை (Life styleங்கோ) ரிவ்யூ செய்யவேண்டும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.
சோ (துக்ளக் சோ அல்ல...) ///
நல்ல வேல சொன்ன ....இல்லாட்டி என்ன நடந்திருகும்ன்னு நினைக்கவே பயம்மா இருக்கு
விமர்சனத்துல விமர்சனமா ஹி ஹி!!!!!!!!
நீர் ஒரு பலகலை புரிய நினைக்கும் மனிதரய்யா
இது என்ன கதைசுருக்கமா..? இல்லை விமர்சனமா.. ? விமர்சனம்ன்னா என்னானுட்டு அர்த்தம் விளங்கமாட்டேங்குது.. விமர்சனம்-பொருள் என்ன?
நன்றி பிராபா
படத்தை பார்க்கும் விதத்தில் விமர்சனம்
லிங்க் வேற கொடுத்து இருக்கீங்க பார்த்திட்டா போச்சி
டெத் நோட் என்று ஒரு ஜப்பான் மொழி படம் இருக்கிறது மூன்று பாகங்கள் எனக்கு மிகவும் பிடித்த படம் .
நேரம் இருந்தால் டவ்ன்லோட் செய்து பார்க்கவும் ......
மிஷ்கின் எப்பதான் சொந்தமா யோசித்து எடுப்பாரு?!!
நல்ல விமர்சனம் , ஆனா இந்த மாதிரி படம்லாம் பாக்குரதற்க்கு நமக்கு பொறுமை கிடையாது ,முடிவையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்
பாஸ்! மன்னிச்சிடுங்க வேலைக்கு போறதால ஓட்டு மட்டும் போட்டுட்டு கெளம்புறேன்! இரவுக்கு வந்து, பதிவைப் படித்து விட்டு மறுபடியும் கமெண்டு போடுகிறேன்! சாரி பாஸ்!!
இன்னும் ஒரு நாள் பொருங்க பாஸ்..
யுத்தம் செய் படத்தின் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்...
வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.
이 영화의 리뷰는 서면의 방법으로 나도 같이하고, 좋다. 철학 Prabhakaran 그것을 계속 ...
하지만 난 돈, t는 당신이 우리에게 귀하의 게시물에 대한 다운로드 링크를주는 것에 동의합니다.
감사합니다
ஹி ஹி ஹி.... ட்ரான்ஸ்லேட் பண்ணி படிச்சுக்கோங்க.
இதை நானே ட்ரான்ஸ்லேட் பண்ணி பார்த்தேன். ஆங்கிலத்தை மாத்தி மாத்தி போட்டு கடிச்சு துப்பினாப்ல இருந்துச்சு.
zodiac பார்த்திருக்கிறீர்களா? இதன் சிமிலியர் கதை மற்றும் முடிவு என்றாலும் Zodiac கொஞ்சம் நீளம் அதிகம். இந்த படம் பார்க்கும் லிஸ்டில் இருக்கிறது.
>>> யுத்தம் செய்..I wont go. You know the reason.
அழகா எழுதியிருக்கறீங்க....
//- நாயகி இல்லாத இந்தக்கதையில் தமிழில் நாயகியாக நடிக்கும் தீபா ஷாவுக்கு என்ன வேலை...?//
போலிஸ் ஸ்டேஷன்ல ஒரு பிகர் இருக்குமே
//- இந்தப்படத்தில் நீத்து சந்திராவின் குத்தாட்டப் பாடலான “கன்னித்தீவு பொண்ணா...” எந்த இடத்தில் சொருகப்பட்டிருக்கும்...? அங்கே சாருவின் விரல்களுக்கென்ன வேலை...?//
போலிஸ்காரங்க ரெண்டு பேரும் தண்ணிய போட்டுட்டு அடுசுக்குவாங்களே அந்த இடம்..
இந்த படம் நான் கல்லூரியில் படிக்கும் போது 2005- ல் பார்த்தது. மிக அட்டகாசமான படம்..
நண்பரே உங்கள் பதிவை படித்தவுடன் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் பதிவின் முடிவில் இருந்த லிங்கில் இருக்கும் படத்தை டவுன்லோட் செய்து பார்த்தால் அது வேற படம். மெமரீஸ் ஆப் மர்டரின் டவுன்லோட் லிங்க் கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி.
arumai nanbarey!
அழகா எழுதியிருக்கறீங்க.வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு.
விமர்சனமே படத்தைப் பார்க்க தூண்டுகிறது.
வாழ்த்துக்கள்.
உங்க விமர்சனம் நல்லா இருக்கு!
Sila pathivarkal hitsukku addict aayittadha solrathu unmaithaano?
Kanakke kanna kattudhu..
நடு நிசி நாய்கள் கூட இந்தப்படத்தின் தழுவல் என்று பேசிக்கொள்கிறார்கள்..
காப்பி அடித்தால் தப்பில்லை என்று பேசும் நம்ம இயக்குனர்களை என்ன செய்யலாம்?
நல்லது...
Nice review... But i think the given Links are wrong (Border town) plz check
thank you,your message was so useful...........
by saravanan.
யுத்தம் செய் trailer கலக்குது பாப்பம் எப்பிடி எடுத்திருக்காங்க எண்டு!
@ பார்வையாளன், சி.பி.செந்தில்குமார், கோநா, கொக்கரகோ..., டெனிம், பாலா, Chitra, Samudra, ஜீ..., சங்கவி, வசந்தா நடேசன், மங்குனி அமைச்சர், விக்கி உலகம், தங்கம்பழனி, Speed Master, FARHAN, அஞ்சா சிங்கம், வைகை, நா.மணிவண்ணன், மாத்தி யோசி, # கவிதை வீதி # சௌந்தர், ரஹீம் கஸாலி, ஆதவா, ! சிவகுமார் !, சே.குமார், Sathishkumar, கார்த்திக் வாசுதேவன், padaipali, ஆயிஷா, கந்தசாமி., இந்திரா, Priya, Idroos, கே.ஆர்.பி.செந்தில், பிரியமுடன் பிரபு, ksground, கார்த்தி
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ சி.பி.செந்தில்குமார்
// ஆனா கதையைப் பார்த்தா பெண்கள், சிறுவர்கள் பார்க்க முடியாது போல //
ஆமாம்... தேவையில்லாமல் ஒரு மேலோட்டமான பாலுறவு காட்சி வேறு வருகிறது...
@ கொக்கரகோ...
// அப்படியே முடிவையும் சொல்லியிருந்திங்கன்னா நல்லாருந்திருக்கும். //
முடிவை சொல்லக்கூடாதுன்னு முடிவு எடுத்திருக்கேன்...
@ டெனிம்
// காபியாக இருக்கும் பட்சத்தின் அதை நான் பார்க்கமாட்டேன் //
நல்ல கொள்கை... ஆனால் அப்படிப் பார்த்தால் எந்த தமிழ்ப்படத்தையும் பார்க்க முடியாதே...
// மிஸ்கின் அஞ்சாதே படத்திற்கு பிறகு கொஞ்சம் நம்பிக்கை வந்தது,ஒரு நல்ல டைரக்டர் கிடைத்து விட்டார் என்று //
அஞ்சாதே படமும் காப்பி தான் என்பது உங்களுக்கு தெரியாதா...?
@ சங்கவி
// முடிஞ்சா இந்தப்பக்கம் வாங்க...
www.sangkavi.com //
கண்டிப்பா வர்ரேன் சார்... எப்போ டாட் காமிற்கு மாறினீர்கள்...
@ வசந்தா நடேசன்
// சினிமாவுக்கும் எப்படி நேரம் ஒதுக்குகிறீர்களோ தெரியவில்லை.. //
வாரக்கடைசியில் இரண்டு மணிநேரம் செலவு செய்வேன்...
// நான் என் வாழும் முறையை (Life styleங்கோ) ரிவ்யூ செய்யவேண்டும் என நினைக்கிறேன், பார்க்கலாம். //
புது ஐடியாவாக இருக்கிறது... முயற்சி செய்யுங்கள்...
@ தங்கம்பழனி
// இது என்ன கதைசுருக்கமா..? இல்லை விமர்சனமா.. ? விமர்சனம்ன்னா என்னானுட்டு அர்த்தம் விளங்கமாட்டேங்குது.. விமர்சனம்-பொருள் என்ன? //
எப்படி வேணும்னாலும் வச்சுக்கோங்க... நான் பதிவின் எந்த இடத்திலும் விமர்சனம் என்றோ கதைச்சுருக்கம் என்றோ குறிப்பிடவில்லையே...
@ அஞ்சா சிங்கம்
// டெத் நோட் என்று ஒரு ஜப்பான் மொழி படம் இருக்கிறது மூன்று பாகங்கள் எனக்கு மிகவும் பிடித்த படம் .
நேரம் இருந்தால் டவ்ன்லோட் செய்து பார்க்கவும் ...... //
மூன்று பாகங்கள் என்றால் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான்... முயற்சி செய்கிறேன்...
@ # கவிதை வீதி # சௌந்தர்
// இன்னும் ஒரு நாள் பொருங்க பாஸ்..
யுத்தம் செய் படத்தின் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்... //
நானே முதல்நாள் முதல்காட்சி டிக்கட் எடுத்து வச்சிருக்கேன்...
@ ஆதவா
// 이 영화의 리뷰는 서면의 방법으로 나도 같이하고, 좋다. 철학 Prabhakaran 그것을 계속 ...
하지만 난 돈, t는 당신이 우리에게 귀하의 게시물에 대한 다운로드 링크를주는 것에 동의합니다.
감사합니다 //
ஹே... ஹே... NO BAD WORDS...
// ஹி ஹி ஹி.... ட்ரான்ஸ்லேட் பண்ணி படிச்சுக்கோங்க. //
The review of this movie shares, is born with method of the document but is good. Continues philosophic Prabhakaran it… but difficulty goes round, t in these us of you makes a motion in giving a download link about you notice water. Thanks
படிச்சிட்டேன்...
// zodiac பார்த்திருக்கிறீர்களா? இதன் சிமிலியர் கதை மற்றும் முடிவு என்றாலும் Zodiac கொஞ்சம் நீளம் அதிகம். இந்த படம் பார்க்கும் லிஸ்டில் இருக்கிறது. //
பார்க்க முயற்சிக்கிறேன்...
@ ! சிவகுமார் !
// >>> யுத்தம் செய்..I wont go. You know the reason. //
தெரியும் சிவா... ஆனா நான் டிக்கட் எடுத்துட்டேன்... பார்க்கப் போறேன்...
@ Sathishkumar
// போலிஸ் ஸ்டேஷன்ல ஒரு பிகர் இருக்குமே //
ஓகே... ஆனா நம்மாளுங்க சேரனுக்கும் அந்த புள்ளைக்கும் லவ்வு... அப்படியே மலைமுகட்டில் ஒரு டூயட்டுன்னு பிரிச்சு மேயுவாங்களே...
// போலிஸ்காரங்க ரெண்டு பேரும் தண்ணிய போட்டுட்டு அடுசுக்குவாங்களே அந்த இடம்.. //
நானும் அதையே தான் யூகிச்சேன்...
@ கார்த்திக் வாசுதேவன்
// நண்பரே உங்கள் பதிவை படித்தவுடன் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் பதிவின் முடிவில் இருந்த லிங்கில் இருக்கும் படத்தை டவுன்லோட் செய்து பார்த்தால் அது வேற படம். மெமரீஸ் ஆப் மர்டரின் டவுன்லோட் லிங்க் கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி. //
ஆமாம்... தவறு நடந்துவிட்டது... மன்னிக்கவும்... மாற்றிவிடுகிறேன்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...
@ Idroos
// Sila pathivarkal hitsukku addict aayittadha solrathu unmaithaano? //
யாருங்க அந்த சில பதிவர்கள்...??? சொன்னா நாங்களும் உஷாரா இருப்போம்ல...
@ கே.ஆர்.பி.செந்தில்
// நடு நிசி நாய்கள் கூட இந்தப்படத்தின் தழுவல் என்று பேசிக்கொள்கிறார்கள்.. //
கிட்டத்தட்ட இதே கதையம்சம் தான்... ஆனால் அது வேறொரு படத்தின் காப்பி... அதுபற்றி அந்தப்படத்தின் ரிலீசுக்கு ஒருநாள் முன்னதாக எழுதுகிறேன்...
@ Anonymous
// Nice review... But i think the given Links are wrong (Border town) plz check //
ஆமாம்... எனது அடுத்த உலகப்பட விமர்சனத்திற்கு போடா வேண்டிய லிங்க்சை தவறுதலாக இணைத்துவிட்டேன்... மன்னிக்கவும்... மாற்றிவிடுகிறேன்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...
பொறாமையா இருக்குங்க . இதெல்லாம் பார்க்க உங்களுக்கு எப்படித்தான் டைம் கிடைக்குதோ தெரியல.
பகிர்வுக்கு நன்றி.
மனமிருந்தால் மார்கமுண்டு சிவகுமார்.
Great (re)view!!!
thanks for adding torrent links
senthil
doha
சேரன் நடிப்பதை நிறுத்த வேண்டுமென்று தினமணி ரொம்ப நாளா அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. இதற்க்கு அவர் நடித்து மொக்கையாய் போன மாயக் கண்ணாடி, அப்புறம் சுமாராக ஓடிய இராமன் தேடிய சீதையை அவர்கள் கோடிட்டு காட்டுகிறார்கள். சேரனுக்கு நடிக்க வரவில்லையாம், [அழும் சீன் வந்தால், [எம்.ஜி.ஆர். பண்ணுவது மாதிரியே!] முகத்தை ரெண்டு கையாளும் மூடிக்கொண்டு ஓடிப்போய் தூணில் முட்டிக்க் கொண்டு அழுவது போன்ற விஷயங்களை வைத்து அதை அவர்கள் கூறுகிறார்கள். படம் இவருக்காக ஓடவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஆனால் படம் இவர் இருந்தும் ஓடியது அதிசயம் என்கிறார்கள். Autograph படம் ஓடியது அதில் நடித்த மற்ற நாயகிகள், மற்றும் நடிகர்களின் திறனால் தான், சேரன் ஒரு மைனஸ் என்கிறார்கள். சேரன் திருந்துவாரா?
அருமையான விமர்சனம் பிரபாகரன்....!
இந்த விமர்சனத்திற்குப் பிறகு யுத்தம் செய் படத்தைப் பார்க்கிறேனோ இல்லையோ கண்டிப்பாக மெமரிஸ் ஆப் மர்டர் பார்த்தே தீருவேன்.. ஆமாம். சன் டிவிகளில் நொடிக்கொரு தரம் ஓடும் அந்த யுத்தம் செய் விளம்பரம் கடுப்பை ஏத்துகிறது..
படத்தில் யார் அந்தக் கொலையாளி என்பதைக் கண்டுபிடித்தார்களா..? யார் அது..?
@ உண்மைத்தமிழன்
// படத்தில் யார் அந்தக் கொலையாளி என்பதைக் கண்டுபிடித்தார்களா..? யார் அது..? //
அது சஸ்பென்ஸ் என்றாலும் உங்களுக்காக சொல்கிறேன்... கண்டுபிடிக்கவில்லை...
Superb Review!! Waiting for more movies review!!!
சிறந்த உலக சினிமா திரைப்படங்களுக்கு தொடர்பு கொள்க
http://moviesnow69.blogspot.com/
Post a Comment