3 May 2011

பிரபா ஒயின்ஷாப் - 03052011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முஸ்கி: பி.எஸ்.என்.எல் கனெக்ஷன் நேரம் காலம் புரியாமல் பெப்பே காட்டுவதால் நேற்று வெளிவர வேண்டிய ஒயின்ஷாப் இடுகை இன்று...

நாட்டுநடப்பைப் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத நண்பர் ஒருவர் திடீரென டைம்ஸ் ஆப் இந்தியா, என்.டி.டி.வி என்று செய்தி இணையதளங்களை பார்வையிட்டபடி இருந்தார். என்னவென்று விசாரித்தேன். மனிதர் வார இறுதியை கோவாவில் கொண்டாடுவதாக முடிவு செய்து டிக்கெட் எடுத்து வைத்திருந்திருக்கிறார். இப்போது விமானிகள் ஸ்ட்ரைக் காரணமாக விமானம் பறக்குமா பறக்காதா...? பறக்கவில்லை என்றால் டிக்கெட் பணம் மீண்டும் கிடைக்குமா...? என்று தவித்திருக்கிறார். பாவம்யா...


சில படங்களைத் திரையரங்கம் சென்று மூன்று மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியாது. ஆனால் அதே படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது வசீகரிக்கும். அப்படி ஒரு படம்தான் பதினாறு. சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்ப, அரைத்த மாவுதான் என்றாலும் கிராமத்துக்காதல் சம்பந்தப்பட்ட போர்ஷன் முடியும்வரை படத்தில் இருந்து கவனம் சிதறவில்லை.


ஞாயிறு இரவு எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் சர்வதேச சூப்பர்ஸ்டார் வில்பர் சற்குணராஜின் பேட்டி ஒளிபரப்பானது. மனிதர் சீரியசாக பேசியே சிரிக்க வைக்கிறார். முழு நிகழ்ச்சியையும் கண்டுகழித்தேன்.


கிழக்கு பதிப்பகத்தின் டிஸ்கவுண்ட் சேல் இந்தமுறை ராயபுரம் வரை பாய்ந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சுஜாதாவின் மாயா, தீண்டும் இன்பம், ஹாய் மதன் இரண்டு பாகங்கள் ஆகியவைகளை கண்டதும் லபக்கினேன். பின்னர், ரஜினி சப்தமா..? சகாப்தமா...? உள்ளிட்ட மேலும் சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். ஒருகாலத்தில் 100, 150 ரூபாய் கொடுத்து வாங்கிய புத்தகங்கள் இப்போது 10, 20 ரூபாய்க்கு கிடைப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது.


இணைய நண்பர் ஒருவர் அவரது குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருந்தார். ஏற்கனவே அவரது திருமணத்திற்கு அழைத்தும் செல்லாததால் இந்தமுறை கட்டாயம் சென்றுவிட வேண்டுமென்று கிளம்பினேன். உள்ளே நுழைந்ததும் நண்பர் என்னை அடையாளம் கண்டுகொண்ட விதமாக சிரித்தமுகத்துடன் வரவேற்று உட்கார வைத்தார். சுமார், அரைமணிநேரம் கழித்து என்னிடம் வந்து ஓ... நீங்கதான் பிரபாகரா...? என்று கேட்க செம பல்பு வாங்கினேன்.

இந்தவார ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் காஜல் அகர்வால் செம க்யூட். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல...

ட்வீட் எடு கொண்டாடு:
ராதா மகளிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது! # இது வளர்த்த புருவமா முன்னூறு ரூவா குடுத்து வரைஞ்ச புருவமா!

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: கலைஞர் பேட்டி #யாருய்யா சொன்னா, எங்க முதல்வர் மக்கள் நல மேம்பாட்டுக்கு உழைப்பதில்லை என்று. வாழ்க முதல்வர்

முதல்முறையாக படம் பார்ப்பவனை சாகடிக்காமல், தான் செத்துப் போவதுபோல ஒரு படம் செய்திருக்கிறார் சொம்பு # வானம்

மே டே வாழ்த்து சொன்னவங்களை விட அஜீத் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவங்க தான் அதிகம் போல. ஹ்ம்ம்


பதிவுலகில் புதியவர்: விஜய்கோபால்சாமி
பழைய பதிவர்தான், ஆனாலும் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. இன்ட்லியில் உலவிக்கொண்டிருந்தபோது கிடைத்தார். லேட்டஸ்டாக கருணாநிதி டுவிட்டர் கணக்கு வைத்திருந்தால்...? எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறார் பாருங்கள். பாராட்டுவிழா நடத்துபவர்களுக்கு மத்தியில் பாசத்தலைவனுக்கு டெம்ப்ளேட் வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்.


இந்த வார பாடல்:
உத்தமபுத்திரன் படத்தில் இடிச்ச பச்சரிசி... என்றொரு கொண்டாட்டப்பாடல். வழக்கமாக இந்தப்பாடலை தொலைக்காட்சியில் பார்த்ததுமே டபக்கென்று சேனல் மாற்றிவிடுவேன். சில நாட்களுக்கு முன்பு வேறு வழியில்லாமல் கேட்டேன். நெனச்ச கனவு ஒன்னு நெஜமா நடந்திருச்சு... என்று ஆரம்பிக்கும் சரணம் வசீகரித்தது. அந்த பெண்குரல் செவிக்கினிமை. பாடியவர் பெயர் சந்கீதாவாம்.


இந்த வார புகைப்படம்:
இந்த போட்டோ உண்மையானது தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அந்த வண்டிகள் விழாமல் செல்லும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.


இந்த வார புதிர்:
ம்ம்ம்... எவ்வளவு கஷ்டமான புதிரைக் கேட்டாலும் பத்து பதினைந்து பேர் சரியான பதிலை சொல்லிவிடுகிறீர்கள். அப்புறம், மின்புத்தகம் வரலைன்னு சலிப்பு வேறு. இனி புதிர் போடுவதாக இல்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

32 comments:

ம.தி.சுதா said...

வந்துட்டேன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கு பி.பி அந்தப் புகைப்படத்தின் பிரமிப்பால் நான் இன்னும் மீளவே இல்லை...

ஏம்பா நம்ம ஓடைபக்கம் குளிக்கவே வாறதில்லை...

Unknown said...

மாப்ள ஒயின் நல்லா இருக்கு ஹிஹி!

cheena (சீனா) said...

சரக்கு சூப்பர் பிரபாகர் - ஒவ்வொண்ணையும் ரசிச்சுப் படிச்சேன் - விஜய்கோபால்சாமி வூட்டுக்கும் போய் படிச்சு - கொசுறா இன்ணொண்ணும் படிச்சுட்டு வந்தேன். வந்து இங்கே சூப்பர் படம் பாத்து ரசிச்சேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Prabu Krishna said...

கலக்கல் தான்.

பாலா said...

இந்த முறை போதை கொஞ்சம் கம்மிதான்.

சி.பி.செந்தில்குமார் said...

ஓக்கே.. போஸ்ட் நீட் //.... >>Mind_Valley
முதல்முறையாக படம் பார்ப்பவனை சாகடிக்காமல், தான் செத்துப் போவதுபோல ஒரு படம் செய்திருக்கிறார் சொம்பு # வானம்

NVaanathi
மே டே வாழ்த்து சொன்னவங்களை விட அஜீத் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவங்க தான் அதிகம் போல. ஹ்ம்ம்

இந்த 2ம் டாப்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மறுபடியும் ஒரு கலக்கல் மிக்ஸ்......!

அஞ்சா சிங்கம் said...

/////////////////கண்டு”கழித்தேன்”./////////////////

அட பாவமே நடு ஹால்லையே களிஞ்சிடீன்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Mind_Valleyமுதல்முறையாக படம் பார்ப்பவனை சாகடிக்காமல், தான் செத்துப் போவதுபோல ஒரு படம் செய்திருக்கிறார் சொம்பு # வானம்//////

அப்படின்னா படம் நல்லா வேற இருக்கா?

Unknown said...

வழக்கமா பதிவு போட்ட அடுத்த நாள் அவ்வளவு கூட்டம் இருக்காது. ஆனா இன்னைக்கும் 130 பேர் பாத்திருக்காங்கன்னு ஸ்டாட்ஸ் காட்டுச்சு. எல்லாம் உங்க வேலை தானா! மிக்க நன்றி.

test said...

//சுஜாதாவின் மாயா, தீண்டும் இன்பம், ஹாய் மதன் இரண்டு பாகங்கள் ஆகியவைகளை கண்டதும் லபக்கினேன்//
சூப்பர் பாஸ்! :-)

சுஜாதாவின் நிறையப் புத்தகங்களை வாங்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்! குறிப்பாக திரைக்கதை அமைப்பது எப்படி' க்கு அலைஞ்சிருக்கேன்! இன்னும் கிடைக்கல இலங்கைக்கு வந்திச்சோ தெரியல! கொடுத்துவச்சவங்க நீங்கெல்லாம்! :-)

Prabu M said...

நைஸ்....

அந்தப் படத்தில் இருப்பது ஹம்மர் தானே?

பதிவர் அறிமுகம் அருமை.. ட்வீட்ஸ் ருசிகரம்... நல்ல தொகுப்பு.....

Speed Master said...

வழக்கம் போல் கலக்கல்

சென்னை பித்தன் said...

இந்த ஒயின் நல்லா கிக் அடிக்கும் போல!

NKS.ஹாஜா மைதீன் said...

உங்கள் ஒயின்சாப்புக்கு இனி நானும் கஸ்டமர்..நலமா?

Unknown said...

///அப்புறம், மின்புத்தகம் வரலைன்னு சலிப்பு வேறு.///

அண்ணே யாரையோ குத்துறாராம்

என் செல்லம் காஜலுக்காக சும்மா விடுகிறேன் ,அட அட என்ன ஒரு வளைவு ,நெளிவு ,சுளிவு

இராஜராஜேஸ்வரி said...

தொகுப்புகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.பாராட்டுக்கள்.

Anonymous said...

///உள்ளே நுழைந்ததும் நண்பர் என்னை அடையாளம் கண்டுகொண்ட விதமாக சிரித்தமுகத்துடன் வரவேற்று உட்கார வைத்தார். சுமார், அரைமணிநேரம் கழித்து என்னிடம் வந்து “ஓ... நீங்கதான் பிரபாகரா...?” என்று கேட்க செம பல்பு வாங்கினேன்./// அப்போ அரை மணி நேரமா உங்களை பற்றி தான் சிந்தித்திருப்பார் போல . .))

Anonymous said...

////Pattapatti
ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: கலைஞர் பேட்டி #யாருய்யா சொன்னா, எங்க முதல்வர் மக்கள் நல மேம்பாட்டுக்கு உழைப்பதில்லை என்று. வாழ்க முதல்வர்//// ஆமால்ல ஹிஹிஹி

Anonymous said...

போட்டோ சூப்பர் ...... "ஒயின் ஷாப்"பும் சூப்பர்..

Anonymous said...

விமானம் பறக்கிறது முக்கியம் இல்ல. கொஞ்ச நாளா போலி பைலட்டுங்க சிக்கறாங்க. அதை நெனச்சாதான் திகிலா இருக்கு.

சக்தி கல்வி மையம் said...

மசாலா மிக்ஸ் அருமை சகோதரா..
அந்த பல்பு மேட்டர் ... இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

Unknown said...

செம போதை :)

கவிதை பூக்கள் பாலா said...

நம்ம கலைஞ்சர் தெருவுக்கு நாலு ஓய்ன்ஷாப் திறந்து விட்டிருக்காரு இதுல நீ வேற ஏன்யா ! ( ஆனாலும் இந்த போதை நல்ல தான் இருக்கு உடம்புக்கு கெடுதல் இல்லாம )

எம் அப்துல் காதர் said...

கலக்கல் நல்லா இருந்தது பிரபா!! எனக்கு ஏன் மின்புத்தகம் அனுப்பல? #டவுட்டு #

டக்கால்டி said...

Rasithen...

டக்கால்டி said...

Nigzhvu thoguppu arumai...

kumar said...

"" மனிதர் சீரியசாக பேசியே சிரிக்க வைக்கிறார்.""
அடுத்த T ராஜேந்தர்?
"" காஜல் அகர்வால் செம க்யூட். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல... ""
வாஸ்தவம் பாஸ்.

Sibhi Kumar SenthilKumar said...

//இந்த போட்டோ உண்மையானது தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அந்த வண்டிகள் விழாமல் செல்லும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.//

நீங்கள் பார்க்கும் இந்த வண்டிகளின் பெயர் 'ஹம்மர்' (பின் பக்கத்திலிருந்து பார்க்க 'இது H1 மாடல்' என்பதை யூகிக்க முடிகிறது). இவற்றில் உள்ள 'டிராக்ஷன் கண்ட்ரோல்' என்னும் தொழில்நுட்பம்தான் இவற்றை கீழே விழாமலும் கண்ட்ரோலை இழக்காமலும் இருக்கச் செய்கிறது. நம்ம ஊரிலும் 'ஹம்மர்' நிறைய பேர் (உதயநிதி ஸ்டாலின், ஹாரிஸ் ஜெயராஜ், கமலஹாசன், டோனி, ஹர்பஜன் சிங்....) வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வைத்திருப்பது H3 மாடல். இந்த H3 மாடலை வைத்துக்கொண்டு படத்தில் உள்ளது போல் பாறைகளில் ஓட்ட முடியாது! தாமதத்திற்கு வருந்துகிறேன்...

ஆதவா said...

எப்பவும் போல அருமைங்க!!!
உங்களை மாதிரியே நானும் வேண்டா வெறுப்பா ஒரு படம் பார்த்தேன். அது குள்ளநரிக்கூட்டம்.. லவ் போர்ஷன் முழுக்க, என்னையே நான் பார்த்துட்டமாதிரி இருந்தது!! போன்லயேதான் என்னோட காதலும் ஓடிச்சு.. அதான்.

கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த டிஸ்கவுண்ட் சேல் வந்துச்சுன்னா, எனக்கு மெயில் பண்ணுங்க... அவ்ங்க புத்தகப் பட்டியல் கிடைத்தாலும் தயவு செய்து அனுப்பிவையுங்கள் (aadava@gmail.com)

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு.
ரசிச்சுப் படிச்சேன்.