அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலேயே மோசமான காலக்கட்டம் எதுவென்று கேட்டால் வேலை தேடும் பருவம் என்றே சொல்லுவேன். காதல் தோல்வியை தாண்டியிருக்கிறேன், பலமுறை முதுகில் குத்தப்பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏற்பட்ட வலியை விட மோசமானது வேலை தேடிய நாட்கள். ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் நாம் சாப்பிடுவது “தண்டச்சோறு” என்று உறுத்திக்கொண்டே இருக்கும். ஃபைலை தூக்கிட்டு ரோட்டில் போனால் அவனவனும் அவன் வேலையை பார்த்துட்டுதான் இருப்பான். ஆனா, எல்லாரும் நம்மளையே ஏளனமா பாக்குறா மாதிரி நமக்குள்ள ஒரு ஃபீலிங். அப்படியே ரோட்டைக் கடந்து கம்பெனிகள் நுழைந்தால் அங்கே இருப்பார்கள் சில அதிமேதாவிகள். அவர்கள்தான் எச்.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் அப்பாட்டாக்கர்கள்.
காலையில ஜாக்கிங் போகும்போது பார்க்குற பெரிய மனுஷனுக்கு நம்மள ரொம்ப புடிச்சு, அவரு பெரிய கம்பெனி மேனேஜராக இருந்து, அவர் என்ன படிச்சிருக்கீங்க தம்பின்னு கேட்டு, அப்ப நாளைக்கே நம்ம ஆபீசுக்கு வந்து சேர்ந்துடுங்க என்று சொல்வதெல்லாம் சினிமாவுல, அதுவும் வீணாப்போன தமிழ் சினிமாவுல மட்டும்தான் நடக்கும். ஒரிஜினல் வாழ்க்கையில் பதிவு செய்தல், சூட்சும புத்தி தேர்வு (Aptitude Test), குழு விவாதம், தொழில்நுட்ப நேர்முகத்தேர்வு என பல கட்டங்கள் உள்ளன.
இவை அனைத்தையும் கடந்து செல்வது கடினமானது தான். எல்லோரும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க முடியுமா என்ன...? எத்தனையோ பேர் மெத்தப்படித்துவிட்டு, ஏகப்பட்ட திறமைகளை வைத்துக்கொண்டு Aptitude Test கிளியர் பண்ண முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். அது ஒரு தனிக்கதை. இப்போது இந்தநிலைகளை அரும்பாடுபட்டு கடந்துவிட்டால் வீடியோ கேம்ஸில் வரும் கடைசி ஸ்டேஜ் மாதிரி இறுதியாக ஒரு நேர்முகத்தேர்வு இருக்கும். அதுதான் பர்சனல் இன்டர்வியூ அல்லது எச்.ஆர்.இன்டர்வியூ.
இன்டர்வியூவிற்கு போவதற்கென்று சில விதிமுறைகளை படைத்துவைத்திருக்கிறார்கள் சில கூறுகெட்ட குப்பன்கள். அதாவது இன்ன இன்ன டீ-ஷர்ட், பனியன் வகையறாக்களை அணியக்கூடாது, சட்டைகளிலும் இன்ன இன்ன கலர் சட்டைகளை தவிர்க்க வேண்டும், குறிப்பிட்ட கலர் சட்டைகளுக்கு குறிப்பிட்ட கலர் பேண்ட் மட்டுமே அணிய வேண்டும், (நல்லவேளை ஜட்டி கலர் பற்றி எதுவும் விதிகள் இல்லை). இன்னமும் சில நிறுவனங்கள் “டை” கட்டவேண்டுமென்று எதிர்ப்பார்க்கின்றனர். யோவ் அறிவாளிகளா... அது வெள்ளைக்காரன் காத்துல கோட் கழண்டுவிடக்கூடாதுன்னு கண்டுபிடிச்சதுய்யா... சென்னையில எங்கய்யா காத்து அடிக்குது...!
அடுத்த அலப்பறை இன்டர்வியூ அறைக்குள் ஆரம்பமாகும். இன்டர்வியூ எடுக்குற அதிமேதாவிகள் தலை சொரியலாம், காது குடையலாம், மூக்கை நோண்டலாம் ஆனால் நமக்கு மட்டும் நீட்டக்கூடாது, ஆட்டக்கூடாதுன்னு ஏகப்பட்ட விதிமுறைகள். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் எச்.ஆரின் கண்ணைப் பார்த்து பதில் சொல்லணுமாம் (கண்ணா அது...???). ஆனா, நாம பதில் சொல்லும்போது அவர் நம் கண்ணை பார்க்க மாட்டார். ஏன், நம் பதிலையே சட்டை பண்ணாமல் விட்டத்தை பார்த்து தாடி சொரிந்துக்கொண்டு இருப்பார்.
இன்னொரு விஷயம், பொதுவா எச்.ஆர்களுக்கு கேள்வி கேட்கவே தெரியாது. எல்லா இன்டர்வியூக்களிலும் கட்டாயம் முதல் கேள்வி “TELL ME ABOUT YOURSELF...? ஆகத்தான் இருக்கும். இந்தக்கேள்விக்கு நாம பாம்பை பார்த்த ரஜினிகாந்த் மாதிரி மென்று முழுங்கி பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்போது அய்யா நம்மை இடைமறித்து நம்ம சொன்ன பதிலில் இருந்தே ஒரு கேள்வியை கேட்டு தொலைப்பார். அப்படியே நாம் தொடர்ந்து பதில் சொல்லச்சொல்ல நம் பதிலில் இருந்தே அவர் கேள்விகளை உருவாக்குவாராம்.
பொறுமையை சோதிக்கும் கேள்விகள் என்றொரு வகையறா உண்டு. ஒரு உதாரணம், “உங்க அம்மா ஒரு வேசி தானே...?” என்று எச்.ஆர். கேட்பார். உடனே நாம் கோபப்படக்கூடாது, சலனப்படக்கூடாது. சிரித்தமுகத்துடன் “ஆம், என் அம்மா ஒரு வேசிதான். ஆனால் என் தந்தைதான் அவருடைய ஒரே வாடிக்கையாளர்...” அப்படின்னு பதில் சொல்லணுமாம். தக்காளி... இந்தமாதிரி கேள்வியை யாராவது என்கிட்ட கேட்டிருந்தா கொலை கேஸ் ஆகியிருக்கும்.
மேலே உள்ள காணொளியில், என் வயித்தெரிச்சலும் உங்க வயித்தெரிச்சலும் சேர்ந்து எரியுது பாருங்க...
டிஸ்கி: மொபைலில் இருந்து பதிவிடுகிறேன்... திரட்டிகளில் இணைக்காமல் இருந்தால் இணைத்துவிடுங்கள்...
- என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
32 comments:
இண்ட்லி,தமிழ்மணம் இரண்டிலும் இணைத்து விட்டேன்.
நேர்முகத்தேர்வு பற்றிய சுவையான பதிவு.நானும் இரண்டு பக்கமும் இருந்திருக்கிறேன்!
yes..true..உண்மை தான்..நேர்முகத் தேர்வு என்பது நிச்சயம்
மாற்றப்பட வேண்டும்.we are following useless approach.
பாஸ் நீங்க எனக்கு கூட ஒன்னு சொன்னீங்க நினைவுல இருக்கா???
ஹா ஹா ஹா ஏகப்பட்ட வயிற்றெரிச்சல் போல.....
ஆனால் இதில் Aptitude டெஸ்ட் என்பது நன்மைக்கே.
நம்நாட்டு இளைஞர்களின் ஆதங்கம்...
படித்து முடித்துவிட்டு வேலைக்கு சேருவதற்க்குள் நடக்குமே ஒரு போராட்டம் அதை சொல்ல வார்த்தைகளே இல்லை...
சினிமாவையும் வாழ்க்கையும் ஒன்றுப்படுத்தி பார்க்க முடியாது...
கருத்துள்ள பதிவு...
தமிழ்மண நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள்....
நல்ல வேளை..நமக்கு அந்த கொடுப்பினை இல்ல...
இந்த HR களை பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க, கம்பேனிகள்ல லே-ஆஃப் கொடுக்கலாம்னு ப்ளான் பண்ணிட்டா இவனுங்க பண்ற அலப்பறை இருக்கே?
ஆமா ஊர்ல இருக்க சூப்பர் பிகர்ஸ் எல்லாத்தையும் கரெக்டா HR-ல போட்டுடுறானுங்களே அது எப்படி?
பொறுமையை சோதிக்கும் கேள்விகள் என்றொரு வகையறா உண்டு. ஒரு உதாரணம், “உங்க அம்மா ஒரு வேசி தானே...?” என்று எச்.ஆர். கேட்பார். உடனே நாம் கோபப்படக்கூடாது, சலனப்படக்கூடாது. சிரித்தமுகத்துடன் “ஆம், என் அம்மா ஒரு வேசிதான். ஆனால் என் தந்தைதான் அவருடைய ஒரே வாடிக்கையாளர்...” அப்படின்னு பதில் சொல்லணுமாம். தக்காளி... இந்தமாதிரி கேள்வியை யாராவது என்கிட்ட கேட்டிருந்தா கொலை கேஸ் ஆகியிருக்கும்.
..... வேலை தேடுபவரின் - வேதனை - மன வலி - கோபம் - மன உளைச்சல் எல்லாம் வெளிப்படுத்தி இருக்கீங்க.
அடேங்கப்பா பயங்கரமான அனுபவமா இருக்கே , நட்சத்திர வாழ்த்துக்கள் பிரபா
சார் கனக்க காலத்துக்கு பிறகு எங்கள ஞாபகம் இருக்கா???
@ சென்னை பித்தன்
// இண்ட்லி,தமிழ்மணம் இரண்டிலும் இணைத்து விட்டேன். //
மிக்க நன்றி பெரியவரே... இன்னும் நான்கு நாட்களுக்கு உங்கள் சேவை எனக்கு தேவை...
@ பலே பிரபு
// ஆனால் இதில் Aptitude டெஸ்ட் என்பது நன்மைக்கே //
யோவ் இதெல்லாம் பக்கா சுயநலம்யா... உனக்கும் எனக்கும் Aptitude டெஸ்ட் என்பது நன்மைதான்... கிராமப்புறத்தில் இருந்து வருபவனை யோசித்துப்பார்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆமா ஊர்ல இருக்க சூப்பர் பிகர்ஸ் எல்லாத்தையும் கரெக்டா HR-ல போட்டுடுறானுங்களே அது எப்படி? //
உங்க கேள்வி புரியல ப.ரா...
@ N.Manivannan
ஸோ... இனிமே வம்ப விலைக்கு வாங்க மாட்டீங்களா... பிரபல பதிவர் ஆயிட்டீங்க போல...
@ கார்த்தி
// சார் கனக்க காலத்துக்கு பிறகு எங்கள ஞாபகம் இருக்கா??? //
என்ன கார்த்தி இப்படி கேட்டுட்டீங்க... மூணாம் கிளாஸ்ல கூட படிச்ச நண்பனிலிருந்து முந்தாநாள் அறிமுகமான நண்பன் வரைக்கும் எல்லோரையும் ஞாபகத்துல வச்சிருக்கேன்... உங்கள மறப்பேனா...?
பிரபாகர், என்பது பெரும்பாலும் Fresher அல்லது Senior Associate ஆகியோருக்குதான் வைக்கப்படுகிறது. அதை வைப்பதற்கு முக்கிய காரணம் வேலை செய்கையில் வரும் இக்கட்டான தருணங்களை சில நிமிடங்களில் சமாளிக்க நமக்கு திறமை உள்ளதா என்பதை கண்டறியவே. அந்த டெஸ்டில் பாஸ் செய்தும் சிலர் வேலை நேரத்தில் தடுமாறுவதை பார்த்திருக்கிறேன். அங்கு திறமையை விட சமயோசிதமும், உடன் முடிவெடுக்கும் ஆற்றலுமே முக்கியம். அதற்குத்தான் Aptitude test.
மற்ற விஷயங்கள் நன்று. களத்தில் இறங்க வேண்டும் என்றால் கரகாட்டம் ஆடித்தான் ஆக வேண்டும். தங்கள் வலி புரிகிறது. "அறிவாலயம்" சென்றால் குறைகள் நீங்கும்!!
கமன்ட் மாடரேஷன் வக்கலையா? இருங்க.... டம்மி ஐடில வந்து சண்டைக்கு இழுக்கறேன். அப்பதான் உங்க ப்ளாக் களை கட்டும்.
\\எத்தனையோ பேர் மெத்தப்படித்துவிட்டு, ஏகப்பட்ட திறமைகளை வைத்துக்கொண்டு Aptitude Test கிளியர் பண்ண முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.\\ அட நம்மாளுங்க!!
\\இன்டர்வியூக்களிலும் கட்டாயம் முதல் கேள்வி “TELL ME ABOUT YOURSELF...?\\ ரொம்ப கொடுமையான கேள்வி. ஆனா, இதை எதுக்கு கேட்குரானுங்கன்னுதான் தெரியலை. படிச்சதைப் பத்தியோ, இல்லை செய்யப் போற வேலைக்கு இவன் லாயக்காக இருப்பானா என்கிறா மாதிரி கேட்டா பரவாயில்லை, லூசு மாதிரி இந்தக் கேள்வியைக் கேட்கிரானுங்க.
ஆனா, கடைசியா வேலைக்கு தேர்வு ஆகியிருக்கும் மூஞ்சிகளைப் பார்த்தா இதுங்களுக்கு எவண்டா வேலையைக் கொடுத்தான் என்பது போலத்தான் இருக்கும். ஆனாலும் நகர்ப் புறங்களில் யாரைப் பார்த்தாலும் நான் IBM ல work பண்றேன், INFOSYS, WIPRO, GE இப்படியே சொல்லி கடுப்பேத்துரானுன்களே பாஸ்.
@ Philosophy Prabhakaran
நானே பக்கா கிராமத்தான் தான். எனக்கு Aptitude is ok But not Reasoning
I am posting my comments in parts. I have more to say than these, but will take all ur space.
நீங்கள் எழுதியிருப்பதைப்பார்த்தால் கம்யூட்டர் கம்பெனிகளுக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வு போலிருக்கிறது
எனினும் என் பொதுக்கருத்துக்கள்.
இடக்கான கேள்விகள் அதை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்பதை ஆராய.
'உங்களை அறிமுகப்படுத்துங்கள்' என்பது எப்படி நீங்கள் மற்றவர்களிலிருந்து மாறுபடுகிறீர்கள் அல்லது மாறு படுகிறீர்களா எனபதை தெரியவே.
ஐ.ஐ.எம் இன்டர்வியூவில் இதுவே முதற்கேள்வி. எவனுடைய பொரொபைல் ஆச்சரியகரமாக இருக்கிறதோ, அல்லது மாறுபட்டு இருக்கிறதோ, அல்லது தன்னை அறிமுகப்படுத்தும் திறன் கவர்ச்சியாக இருக்கிறதோ,அவன் சிறப்பு மதிப்பெண் பெறுவான். ஏமாற்ற முடியாது. சிலர் அக்கேள்விக்கான பதிலை நன்றாகத் தயார் பண்ணிக்கொண்டு வந்திருப்பர். மனனம் செய்தது அப்படியே வெளியில் தெரியும்.
மேலும் இக்கேள்வியில் பதிலிலிருந்து கிளக்கேள்விகள் முளைக்கும். நேர்முக சுவாராசியமாகப் போகும்.
அவரிடமே என் ப்ரொபைல் இருக்கிறதே ? இஃது என்ன விதண்டவாத சோம்பேறித்தனான கேள்வி என்பது சிறுபிள்ளைத்தனமான எண்ணம்.
எப்படி உங்களை அவர்கள் மதிக்கவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ அப்படி அவர்களை நீங்கள் மதிக்கவேண்டும். கண்டிப்பாக உங்களைவிட அவர்கள் அனுபவஸ்தர்கள்.
'உங்கள் தாய் வேசியா?' என்றெல்லாம் கேள்விகள் வரா. மிகைப்படுத்தியெழுதியிருக்கிறீர்கள். அப்படியே ஒரு கேள்வியெழுந்தாலும் இது ராகிங். ராகிங்கை எப்படி கையாழுகிறீர்கள்; ஏனெனில் உங்கள் வேலை வாழ்க்கையில் இப்படி நிகழ்வுகள் வரலாம். என்பதைக் கணிக்கவே இப்படிப்பட்ட கேள்விகள்.
இப்படிப்பட்ட கேள்விகளை லபக்கென்று பிடித்துக்கொள்ளவேண்டும். பெண்மை, பெண்ணியம், நம் சமூகத்தில் பெண்களிலை, திருமணம் என்னும் பந்தம் பெண்ணுக்குச் சாதகமா, இல்லை பாதகமா, இவர்கள் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு ? இப்படி ஏராளமான சிந்தனைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. உங்கள் பதில்கள் நீங்கள் பெண்ணைப்பற்றிக் கொண்டிருக்கும் வாழ்வியல் தனிநபர்ச்சிந்தனைகள் பாசிட்டிவா நெகட்டிவா என்பது தெரியும். மிக முக்கியம். Your concept on women – whether it is positive or negative, will all come through your mouth. The relationship with oppositie sex shd be healthy and productive It shd not b unhealthy and destructive. U will create problems for the co workers and spoil the work culture, in a company giving equal opportunities.
//அவர் கேள்விகளை உருவாக்குவாராம்.//
திறமையானவர்கள் நேர்முகத்தை தன் வழிக்குக்கொண்டு வருவார்கள், திறமையற்றவர்கள் அவர்கள் வழிக்குத்தான் செல்லவேண்டும். அஃதாவது தேர்வாளர்கள்தான் கேள்விகளை உருவாக்குவார்கள்.
பதில்களை அவ்வளவு திறமையாகச்சொல்வார்கள் சிலர். அஃதாவது அடுத்த கேள்வியை அவர்களின் முந்தைய பதில் உருவாக்கும். கேள்வி கேட்பவன் வந்தவன் விரித்த வலையில் விழுந்த ரிசுமேக்களை நான் கண்டதுண்டு.
ப்ரொபைலை அட்டகாசமாகப்பண்ணிக்கொண்டு போங்கள். அதில் வினோதம் இருக்க வேண்டும். அவன் விழுந்து விடுவான்.
உங்களின் ஆளுமைதான் அவர்களுக்கு வேண்டும். அவர்களுக்கு வேண்டியதைக்கொடுப்பதே உங்கள் கடமை.
All that I wrote here relate to IIM interviews only. It is only scrappy, not detailed. I don’t know abt computer companies. Some IIM interviews began with ragging like who gave this dirty name to u etc. The boy was undaunted, explained the intricacies of his name and went on courageously defending it. He even went into probability theory to buttes his point.
Finally, he panel said: ‘You have given us many things, which we wd not have known if u hadn’t come!e and profusely thanked the boy. The qn related to how he carried out a particular work which others will never go near). The boy is now in the second year at IIM Ahmedabad.
Be different. Be confident. Be courageous.
super boss :)
திரு பிரபாகரன் அவர்களே,
நல்ல பதிவு.....மொபைலில் இருந்து எப்படி தமிழில் பதிவிட்டீர்கள்.? மொபைலில் தமிழில் எப்படி எழுதுவது என்று கூறுங்கள்.நான் பயன்படுத்துவது NOKIA X -2 மொபைல்.
@ ! சிவகுமார் !
// பிரபாகர், என்பது பெரும்பாலும் Fresher அல்லது Senior Associate ஆகியோருக்குதான் வைக்கப்படுகிறது. அதை வைப்பதற்கு முக்கிய காரணம் வேலை செய்கையில் வரும் இக்கட்டான தருணங்களை சில நிமிடங்களில் சமாளிக்க நமக்கு திறமை உள்ளதா என்பதை கண்டறியவே. அந்த டெஸ்டில் பாஸ் செய்தும் சிலர் வேலை நேரத்தில் தடுமாறுவதை பார்த்திருக்கிறேன். அங்கு திறமையை விட சமயோசிதமும், உடன் முடிவெடுக்கும் ஆற்றலுமே முக்கியம். அதற்குத்தான் Aptitude test.
மற்ற விஷயங்கள் நன்று. களத்தில் இறங்க வேண்டும் என்றால் கரகாட்டம் ஆடித்தான் ஆக வேண்டும். தங்கள் வலி புரிகிறது. "அறிவாலயம்" சென்றால் குறைகள் நீங்கும்!! //
மூளைக்கு புரியத்தான் செய்கிறது... ஆனால் மனது கேட்கவில்லை... மேலும்: சிம்மக்கல்லுக்கு போட்டிருக்கும் பதிலை படிக்கவும்...
// கமன்ட் மாடரேஷன் வக்கலையா? இருங்க.... டம்மி ஐடில வந்து சண்டைக்கு இழுக்கறேன். அப்பதான் உங்க ப்ளாக் களை கட்டும். //
மூணு நாளா ஒரு அனானி பின்னூட்டம்கூட வராமல் நிம்மதியா இருக்கேன் சிவா...
@ Jayadev Das
// ஆனா, கடைசியா வேலைக்கு தேர்வு ஆகியிருக்கும் மூஞ்சிகளைப் பார்த்தா இதுங்களுக்கு எவண்டா வேலையைக் கொடுத்தான் என்பது போலத்தான் இருக்கும். ஆனாலும் நகர்ப் புறங்களில் யாரைப் பார்த்தாலும் நான் IBM ல work பண்றேன், INFOSYS, WIPRO, GE இப்படியே சொல்லி கடுப்பேத்துரானுன்களே பாஸ். //
இதே தான்... இதே தான் பாஸ் என்னோட பீலிங்கும்... காலேஜ் படிக்கும்போது நாலேஜ் இல்லாமல் திரிந்த பயலுவ எல்லாம் இப்போ மாமா ரெகமண்டேஷன், மச்சான் ரெபர் பண்ணாருன்னு பெரிய கம்பெனில வேலைக்கு சேர்ந்துடுறானுங்க...
நீங்க தினமணியின் தீவிர வாசகரா...? தினமணியில் பதிவை இணைத்தால் மட்டும் உடனே வந்துவிடுகிறீர்கள்...
@ simmakkal
முதலில் இந்த சிறியவனை மதித்து விரிவான விளக்கங்கள் கொடுத்ததற்கு நன்றி... உங்கள் பதில்கள் பெரும்பாலும் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளன...
இப்போது என் மனதில் இரண்டு கேள்விகள் மட்டும் எழுகின்றன:
. எச்.ஆர்களை ஏமாற்றவே முடியாது என்று எண்ணுகிறீர்களா...? அதாவது எச்.ஆர். நேர்முகத்தேர்வுக்கு வரும் பத்து பேரில் அதிபுத்திசாலியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்களா...? இல்லை என்பது எனது கருத்து... சமயங்களில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதும், திறமை இல்லாதவர்களிடம் எச்.ஆர் ஏமாறுவதும் நடக்கிறது... இன்னொன்று, எச்.ஆர் பணியில் இருப்பவர்கள் எல்லோரும் கட்டாயம் சைக்காலஜி படித்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து...
. ஒரு கிராமப்புற பள்ளியில் படித்த மாணவன், அவனிடம் எல்லா திறமைகளும் இருந்தும் ஆங்கிலப்புலமை இல்லாத ஒரே ஒரு காரணத்திற்காக வேலை கிடைக்காமல் அல்லாடுகிறான்...? ஏன் இந்த நிலை...? ஆங்கிலப்புலமை அவ்வளவு அவசியமா என்ன...? (யார் அந்த திறமைசாலி என்று நீங்கள் கேட்டால் - உங்களுக்கு மேலே பின்னூட்டம் போட்டிருக்கிறாரே பலே பிரபு... அவர்தான்...)
@ தனபால்
// திரு பிரபாகரன் அவர்களே,
நல்ல பதிவு... //
என்னண்ணே இம்புட்டு மரியாதையா கூப்பிடுறீங்க... எனக்கு கூச்சமா இருக்கு...
// மொபைலில் இருந்து எப்படி தமிழில் பதிவிட்டீர்கள்.? மொபைலில் தமிழில் எப்படி எழுதுவது என்று கூறுங்கள்.நான் பயன்படுத்துவது NOKIA X -2 மொபைல். //
நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டீர்கள்... நான் ஏற்கனவே பதிவு எழுதி ட்ராப்டில் வைத்திருப்பேன்... சமயம் கிடைக்கும்போது பப்ளிஷ் செய்வேன்... அவ்வளவே... தமிழில் எழுதவும் செய்யலாம்... ஆனால் அது மிகவும் சிரமமான காரியம்... நிறைய நேரம் எடுக்கும்...
\\நீங்க தினமணியின் தீவிர வாசகரா...? தினமணியில் பதிவை இணைத்தால் மட்டும் உடனே வந்துவிடுகிறீர்கள்.\\ உங்க பதிவைப் பற்றிய தகவல்கள் தற்போது என்னுடைய ஜிமெயிலுக்கே வருகின்றன. அதிலிருந்துதான் தெரிய வருகிறது. மேலும் கடந்த ஆறுமாதங்களுக்கப்புறம் இப்பத்தான் மூணு பதிவைப் போட்டிருக்கீங்க, அதுக்குள்ளே இப்படி அவசரப்பட்டு ஒரு conclusion க்கு எப்படி வந்தீங்கன்னுதான் புரியல.
\\ஒரு கிராமப்புற பள்ளியில் படித்த மாணவன், அவனிடம் எல்லா திறமைகளும் இருந்தும் ஆங்கிலப்புலமை இல்லாத ஒரே ஒரு காரணத்திற்காக வேலை கிடைக்காமல் அல்லாடுகிறான்...? ஏன் இந்த நிலை...?\\ சென்னையில் படித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் நன்றாக வரும். அவர்களுக்கு தனி மரியாதை தருகிறார்கள், கிராமப் புற மாணவர்கள் என்றாலே இந்த HR காரர்களின் பார்வையே ஏளனம் கலந்து ஒரு மாதிரியாக இருக்கும். இவர்கள் தேர்வு முறையும் ஒரு குத்து மதிப்பாகத்தான் இருக்கும். சமயத்தில் சில குப்பை கூளங்களும் உள்ளே வந்து விடும். இவர்கள் கொடுக்கும் வேலை அறிவி ஜீவியாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்று ஒன்றுமில்லை என்பதால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக கற்று தேர்ந்து விடுவான். அப்படியே மக்காக இருந்தாலும் இவர்கள் விரட்டியடிப்பதில்லை, ஏனெனில் அடுத்து இவர்கள் நிறுவனங்களில் சேருவதற்கே தயங்குவார்கள் என்ற நிலை வந்து விடுமாம். [இதெல்லாம் தனியார் நிறுவனத்தில் உள்ள நம்ம நண்பர் சொன்னதுங்கண்ணா....ஹி....ஹி....ஹி...]
Post a Comment