29 May 2011

மாவீரன் - காஜல் ஸ்பெஷல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பொதுவாக நான் டப்பிங் படங்கள் பார்ப்பதில்லை. அதிலும் தெலுங்கு டப்பிங் படங்கள் என்றால் கண்டிப்பாக உவ்வே. இருந்தாலும் மாவீரன் படத்தினை பார்க்க முடிவு செய்ததற்கு மூன்று காரணங்கள்.

1. சமீப காலமாக பீரியட் படங்களின் மீது ஏற்பட்டுள்ள அதீத ஆர்வம்.
2. இந்த படத்துடைய தமிழ் ரீ-மேக்கில் "தல" அஜித் நடிக்க இருப்பதாக ஒருகாலத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
3. மிகவும் முக்கியமாக, என்னுடைய செல்லக்குட்டி, வெல்லக்கட்டி காஜல் அகர்வால் இரு வேடங்களில் நடித்த படம்.

சில வருடங்களுக்குப்பின் (புதிப்பிக்கப்பட்டபின்பு முதல்முறையாக) தேவி திரையரங்கம் சென்றிருந்தேன். ப்ளாக் டிக்கெட் விற்கும் ஆயாக்களை காணவில்லை. டிக்கெட் கவுண்டர் நவீன மயமாக்கப்பட்டிருந்தது. திரையரங்கின் உள்ளே படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவேளையின் போதும் சாக்ஸபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. ஹை-கிளாஸ் தியேட்டர் ஆக்கிட்டாங்களாமாம்.

கதைச்சுருக்கம்:
ஏற்கனவே பெரும்பாலானோர் பார்த்த மகதீரா டப்பிங் என்றாலும் சம்பிரதாயத்திற்காக சில வரிகளில் கதை. நானூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜ பரம்பரையை சேர்ந்த காஜல் அகர்வாலுக்கும் போர்வீரன் ராம் சரணுக்கும் காதல். சந்தர்ப்ப சூழ்நிலைகள், சதி வேலைகள் காரணமாக இருவரும் இறக்க நேரிடுகிறது. அப்போது சேராமல் போனவர்கள் கலியுகத்தில் மீண்டும் பிறந்து காதலிக்கிறார்கள். கூடவே வில்லனும் மறுபடி பிறந்து தொலைக்கிறார். இந்தமுறையாவது காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.


கதாநாயகனாக சிரஞ்சீவி மகன் ராம்சரண். முதல்காட்சியிலேயே டாகுடரை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு பைக் ஜம்ப் செய்து நம்மை சிரிக்க வைக்கிறார். விடுங்க, அதெல்லாம் தெலுங்கு சினிமாவின் தலைவிதி. ராம்சரணிடம் அழகு, திறமை எல்லாம் இருந்தாலும் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஜொலிக்க மாட்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மென்டாலிட்டி அப்படி.

காஜல், இவங்க சும்மா சிரிச்சாலே தீயா இருக்கும். இந்தப்படத்திலோ தாராளமாக கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார், கூடவே நடிப்பையும். (அதற்காக க்ளீவேஜ் தெரியும் ஸ்டில்லை பேனரில் போட்டது டூ மச்). காதலை கன்பார்ம் செய்வதற்கு முன்பு காதலனின் வேலை, சம்பளம், பேங் பேலன்ஸ் என்று எல்லாவற்றையும் உஷாராக கேட்டுத்தெரிந்துக்கொள்ளும் நவநாகரீக யுவதியாக ஒரு கேரக்டர். இளவரசியாக இருந்துக்கொண்டு போர்வீரனை உருகி உருகி காதலிக்கும் இன்னொரு கேரக்டர். அமலா பால்களும் ஓவியாக்களும் ஓடி வந்தாலும் காஜல்ன்னா காஜல்தான்.

வேட்டைக்காரனில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஸ்ரீஹரி, சுறாவில் வில்லனாக நடித்த தேவ் கில், ஒரே ஒரு காட்சியில் பிரம்மானந்தம், சரத்பாபு இன்னும் நிறைய பெயர் தெரியாத நடிகர்கள் வந்து செல்கிறார்கள். காமெடி கொஞ்சமே வந்தாலும் டப்பிங் என்பதால் சகிக்கவில்லை.

முமைத் கானும் கிம் ஷர்மாவும் ஆளுக்கொரு பாடலில் "கெளரவத்தோற்றம்" அளிக்கிறார்கள். இவற்றில் முமைத் கான் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஓகே. பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். கிம் ஷர்மா பாடல் கிளைமாக்ஸுக்கு அணைக்கட்டு போட்டதோடு மட்டுமில்லாமல் படுமொக்கையாக இருந்து எரிச்சலூட்டியது. அந்தப்பாடலில் இடையிடையே காஜலை காட்டியது ஆறுதல்.


கிராபிக்ஸ் மற்றும் சண்டைக்காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று கூறலாம். ஒவ்வொன்றும் ஒருவித காமெடி. ஹெலிகாப்டரில் தொங்கியபடி சண்டை போடுவதை எல்லாம் குஞ்சுமோன் காலத்திற்குப்பிறகு மீண்டும் பார்க்க முடிந்தது.

பாடல்கள் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவை என் காதுகளில் விழவே இல்லை. கண்கள் காஜலை பார்த்துக்கொண்டிருக்கும்போது காதுகள் ஏனோ வேலைநிறுத்தம் செய்துவிட்டன. காஜல் காட்டிய கவர்ச்சி போதாதென்று கேமராமேன் வேறு ஆ...ஊன்னா டாப் ஆங்கிளுக்கு போய்விடுகிறார். ம்ம்ம்... மொத்தத்தில் நம்ம மனசு நம்மகிட்ட இல்லை.

இசுலாமிய மன்னன், "நான் சிவன்டா..." என்று சொல்லுவதாக வசனம் எழுதி மதநல்லினக்கத்தை வாழ வைத்திருக்கிறார் கே.பாக்யராஜ். கூடவே, ஷேர் கானை மறுஜென்மத்தில் சாலமனாக பிறக்க வைத்து இயக்குனரும் அவரது பங்கிற்கு இந்திய இறையாண்மையை நிலைநாட்டியிருக்கிறார். சும்மாக்காட்டி "இவன் என் டவுசரை கிழிச்சிட்டான்...", "அவன் என் கோவணத்தை உருவிட்டான்..." என்று டீச்சரிடம் கம்ப்ளெயின்ட் செய்யும் மத இயக்கங்கள் எங்கே போனதென்று தெரியவில்லை. (ஒருவேளை திருந்திவிட்டார்களோ... இருக்காதே...).

படத்தின் பிளஸ்:
- காஜலும் கவர்ச்சியும்.
- சரித்திர பின்னணி.

படத்தின் மைனஸ்:
- மட்டமான கிராபிக்ஸ், சண்டைக்காட்சிகள்.
- அரைத்த மாவு வகையறா காட்சிகள். (ஹீரோயின் விரல் பட்டதும் ஹீரோ சிலிர்ப்பதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்).

எனக்குப் பிடித்த காட்சி:
கிளாடியேட்டர் வகையறா காட்சி இல்லாமல் சரித்திர கதையா...? இந்தப்படத்திலும் ஒரு போட்டி நடைபெறுகிறது. துப்பட்டா போட்டி. லாஜிக் போத்தல்கள் இருந்தாலும் இந்த ஒரு காட்சி மட்டும் கொஞ்சம் மெய்மரக்கவும் கொஞ்சம் சிலிர்க்கவும் வைத்தது.


வெர்டிக்ட்:
இந்தப்படத்தை எந்த லிஸ்டில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. சரித்திர பெருமை வாய்ந்த அம்மியில் அரைத்திருந்தாலும் அதே தெலுங்கு மசாலாதான். நிச்சயமாக படம் ஓடாது. ஒருவேளை ஆட்சி மாறாமல் இருந்து, உதயநிதி ஸ்டாலினே படத்தை வெளியிட்டிருந்தால் படத்தை ஓட்டியிருக்கலாம்.

ஆனால் ஒன்று காஜலுக்காக கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்.
என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

36 comments:

middleclassmadhavi said...

Nalla vimarsanam

ம.தி.சுதா said...

////படத்தின் பிளஸ்:
- காஜலும் கவர்ச்சியும்.
- சரித்திர பின்னணி.

படத்தின் மைனஸ்:
- மட்டமான கிராபிக்ஸ், சண்டைக்காட்சிகள்.
- அரைத்த மாவு வகையறா காட்சிகள். (ஹீரோயின் விரல் பட்டதும் ஹீரோ சிலிர்ப்பதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்)//////

தங்கள் ரசனை இந்த இடத்தில் அருமையாக வெளிப்படகிறது நல்ல ஒரு பார்வையுங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

நிரூபன் said...

வணக்கம் தலைவா, எங்கே ஆளைக் காணக் கிடைக்குதில்லையே. ரொம்ப பிசியோ.

நிரூபன் said...

பரந்து பட்ட பார்வையில் விமர்சனத்தை அலசியிருக்கிறீர்கள் சகா. படம் பார்ப்பதா, வேணாமா என்று நினைப்போருக்கு, உங்களின் விமர்சனம் நிச்சயம் தீனி போடும்,

உங்களின் பகிர்விற்கு நன்றிகள் சகோ.

Unknown said...

Kajal is laddu figure

Unknown said...

aalaalukku vimarsanatha padichuttu nalla vimarsanam ,sirandha alasal appadilaam comment eludhuraanga .idhu nalla vimarsanamaa ? Sariyana jollu vimarsanam .kajal ivaru chella kuttiyaamla ,avunga en chellakutti theriyuma

Unknown said...

ரைட்டு லெப்டு நன்றி!

கார்த்தி said...

ஆய் நீங்களும் காஜல் அகர்வாலின் ரசிகரா. நீங்கள் என் இனம்!
மகாதீர கிளப்பிய பெரிய பிரபலத்தை இந்த படம் தமிழில் தக்க வைக்குமா?

Suthershan said...

இந்திய திரைப்படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அருமையான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட ஒரு திரைபடத்தை வெறும் காஜலின் அழகுக்காக மட்டுமாக விமர்சித்து இருப்பது உங்கள் எழுத்தின் மீதான எண்ணத்தை குறைத்து விட்டது.

Sathish said...

this movie very famous for its graphics.. but you review this very badly..... thinkabout tamil movie Aayirathil oruvan. it takes 30 crores for very worst graphics. but magadheera takes only 8 crores for this fantastic graphics.... your review is very bad... for this good movie review should be good for first impression for our fans...

NKS.ஹாஜா மைதீன் said...

நண்பா நலமா? சன் டிவி வாங்கி இருந்தாலும் ஒட்டி இருப்பார்கள்...

HajasreeN said...

ஜொள்ளு வலிச்சல் தாங்க முடியல முதல் ல துடசிகுங்க

N.H. Narasimma Prasad said...

இந்த படம் என் தெலுங்கு பட All time Favorite படங்களில் ஒன்று.

கவிதை பூக்கள் பாலா said...

பிரபா ஏன் ஏன் ? இப்படி நீங்க விட்ட ஜொள்ள அப்படியே பிடித்து வந்து கொட்டி விட்டீர்கள் . அப்படி நடிகையின் கவர்ச்சி தான் படத்த ஒப்பேத்தும் என்று பலான பட ரேஞ்சிக்கு கொண்டு போய் விட்டீங்களே பாஸ் .......... படம் பொதுவா அதிகம் பாக்கறதில்ல ......... இருந்தாலும் நல்ல தான் விமர்சனம் பண்றீங்கப்பா

Anonymous said...

மட்டமான vimarsanam.

சிவகுமாரன் said...

படத்தைப் பத்தி நல்லா ஜொள்ளியிருக்கீங்க

Sivakumar said...

//காஜல், இவங்க சும்மா சிரிச்சாலே தீயா இருக்கும். //

சிகரெட் புடிச்சிக்கிட்டே சிரிக்குமா பாப்பா????

Sivakumar said...

//ஆனால் ஒன்று காஜலுக்காக கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்.//

அப்படி எல்லாம் பாக்க முடியாது. ஆல்வேஸ் தமன்னா!!

erodethangadurai said...

காஜல் அகர்வால் - அருமை.

Ram said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_8051.html

Philosophy Prabhakaran said...

@ middleclassmadhavi, ♔ம.தி.சுதா♔, நிரூபன், நா.மணிவண்ணன், விக்கி உலகம், கார்த்தி, Suthershan, Satishkumar, NKS.ஹாஜா மைதீன், hajasreen, N.H.பிரசாத், bala, சிவகுமாரன், ! சிவகுமார் !, ஈரோடு தங்கதுரை, தம்பி கூர்மதியன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
// வணக்கம் தலைவா, எங்கே ஆளைக் காணக் கிடைக்குதில்லையே. ரொம்ப பிசியோ. //

ஆமாங்க... நேரமில்லை என்று சலித்துக்கொள்ளும் கூட்டத்தில் நானும் சேர்ந்துவிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// Kajal is laddu figure //

மாப்பு போதும்... வர்ணிச்சது போதும்...

// aalaalukku vimarsanatha padichuttu nalla vimarsanam ,sirandha alasal appadilaam comment eludhuraanga .idhu nalla vimarsanamaa ? Sariyana jollu vimarsanam .kajal ivaru chella kuttiyaamla ,avunga en chellakutti theriyuma //

செல்லக்குட்டி மட்டுமில்லை... செல்லக்குட்டி, புஜ்ஜுகுட்டி, அம்முக்குட்டி, இச்சுக்குட்டி, சின்னக்குட்டி எல்லாமே அவங்கதான்...

என்ன இது துறைமொழி பின்னூட்டங்கள்... மொபைலில் பதிவு படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா...

Philosophy Prabhakaran said...

@ கார்த்தி
// மகாதீர கிளப்பிய பெரிய பிரபலத்தை இந்த படம் தமிழில் தக்க வைக்குமா? //

ஒருவேளை இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பதிப்போடு சேர்த்து தமிழ் டப்பிங்கையும் வெளியிட்டிருந்தால் பேசப்பட்டிருக்கலாம்... (நினைவில் கொள்க... அப்போது ஆயிரத்தில் ஒருவன் வெளிவரவில்லை...)

Philosophy Prabhakaran said...

@ Suthershan
// இந்திய திரைப்படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அருமையான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட ஒரு திரைபடத்தை வெறும் காஜலின் அழகுக்காக மட்டுமாக விமர்சித்து இருப்பது உங்கள் எழுத்தின் மீதான எண்ணத்தை குறைத்து விட்டது. //

நீங்கள் ஷங்கர், மணிரத்னம் படங்கள் எல்லாம் பார்ப்பதில்லையா #டவுட்டு

Philosophy Prabhakaran said...

@ Satishkumar
// this movie very famous for its graphics.. but you review this very badly..... thinkabout tamil movie Aayirathil oruvan. it takes 30 crores for very worst graphics. but magadheera takes only 8 crores for this fantastic graphics.... your review is very bad... for this good movie review should be good for first impression for our fans... //

பாயின்ட் 1: தமிழ் சினிமா ரசிகர்கள் எத்தனை கோடி செலவு செய்தார்கள் என்றெல்லாம் ஆராயமாட்டார்கள்... நன்றாக இருக்கிறதா இல்லையா என்று மட்டும்தான் பார்ப்பார்கள்...

பாயின்ட் 2: நீங்கள் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தவறு... ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் 32 கோடி... மகதீரா பட்ஜெட் 40 கோடி... என்று நான் சொல்லவில்லை விக்கிபீடியா சொல்கிறது...

Philosophy Prabhakaran said...

@ NKS.ஹாஜா மைதீன்
// நண்பா நலமா? //

ம்ம்ம் நலம்...

// சன் டிவி வாங்கி இருந்தாலும் ஒட்டி இருப்பார்கள்... //

ம்ம்ம் ஓட்டியிருப்பார்கள்... நான் சொல்ல வந்தது என்னவென்றால் ஏற்கனவே இந்தப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்குவதாக இருந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் கல்தா கொடுக்கப்பட்டார்...

Philosophy Prabhakaran said...

@ hajasreen
// ஜொள்ளு வலிச்சல் தாங்க முடியல முதல் ல துடசிகுங்க //

சாரிங்க... இலங்கை வரைக்கும் தெறிச்சிடுச்சா...

Philosophy Prabhakaran said...

@ bala
// பிரபா ஏன் ஏன் ? இப்படி நீங்க விட்ட ஜொள்ள அப்படியே பிடித்து வந்து கொட்டி விட்டீர்கள் . அப்படி நடிகையின் கவர்ச்சி தான் படத்த ஒப்பேத்தும் என்று பலான பட ரேஞ்சிக்கு கொண்டு போய் விட்டீங்களே பாஸ் .......... படம் பொதுவா அதிகம் பாக்கறதில்ல ......... இருந்தாலும் நல்ல தான் விமர்சனம் பண்றீங்கப்பா //

பாலா... நான் வெறுமனே காஜலின் கவர்ச்சிக்காக மட்டும் இந்தப்படத்தை பார்க்கவில்லை என்று முதல் பத்தியிலேயே குறிப்பிட்டு விட்டேன்... அட நம்புங்கப்பா... இருந்தாலும் தியேட்டருக்குப்போய் படம் பார்க்கும் இளைஞர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும்...

உதாரணத்திற்கு கயம் என்றொரு நல்ல கதையம்சம் கொண்ட மலையாளப்படம்... ஆனால் அதை இங்கே மார்கெட்டிங் செய்ய தாரம் என்ற பெயரில் பிட்டுப்பட ரேஞ்சுக்கு விளம்பரப்படுத்துகிறார்கள்... அப்படி விளம்பரப்படுத்தினால் தான் போட்ட காசை எடுக்க முடியும் என்பதே உண்மை...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// சிகரெட் புடிச்சிக்கிட்டே சிரிக்குமா பாப்பா???? //

ஆங்கிலத்தில் "ஹாட்" என்று சொல்கிறார்களே... அதைத்தான் தமிழில் தீயா இருக்கும் என்று சொல்லவந்தேன்...

// அப்படி எல்லாம் பாக்க முடியாது. ஆல்வேஸ் தமன்னா!! //

நீங்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்... என்னுடைய இதயமென்னும் மைதானத்தில் காஜல், தமன்னா, அமலா பால் என்று நிறைய பட்சிகளுக்கு இடமுண்டு...

Sathish said...

//பாயின்ட் 2: நீங்கள் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தவறு... ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் 32 கோடி... மகதீரா பட்ஜெட் 40 கோடி... என்று நான் சொல்லவில்லை விக்கிபீடியா சொல்கிறது...///


ya you are right.. but aayirathil oruvan team spent 50% budget for graphics... but magadheera crew spent only 8cr for graphics and other amount is for sets and visual effects.. becoz my friend's bror worked in that movie graphics team...

பாலா said...

காஜல் காஜல் காஜல், காஜல் போயின்..

erodethangadurai said...

நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !

http://erodethangadurai.blogspot.com/2011/05/must-read_31.html

Anonymous said...

Nalla padam with good fighting scene and graphics. your comment is not proper.

Geetha6 said...

அருமை!

ARV Loshan said...

காஜலுக்காக கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்.//
இதே தான் என்னுடைய ஒரு வரி விமர்சனமும் ;)