அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஒருவழியாக கலைஞர் ஆட்சி ஒழிந்தது என்று பார்த்தால் அம்மா ஆட்சி ஆரம்பித்துவிட்டது. முதல் அதிரடியாக புதிய சட்டமன்ற கட்டிடத்தை புறக்கணித்திருக்கிறார். (தியாகம் பண்றாங்களாமாம்...) இப்போது நம்ம வீட்டு வரிப்பணத்தை வாரியிறைத்து கட்டிய சட்டமன்ற கட்டிடம் வீணாகிவிட்டது. இதுவாவது பரவாயில்லை, இனி கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்படும், உழவர் சந்தைகள் மூடப்படும் இன்னும் என்னென்னவோ நடக்கும். ஆனாலும் அந்தம்மாவுக்கு ஈகோ ஜாஸ்தி. ம்ம்ம்... ஓட்டு போட்டாச்சு... இனிமே என்ன பண்ண முடியும்... இதைத்தான் எங்க ஊருல “நாயை மிதிப்பானே... &*%$# சுமப்பானே...” என்று சொல்வார்கள்.
இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடியாக இருந்தபோது சீனாவின் மக்கள்தொகை 127 கோடியாக இருந்தது. இப்போது இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி. சீனாவின் மக்கள்தொகையோ 134 கோடி. எப்படி நம்முடைய நாட்டின் வளர்ச்சி...? இப்படியே போனால் 2030ல் இந்தியா முதலிடத்தை அடைந்துவிடும் என்று புள்ளியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சென்ற வாரத்தில் ஒருநாள் ஆணி முடிந்து அலுவலக காரில் திரும்பிக்கொண்டிருந்தேன். போன் பேசியபடியே டிரைவர் வழக்கமான வழியை தவறவிட்டிருந்தார். போன் பேசி முடித்தபின் சுதாரித்து வழி மாறி வந்ததற்காக உச்சு கொட்டிக்கொண்டார். அப்போது மயிலை கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் வர, ஸ்டீயரிங்கில் இருந்து கைகளை எடுத்து கன்னத்தில் போட்டபடி “சாமிதாங்க நம்மள வழிமாறி வர வச்சிருக்கு...” என்று என் முகத்தைப் பார்த்து சிரித்தார். “சரியா சொன்னீங்கண்ணே...” என்று நானும் பதிலுக்கு சிரித்து தொலைத்தேன்.
வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வந்துக்கொண்டிருந்த வேளையில் சூப்பர்ஸ்டார் ரஜினி பற்றி ஒரு புரளி. அது என்ன புரளின்னு நான் சொல்ல விரும்பலை நீங்களே இங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க. எஸ்.எம்.எஸ்., மெயில் என்று பரப்புரைகள் பறக்க ரஜினி ரசிகர்கள் பயங்கர அப்செட். அவர்களை மகிழ்விக்க ஒரு ரஜினி ஜோக்...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவுக்கு துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார் = சர்வதேச தீவிரவாதி பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டான்...
முகமிலியில்... அட அதாங்க ஃபேஸ்புக்கில் உலவிக்கொண்டிருந்தபோது “ஸ்டில்ஸ்” ரவியின் ப்ரோபைல் கண்ணில் சிக்கியது. வளைத்து வளைத்து போட்டோ எடுத்து வைத்திருக்கிறார். எனக்கு பிடித்த போட்டோக்களை எல்லாம் சுட்டுக்கொண்டேன். காப்பிரைட் சிக்கல்கள் வருமா என்று தெரியாததால் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் இங்கே...
மொத்த ஆல்பங்களையும் பார்க்க இங்கே கிளிக்கவும்...
ட்வீட் எடு கொண்டாடு:
athisha அதிஷா
திரையுலகமே இணைந்து நடத்தும் பாசத்தலைவிக்கு பாராட்டுவிழா எப்போ! எப்போ! எப்போ! #சில்லியன்டால்ர்கேள்வி
RajanLeaks ராஜன்
’டீ சாப்பிட்டே பேசலாமா’ - சொக்கத்தங்கம் சோனியா ஜெயலலிதாவிடம்! # தாத்தா கவுத்துப்புட்டாய்ங்க தாத்தா!
kaattuvaasi காட்டுவாசி
தமிழ் - அழகாய் இருக்கிறாய்.... பயமாக இருக்கிறது... சென்தமிழ் - சோக்காக்கீறே... மெர்சலாக்கீது... #மொலிபெயர்ப்பு
Kaniyen கனியன்
நவீன சேகுவேரா மாதிரி தன்னை நினைத்துகொண்டு பேட்டியளித்த திருமா எங்கய்யா போனார்? # கிழிஞ்ச டவுசரை தைக்க ஊசிவாங்க போயிருப்பார்!
(அரசியல் முடிவுகள் வெளிவந்த நிலையில் நான்கு ட்வீட்டுக்களை மட்டும் தேர்ந்தெடுக்க ரொம்பவும் சிரமப்பட்டேன்... ஏகப்பட்ட கலக்கல் கலகல ட்வீட்ஸ்...)
பதிவுலகில் புதியவர்: “எழுத்துரு” கிருபாகரன்
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று சொல்லும் அளவிற்கு புத்தம்புதிய பதிவர். முதல் கஸ்டமராக அடியேன் தான் சேர்ந்தேன். தாய் வணக்கம் சொல்லி பதிவெழுத தொடங்கியிருக்கிறார். வடிவேலுவை வைத்து ஒரு காமெடி பதிவு போட்டிருந்தாலும் கவிதைதான் இவருடைய களம் என்று அறிகிறேன். இந்த ஹைக்கூ கவிதைகளை படித்துப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.
இந்த வாரப்பாடல்:
போனில் மெமரி கார்டில்லாத ஒரு பின்னிரவில் வேறு வழியின்றி பண்பலையில் பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒலிபரப்பானது அந்த அருமையான பாடல். “மழைபெய்யும் போது நனையாத யோகம்...” என்று ஆரம்பிக்கும் ரேணிகுண்டா படத்தின் பாடல். இசையும் இரவுக்கேற்றபடி இனிமையாய் இருந்தது. பாடல் வரிகள் அதைவிடவும் அருமை. காதலைப் பற்றி அந்தப்பாடலில்... “மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும்... பேசாமல் மெளனம் வந்து ஆராரோ பாடும்...”
இந்த வார புகைப்படம்:
இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் ஏனோ வடிவேலு ஞாபகம் வருகிறது... அய்யோ... அய்யோ... |
பின்நவீனத்துவம்:
- ஜட்டி போட்டுட்டு முட்டி போடா முடியும், ஆனா முட்டி போட்டுட்டு ஜட்டி போடா முடியாது.
கல்லூரி வாழ்க்கையின் மூன்று முத்தான நகைச்சுவைகள்:
1. மச்சான் டிஸ்டர்ப் பண்ணாதடா ,நான் படிக்கணும்.
2. ச்சே, கிளாஸ் இல்லை, வாங்கடா லைப்ரரி போலாம்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
3.சார், ஒன் டவுட்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
62 comments:
மாப்ள கிர்ருன்னு இருக்குய்யா விஷயம்லாம் நன்றி!
அன்பின் பிரபா = சூப்பர்பா - அத்தனையும் - ட்வீட் மற்றும் பதிவுலக புதியவர் செலக்சன் - சும்மா சொல்லக்கூடாது - அருமையான செலக்சன் . முட்டி போட்டு ஜட்டி போடறதுக்கு ஒரு டிசைன் பண்ணச் சொல்லிடுவோமா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
முதல் குடி மகன்
ரஜினி ஜோக், பதிவர் அறிமுகம், ட்வீட்ஸ் அனைத்தும் கலக்கல்
இன்று செம மப்பு தான் பி.பி.. அம்மாண்ணா சும்மாவா... இன்றும் உங்கள் படத்தை திருடுகிறேன்
\\முதல் அதிரடியாக புதிய சட்டமன்ற கட்டிடத்தை புறக்கணித்திருக்கிறார்.\\ நானூறு கோடி கமிஷன் அடிக்க பண்ணிய வேண்டாத வேலை அது, அதை ஏத்துக்கணும் என்ற அவசியம் அம்மாவுக்கு இல்லை. \\இனி கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்படும்\\ இவனுங்களுக்கு அழுத நாலாயிரம் கோடியில் அரசு மருத்துவ மனைகளை மேம்படுத்தியிருக்கலாம், இத்திட்டம் பெரிய பித்தலாட்ட வேலை என்று சிகிச்சை பெறச் சென்ற நண்பர்கள் கூறுகிறார்கள். [தாத்தாவுக்கு இதுல எவ்வளவு கமிஷனோ!] வீராணம் குழாயைப் போட்டு தாத்தா ஊழல் மட்டும்தான் பண்ணினார், அம்மா சென்னை நகரக் குடிநீர்ப் பிரச்சினையே தீர்த்து வச்சாங்களே அது உங்க கண்ணில படவேயில்லையா? அம்மா வந்தா, ரவுடிங்க தொல்லை குறையும், மேலும், பழைய தவறுகளை திருத்திகிட்டு நல்லாட்சி இல்லை என்றாலும், மொத்த மாநிலமும் ஒரே குடும்பம் கபளீகாரம் செய்யப் படாமல் தடுப்பார் என்று நம்புவோம்.
\\சென்ற வாரத்தில் ஒருநாள் ஆணி முடிந்து அலுவலக காரில் திரும்பிக்கொண்டிருந்தேன்.\\ ஆணி பிடுங்க ஆரம்பிச்சுட்டீங்களா? சொல்லவேயில்ல!!
\\சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவுக்கு துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார் = சர்வதேச தீவிரவாதி பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டான்...\\ சூப்பார்!!
மெழுகுவர்த்தி படம் டாப்பு. வடிவேலு வச்சிகிட்டது தனக்குத் தானே வேட்டு, இல்லாட்டி ஆப்பு!!
ஆட்சி பொறுத்திருந்து பார்ப்போம் பிரபாகர். நமக்கு பொறுமை என்பதே இல்லை.
சாமி விஷயம் அடுத்தவர்கள் நம்பிக்கையை நாம் கிண்டல் செய்வது தவறு.
பதிவர் அறிமுகம் குட்
அதான்.. அதேதான்..
ஆனாலும் அந்தம்மாவுக்கு ஈகோ ஜாஸ்தி. ம்ம்ம்... ஓட்டு போட்டாச்சு... இனிமே என்ன பண்ண முடியும்... இதைத்தான் எங்க ஊருல “நாயை மிதிப்பானே... &*%$# சுமப்பானே...” என்று சொல்வார்கள்.//
அவ்....அம்மாவின் ஆரம்பமே இடக்கு முடக்கா இல்லே இருக்கு..
உங்கள் ப்ளாக் என் டாஷ் போர்ட்டில் தெரியவில்லை என்பதால் பல பதிவுகளை மிஸ் பண்ணி விட்டேன். மீண்டும் பாலோவர் கொடுத்து ட்ரை பண்ணுறேன், தமிழ் மணம் மூலம் தான் இப்போது வந்தேன்.
ஒயின் செம கிக்கு சகோ.
ட்விட்ஸ், கல்லூரி வசனங்கள் எல்லாமே செம ஜோரு.
ஒயின் செம கிக்கு சகோ.
ட்விட்ஸ், கல்லூரி வசனங்கள் எல்லாமே செம ஜோரு.
சியர்ஸ் மாப்பு.
சி.பி.செந்தில்குமார் said...
முதல் குடி மகன்//
ஏலவே இரண்டு பேர் குடிச்சிட்டாங்க, நீங்க மூன்றாம் ஆளு,,உங்களுக்கு ஒயின் எல்லாம் வழங்கப்பட மாட்டாது, ஒன்லி பனங் கள்ளு தான் வழங்கப்படும்.
எல்லா மேட்டரும் நல்லாருக்கு, ரொம்பவே சிரத்தை எடுத்து எழுதி இருக்கீங்க....!
நம்ம மிஸ்டர் பீன்ஸ் முட்டி போட்டு ஜட்டி போட்டுடுவார்னு நினைக்கிறேன்..
ஒயின்ஷாப்ல எல்லா சரக்கும் சும்மா டக்கரா இருக்கு.
எல்லா மேட்டருமே ஓ கே தான்.
எல்லாக் கலவைகளும் பக்காவா இருக்கு! எனக்கு அந்த தத்துவம் ரொம்ப புடிச்சிருக்கு!
அந்த மெழுகுவர்த்தி படமும் - வடிவேலு கமென்ட்ம் ....ஆஹா..... கலக்கல்!
சட்டசபை மாற்றத்தை தொடங்கியதே கலைஞர்தானே. புதிய சட்டசபையே ராசி பார்த்து கட்டியது என்று பேச்சு அடிபடுகிறது. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கியதால் அவருக்கு என்ன பிரச்னை? ஏன் மாற்ற வேண்டும்? அதையும் கண்டித்து இருக்கலாம். வரிப்பணம் வீண் ஆகாது. அவ்விடம் ஏதேனும் உபயோகமான காரியத்திற்கு பயன்படுத்தப்படும். பொறுத்திருந்து பாருங்கள். இரு கட்சியில் ஒன்றுதான் ஆட்சிக்கு வரும் என்று தெளிவாக தெரிந்தும் அவர்களை ஏசி என்ன பயன் பிரபா? ஆமா நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க? அதை சொல்லுங்க. அப்புறம் பேசறேன்.
யோவ் என்னையா ரேவதி பாட்டி படத்தலாம் போடுற
///“சாமிதாங்க நம்மள வழிமாறி வர வச்சிருக்கு...” என்று என் முகத்தைப் பார்த்து சிரித்தார். “சரியா சொன்னீங்கண்ணே...” என்று நானும் பதிலுக்கு சிரித்து தொலைத்தேன்.///
இப்படிலாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசகூடாதுன்னு உங்க தலைவர் தானே சொல்லிருக்காரு
இன்னிக்கி செம் கிக்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே
http://speedsays.blogspot.com/2011/05/how-to-make-problems.html
//அப்போது மயிலை கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் வர, ஸ்டீயரிங்கில் இருந்து கைகளை எடுத்து கன்னத்தில் போட்டபடி “சாமிதாங்க நம்மள வழிமாறி வர வச்சிருக்கு...” என்று என் முகத்தைப் பார்த்து சிரித்தார். “சரியா சொன்னீங்கண்ணே...” என்று நானும் பதிலுக்கு சிரித்து தொலைத்தேன்.//
ஏற்கனவே என்னுடைய பதிவுகளில் சொன்னதுதான். தவறாக என்ன வேண்டாம். அது என்ன கடவுள் எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் இந்து மதத்தையே கிண்டிப்பார்க்கிறீர்கள்? தாங்கள் கூட பங்காரு அடிகள், மயிலை கோவில் என்றுதான் நக்கல் அடிக்கிறீர்கள். கடவுள் மறுப்பு என்று முடிவு செய்தபின் அனைத்து மத தவறுகளையும் சமமாக எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிடில் எந்த மத உணர்வையும் புண்படுத்தக்கூடாது.
அதற்கு எத்தனை பேர் தயார்? இந்து மதத்தை சேர்ந்தவன் என்ன நக்கல் செய்தாலும் வாயே திறக்க மாட்டான் என்றா? பிரபா, எனக்கு நியாயமான நேரடி பதில் மட்டுமே தேவை.
எல்லாமே கலக்கல் தான் ஆனாலும் அந்த முகமிலி போட்டோ ம்ம்ம் சொல்ல வார்த்தை இல்லை பி பி
ok...ok...
வைன்சாப் செம மப்பு
முகமிலி பத்தகம் அருமையான சொல். அனைத்து தொகுப்புகளும் ரசிக்கும்படி இருந்தன. பாராட்டுக்கள்.
ட்வீட்ஸ் நான்கும், வடிவேலு போட்டோவும்..சாரி..மெழுகுவத்தி போட்டோவும் சூப்பர்..
நேரில் சந்திக்கும் பொழுது ஏன் பிரபா அதிகம்(அல்ல அல்ல...அறவே) பேசுவதில்லை என்று நான் எண்ணியது உண்டு. அனால் இப்பொழுதான் தெரிகிறது அதற்கும் சேர்த்து அவர் தன் வலைத்தளத்தில் பேசுகிறார் என்று.
கலக்கி போட்டிங்க போங்க....
@ விக்கி உலகம், cheena (சீனா), சி.பி.செந்தில்குமார், ♔ம.தி.சுதா♔, Jayadev Das, எல் கே, கே.ஆர்.பி.செந்தில், நிரூபன், பன்னிக்குட்டி ராம்சாமி, தமிழ்வாசி - Prakash, Lakshmi, ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி, Chitra, ! சிவகுமார் !, நா.மணிவண்ணன், Speed Master, எம் அப்துல் காதர், ரஹீம் கஸாலி, FARHAN, இராஜராஜேஸ்வரி, Abdul Basith, சிராஜ்
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ Jayadev Das
// இவனுங்களுக்கு அழுத நாலாயிரம் கோடியில் அரசு மருத்துவ மனைகளை மேம்படுத்தியிருக்கலாம், இத்திட்டம் பெரிய பித்தலாட்ட வேலை என்று சிகிச்சை பெறச் சென்ற நண்பர்கள் கூறுகிறார்கள். [தாத்தாவுக்கு இதுல எவ்வளவு கமிஷனோ!] வீராணம் குழாயைப் போட்டு தாத்தா ஊழல் மட்டும்தான் பண்ணினார், அம்மா சென்னை நகரக் குடிநீர்ப் பிரச்சினையே தீர்த்து வச்சாங்களே அது உங்க கண்ணில படவேயில்லையா? அம்மா வந்தா, ரவுடிங்க தொல்லை குறையும், மேலும், பழைய தவறுகளை திருத்திகிட்டு நல்லாட்சி இல்லை என்றாலும், மொத்த மாநிலமும் ஒரே குடும்பம் கபளீகாரம் செய்யப் படாமல் தடுப்பார் என்று நம்புவோம். //
ம்ம்ம்... இவ்வளவு விஷயம் இருக்கிறதா... இருந்தாலும் நீங்க அம்மா ஆதரவாளர் போல தெரிகிறதே...
@ Jayadev Das
// ஆணி பிடுங்க ஆரம்பிச்சுட்டீங்களா? சொல்லவேயில்ல!! //
ஆமாம்... அது நடந்து ஒரு மாதத்துக்கு மேல ஆச்சு... சில சிக்கல்கள் இருந்ததால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை...
@ எல் கே
// ஆட்சி பொறுத்திருந்து பார்ப்போம் பிரபாகர். நமக்கு பொறுமை என்பதே இல்லை. //
ம்ம்ம் சரி பொறுத்திருந்து பார்ப்போம்...
// சாமி விஷயம் அடுத்தவர்கள் நம்பிக்கையை நாம் கிண்டல் செய்வது தவறு. //
அந்த மரியாதைக்காகத்தான் டிரைவரிடம் எதிர்கருத்து எதுவும் கூறாமல் ஆமோதித்தேன்...
@ ! சிவகுமார் !
// சட்டசபை மாற்றத்தை தொடங்கியதே கலைஞர்தானே. புதிய சட்டசபையே ராசி பார்த்து கட்டியது என்று பேச்சு அடிபடுகிறது. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கியதால் அவருக்கு என்ன பிரச்னை? ஏன் மாற்ற வேண்டும்? அதையும் கண்டித்து இருக்கலாம். //
அதற்கும் எனது கண்டனங்கள் உண்டு... எப்படியோ கட்டி முடித்தாகிவிட்டது, பயன்படுத்திக்கொள்ள வேண்டியது தானே...
@ ! சிவகுமார் !
// இரு கட்சியில் ஒன்றுதான் ஆட்சிக்கு வரும் என்று தெளிவாக தெரிந்தும் அவர்களை ஏசி என்ன பயன் பிரபா? ஆமா நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க? அதை சொல்லுங்க. அப்புறம் பேசறேன். //
நான் நீண்ட யோசனைகளுக்கும் கலந்தாய்வுகளுக்கும் பிறகு அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன்...
@ ! சிவகுமார் !
// அது என்ன கடவுள் எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் இந்து மதத்தையே கிண்டிப்பார்க்கிறீர்கள்? தாங்கள் கூட பங்காரு அடிகள், மயிலை கோவில் என்றுதான் நக்கல் அடிக்கிறீர்கள். கடவுள் மறுப்பு என்று முடிவு செய்தபின் அனைத்து மத தவறுகளையும் சமமாக எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிடில் எந்த மத உணர்வையும் புண்படுத்தக்கூடாது.
அதற்கு எத்தனை பேர் தயார்? இந்து மதத்தை சேர்ந்தவன் என்ன நக்கல் செய்தாலும் வாயே திறக்க மாட்டான் என்றா? பிரபா, எனக்கு நியாயமான நேரடி பதில் மட்டுமே தேவை. //
நான் பிறந்ததிலிருந்து எந்த மதத்தின் அபத்தங்களை பார்த்து, கேட்டு வளர்ந்தேனோ அந்த மதத்தை சாட மட்டுமே எனக்கு உரிமையுண்டு... எனக்கு பரிட்சயமில்லாத, படித்தும் தெரிந்துக்கொள்ளாத மற்ற மதங்களைப் பற்றி பேச நான் யார்...?
@ நா.மணிவண்ணன்
// யோவ் என்னையா ரேவதி பாட்டி படத்தலாம் போடுற //
ஏங்க நான் டி.ஆர்.ராஜகுமாரி படத்தைக் கூட போடுவேன்.... போட்டோவில் அவங்க குமரியா இருக்காங்களான்னு மட்டும் பாருங்க...
@ நா.மணிவண்ணன்
// இப்படிலாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசகூடாதுன்னு உங்க தலைவர் தானே சொல்லிருக்காரு //
யூ மீன் கமல்... அவருக்கு தலைவர் என்ற விளிப்பெல்லாம் கொடுக்கத் தேவையில்லை... அப்புறம் அவர் சொன்னது என்னன்னா... இப்போ நீங்க இருக்கீங்க, என்னை கெட்டவார்த்தைல திட்டணும்னு முடிவு பண்ணிட்டு என்னோட பிளாக்குக்கு வர்றீங்க... ஆனா மனசு மாறி திட்டாம போறீங்க இல்லையா... அதுதான், அந்த மனசுதான் கடவுள்...
//நான் பிறந்ததிலிருந்து எந்த மதத்தின் அபத்தங்களை பார்த்து, கேட்டு வளர்ந்தேனோ அந்த மதத்தை சாட மட்டுமே எனக்கு உரிமையுண்டு//
எங்கேயோ கேட்ட குரல்..
//எனக்கு பரிட்சயமில்லாத, படித்தும் தெரிந்துக்கொள்ளாத மற்ற மதங்களைப் பற்றி பேச நான் யார்?//
பிற மத அபத்தங்கள் பற்றி இதுவரை தாங்கள் எதையுமே கேள்விப்பட்டது கூட இல்லையா? செம காமெடி பிரபா. 100% நம்பவே மாட்டேன். எழுதினால் ஏற்படும் விளைவுகள் குறித்த பயம்தான் காரணம் என்று எண்ணத்தோன்றுகிறது.நேரில் மேலும் விரிவாக பேசுகிறேன்.
//1. மச்சான் டிஸ்டர்ப் பண்ணாதடா ,நான் படிக்கணும்.
2. ச்சே, கிளாஸ் இல்லை, வாங்கடா லைப்ரரி போலாம்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
3.சார், ஒன் டவுட்.//
இப்போதான் பிரபா நான் காலேஜ் முடித்தேன்.
எல்லாமே அருமை.
பதில்களை ரசித்தேன்
அப்பஉங்கள திட்ட ஐடியா இல்லாம வந்து ஆனாலும் உங்கள கெட்ட வார்த்தைல திட்டிட்டு போறாங்களே அவர்கள் எல்லாம் சைத்தானா ? டவுட் (நாங்களும் கொஞ்சம் கொடூரமா யோசிக்கிரவிங்கதான் )
\\நீங்க அம்மா ஆதரவாளர் போல தெரிகிறதே...\\ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல் பண்ணினார் என்றால் என்னை பார்ப்பனன் என்பீர்களா? என்ன பிரபா, ஒரு சினிமாவுக்குப் போனா அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு அலசி காயப் போடுற உங்க திறமையை இங்கேயும் கொஞ்சம் பயன் படுத்துங்களேன்! என்னதான் அரசியல்வாதிங்க கொள்ளையடிச்சாலும் எனது மொழி, எனது மாநிலம், எனது மக்கள் என்ற உணர்வு கொஞ்சமாவது மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படி துளி கூட இல்லாத ஒரே மாநில முதலமைச்சர் என்றால் அது இந்த மஞ்சள் துண்டுதான். இவருக்கு சுயநலம், குடும்ப நலம்தான் முக்கியம். அதற்காக எதை வேண்டுமானாலும் பலி கொடுப்பார். ஹிந்தி படிக்காதீர்கள் என்று தமிழர்களைத் தடுத்தார்களே அது மொழியைக் காக்க அல்ல, தமிழ்க் காவலன் என்று சொல்லி தனது கட்சியை வளர்க்க, அதனால் வீணாய்ப் போனது நாம்தான். விதிமுறைகளுக்கு மீறி கர்நாடகம் இரண்டு அணைகளை காவிரியின் குறுக்கே கட்டியது, அன்று இவர் அதில் கையெழுத்திட்டு இன்றளவும் தீராத பிரச்சினை ஆக்கிவிட்டார், அதற்க்கு ஒரே காரணம், இவர் வீராணம் ஊழலில் இருந்து தப்பிக்க. இன்றைக்கும், இவரது சொந்த பந்தங்களுக்கு பதவி வேண்டி வீல் சேரில் டில்லி போவார், மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கும் அன்று ரம்பாவின் திருமண வரவேர்ப்புக்குப் போய்விட்டு ஸ்டாலினை அனுப்புவார். இவருக்கு வேண்டிய அமைச்சரவைகளை வழங்காவிட்டால் ஆதரவை வாபஸ் வாங்குவேன் என மிரட்டுவார், ஆனால் அண்டை மாநில நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சொல்லி ஒரு போதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார். ஏனென்றால் தமிழன் வாழ்ந்து இவருக்கென்ன பயன் கிடைக்கப் போகிறது?
இவரது திட்டங்களும், இவருக்கு கமிஷன், இவர் குடும்பத்துக்கு வருமானம் என்ற குறிக்கோளோடுதான் இருக்குமே தவிர மக்களுக்கு நன்மை என்று இருக்காது. வண்ணத் தொலைகாட்சி, அதை வாங்க கொடுத்த ஆர்டரில் கமிஷன், அதற்க்கப்புறம் கேபிளில் இவர் குடும்பத்துக்கு வருமானம். அடுத்த இரண்டே வருடத்தில் அது குப்பைக்குப் போய்விடும். அப்பேற்பட்ட தரம். [போனால் தான் என்ன்ன இவருக்குத்தான் கமிஷன் வந்துவிட்டதே!]. அரசு செலவில் இவருக்கு வருமானம். மருத்துவக் காப்பீட்டில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத்தான் லாபம், சிகிச்சைக்குச் செல்பவர்களிடம், அது கவராகவில்லை, இது கவராகவில்லை என்று பிடுங்கி விடுகிறார்கள். தாத்தாவுக்கு வருஷத்துக்கு நாலாயிரம் கோடியில் எத்தனை கமிஷனோ, யாருக்குத் தெரியும்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு லட்சம் கோடிகளில் வருமான இழப்பு ஏற்ப்படும் என்று நன்றாகத் தெரிந்தே கமிஷனுக்கு கமிஷனுக்குப் பிறந்த இவர்கள், சொற்ப விலைக்கு விற்குமாறு மோசடி செய்தார்கள், வாநிகியவர்கள் எல்லாம் உடனடியாக விற்று ஆயிரக் கணக்கான கோடிகளில் லாபம் பார்த்தனர், அம்பானி கொழுத்தான். இது இவர்களது நாட்டுப் பற்று. விவசாய நிலங்களுக்கு வேலைக்கு யாரும் செல்வதில்லை, காரணம், இலவச அரிசி, நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம். நதி நீர்ப் பிரச்சினைகள் இன்னொரு பக்கம், வெறுத்துபோய் விவசாயி விஷம் குடிக்க வேண்டும், இல்லாவிட்டா இவர்களிடம் விற்றுவிட்டுப் போக வேண்டும், இவர்கள் அடிமாட்டு விளக்கு வாங்கி அந்நிய நிறுவனங்களுக்கு ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை விற்றுத் தள்ளி விட்டனர். இன்னொரு பக்கம் மணல் கொள்ளை, சாராய வியாபாரம், ரவுடிகள் தொல்லை, திரைபடத் தயாரிப்பு, தியேட்டர்கள், ரியல் எஸ்ட்டேட், கேபிள் என்று அத்தனையிலும் இவர்கள் ஆதிக்கம், இவர்களுக்கு மேல் இவர்கள் அமைச்சர்கள், கண்ணில் கண்டேதேல்லாம் வாங்கித் தள்ளினார்கள். இத்தனை இருந்தும், இவரை மெச்சச் சொல்கிறீர்களா?
ஜெயலலிதா அம்மாவை எடுத்துக் கொண்டால், அவர் ஆட்சி செய்த போது, தாங்க முடியவில்லை, வேறு யாரவது வந்தால் பரவாயில்லை என்றுதான் தோன்றியது, ஆனால் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி, வரலாறு காணாத கேவலமான ஆட்சி, இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அட்டூழியம், இதற்க்கு ஜெவே மேல் என்று எண்ணத் தோன்றியது. கொஞ்சம் கொள்ளை, கொஞ்சம் மக்கள் நலன் என்று கூட இல்லாமல் நூறு சதம் கொள்ளை, என்று போகிற ஆளை என்ன செய்வது? அம்மாவின் ஆட்சியில், நிச்சயம் ரவுடிகள் தொல்லை இருக்காது, தீவிரவாத அமைப்புகள் ஒடுக்கப் படும், வீரப்பன் மாதிரி ஆட்கள் போட்டுத் தள்ளப் படுவார்கள். இதற்கும் மேல், அம்மா பழைய தவறுகளைச் செய்யாமல் இருந்தாலே போதும், அந்த ஆட்சி, நடந்தது முடிந்த கருமாந்திர ஆட்சியை விட எவ்வளவோ மேலாக இருக்கும் என்பது என் எதிர் பார்ப்பு. இருப்பதே இரண்டு பேர்தான், வேறென்னதான் செய்ய முடியும்?
Praba, I totally agree with Jayadev!
@ ! சிவகுமார் !
// Praba, I totally agree with Jayadev! //
ஜெயதேவ் தாஸ் அவர்கள் சென்னை வரட்டும் கும்மிடலாம் :)
@ Jayadev Das
மறுபடியும் உங்க கைய பிடிச்சு இழுத்து வலைப்பூ ஆரம்பிக்க வைக்கலாம்னு நினைக்கிறேன்... என்ன சொல்றீங்க...
@ நா.மணிவண்ணன்
// அப்பஉங்கள திட்ட ஐடியா இல்லாம வந்து ஆனாலும் உங்கள கெட்ட வார்த்தைல திட்டிட்டு போறாங்களே அவர்கள் எல்லாம் சைத்தானா ? டவுட் (நாங்களும் கொஞ்சம் கொடூரமா யோசிக்கிரவிங்கதான் ) //
யோவ்... ஏன்யா இப்படி...??? ஏன்..???
@ ! சிவகுமார் !
// எங்கேயோ கேட்ட குரல்.. //
யார் அந்த இன்னொரு குரல்...
// பிற மத அபத்தங்கள் பற்றி இதுவரை தாங்கள் எதையுமே கேள்விப்பட்டது கூட இல்லையா? செம காமெடி பிரபா. //
கேள்விப்பட்டிருக்கிறேன்... மூன்று வருடங்கள் இசுலாமிய நண்பன் ஒருவனுடன் குப்பை கொட்டியிருக்கிறேன்... எனினும் அதைப்பற்றி எழுத எனக்கு உரிமையில்லை என்றே நினைக்கிறேன்...
////நவீன சேகுவேரா மாதிரி தன்னை நினைத்துகொண்டு பேட்டியளித்த திருமா எங்கய்யா போனார்? # கிழிஞ்ச டவுசரை தைக்க ஊசிவாங்க போயிருப்பார்!//// யாராவது திருமா விசிறிகள் இல்லையா இங்கே ஹிஹிஹி
போட்டோ சூப்பர்............ வடிவேலு தனக்கு தானே வச்சுக்கிட்ட ஆப்பு
அனைத்தும் கலக்கல் பாஸ் ...
பகிர்வுக்கு நன்றி பிரபா..
i m late asusual...Super post...Thanks for sharing
// யார் அந்த இன்னொரு குரல்...//
KAMAL
/எனினும் அதைப்பற்றி எழுத எனக்கு உரிமையில்லை என்றே நினைக்கிறேன்...///
அதெப்படி உரிமை இல்லை. உண்மையான பகுத்தறிவு வாதி/கடவுள் மறுப்பாளன் என்றால் அதையும் செய்யணும். அதை விட்டுட்டு ஹிந்து மதத்தை மட்டும் பழித்தால் அதுக்கு பேரு போலித்தனம்.
ட்வீட் அத்தனையும் சூப்பர் பா ,,,,,,
சுருக்கமா அதே நேரம் நறுக்கென எல்லா செய்தியையும் விளக்கியுள்ளீர்கள் .சூப்பர்
Post a Comment