1 May 2011

நான் அஜித் ரசிகன் - ஏன்...?

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்று பிறந்தநாள் காணும் "தல" அஜித் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களோடு இந்த இடுகையையும் சமர்ப்பிக்கிறேன். நான் அஜித் ரசிகனானது எப்படி என்பதை இந்த இடுகையில் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்...


சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பப்படம் என்ற பெயரில் சரத்குமார், சத்யராஜ் படங்களுக்கு மட்டுமே என்னை அழைத்துச்செல்வார்கள். உனக்கு பிடித்த நடிகர் யாரென்று யாராவது கேட்டால் சரத்குமார் என்றுதான் சொல்லுவேன். என்னுடைய விருப்பமே இல்லாமல் அந்த விருப்பம் என்மீது திணிக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது முதல்முறையாக நண்பர்களுடன் திரையரங்கம் செல்லும் உரிமை கிடைத்தது. அதுவும் தூரத்தில் உள்ள மாநகர திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை. நடந்து செல்லும் தொலைவில் உள்ள ஓடியன்மணிக்கோ, எம்.எஸ்.எம் திரையரங்கிற்கோ தான் செல்லவேண்டும். வெங்கடேஸ்வரா, ராகவேந்திரா திரையரங்குகளில் பிட்டுப்படங்கள் மட்டுமே வெளியிடுவார்கள் என்பதால் அதற்கும் அனுமதி மறுப்பு தான்.

ஆக, இந்த இரண்டு திரையரங்குகளில் ஒன்றில் தீனாவும் மற்றொன்றில் ஃபிரண்ட்ஸ் படமும் ஓடிக்கொண்டிருந்தன. நான் தன்னிச்சையாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாத காரணத்தால் நண்பர்கள் முடிவின்படி தீனா படத்திற்கு சென்றோம். அதுவே அஜித்துக்கும் எனக்குமான உறவின் முதல் படி. அடிதடி, ஆக்ஷன், பஞ்ச் டயலாக் போன்றவற்றால் சூடேறி கொஞ்சம் அஜித் கவர ஆரம்பித்தார்.


கொஞ்ச நாளைக்கு அந்த பஞ்ச் டயலாக்குகளை மனப்பாடம் செய்து சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எனது எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் விதமாக சிட்டிசன் வெளியானது. படம் வெளியான இரண்டாவது நாளே பார்த்து அப்புறம் வெறியாகி நாற்பத்தைந்து நாட்களுக்குள் படத்தை கெட்டப்புக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒன்பது முறை பார்த்துவிட்டேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது.

இப்படியெல்லாம் இருந்தாலும் பேனருக்கு பாலபிஷேகம் செய்வது, கோஷம் போடுவது போன்ற அபத்தங்கள் எதையும் செய்ததில்லை. அதற்கு காரணம் எனக்கு அதெல்லாம் செய்யத் தெரியாதது என்று கூட சொல்லலாம். அதற்கடுத்து ரெட் படத்தின் தோல்வியால் கொஞ்சம் வேகம் குறைந்தது.

அடுத்த ஆண்டே தளபதியின் பகவதியும், தலயின் வில்லனும் ஒரே நாளில் வெளியானது. பள்ளியில் அஜித் ரசிகர்கள் - விஜய் ரசிகர்கள் என்று குருப் அமைத்துக்கொண்டு சண்டை போட்டதுண்டு. அப்புறம் பத்தாம் வகுப்பு வந்ததும் கொஞ்சம் படிப்பு, பருவப்பெண்கள் என்று திசைமாறி சினிமா ஆர்வம்  குறைந்தது. அஜித்துக்கும் ராஜா, ஆஞ்சநேயா, ஜனா என்று தொடர்ந்து சறுக்கல்கள்.

அட்டகாசம் படம் வெளிவரும்போது அடித்துபிடித்து முதல்நாள் முதல்காட்சி பார்க்கும் அளவிற்கு தேறியிருந்தேன். அநேகமாக அதற்குப்பின் வெளிவந்த அனைத்து அஜித் படங்களையும் முதல்நாள் முதல்காட்சி தான் பார்த்தேன் என்று எண்ணுகிறேன் (ஜி படத்தை தவிர்த்து). நாளடைவில் அஜித் படங்கள் மொக்கையாக இருந்தாலும் தல என்ற மந்திரச்சொல்லுக்காகவே படத்தை ரசிக்க ஆரம்பித்தேன். மேலும், அஜீத்தைப் பற்றி ஊடகங்கள் சொன்ன பர்சனல் பக்கங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். அவர் சத்தமில்லாமல் செய்துவரும் சமூக சேவைகள், அவரது மேன்லிநெஸ், ஜென்டில்நெஸ் என்று நிறைய பிடித்திருந்தது.

பில்லா படம் வெளிவந்தபோது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி நண்பர்கள் பலரும் அஜித் ரசிகர்கள் என்பதால் விடுதி முழுவதும் திருவிழா போல காட்சியளித்தது. குறிப்பாக பில்லா பாடல்கள், ட்ரைலர் வெளியான தினங்களெல்லாம் கொண்டாட்டம்தான். டிவி ரூமில் பில்லா ட்ரைலர் சத்தத்தை கேட்டால் எல்லா ரூம்களில் இருந்தும் நண்பர்கள் ஓடி வருவார்கள்.

ஏகன் படம் வெளிவந்தபோது ஆர்குட் அஜித் கம்யூனிட்டி தான் எனது இன்னொரு வீடு. சதா சர்வகாலமும் அஜீத்தைப் பற்றிய செய்திகளை படித்து  அகமகிழ்ந்துக் கொண்டிருப்பேன். போகப்போக அந்த ரசிக மோகம் கொஞ்சம் சலிக்க ஆரம்பித்தது என்றால் அது அந்த ஆர்குட் கம்யூனிட்டி அஜித் ரசிகர்கள் தான் காரணம் என்று சொல்லுவேன். ஏகன் படம் வெளியாவதற்கு முந்தய இரவு. மறுநாள் காலைக்காட்சிக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன். ப்ரீமியர் ஷோ பார்த்த ரசிகர்கள் சிலர் அஜித் - ஜெயராம் காமெடி அட்டகாசமாக இருக்கிறது, அஜித்தின் டான்ஸ், இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்றெல்லாம் வெறியேற்றிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை அந்த எதிர்பார்ப்புகளோடு படம்பார்த்து எல்லாம் தவிடுபொடியாக, அஜித் ஃபேன்ஸ் என்றாலே அட கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு கடுப்பாகிவிட்டது.

ஆனலும் அஜித் மீதுள்ள கிரேஸ் மட்டும் குறையவில்லை. குறையவும் குறையாது. அசல் படம் வெளிவந்தபோது நான் பதிவுலகின் அரவணைப்பில் இருந்தேன். அப்போது ஒரு மேடைப்பேச்சில் "மிரட்டுறாங்க..." என்று தைரியமாக அஜித் பேசியது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, "நான் நடிகன் அரசியலுக்கு வரமாட்டேன்..." என்று அழுத்தம் திருத்தமாக கூறியது போன்ற சம்பவங்கள் அவர் மீதுகொண்ட மரியாதை எக்கச்சக்கமாக கூடியது.


இப்போது மங்காத்தா வெளிவரவுள்ள நிலையில் 50வது படம், கிரிக்கெட் சூதாட்ட கதை, தாராவி, நெகடிவ் ரோல், நடிகர் பட்டாளம், வெங்கட் பிரபு, யுவன் என்று பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளோடு காத்துக்கொண்டிருக்கிறேன். காத்துக்கொண்டிருக்கிறோம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 comments:

சி.பி.செந்தில்குமார் said...

மொத தல

சி.பி.செந்தில்குமார் said...

ரசிகர் மன்றங்களை கலைத்த தைரியம் இப்போதுள்ள எந்த நடிகர்க்கும் வராது

Unknown said...

பகிர்வுக்கு நன்றி நண்பா!

Unknown said...

அஜித்துக்கு வாழ்த்துக்கள். பிறந்த நாளுக்கும் ரசிகர் மன்றங்களைக் கலைத்ததற்கும்.....

test said...

ஓ! அண்ணன் தீ....விர ரசிகனா? பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்துக்கு!

தமிழ்வாசி பிரகாஷ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல...

உலக சினிமா ரசிகன் said...

இயக்குனர் கே.சுபாஷ் படம் ஒரு தீபாவளிக்கு ரீலிஸ் ஆகியது.நான்“தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்”என்ற டிவி நிகழ்ச்சிக்காக இயக்குனர் சுபாசை பேட்டி எடுத்தேன்.அவர் பேட்டி முடிந்ததும் அறை மூலையில் சேட்டு பையன் போல் இருந்த ஒரு பையனைக்காட்டி“இந்தப்பையன்தான் படத்தின் ஹீரோ.இவனையும் பேட்டி எடுத்து உங்கள் நிகழ்ச்சியில் போடுங்கள்”என வேண்டினார். “இயக்குனர் பேட்டி மட்டும்தான் நிகழ்ச்சியின் கரு”என நாசூக்காக மறுத்தேன்.அவர்“புதுப்பையன்..நல்ல பையன்.நல்லா வருவான்.உங்க நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி புரோமோட் பண்ணுங்க”என வற்ப்புறுத்தினார்.நான் வேண்டாவெறுப்பாக பேட்டி எடுத்து ச்சென்றேன்.தமிழ் சரியாகப்பேசாமல் தத்தக்காபித்தக்கா எனப்பேசி நிறைய டேக் வாங்கி ஒரு வழியாக எடுத்து முடித்தேன். “நிகழ்ச்சியில் என்னை விட இந்தப்பையனை அதிக நேரம் காட்டுங்கள்”என மீண்டும் வற்ப்புறுத்தி விடை கொடுத்தார் இயக்குனர்.எடிட்டிங்கில் அந்தப்பையன் பேட்டியை வெட்டி எறிந்து விட்டேன்.அந்தப்பையன் தன்னுடைய பேட்டி வெளியாகாததால் மிகவும் வறுத்தப்பட்டதாக பின்னால் கேள்விப்பட்டேன்.அந்த சிவத்த பையன்...அஜீத்.சத்தியமாக அந்த அஜீத் இப்படி விஸ்வரூபம் எடுப்பார் என ஒரு சதவீதம் கூட நினைத்து பார்க்கவில்லை.யாருடைய உதவி இல்லாமல் வளர்ந்த சுயம்பு அஜீத்துக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்துக்கு.

செங்கோவி said...

தல தல தான்!

yeskha said...

ஆனால் எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு வருத்தம்.. ஏன்தான் அஜீத் இப்படி யோசித்து யோசித்து மிக மொக்கை படங்களாகவே பார்த்து பார்த்து ஒப்புக்கொள்கிறாரோ தெரியவில்லை... வரிசையாக தோல்விப்படங்களே... மூன்று வருடங்களுக்கு ஒரு ஹிட் கொடுக்கிறார்...

ஆந்திரா பக்கம் ரவிதேஜா பட்டையைக்கிளப்பிக்கொண்டிருக்கிறார். அதில் இரண்டு ஜாலி படங்களை ரீமேக் செய்தாவது நடிக்கலாம்... ஆசையாகக் காத்திருக்கிறோம் அதுபோல அஜீத்தை பார்ப்பதற்கு..

எனக்கு டெர்ராக ஒரு டவுட்டும் உண்டு.. இந்த தோல்விப்படங்களெல்லாம் தற்செயலாக அமைகிறதா? அல்லது யாரேனும் (???) திட்டம் போட்டு புது டைரக்டர்களை அனுப்பி அஜீத்துக்கு தோல்விப்படங்களை உருவாக்குகிறார்களா??

2002-க்கு பிறகு வந்த படங்களில் 90 சதவீதம் தோல்விப்படங்களே...
ஆழ்வார், ஜனா, ஜி, ஏகன், அசல், திருப்பதி, பரமசிவன், ஆஞ்சநேயா, ராஜா, ரெட்.... என எத்தனையெத்தனை???? அட்டகாசம், கிரீடம், மட்டும் ஒரளவு நன்றாக ஓடிய படங்கள்... வில்லன், வரலாறு, பில்லா என மூன்றே ஹிட்ஸ் கடந்த ஒன்பது வருடங்களில்....

pichaikaaran said...

நீண்ட நாள் கழித்து , பழைய பிரபாரனை சந்தித்த மகிழ்ச்சி உண்டானது . அருமை . படங்களுடன் , நம் வளர்ச்சியை தொடர்பு படுத்தி யோசிப்பது சுவையானது . ஆசை, காதல் கோட்டை , பில்லா என ஒவ்வொரு படம் பார்க்கும்போது என் நிலை மாறி வருவதை நானும் யோசிக்கிறேன் .

Anonymous said...

டேய் ஒரு நடிகனுக்கு ஜால்ரா அடிக்கிறதையும் அவன்ட பிறந்த நாளை பெரிசாக்குரத்தையும் முதல்ல நிறுத்துங்கடா.........அவன்ட பிறந்த நாளால உங்களுக்கு என்னடா கிடைக்க போகுது....

சக்தி கல்வி மையம் said...

ஆஹா... நீங்களும் நம்ம தல அஜித் ரசிகரா.. வாழ்த்துக்கள்..

Sathish said...

தல தலதாம்ல..

FARHAN said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல

Unknown said...

நானும் மங்கத்தாவுக்காக காத்து கொண்டிருக்கிறேன்

சாமக்கோடங்கி said...

நடிகரைத் தாண்டி ஒரு நல்ல மனிதன் என்ற வகையில் அஜித்தை எனக்கு பிடிக்கிறது..

தோன்றியதை வெளிப்படையாகப் பேசும் குணம், பதவி, பட்டங்களின் மீது ஆசை இன்மை போன்ற விஷயங்கள் அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை.

படங்களைத் தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் இன்னும் முன்னேறி இருந்திருப்பார்.. இப்போதும் ஒன்றும் குறையவில்லை.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

நல்ல பதிவு நண்பா.

ரஹீம் கஸ்ஸாலி said...

தனது ரசிகர் மன்றத்தினரை சுயநலத்திற்காக பயன் படுத்தியும், தேர்தலுக்கு தேர்தல் ஏதாவது ஒரு கட்சிக்கு காவடி தூக்க வைத்து கொண்டுமிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் தனது மன்றத்தையே கலைத்த அஜித் ஒரு வித்தியாசமான மனிதர்.

நர்மதன் said...

Happy birthday thala

டக்கால்டி said...

நடிகரைத் தாண்டி ஒரு நல்ல மனிதன் என்ற வகையில் அஜித்தை எனக்கு பிடிக்கிறது..

தோன்றியதை வெளிப்படையாகப் பேசும் குணம், பதவி, பட்டங்களின் மீது ஆசை இன்மை போன்ற விஷயங்கள் அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை.

படங்களைத் தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் இன்னும் முன்னேறி இருந்திருப்பார்.. இப்போதும் ஒன்றும் குறையவில்லை.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கவிதை பூக்கள் பாலா said...

தோன்றியதை வெளிப்படையாகப் பேசும் குணம், பதவி, பட்டங்களின் மீது ஆசை இன்மை போன்ற விஷயங்கள் அவரிடம் இருந்து நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.

சூனிய விகடன் said...

தல ரசிகர்களே...உங்களுக்கு புண்ணியமாப்போகட்டும்.....உங்க தல கிட்ட சொல்லி " கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு குறுக்கு நெடுக்கா பரேடு நடக்கராமாதிரி போறது .....பாட்டு சீன்ல கேமராவைப் பாத்துகிட்டே ஆடுறது.......அப்புறம் எந்த சீனா இருந்தாலும் எழவு வீட்டுக்குப் போனவனாட்டமே மூஞ்சிய வச்சிருக்கறது ...லவ் சீன்ல பேசும் போதும் வாயில வெங்கைக்கல்லை போட்டுக்கிட்டு கொழ கொழன்கிறது "....இதையெல்லாம் மங்காத்தாவில எடிட்டிங்குல கட் பண்ணிடச்சொல்லுங்களேன்.....ப்ளீஸ்...

ம.தி.சுதா said...

பி பி என் வாழ்த்துக்களையும் தலக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

"ராஜா" said...

நீங்களும் தல ரசிகரா? நானும் தலையின் ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து விடுவேன் ..

படம் மொக்கை என்றாள் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது விடு தல அடுத்த படத்துல பாத்துக்கிடலாம் என்று நம்பிக்கையோடு வெளியே வருவார்கள் .. படம் நன்றாக இருந்து விட்டால் நான்கு நாட்களுக்கு தியேட்டற்பக்கம் நெருங்க முடியாது ... திரும்ப திரும்ப பார்த்து தங்கள் நீண்ட நாள் தாகத்தை தீர்த்து கொள்ளுவார்கள் .. இப்படி பட்ட ரசிகர்கள் எனக்கு தெரிந்து தலைக்கு மட்டுமே ...

அமர்க்களம் படத்தில் இருந்துதான் தலைக்கு இப்படிபட்ட ரசிகர்கள் உருவானார்கள் ... தீனா அவர் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனை ... சிட்டிசன் படம் விமர்சகர்களால் குப்பை என்று ஒதுக்கபட்டாலும் மிக பெரிய வசூலை குவிக்க காரணம் தீனாவின் மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்களே ... உங்களை போல நானும் அந்த படத்தை கெட்டப்புக்கு ஒரு தடவை என்று கணக்கு வைத்து பார்த்தேன் ...

ஒரு விஷயம் கவனித்து இருக்கிறீர்களா? அஜீத் படம் ஒன்று தோல்வி அடைந்து விட்டால் அவரின் அடுத்த படத்திர்க்கு மிக பெரிய ஓபனிங் அமையும் ...


உங்களை போல நானும் மாங்காத்தாவை அதிகம் எதிர்பார்க்கிறேன் ... ஏமாற்றினாலும் கொஞ்சம் கூட அந்த எதிர்பார்ப்பு குறையாமல் பில்லா -2 வை எதிர்பாத்து கொண்டிருப்பேன் ... காரணம் எனக்கு நடிகன் அஜீத்தைவிட ஒரு மனிதனாக அஜித்தை ஒரு படி மேலே பிடிக்கும் ...

Sivakasikaran said...

@பிரபாகரன் : உணமையான வார்த்தைகள்.. தல தல தான்..

@சூனிய விகடன் : ஒருத்தருக்குப் பிறந்த நாள் என்றால் இப்படித்தான் வாழ்த்துவீர்களோ? உங்கள் மாண்பை நினைக்கும் போது அப்படியே புல்லரித்துப்போகிறது

பாலா said...

தல போல வருமா?

Prabu Krishna said...

Belated wishes

Unknown said...

now onwards my hero

My Blog said...

I admired Ajith Always as a Human and also a Hero. Very realistic............

My Blog said...

அஜித்துக்கு வாழ்த்துக்கள்.