11 August 2011

ஆனந்த தொல்லையும் ஏஞ்சலினா ஜோலியும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கோலிவுட்டிற்கு அஜீத் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா தம்பதியர் எப்படியோ, பாலிவுட்டிற்கு அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் எப்படியோ அதுபோல ஹாலிவுட்டிற்கு ஒரு பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி. இவர்களது பெயரை இணைத்து பொதுவாக பிராஞ்சலினா (அது என்ன பிராவோ...?) என்று அழைக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு முரண் என்னவென்றால் இவர்களுக்கு இதுவரை திருமணமாகவில்லை. “லிவிங் டுகெதர்” (மறுபடியுமா...???). ஆனால் பெற்றெடுத்து மூன்று, தத்தெடுத்தது மூன்று என மொத்தம் ஆறு குழந்தைகள் இருக்கின்றனர்.

சரி விஷயத்துக்கு வருவோம். இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத பிரபல திரை நட்சத்திரங்கள் இருப்பினும் இதுவரை ஒரே ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்திருக்கின்றனர். அது மிஸ்டர் & மிசஸ் ஸ்மித். 2005ம் ஆண்டு வெளிவந்த இந்த நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படத்தின் கதைதான் என்ன...?

நாயகனும் நாயகியும் கிரிமினல் வேலைகளை செய்யும் வெவ்வேறு நிறுவனங்களில் சீக்ரெட் அஜென்ட்டாக பணிபுரிகின்றனர். இவர்கள் இருவரும் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் காதலித்து திருமணம் செய்துக்கொள்கின்றனர். ஆனால், இருவரும் தத்தம் தொழிலை தன் இணையிடம் இருந்து மறைக்கின்றனர். ஒருகட்டத்தில் கணவனை மனைவியும், மனைவியை கணவனும் கொல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சிலபல மோதல்களுக்குப்பின்பு தம்பதியர் மீண்டும் இணைகின்றனர். இணைந்தபிறகு இருவரும் சேர்ந்து ஊரைக் கலக்குவதே மீதிக்கதை.
இப்படிப்பட்ட ஒரு கதையை தமிழில் எடுப்பது சாத்தியமா...? அப்படியே எடுத்தாலும் ஹீரோயினாக ஏஞ்சலினா இடத்தை நம்மூர் அழகிகள் நிரப்ப முடியாதே. ம்ம்ம் சரி... எப்படியாவது மல்லுக்கட்டி ஜோலியை தமிழ் பதிப்பில் நடிக்க வைத்துவிடலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஹீரோ...???

உலகிலேயே உன்னதமான உதட்டழகி என்று பெயர்பெற்ற ஏஞ்சலினா ஜோலி என்கிற இந்த அமெரிக்க அழகிக்கு ஜோடியாக இந்தியாவிலேயே... ஏன் ஆசிய துணைக்கண்டத்திலேயே தகுதி உள்ள ஒரே தன்மானச்சிங்கம் யாரென்றால் அது நமது பப்பரப்பா பவர் ஸ்டார் சீனிவாசன்தான். (ஊஊஊஊஊய்ய்ய்ய்ய்ய்ய்... அட விசில் சத்தம்ப்பா...)

பவர் ஸ்டார் சீனிவாசன் என்றால் யாரென்றே தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். இந்திர சேனா என்ற ஒரு உலகப்படத்தில் அறிமுகமாகி உனக்காக ஒரு கவிதை, மண்டபம்ன்னு தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தவர். ரஜினி, கமல் படங்களே நூறு நாட்களை கடக்க சிரமப்படும் வேளையில் இவருடைய லத்திகா 150வது நாளை நோக்கி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் ஏராளமான படங்களில் நடிக்கவும், படங்களை இயக்கவும் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல தன்னுடைய திருமா படத்தில் நமக்கு பத்துவித கெட்டப்பில் வந்து குருமா தரவிருக்கிறார்.

இப்படியெல்லாம் பல பெருமைகளும் எருமைகளும் பெற்ற நம்ம தலைவர் சீனிவாசனும் வெள்ளைக்கார ஏஞ்சல் ஏஞ்சலினா ஜோலியும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே மேலே உள்ள புகைப்படம்.

புகைப்படம் தான் கற்பனையே தவிர செய்தியல்ல. ஆம், மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித் படத்தை தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் பவர் ஸ்டார் இதுவரை தமிழ் சினிமாவே பார்த்திராத ஹீரோ கம் வில்லன் கேரக்டரில் (மனைவியையே கொல்லத்துணிந்த கணவன்) நடிக்கிறார். ஒரே ஒரு மாற்றம். ஜோலிக்கு எக்கச்சக்கமான ஜோலி இருப்பதால் கதாநாயகி வேடத்தில் மலையாள நடிகை வாணி விஸ்வநாத் (தமிழில் இதயத்திருடன் படத்தில் நடித்தவர்) நடிக்கிறார். மேலும் படத்தில் கவர்ச்சி குண்டுமல்லி பாபிலோனாவும் இருக்கிறார்.

வாணி விஸ்வநாத்
ஏற்கனவே பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்க படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. அநேகமாக லத்திகா 150வது நாளில் (இன்னும் சில தினங்களில்) வெளியாகும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே ரத்த வெறியோடு காத்துக்கொண்டிருக்கிறது. தக்காளி... படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும்... பாத்துடலாம் பிராட் பிட்டா...? பவர் ஸ்டாரான்னு...? என்ன நாஞ்சொல்றது...?

நேற்றைய  பதிவு 1:  அஜீத், அழகர்சாமியின் குதிரை, மங்காத்தா, மாலை மங்கும் நேரம்

நேற்றைய  பதிவு 2: மங்காத்தா – Ocean’s Eleven

-     என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 comments:

Unknown said...

பிரட் பிட் - சீனிவாசனா?? :) சினிவாசன் கோச்சுக்க போறாறு :)

Unknown said...

மாப்ள கலக்கல்யா!

Prem S said...

yen intha kolaiveri power starku yen intha kolaiveri power starku

Anonymous said...

படிக்க படிக்க உங்கள் எழுத்து நடை புன்னகையை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது...

போட்டோ சூப்பர் :)

பவர் ஸ்டார் இந்த ஃபோட்டோ பார்த்தாருன்னா உங்களுக்கு ஒரு நண்பன் கேரக்டர் நிச்சயம்... :)

மனசாலி said...

நம்ம பவர் ஷ்ஷஷ்ஷ்டார் கூட யார கம்பேர் பண்றது என்னு ஒரு விவஸ்த்த கிடையாதா? போயும் போயும் பிராட் பிட் தான் கெடச்சானா. நீங்கள் இது போல் பத்தோடு ஒன்னு பதினொன்னு என்று இருப்பவர்களை எல்லாம் எங்கள் பவருடன் கம்பேர் பண்ணி அவரை கேவலப்படுத்த வேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன்.

ஆமா என் ப்ளாக் பக்கம் எல்லாம் எட்டி கூட பார்க்கிறது இல்லையா? http://manasaali.blogspot.com


பின் குறிப்பு.: பவர் ஸ்டார் போன்றவர்கள் நடிக்க வருவதற்கு க்ரியா ஊக்கியாக இருந்து ஊக்கம் கொடுக்கும் டாக்டர் விஜய் அவர்களை என்ன சொல்லி பாராட்டுவது?

'பரிவை' சே.குமார் said...

பவர் ஸ்டார்... பாவமால்ல இருக்காரு...
ஹா...ஹா....

Prabu Krishna said...

ரசிகர் மன்ற டிக்கெட் எங்க கிடைக்கும். ?

நாய் நக்ஸ் said...

Hi...hi.......NANGAELLAM POWER STAR PADAITHA 1000 THBA PARTHVANGA........

INTHA POST ENGALAI ONNUM PANNATHU?.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பவர் ஸ்டாரை பற்றி எழுதி நீங்காப் பெரும்புகழ் பெற்றுக் கொண்ட பிரபாகரன் அவர்களை வாழ்த்துகிறோம்.....!

இப்படிக்கு,
பவர் ஸ்டார் தலைமை ரசிகர் மன்றம்.

Jayadev Das said...

பிராடு பிட்டு [ச்சே... என்ன எல்லாம் தப்பு தப்பான அர்த்தத்திலேயே வருது!] பற்றிய தகவல்களுக்கு நன்றி. [கல்யாணம் என்பது சட்டத்துக்குத்தானே பாஸ், மத்தபடி எல்லாம் ஒண்ணுதானே!!]

settaikkaran said...

//ஒரே ஒரு முரண் என்னவென்றால் இவர்களுக்கு இதுவரை திருமணமாகவில்லை. “லிவிங் டுகெதர்”//

இது நமக்கு வேண்டுமானால் முரணாக இருக்கலாம். அங்கு சாதாரணமாகி விட்ட விஷயம்.

ஜோலி ஒரு அழகான, திறமையான நடிகை என்பதுடன், ஒரு நல்ல சமூக ஆர்வலரும் கூட!

வாணி விஸ்வநாத் ரீ –என்ட்ரீ....? ஆவலோடு எதிர்பார்க்கிறேன். :-)

Anonymous said...

Aneglina s an aged actress for Tamil screen. V like our actresses to look young.

So, she may not b welcomed by our cine-goers.

"சிலபல மோதல்களுக்கு..."

சிலபல என்று தமிழ் வருமா ?

சிலசில, சில்சில, சிற்சில, பலபல, பல்பல, பற்பல என்றெல்லாம்தானே வரும்?

எப்படி சிலபல ?

Philosophy Prabhakaran said...

@ ஷீ-நிசி
// பவர் ஸ்டார் இந்த ஃபோட்டோ பார்த்தாருன்னா உங்களுக்கு ஒரு நண்பன் கேரக்டர் நிச்சயம்... :) //

தமிழ் சினிமாவில் நண்பன் கேரக்டரா... வேண்டவே வேண்டாம்ப்பா... பாதியிலே போட்டு தள்ளிடுவானுங்க...

Philosophy Prabhakaran said...

@ MANASAALI
// ஆமா என் ப்ளாக் பக்கம் எல்லாம் எட்டி கூட பார்க்கிறது இல்லையா? http://manasaali.blogspot.com //

இந்தா இன்னும் ஒரு மூணு நாள் பொறுத்துக்கோங்க... தமிழ்மண நட்சத்திர வாரம் முடிஞ்சதும் பழையபடி பின்னூட்டப்புயலாக வீசுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// பவர் ஸ்டாரை பற்றி எழுதி நீங்காப் பெரும்புகழ் பெற்றுக் கொண்ட பிரபாகரன் அவர்களை வாழ்த்துகிறோம்.....!

இப்படிக்கு,
பவர் ஸ்டார் தலைமை ரசிகர் மன்றம் //

இந்த வாசகங்களை எல்லாம் எழுதிக்கொடுக்க இருபது பேர் கொண்ட குழு இருக்காண்ணே...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
Living together குறித்து எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை... குழந்தைகள் பெற்றேடுத்தபின்னர் அவர்கள் Seperating each other ஆகாமல் இருந்தாலே போதும்...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// வாணி விஸ்வநாத் ரீ –என்ட்ரீ....? ஆவலோடு எதிர்பார்க்கிறேன். :-) //

நீங்க சொல்றத பார்த்த இவங்க ஏற்கனவே ஒரு ரவுன்ட் கலக்கினவங்க போல இருக்கே... இது தெரியாம போச்சே...

Philosophy Prabhakaran said...

@ simmakkal
// சிலபல //

நான் இந்த மாதிரி ஆராய்ச்சிகளெல்லாம் செய்வதில்லை... ஒரு ஃபிளாவில் வருவதை எழுதிவிடுவேன்... இருந்தாலும் உங்கள் பின்னூட்டத்தை படித்தபின்பு ஆராய்ந்தேன்... ஆங்கிலத்தில் Oxymorons என்று சொல்வார்களே அது போன்றதொரு சொல் தான் இது... நிஜக்கதை என்று சொன்னால் நிஜமா...? கதையா...? என்ற கேள்வி வரும்... அது நிஜம் என்ற அர்த்தத்தையே குறிக்கும்... அதுபோல "சிலபல" எனும் சொல் "சில" என்ற அர்த்தத்தை (ஆங்கிலத்தில் several) தருகிறது...

பாலா said...

இந்த படத்தின் ரொமான்ஸ் காட்சிகளை பார்க்க ஆவலோடு உள்ளேன்...
கோரஸ்: பவர் ஸ்டார் பவர் ஸ்டார் பவர் ஸ்டார் பவர் ஸ்டார்

இராஜராஜேஸ்வரி said...

எழுத்து நடை வித்தியாசமாக அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.