அன்புள்ள வலைப்பூவிற்கு,
கிழக்கு புண்ணியத்தில் புத்தகங்களாக வாங்கி குவித்துவிட்டேன். இப்போது வீட்டில், “வாங்குறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை... படிக்கிறதுக்குத்தான் வழியக்காணோம்...”ன்னு கரைச்சல் கொடுக்குறாங்க. எனவே, எப்படியாவது வாரத்திற்கு ஒரு புத்தகமாவது படித்துவிட வேண்டுமென எனக்கு நானே கட்டளையிட்டிருக்கிறேன். (இந்த பாழாய்ப்போன பொறுப்புணர்ச்சி படிக்கிற காலத்துல இருந்திருந்தா இந்நேரம் வெள்ளைக்காரனுக்கு கால் அமுக்கிவிடாமல் இருந்திருக்கலாம்). புத்தக அடுக்கில் இருந்ததிலேயே பழைய புத்தகத்தை உருவி எடுத்தேன். அது புத்தக சந்தையில் 1990ம் ஆண்டு விலையில் (வெறும் 18ரூ மட்டுமே) வாங்கிய சுஜாதாவின் “மனைவி கிடைத்தாள்”. (உபயம்: பாரதி பதிப்பகம்).
திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதன் பாடல்களை கேட்பதிலும், நாவல் படிப்பதிலும் இருக்கின்ற சுவாரஸ்யம் என்னவென்றால் அதன் காட்சிகளையும் கதைமாந்தர்களையும் நம் விருப்பம் போல கற்பனை செய்துக்கொள்ளலாம். இவற்றில் முன்னதற்கும் பின்னதற்கும் உள்ள வித்தியாசம், முன்னதில் படம் வெளியான பின்பு நம் மனதின் கற்பனை பிம்பங்கள் மறைந்து திரைக்காட்சிகள் குடிபுகுந்துக்கொள்ளும். நாவல்கள் படிக்கும்போது கிடைக்கும் கற்பனைகள் ஆண்டாண்டு காலத்திற்கும் நிலைத்து நிற்கும். சமயங்களில் நாவல்களை திரைப்படமாக எடுத்தால் நாவலில் இருந்த உயிர்த்துடிப்பு திரைப்படத்தில் இல்லை என்று பெரும்பாலானவர்கள் சலித்துக்கொள்வதற்கும் இதுவே காரணம்.
“பழக்கடை நிறைய ஆப்பிள்கள் வெட்கப்பட்டன. ஆரஞ்சுகள் விழித்தன. நூறு பத்திரிகைகள் தொங்கின. ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை கலைக்கிற அளவிற்கு சோடா பாட்டில்கள். நன்னாரி சர்பத்தைச் சுற்றிலும் ஈக்கள் விளையாடிக்கொண்டிருந்தன. பெரிய சட்டையைப் போட்டுக்கொண்டு ஒரு பையன் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்” என்று படிக்க படிக்க நம் கற்பனையில் ஒரு கடைத்தெரு எட்டிப்பார்க்கிறது. என்னைப் பொறுத்தவரையில் கொஞ்சம் பரிட்சயமான செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டாக தெரிந்தது. மற்றவர்களுக்கு திருநெல்வேலி சந்தையாகவோ, வேலூர் கடைத்தெருவாகவோ ஏன் துபாய் குறுக்குத்தெருவாகவோ கூட தெரியலாம்.
என் தலைமுறையினர் எத்தனை பேருக்கு இந்த நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை. அவர்களுக்காக ஒரு சின்ன ட்ரைலர். அன்னாசாமி, அவருடைய மனைவி வேணி மற்றும் அவருடைய நண்பர் மூர்த்தி இவர்கள் மூவரைச் சுற்றியே பயணிக்கிறது கதை. மூர்த்திக்கு நண்பனின் மனைவி மீது ஒரு கண். கண்ணுக்கு எட்டியது கைகளுக்கு எட்டியதா என்பதே மீதிக்கதை. இதற்கிடையே அன்னாசாமிக்கும் வேணிக்கும் கொஞ்சம் ரொமான்ஸ். இந்தப்பத்தியை படித்துவிட்டு என்ன ஒரு வக்கிரமான கதை என்று நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே கிட்டும். க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் நெருடியது. இருப்பினும் அதை உள்வாங்கிக்கொள்ளாமல் எனக்கு பிடித்த முடிவை கற்பனை செய்துக்கொண்டேன்.
வேணி அழகான மணப்பெண்ணாக அறிமுகம் செய்யப்படுகிறாள். இவளுடைய பாத்திரத்தை வரி வரியாக விவரிக்க அப்படியே மனதிற்குள் காஜல் அகர்வால் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துக்கொண்டாள். ஒருவேளை, விவரிப்பை “தீர்க்கமான மூக்கு” என்று ஆரம்பித்ததால் ஏற்பட்ட விளைவாக இருக்குமோ...? அல்லது அலங்காரம் செய்யப்பட மணப்பெண் என்றதும் மேலே இருக்கும் இந்தப்புகைப்படம் என் நினைவுக்கு வந்திருக்குமோ....? இருக்கலாம். எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். 1980ல் எழுதிய ஒரு கதை, அப்போது காஜல் அகர்வால் பிறந்திருக்கவே இல்லை. (காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985). அதை இப்போது படிக்கும்போது எனக்கு காஜல் நினைவுக்கு வந்தது ஆச்சர்யம்தான். அந்த காலத்தில் இதைப் படித்தவர்களுக்கு ஸ்ரீதேவியோ, ஸ்ரீப்ரியாவோ அல்லது மீண்டும் கோகிலா படத்தின் “சின்னஞ்சிறு...” பாடலோ நினைவுக்கு வந்திருக்கலாம்.
அதே புத்தகத்தின் முதல் பாதியை கடந்தபின்னர் விளிம்பு என்று மற்றொரு குறுநாவல். இது தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்டாக இருந்து ஒருவழியாக இப்போது ஓய்ந்திருக்கும் ஸ்பிளிட் பர்சனாலிட்டி பற்றிய கதை. (கவனிக்க: எழுதப்பட்டது 1980களில்) முக்கால்வாசி கதையை படிக்கும்போதே இதுதான் முடிவு என்று புரிந்துவிட்டதால் அதிகம் கவரவில்லை. தவிர, கதையில் காஜல் அகர்வால் போல யாரும் நினைவுக்கு வரவில்லை.
அடுத்ததாக சுஜாதாவின் “பெண் இயந்திரம்” அல்லது பட்டுக்கோட்டை பிரபாகரின் “மிஸ் இந்தியா மிஸ்ஸிங்” இரண்டில் ஏதேனும் ஒன்றை எடுக்க இருக்கிறேன்.
இந்த பதிவை படித்துவிட்டு என்னடா தலையும் புரியல... காலும் புரியலைன்னு முழிக்க வேண்டாம்... ச்சும்மா என்னுடைய படிப்பானுபவத்தை ஷேர் செய்துக்கொண்டேன். அம்புட்டுதேன்.
பவர் ஸ்டார் வெறியர்களுக்காக: ஆனந்த தொல்லையும் ஏஞ்சலினா ஜோலியும்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
27 comments:
திரட்டில இணைச்சாச்சு
இப்போதே சொல்லிட்டேன் எனக்கு அந்த புக்க அனுப்பி வைங்க....
கொஞ்சம் சீரியஸான பதிவு.
"காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985). "
அப்படியென்றால் அவர் வயதானவர் என்றுதான் பொருள்.
"அப்படியே மனதிற்குள் காஜல் அகர்வால் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துக்கொண்டாள்" - "கொண்டார்" என்று எழுதியிருக்கவேண்டும்.
எல்லாரும் மதிப்புக்குரியவரே.
இன்னொருவர் காஜலைவிட அழகாக திரையில் வலம்வரும்போது காஜலின்
நினைவு காணாமல் போகும். இதுவே உடலழகுக்கு விதி.
காஜல் காணாமல் போனபின் மீண்டுமொருமுறை இன்னாவலைப்
படிக்கும்போது எவர் வந்தமர்வார் என்பது ஒரு இன்ட்ரஸ்டிங் குவஸன்.
இல்லையா Prabhakaran ?
சுஜாதாவின் முடிவுகள் தானே அட்டகாசமாய் இருக்குமே இதில் அது மிஸ்ஸாகிடுசா???
வாசிக்கவில்லை நான் இன்னும் :)
“வாங்குறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை... படிக்கிறதுக்குத்தான் வழியக்காணோம்...”//
சேம் ப்ளட்
வித்தியாசமான கோணத்துல சிந்திச்சிருக்கீங்க... ஒவ்வொரு கதையும் ஒவ்வொருத்தருடைய ரசனை, அனுபவம் பொறுத்து வித்தியாசமான கற்பனையை கிளறும், அதனால் தான் பிரபல கதைகளை வைத்து எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் நன்றாக இல்லை என உணர்கிறோம்......
/////(காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985)./////
காஜல் அகர்வாலுக்கு 26 வயசா ஆச்சு?
நானும் நிறைய புத்தகம் வாங்கிவைத்திருக்கிறேன் ஆனால் படிப்பதற்குத்தான் நேரம் இல்லை ,சுஜாதா ,ஜெயமோகன் ,இந்திராபார்த்தசாரதி , கி,ராஜநாராயணன் , என புத்தகமாக வாங்கி குமித்திருக்கிறேன்
அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி சுட்டியும் , கூந்தல் மல்லிகை பூவும் ,வில்லுபோல் வளைந்தபுருவமும் , நிதானமான கண்ணும் ,தீர்மானமான மூக்கும் , பல்லு தெரியாத மென் சிரிப்பும் , ரேகை தெரியிற உதடும் , வழவழன்னு இருக்குற கழுத்தும் (வேணாம்டா மணி இதுக்கு மேல டைப் பண்ணோம்னா பிரபாகர் கடுப்பாகி நம்ம கம்மென்ட்ட ஸ்பாம் அடிச்சிடுவாப்புல ,போதும் இதோட நிறுத்திக்குவோம் )
அப்பறம் காஜல் அகர்வால் கல்யாண பொண்ணு மாதிரியே இருக்காங்க எனக்கும் அவுங்களுக்கும் ஒரு வயசுதான் வித்யாசம் ,நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் ,நீங்க என்ன சொல்றீங்க
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////(காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985)./////
காஜல் அகர்வாலுக்கு 26 வயசா ஆச்சு?///
அண்ணே எனக்கு 27 வயசு
உங்கள் தளத்தை add author முறையில் எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணைய அழைக்கிறோம்.
@ பலே பிரபு
// இப்போதே சொல்லிட்டேன் எனக்கு அந்த புக்க அனுப்பி வைங்க.... //
புக்கா... நான் அந்தமாதிரி எல்லாம் எந்த உத்தரவாதமும் தரலையே...
@ simmakkal
// "காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985). "
அப்படியென்றால் அவர் வயதானவர் என்றுதான் பொருள்.
"அப்படியே மனதிற்குள் காஜல் அகர்வால் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துக்கொண்டாள்" - "கொண்டார்" என்று எழுதியிருக்கவேண்டும்.
எல்லாரும் மதிப்புக்குரியவரே. //
மரியாதைக்கு வயது வித்தியாசம் கிடையாது... நம்மைவிட வயது குறைந்தவர்களையும் மரியாதையோடு அழைக்கலாம்... ஆனால் இங்கே பயன்படுத்தப்பட்ட "ள்" - மரியாதைக்குறைவாக பயன்படுத்தப்பட்ட "ள்" கிடையாது... உரிமையோடு பயன்படுத்தப்பட்ட "ள்"... வடநாட்டு நடிகையிடம் உனக்கென்ன உரிமை என்று கேட்காதீர்கள்... அது மானசீக உரிமை...
@ simmakkal
// இன்னொருவர் காஜலைவிட அழகாக திரையில் வலம்வரும்போது காஜலின்
நினைவு காணாமல் போகும். இதுவே உடலழகுக்கு விதி.
காஜல் காணாமல் போனபின் மீண்டுமொருமுறை இன்னாவலைப்
படிக்கும்போது எவர் வந்தமர்வார் என்பது ஒரு இன்ட்ரஸ்டிங் குவஸன். //
முதலாவது பத்தி ஓகே...
ஆனால் இந்த நாவலை எத்தனை முறை படித்தாலும் காஜல் மட்டும்தான் நினைவுக்கு வருவார்... ஒருவேளை, இதை திரைப்படமாக எடுத்து வேறு யாராவது ஒரு நடிகை நடித்தால் காஜல் மறையக்கூடும்...
@ சாய் பிரசாத்
// சுஜாதாவின் முடிவுகள் தானே அட்டகாசமாய் இருக்குமே இதில் அது மிஸ்ஸாகிடுசா???
வாசிக்கவில்லை நான் இன்னும் :) //
தெரியல சாய்... ஒருவேளை, உங்களுக்கு பிடிக்கலாம்... ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் தானே...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// காஜல் அகர்வாலுக்கு 26 வயசா ஆச்சு? //
ஆமாண்ணே... ஆனா பார்த்தா அப்படி தெரியல தானே...
@ N.Manivannan
// கி,ராஜநாராயணன் //
மொதல்ல இவரோடதுல இருந்து ஆரம்பிங்க... நான் எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்...
@ N.Manivannan
// அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி சுட்டியும் , கூந்தல் மல்லிகை பூவும் ,வில்லுபோல் வளைந்தபுருவமும் , நிதானமான கண்ணும் ,தீர்மானமான மூக்கும் , பல்லு தெரியாத மென் சிரிப்பும் , ரேகை தெரியிற உதடும் , வழவழன்னு இருக்குற கழுத்தும் //
மணி... நிறைய சரோஜாதேவி புத்தகங்கள் படிப்பீங்க போல...
@ N.Manivannan
// வேணாம்டா மணி இதுக்கு மேல டைப் பண்ணோம்னா பிரபாகர் கடுப்பாகி நம்ம கம்மென்ட்ட ஸ்பாம் அடிச்சிடுவாப்புல ,போதும் இதோட நிறுத்திக்குவோம் //
அண்ணே... திரும்பவும் சொல்றேன், நான் ஸ்பாம் அடிக்கல... ஏடாகூடமா பின்னூட்டம் போட்டா அதுவே ஸ்பாம்ல பொய் உட்கார்ந்துக்குது....
@ N.Manivannan
// அப்பறம் காஜல் அகர்வால் கல்யாண பொண்ணு மாதிரியே இருக்காங்க எனக்கும் அவுங்களுக்கும் ஒரு வயசுதான் வித்யாசம் ,நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் ,நீங்க என்ன சொல்றீங்க
அண்ணே எனக்கு 27 வயசு //
மணி... இப்போல்லாம் நம்ம வயசை விட மூணு வயசு அதிகமா இருக்குற பொண்ணை கட்டிக்கிறதுதான் ட்ரென்ட்... அதனால நீங்க ஏதாவது ஒரு முப்பது வயசு ஆன்ட்டியா பாருங்க...
(பி.கு: என்னுடைய வயது 23)
///////Philosophy Prabhakaran said...
@ N.Manivannan
// அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி சுட்டியும் , கூந்தல் மல்லிகை பூவும் ,வில்லுபோல் வளைந்தபுருவமும் , நிதானமான கண்ணும் ,தீர்மானமான மூக்கும் , பல்லு தெரியாத மென் சிரிப்பும் , ரேகை தெரியிற உதடும் , வழவழன்னு இருக்குற கழுத்தும் //
மணி... நிறைய சரோஜாதேவி புத்தகங்கள் படிப்பீங்க போல...///////
ஆனா அவரு எழுதி இருக்கறத பாத்தா சரோஜாதேவி ஆசிரியர் மாதிரி இருக்கே?
// ஆனா அவரு எழுதி இருக்கறத பாத்தா சரோஜாதேவி ஆசிரியர் மாதிரி இருக்கே? //
முன்னாள் வாசகன் தானே பின்னால் ஆசரியர் ஆகிறான்...
தளத்தை இணைந்தற்கு நன்றி. மெயில் அனுப்பி விட்டேன்.
காஜல் காஜல்.... :))குறிப்பிட்டவற்றில் பெண் இயந்திரம் நாவல் மட்டும் படித்துள்ளேன்... மற்றவை படிக்க வேண்டும்... பகிர்ந்ததற்கு நன்றி பிரபா...
காஜல் காஜல்... அய்யோ.. வெக்கப்ப்ட்றா சார்..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Philosophy Prabhakaran said...
@ N.Manivannan
// அட அட என்ன ஒரு அழகு .அந்த நெத்தி சுட்டியும் , கூந்தல் மல்லிகை பூவும் ,வில்லுபோல் வளைந்தபுருவமும் , நிதானமான கண்ணும் ,தீர்மானமான மூக்கும் , பல்லு தெரியாத மென் சிரிப்பும் , ரேகை தெரியிற உதடும் , வழவழன்னு இருக்குற கழுத்தும் //
மணி... நிறைய சரோஜாதேவி புத்தகங்கள் படிப்பீங்க போல...///////
ஆனா அவரு எழுதி இருக்கறத பாத்தா சரோஜாதேவி ஆசிரியர் மாதிரி இருக்கே?///
அண்ணே நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது சரோஜா தேவி புத்தகம் படித்து மாட்டி அடிவாங்கிய கதை இருக்கு கூறவா? , கொஞ்சம் கேவலமாக இருக்கும்
@ N.Manivannan
// அண்ணே நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது சரோஜா தேவி புத்தகம் படித்து மாட்டி அடிவாங்கிய கதை இருக்கு கூறவா? , கொஞ்சம் கேவலமாக இருக்கும் //
நாங்க பாக்காத கேவலமா... சும்மா சொல்லுங்க மணி...
அட அந்த காஜல் அகர்வாலை கொஞ்சம் விடுங்க பாஸ்.
Post a Comment